-
மட்டக்களப்பில் கடும் வெப்பம் : வெள்ளரிப்பழச் செய்கை விவசாயிகளுக்கு நல்ல வருமானம்
பார்வைக்கான கண்ணாடி மாற்றி 4 வருடங்கள், புதிய prescription எடுத்த பின்னரும் பேசாமல் இருந்தேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு மாற்றத் தான் வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்😂.
-
மட்டக்களப்பில் கடும் வெப்பம் : வெள்ளரிப்பழச் செய்கை விவசாயிகளுக்கு நல்ல வருமானம்
ஆனால், படத்தில் இருப்பது தார்ப்பூசணியாகத் தெரிகிறதே? அதைத் தான் வெய்யிலுக்கும் சாப்பிடுவார்கள், நீர்த்தன்மை அதிகம் இருப்பதால். பெயரை மாற்றி எழுதி விட்டார்களா?
-
மட்டக்களப்பில் கடும் வெப்பம் : வெள்ளரிப்பழச் செய்கை விவசாயிகளுக்கு நல்ல வருமானம்
பாக்கியராஜ் அறிமுகப் படுத்திய முருங்கைக் காய் விவகாரம் போலி! வெள்ளரிக்காய் (watermelon தானே?) அதிக L-Citrulline என்ற ஒரு பொருளைக் கொண்டிருப்பதால், இது தான் உண்மையான "முருங்கைக் காய்" . L-Citrulline உடலினுள் NO (Nitric Oxide) என்ற வாயுப் பொருளை உருவாக்கி, அதனால் இரத்தக் கலன்களை விரிவடையச் செய்யும். இதே போன்ற ஒரு வேலையைத் தான் உடலில் வயாக்ரா போன்ற மாத்திரைகள் செய்கின்றன! எஞ்சோயி எஞ்ஞாமி😇!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எங்கள் எல்லாருக்கும் "சைக்கிள்" என்பது கட்டற்ற சுதந்திரத்தின் மறு பெயர்! ஒரு சைக்கிளைக் கூட நிம்மதியாக ஓட்ட முடியாமல் என்ன ஒரு சீரழிஞ்ச வாழ்க்கை😂?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இதுவும் ஒரு பூரணமான பொய் தான்! ஜீவன் சிவா புலிகளையும், பிரபாகரனையும் நேரடியாகத் திட்டுவார். 2009 இன் பின்னர் "புலியும் பிரபாகரனும் நாம் தான்" என்ற நினைப்பில் இருந்த உங்கள் போன்றோர் (விசுகு நன்றி சொல்லியிருக்கிறார், கவனித்தீர்களா😂?) அவரை குடும்ப விவகாரங்களை இழுத்துத் திட்டினீர்கள். மற்றபடி அவர் உங்கள் குடும்பத்தை இழுத்து வரவில்லை! இப்போது உங்களைப் போல ஒருவர் யாழ் களத்தில், உங்கள் முன்னுதாரணத்தோடு வரை முறையில்லாமல் குடும்பத்தை இழுத்துத் திட்டி நன்மதிப்போடு உலா வருகிறார். இதெல்லாம் சிலருக்கு தோள்பட்டை நட்சத்திரம் போல, பெருமையோடு அணிந்து கொள்வார்கள்! இதன் காரணங்கள் இரண்டு: 1. நிர்வாகம் தேசியத்திற்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால் மென்போக்கோடு நடந்து கொள்வர், 2. "தேசியத் தூண்கள்" சுற்றி நின்று அரண் போல இவர்களைக் காப்பார்கள்😇!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
🤣புதிய வாசகர்களை ஏமாற்றும் நோக்கில் பொய் பேசும் போது அக்கம் பக்கம் பார்த்துப் பேசுங்கள், கண் கண்ட சாட்சிகள் இன்னும் இங்கே இருக்கக் கூடும்! ஜீவன் சிவாவின் ஒரு அரசியல் ரீதியான கருத்திற்குப் பதில் கொடுக்க இயலாமல் மூலையில் முடங்கிய போது, நீங்கள் அவரது குடும்ப நிலவரத்தை இழுத்துப் பேசிய பின்னர் அவர் களத்தில் இருந்து விலகினார். உங்களுடைய அந்தக் கருத்தை எப்படிக் கருத்தால் ஒருவர் எதிர்கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள்? உங்கள் உள் வீட்டுப் பிரச்சினையைத் துப்பறிந்து அவர் பகிர்ந்திருக்க வேண்டுமென்கிறீர்களா😂? இவ்வளவு மோசமாக நீங்கள் ஒரு கள உறவுடன் நடந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், அதை எழுதிய நேரம் உங்கள் சுய நினைவு உங்களிடம் இருக்கவில்லை என்று தான் விளங்கிக் கொள்கிறேன். இந்த நினைவிழப்பிற்கு நீங்கள் உட்கொண்ட ஏதாவது பதார்த்தம் காரணமா அல்லது உங்கள் அடிப்படை நரம்பியல் அமைப்பே அப்படித் தானா என்பது உங்களுக்கு மட்டுமே புரியும்!
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
உங்களுக்கு விளக்கி அவர் களைத்து விட்டார்😂, நான் முயற்சிக்கிறேன்: ஈரானுக்குள் வசிக்கும் ஈரானியப் பெண்களை வீதிகளில் கமெரா பூட்டி வைத்து அவர்களின் தலையை மறைத்திருக்கிறார்களா என்று ஈரான் சோதிக்கிறது (அப்படி தலையை மறைக்காமல் அதிகாரிகளுக்கு சவால் விட்ட மாஷா அமினிக்கு என்ன ஆனது என்பதும் செய்திகளில் வெளி வந்தது!). அப்படிப் பட்ட ஈரானின் அதிகார மட்டத்தினரின் பெண் குடும்ப உறுப்பினர்கள், மேற்கிற்கு வந்தவுடன் மேற்கு உடை தான் அணிகின்றனர், பின்னர் ஈரான் போனதும் தலையை மூடிக் கொள்கின்றனர். இது தான் இரட்டை நிலை என்கிறார். ஈரானின் மலையேறும் குழுவில் இருந்த ஒரு பெண் தலையை மறைக்காமல் ஈரானுக்கு வெளியே நடந்த சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்டு விட்டு பட்ட பாடும் செய்திகளில் வந்தது. எனவே, சாதாரண ஈரானியக் குடிகளுக்கு ஒரு சட்டம், கொமாண்டர்மாரின் குடும்பப் பெண்களுக்கு ஒரு சட்டம். இதைத் தான் கோசான் சொல்கிறார். நீங்களோ என்னவெல்லாமோ கற்பனை செய்து சந்திரனுக்கு கிட்ட நிற்கிறீர்கள்😂!
-
33 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பௌசர் விபத்து: வாளி வாளியாக அள்ளிச் சென்ற மக்கள்
எரி பொருளின் நிறத்தைப் பார்க்கும் போது பெற்றோல் போல தெரிகிறதே? முட்டாப் பயலுகளே😂! இப்படியான எரி பொருள் தாங்கிகளில் இருந்து மக்கள் கூடிப் பெற்றோல் எடுக்க முயலும் போது தீ பற்றி மக்களை உயிரோடு எரித்த சம்பவங்கள் பல நைஜீரியாவில் நடந்திருக்கின்றன.
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'
யாழ் வாசகர்கள் எவரும் "ரத்தம் கக்கி" இறந்து விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, சற்ஜிபிரியில் மொழி மாற்றம் செய்திருக்கிறேன்! Iska is the West's false propaganda.. Kuska alone isn’t good; for biryani, a leg piece… ldhu jyu asku pusku (எனக்கேதும் விருது குடுங்கய்யா! 😂)
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
வசி இணைத்த வீடியோவைப் பார்க்கவில்லை, ஏனெனில் "சதித் திட்டக் கதை பின்னி" சில்லறை பார்க்கும் கிம் ஐவர்சன் என்ற யூ ரியூப் வியாபாரியிடம் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்க இயலாது. கோவிட் 19 காலத்தில், அதன் பரவல், தடுப்பு முறைகள், தயாரிக்கப் பட்ட தடுப்பூசிகள் என எல்லாவற்றையும் போலி என்ற சதிக்கதை பின்னி வயிறு வளர்த்தவர்களில் ஒருவர் இவர். அதனாலேயே The Hill என்ற நம்பகமான ஊடகத்தில் இருந்து அகற்றப் பட்டார்!
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
"உலகில் இது வரை இல்லாத தொழில் நுட்பம் கொராஷார் 4 இல்" 😂 அதீத ஆர்வத்தால் எலாஸ்ரிக்கை ஒரு 25% இழுக்கலாம், இப்படி 100% இழுத்து ஈரானின் உண்மையான தொழில்நுட்ப இயலுமையை அவமானப் படுத்தக் கூடாது! கொரஷார் 4 என்பது வட கொரியாவின் முசுடான்-Musudan (அல்லது Hwasong-10) என்ற நடுத்தர வீச்சு ஏவுகணையின் (IRBM) கொப்பி. பியோங்யாங்க் வீதிகளை இன்னும் விளக்கு மாறால் சுத்தம் செய்யும் நிலையில் இருக்கும் வட கொரியா முசுடாங்கை பரிசோதித்தது 2016 இல். இதற்குரிய தொழில் நுட்பம் ரஷ்யா, சீனா வழியாக வட கொரியாவுக்கு வந்தது என்பதும் இரகசியமல்ல! வட கொரியாவில் இருந்து ஈரானுக்கு நேரடி லைன் இருக்கிறது என்பதும் இரகசியமல்ல. அறை வெப்ப நிலையில் நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய திரவ ஏவுகணை எரிபொருள் (Hypergolic fuel) ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது, இந்த நாடுகள் இந்த உலகில் தான் இருக்கின்றன. Inertial Navigation System (INS) என்று அழைக்கப் படும், செய்மதிகளின் GPS தொடர்பில்லாமல் ஏவுகணைகளை வழி நடத்தும் நுட்பம் 1942 இல் ஜேர்மனியர்களால் உருவாக்கப் பட்டு, 1960 களில் ஏவுகணைகளில் பொதுவான பாவனைக்கு வந்து விட்ட ஒரு navigation நுட்பம். இந்த INS நுட்பத்தின் குறைந்த (civilian) வடிவம் தான் ரெஸ்லா போன்ற வாகனங்களில் தானியங்கியான (autopilot) ஓட்டத்திற்கு GPS ஓடு சேர்ந்து அல்லது தனியாக உதவுகின்றது. இது எதுவும் தெரியாமல் என்ன எஞ்சினியர் மார்?
-
உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?
ஈஸ்ரர் பூசைக்காகக் கோவிலுக்குப் போக முன்னர் நானும் பார்த்து விட்டு "உண்மையாக இருந்து தொலைக்கட்டும்" என்று போய் விட்டு இரவு மீள வந்து பார்த்தேன்! உண்மையில்லை. நேற்று, ஜனாதிபதிகளுக்கு சிகிச்சை செய்யும் Walter Reed Army Hospital இனை அண்மித்த வீதிகளைப் பூட்டியிருக்கிறார்கள். அதே நேரம் காலை 11 மணிக்குப் பின்னர் ட்ரம்ப் பற்றிய செய்திகள் இல்லை (lid on press) என்று வெள்ளை மாளிகை சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு சம்பந்தமில்லாத சம்பவங்களை இணைத்து யாரோ கிரியேரிவாக யோசித்துக் கதை உருவாக்கி விட்டார்கள்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அங்கையும் பீற்றூட்டா? இரத்தத்திற்கு நல்லது தான், அடுத்த நாள் சிறு நீரைப் பார்த்துப் பயந்து விடாமல் இருக்க வேண்டும்! 😂
-
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
நீங்கள் வந்து வாழ்வதற்காக மேற்கு ஜேர்மனியை சோவியத்திடமிருந்து பாதுகாத்து வைத்திருந்தது கூட "கடுகாக" உங்களுக்குத் தெரியவில்லையா😇?