Everything posted by கிருபன்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார்பாக பதிவுகள் போட்டு தமக்குள் சண்டையிடும் ஈழத்தமிழர்களை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தமிழ் விடுதலை இயக்கங்களை இந்திய கைக்கூலிகளாக கருதி அவர்களை அழிப்பதற்கு தொடர்ச்சியாக உதவி செய்து வந்தது. 2009 இறுதிப் போரில் விமானங்கள் விமானிகள் குண்டுகளை வழங்கி தமிழர்கள் போராளிகள் அழிவதை வேடிக்கை பார்த்தது. இந்தியா ஒரு படி மேலே போய் ஆரம்பத்தில் இலங்கை அரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழருக்கு ஆயுதம் கொடுத்தது. பின்னர் தமிழ் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த இலங்கை படைகளுக்கு பயிற்சியும் ஆயுதம் வழங்கி நாடகம் ஆடியது. இதைவிட அதனது கட்டுப்பாட்டை மீறிய இயக்கங்களை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகளை கையாண்டது. இறுதி யுத்தத்தில் இலங்கையின் வெற்றியை உறுதி செய்ய வன்னியில் வந்திறங்கி தமிழர்கள் போராளிகள் மீது ஸெல் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை பிரேரணையை தடுத்து வன்னியில் தமிழர்கள் 2 வருடங்கள் முகாம்களில் அடைத்து வைக்க காரணமாகியது. இப்போது சொல்லுங்கள் இரு நாடுகளும் போர் புரிந்து தமது கர்மவினைப் பயனை அனுபவிப்பதற்கு ஈழத்தமிழர்கள் கவலைப்பட வேண்டுமா? நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 9.5.2025
-
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் By Admin May 10, 2025 யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும் பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். ஆலயங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் வான வேடிக்கைகள் நிகழ்த்துபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்பாட்டு மலச்சிக் கூடத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு நிகழ்வுகளும், அரங்க செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2025/05/blog-post_276.html
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது, இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் 'பி' அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmagves3w008zqpbs7xc8ca1i
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்! இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல் மாலை 4 மணி வரை பாகிஸ்தானில் அமைந்துள்ள தாக்குதலுக்கு உள்ளான மூன்று விமான தளங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்த நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய போர் விமானங்கள் மூலம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் இதனால் விமானப் படையின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ராவல்பிண்டியில் உள்ள நூர்கான், சக்குவால் பகுதியில் உள்ள முரித், ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃப்பிகி விமான தளங்களை இந்தியா தாக்கியது” என கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. வியாழக்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தானின் 400 ட்ரோன்களை வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/world/1361099-india-attacks-pakistan-three-airbases-sources-from-opponent-1.html
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பிராந்திய ராணுவப் படையை களமிறக்க ராணுவத் தளபதிக்கு அதிகாரம்: மத்திய அரசு புதுடெல்லி: அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்திய ராணுவ விதி 1948-ன் விதி 33 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்கிறது. பிராந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியையும் ஒவ்வொரு நபரையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்கவோ, வழக்கமான ராணுவ அதிகரிப்புக்காகவோ பணியமர்த்தப்பட அழைக்க அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன்படி, தற்போதுள்ள 32 காலாட்படை பட்டாலியன்களில், தெற்கு கட்டளை, கிழக்கு கட்டளை, மேற்கு கட்டளை, மத்திய கட்டளை, வடக்கு கட்டளை, தென்மேற்கு கட்டளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மற்றும் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) ஆகிய பகுதிகளில் பணியமர்த்த அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும், பட்ஜெட் நிதி அல்லது பட்ஜெட்டில் உள்ள உள் சேமிப்புகளை மீண்டும் ஒதுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் அல்லாத பிற அமைச்சகங்களின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட பிரிவுகளுக்கு, செலவு அந்தந்த அமைச்சகங்களுக்குப் பற்று வைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது. இந்த உத்தரவு 10 பிப்ரவரி 2025 முதல் 09 பிப்ரவரி 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/india/1361032-centre-empowers-army-chief-to-mobilise-territorial-army-for-support-1.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கர்ணன் இல்லாமல் பிதாமகர் பீஷ்மர் தலைமைதாங்கிப் போரிட்டு மாண்ட முதல் பத்து நாள் (முதலாவது நாள் போர் முன்னைய செந்நாவேங்கை நாவலில்) போரினை விபரிக்கும் “திசைதேர் வெள்ளம்” நாவலோடு செப் 11 இல் வெண்முரசு தொடரை நிறுத்திவைத்துவிட்டேன். வழமையாக 50-60 நாளில் 100 அத்தியாயங்கள் படிப்பேன். ஆனால் போரின் ருசியில் 11 நாளிலேயே பீஷ்மரின் போரின் விபரிப்பைப் படித்தேன். விதம்விதமாக கொல்வதையும், கொல்லப்படுவதையும் விடாது ஆர்வத்துடன் படித்து கொல்லும் வெறி வந்துவிட்டது! எட்டு மாதங்களாக வேறு புத்தகங்களைப் படிக்கின்றேன்! ஆசான் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார்! அது பற்றற்ற உணர்வு நிலையில்தான் இயலும்! திரும்பவும் வெண்முரசு படிக்க ஆரம்பிக்கவேண்டும் இது standard operating procedure! எதிர்காலத்தில் automate பண்ணவேண்டும்😃
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொடுந் துயரம் sudumanal பகடிவதையின் மனவக்கிரம் ஒரு பல்கலைக் கழக மாணவனை தற்கொலை செய்ய வைத்த காலம் காயுமுன், கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருத்தி தற்கொலை செய்கிறாள். இவை தற்கொலை என்ற வகைமைக்குள் அட்டவணைப்படுத்தப் படலாம். ஆனால் யதார்த்தத்தில் இவைகள் கொலைகள். அந்த மாணவன் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு ஒரு கும்பல் வன்முறை வக்கிரத்தின் நடுவில் சுழன்றோட விடப்படுகிறான். இங்கு இந்தச் சிறுமியை தனியார் வகுப்பில் (ரியூசன்) மாணவர்களுக்கு நடுவில் வைத்து அவமானப்படுத்துகிறான் ஒரு ஆசிரியப் பதர். இரண்டுமே பாலியல் வக்கிர மனோபவாவமும், அவமானப்படுத்தி இரசிப்பதுமான ஆணாதிக்க மனக்கட்டமைப்பு நிகழ்த்திய கொலைகள். பல்கலைக் கழக பகடிவதை ஒன்றின்போது முன்னர் ஒருமுறை பேசப்பட்ட விடயமாக இருந்த ஒன்றை இங்கு ஞாபகப்படுத்தலாம். ஒரு பல்கலைக் கழகத்தில் நடந்தது இது. நான்கைந்து மாணவன்கள் தத்தமது இடுப்பைச் சுற்றி கட்டிய நூலில் முன்பகுதியில் வாழைப்பழத்தை தொங்கவிடுகின்றனர். அது காற்சட்டையின் சிப்ற் இருக்கும் பகுதிக்கு முன்னால் தொங்குகிறது. ஒவ்வொருவர் முன்னும் ஒவ்வொரு மாணவிகளை முழங்காலில் இருத்துகின்றனர் அவர்கள். அந்த மாணவிகள் பின்னால் கையைக் கட்டியபடி அந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன வேண்டும். அதைச் சுற்றி கொஞ்ச மாணவர்கள் இரசித்துக் கொண்டு நிற்கின்றனர். என்னவிதமான வக்கிர மனது ஆணாதிக்க சமூகத்தில் நிலவுகிறது என்பதற்கு இது ஒரு மறக்க முடியாத காட்சி. இவன்கள் ஆசரியன்களாகவோ பேராசிரியன்களாகவோ சேவைத்துறைகளிலோ வரும்போது என்னதான் நிகழும். இத் தொழில்களில் கிடைக்கும் அதிகாரமும் சமூக அங்கீகாரமும் மேலதிகமாகச் சேரும்போது இந்தப் லும்பன்கள் எதைச் செய்வார்கள். இந்தவகைப் லும்பன்கள் மட்டுமல்ல, ஆணாதிக்க வக்கிரம் பிடித்த சமூகப் பொறுக்கிகளும் சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள். அல்லது சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு பெண்ணை இந்த வக்கிர மனோபாவத்துக்கு வெளியில் வைத்து சக மனிதஜீவியாக பரஸ்பர மதிப்புடன் பழக விடாதபடி நிலவும் தடைகள் உடைக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்ளவும், அதை வாழ்வியலாக வரித்துக் கொள்ளவுமான தொடக்கத்தை ஆசிரியர்களே தொடங்க வேண்டும். அப்படியொரு சமூகத்தை உருவாக்க தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டிய ஆசிரியன் ஒருவன் செய்யும் இந்தவகை பாலியல் கிரிமினல்தனத்துக்கு சட்ட ரீதியில் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த மாணவி சென்ற வருடம் (கொழும்பில்) படித்த பாடசாலையில் ஒரு கணித ஆசிரியனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறாள். “வெளியில் சொன்னால் உன்ரை எதிர்காலத்தை இல்லாமல் பண்ணிப் போடுவன்” என எச்சரித்து அனுப்புகிறான் அவன். அவள் அதை தனது பெற்றோர்க்கு சொல்லி அழுகிறாள். பொலிசாரால் அந்த லும்பன் கைது செய்யப்படுகிறான். பின் விடுதலை செய்யப்படுகிறான். படிப்பு விளையாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டிய அந்தச் சிறுமியை அவையெல்லாம் விட்டு விலகுகிறது. பெற்றோர்கள் கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்கள். சக மாணவர்களுக்கு படிப்படியாக தெரியவரும்போது எல்லோரும் அவளை தனிமைப்படுத்துகிறார்கள். இதன்மூலம் அவள் மேலதிகமாக உளவியல் சித்திரவதைக்கும் உள்ளாகிறாள். வன்முறை புரிபவர்களை விட்டுவிட்டு, அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்கும் வகையில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்க முடிகிற முரண்நிலை ஆணாதிக்க கருத்தியலுக்குள் வைத்துத்தான் நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியமானது. அவளை வேறு பாடசாலைக்கு மாற்றுகிறார்கள் பெற்றோர். அவள் தனியார் வகுப்புக்கும் படிக்கப் போகிறாள். அங்கும் -அந்த கணிதபாட ஆசிரியனின் நண்பனாக இருக்கும்- ஒரு லும்பன் அவளை நிற்க வைத்து மற்றைய மாணவர்களுக்கு முன் அவமதிப்புச் செய்கிறான். எதுவரை ஓடுவது அவள். அவள் தனது மரணம்வரை ஓடினாள். தமக்கு நேரும் கொடுமையை அல்லது பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை -பெற்றோரை விடவும்- துணிந்து நம்பிக்கையோடு ஆசிரியர்களிடம் போய்ச் சொல்லி ஆறுதல் அடையும் அல்லது ஆலோசனைகள் கேட்கும் அல்லது உளவழிச் சிகிச்சைபெறும் நிலை இந்த புகலிட நாடுகளில் காணப்படுவதை நினைத்து பெருமை கொள்ள வேண்டி இருக்கிறது. இது ஏன் நமது நாடுகளில் சாத்தியமாகாமல் இருக்கிறது என ஆதங்கப்பட வேண்டியும் இருக்கிறது. “என்ன.. ஒரு வாத்தி வேலைகூடக் கிடைக்கயில்லையா உனக்கு” என சொல்லவைக்குமளவுக்கு ஆசிரியத்துவமும் அரசியல் செல்வாக்கும் பிணைந்துபோய்க் கிடக்கிறது. நேர்மையான வழியிலும் கடின உழைப்பிலும் சேவை மனப்பான்மையுடனும் ஆசிரியத் துறைக்கு வரும் ஆசான்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும். இந்த தனியார் வகுப்பு நடத்தும் லும்பன் கடந்த பாராளுமன்றத்தில் என்பிபி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனுக்கெல்லாம் அந்த அதிகாரமும் கிடைத்திருந்தால் எப்படி நடந்துகொள்வான்?. இனம் மொழி மதம் கடந்து திறமையானவர்களை ஊழல் இலஞ்சம் இல்லாதவர்களை கழுவியெழுத்து தேர்தலில் களமிறக்கியதாக அல்லது பதவிகள் வழங்கியதாக சொன்ன என்பிபி இது விடயத்தில் வெளிப்படையாக பேசவேண்டிய கடப்பாடு உள்ளது. இதை வைத்து என்பிபிக்கு எதிரான பிரச்சாரம் செய்வது இன்னொரு அயோக்கித்தனம். அதேநேரம் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி தனது கட்சி சார்பாக இதுகுறித்து வெளிப்படையாகப் பேசி, கட்சியிலிருந்து இவனைப் போன்றவர்களை தூக்கி எறிய வேண்டும். சிறுமிக்கு நீதி வழங்கும் முறையில் அரசியல் தலையீடு எதுவுமின்றி நடந்து கொள்ள வேண்டும். கல்வி முறைமைகளில் ஆசிரிய நியமனங்களில் செழுமையாக்கம் செய்ய வேண்டும். பாடசாலை ஆசிரியன்களிலிருந்து பல்கலைக் கழக விரிவுரையாளன்கள் வரை இந்தவகை மனவக்கிரம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் ஆசிரியர்களை, விரிவுரையாளர்களை அவர்களின் சமூகப் பங்களிப்பை புறந்தள்ளக்கூடிய மனநிலையை மக்களிடம் தோற்றுவிக்காதபடி பேண, குற்றமிழைத்தவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுதல் நல்லது. தமக்கு நடந்ததை வெளிப்படையாகப் பேச ஒரு பெண்ணுக்கு இந்த ஆணாதிக்கச் சமூகம் சுதந்திர வெளியினை அங்கீகரித்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது பொதுவெளிக்கு வருகின்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகவும் எழுந்து இந்தச் சிறுமியின் மரணம் எழுப்பியிருக்கிற கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதிலை வழங்கப் போகிறது! https://sudumanal.com/2025/05/06/கொடுந்-துயரம்/ லும்பன் - ஒழுக்கக்கேடானவர்கள், சமூகத்திற்குப் பயனற்றவர்கள்
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
டில்ஷியின் மரணத்துக்கு நீதிகோரி தலைநகரை ஸ்தம்பிதமடையச்செய்த மாபெரும் போராட்டம் Published By: Vishnu 09 May, 2025 | 02:33 AM (நா.தனுஜா) பதினாறு வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி வியாழக்கிழமை (09) பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர், யுவதிகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இணைந்து பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலைக்கு முன்பாக கொட்டும் மழைக்கு மத்தியில் மேற்கொண்ட மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் கல்வியமைச்சு உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் கவனத்தைப் பெற்றதுடன், தலைநகரை ஸ்தம்பிதமடையச்செய்தது. கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது. இச்சம்பவத்தை அடுத்து குறித்த மாணவிக்கு நீதிகோரியும், அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பிரபல தமிழ் பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் மற்றும் அம்மாணவியை பிரத்யேக வகுப்பில் பல மாணவர்கள் முன்னிலையில் முறையற்ற விதத்தில் பேசி அவமதித்தாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் 'ஜஸ்டிஸ் ஃபோர் அம்ஷிகா' (உயிரிழந்த மாணவியான அம்ஷிகாவுக்கு நீதி) எனும் ஹாஷ்டக்குடன் பலராலும் பதிவுகள் இடப்பட்டன. இவ்வாறானதொரு பின்னிணயில் அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி வியாழக்கிழமை (8) கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாகவும், அம்மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவும் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்களை நடாத்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போராட்டங்களில் சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியிலும், அங்கு அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாகவும் காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான அமைதிப்போராட்டம் சில மணித்தியாலங்களின் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் பெருமளவானோரின் பங்கேற்புடன்கூடிய மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமாக மாற்றமடைந்தது. பாலின பேதமின்றி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் 'நீதி வேண்டும், நீதி வேண்டும்: அம்ஷிகாவுக்கு நீதி வேண்டும்' எனும் கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம், படிப்படியாக கொழும்பு மாநகரின் முழுமையான கவனத்தைப்பெற்று, தேசிய ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியது. நண்பகல் வேளையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பாடசாலை அதிபரை வெளியே வருமாறும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணிதபாட ஆசிரியரைக் கைதுசெய்யுமாறும், உயிரிழந்த மாணவிக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தருமாறும் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பியவாறும், 'பெண்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும் - வார்த்தைகளில் அல்ல, செயல்களில்' மற்றும் 'அம்ஷிகாவுக்கு நீதி' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், குறித்த கணிதபாட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய உரிமையாளரின் உருவப்படங்களை செருப்பால் அடித்து தமது கோபத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர். மழைக்கு மத்தியிலும் கலைந்து செல்லாமல், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்வதற்கான வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதுமாத்திரமன்றி பிற்பகல் ஒரு மணியின் பின்னர் டுப்ளிகேஷன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இவ்வாறு பாடசாலை வாயிலை மறித்து மாலை வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டாரவுடன் அவ்விடத்துக்கு வருகைதந்த மேல்மாகாண பதில் கல்விப்பணிப்பாளர், இவ்விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சின் சார்பில் தான் அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்தார். அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட கணிதபாட ஆசிரியர் புத்தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸாரிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்டவுடன் நாளைய (இன்றைய) தினத்துக்குள் அந்த ஆசிரியர் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவாதமளித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வறிவிப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லவில்லை. மாறாக இச்சம்பவம் தொடர்பில் மேலும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் பாடசாலை முன்றலில் இருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஜனாதிபதி செயலகம் முன்பாக அம்ஷிகாவுக்கு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள், அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி ஜனாதிபதியிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்கு அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் அனுமதிகோரினர். சிறிது நேர தர்க்கத்தின் பின்னர் அம்ஷிகாவின் நடன ஆசிரியை உள்ளடங்கலாக மூவரை ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளித்தனர். https://www.virakesari.lk/article/214245
-
தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு
தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு Published By: Vishnu 09 May, 2025 | 03:16 AM பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.. இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம். அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது. அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது. அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம். அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம். ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம். மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள். மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில் கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/214250
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோதே, முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று சாடினார். நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்றும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறினார். R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சர்ச்சைக்குரிய-ஆசிரியரின்-வீட்டுக்கு-பொலிஸ்-பாதுகாப்பு/150-357046
-
மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம்
மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம் May 9, 2025 10:55 am ” வடக்கு மக்களின் காணி உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும். எனவே, சில விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாயையை தோற்றுவிக்கின்றார்.” -என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அரசாங்கம்மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில் இனவாதத்தை பரப்புவதாக கஜேந்திரகுமார் எம்.பி. குற்றஞ்சாட்டினார். இனவாதத்தை தோற்கடித்த அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன். அதேபோல வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். எனவே, இந்நாட்டில் இனவாதத்துக்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது.” – எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சில காரணங்கள் தொடர்பில் மாயையை தோற்றுவிக்க முற்படுகின்றனர். கடந்த காலங்களிலும் இப்படி நடந்துள்ளது. எமது நாட்டில் காணிகளை கையகப்படுத்திய அரசியல்வாதிகள் பற்றியும் எதிர்காலத்தில் நாம் கதைப்போம். காணிகளை கையகப்படுத்தி நண்பர்களுக்கு விற்றவர்கள் உள்ளனர். வடக்கிலும் அப்படி நடந்துள்ளது. வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும்.” – என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/gajendra-kumar-is-creating-illusions-ruling-party-expresses-regret/
-
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது May 9, 2025 9:08 am ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த 12 படையினரும் மீட்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இலங்கை விமானப் படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/sri-lanka-air-force-helicopter-crashes/
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரஷ்யாவில் இருந்து படித்திருப்பார்கள்! பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முறியடித்த இந்தியா - விடிய விடிய நடந்தது என்ன? புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை. ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு எல்லை பகுதியில் வியாழக்கிழமை இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கின. ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து வீழ்த்தியதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்திய ராணுவம். இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லைப் பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. அந்த முயற்சி, நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது’ என்று தெரிவித்தது. சம்பாவில் 11 மணிக்கு தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இரவு 11 மணி அளவில் வரிசையாக பல ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அந்த தாக்குதலை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. இந்த தாக்குதலை எல்லையோர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடிந்ததும் அங்கு மக்கள் நடமாட்டம் வழக்கம்போல தொடங்கியுள்ளது. இதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன. ராஜஸ்தானில் அவசர நிலை: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப் படை நடுவானில் அழித்தது. மேலும், ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் விமானி கைது: ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை எரிய செய்யக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 24 விமான நிலையங்கள் மூடல்: பாகிஸ்தான் உடனான மோதல் முற்றிய நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மர், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட காரணத்தால் பயணிகள், தங்களது புறப்பாட்டுக்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் அறிவுறுத்தி உள்ளன. ஜம்மு விரைந்த உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு பகுதிக்கு இன்று காலை புறப்பட்டுள்ளார். ‘கள சூழலை அறிய தற்போது ஜம்முவுக்கு விரைகிறேன். நேற்று இரவு ஜம்மு மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் தோல்வியடைந்தன’ என எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அமிர்தசரஸ் நிலவரம் என்ன? - பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸையும் வான்வழியாக தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு நேற்று இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்நிலையில், மக்கள் வீட்டுக்குள் இருக்கவும், ஜன்னல் அருகில் இருக்க வேண்டாம் என்றும், திரைச்சீலைகளை இறக்கி வைக்கவும் அமிர்தசரஸில் உள்ள அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நமது பாதுகாப்புப் படை பணியில் உள்ளது. நிலைமை சரியானதும் அந்தச் செய்தியை அறிவிக்கிறோம் என அமிர்தசரஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸில் உச்சகட்ட பாதுகாப்பு: தலைநகர் டெல்லி மற்றும் அங்கு அமைந்துள்ள இந்தியா கேட் பகுதி, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு கடலோர பகுதியான மும்பை, சூரத் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் துறைமுகத்தில் உள்ள கப்பல்களின் இயக்கம் குறித்தும் அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அவசர ஆலோசனை: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்வது குறித்து இதில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே, ‘எல்லையில் பதற்றத்தை குறைப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது’ என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார். https://www.hindutamil.in/news/india/1360984-india-foils-pakistan-airstrike-attempts-what-happened-from-dusk-to-dawn-explained-1.html
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் : களமிறங்கிய கடற்படை! 9 May 2025, 2:34 AM பாகிஸ்தானுடனான போர் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல்வேறு ஊடக தகவல்களின் படி, தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. அதாவது இந்திய கடற்படை பாகிஸ்தானின் முக்கிய கடற்படை தளமான கராச்சி துறைமுகம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் தொடங்கியிருக்கிறது. மும்பையில் இருந்து செயல்படும் இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு முழுமையாக களமிறங்கியுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், பதிலடிக்கு தயாராக இருப்பதாக கடற்படை கூறியுள்ளது. https://minnambalam.com/attack-on-karachi-port-navy-intervenes/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வெள்ளி 09 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் (நடந்தால்) யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸுக்குமான 58வது போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவேகமாக 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நிறுத்தப்பட்டது. பிரியன்ஷ் ஆர்யா 70 ஓட்டங்களை 34 பந்துகளில் அடித்து ஆட்டமிழந்தார். ப்ராப்சிம்ரன் சிங் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொழில்நுட்பக் காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இந்திய-பாகிஸ்தான் போர் அபாயம் காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. முடிவு: முடிவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மாணவியின் தற்கொலை சம்பவம்: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் - மனோகணேசன் Published By: Vishnu 08 May, 2025 | 12:51 AM (நா.தனுஜா) பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 'கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம், அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோகணேசன் கூறியுள்ளார். அதேவேளை, 'இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம். காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்' எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214148
-
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் ! Published By: Vishnu 08 May, 2025 | 10:29 AM (ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் சபையொன்றைக் கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் அறுதிப்பெரும்பான்மை இன்மையால் இழுபறியான நிலைமைகள் அதிகமேற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கட்சிகளின் நிலைமைகள் வருமாறு, மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும், மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் போரதீவு பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும் பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி மண்முனைப் மேற்கு பிரதேச சபையில் மாத்திரம் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளதோடு ஏனைய சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபையில் அறுதிப்பெரும்பான்மையுடன் 10ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 7ஆசனங்களைப் பெற்றுள்ளது. கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு அக்கட்சி ஏனைய அனைத்து சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி 8ஆசனங்களைப் பெற்றுற்றுள்ளபோதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் முன்னிலை பெற்றுள்ள தரப்பினர்கள் ஏனைய தரப்பினருடன் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டம் திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கறைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதோடு சம்மாந்துறை பிரதேச சபையையும், நிந்தவூர் பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அம்பாறை நகரசபையிலும், தெஹியத்தகண்டிய பிரதேச சபையிலும், தமன பிரதேச சபையிலும், உஹன பிரதேச சபையிலும், மஹா ஓயா பிரதேச சபையிலும், நமலோயா பிரதேச சபையிலும், பதியத்தலாவ பிரதேச சபையிலும் லகுகல பிரதேச சபையிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாவிதன்வெளி பிரதேச சபையிலும், ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும், காரைதீவு பிரதேச சபையிலும் ஆசனங்களை பெற்றுள்ளதோடு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச சபையிலும், பொத்துவில் பிரதேச சபையிலும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலும் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. எனினும் இந்த சபைகளிலும் கூட்டணிகளை அமைப்பதன் மூலமே ஆட்சியை அமைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலை மாநகரசபையில் 9ஆசனங்களையும், வெருகல் பிரதேச சபையில் 8ஆசனங்களையும் திருகோணமலை நகர சபையில் 6ஆசனங்களையும் மூதூர் பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகரசபையில் மட்டும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி சேருவில பிரதேச சபையில் 7ஆசனங்களையும் கந்தளாய் பிரதேச சபையில் 10 ஆசனங்களையும் மொரவெவ பிரதேச சபையில் 9ஆசனங்களையும் கோமரன்கடவல பிரதேச சபையில் 9 ஆசனங்களையும் பதவிஸ்ரீபுர பிரதேச சபையில் 9ஆசனங்களையும் தம்பலகமுவ பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபையில் 5ஆசனங்களையும், கிண்ணியா பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/214150
-
மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து
மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும்விதமாக புதன்கிழமை (07) அதிகாலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்சாலா போன்ற விமான நிலையங்களிலும் விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாகச் செல்லும் 7 சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளன. நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வான்வெளியை தங்களது விமானங்கள் பயன்படுத்தாது என அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த 6-ம் திகதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மே-10-வரை-விமான-நிலையங்கள்-மூடல்-200-விமான-சேவை-ரத்து/175-356989
-
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கையெழுத்திடும் அரசின் நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றில் கோரியுள்ளனர். அத்துடன் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக பிரதிவாதிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலித்து உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இந்தியாவுடன்-செய்து-கொண்/
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
உள்ளூராட்சி தேர்தல் முடிந்தது. இனியாவது தெருவில் இருக்கும் குப்பைகளும் சமூக ஊடக குப்பைகளும் குறையும் என்று பார்த்தால் அலப்பறை கொஞ்சமும் குறைந்த பாடில்லை. எப்படி நாங்கள் ஜெயித்தோம் அல்லது ஏன் எதிராளி கட்சி தோற்றார் என்பதற்கு படங்கள் போட்டு ஆராய்ச்சிகள் விளக்கங்கள் வேறு. தேர்தல் முடிவுகள் தமிழினம் தனித்துவமானது என்று காட்டுவதாக பெருமை வேறு. அதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் போடும் பதிவுகள் ஈழம் கிடைத்து விட்டதா என்று என்ன வைக்கிறது. தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு உள்ளூராட்சி முடிவுகளை தான் எதிர்பார்த்து இருந்ததாக ஏமாற்றும் அறிக்கைகள் பல. வரைபடம் போட்டு வடக்கு கிழக்கு இணைந்து விட்டதாக சிலரின் அறிக்கை. வடக்கு கிழக்கில் இந்த தேர்தலில் வென்றவர்கள் பலர் கடந்த காலத்தில் ஈழப் போராட்டத்தை கொச்சை படுத்தியவர்கள் என்பதும் இந்திய மற்றும் உளவுத்துறைகளின் முகவர்களாக செயல்பட்டவர்கள் என்பதும் பலருக்கு மறந்து போய்விட்டது. ஒருபுறம் ஆட்சி அமைப்பதற்கு சிங்கள கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டு மறுபுறம் இந்த வீரமான போலி அறிக்கைகள் தமிழீழம் கோரி தமது உயிரை தியாகம் செய்த போராளிகளின் ஆன்மாக்கள் எந்த பிரயோசனமும் அற்ற இந்த தேர்தல் முடிவு அலப்பறைகளை பார்த்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணி பார்த்தேன். உதாரணமாக பருத்தித்துறை பிரதேச சபை கடந்த காலத்திலும் இந்த தேர்தலிலும் தமிழ் தேசிய கட்சிகளின் கையிலேயே இருக்கிறது. கடந்த காலத்தில் குப்பை கழிவுகள் அகற்றாமல் தரிசு நிலங்களுக்கும் வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்தார்கள். இந்த தேர்தலின் பின்னர் மறுபடியும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இன்னும் வரிகளை அதிகரித்து தேர்தலில் செலவழித்த பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க பார்ப்பார்கள். இதற்கு பொதுமக்களாகிய நாங்கள் பெருமைப் படவேண்டுமா? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 7.5.2025 வாட்ஸப்பில் கண்டது..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 08 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 57வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுனில் நாரைன், அங்கியா ரஹானே, மனிஷ் பாண்டே ஆகியோரின் 25 க்கு மேற்பட்ட ஓட்டங்களாலும் மற்றும் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்த அண்ட்ரே ரஸல்ஸினாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. நூர் அஹமெட் 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்திருந்தாலும், உர்வில் பட்டேலினதும், டெவால்ட் ப்ரெவிஸினதும் புயல்வேகத்தில் முறையே எடுத்த 31 ஓட்டங்களுடனும், 52 ஓட்டங்களுடனும், பின்னர் நிதானமாக விளையாடி 45 ஓட்டங்கள் எடுத்த ஷிவம் டுபேயின் ஆட்டத்தாலும் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அரசாமல் நிற்கின்றார்.
- IMG_0811.jpeg
-
கனடா விற்பனைக்கு அல்ல – மார்க் கார்னி
கனடா விற்பனைக்கு அல்ல – மார்க் கார்னி கனடா விற்பனைக்கு அல்ல என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வீட்டுமனை வியாபாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு சில இடங்கள் ஒருபோதும் விற்பனைக்கு வராது என்பது தெரிந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் தாம் கனடியர்களை சந்தித்தததாகவும், கனடா விற்கபடக்கூடிய நாடல்ல, எதிர்காலத்திலும் அல்ல,” எனவும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் நாங்கள் முன்னேற்றமடைந்துள்ள ஒத்துழைப்பு தான் மிகப்பெரிய வாய்ப்பு. பாதுகாப்பு தொடர்பாகவும், தமது அரசாங்கம் புதிய முதலீடுகளை மேற்கொள்கிறது என தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டுறவையும் பாதுகாப்பையும் கட்டமைக்க நாங்கள் முழுமையாக செயல்பட தயாராக இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=323603