Everything posted by கிருபன்
-
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு adminDecember 3, 2025 வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்தொழில் அமைச்சர் , அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகிறது. அது நீருக்கான போராக உள்ளது. இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான். வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும். இது தான் வழமை, இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர். இதொரு அருவருப்பான செயல். வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்த முனைகிறார். தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது.இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/223529/
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு adminDecember 4, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை காவற்துறையினர் மீட்டுள்ளனர். திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவற்துறையினர் மறுநாள் திங்கட்கிழமை இளைஞனை வெட்டியா நால்வரில் இருவர் உள்ளிட்ட 06 பேரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் , மேலும் சில சான்று பொருட்களை மீட்கவும் , சந்தேகநபர்களை காவற்துறையினரின் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு மன்றில் காவற்துறையினர் விண்ணப்பம் செய்தனர். காவற்துறையினரின் விண்ணப்பத்தை அடுத்து , சந்தேகநபர்களை 24 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்தது. அதனை அடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையின் போது, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது, எவரேனும் பின் தொடர்ந்தால் , அவர்களிடம் இருந்து கொலையாளிகளை காப்பாற்றும் நோக்குடன் , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவாறு கொலையாளிகளை பின் தொடர்ந்த கார் தொடர்பில் காவற்துறையினர் கண்டறிந்து , குறித்த காரினை மீட்டுள்ளனர். இந்நிலையில், காவற்துறையினருக்கு நீதிமன்று அனுமதித்த 24 மணிநேரம் நேற்றைய தினம் புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் , நேற்றைய தினம் சந்தேகநபர்கள் 06 பேரையும் மீண்டும் மன்றில் முற்படுத்திய வேளை 06 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அதேவேளை , இளைஞனை கொலை செய்த நால்வரில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , ஏனைய இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , கொலையாளிகள் தப்பி செல்ல பாதுகாப்பு அளித்து சென்ற காரினை மீட்டுள்ள நிலையில் , காரில் பயணித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223543/
-
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு adminDecember 4, 2025 பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றைய தினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நேற்றைய மீண்டும் மாணவர்களை மன்றில் முற்படுத்திய வேளை, 19 பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://globaltamilnews.net/2025/223545/
-
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்!
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்! adminDecember 4, 2025 பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள் பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்தத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன: கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது. மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யத் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/223552/
-
படுபட்சி நாவல்: விசாரணை
படுபட்சி நாவலை தோழர் பெளசரிடம் இருந்து ஆர்வமாக வாங்கினேன். எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் இன்னமும் வாசிக்கவில்லை. தமிழில் ஆசான் ஜெயமோகனினதும், தோழர் ஷோபாசக்தியினதும் புத்தகங்களை அதிகம் படித்ததால் ஒரே மாதிரியான எழுத்துக்களைத் தவிர்த்து பிற எழுத்தாளர்களின் தனித்துவ எழுத்துக்களைத் தேடிப் படிக்கமுயற்சிக்கின்றேன். படுபட்சி இப்படி தனித்துவமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தோழர் ஷோபாசக்தியின் கச்சிதமான சொற்களால் செதுக்கப்பட்டிருக்கும் போலுள்ளது. டிசம்பர் விடுமுறைக் காலத்தில் கட்டாயம் படிப்பேன்😀
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
யாழில் பட்டப்பகலில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன் - அதிரவைக்கும் பின்னணிகள் செவ்வாய், 02 டிசம்பர் 2025 06:15 AM யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் வீதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பலை சேர்ந்த நால்வர் துரத்தி துரத்தி வெட்டி வீழ்த்தியதில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து , தாக்குதலாளிகள் தப்பி சென்ற தடத்தை பின் பற்றி , வாகனம் ஒன்றில் வன்னி பகுதிக்குள் பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதலாளிகளில் இருவர் மற்றும் அவர்களை ஏற்றி சென்ற வாகன சாரதி என மூவரையும் கைது செய்து , வாகனத்தையும் மீட்டனர். அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் நடமாட்டங்களை வேவு பார்த்து தகவல் வழங்கியவர், சம்பவ தினத்தன்று இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தகவல்களை வழங்கியவர்கள் என மூவர் கைது செய்யப்பட்டனர். 06 பேர் கைது சம்பவம் தொடர்பில் இதுவரையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்ட தாக்குதலாளிகளான மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது, வன்முறை கும்பல்களுடையே நீண்ட கால பகை யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல்கள் இரண்டுக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கொக்குவில் சந்தைக்குள் கடந்த மாதம் இளைஞன் ஒருவனை சிலர் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் மிக மோசமாக தாக்கி இருந்தனர். அது தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் சமுக வலைத்தளங்கள் , ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியும் நாடாளுமன்றில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பல்கள் , வட்டி தொழிலில் ஈடுபடும் மாபியாக்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி இருந்தார். அதனால் பொலிஸாருக்கு ஏற்பட்ட கடும் அழுத்தம் காரணமாக , கொக்குவில் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்து திட்டம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், தன்னை சிறைக்கு அனுப்பிய நபர்களின் கையும் காலும் வேண்டும் என கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கூறியுள்ளார். அதனை அடுத்து அவரின் ஒழுங்கமைப்பில் மல்லாகம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தாக்குதலுக்கு தயார் படுத்தப்பட்டனர். ஒரு மாத வேவு நடவடிக்கை படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தாக்குதலுக்கு முன்னர் ஒருவேளை இலக்கான இளைஞனின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் தொடர்பினை பேணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இளைஞனின் நடமாட்டம் தொடர்பில் தகவல்களை சேகரித்து உள்ளனர். இதற்காக தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் தகவல்களை பெற்றுக்கொண்ட தரப்பினர் புதிதாக இரண்டு சிம் அட்டைகளை வாங்கி , அவற்றின் மூலமே தகவல்களை பரிமாறி கொண்டனர். அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பம் வைக்க , இருவர் அல்லது தனியே தான் செல்வார் என்பதனை உறுதிப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொள்ள நாள் குறித்தனர். தாக்குதலுக்கு ஒத்திகை. தெல்லிப்பழையில் வட்டி தொழிலில் ஈடுபடும் நபருக்கு சொந்தமான வீடொன்றில் தாக்குதலுக்கான திட்டமிடப்பட்டு , தாக்குதலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று ... சம்பவ தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை இருவர் மோட்டார் சைக்கிளில் , திருநெல்வேலி சந்தையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள உணவகத்திற்கு அருகாமையில் காத்திருந்துள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளனர். கொக்குவிலில் இருந்து இளைஞன் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் , கொக்குவில் பகுதியில் இருந்தே இருவர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். திருநெல்வேலி சந்தி சிக்னல் விளக்கை தாண்டி மோட்டார் சைக்கிள் பயணித்ததும் , திருநெல்வேலி சந்தைக்கு அண்மையில் , தாக்குதலுக்காக காத்திருந்தவர்களுக்கு இளைஞனை பின் தொடர்ந்துள்ளனர். சந்தியில் இருந்து 500 மீட்டர் வந்ததும் , உணவத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் தாக்குதலுக்கு தயாராக காத்திருந்தவர்கள் , படுகொலையான இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி , மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்த முயற்சிக்க இளைஞன் இறங்கி வீதியில் ஓடியுள்ளார். அவ்வேளை, இளைஞனை பின் தொடர்ந்து வந்த மற்றைய இரு தாக்குதலாளிகளும் இடையில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட வேளை அவர்களிடமும் இருந்து தப்பியோட முயன்றும் கடுமையான வெட்டு காயங்களால் தப்பி ஓட முடியாது. வர்த்தக நிலையம் முன்பாக விழுந்த வேளை இளைஞனின் காலை கணுக்காலுடன் வெட்டி துண்டாக்கி விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பின் தொடர்ந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற பாதைகளை கண்டறிந்தனர். அதன் போது உரும்பிராய் பகுதியில் தாக்குதலாளிகள் தமது ஆடைகளை மாற்றி வாகனம் ஒன்றில் ஏறி தப்பி சென்றுள்ளனர். வன்னிக்குள் கைது நடவடிக்கை. அதன் அடிப்படையில் வாகனம் தொடர்பிலான தகவல்களை பெற்ற வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை வாகனம் வன்னி பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , வாகனத்தை பொலிஸ் குழு வழிமறித்த வேளை வாகனத்தினுள் தாக்குதலாளிகள் இருவர் மற்றும் அவர்கள் தப்பி செல்ல உதவிய வாகன சாரதியும் . தாக்குதல் சம்பவத்தை வழி நடத்தியவருமான கந்துவட்டி தொழில் செய்யும் தெல்லிப்பழையை சேர்ந்த நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டு யாழ்ப்பாணம் கொண்டு வந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். வாகனங்கள் மீட்பு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இதுவரையில் , தாக்குதலாளிகள் தப்பி சென்ற வாகனம் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் , வாள் ,தாக்குதல் நடாத்தும் போது அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் , தெல்லிப்பழை கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயது வரையிலானவர்கள் எனவும் , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://jaffnazone.com/news/52820
-
இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு 02 Dec, 2025 | 11:39 AM இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன. இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/232221
-
இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்
இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள் கிளிநொச்சி உமையாள்புரம் கிராமஅலுவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கறுப்புப் பட்டிகளுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிராம அலுவலர்கள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளப் பேரிடர் உதவி வழங்கலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கினார் என்று கிராம அலுவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனைக் கண்டித்து ஒரு வாரத்துக்குக் கறுப்புப் பட்டியுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். https://newuthayan.com/article/இளங்குமரன்_எம்.பி.யைக்_கண்டித்து;_கறுப்புப்_பட்டியுடன்_கிராம_அலுவலர்கள்
-
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்! adminDecember 2, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன. 11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/223446/
-
‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ - வரலாற்றின் குற்றக் கிடங்கு
வரலாற்றின் குற்றக் கிடங்கு November 29, 2025 — கருணாகரன் — ‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள். இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழப்படுகிறது. இதில் இதுவரையில் 225 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெண்கள், குழந்தைகளுடையவையும் உண்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 1990களில் இலங்கைப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1996 இல் இதே இடத்தில், இப்படியொரு புதைகுழியில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பள்ளிக்கூட மாணவி, படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டாள். அவளைத் தேடிச்சென்ற அவளுடைய தாயும் தம்பியும் அயலவரும் கூடக்கொன்று புதைக்கப்பட்டனர். இந்தக் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியும், இதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்திய சூழலும் வரலாற்று முக்கியவத்துக்குரியது. இந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்டவரான இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், செம்மணி புதைகுழியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார். இது மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். இதையெல்லாம் குறித்து முன்பொரு கவிதை நூல் ‘செம்மணி’ என வந்தது. இப்பொழுது ‘வாசலிலே கிரிசாந்தி’ என இன்னொன்று வந்துள்ளது. இதற்கு முன் 1990 ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில், யாழ்ப்பாண நகரத்திற்கு கிட்டவாக உள்ள – இன்னொரு பக்கத்தில் இருக்கும் தீவுப்பகுதியில் (லைடன் தீவிலும் மண்டைதீவிலும்) இலங்கை அரச படைகளின் ‘திரிவித பலய’ கூட்டுப்படை நடவடிக்கையின்போது 163 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கைக்கும் படுகொலைக்கும் தலைமை தாங்கியவர் இலங்கை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிய மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ. (இவர் பின்னாளில் (1992.08.02) கண்ணிவெடித் தாக்குதலொன்றில் இதே தீவுப்பகுதியில் இறந்தார்). இந்தப் படுபாதகச் செயலைக் குறித்த ஒரு நூல் ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என எழுத்தாளர் ஷோபாசக்தியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஷோபாசக்தி, இந்தக் கொலைகள் நடந்த கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், இந்தப் படுகொலை நடந்தபோது ஷோபாசக்தி, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். (அந்த நாட்களில் அல்லைப்பிட்டியில் இருந்திருந்தால் அந்தப் படுகொலையில் அவரும் சிக்கியிருக்கக் கூடும்). அதில் தப்பிப்பிழைத்ததால் இப்பொழுது, இந்தப் படுகொலைகள் நடந்து 35ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படுகொலைகளை அதற்கான சாட்சியங்களோடும் விவரங்களோடும் தொகுத்து ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் அநீதியிழைப்பொன்றின் சான்றாதாரமாகவும் நீதி கோரும் மக்களின் ஆன்மாவாகவும் இருநிலைகளில் தொழிற்படுகிறது. இந்த நூலில், ‘இந்தப் பேரழிப்பின்போது இராணுவத்தினரால் உண்டாக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மண்டைதீவில் உள்ளன’ எனப் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் பகிரங்கச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ‘இந்தக் கொலைகளையும் புதைகுழிகளையும் குறித்து வெவேறு இடங்களிலும் வெளிவந்த ஆவணங்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும்’ இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷோபாசக்தி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பதைப்போலவே, இந்த நூலின் அனைத்து விவரங்களும் தெளிவாகவும் சான்றுகளோடும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசைப்படுத்தி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. படுகொலைகளின் பின்னணி, பணயக்கைதிகள், படுகொலைக்களம், காணாமலாக்கப்பட்டவர்கள், லைடன் தீவில் படுகொலையான பொதுமக்கள், மண்டைதீவில் படுகொலையான பொதுமக்கள், உண்மையைப் புதைத்த குழிகள் என்ற ஏழு அத்தியாயங்களின் தலைப்புகளே போதும் இந்தப் படுகொலைகளின் சித்திரத்தை உங்களுடைய மனதில் எழுப்புவதற்கு. இவற்றுக்கு அப்பால், இவற்றைச் சான்றாதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் நிழற்படத் திரட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடவே, நீதி மிகத் தொலைவில் என்ற முற்பகுதியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது தலைப்புகள். இது நீதிகோரும் ஒரு முதன்மையான வெளிப்பாடு. சமனிலையில் நீதியின்மைக்கான எதிர்ப்புக் குரல். இலங்கை அரசினதும் அதனுடைய படைகளினதும் மானுட விரோத, அரசியல் விரோதச் செயலை உலகின் முன்வைக்கும் வலுவான ஆவணம். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்தக் கொலைகளைப்பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தங்களுக்கு நீதிகோரிப் பலரையும் சந்தித்திருக்கின்றனர். நடந்த சம்பவங்களைப்பற்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியிருக்கின்றனர். ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்களுடைய மனதில் அந்தத் துயரமும் அங்கே சுவாலை விட்டு எரிந்த நெருப்பும் அவர்களுடைய மனதிலும் நினைவுக் கண்களிலும் அப்படியே ஆறாச் சூட்டோடுதான் உள்ளன. ஆனால், ‘இந்தக் கொலைகள் எதற்குமே நீதி வழங்கப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரச படைகள் செய்த இந்தப் படுகொலைகளுக்கு இலங்கை அரசு இதுவரையில் பொறுப்புக் கூறவில்லை’. ஷோபாசக்தியே இந்த நூலில் கூறியிருப்பதைப்போல, இந்தப் படுகொலைகள் வரலாற்றின் இருண்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டு விடக் கூடாது. அப்படியொரு எண்ணத்தோடுதான் இவை அந்தக் கொலைகளுக்கு எதிரான சாட்சியமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைக் கோரும்போது தமக்கேற்பட்ட பாதிப்புகளையும் தமக்கிழைக்கப்பட்ட அநீதியின் சான்றுகளையும் வலுவாகத் திரட்டி முன்வைக்க வேண்டும். அறத்துக்குப் பதிலாக நலன்களே முதன்மை நோக்கமாகக் கொண்டியங்கும் உலகில், உலோகத்தையும் விடக் கனத்துத் தடித்திருக்கும் இதயத்தின் சுவர்களை உடைகக் கூடிய கூரிய ஆயுதங்களாக இருப்பவை பாதிப்புகளின் – அநீதிகளின் சான்றுகளே! ஆகவே அவற்றை நீதியைக் கோரும் மக்கள் தமக்கான வலிய கருவிகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஈழத்தமிழ்ச் சூழலில் இது மந்தநிலையில் (மந்தைத் தனமாக) உள்ளது. இந்த மந்தைத் தனத்தையே கொலையாளிகளும் அரசும் அதையே விரும்புகின்றன. இதற்கு எதிராக இயங்குவதே, எதிர்ப்புச் செயற்பாட்டை எந்த நிலையிலும் மேற்கொள்வதே கொலை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான ஒரே நீதிச்செயற்பாடாகும். ஷோபாசக்தி இவற்றை அந்த நீதியுணர்வோடும் அது எதிர்நோக்கும் அறிவியல் – அற வினாக்களோடும் இங்கே திரட்டி முன்வைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்தக் கொலைகளைப் பின்னணியை கொரில்லா நாவலில் ஒரு அத்தியாயத்திலும் தேசத்துரோகி என்ற கதையிலும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி. இதைவிட இந்தக் கொலை ஷோபாசக்தியினால் வலுவான இலக்கியப் பிரதியாக்கப்பட்டிருப்பது மிக உள்ளக விசாரணை என்ற சிறுகதையில். அந்தக் கதை தமிழில் மட்மல்லாமல், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படுகொலை நடந்த ஊர்வாசியாகவும் படுகொலைக்கு எதிரான மனித உரிமைப்போராளியாகவும் அநீதிக்கு எதிரான இலக்கியப் படைப்பாளியாகவும் என வெவ்வெறு நிலைகளில் நின்று இந்தப் பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷோபா. முந்தியவை புனைவின் வழியானவை. இது நேரடியான சான்றுகள், சாட்சியங்களோடானவை. ஆக ஷோபாசக்தியினுள்ளே அந்தக் கொலைகள் தணலாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இப்படி வேறு சில எழுத்தாளர்களும் தங்களுடைய காலத்திலும் சூழலிலும் எதிர்கொள்ள நேரிட்ட இத்தகைய கொலைகளையும் அநீதிச் செயல்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரதரின் கற்பு கதை தொடக்கம், நிலாந்தனின் கடலம்மா கவிதை உள்ளடங்கலாக இதற்கான ஒரு நெடும் பாரம்பரியமே ஈழத்திலக்கியத்தில் உண்டு. அவை வெறுமனே பதிவுகளல்ல. நீதிக்கான குரல்கள். சிங்கள ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வரலாற்றின் முன்னே நிறுத்தி விசாரணை செய்யும் கலகப்பிரதிகள். ஆனால் இவை புனைவும் நிஜமும் கலந்த இலக்கியப் பிரதிகள். இங்கே இப்பொழுது ஷோபாசக்தி திரட்டி அளித்திருப்பது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றிய நிஜமான ஆவணம். இப்படி ஒரு ஆவணத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டி முன்வைக்க முயற்சிக்கும்போது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, இவை அல்லது இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்பட்ட சூழல் என்பது ஒன்றில் போர் நிகழ்ந்த பகுதியாக இருக்கும். அல்லது ஒடுக்குமுறைத்தரப்புகளான அரச படைகளும் அவற்றின் துணை இராணுவக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளாக இருக்கும். இதனால் முறையான தகவல்களை – விவரங்களை – ப் பெறுவதில் (சேகரிப்பதில்) சிரமங்கள் உண்டு. அடுத்தது, இந்தச் சம்பவங்களின்போது உடனிருந்து தப்பியவர்கள், இவற்றை அறிந்தவர்கள், இவை பற்றிய விவரங்களைத் திரட்டிய ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எல்லாம் கால நீட்சியில் மரணித்தும் வேறு இடங்களுக்குச் சென்றும் விட்டதாகும். மட்டுமல்ல, இந்தக் கொலைகளைப் பற்றியும் இவை போன்று ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் உள்ள தகவல் – விவர – ஆணமாக்கல்களில் குழப்பங்களும் குறைபாடுகளும் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு அவலச் சூழலில் இருந்து கொண்டே இந்த மாதிரியான சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. போரினாலும் மிக மோசமான ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் தனக்கான தீர்வையும் நீதியையும் கோரும் போராட்டத்தில் – அரசியல் முன்னெடுப்பில் தீவிரமாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக முன்வைக்கக் கூடிய இவ்வாறான படுகொலைகள், இனவழிப்புச் செயற்பாடுகள், ஒடுக்குறைச் சான்றுகள் போன்றவற்றைச் சரியாக உருவாக்குவதில் பின்னடைந்தே இருக்கிறது. இதைச் செய்வதற்குத் தாராளமான – ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளோடு ஈழத் தமிழ்ச் சமூகம் உலகம் முழுவதிலும் பரந்திருக்கிறது. ஆனால், செயற்பாட்டில் மிகப் பிந்தங்கிப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இதனை நடைமுறையில் இந்தப் பிரதியின் உருவாக்கத்தின்போது ஷோபாசக்தியும் உணர்ந்திருக்கிறார். ‘வரலாற்றை ஆவணமாக்கி வைத்திருப்பதில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெருமளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது…. இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிவதற்காக அல்லது ஆய்வு செய்வதற்காக தமிழ் இணையச் செய்தி ஊடகங்களை நாடிச் செல்லும் ஒருவர் ஏராளமான தவறான மற்றும் குழப்பமான தகவல்களைக் கண்டடைய முடியும்..’ எனக் கவலையோடு அவர் சொல்வதைப்போல, வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) திரட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ஆவணமாக்கல் – வெளிப்படுத்தல் மூலங்களிலும் தகவல் பிழைகள் உள்ளன. ஆனாலும் இவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. இவற்றிலிருந்தும் நேரடியான வாய்மொழிச் சாட்சியங்கள், பிற அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், மனித உரிமை அமைப்புகள், நிர்வாக ரீதியான அரசாங்கப் பதிவேடுகள் எனப் பலவற்றிலிருந்தும் பெறக் கூடிய தகவல்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு காலத் தாமதம் கூடாது. அப்படியே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது இதை உணர்கிறோம். அத்துடன், இவற்றின் ஊடாக நாம் மிக மோசமான முறையில் நம்முடைய காலடியின் வழியே கடந்து சென்ற காலத்தை மீளத் திறந்து பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு. எல்லாக்கொலைகளும் ஒன்றல்ல. மரணம் வேறு. கொலை வேறு. மரணம் தரும் துக்கம் வேறு. கொலை உண்டாக்கும் துக்கம் வேறு. கொலையினால் ஏற்படும் துக்கம் கோபத்தையும் தன்னுள் கொண்டெரிவது. அந்தக் கோபம் அநீதியினால் உருவாகியது. அநீதிக்கு எதிரானது. ஈழத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பல நூறு கூட்டுக் கொலைகளின் நினைவாகவும் அவற்றுக்கு எதிரான அடையாளமாகவும் பல்வேறு இடங்களிலும் நினைவுத்தூபிகளும் கல்வெட்டுகளும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைக்குள்ளான பதினொரு பேரின் நினைவுச் சின்னம் யாழ்ப்பாண நகரத்தில் வீரசிங்கம் மண்டபதற்கு முன்பாக, முற்றவெளியில், கோட்டைக்கு எதிர்த்திசையில் உள்ளது. இப்படியே மட்டக்களப்பு மகிழடித்தீவில், முல்லைத்தீவு மாத்தளனில், முள்ளிவாய்க்காலில், நாகர்கோயிலில், நவாலியில், மன்னார் – முருங்கனில் வல்வெட்டித்துறையில்.. எனப் பல இடங்களிலும் உள்ளன. இன்னொரு நிலையில் எழுத்தாவணங்களும் வீடியோப் பதிவுகளும் ஒளிப்படங்களும் ஏராளமாக உண்டு. வல்வை ந. அனந்தராஜ் தொகுத்துப் பதித்த ‘வல்லைப் படுகொலைகள்’ கலாநிதி முருகர் குணசிங்கத்தின் “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்” மற்றும் நிஜத்தடன் நிலவன் எழுதிய “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)”போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல கொலைகளைப் பற்றிய ஆவணப்படங்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆவணப்பிரிவும், நிதரம்சனமும் அரங்கம் நிறுவனமும் தயாரித்து வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பை சோமீதரன் ‘எரியும் நினைவுகள்’ (Burning memories) ஆவணப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசின் மீதும் அது மேற்கொண்டுவரும் இனவாத அரசியலின் மீதும் அதற்கு எந்தக் கேள்வியுமற்று ஆதரவைக் கொடுத்து நிற்போரின் மீதும் தங்களின் எதிர்ப்பு அடையாளத்தைப் பதிவு செய்கின்றன. நீதியற்ற ஆட்சியே நீடித்தது என்பதற்கான சாட்சியங்களே அவை. அத்தகைய சாட்சியங்களில் ஒன்றே 1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும் ஆகும். இது புதைகுழிகள் தோண்டப்படும் காலம். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரமும் பேசப்படும் நாட்களிவை. நீதியைக் கோரும் மக்களுக்கு – பாதிக்கப்பட்டோருக்கு – இவை, இந்தச் சான்றாதாரங்கள் வலுவானவை; மிக மிக அவசியமானவை. ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்கள் மீண்டும் தங்களுடைய ஊர்களில் மீளக் குடியேறி விட்டார்கள். (எல்லோரும் அல்ல. எல்லா இடங்களும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டவையும் அல்ல). ‘மாற்றத்துக்கான ஆட்சி’யை நடத்துவதற்குப் புதிய அரசாங்கம் (NPP) வந்து விட்டது என்று பலரும் கருதவும் கூடும். வெளித்தோற்றத்துக்கு இப்படித் தெரியலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதே நிலையில்தான் உள்ளனர். அவ்வாறுதான் நடத்தப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாற்றப்பட்டுள்ளன. குண்டுச் சத்தங்களும் சுற்றிவளைப்புகளும் கொலையும் இடப்பெயர்வும் இப்போதில்லைத்தான். ஆனால், ஏனைய அனைத்து நெருக்குவாரங்களும் சுமைகளும் ஒடுக்குமுறைகளும் அந்நியமாக்கலும் அப்படியேதான் உள்ளன. புத்தர் சிலைகளை முன்னிறுத்தி நில ஆக்கிரமிப்பு நடக்கிறது. படைகள் எல்லாம் ஊர்களில் சாவகாசமாகவே இருக்கின்றன. என்பதால்தான் இவற்றையெல்லாம் – தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் – நாம் வலுவோடு பேச வேண்டியுள்ளது. அந்த வகையில்தான் ஷோபாசக்தியும் இந்த நூலை மிகக் கடுமையாக உழைத்து, மிகுந்த சவால்களின் மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இது எளிய பணியல்ல. இந்தக் கொலை நாடகம் நடந்த நாட்களில் நான் யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் (ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில்) பதறும் நெஞ்சோடிருந்தேன். சிறைப்பிடிக்கப்பட்ட மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை அன்றிருந்தது. புங்குடுதீவிலிருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போக முடியாமல் யாழ்ப்பாண நகரில் தவித்தலைந்து கொண்டிருந்தார் கவிஞர் சு. வில்வரெத்தினம். வீட்டுக்குப் போக முடியாமல் மட்டுமல்ல, அங்கே உள்ள தன்னுடைய குடும்பத்தின் நிலை என்ன என்பதையே அறிய முடியாமல் தவித்தார். அந்தத் தவிப்பில் இரவெல்லாம் அவர் எழுதிய கவிதைகளைச் சைக்கிள் மிதித்து வந்து படிப்பார். அவருடைய கண்களும் நெஞ்சும் மட்டும் கலங்கவில்லை. எங்களுடைய கண்களும் நெஞ்சும் கலங்கியது. அந்தக் கவிதைகள்தான் பின்னாளில் ‘காற்றுவழிக்கிராமம்‘, ‘காலத்துயர்‘ என்ற கவிதை நூல்களாகின. அதில் ஒரு கவிதை இப்படியிருந்தது – உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம் உமியின் கரிச்சட்டி ஒருபுறம் ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள் கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி. வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு சுடலைக்கே பாத்திரமாய்ப் போக நானிங்கு எதனுடைய முதிசம் காக்க? யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில் எல்லாவழிகளும் மயானத்திற்கே இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில் உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு… இதையே – இந்த அவல நாடகத்தையே – ஷோபாசக்தி, தன்னுடைய பல கதைகளில் புனைவாக்கினார். இன்னும் அவை இலக்கியமாக வரலாம், வரும். அந்தப் புனைவுகளில் பேசியவற்றுக்கும் அப்பால் இந்த உண்மைகள் இன்னொரு வகையில் உலகோடு பேச விளைகின்றன. அதற்கு உலகம் தயாராக உள்ளதா? இந்த நூலைப்படிக்கும்போது அந்த நாட்கள் பதற்றத்தோடு நினைவில் எழுகின்றன. அப்பொழுது (1994 இன் முற்பகுதியில்) யாழ்ப்பாணக் குடாநாட்டைப் படைகள் முற்றுகையிட்டுச் சிறைப்பிடிக்க முயன்றன. இதனால் குடாநாட்டைச் சுற்றி முற்றுகைப்போர் மூண்டது. அதை முறியடிக்கும் முனைப்போடிருந்தனர் புலிகள். இரண்டு தரப்புக்குமிடையில் பெரும்மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் படையினரும் புலிகளும் மட்டும் பலியாகவில்லை. பொதுமக்களும் கொல்லப்பட்டனர். படைகள் திட்டமிட்டே பொதுமக்களைப் படுகொலை செய்தன. “ஆயுதமேந்திய தரப்புகள் மோதிக் கொள்வதற்குப் பதிலாக ஏன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? போராளிகளை இலக்கு வைப்பதற்குப் பதிலாக எதற்காக மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்?“ என்று இன்றைய வாசகர்களும் இளைய தலைமுறையினரும் கேட்கக் கூடும். காஸாவில் மக்களின்மீதும் அவர்களுடைய வாழிடங்களின் மீதும் இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதையேதான் இலங்கையில் – இந்தத் தீவுகளில் – இலங்கைப் படையினர் செய்தனர். உள்நாட்டுப்போரில் எப்போதும் மக்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில்தான் அதிகமாக மக்கள் கொல்லப்படுவதுமுண்டு. மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு தரப்பும், அந்த ஆதரவை இல்லொதொழிப்பதற்காக இன்னொரு தரப்பும் இலக்கு வைப்பது மக்களேயே. ஆகவேதான் மக்கள் எப்போதும் தங்களுடைய தலைகளை இழக்க வேண்டியேற்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒன்றும் வெறும் புள்ளி விவரக் கணக்கல்ல. அல்லது இந்த மாதிரிப் படுகொலைகள், புதைகுழிகளைப் பற்றிய கதைகள் வெறும் செய்திகளோ தகவல்களோ அல்ல. அதற்குமப்பால், இந்த நவீன உலகில் நாமெல்லாம் நீதி, அறம், விழுமியம், வாழ்க்கை குறித்த பல்வித நோக்குகள், மனித மாண்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு முன்னே நிகழ்ந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் பெருக்கெடுக்க நிகழ்த்தப்பட்ட மனித அழிப்பு நடவடிக்கைகளாகும். அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அப்பாவிச் சனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், காணாமலாக்கப்படுதல்களாகும். அதாவது கீழ்மை அரசியலின் வெளிப்பாடுகள். இந்த அநீதியை – கொடூரத்தை – மானுட அழிப்பை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாரும் மறந்து விட முடியாது; மறந்துவிடக் கூடாது. இதைப் பேசியே ஆக வேண்டும். அநீதியை, கொடூரத்தை, மானுட அழிப்பை, மனித விரோதத்தைப் பேசாமல் விட்டால் அது அநீதிக்கும் கொடூரத்துக்கும் மனிதகுல விரோதத்துக்கும் உடன்பட்டுப்போவதாகவே இருக்கும். என்பதால்தான் ஷோபாசக்தி இதைப்பேசுகிறார். புனைவிலும் இவ்வாறான ஆவணப்படுத்திலும் என இரு தளங்களிலும் இவற்றைப் பேசியுள்ளார். இது அவருள் அடங்காதிருக்கும் தாகமும் அணையாதிருக்கும் நெருப்புமாகும். இரண்டினுடைய முக்கியத்துவமும் பெறுமதியும் வேறு. இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்துச் சுதந்திரமான, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணைகளை விரைந்து நடத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் காலம் கடந்து இப்போதாவது நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் மீதான மவுனமும் புறக்கணிப்பும் மூடி மறைத்தலும் தட்டிக் கழித்தலும் உண்மையான சமாதானத்தை உண்டாக்கிவிடாது. கடந்த காலங்களில் போர்கள் நிகழ்ந்து இன்று அமைதி நிலவும் உலகிலுள்ள பல்வேறு நிலங்களில் பொறுப்புக் கூறலும் நீதி வழங்கலுமே நீடித்த சமாதானத்தையும் பகை மறப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. இலங்கையிலும் அது நிகழ வேண்டும்.” என்ற நோக்கில் இதனுடைய வரலாற்று முக்கியத்துவமும் பெறுமானமும் அமைகிறது. ஆம், நீதியைப் பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. நீதி நமக்குக் கிடைப்பதற்காக – நாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக – நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த உண்மைகளை, ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தனக்குச் சாத்தியமான வழிகளில் ஷோபாசக்தி அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்போல சாத்தியமான அனைவரும் தொழிற்படுவது அவசியம். விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் கூட்டுச் செயற்பாட்டின் விளைவாலானவை. கூட்டுச் செயற்பாடு, கூட்டுக் குரல் போன்றனவே உலகத்தின் கவனத்தைப் பாதிக்கப்பட்டோரின் பக்கமாகத் திருப்புவதற்கான அழைப்பு அடையாளமாகும். இந்த நூல் மேலும் பல குரல்களை – உண்மைகளை – மேலுர்த்திப் பேச வைக்கும் என நம்புகிறேன். அதற்கான தூண்டல்களை, முன்மாதிரிகளை உருவாக்குகிறது. இதனைச் சரியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘கருப்புப் பிரதிகள்‘ பதிப்பகத்துக்கு பாராட்டுகள். ஷோபாசக்திக்கு நன்றி. நீதிக்கான பயணத்தில் இப்படிப் பல தரப்புகளும் இணைந்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ (பக்கங்கள்: 144). நூல் கிடைக்குமிடம்: கருப்புப் பிரதிகள் பதிப்பகம் – சென்னை (WhatsApp : +91 9444272500). https://arangamnews.com/?p=12464
-
பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்
பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன் “நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான். அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின. பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன். அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு. நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள். சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும் எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ? இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ? இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத் தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக் கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர் சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார். பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது. இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது? அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான். இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார். மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று. எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா? https://www.nillanthan.com/7955/#google_vignette
-
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன் வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது. இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத் தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று. அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான். அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று. நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல. அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர். ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான். சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு. ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல. விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும் சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி. ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள் நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார். ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார். அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது. தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது. இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன் மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத் கனேடிய தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான். https://www.nillanthan.com/7959/
-
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில் 30 Nov, 2025 | 01:38 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைதான 19 மாணவர்களும் நேற்றையதினமே யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உசைன் உத்தரவிட்டார் https://www.virakesari.lk/article/232037
-
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம்
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம் 30 Nov, 2025 | 02:03 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார். அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன. நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட சுகாதார அபாயங்களைத் தவிர்க்க அத்தியாவசிய மருத்துவ வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெள்ளநீரில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மருத்துவ குழுக்கள் அனுப்புதல், அவசர மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், மாவட்ட செயலாளர், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அமைச்சர் அவசர ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்தினார். வெள்ளநீர் வெளியேற்றம் செய்யவேண்டிய பகுதிகள், தாழ்வான இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகள், படகு மற்றும் வாகன வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார். குறிப்பாக, இன்னும் வட மாகாணத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்பதற்காக கூடுதல் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர், வீதி தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீளமைக்கும் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பே முதலாவது முன்னுரிமை எனவும், அரசு சார்பாக எந்தவித தாமதமும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார். யாழ்ப்பாணம் முழுவதும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை குறையும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232044
-
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்
மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள் 30 November 2025 சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/433451/huge-loss-in-mannar-thousands-of-cattle-washed-away-in-floods
-
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம் நாட்டை உலுக்கிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பலியானவர்களில் எண்ணிக்கை தற்போது 193 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 228 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழழை (30) காலை 11.30 மணிக்கு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில், 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிக எண்ணிக்கையிலான பேரிடர் இறப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதாவது 71 இறப்புகள். இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 52 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 20 இறப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 15 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டியில் 105 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இதனால் மீட்புக் குழுவினர் நிலச்சரிவு மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 53 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 27 பேரும், கேகாலை மாவட்டத்தில் 24 பேரும் காணாமல் போயுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பேரிடர்-மரணங்கள்-193-ஆக-உயர்வு-228-பேர்-மாயம்/175-368781
-
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை , மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பனவும் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த மத்திய நிலையத்தில் கடமைகளுக்காக நியமிக்கப்பட உள்ளனர். அந்த நிறுவனங்களின் அனைத்து விடயங்ளுக்கும் ஒருங்கிணைத்து வசதிகளை வழங்கும் ஒரு கூட்டு செயல்பாட்டு மையமாக அதன் செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்த நிலைமை தணிந்தவுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அத்தியாவசிய-சேவைகள்-அலுவலகத்தை-நிறுவ-ஜனாதிபதி-அறிவுறுத்தல்/175-368793
-
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’
இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’ “டித்வா” புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.samakalam.com/இலங்கையை-விட்டு-முழுவதும/
-
சித்தாந்த வினா விடை
சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார். இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) அருணைவடிவேல் முதலியார் மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும், ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும், 'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும், 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை., “பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்” என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள், முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது. அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும். இவ்வாறாக நாம் காணும்பொழுது, முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது? ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும். அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும், “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன? ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர். அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும் சிவாகமங்களை இகழ்ந்து நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும். மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும் "புறப்புறம், புறம், அகப்புறம், அகம்" என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன. அவற்றுள் புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. புறச் சமயங்கள் :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. அகப்புறச் சமயங்கள் :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன. 'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? ஆசிரியர்: 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன. வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன. வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன. வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன . சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை, ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது. மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா? ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்' (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால் இப்பெயர் பெற்றது. இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html
-
இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்
இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல் February 11, 2015 Photo, AP Photo/Eranga Jayawardena வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது. இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரசியல் சூழலை மேம்படுத்துதல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன. இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம் நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம். தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது. பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது. தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள் அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை. இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள் கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன. மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம் இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது. சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது. இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஜோவிட்டா அருளானந்தம் யனித்ரா குமரகுரு அம்மாரா நிலாப்தீன் https://maatram.org/articles/12431
-
யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு சனி, 29 நவம்பர் 2025 04:33 AM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். கடந்த 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் பாதிக்கப்பட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டனர். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டனர் அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/52724
-
இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி
இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி 29 Nov, 2025 | 11:08 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு இராணுவப்படையினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (29) காலை வரையிலான நிலைமை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டத்தில் சுமார் 12,800 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுமார் 3580 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2960 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3100 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்கு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/231896
-
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விசா வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு: விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விசா காலாவதியான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அல்லது விசா கட்டணங்கள் இன்றி விமான நிலையங்கள் ஊடாக வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் தங்கியிருக்கும், குறுகிய கால அல்லது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், மேலும் விசா காலத்தை நீடித்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அறவிடாமல் வீசாவை நீடித்துக்கொள்ளச் சலுகைக்காலமும் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலச் சுற்றுலா வீசா அனுமதியை நீடிப்பதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பிரவேசித்து செயற்படுத்த முடியும்: https://eservices.immigration.gov.lk/vs/login.php https://adaderanatamil.lk/news/cmijugg1w0259o29n2610g1ou
-
யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி
யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள். நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/52698
-
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு Mano ShangarNovember 28, 2025 10:06 am 0 மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/