Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6191
  • Joined

  • Last visited

  • Days Won

    70

Everything posted by Justin

  1. இலங்கையில் காலாகாலமாக இருக்கும் எலிக்காய்ச்சலை (Leptospirosis) இரத்த மாதிரியில் இருந்து கண்டறியும் பரிசோதனைகளும் பல ஆண்டுகளாக இருக்கின்றன. ஆள் உயிரோடிருக்கும் போதே ஒரு நாளில் கண்டறியக் கூடிய பரிசோதனை இது. ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? கண்டறிய முடியா விட்டாலும் கூட சிகிச்சை மிகவும் இலகுவானது. அனேகமான பென்சிலின், cephalosporin வகைகளே வேலை செய்யும்.
  2. "உண்மையைச் சொல்கிறோம், சிவப்புக் குளிசையை அப்படியே முழுங்குங்கோ" என்று போட்டிருக்கிறார்கள். அப்படியே சாப்பிடுகிறார்கள்😂! 👇 "...Like in the ground-breaking movie, SouthFront offers you the choice of taking the “red pill”. Our long-term activity has formed a growing community of like-minded people seeking the truth. Accept the truth, participate in Southfront, and swallow the red pill..."😎
  3. இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது. நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?
  4. யாழ்ப்பாண பா.உ யாழ் மருத்துவமனைகளுக்குள் வரலாம். பா.உ மட்டுமல்ல, எவரும் வெளிநோயாளர் போகக் கூடிய இடம் வரை வரலாம். ஆனால், மருத்துவமனைப் பொறுப்பாளரின் அனுமதியில்லாமல் விடுதியுட்பட்ட உள் பகுதிகளுக்கு யாரும் போக முடியாது. ஏன்? அந்தக் கட்டிடத்திற்குள் இருப்போரின் நலனுக்கு பொறுப்பாளர் தான் பொறுப்பு. "சந்திப்பு நேரம் நியமித்த பின்னர் வாருங்கள்" என்கிறார் சத்தியமூர்த்தி. அதுவே முறை. சாதாரண மக்களை விட, பா.உக்களுக்கு ஏராளமான சலுகைகள் (privileges) பாராளுமன்றத்தின் உள்ளேயும், பா. உ கடமையை செய்யும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. சும்மா திறந்திருக்கும் கட்டிடங்களுக்குள் நுழைந்து பா.உக்கள் "கடமை செய்கிறேன்" என்று "சலுகை" கேட்க முடியாது. உண்மையில், அர்ச்சுனாவைப் பாராளுமன்றம் அனுப்பிய வாக்காளர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். Elections have consequences😎!
  5. அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான். யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன். பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.
  6. ஓ..அது தான் "லிஸ்ற் வந்திற்றா, லிஸ்ற் வந்திற்றா" என்று இலங்கையில் ஏ.எல் ரிசல்ட்டுக்காக ஏங்கும் மாணவன் போல அலைகிறார்களா?🤣😂
  7. இவை மிக முக்கியமான கருத்துக்கள், மீள மீள இங்கே பலராலும் வலியுறுத்தப் பட்டிருந்தாலும், இதைக் கவனிக்காமல் அடுத்த தலைமுறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்க வேண்டுமென்று "வனைதல்-molding" முயற்சியில் இருக்கிறார்கள். "புனிதம் செய்கிறோம்" என்ற போர்வையில் , பொய் வரலாற்றைக் கூட பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. உதாரணமாக, மிகுந்த உணர்வோடு வளவன் எழுதிய கருத்தில் "புலிகள் உட்பட பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டனர்.." என்று இருக்கிறது. இது எவ்வளவு உண்மை? 1987 இல் இந்திய இராணுவம் பலாலியில் வந்திறங்கிய போது வீடு வீடாகப் புலிகளின் அரசியற்பிரிவினர் சென்று மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு நினைவிருக்கும். சுது மலையில் பிரபாகரனின் உரையில் கூட முழுமையாக ஏற்றுக் கொள்ளல் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அமிர் யாரால், ஏன் கொல்லப் பட்டார்? இவையெல்லாம், '87 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளங்கள் என்றால், வரலாறு "சுத்தம்" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
  8. சிங்களம் தெரியாது. எனவே, தற்போது கூட சமூக வலை ஊடகங்களிலும், செய்திகளின் பின்னூட்டமாகவும் சிங்கள மக்கள் எழுதுவதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. பின்னர் எப்படி பெரும்பாலான சிங்களவர்களின் "அப்பாவித் தனத்திற்கு" அத்தாட்சி கொடுக்கிறீர்கள்? குறைந்த பட்சம் இலங்கையில் இருந்த போது சிங்களப் பகுதிகளில் வசித்தாவது அனுபவம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன். பின்னர் எப்படி ஐயா இப்படி பந்தி பந்தியாக அளக்கிறீர்கள்😂?
  9. மருத்துவர் சத்தியமூர்த்திக்கு மடியில் கனம் இருக்கிறது. யாழ் மருத்துவமனைக்கு என சேர்க்கப் பட்ட நன்கொடைகளை தன்னுடைய தனியார் மருத்துவ மனைக்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிடைத்த நன்கொடை பற்றிய தகவல்களை வெளியிட்டே இந்த குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்கலாம். சிறு குழந்தையின் கை அகற்றப் பட்ட கேஸ் பற்றிய விசாரணைக்கு என்ன ஆயிற்று? எல்லாவற்றையும் மௌனம் மூலம் மறக்கடிக்க முயற்சிக்கிறார் போல தெரிகிறது.
  10. எனக்கு விளக்கிய போது யாழ் களத்தில் உங்கள் "எல்லை" உங்களுக்கும் போல விளங்கியிருக்குமென நினைக்கிறேன், அதைப் பின்பற்றினால் மகிழ்ச்சி! இந்தக் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்தவரை, இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய திரியில் அதன் கடந்த காலம் பற்றி ஐலன்ட் எழுதியிருப்பது பொருத்தமானதே. அதைப் "பேசுவதால் இப்போது பயனில்லை" என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அப்போது தூக்கியெறிந்தது போல இப்போதும் நடந்து கொள்ளக் கூடாதென்ற கருத்து அங்கே வெளிப்படுகிறதல்லவா? அது தான் ஐலன்ட் கருத்தின் பயன். "இதைப் பேசுவதால் பிரபாகரனையும், மாவீரர்களையும் கொச்சைப் படுத்தினார்கள், நெஞ்சில் மிதித்தார்கள்" என்று நீங்கள் சொல்வது உங்கள் உணர்ச்சிமயமான புரிதலின் பாற்பட்டது. உங்கள் கருத்திற்கு ஆதரவு தந்திருப்போர் அனைவருமே நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாமல் ஒரு மூலையில் முடங்கும் போது இறுதி அஸ்திரமாக "மாவீரர்கள், போராளிகள், பிரபாகரன்" கொச்சை என்று சவுண்ட் விட்ட படி எஸ்கேப் ஆகும் உறவுகள் தான்😎. என் அபிப்பிராயத்தில், இப்படியான செயல்கள் செய்வோர் தான் மேற்சொன்ன தரப்புகளை அதிகம் மலினப் படுத்துகிறார்கள்.
  11. 😂வளவனும், ரஞ்சித்தும் இன்னும் ஏதாவது பாஸ் அலுவலகம் நடத்துகிறீர்களா? "அனுமதி" யெல்லாம் யார் உங்களிடம் கேட்டது அல்லது நீங்கள் இருவரும் யார் அதைக் கொடுப்பதற்கு?
  12. இனி அசாத்தும் "சிரியாவை வளர்த்த முன்னுதாரண ஆட்சியாளர்" என்று மேற்கு நாடுகளில் "கஷ்டப் பட்டு, இஷ்டமில்லாமல்" வாழும் எங்கள் தமிழ் குடிகளால் புகழப் படுவார் என நினைக்கிறேன்😎. சீரியசாகப் பார்த்தால்: அப்பன் அசாத்தின் மேற்குலகோடு இருந்த தொடர்பால், பிரிட்டனில் மேற்படிப்புப் படித்து கண் மருத்துவரான ஒருவர் சின்ன அசாத். பிரிட்டன் பிரஜையான மனைவி அஸ்மா 2011 இன் பின்னரும் கூட இங்கிலாந்தில் தான் வசித்தாரென நினைக்கிறேன். உள்நாட்டு யுத்த ஆரம்பத்தில், இந்த "கண் மருத்துவரின்" கட்டளையின் படி குளோரின் வாயுத் தாக்குதல் எதிர் தரப்பின் கட்டுப் பாட்டில் இருந்த மக்கள் மீது நடத்தப் பட்டது. குளோரின் வாயுவின் விளைவினால் மூச்சுத் திணறும் குழந்தைகளை மக்கள் தண்ணீரினால் கழுவும் காட்சிகள் வெளிவந்தன. "Do no harm" என்ற அடிப்படை மருத்துவ அறத்தினையே பின்பற்ற இயலாத இந்த இழிபிறவியை, கடாபியைப் போலவே தெருவில் இழுத்து வந்து சுட்டிருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
  13. ரசோதரன் சொன்னது போல இது அறம் சம்பந்தப் பட்ட விடயம், சட்டப் படி முறையாக சாராயக் கடை வைத்திருப்போரை எதுவும் செய்ய இயலாது. சாராயக் கடை திறப்பதை சட்ட விரோதமாக்க வேண்டுமானால் சாராயப் பாவனையை சட்ட விரோதமாக்க வேண்டும். இதை யாராவது செய்திருக்கிறார்களா? ஆம், அமெரிக்காவில் 1920 களில் மதுத் தடை (prohibition) முழுநாட்டிற்குமாக அரசியலைப்பு மாற்றம் மூலம் வந்தது. அடுத்து நடந்த சம்பவங்கள் பற்றி இன்றும் புத்தகங்களும், திரைப் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. Moonshine எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் நபர்கள் பெருகினார்கள். இன்றும் கூட மலைவாழ் மக்கள் காய்ச்சுகிறார்கள். இன்னொரு பக்கம், மதுத் தடை இல்லாத கனடாவில் இருந்து கள்ளமாக கனேடிய விஸ்கியைக் கடத்தி வரும் bootlegging முதலாளிகள் பெருகினார்கள். சிலர் கனடாவில் இருந்து molasses எனப்படும் கால்னடைத் தீவனப் பொருளைக் கடத்தி வந்து உள்நாட்டில் கள்ளச சாராயம் காய்ச்சினார்கள். இவ்வளவு ஏன்? புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த வன்னியில் கூட உள்ளூர் சாராயம் உற்பத்தி செய்யப் பட்டது. தடை சாத்தியமில்லையென்ற காரணத்தால். அந்த உள்ளூர் சாராயம் கிடைத்த போதே, கசிப்புக் காய்ச்சும் ஆட்களும் அங்கே இருந்தார்கள். எனவே, முழுத்தடை சாத்தியமில்லை.
  14. "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம். இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா? எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
  15. போன மாதம் வரையில் யாழ் திரிகளில் "ஆதாரம்" கேட்பது ஓரிருவர் தான்! இப்ப எல்லாரும் "ஆதார புருஷர்களாக" 😎மாறி விட்டார்கள். மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂
  16. ம்..அப்ப நான் தான் எரிஞ்சு போன LED மாதிரி இது விளங்காமல் இருந்திருக்கிறன் போல! ஆனால், இந்த விசாரணையெல்லாம் இவர்களின் அரசு செய்யாதென ஊகிக்கிறேன். இப்படி ஒரு வதந்தி நிலையிலேயே எல்லாரையும் வைத்திருப்பது இவர்களுக்கு இலாபம். எனவே, செய்ய மாட்டார்கள். எல்லோரும் "பார் மகளே பார்..." என்று அல்லாடிக் கொண்டிருக்க அடுத்த தேர்தலும் வந்து விடும்😂!
  17. சரியான தகவல். சிபாரிசு செய்தவர்கள் பெயரை RIA மூலம் தான் பெற முடியும். நேற்று வணங்காமுடி இணைத்திருந்த இலங்கை மதுவரித் திணைக்கள இணைப்பை எல்லோரும் கடந்து போய் விட்டு இன்னும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இணைப்பில் போய் ஒருவர் மது விற்பனை அனுமதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னவென்று பார்த்தால் அதில் பா.உ அல்லது உள்ளூர் அதிகாரிகள் சம்பந்தமாக எதுவும் இல்லை. விண்ணப்ப தாரி குற்றவரலாறு இல்லாதவர் என்று விண்ணப்பதாரி சத்தியக் கடதாசி (affidavit) முடிக்க வேண்டுமென்று மட்டும் தான் இருக்கிறது. இலங்கையில் சத்தியக் கடதாசி முடிக்க சமாதான நீதவான் போதும். பா. உ அவசியமில்லை. என் கேள்வி: வேலை வாய்ப்பு, வெளிநாட்டில் அகதி அந்தஸ்து போன்றவற்றில் இருப்பது போல பா. உக்கள் சிபார்சுக் கடிதம் கொடுக்கும் நடைமுறை ஏதாவது அலுவலக ரீதியாக இல்லாமல் மேசைக்குக் கீழ் நடக்கும் பரிமாற்றமாக நடக்கிறதா?
  18. அது சரி, யார் இது "சுத்திரன்"? சுமந்திரன் லவ்வர்சின் PSTSD நோய்க்கு தற்காலிக மருந்தாகக் கொண்டுவரப் பட்டிருக்கும் ஏதாவது புதிய பாத்திரமா😂?
  19. தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂? ஐயா, 2 முறை தேர்தல் வென்றதையே சகித்துக் கொள்ளாமல் பொங்கிய பட்டாசு ரீம் தாங்களே போட்டுத் தள்ளியிருப்பர் சுமந்திரனை. ஆனால், இந்த சுமந்திரன் மீதான இவர்களின் ஒற்றை வன்மம் எப்படி இவர்களைத் தேர்ந்தெடுத்த குருடர்களாக - selective blind மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? 1. ஈழவேந்தனை புலிகள் தேசியப் பட்டியல் (பின் கதவு) மூலம் வர வைத்தனர். நல்ல பேச்சாளர். லீவு போட்டு விட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து இறுதியில் அதனாலேயே பதவி பறி போனது. பதவி பறி போகும் தறுவாயிலும் தன் பா.உ குடியிருப்பு சலுகையை வைத்திருக்கப் போராடியவர் அமரர் ஈழவேந்தன். இதையெல்லாம் மறந்து விட்டு, அவருக்கு "தேசியப் புகழ் மாலை" சாத்தியவர்கள் இருக்கிறார்கள். 2. நம் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முதல் முறை பா. உ ஆனது புலிகள் கிழக்கில் தெரிவான ஒரு கூட்டமைப்பு பா. உவை ஆயுத முனையில் மிரட்டி பதவி விலக வைத்தமையால் வந்த வெற்றிடத்திற்கு.இதைப் பின் கதவென்று கூட சொல்ல முடியாது, "கூரையைப் பிரிச்சு" இறங்கியதாகத் தான் சொல்ல முடியும்😂! இதுவும் கண்ணுக்குத் தெரியாமல் தேர்ந்த குருடர்களாக இருக்கிறார்கள்!
  20. அரச எம்பி?? இது சரியான தகவலல்ல என நினைக்கிறேன். நீலன் சந்திரிக்காவின் நண்பர், ஆனால் அவரை தேசியப் பட்டியல் மூலம் தீர்வுத்திட்டத்திற்காகவே உள்ளே கொண்டு வந்தது த.வி.கூ என்று தான் நான் அறிந்திருக்கிறேன். த.வி.கூ வின் உள்ளேயும், வெளியே பல தமிழ் தேசியர்களிடையேயும் வரவேற்பு தன் முயற்சிக்கு இல்லாமையால் தான் அவர் பதவி விலகினார்! தேசியப் பட்டியலை தமிழரசுக் கட்சி/த.வி.கூ இவ்வாறு துறை சார் நிபுணர்களை உள்ளே கொண்டு வரத் தான் பாவித்து வந்திருக்கிறது. அப்படி உள்ளே கொண்டு வரப் பட்டவர் தான் சுமந்திரன். "ரணில் மூலம் திணிக்கப் பட்டார்" என்ற ஆதாரமில்லாத பொய்களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்கிறார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ் சிலர்😂.
  21. "யார் பெற்றார்கள்?" என்றால் நபர்களின் பெயர்கள் அல்லவா வர வேண்டும்? இது மாவட்டங்களின் பெயர்களோடு நின்றிருக்கிறது. கிழக்கு நகரொன்றில் இருந்த மதுபானசாலை சாணக்கியனுடையது என்று யாழ் களத்தில் "நம்பிக்கையான தகவல்களின் மூலமான" தமிழ்சிறி😎 சொன்ன நினைவு! அப்ப சாணக்கியனே துணிந்து தன்னைத் துகிலிருந்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறதே😂?
  22. (இந்தப் பதிவுக்கு மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து எழுதுகிறேன்) சுமந்திரன் அரசியலுக்கு வரமுதலும் புலி ஆதரவாளர் அல்ல, வந்த பின்னரும் ஆதரவாளர் அல்ல. இதை வெளிப்படையாகச் சொன்னதை நான் மட்டுமல்ல, தாயக வாக்காளர்கள் பலர் நேர்மையாகத் தான் கண்டிருக்கிறார்கள். நீங்கள் "அமசடக்கியாக" இருந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் என்கிறீர்கள். இந்தக் கருத்து எங்கள் தமிழ் சமூகம் பற்றிய ஒரு சங்கடமான தகவலைத் தான் சொல்கிறது, சுமந்திரனைப் பற்றியல்ல. In the long run, யாருமே இழக்க முடியாத அப்பாடக்கர் அல்ல என்பது உண்மை. ஆனால், 90 களில் இருந்த வாகன இறக்குமதி, சொத்து சேர்ப்பு, முகாமில் இருந்து ஆட்களை எடுத்து விடக் காசு என்று வலம் வந்த தமிழ் பா.உக்களில் இருந்து வித்தியாசமான பா. உ வாக இருந்த இருவர் சுமந்திரனும் , சம்பந்தரும். இதே போலத் தான் நீலனும், தேசியப் பட்டியலில் கொண்டு வரப் பட்டு தீர்வுத் திட்டத்தில் மட்டுமே குறியாக இருந்தார். ஒரு ஆண்டினுள், "கூட்டம் போட்டு அலட்ட மட்டுமே இவர்கள் லாயக்கு" என வெறுத்துப் போய் பதவி விலகினார். பதவி விலகிய பின்னரும் பாதுகாப்பு வழங்கப் பட்ட நிலையில் தற்கொலைக் குண்டு தாரி மூலம் கொல்லப் பட்டார் (இது சிலருக்கு கிச்சு கிச்சு மூட்டும், நான் பொறுப்பல்ல!😎) கல்விச் சான்றிதழ் தீர்வு முயற்சிகளுக்குக் கட்டாயமல்ல. கல்விச் சான்றிதழும், அதனோடு இணைந்து வரும் சில திறன்களும் நீங்கள் தேடும் "இராஜதந்திரி, பேச்சு வார்த்தையாளர்" ஆகியோருக்கு முக்கியம் என நினைக்கிறேன். வெளிநாட்டு/உள்நாட்டுப் பிரதிநிதிகளோடு இருக்கும் பரிச்சயமே இந்த அரசியல் பேச்சு வார்த்தைகளில் சில துரும்புகளை நகர்த்த உதவக் கூடிய ஆயுதமாகக் கூடும். ஏனைய நாடுகளின் வரலாற்றில் இது நடந்திருக்கிறது. எனவே தான் "பிள்ளையைத் தொட்டிலோடு எறியாமல்" சுமந்திரனை இந்த முறையும் பா.உவாக தமிழர்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் உட்பட பல தாயக மக்களும் விரும்பினர். ஆனால், "பேசுவது பிடிக்கவில்லை, கோர்ட் சூட் போடுவது பிடிக்கவில்லை, அவரது ஆங்கிலம் பிடிக்கவில்லை" என்று சும்மா அலட்டிய கோஷ்டிகள் வாக்குகளையும் குறைத்திருக்கிறார்கள். இனி வேட்டி சட்டையோடு போய் சிறிதரனா பேசுவார்? பொன்னரை எந்த தூதரகமும் ரீ பார்ட்டிக்குக் கூட அழைக்காதென நினைக்கிறேன். எனவே, மக்கள் தீர்ப்பிற்கு விளைவுகள் இருக்கும். ஒரு விளைவு இது. சுமந்திரன் காதையை அப்படியே அடியோடு அழித்து விட்டு, புதிதாக துவங்க வேண்டும். பிழைக்க வழியில்லாமல் அரசியலுக்கு வந்து ஒழித்திருந்தவர் அல்ல சுமந்திரன். அவர் இனித் தன் அடுத்த அத்தியாயத்தை தமிழ் அரசியலுக்குள் இல்லாமல் வெளியே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
  23. என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள். மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!
  24. இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂). இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.