Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை - மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்தியப்பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்களில் அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தரின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காகவே எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு கூறப்பட்ட அதே காரணங்களுக்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேறு தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, நீதிமன்றத்தின் அந்தக் கட்டளையைக் காரணமாகக் காட்டி, எமது வேட்புமனுக்களையும் ஏற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரினோம். எனினும், 'நீதிமன்றக் கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள்' என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். குறித்த வழக்கு நேற்றுத் திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காலதாமதம் எனக் காரணம்கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபனை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு. நீதிமன்றக் கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனக்கூறி, எம்மை வழக்குத் தொடருமாறு அறிவுறுத்திய பின்னர், நாம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில் காலதாமதம் என கூறியுள்ளார்கள். இதனூடாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி, அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவுள்ளது. இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக, ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு, ஜே.பி.வியின் காட்டாட்சியை எடுத்துக்காட்டுகின்றது – என்றார். https://newuthayan.com/article/உள்ளூராட்சித்_தேர்தலில்_ஜனநாயகப்_படுகொலை_-_மணிவண்ணன்_குற்றச்சாட்டு
  2. பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் – மேலும் இருவா் கைது adminApril 22, 2025 தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பில் மட்டும் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது எனத் தொிவித்துள்ளாா். . பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனத் தொிவித்த அவா் சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் எனவும் அவை தொடர்பில் விசாரிக்கப்படுவதுடன் அது தொடா்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா் . சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்து வருகிறது எனவும் உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவா் தொிவித்துள்ளாா். . சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ , பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/2025/214589/
  3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி பயணத்தில் இருந்து பாதியில் திரும்பும் மோடி 22 Apr 2025, 11:54 PM ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தனது சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்றிரவே இந்தியா திரும்புகிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் எண்ணிக்கையை இதுவரை அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சவுதி அரேபியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மோடி. இதையடுத்து அமித் ஷா இன்று மாலையே காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் சென்றார். அங்கே பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளோடு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு ஜெட்டாவில் சவுதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில், விருந்தை ரத்து செய்துவிட்டு, தனது சவுதி அரேபிய பயணத்தையும் பாதியில் முடித்துக் கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, சவுதி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானை சந்திக்க அவர் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் காஷ்மீர் தாக்குதலையடுத்து பிரதமர் இன்றிரவே இந்தியாவுக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை வருவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி டெல்லி திரும்பிய பிறகு ஏப்ரல் 23 புதன் காலை, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலையும் விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது” என்று கூறினார் ஓமர். https://minnambalam.com/pm-cuts-short-saudi-visit-after-jk-attack/
  4. GMT நேரப்படி நாளை புதன் 23 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 12 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  5. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!
  6. நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱 இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰
  7. எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் April 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும்போது தமிழ்க்கட்சிகள் ‘அனர்த்தத்தை’ தவிர்ப்பதற்காக விவேகத்துடன் முகங்கொடுக்க ஒரு அரசியல் சமராக உள்ளூராட்சி தேர்தல்கள் விளங்குகின்றன. 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை கைப்பற்றியதன் மூலம் படைத்த முன்னென்றுமில்லாத சாதனை தமிழ் தேசியவாத அரசியலின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியது. தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாக அரசியல் இணக்கத்தீர்வொன்றை காண்பது தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் வரலாற்றைக்கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு தமிழ்க்கட்சிகளை தடுமாற வைத்தது. உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான 16 வருடங்களில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதில் தமிழ்க்கட்சிகள் நிலவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதால் அவற்றின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் கணிசமானளவுக்கு திரும்பினார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கடந்தகால அனுபவங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கின்ற படிப்பினைகளின் அடிப்படையில் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும் பக்குவமும் ஆற்றலும் இல்லாத தமிழ்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை ஒரு தற்காலிக தடுமாற்றம் என்றே நோக்குகின்றன என்று தெரிகிறது. வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளை விடவும் தமிழ் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் மொத்தமாக கிடைத்த வாக்குகள் மிகவும் அதிகமானவை என்பதால் தேர்தல் முடிவுகளை தமிழ்த் தேசியவாதத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதாக வியாக்கியானம் செய்யமுடியாது என்று வாதிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அத்துடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தினாலேயே தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட விரும்பியதாகவும் அவற்றின் தலைவர்கள் இன்னமும் நினைக்கிறார்கள். மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை வழமையாக வெறுத்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட உள்ளூராட்சி தேர்தல்களுக்காக, சில உதிரிக்கட்சிகளுடன் என்றாலும், புதியதொரு கூட்டணியை அமைத்து பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார். இலங்கை தமிழரசு கட்சி தனியாகவே போட்டியிடுகின்றது. ஆனால், தற்போதைய தேர்தல் முறை காரணமாக உள்ளூராட்சி சபைகளில் நிருவாகத்தை அமைப்பதற்கு மற்றைய தமிழ்க்கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால் அவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்வதை அது இயன்றவரை தவிர்க்கிறது. தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவையே வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் நிற்கும் பிரதான அணிகள். இவை சகலதுமே ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டிய முறை குறித்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் அவற்றுக்கு இடையிலான கட்சி அரசியல் போட்டியை அம்பலப்படுத்துகின்றன. ஒவ்வொரு அணியின் அரசியல்வாதிகளும் தங்களுக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் மீதான பற்றுறுதியை மீண்டும் வெளிக்காட்டுவதற்கான ஒரு தீர்க்கமான சந்தர்ப்பமாக உள்ளூராட்சி தேர்தல்களை பயன்படுத்துமாறு அவர்கள் தமிழ் மக்களிடம் கெஞ்சுகிறார்கள். புத்தாண்டில் தமிழ் மக்கள் புதியதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல், கலாசார தேசியவாத உறைவிடமாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுவது தவறு என்று வாதிடுகிறார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாடொன்றில் உரையாற்றிய சுமந்திரன் தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 சதவீதமான வாக்குகளே கிடைத்தன என்றும் மற்றைய அனைத்து தரப்புகளுக்கும் கிடைத்திருக்கின்ற வாக்குகளை ஒவ்வொன்றாக நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன என்றும் கூறினார். மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்த காரணத்தால் தமிழ் மக்களின் ஆணை தங்களுக்கே கிடைத்தது என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க உட்பட அதன் தலைவர்கள் உரிமை கோருவது உண்மையா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமைகின்றன என்று குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கு தெளிவான ஆணையை தருமாறு தமிழ் மக்களிடம் வேணடுகோள் விடுத்திருக்கிறார். “தேசிய மக்கள் சக்திக்கு அல்லது தென்னிலங்கை கட்சிகளுக்கு எமது மக்கள் ஆணையை வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததை போலன்றி உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ்க் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். அவ்வாறு நாம் விடுக்கும் வேண்டுகோளை எந்த தமிழ்க்கட்சிக்கும் வாக்களிக்கலாம் என்று மக்கள் அர்த்தப்படுத்தக் கூடாது. பல தமிழ் கட்சிகளுக்கு வாக்குகளை பிரித்து வழங்கினால் பாராளுமன்ற தேர்தலில் கிடைத்ததைப் போன்ற முடிவுகளே உள்ளூராட்சி தேர்தலிலும் கிடக்கும். “பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசு கட்சிக்கு மாத்திரமே வாக்களிப்பதன் மூலமாக தமிழ் மக்கள் தங்களின் ஆணை ஒரு தமிழ்க் கட்சிக்கே இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும். தமிழ் மக்களின் ஆணை குறித்து செய்யப்படுகின்ற பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். சுமந்திரனை போன்றே மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கூட்டணிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்கிறார்கள். அவ்வாறு வேண்டுகோள் விடுக்கும்போது அவர்கள் தமிழ்தேசியவாதத்தை பாதுகாப்பதில் தங்களுக்கு மாத்திரமே அசைக்கமுடியாத பற்றுறுதி இருப்பதாக பிரத்தியேகமாக உரிமை கோருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த கட்சிகளுக்கு உள்ளூராட்சி தேர்தலில் பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகின்ற போதிலும், அவற்றினால் ஒரு குறைந்தபட்ச அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முடியாத அளவுக்கு கட்சி அரசியல் போட்டியும் ஆளுமை மோதல்களும் தடையாக இருக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தைக் காண்கிறோம். தேசிய மக்கள் சக்திக்கும் தென்னிலங்கையின் மற்றைய பிரதான பழைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் தமிழர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை எந்தவிதமான வேறுபாடும் கிடையாது என்று தமிழ்க்கட்சிகள் மக்களுக்கு கூறுகின்றன. அதேவேளை, வடக்கு, கிழக்கில் தங்களுக்கு கூடுதலான பாராளுமன்ற ஆசனங்களை தந்த மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்தும் தக்கவைக்கக்கூடியதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த ஆறுமாத காலச் செயற்பாடுகள் அமையவில்லை என்பது திட்டவட்டமான உண்மை. தமிழ்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பார்களா அல்லது அந்த கட்சிகளின் இதுவரையான அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் மீது அவர்களுக்கு இருந்துவரும் வெறுப்பு தணியவில்லையா என்பதை மாத்திரமல்ல, தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளினால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்களா என்பதையும் உள்ளூராட்சி தேர்தல்கள் வெளிக்காட்டும் என்று நம்பலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகட்டுவதற்கு விரும்பினார்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் அவற்றின் தலைவர்கள் எந்தப் பயனையும் தராத தங்களது இதுவரையான அரசியல் பாதையை மாற்றுவதில் அக்கறை காட்டாமல் வெறுமனே கற்பனாவாத தேசியவாத சுலோகங்களையே ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நியாயபூர்வமான தேசிய வாத அரசியல் அபிலாசைகளை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு தேசிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதில் இருந்து தமிழ் மக்களை திசைதிருப்புவதற்கு மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியிருப்பதும் உள்ளூராட்சி தேர்தல்கள் தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானவை என்று கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதும் உண்மையில் தமிழ் தேசியவாத கட்சிகளின் மிகப்பெரிய ஒரு தோல்வியாகும். அவை தங்களது எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களில் பணயம் வைத்திருக்கின்றன. https://arangamnews.com/?p=11966
  8. நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்? April 22, 2025 10:42 am 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி. தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதம்தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டியிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்கலாம். 2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீத வாக்குகளுடன் 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 39.71 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரு கூட்டணிகளுக்கு இடையிலான வித்தியாசம் 6 சதவீதம் தான். அந்தத் தேர்தலில் 3-வது இடம்பிடித்த நாதக பெற்ற வாக்குகள் 6.58 சதவீதம். அதேபோல், அமமுக – தேமுதிக 2.85 சதவீதமும் மநீம 2.73 சதவீதமும் வாக்குகளை பெற்றன. வரும் 2026 தேர்தலில் திமுக அணி அப்படியே தொடர்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம். வழக்கம் போல நாதக தனித்து போட்டியிடுகிறது. தவெக-வுக்கும் தனித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை. ஒருவேளை, நாதக – தவெக கூட்டணி அமையலாம். தற்போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்சயமாகி உள்ளது. இதில் 2024 தேர்தலின்படி நிரூபிக்கப்பட்ட வாக்கு சதவீதப் படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்குகள் உள்ளன. அதிமுக அணியின் 23.05 சதவீதம், பாஜக அணியின் 18.28 சதவீத வாக்குகளைக் கூட்டினால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்குகளை அறுவடை செய்து எளிதாக வெற்றிபெறலாம் என்பது அதிமுக – பாஜகவின் கணக்கு. ஆனால், புதிதாக களத்துக்கு வரும் தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது எனத் தெரியவில்லை. விஜய் கடுமையாக திமுக-வை எதிர்க்கிறார். எனவே, திமுக-வுக்கு எதிரான வாக்குகள் தவெக-வுக்குப் போகலாம் இது அதிமுக-வுக்கு மைனஸ். அதேசமயம், விஜய், பாஜக-வையும் கடுமையாக எதிர்க்கிறார். இதனால் பாஜக-வுக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு வரலாம். இது திமுக-வுக்கு மைனஸ். மேலும், திமுக, பாஜக-வை பிடிக்காத சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் வாக்குகள் தவெக – நாதகவுக்கு போகும். இது திமுக, அதிமுக அணிகளுக்கு மைனஸ். ஒருவேளை, நாதக – தவெக கூட்டணி அமைந்தால் அது திமுக, அதிமுக அணிகளுக்கு மேலும் சவாலாகும். 2006-ல் விஜயகாந்த் 3-வது அணியாக களத்தில் நின்றார். அது அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக-வின் ஆட்சி பறிபோக காரணமானது. 2011-ல் அதே தேமுதிக-வை கூட்டணிக்குள் இழுத்து திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றினார் ஜெயலலிதா. அதேசமயம், 2016-ல் அமைக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் போகவேண்டிய வாக்குகளை அறுவடை செய்து, மீண்டும் அதிமுக ஆட்சியமைய காரணமானது. 2021-ல் நாதக பிரித்த வாக்குகள் அதிமுக ஆட்சியை இழக்க வழியமைத்தது. எப்படிப் பார்த்தாலும் தற்போதைய 4 முனைப் போட்டி, திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் கத்திமேல் நடக்கும் பாதைதான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அதற்குள்ளாக காட்சிகள் மாறுகிறதா எனப் பார்ப்போம். https://oruvan.com/four-way-competition-who-benefits-from-the-2026-tamil-nadu-elections/
  9. ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்? April 22, 2025 11:21 am அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர. ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை? 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் பௌத்த சமய வரலாறுகளை புகுத்தியது. பாட நூல்களில் சிங்கள சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. அதாவது பாட நூல்களில் சிங்கள இனவாதம் புகுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவின் யுனெஸ்கோ கல்வி முறையின் பிரகாரம் பாட நூல்கள் அந்தந்த தேசிய மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் சிங்கள மொழியில் இருந்து தான் தமிழ் பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுகிறது. அதுவும் வரலாற்று பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுவது மிகத் தவறு ”தமிழ்மொழி” ”சைவ சமயம்” ”இஸ்லாமிய சமயம்” ஆகிய பாட நூல்களை தவிர ஏனைய அனைத்து தமிழ் பாட நூல்களிலும் சிங்களம் தான் பாட நூலின் ”மூலம்” ஆக உள்ளது. பிரதானமாக வரலாறு 2015 இல் நல்லாடசி என்று அழைக்கப்பட்ட அரசாங்கம் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை, கொழும்பை மையமாகக் கொண்ட தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம், காணி பதிவு திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகள் மூலம் சட்டரீதியாக கைப்பற்றும் அணுகு முறைகளை அறிமுகப்படுத்தி இருந்தது. காணிகளை அபகரிக்க முப்படைகள் மற்றும் பொலிஸாரை அரசாங்கம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது. இந்த அணுகுமுறை 2020 இல் கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் தொடர்ந்தது. இது அநுர ஆட்சியிலும் தொடர்கிறதே? சட்டவிரோத விகாரைகளை அகற்ற உத்திரவிட முடியுமா? இப்போது கேள்வி என்னவென்றால் அநுர கூறிய ”மாற்றம்” ”சோசலிம்” என்றால் என்ன? அத்துடன், பாட நூல் விவகாரம் உள்ளிட்ட அத்தனை அநீதிகளையும் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் இருந்து செய்து கொண்டு, இனவாத அரசியலுக்கு இடமில்லை என்று எந்த முகத்தோடு கூறுகிறார் அநுர? இனவாத அரசியலை 1920 ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்வது யார்? 2009 மே மாதம் போரை வெற்றி கொண்டு விட்டதாக பெருமைப்பட்டு கொழும்பில் வெற்றி விழா கொண்டாடினார்கள் சரி. இனிமேலாவது குறைந்த பட்சம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏதேனும் குறைந்தபட்ச தீர்வையாவது முன்வைக்க வேண்டும் என்று எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவராவது கடந்த 15 வருடங்களில் சிந்தித்தாரா? 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐந்தில் ஆறு பெரும்பான்மை வாக்குகளினால் 1988 இல் 13 நிறைவேற்றப்பட்டுள்ளது! மேலும் சில கேள்விகள்—-புரிதல்கள்— 2009 இற்குப் பின்னர் கடந்த 15 வருடங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனையை இளைஞர்களிடம் ஊக்குவிப்பது யார்? தமிழர் பிரதேசங்களில் ”மண் அகழ்வு” – ”காடுகளை அழித்து மரங்களை வெட்டுல்” போன்ற சட்ட விரோத செயலுக்கு ஒத்துழைப்பது யார? தமிழக மீனவர் பிரச்சனை தூண்டப்படுவது யாரால்? 2009 இற்கு முன்னரும் – பின்னரும் வடக்குக் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு தீனி போட்டு வளர்ப்பது யார்? பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது ஏன்? ஊழலை ஒழிப்போம் அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் என்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியம் செய்து விட்டு, தற்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில், சலுகைகள் – நிவாரணங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவது சரியா? அது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அநுரவுக்குத் தெரியாதா? அது மாபெரும் ஊழல் மோசடி என்று அநுரவுக்கு புரியாதா? அது தவறு என்று சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு கூட அநுராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதே! ஆகவே தமிழ்த் தேசிய கட்சிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற இனவாதம் எங்கிருந்து வருகிறது? இக் கேள்விகளுடன் ஒப்பிடுகையில், ஜேஆர் – சந்திரிகா – மகிந்த – கோட்டா – ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடவில்லை. ஆக இலங்கை என்பது ”ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பு” எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் தமிழர்களின் நிலை. அ.நிக்ஸன் https://oruvan.com/how-is-anura-different-from-jr-chandrika-mahinda-gota-and-ranil/
  10. கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன் April 22, 2025 12:10 pm நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று எதிர்ப்பார்த்திருந்தேன். அவர்கள் என்னை தொடர்புகொள்வார்கள் என்று பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில், எனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினர்கள் தன்னுடன் பேசியிருந்தனர். மிகத் தெளிவாக அவர்களின் கொள்கைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். ஆனால் எவ்வித சலனமும் இல்லாமல் தமிழ் தேசியத்தை கையிலெடுத்து அதை மிக காத்திரமாக கொண்டுச் செல்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர். இந்நிலையில் அவர்களுக்கு எனது முழு ஆதரவையும் வழங்க முடிவெடுத்துவிட்டேன். இலங்கை தமிழரசு கட்சியினர் என்னை விலக்கி வைத்தனர். அந்த கட்சியில் ஒரு தனி நபர் முழு ஆதிக்கத்தையும் செலுத்திக்கொண்டிருக்கின்றார். அந்த ஆதிக்கத்திற்கு சார்பாக சில செயற்பாடுகளும் நடந்துவிட்டன.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/eswarapatham-saravanapavan-joins-hands-with-gajendrakumar-ponnambalam/
  11. ”சஹ்ரானின் மறு தோற்றம் சூப்பர் முஸ்லிம் அமைப்பாக உருவாக்கம்” கனகராசா சரவணன் இலங்கையில் சஹ்ரானின் மத பயங்கரவாதம் இப்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவாகி உள்ளதுடன் கிழக்கில் மத ரீதியான குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றாரா? இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் ஆகவே மத ரீதியான ஒரு மாகாணத்தைப் பிரிக்க ஒரு போதும் விடமாட்டோம் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவதர்சன் தெரிவித்தார். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் குண்டு வெடித்த இடத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பாரிய தீவிரவாத தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இது ஒரு வேதனையான விஷயம் என்பதுடன் உலகளாவிய ரீதியில் ஒரு துன்பகரமானது. உண்மையில் ஒரு வேதனையான நாட்களை கடந்து செல்கின்றோம் இந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் இந்த இடத்தில் வர்ணிக்கப்பட்டு இரத்த ஆறுகளாக ஓடுகின்ற போது அதைப் பார்த்து ரசிக்க கூடிய ஒரு தீவிரவாத செயலாக கருதுகின்றோம். இதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கண்ணீரோடு இதை ஒவ்வொரு நிமிடங்களும் கடந்து செல்கின்றோம். வருடத்தில் ஒரு முறை இந்த நினை வேந்தலை செய்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளும்மிகவும் வேதனையுடன் கண்ணீருடன் நாட்களை கடந்து செல்கின்றனர் . சொந்த பிள்ளையை கண்முன்னே மரணித்த கொடூரமான செயற்பாட்டை காணக்கூடியதாக இருந்தது எனவே இவ்வாறான ஒரு மத தீவிரவாதம் திட்டமிட்டு செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்து உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பான சூத்திரதாரிகள் யார் என ஜனாதிபதி 21ம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கூறிய வார்த்தைகளை நம்புகின்றோம். ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலையின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவன் மரணத்திற்கு முன்னர் கூறிய விடயம் அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஹாபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் நாங்கள் மரணித்தாலும் இதை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிம்களும் ஹாபீர்களை கொலை செய்ய வேண்டும் என இந்த விடயம் தவறானது இதை வன்மையாக கண்டிக்கின்றோம். இதேவேளை அந்த சஹ்ரானின் கடும் போக்குவாத சிந்தனையுடன் தற்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது எனவே இந்த ஜ.எஸ்.ஜ.எஸ் குண்டு வெடிப்புக்குப் பின்னர் நாங்கள் தொடர்ந்து ஒரு அச்சமான சூழலில் இருக்கிறோம் மீண்டும் நாங்கள் மரணிப்பதற்கு தயார் இல்லை. எனவே இந்த மத பயங்;கரவாதத்துக்கு எதிராக அரசாங்க பாதுகாப்பு படை செயல்பட வேண்டும். எங்கேயோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் இஸ்லாமிய சமூகத்தை சுட்டு கொன்றார் என்பதற்காக இலங்கை நாட்டில் அப்பாவி குழந்தைகளையும் மக்களையும் கொலை செய்துள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இது முஸ்லிம்களின் தாயகம் என்கிறார். கிழக்கில் மதரீதியான ஒரு தாயத்தை உண்டாக முயற்சிக்கின்றாரா ? குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க நினைக்கின்றாரா? அதை கடைசி வரைக்கும் விடமாட்டோம் இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் எனவே மதரீதியாக மாகாணத்தைப் பிரிக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். எனவே பாதிக்கப்பட்ட சமூகம் என்ற ரீதியில் மனவேதனையுடன் சொல்லுகின்றோம். நாங்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளோம் இது மன்னிக்க முடியாத விடயம் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை கொடு என யேசுநாதர் சொல்லியுள்ளார் ஆனால் ?அறைய வந்தால் கன்னத்தை கொடுத்திருப்போம் அவர்கள் குண்டுடன் கொல்ல வந்தார்கள். என தெரியாது. எனவே, மீண்டும் எமது சந்ததியை அழிக்க தயார் இல்லை ஆகவே ஜனாதிபதி தேர்தலின் போது கூறியதை நிறைவேற்ற வேண்டும் உண்மையான சூத்திரதாரி யார் என கைது செய்து தீர்வை பெற்று தர வேண்டும் இதை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றார். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சஹ்ரானின்-மறு-தோற்றம்-சூப்பர்-முஸ்லிம்-அமைப்பாக-உருவாக்கம்/73-355937
  12. இலங்கையில் பிரிட்டனின் கூலிப்படையான கினிமினியின் போர்க்குற்றங்கள்! – முக்கிய ஆவணங்களை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆறு வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்தது ஏன்? April 22, 2025 இலங்கையில் 1980களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனின் கூலிப்படை நிறுவனமான கினிமினி பற்றிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக பிரிட்டிஸ் அரசாங்கம் அவற்றை வெளியிடுவதை தடுத்துவைத்திருந்தது என முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தமாத ஆரம்பத்தில் லண்டனில் இடம்பெற்ற தகவல்தீர்ப்பாய விசாரணையில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் முன்னாள் தலைமை தணிக்கையாளர் கிரஹாம் ஹேண்ட் கினிமினி குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிடுவதை பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தடுத்தது என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பின்னரும் ,அவை தொடர்ந்தும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குழப்பமானதாக மர்மமானதாக கவலைக்குரியதாக காணப்படுகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பகிரங்கப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் ஆறு வருடங்களிற்கு மேல் அவற்றை பகிரங்கப்படுத்தாமல் வைத்திருந்துள்ளனர் . இதன் காரணமாக இலங்கையின் உள்மோதலில் பிரிட்டனிற்கு உள்ள தொடர்புகள் குறித்த விபரங்கள் 2025 பெப்ரவரி மாதமே வெளியாகியுள்ளன. டீகிளாசிபைட் யுகே என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீர்ப்பாயம் கினிமினி தொடர்பான ஆவணங்களை ஏன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. கினிமினி தொடர்பான நூல்கள் மற்றும் ஆவணப்படத்திற்கான விபரங்களை பெறுவதற்காக கினிமினி குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு முதன்முதலில் 2018இல் தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சில ஆவணங்களை பகிரங்கப்படுத்திய பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஏனைய ஆவணங்களை வெளியிடாமல் வைத்திருந்தது. இந்த குறிப்பிட்ட ஆவணங்களை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு வெளியிடவுமில்லை அதிகாரபூர்வமாக விலக்கிவைக்கவும் இல்லை. பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சில் மிகவும் உணர்வுர்பூர்வமான தகவல்கள் குறித்து ஆராய்ச்சியாளர்களை வழிநடத்தும் அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் தூதுவரான ஹான்ட் இந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு எப்போது அனுமதியளிக்கப்பட்டதுஎன தெரியவில்லை ,அல்லது ஏன் அரசாங்கம் இவ்வளவு காலமாக அவற்றை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://eelanadu.lk/இலங்கையில்-பிரிட்டனின்-க/
  13. எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம் யாழ்ப்பாணம் - எழுதுமட்டுவாழ் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் வடக்குக்கு வந்து திரும்பியபோது, அந்தச் சோதனைச் சாவடிகளை அகற்றும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதையடுத்து அவை அகற்றப்பட்டிருந்தன. எனினும், பின்னர் அந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் போடப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்துக்கு அநுர மீண்டும் வந்து சென்றுள்ள நிலையில் அந்தச் சோதனைச் சாவடிகள் நேற்றுமுன்தினம் முதல் மீளவும் அகற்றப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. https://newuthayan.com/article/எழுதுமட்டுவாழ்,_ஆனையிறவுச்_சோதனைச்_சாவடிகள்_மீளவும்_அகற்றம்
  14. தேர்தலுக்கு முன் யாழ் , கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம் adminApril 22, 2025 நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய காணிகள் தவிர மீதமுள்ள காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சுமார் 100 ஏக்கர் காணிகளை எதிர்வரும் வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுதந்திரமாக சென்று வர கூடிய வகையிலும் , அக்காணிகளுக்கான வீதிகளை முற்றாக விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/214567/
  15. யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் adminApril 22, 2025 யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார். அதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை அண்மையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214561/
  16. GMT நேரப்படி நாளை செவ்வாய் 22 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 19 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  17. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள், சுப்மன் கில்லின் 90 ஓட்டங்கள், ஜொஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் என வேகமாக அடித்தாடியதால் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களில் அங்கியா ரகானேயின் 50 ஓட்டங்களைத் தவிர பிற வீரர்கள் ஓட்டங்களை எடுக்கத் திணறியதால் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  18. இன்று எனக்கு முட்டைதான்..😩 KKR தோல்வியை நோக்கி போய்க்கொண்டிருக்கு!
  19. நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫 ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝
  20. GMT நேரப்படி நாளை திங்கள் 21 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  21. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் எவரும் நிலைத்து ஆடாததாலும், பின்னைய ஓவர்களில் எதிரணியின் இறுக்கமான பந்து வீச்சாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான தேவ்தத் படிக்கலின் 61 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலியின் ஆட்டத்தாலும் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விரைவில் பவிலியனுக்குத் திரும்ப 17 வயதில் முதலாவது ஐபிஎல் போட்டியில் நுழைந்த ஆயுஷ் மாத்ரே மின்னல் வேகத்தில் 32 ஓட்டங்களை எடுத்தார். வேகமாக அடித்தாடி அரைச் சதங்கள் பெற்ற ரவீந்திரா ஜடேஜாவினதும், ஷிவம் டுபேயின் ஆட்டங்களால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடன் 15.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களையே எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தக்கவைத்துள்ளார். இறுதி இடத்தில் இருந்த @goshan_che மூன்று பேரைக் கீழே தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார். கடைசிப் படியில் நிற்க பலர் முண்டியடிக்கின்றனர்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.