வணக்கம் வாத்தியார்....!
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அது தேடுது தன் உறவை
அன்புகொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில், அது வாழுது தன் நிழலில்...!
--- அனாதை ---
வணக்கம் வாத்தியார்....!
மலர்த் தேன் போல் நானும் மலர்ந் தேன் உனக்கென வளர்ந் தேன்
பருவத்தில் மணந் தேன், எடுத் தேன் கொடுத் தேன் சுவைத் தேன்
இனி தேன் இல்லாமல் கதை முடித் தேன்.....!
--- தேன் ----
நான் அதை யோசிக்காமல் இருப்பேனா. லா சப்பல் என்றால் பாரத் கபேயில் குடித்த தேத்தண்ணியையும் விட்டுட்டு இவரே தேடிப் போயிருப்பார். இது அவுட் ஒவ் பரீஸாகத்தான் இருக்கும்...!
வணக்கம் வாத்தியார்....!
ஊமை என்றால் ஒரு வகை அமைதி, ஏழை என்றால் அது ஒரு அமைதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே....!!
--- ம்... ஶ்ரீதேவி---
விசுகு , அது எந்த ரயில் நிலையம்.
வணக்கம் வாத்தியார்....!
ஆரம்ப காலத்தில் துன்பமிருக்கும், ஆனந்த வேதனை கொஞ்சமிருக்கும்
ஒருநாள் முடியும் மறுநாள் விடியும், அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்...!
--- முதலிரவு ---
வணக்கம் வாத்தியார்....!
இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு எல்லோர்க்கும் குலவிளக்கு
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும் கல்யாணத் திருவிளக்கு....!
--- நிலவு ---
வணக்கம் வாத்தியார்....!
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொல்லாதே நெஞ்சுக்குள்ளே...!
--- தத்துவம் ---
வணக்கம் வாத்தியார்....!
பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும், கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும், இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவணாயினும்
தனிமையிலே இனிமை காண முடியுமா....!
--- தனிமையில்லை ---
வணக்கம் வாத்தியார்...!
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது...
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை,
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை....!
--- காதலும் வாழ்க்கையும் ---