Everything posted by கிருபன்
-
குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு
குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருகோணமலை குச்சவெளி கடல் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படைக் கப்பலால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், ஐந்து மீனவர்கள் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு டிங்கி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கரைப் பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் கடற்படைக் கப்பலைத் துரத்திச் சென்று மோதியதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தப்பிச் சென்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டப்பூர்வமாக தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு அவர்களிடம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு படகை கடத்திச் செல்ல முயன்ற போது, நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படை அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டனர். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு, கடற்படை வீரர்களுடன் சண்டடையிட்டு தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர். அங்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் கடற்படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, அது வெடித்து, சம்பந்தப்பட்ட நபரைக் காயப்படுத்தியது. சம்பவத்திற்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட குழு தப்பிச் சென்றது, கடற்படைக் குழு அவர்கள் கைது செய்த சந்தேகநபர்களுடன் கரைக்கு வந்தது. காயமடைந்த 24 வயது மீனவர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உட்பட 5 மீனவர்களும் குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கப்பல் மீதான தாக்குதலில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்கள் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குச்சவெளி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றது. இந்த சம்பவம் குறித்து கடற்படை முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார். சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை 117 மீன்பிடி படகுகளும் 315 நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நேற்று (03) இரவு முன்னெடுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் 11 சட்டவிரோத படகுகளுடன் 48 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.samakalam.com/குச்சவெளி-சம்பவம்-தொடர்ப/
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன! adminJune 5, 2025 யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை (04.06.25) சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/216350/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆர்சிபி வெற்றி… ஒருபக்கம் கொண்டாட்டம்… மற்றொரு பக்கம் சோகம்! 4 Jun 2025, 6:11 PM 18 வருட காத்திருப்புக்கு பின், முதல்முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ளது பெங்களூரு அணி. இதனால், நேற்று (ஜூன் 3) இரவு முதல் பெங்களூருவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இன்று (ஜூன் 4) மாலை கர்நாடகா சட்டமன்ற வளாகம் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் மதியம் முதல் சட்டமன்றம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பாக குவியத்தொடங்கினர். கடும் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கர்நாடகா சட்டமன்றத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினர். ஆர்.சி.பி-யின் வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது https://minnambalam.com/rcb-fans-stampede-11-feared-dead/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அணியின் விபரங்கள், மைதானங்கள் போன்ற தரவுகள் இருப்பதால் கணிப்புகள் சிலவேளை வேலை செய்யும். ஆனால் இறுதிக்கேள்விகள் @வீரப் பையன்26 சொல்வது போல “குண்டக்க மண்டக்க” கேள்விகள்தான்🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்க்கலாம்.. வளர்ந்து வரும் வீரர் யார் என்று கணிப்பது சிரமம். அதேபோல சிறந்த கட்ச் யார் பிடிப்பார்கள் என்பதும் ஊகிக்கமுடியாது! அடுத்தமுறை (யாழில் போட்டி நடந்தால்) Play-off, final புள்ளிகளை அதிகரிக்கலாம். இது வெற்றியாளரை மாற்றி போட்டியை சுவாரசியமாக்க உதவும்
-
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
தந்தை-மகனை பகையாக்கிய பாஜக அரசியல்! சாவித்திரி கண்ணன் எத்தனையோ கட்சிகளை பிளந்த பாஜக, பாமகவில் தந்தையும், மகனையும் பிரித்து, பிளவுவாத அரசியலில் ஒரு பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. சாணக்கியன் காட்டிய துரோக அரசியல் சரித்திரத்தில் துகில் உரியப்பட்டது தந்தையின் தியாகம்..! சோரம் போனது மகனின் வீரம்! என்னவாகும் பாமக..? இப்படியும் கூட நடக்குமா, நாட்டில்? மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்! அப்பாவின் உயிரை பாதுகாக்கவே போலீஸ் வேண்டும் என்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக இருப்பார்…? இவரிடம் இருந்து வன்னிய சமூகத்தை பாதுகாக்கப் போவது யார்? இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்க முடியும்? கொள்கைக்காக உயிரை கொடுக்கும் இயக்கமாக உருவெடுத்து, இன்று கொள்ளையை பங்கு போடுவதில் குடும்பத்திற்குள் சண்டையிடும் நிலை வந்தான பிறகு இதுவும், நடக்கும், இன்னமும் நடக்கும். ஒடுக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு என்று ஒரு உத்தமனை கண்டெடுப்போம் என வன்னிய சமூகத்தின் நாற்பது பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து ராமதாஸை உருவாக்கினர். ஏ.கே. நடராஜன், எம்.பி.சுப்பிரமணியம், எம்.என்.மணிவர்மா..உள்ளிட்ட பலரது தியாகத்தில், பெருந்தன்மையில் உருவானவர் தான் ராமதாஸ். தன்னை பெருந்தலைவராக்கி அழகு பார்த்தவர்களையே பின்பு அழ வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் தான் ராமதாஸ். அடுத்த நிலையில் கட்சியை கட்டமைக்க பட்டிதொட்டியெங்கும் பயணப்பட்டு வேர்வை சிந்திய முன்னணி மூத்த நிர்வாகிகளால் எங்கே தன் பதவிக்கு பங்கம் வருமோ என்ற கோழைத்தனத்தில் அதிரடியாய் இராம. நாகரத்தினம், டி.என்.ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து விலக்கியவர் தான் ராமதாஸ். இப்படியாக பற்பலரை காவு கொடுத்து தான் தன்னை தனிபெரும் சக்தியாக்கிக் கொண்டார் ராமதாஸ். இதில் ராமதாஸ் வளர்ச்சிக்கு வாரி, வாரி வழங்கி, டெல்லியிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தும் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியார். தற்போது 35 வயதில் மகனை கேபினெட் அமைச்சராக்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்கிறார் ராமதாஸ். ஆனால், தன் மகன் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்தே அவரை கேபினெட் அமைச்சராக்கியவர் தான் ராமதாஸ் என்பதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் வெளியிட்ட அயோக்கிய சிகாமணி ராமதாஸ் என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்; ”வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக சார்பில் பொன்னுசாமியும், சண்முகமும் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இலாகா சம்பந்தப்பட்ட கோப்புகள் மாதக் கணக்கில் முடங்குகிறது. காரணம் உங்கள் மகன் அன்புமணியின் உத்தரவு உடனே கிடைகாதது தான்! அன்புமணி பைல் பார்த்து, பைல் தொடர்பான நபரை பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால் தான் கோப்பு நகர்கிறது. இதனால், அந்த இலாகா தொடர்பான செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்கு புகார் கூறினார்களே.., பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே நினைவு இருக்கிறதா..?’’ ஆக, தன் வினைத் தன்னை சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என்பதெல்லாம் தான் ராமதாஸ் வாழ்க்கையில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதை அன்புமணியும் நாளை பார்ப்பார். அதே சமயம் தன்னை இழிவுபடுத்தினார், பொய் சொன்னார், அநாகரீகமாக நடந்து கொண்டார், தன் தாயின் மீதே தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்தார். பா.மக என்ற கட்சியை கண்ணாடியை போல ஒரே நாளில் நொறுக்கினார், வளர்த்தகிடா மார்பில் பாய்ந்தது,..எக்ஸட்ரா…எக்ஸட்ரா என எவ்வளவோ சொன்னாலும், தன் மகனே தலைவன் என்பதில் ராமதாஸுக்கு மாற்று சிந்தனை வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே, அன்புமணி வன்னிய சமூகத்திற்கு தலைமை தாங்கும் தகுதியற்றது என ஏன் அவரால் சொல்ல முடியவில்லை…? இவ்வளவு சுயநலமும், அராஜகமும் உள்ள மகன் அன்புமணியை ஏன் மீண்டும், மீண்டும் நம்புகிறார்? ராமதாஸை பொறுத்த வரை இந்த சமூகத்தின் நலனைவிட தன் மகனின் நலனே மேலானது என்பதில் உறுதியானவர். இன்னொரு தகுதியான தலைமை தன் குடும்பத்திற்கு வெளியே கிடையவே கிடையாது. தலை எடுக்கவும் கூடாது.,,என்பதில் அப்பாவிற்கும்,பிள்ளைக்கும் எந்த கருத்து மாறுபாடும் வருவதில்லை. பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் யாவும் பிளவு கண்டுள்ளன. அதில் இது வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. நிதீஸ்குமார் கட்சியை பிளந்தனர். சிவசேனாவை பிளந்தனர். தேசியவாத காங்கிரசை பிளந்தனர். அதிமுகவை பிளந்தனர், தற்போது பாமகவை பிளக்க அப்பாவையும், மகனையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்கி உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அப்பா பேசி முடிவெடுக்க இரவோடு இரவாக பாஜக தலைவர்கள் கூடிப் பேசி , அதிகாலை வருவோம். கூட்டணி அறிவிப்பு முடிவு பெற வேண்டும். உன் அப்பாவை தயார்படுத்தி வை எனக் கூறுவதும், மகனும் மருமகளும் ராமதாஸ் காலில் விழுந்து பாஜக கூட்டணி இல்லையென்றால், அப்பா நீ தான் எனக்கு கொள்ளி வைப்பாய் என மகன் கதறி அப்பாவின் மனதை மாற்றியதும் நடந்திருக்கிறது என்பதை ராமதாஸே வாய் திறந்து சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தன் மருமகளின் அதிகாரம் கட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது. தலைமை பொறுப்பை ராமதாஸிடம் இருந்து பறிப்பதில் செளமியா காட்டிய அவசரம் என எல்லாவற்றையும் கொட்ட வேண்டிய நிலைமை ஏன் வந்தது, ராமதாசுக்கு..? ஒருவேளை தன்னை கட்சியில் இருந்து மகன் நீக்குவதற்கு முன்பே அனைத்தையும் முன்கூட்டியே சொல்லி விடுவதன் மூலம் அதனை தடுக்கலாம் என சொல்லி இருப்பாரோ என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. எது எப்படியாயினும் இவ்வளவு சுயநலமிக்க ஒரு குடும்பத்திடம் உழைக்கும் வர்க்கமான வன்னியர் சமூகம் சிக்கி இருக்கிறதே..அது எப்போது விடுபட்டு இயல்பு நிலைக்கு மீண்டு வரும் என்ற கவலை தான் ஏற்படுகிறது. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21686/ramadoss-anbumani-pmk-bjp/
-
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல் June 4, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர். www.ilakku.orgஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூட...ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும்
-
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbhhmqbn01dgqpbssj45hw4v
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி! adminJune 4, 2025 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2025/216313/
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!! adminJune 4, 2025 செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06.06.25) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03.06.25 செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் . நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர். குறித்த விண்ணப்பம் மீதான விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரியின் அபிப்பிராயத்தையும் யாழ்ப்பாண பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கையை தருமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என திகதி குறித்துள்ளார். https://globaltamilnews.net/2025/216318/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நந்தன் கூகிள் ஷீற்றில் பதில்களை தெரிவு செய்ய முக்காலமும் தெரிந்த முனிவர் ஒருவரின் சிஷ்யை உதவியதாகத் தகவல்😜 நீங்களும் சட்ஜீபிடியை விட்டுவிட்டு கூகிள் ஷீற்றைப் பாவித்திருக்கலாம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்! யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26 ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma (SRH) 141 Runs ஆறு பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன. 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Abhishek Sharma (SRH) 141 Runs எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR 35/5 3.4 35 5 4.4 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR 35/5 3.4 35 5 4.4 @vasee மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav (MI) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Suryakumar Yadav (MI) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Chennai Super Kings எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.
- IMG_1210.jpeg
- IMG_1211.jpeg
- IMG_1209.jpeg
- IMG_1209.jpeg
- IMG_1208.jpeg
- IMG_1208.jpeg
- IMG_1207.jpeg
- IMG_1207.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 286/6 11 பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 95 @செம்பாட்டான் மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஐ முந்த ஒருவராலும் முடியாது போலிருக்கின்றது!
- IMG_1201.jpeg
- IMG_1206.jpeg
- IMG_1206.jpeg