வணக்கம் வாத்தியார்.........!
ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா
பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே
ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்
பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே
ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்
பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்......!
---ஆறாத கோபமில்லை----