Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6192
  • Joined

  • Last visited

  • Days Won

    70

Everything posted by Justin

  1. அர்ச்சுனா கதையின் நீதி: பத்துப் பேர் சுற்றி நின்று கரகோஷம் செய்கிறார்கள் என்பதற்காக பப்பா மரத்தில் ஏறக்கூடாது.
  2. யார் இந்த கைப்புள்ள😂? படத்தை அப்படியே தொடக்கம் முதல் முடிவு வரை விமர்சனம் என்ற பெயரில் சொல்லியிருக்கிறார்? Spoiler alert தெரியாமல் இருக்கிறாரா?
  3. இந்த யூரியூபர்களின் தகரடப்பா சத்தங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், தலைமைத்துவப் பண்பு என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், படிப்பினைகள் இந்தச் சம்பவங்களுள் அடங்கியிருக்கின்றன. மேலே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்: "சுகாதார அமைச்சில் பேசி விட்டு வருகிறேன்" என்று உள்ளே நுழையும் மருத்துவர் அர்ச்சுனாவைக் கண்டதும், மருத்துவர் ராஜிவ் எழுந்து நின்று ஆமிக்காரனிடம் பொலிஸ் பதிவு காட்டுவது போல தன் நியமனக் கடிதங்களைக் காட்டுகிறார்😂. அர்ச்சுனா ஒன்றும் காட்டவோ, அமைச்சு என்ன சொன்னதென்றோ வெளிப்படுத்தாமலே, ராஜிவ் கதிரையை விட்டு அகன்று ஒதுங்கி நிற்கிறார். புரிந்து கொள்ள இயலாத நடைமுறையாக இருக்கிறது. "இங்கே பேச எதுவும் இல்லை, நீங்கள் மாகாணப் பணிப்பாளரைப் பாருங்கள்" என்று இருந்த படியே சொல்லியிருக்கலாம். கூட இருக்கும் பொலிஸ்காரர்களிடம் "இந்த வீடியோக் காரர்களை அகற்றுங்கள்" என்று கூட வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பதில் கொஞ்சம் "ரௌத்திரம்" அடங்கியிருக்க வேண்டும். தெளிவாக, வெளியே வரக் கூடிய குரலில் பேசக்கூட இயலாத எதிராளிகளை வைத்துக் கொண்டு அர்ச்சுனா நன்கு எஞ்ஜோய் பண்ணுகிறார் என நினைக்கிறேன்😂.
  4. 🤣😂 சரியாக கண்ணைத் துடைத்து விட்டு ஒரு தடவை பாருங்கோ. இவ்வளவு சீரியசான விடயத்தை இரண்டாவதாகப் போடும் அளவுக்கு எந்த ஊடகமும் முட்டாளாக இல்லை. லைவ் போய்க் கொண்டிருக்கிறது சகல அமெரிக்க ஊடகங்களிலும், பிபிசியிலும்.
  5. இங்கே ஆறு திருமுருகன் அவர்கள் எதுவும் செய்திருக்கிறார் என்று எவரும் எழுதவில்லை. அவர் நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையத்தில் சில சீர்கேடான நிலை இருந்திருக்கிறது, அதற்குப் பொறுப்பான அரச நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது நல்ல விடயம் என்று தான் பெண்கள், குழந்தைகள் நலன்களை முன்னிறுத்தும் எவரும் நினைப்பர். ஆனால், நீங்கள் எழுதியிருக்கும் இரண்டாம் பந்தியின் படி, நீங்கள் "வேற குறூப்" 😂, இந்த குறூப்புகளை யாழில் நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். வைரமுத்து சின்மயி பிரச்சினை, கனடாவில் மனைவியைக் கொன்ற கணவன் பிரச்சினை போன்ற திரிகளில் இந்த குறூப் வந்து இப்ப நீங்கள் எழுதியிருப்பதைப் போலவே எழுதியிருக்கிறார்கள். என் ஆச்சரியம், நீங்களெல்லாம், வயசாளிகள் என்று இங்க திரிகிறீர்கள், ஆனால் வயதுக்கேற்ற நடத்தைகளை , இந்த திரியில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை. இதை மூப்பு வாதமாக (ageism) எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் போன்ற மூத்தவரிடம் இது போன்ற கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை.
  6. பிரின்ஸ்ரன் நகரம், பிரின்ஸ்ரன் பல்கலை அமைந்திருக்கும் செல்வச் செழிப்பான நகரம். ஆனால், sanctuary city என்ற அந்தஸ்து காரணமாக உள்ளூர் நகர நிர்வாகம் குடிவரவுத் துறையின் சுற்றி வளைப்புகளை அனுமதிப்பதில்லை. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏதோ செய்ய முயன்றிருக்கிறார்களென ஊகிக்கிறேன்.
  7. என்ன திரும்பத் திரும்ப இல்லம் நடத்துபவரின் வரலாற்றையே எல்லாக் கருத்துகளுக்கும் பதிலாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர் பரோபகாரியாக இருப்பதால் "அவர் நடத்தும் இல்லத்தில் முறைகேடுகள் இருக்கலாம், அதை பேப்பர்கள் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் வலம்புரி போன்ற ஓர ஊடகங்களில் இருந்து பொய்ச்செய்தியை மேற்கோள் காட்டி முரட்டு முட்டுக் குடுக்கலாம்" என்கிறீர்களா😂? என் கருத்தின் பின்னணியை அறிய மேலே இருக்கும் கருத்துக்களை வாசியுங்கள். இதை விட உங்கள் போன்ற முரட்டு முட்டு அலட்டல் பேர்வழிகளுக்கு மேலதிகமாக நேரம் செலவழிக்க என்னிடம் நேரமில்லை!
  8. இங்கே உள்ளூர் செய்திகளைப் பார்க்கும் போதும், இதே போன்ற பட்டியல் தான் கிடைக்கிறது. பணக்காரர்களின் வாகனங்களாகக் கருதப் படும், லாண்ட்றோவர், ரேஞ் றோவர், பென்ஸ் ஆகியவை தான் அதிகம் திருடப் படுகின்றன. ஆயுத முனையில் கடத்தினால் ஒழிய இந்த நவீன வாகனங்களைத் திட்டமிட்டுத் தான் திருட முடியும். ஒரு பென்ஸ் காரை, அதனை ஒரு சிறு திருத்த வேலைக்காக விட்ட திருத்தகத்தில் அதனுடைய திறப்பை குளோன் செய்து, பின்னர் வீட்டில் வந்து திருடிப் போயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்த கார் திருடர்களுக்கு "உடன் நீதி- swift justice" கிடைப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. கார் திருட்டுக்கு பெயர் போன வாசிங்ரன் டி.சியில், போன வாரம் ஒரு சம்பவம். ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியின் வீட்டுக்கு வெளியே காவலுக்காக வாகனத்தில் US Marshals என்ற சமஷ்டிப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி காத்திருக்க, ஒரு கார் திருடன் வந்து கைத்துப்பாக்கியால் ஜன்னலில் தட்டியிருக்கிறார். காவல் அதிகாரி ஜன்னலைத் திறந்து சரமாரியாகச் சுட்டதில் வாய் முகமெல்லாம் குண்டு பாய்ந்து கார் திருடன் மருத்துவ மனையில்😂. இதே போன்ற இன்னொரு சம்பவம் சில மாதங்கள் முன்பு பைடனின் பேத்தியின் வீட்டின் அருகிலும் நடந்திருக்கிறது.
  9. இப்ப, வலம்புரியின் போலிச்செய்தியை வட்சப்பில் இருந்து எடுத்துப் போட்டு "உண்மை ஜெயித்தது" என்று டயலாக் விட்ட @சுண்டல் சக நண்பர்கள் "முகத்தை மூடிக்" கொண்டாவது வரிசையாக வரவும்😂! பிகு: தேசம்நெற் ஜெயபாலன் ஆறுதிருமுருகனைப் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். யாழ் பல்கலையின் மூதவையில் இருந்தபடி சில முன்னேற்றகரமான விடயங்கள் பல்கலையில் நிகழாமல் தடை போடும் ஒருவராக ஆறுதிருமுருகன் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். உதாரணமாக, வவுனியா வளாகம் (அடுத்து கிளிநொச்சி வளாகம்) தனியான பலக்லைகளாகத் தரமுயர்த்தப் பட்டால், இந்து/சைவர் அல்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வந்து விடுவர் என்ற அச்சத்தை மறைமுகமாக ஆறுதிருமுருகன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  10. கூர்ப்பியலில் இருக்கும், மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கும் பல புதிர்களில் பறவைகளின் பேச்சுக் கற்கும் திறனும் (vocal learning) ஒன்று. பேச்சைக் கற்றுக் கொள்ளும் இன்னொரு குடும்பமான மனிதக் குடும்பத்திற்கும், பறவைக் குடும்பத்திற்கும் 150 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், பல பறவையினங்களில் பேச்சுக்குக் காரணமான ஜீன்கள் மனிதக் குடும்பத்திலும் இருக்கின்றன. பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், கிளி மட்டுமல்லாமல், பாடும் இயலுமை உடைய பல பறவை இனங்களிலும், மைனா (Starlings), கிளிக் குடும்பங்களிலும் பேச்சு அந்த மாதிரி வரும். கிளிகளின் புத்திக் கூர்மையும் சேர்ந்து கொண்டால், அவையிட பேச்சு அந்த மாதிரி இருக்கும்😂! இதைப் பற்றிய மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகளை செய்த எரிக் ஜார்விசின் ஒரு ஆய்வுக் கட்டுரை இணைப்பு: https://www.jneurosci.org/content/24/13/3164.long
  11. மருத்துவர் கோபிஷங்கரை நேற்று எட்ட இருந்து பார்த்தேன். அவருடைய பெறாமகளின் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தார். இவர் வருவார் என்று தெரிந்ததுமே சந்தித்துப் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு தான் போயிருந்தேன். பின்னர், நான் ஏதும் அர்த்தமில்லாமல் உளறி வைக்க, என்னையும் தன் பகிர்வுகளில் ஒரு பாத்திரமாக்கி விடுவாரோ😂 என்ற அச்சத்தில் பேசாமல் இருந்து விட்டேன்.
  12. உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன். எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில் இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.
  13. ஆட்டுக்கு குழை சந்தையில் வாங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் இருந்ததை இன்று தான் அறிகிறேன். லவ் பேர்ட், பரகீற் (அமெரிக்காவில் budgie என்பார்கள்), பச்சைக் கிளி (parrot) எல்லாம் Psittacine எனப்படும் பறவைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இந்தப் பெரிய Psittacine குடும்பத்தின் உப பிரிவாக "சின்னக் கிளிகள்" குடும்பம் இருக்கிறது. சின்னக் கிளிகளில் முக்கியமானவை லவ் பேர்ட்டும், பரகீற்றும். வீட்டுப் பிராணியாக வளர்க்க உகந்தவையாக Psittacine பறவைகள் இருந்தாலும், சுகாதாரமான இடத்தில் இருந்து இவற்றை வாங்கா விட்டால் ஆபத்தான நோயான Psittacosis இனை மனிதர்களுக்குப் பரப்பக் கூடிய ஆபத்து இருக்கிறது. அண்மையில், இலங்கையில் ஒரு பெண் வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன்.
  14. இது உண்மையான செய்தியாக இருந்தால், துன்பகரமான ஒரு தகவல். சிகிச்சைகள் பலனளிக்க வேண்டுமென பிராத்திக்கிறேன். அவரது ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட செய்தியில் ஏன் அவரது சொத்து விபரமெல்லாம் போட்டிருக்கிறார்கள்?
  15. யார் இராதாகிருஷ்ணன்? எனக்கும் இலங்கையின் மலையக அரசியல்வாதி பெ.இராதாகிருஷ்ணனைத் தவிர தமிழ் பரப்பில் வேறொரு இராதாகிருஷ்ணனைத் தெரியாது! இந்த "பிரபலமான" இராதாகிருஷ்ணன் ஈழ அரசியலில், மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! இனப்படுகொலையில் எல்லாருடைய "பங்கும்" விவரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெரிய பிளேயரின் பங்கு cherry-picking இனால் மிஸ்ஸிங் இந்த கட்டுரையில்😎!
  16. தெல்லிப்பழையில் இருக்கும் இரு இல்லங்களை மூடுவதாக இன்னும் வடமாகாண சபை தளத்தில் செய்தி இருக்கிறதே? குருபரனின் மானநஷ்ட எச்சரிக்கை கடிதத்தில், ஜூலை 4 இற்கு முன் எதுவும் எச்சரிக்கை கிடைக்கவில்லை என்றார்கள். பின்னர், ஜூலை 5 ஆம் திகதி மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து கிளீன் சேர்டிபிகேட் கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்ததாம்😎? இங்கே வலம்புரி பொய்செய்தி போட்டிருக்கிறதா அல்லது மாகாண சபை பொய் செய்தி போட்டிருக்கிறதா? உதயன் மறுப்பு/மன்னிப்பு வெளியிட்டு விட்டதாமா? 48 மணி நேரம் தாண்டி விட்டதென நினைக்கிறேன்.
  17. சமந்தா பிரபு மேல் இருந்த "மரியாதை" போய் விட்டது எனக்கு😎! அரைவைத்தியர்கள்- quacks என்று அழைக்கப் படும் யாரோ இதைச் சமந்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு "அரை அவியல்" வைத்தியரின் நுனிப்புல் மேய்ந்த அறிவு அப்படியே தெரிகிறது இந்த செய்தியில். உண்மையில் எங்கள் உடலினுள் நடப்பது இது தான்: தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்ல எங்கள் நோயெதிர்ப்புக் கலங்கள் படையெடுக்கும் போது, அந்தக் கலங்களில் சில ஐதரசன் பேரொக்சைட் , நைட்ரிக் ஒக்சைட் போன்ற கிருமியைக் கொல்லும் நஞ்சுகளை உருவாக்குகின்றன. இந்த நஞ்சுகள் மிகக் குறைந்த அளவில், மிக குறுகிய காலத்திற்கு சுரக்கப் படுவதோடு, அதைச் சுரந்த கலங்களும் அந்த நஞ்சுகளால் இறந்து போகின்றன (ஒரு தற்கொலைத் தாக்குதல் எனலாம்). இதை வாசித்த அரைவைத்தியர் யாரோ, வெளியேயிருந்து ஐதரசன் பேரொக்சைட்டை உடலினுள் செலுத்தினால் என்ன என்று யோசித்திருப்பார் என ஊகிக்கிறேன்.
  18. பையன், கருத்தின் பின்னணி தெரியாமல் எனக்கு பதில் எழுதியிருக்கிறீர்கள். "சிங்களக் காதலி" இருப்பதே உறுதியாகாத வதந்தி. அந்த வதந்தியை முன் வைத்து சாணக்கியனை யாழ் களத்தில் சில மாதங்கள் முன்னர் தாக்கிப் பேசியவர் @Elugnajiru. எனவே, அவருக்கு உங்கள் கருத்தை எழுதி, அவருக்குத் தெளிவூட்டுங்கள். நன்றி!
  19. 😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.
  20. உண்மையிலேயே இது நடந்து தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் யாரோ அமெரிக்க அதிகாரியிடம் (றொபர்ட் பிளேக் அல்லது தென்னாசிய வெளியுறவு இணைச் செயலாளராக இருக்கலாம்) "யுத்தத்தை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள்" என்று ஒரு தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பில் கேட்ட போது "புலிகளை மக்களை வெளியேற அனுமதிக்க நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனப் பதில் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு "நீங்கள் எங்களுக்கு Hobson's choice தந்திருக்கிறீர்கள்" என்று அந்த தமிழ் பிரதிநிதிகள் கூறியதாக நினைவில் இருக்கிறது. Hobson's choice: ஒரேயொரு தெரிவு மட்டும் இருக்கும் போது பல தெரிவுகள் இருப்பது போல தெரியும் மாய நிலை - an illusion of choices.
  21. ஒரு சொற்பிரயோகம் இருக்கிறது: "தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் சேதம்- self-inflicted injury". அதைத் தான் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விபரிப்பின் படி வன்னித் தலைமையின் சிந்தனை "மக்கள் போகாமல் தடுத்துப் பார்ப்போம், சிங்களவன் - எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே- மக்கள் மீது குண்டு போட்டுப் பேரழிவை ஏற்படுத்துவான். அந்த நேரம் தெற்கில் இருக்கும் கூட்டமைப்பை இதைப் பகிரங்கப் படுத்தி சிங்களவனை யுத்தத்தை நிறுத்த நிர்ப்பந்திப்போம்" இதையா பேசி வைத்த திட்டம் என்கிறீர்கள்? இதில், இந்த "தடுத்தல்" என்ற முதல்படியை, முடிவை எடுத்திருக்கா விட்டால் இழப்பு இன்னும் குறைந்திருக்குமே? சிம்பிள் கணக்கு. தடுத்து வைக்கும் முதல் முடிவை - நீங்கள் சொல்வது போல திட்டமிட்டு - எடுத்த தரப்பை எவ்வளவு ஆக்ரோஷமாக நீங்கள் திட்ட வேண்டும் நியாயப் படி?
  22. கொழும்பு செய்திகள் பல "State Patronage" ஓடு சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் நடக்கவிருப்பதாகச் சொல்கின்றன. ஆனால், எடின்பரோவிலும், தாயகத்தில் குட்டிச் சுவரிலும் இருந்து வெளிவரும் "நம்பகமான😎" முகநூல் செய்திகள் தூக்க ஆளில்லாமல் விமானப்படை தூக்கி வந்தது என்று எழுதினால், இங்கே நம்பிக் குதூகலிக்கும் நிலையில் வாசகர்கள் இருக்கிறார்கள். "அரச ஆதரவு" என்றால் மரியாதை நிமித்தம் படையினர் தான் தூக்குவர். சம்பந்தர் என்ன தான் செத்தால் உடனே தீக்குளிக்கும் தமிழ் நாட்டு பாணி தொண்டர் படைக் கட்சியா நடத்தினார் "தொண்டர்கள்" வந்து மாரில் அடித்து அழ?
  23. ஆனால், "ஆம்/இல்லை" என்று பதில் தரக்கூடிய "தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?" என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, உங்களுடைய கணிப்பு, ஏதோ ஒரு தரப்பிற்கு வெள்ளைப் பெயின்ற் அடிக்க நீங்களே உருவாக்கி வைத்திருக்கும் கற்பிதம் மட்டுமே என்பது என் அபிப்பிராயம்!
  24. என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும் இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.