Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழ் கட்சிகள் விழித்துக்கொள்ளும் வழியை காட்டியுள்ள தேர்தல் முடிவுகள் May 7, 2025 11:44 am வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆறுமாதங்களே கடந்துள்ள சூழலில் இத்தகைய வீழ்ச்சி என்பது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் தமிழ் மக்கள் திருப்பியடையவில்லை என்பதையே சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் மாநகர சபை பருத்தித்துறை பிரதேச சபை, நல்லூர் பிரதேசசபை, வலி. கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபை என்பவற்றில் இலங்கை தமிழ் அரசு கட்சி முன்னிலை பெற்யுள்ளதுடன், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதுடன் யாழ். மாநகர சபை உட்பட பல சபைகளில் தமிழ் அரசுக் கட்சிக்கு நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி யாழ்.மாவட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று வடமாகாணத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிகொண்டிருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்ததில் மக்கள் ஆதரவை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளதுடன், எந்தவொரு சபையையும் கைப்பற்ற முடியாது போயுள்ளது. வடமாகாணத்தில் ஏனைய தேர்தல் மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பலம் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், பல சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கும் ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. ஏனைய சபைகளில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறலாம். அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்துக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதுடன், தமிழ் கட்சிகளின் ஒன்றுமை மற்றும் தமிழர்களின் எதிர்கால அரசியல் இலக்குகளை தீர்மானித்துக்கொள்ளும் பாடத்தையும் தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்துள்ளன. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த பாரிய பிளவால் முதல் முறையாக பிரதான தேசிய கட்சியொன்று வடக்குகில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சந்தர்ப்பமொன்று உருவாகியிருந்தது. தேசிய கட்சிகளின் ஆதிக்கம் வடக்குகில் அதிகரிப்பது தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்தானது கடும் எச்சரிக்கைகளும் வெளியாகயிருந்தன. பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தியின் வெளிபாடாகதான் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இருந்ததன. அதனால் மீண்டும் தமிழ் கட்சிகளின் எழுச்சி மற்றும் ஒற்றுமையை தமிழ் மக்கள் விரும்புவதாக உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். சு.நிஷாந்தன் https://oruvan.com/election-results-show-the-way-for-tamil-parties-to-awaken/
  2. மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி May 7, 2025 11:54 am வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியீட்டியிருக்கின்றது. மக்கள் தந்த இந்த வெற்றியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 58 சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட்டது. இதில் குறைந்தது 40 சபைகளில் நிர்வாகங்களை நடத்துவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாத காலத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிம்பம் உருவாகியிருந்தது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வென்று விட்டது, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், ஆறு மாத காலத்தில் தற்போது மக்கள் ஆணை எங்களுக்கு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி பெரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. வடக்கிலும் வவுனியாவை தவிர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் தமிழரசு கட்சி பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விசேடமாக எங்கள் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றோம். இதன்படி, கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிப்பை உடன் மீளப் பெறவேண்டும். உடனடியாக இந்த வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம். அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப் பெறாமல் இருந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/government-has-until-may-28th-to-respond-tamil-arasu-party-prepares-for-major-protest-with-peoples-mandate/
  3. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் ஏன்? - நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. பயங்கரவாதிகள் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினர். இது சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்தது. உளவுத் துறை அவர்களின் துல்லியமான புகைப்படங்களையும் வெளியிட்டது. கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும், வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும், மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது உலகம் அறிந்ததே. இந்நிலையில், பல்வேறு தருணங்களில் இந்தியாவும் ஐ.நா. சபையிலேயே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது நாட்டு எல்லைக்குள்ளேயே ஊக்குவிப்பதை எடுத்துக் கூறி கண்டித்துள்ளது. இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதலும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகளை அனைவரும் அறிவர். ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், குற்றச்சாட்டுகளை மறுப்பதும், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதுமாகவே பாகிஸ்தான் இருந்தது. இந்தநிலையில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம். இன்று என்னுடன் இந்தத் தாக்குதல் குறித்து விவரிக்க கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர்” என்றார். 6 பேர் உயிரிழப்பு: முன்னதாக, இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. https://www.hindutamil.in/news/india/1360769-india-exercised-right-to-act-on-terror-says-govt-following-strikes-in-pakistan-2.html
  4. தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் ! ShanaMay 7, 2025 இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது எனஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கடந்த தேர்தல்களிலே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணைகிடைத்திருக்கவில்லை.25வீத வாக்குகளை மாத்திரம் எங்கள் யாழ்;ப்பாணத்திலே பெற்றுவிட்டு தங்களிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்தது தவறான கருத்து ஆனால் தனியொரு கட்சியாக 2018 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றியை விட தனியாக இம்முறை நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றி மேலானது. நான் கடந்த காலங்களில் கூறிவந்திருக்கின்றேன் ஒரு கட்சி தனியாக போட்டியிடுவதை தவிர்த்து ஒன்றாகயிருக்கின்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர்,நிர்வாகங்களை அமைப்பது சாத்தியமானது என. அந்த கணக்கு தற்போது பலருக்கு புரியும் புரியவரும். கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும். இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது. ஆகவே தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பிலே இருந்தவர்கள்,தற்போது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பாக உள்ளனர் அவர்களும் எதிர்காலத்தில் எங்களிற்கு வாய்ப்பளிக்கின்ற போது எல்லா இடங்களிலும் நாங்கள் இவ்வாறான நிலையை சந்திக்ககூடியதாகயிருக்கும் https://www.battinews.com/2025/05/blog-post_920.html
  5. யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம், காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், நெடுந்தீவு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வேலணை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம், நல்லூர் பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன. இதற்கமைய, (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 88,443 வாக்குகள் - 135 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 56,615 வாக்குகள் - 81 உறுப்பினர்கள் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 51,046 வாக்குகள் - 79 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 35,647 வாக்குகள் - 46 உறுப்பினர்கள் (EPDP) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 18,011 வாக்குகள் - 32 உறுப்பினர்கள் (TMK) தமிழ் மக்கள் கூட்டணி - 11,893 வாக்குகள் - 15 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 4,103 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (IND2) சுயேட்சைக்குழு - 3,973 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 3,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (IND1) சுயேட்சைக்குழு - 2,402 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை – 07 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 05 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் நல்லூர் பிரதேச சபை தமிழ் மக்கள் கூட்டணி – 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 02 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் நெடுந்தீவு பிரதேச சபை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். ஊர்காவற்துறை பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 3 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 02 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். வலி. வடக்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 11ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 03 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். வலி.தென் மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனங்கள் பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசு கட்சி – 09 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். சுயேச்சை குழு – 1 ஆசனம். சாவகச்சேரி பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05ஆசனங்கள் வேலணை பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 08 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் சுயேச்சை குழு 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தலா 01 ஆசனம். வலி.தென் மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 01 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 08ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம். பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 03 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் வலி. தெற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 14 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம் காரைநகர் பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 01 ஆசனம். தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி – 02 ஆசனங்கள். சுயேச்சை குழு – 02 ஆசனங்கள். வலி தென்மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் வலி.கிழக்கு பிரதேச சபை தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 11 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம் ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள். சுயேச்சை குழு 1 – 2 ஆசனங்கள். சுயேச்சை குழு 2 – 1 ஆசனம். https://adaderanatamil.lk/news/cmadh1qsd005cqpbs3snrj5ma
  6. முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,364 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 990 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 607 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 136 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (IND2) சுயாதீன குழு 2 - 134 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (IND1) சுயாதீன குழு 1 - 81 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை கரைதுறைப்பற்று பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 6,306 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 4,407 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,672 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,962 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (IND2) சுயாதீன குழு 2 - 1,392 வாக்குகள் - 1 உறுப்பினர் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 624 வாக்குகள் - 1 உறுப்பினர் (UNA) ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 548 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு 1 - 465 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 329 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 317 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை புதுக்குடியிருப்பு பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 10,816 வாக்குகள் - 11 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 4,028 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,652 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (IND1) சுயாதீன குழு 1 - 2,491 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,174 வாக்குகள் - 1 உறுப்பினர் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,026 வாக்குகள் - 1 உறுப்பினர் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 658 வாக்குகள் - 1 உறுப்பினர் (PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 160 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை துணுக்காய் பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,594 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,082 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 804 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 605 வாக்குகள் - 1 உறுப்பினர் (NPP) தேசிய மக்கள் சக்தி - 492 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு 1 - 388 வாக்குகள் - 1 உறுப்பினர் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 254 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 219 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை https://adaderanatamil.lk/news/cmad8wyla004nqpbsin8qtpnr
  7. எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்! - எம்.கே.சிவாஜிலிங்கம் adminMay 7, 2025 ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவை வெற்றிபெற்றது. இது தொடர்பில் வினாவிய போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் – இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளை தமிழ்க் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். மக்களின் வாக்களிப்பு சதவீதம் குறைவாக காணப்படுவதால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் ஊடாக வருகிறார்கள். மக்கள் உறங்கியிருக்காமல் விழிப்பாக இருந்து இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவதற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாகப் பார்க்கின்றேன். எங்களினுடைய பயணம் தொடரும். வெறுமனே சபைகளில் ஆட்சியைமைபதற்காக மாத்திரமல்லாது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வரும் வகையில் ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தோடும் இணைந்து செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/215103/
  8. வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன. வவுனியா மாநகர சபை (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,350 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,344 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 2,293 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,185 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,088 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 647 வாக்குகள் - 1 உறுப்பினர் (DNA) ஜனநாயக தேசிய கூட்டணி - 630 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1)சுயாதீன குழு 1 - 332 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 326 வாக்குகள் - 1 உறுப்பினர் (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 204 வாக்குகள் - 0 உறுப்பினர் (SB) சர்வஜன அதிகாரம் - 113 வாக்குகள் - 0 உறுப்பினர் வவுனியா வடக்கு பிரதேச சபை (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,650 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,210 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,696 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,255 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 967 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 956 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SB) சர்வஜன அதிகாரம் - 317 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு - 201 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (DNA) ஜனநாயக தேசிய கூட்டணி - 198 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (DNA) ஜனநாயக தேசிய கூட்டணி - 1,225 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLMC) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 626 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 340 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (SB) சர்வஜன அதிகாரம் - 339 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (IND1) சுயாதீன குழு 1 - 328 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 240 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 186 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபை (NPP) தேசிய மக்கள் சக்தி - 3,645 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,844 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SB) சர்வஜன அதிகாரம் - 758 வாக்குகள் - 1 உறுப்பினர் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 662 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 606 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 436 வாக்குகள் - 1 உறுப்பினர் (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 338 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு 1 - 180 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (PSA) மக்கள் போராட்ட முன்னணி - 42 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை (NPP) தேசிய மக்கள் சக்தி - 7,260 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 7,033 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,949 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 3,870 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 3,436 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (DNA) ஜனநாயக தேசிய கூட்டணி - 2,075 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,901 வாக்குகள் - 1 உறுப்பினர் (TMK) தமிழ் மக்கள் கூட்டணி - 1,482 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 1,285 வாக்குகள் - 1 உறுப்பினர் (EPDP) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,173 வாக்குகள் - 1 உறுப்பினர் (SB) சர்வஜன அதிகாரம் - 1,123 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND3) சுயாதீன குழு 3 - 768 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு 1 - 456 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (PSA) மக்கள் போராட்ட முன்னணி - 183 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை https://adaderanatamil.lk/news/cmadd3ker004zqpbsduc3jnc8
  9. கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 20,962 வாக்குகள் - 20 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 7,319 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 5,058 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,712 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 2,195 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (IND)சுயாதீன குழு - 1,664 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 493 வாக்குகள் - 1 உறுப்பினர் (UNP) ஐக்கிய தேசிய கட்சி 232 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 103 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை பச்சிளைப்பள்ளி பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,040 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,511 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 1,349 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 508 வாக்குகள் - 1 உறுப்பினர் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 208 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 123 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (IND)சுயாதீன குழு - 100 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 16 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை பூநகரி பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 5,171 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,355 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 1,884 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 971 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND1) சுயாதீன குழு 1 - 632 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND2) சுயாதீன குழு 2 - 486 வாக்குகள் - 1 உறுப்பினர் (ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 325 வாக்குகள் - 1 உறுப்பினர் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 280 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 88 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை in https://adaderanatamil.lk/news/cmad9tiyw004qqpbs065f3tm1
  10. மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. மன்னார் நகர சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,255 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,123 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,943 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,807 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (TMK) தமிழ் மக்கள் கூட்டணி - 1,439 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 584 வாக்குகள் - 1 உறுப்பினர் (UNA) ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 535 வாக்குகள் - 1 உறுப்பினர் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 371 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை மன்னார் பிரதேச சபை (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 3,520 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,400 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,944 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,577 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (SLMC) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,124 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,450 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 646 வாக்குகள் - 1 உறுப்பினர் (IND) சுயாதீன குழு - 568 வாக்குகள் - 1 உறுப்பினர் (EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 156 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (SB) சர்வஜன அதிகாரம் - 93 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை நானாட்டான் பிரதேச சபை (NPP) தேசிய மக்கள் சக்தி - 4,518 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,006 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,856 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (IND) சுயாதீன குழு - 1,380 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,314 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 747 வாக்குகள் - 1 உறுப்பினர் (PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 104 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (EPDP) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 103 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை முசலி பிரதேச சபை (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 3,767 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 2,441 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,132 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (SLMC) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,482 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (IND) சுயாதீன குழு - 611 வாக்குகள் - 1 உறுப்பினர் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 551 வாக்குகள் - 1 உறுப்பினர் (SB) சர்வஜன அதிகாரம் - 171 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 96 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 76 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை மாந்தை மேற்கு பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,218 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 2,842 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,792 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி - 2,416 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் (SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,330 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 700 வாக்குகள் - 1 உறுப்பினர் (SLMC) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 492 வாக்குகள் - 1 உறுப்பினர் (PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 334 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை https://adaderanatamil.lk/news/cmad76nop004jqpbsfakxp59w
  11. Valvetithurai Urban Council ACTC Members 7 41.85% 1558 ITAK Members 5 34.89% 1299 NPP Members 3 18.16% 676 EPDP Members 1 2.42% 90
  12. ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்! ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. https://www.hindutamil.in/news/india/1360712-indian-armed-forces-launched-operation-sindoor-1.html
  13. GMT நேரப்படி நாளை புதன் 07 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 13 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  14. திருகோணமலை மாவட்டம் - மொரவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி - 2,663 வாக்குகள் - 9 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,060 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 847 வாக்குகள் - 3 ஆசனங்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள் - 1 ஆசனம். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 212 வாக்குகள் - 1 ஆசனம். திருகோணமலை மாவட்டம் - வெருகல் பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் - 8 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 1,712 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 830 வாக்குகள் - 2 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 243 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 86 அம்பாறை மாவட்டம் - அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய காங்கிரஸ் - 2,081 வாக்குகள் - 5 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 892 - 01 ஆசனம் தேசிய மக்கள் சக்தி - 536 வாக்குகள் - 01 ஆசனம் சுயேட்சை குழு - 511 வாக்குகள் - 1 ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 388 வாக்குகள் -1 ஆசனம்
  15. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!
  16. நொபோல் போட்டு தோல்வி மும்பைக்கு! அட விக்கெட் போட்டுது! ஒரு பந்தில் ஒரு ஓட்டம் குஜராத்துக்கு வெல்ல! ஒரு மாதிரி குஜராத் வெற்றி!
  17. மழையால் போட்டி தடைப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் குஜராத் டைட்டன்ஸ் DLS முறையால் வெல்லும். ஏற்கனவே 8 ஓட்டங்கள் DLS bar ஐ விட அதிகமாக எடுத்துவிட்டார்கள். MATCH DELAYED BY RAIN 56th Match (N), Wankhede, May 06, 2025, Indian Premier League MI 155/8 GT (14/20 ov, T:156) 107/2 GT need 49 runs in 36 balls. CRR: 7.64 • RRR: 8.16 • Last 5 ov (RR): 44/1 (8.80) Win Probability:GT 76.28% • MI 23.72%
  18. விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு! Vhg மே 05, 2025 விடுதலை புலிகளின் கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா குமுதினி உடல்சுகயீனம் காரணமாக முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை போராளியாக மலர்விழி இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் போராளியின் மரணம் முல்லைத்தீவில் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/05/blog-post_50.html
  19. இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம் - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான விசேட துணை படையணிகளும் நிரந்தர சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளன. மிகுதியாகவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்பதுடன், ஹமாஸை தோற்கடிக்கும் நோக்கத்துடன், தொடர்ச்சியாக அழுத்தங்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய அமைச்சரவை கொள்கையளவில் தொண்டு நிறுவனங்களினூடாக மனிதாபிமான உதவிகளை மீண்டும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த இரு மாதங்களாக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் முற்றுகையினை முடிவிற்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது. அதனைத் தவறும் பட்சத்தில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பாரிய உணவுப் பற்றாக்குறையினை எதிர்கொள்வர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.hirunews.lk/tamil/404696/இராணுவ-நடவடிக்கைகளை-விஸ்தரிக்கும்-திட்டம்-இஸ்ரேலிய-பாதுகாப்பு-அமைச்சரவை-ஒப்புதல்
  20. கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களைக் குறித்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர். அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, குறித்த தரப்பினர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர். அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே தமது மகளின் மரணத்துக்கான பிரதான காரணம் என, மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் தமது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்ற வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர் வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும், உயிரிழந்த மாணவியின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 'இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்' என கூறியமையினால் தமது மகள் மிகவும் உள ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார். https://www.hirunews.lk/tamil/404692/கொட்டாஞ்சேனையில்-தன்னுயிரை-மாய்த்துக்-கொண்ட-சிறுமி-மனித-உரிமைகள்-ஆணைக்குழு-விசாரணை
  21. தலைப்பில் ஐரோப்பிய யூனியன், கனடா கொடிகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் கொடி இல்லை! பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் பலர் தும்படியில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் இதே நிலை எல்லா நாடுகளிலும் இங்குள்ள வீதத்தில் இல்லை!
  22. GMT நேரப்படி நாளை செவ்வாய் 06 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 20 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவைப்பிரியன் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  23. இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
  24. அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது. எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்குகள் (Macro Economy) குறித்து புள்ளி விபரங்களுடன் கூடிய தெளிவான ஒரு சித்திரத்தை முன்வைத்த அவர், அதனுடன் நின்றுவிடவில்லை. வெவ்வேறு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் ஆகியோர் வழங்க வேண்டிய விரிவான தகவல்களை (துல்லியமான தரவுகளுடனும், பொருத்தமான உதாரணங்களுடனும்) முன்வைத்தார். மூன்றரை மணி நேரம் நெடுகிலும் எவ்வித தொய்வோ, தடுமாற்றங்களோ சொற்களைத் தேடுவதற்கான கால தாமதங்களோ எவையுமில்லாமல் ஒரே சீராக ஒலித்தது அவருடைய குரல். 1978 - 2024 காலப் பிரிவில் ஜனாதிபதி பதவியை வகித்த எண்மரில் எவரும் இந்த அளவுக்கு ' Homework' உடன் வந்து ஊடகவியலாளர்களை சந்தித்த வரலாறு கிடையாது. அதேபோல தனது அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் ஒட்டுமொத்த சீர்த்திருத்த நிகழ்ச்சிநிரலை (Comprehensive Reform Agenda) இவ்வளவு தெளிவாக, ஆணித்தரமாக எடுத்து விளக்கும் திறனையோ அல்லது தமது சிந்தனைகளை கோர்வையாக தொகுத்து சரளமான மொழியில் வெளிப்படுத்தும் ஆற்றலையோ அந்த முன்னைய எண்மரில் எவரும் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை. அந்த வகையில், அநுர குமாரவின் வசீகர ஆளுமைக்கும் (Charismatic Personality), தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளுக்கும், தொடர்பாடல் திறனுக்கும் சவால் விடுப்பதற்கு இன்று எதிர்க்கட்சியிலோ அல்லது ஆளும் கட்சியிலோ எவரும் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். ஜனாதிபதியை நோக்கி 'அண்டப் புளுகன்' மற்றும் 'அந்தரே' (அரசவை கோமாளி) போன்ற வசைச் சொற்களை வீசுவதைத் தவிர, ஆக்கபூர்வமான திட்டங்கள் எவற்றையும் முன்வைக்கும் திராணியை இன்றைய எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த அளவுக்குப் பலவீனமான, மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிப்போயிருக்கும் ஓர் எதிர்க்கட்சி இருந்து வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இவ்வருடம் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதம் ஓர் அரசியல் சக்தியாக NPP விசுவரூபமெடுத்து வருவதையும், SJB, SLFP மற்றும் SLPP போன்ற கட்சிகள் வீழ்ச்சியையும், சீரழிவையும் நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியது. ஜனாதிபதி கனவில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள், முன்னர் எடுத்து விளக்கப்பட்ட அநுர குமாரவின் சிறப்புத் தகுதிகளை எட்டும் விடயத்தில் இன்னமும் வெகு தூரம் பின்தங்கியவர்களாகவே இருந்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் உடனடியாக ஒரு மீட்சி நிலையை எடுத்து வந்து, விலைவாசிக் குறைப்பு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் என்பவற்றின் வடிவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்ற யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அரசாங்கம் வேறு சில துறைகளில் முழுக்க முழுக்க கவனஞ் செலுத்தும் ஓர் உத்தியை பின்பற்றி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. அந்தப் பின்புலத்திலயே, 'அரசியலிலும், அரச நிர்வாக யந்திரத்திலும் வேரூன்றியிருக்கும் இலஞ்சம், ஊழல், வீண் விரயம் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை இல்லாதொழிப்போம்' என்ற சுலோகத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். அது மறைமுகமாக பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிகோல முடியுமென்பது அரசாங்கத்தின் கணிப்பு. கூட்டாக கொள்ளையடிக்கும் ஓர் உத்தியாக அரசியல்வாதிகளுக்கும். அரசு அதிகாரிகளுக்குமிடையில் இதுவரையில் நிலவு வந்திருக்கும் கள்ளக் கூட்டை (Politician - Bureaucracy Nexus) முடிவுக்கு கொண்டு வருவது இதற்கான முதற்படி. ஜனாதிபதி சுட்டிக் காட்டியதைப் போல அது இப்பொழுது நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அரச அதிகாரிகள் மட்டத்தில் மேலோங்கியிருக்கும் இலஞ்ச / ஊழல் கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். ராஜபக்ச எதிர்ப்பை மையப் புள்ளியில் வைத்து இனவாத / மதவாத சக்திகளை பலவீனப்படுத்தி, முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த முன்னுரிமை. ஒரு சில அரச சார்பு சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் இதற்கென இப்பொழுது களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், NPP அரசாங்கத்துக்கும் நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவளித்து வரும் யூடியூபர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் 'Sudaa' எனப் பிரபல்யமடைந்திருக்கும் சுதத்த திலகசிரி. அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களின் மறைமுக ஆசீர்வாதத்துடனும், அனுசரணையுடனும் அவர் செயல்பட்டு வருவதாக பரவலாக நம்பப்படுகிறது. (அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட பொலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.) தனியாகவும், இன்னொருவருடன் இணைந்தும் அவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு காணொளிகளை அவருடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். சிங்கள யூடியூப் உலகில் சுதாவின் எதிர்த்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி நபர் இராஜ் வீரரத்ன; ராஜபக்சகளின் - குறிப்பாக இப்பொழுது நாமல் ராஜபக்சவின் - அடியாள் என்று சொன்னால் தப்பில்லை. இவ்விருவருக்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிரமான சண்டைகள் - அவை பொருட்படுத்தக்கூடிய அரசியல் அலசல்களையோ அல்லது தர்க்கரீதியான வாதங்களையோ கொண்டிராவிட்டாலும் கூட - அவற்றின் வசைகள். இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகடிகள் மற்றும் இதுவரையில் எவரும் பொது வெளியில் பேசத் துணியாத சிங்கள தூஷண வார்த்தைகள் என்பவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. "நாட்டின் பொதுசன அபிப்பிராயத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக சுதத்த திலகசிரி போன்றவர்கள் எழுச்சியடைந்திருப்பது பெரும் துரதிர்ஷ்டம் ............. ஆனால், இன்றைய சமூக ஊடக உலகில் அது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாதது" என்கிறார் மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான தீப்தி குமார குணரத்ன. NPP அரசாங்கம் குறித்து எதிர்க்கட்சிகளாலும், அரச எதிர்ப்பு யூடியூப் தளங்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்களை அரசாங்க அமைச்சர்களோ அல்லது புதுமுகங்களான நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ தனித்து நின்று எதிர்கொள்ள முடியாது என்பதனை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. காட்சி ஊடகங்களில் தோன்றி, எதிரிகளை வாயடைக்கச் செய்யக்கூடிய அளவுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கும் திறனோ அல்லது முறையான தொடர்பாடல் பயிற்சியோ அரசாங்கத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். ஒரு விதத்தில் அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு பாத்திரத்தையே (அரசாங்கத்தின் சார்பில்) சுதத்த திலகசிரி வகித்து வருகிறார். கலரியை இலக்கு வைத்து அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இந்த வேலைக்கு பிறதொரு தளத்தில் நின்று குறைநிரப்புச் செய்கிறார் 'History with Nirmal' என்ற யூடியூப் தளத்தை நடத்தி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி (அரசு ஆதரவு நிலைப்பாட்டில் நின்று) இலங்கையின் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை அவர் இந்த யூடியூப் தளத்தில் அலசுகிறார். ஜனாதிபதி அநுர குமாரவின் நகர்வுகளுக்கான கோட்பாட்டு மற்றும் நடைமுறைசார் பின்புலத்தை வழங்குவதற்கும் முயற்சித்து வருகிறார். சுதத்த திலகசிரியின் யூடியூப் தளத்தில் தீவிர சிங்கள இனவாத தர்ப்புக்களை இலக்கு வைத்து முன்னெப்பொழுதும் இருந்திராத அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் தலையசைப்பு இருந்து வருவதாகவே தெரிகிறது. தலதா கண்காட்சியின் போது கண்டி நகரப் பள்ளிவாசல்களை திறந்து வைத்து, முஸ்லிம் சமூகம் காட்டிய சமய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரியை பெரிதும் சிலாகித்து அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனுடன் இணைந்த விதத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது முன்வைத்த துணிச்சலான வசைச் சொற்கள்; டாக்டர் ஷாபியின் மகளின் A/L பெறுபேறுகளை குறிப்பிட்டு அத்துரலியே ரதன தேரர், விமல் வீரசன்ச, உதய கம்மன்பில மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோருக்கு சாபமிடும் விதத்தில் வெளியிட்ட காணொளி ஆகிய அனைத்தும் இனவாதிகளின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்தும் நோக்குடன் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சிநிரலின் அங்கங்களாகவே தென்படுகின்றன. டாண் பிரியசாத் அஞ்சலி உரையில் பலங்கொட கஸப்ப தேரர் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் ஜிஹாத் தீவிரவாதிகள் டாண் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்த கருத்தும் சிங்கள சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இவை அனைத்தும் தீவிர சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வரும் தரப்புக்களுக்கும், NPP அரசாங்கத்துக்குமிடையில் ஒரு மோதல் நிலை (Confrontation) தோன்றியிருப்பதையே காட்டுகின்றன. அவை அடுத்து வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைய முடியும். "திசைகாட்டியின் வெற்றி சிங்கள பௌத்தர்களின் தோல்வி" என்ற தலைப்பில் யூடியூப் தளமொன்றில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் முன்னணி பிக்கு ஒருவர் - ''புத்தசாசனம் மற்றும் சமய விவகாரங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக கிறிஸ்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கும் காரியம்............. இவர்கள் 'நிராகமிக' (எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்) அல்ல; இலங்கையிலுள்ள ஏனைய மதங்களை மதிக்கும் அதே வேளையில், பௌத்த மதத்தை மட்டும் இழிவுபடுத்துபவர்கள்." "................. கல்துவ ஆரண்ய புண்ணியஸ்தலத்தின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு வேலைகளை தொடர்ந்து கடற்படையினரே செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 'ஒரு மணித்தியாலத்துக்கு 93,000 ரூபா வீதம் செலுத்தினால் மட்டுமே அந்த வேலைகளை பொறுப்பேற்க முடியும்' என்று ஒரு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது." கடந்த மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் அமரபுர பீடத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படும் யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் ஒரு புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதனையொட்டி இடம்பெற்ற சமயக் கிரியைகளின் போது பாதுகாப்புப் பணியிலும், அதேபோல அன்னதானங்களை விநியோகிக்கும் வேலையிலும் பெருந்தொகையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இராணுவ பாண்ட் வாத்தியக் குழுவொன்றும் அங்கு பிரசன்னமாகியிருந்தது. ஆனால். இராணுவத் தளபதியிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து அங்கிருந்து உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. . இதனைக் கண்டித்து விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய ஒரு ஊடக மாநாட்டில் ஜனாதிபதி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு விடயம் இது: "அரசாங்கத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து மிகவும் கண்டிப்பான ஒரு பணிப்புரையை வழங்கியிருக்கிறார். 'வடக்கு கிழக்கில் இருக்கும் தொல்லியல் அமைவிடங்களை இனிமேல் பௌத்த தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அல்லது இந்து தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அழைக்கக் கூடாது' என்பதே அப்பணிப்புரை.................... இது பௌத்த தொல்லியல் அமைவிடங்களுக்கு பிற்காலத்தில் இந்துக்கள் உரிமை கோரும் ஒரு நிலைமையை நிச்சயமாக எடுத்து வரும்". இது தொடர்பாக அமரபுர பீடத்தைச் சேர்ந்த கலாநிதி புஸ்ஸல்லாவே சோமவிசுத்தி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் உள்ள பின்வரும் வ்ரிகளை வீரவன்ச வலியுறுத்திக் கூறி, மேற்கோள் காட்டியிருந்தார்: ''வேற்று மதத்தவரான இராணுவத் தளபதி இதிலும் பார்க்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே எமது கருத்தாகும்." எளிதில் உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்சினைகளை (Sensitive Issues) அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாண்டு வரும் அதே வேளையில், ஏற்கனவே ஸ்தாபிதமாகியிருக்கும் 'தவறான முன்னுதாரணங்களை' படிப்படியாக களைவதற்கு தேவையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதனையும் மேற்படி இரு சம்பவங்களும் காட்டுகின்றன. 'கடந்த காலத்தில் நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நோக்கியிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் நாங்கள் அதிகமும் சிங்கள மக்கள் தொடர்பாக தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.....................' என 'சட்டன' நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒரு மெல்லிய குற்ற உணர்வுடன் சொன்னதையும் ஜேவிபி தரப்பில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிந்தனை மாற்றமாக இருந்து வருகிறது எனக் கருதலாம். அது தவிர, தந்ததாது கண்காட்சி தொடர்பாக நேர்ந்த ஒரு சில குளறுபடிகளையடுத்து, தியவடன நிலமே நிலந்த தள பண்டாரவை இலக்கு வைத்து சுதா யூடியூப் தளம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தாக்குதல்கள் இப்பொழுது உச்ச கட்டத்தை எட்டியிருக்கின்றன. தலதா மாளிகை நிதிகளை தியவடன நிலமே துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்று வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுதா. அதற்கான ஆதாரங்களை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கப் போவதாகவும் அவர் தள பண்டாரவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தியவடன நிலமே தெரிவுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களின் இடம்பெறவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இஸ்லாமோபோபியாவை மூலதனமாகக் கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்திருக்கும் ஞானசார தேரர் இப்பொழுது முதல் தடவையாக தான் எதிரியாக கருதும் ஓர் அரசாங்கத்தை (Hostile Government) எதிர்கொள்கிறார். அண்மையில் அவர் நடத்திய ஊடகச் சந்திப்புகளில் ஒரு வித பதற்றமும், அச்சமும் சூழ்ந்த உடல்மொழியை அவர் வெளிப்படுத்திக் காட்டியதை உன்னிப்பாக பார்க்கும் பொழுது அவதானிக்க முடிந்தது. 2010 - 2015 மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும், 2015 - 2019 நல்லாட்சி அரசாங்கத்திலும், அதே போல 2019 கோட்டாபய அரசாங்கத்திலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போழுது நிலைமை மாறியிருக்கிறது. ஞானசார தேரரின் அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஒரு சில காணொளிகளை வெளியிட வேண்டி நேரிடலாம் என்ற விதத்தில் சுதா அவருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையும் ஒரு வேளை அவருடைய எதிர்கால செயல்பாடுகள் மீது தாக்கம் செலுத்த முடியும். எத்தகைய ஆதாரங்களையும் முன்வைக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த கட்டுக் கதைகளை பரப்பி, சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒரு இனம் புரியாது அச்சத்தையும், மறுபுறம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பதற்ற உணர்வையும் தோற்றுவிக்கும் அவருடைய வழமையான நடைமுறையை இனிமேலும் தொடர முடியுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொருளாதார நெருக்கடி, குமார குணரத்னத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 'அந்தரே' என்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு செயற்பாடுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை கையாள்வது அநுர குமார திசாநாயக்க எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கதாநாயகனாக பார்க்கப்படுவாரா அல்லது வில்லனாக பார்க்கப்படுவாரா என்பது மீண்டும் நாட்டில் தலைத்தூக்க தொடங்கியிருக்கும் இனவாதிகளையும், மத வெறியர்களையும் அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமையும்! From Mlm Mansoor timeline https://www.facebook.com/share/p/1BJE2r4PYY/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.