Everything posted by Justin
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
கார்பன் வயது கணிப்பைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலதிக தகவலுக்காக கீழே இருக்கும் கட்டுரையை வாசிக்கலாம். University of Chicago NewsCarbon-14 dating, explainedFirst developed in the late 1940s at UChicago, carbon dating can determine the age of organic materials as old as 60,000 years. ஆனால் சுருக்கமாக இது தான் காபன் திகதி கணித்தல்: 1. காபன் 14 (C14) என்கிற மூலக்கூறு கதிரியக்கத்தை வெளியிடும். எனவே, ஒரு மாதிரியில் இருக்கும் காபன் 14 இன் அளவை கதிரியக்கத்தை அளக்கும் கருவிகள் கொண்டு அளக்கலாம். 2. ஒரு உயிர் சுவாசிக்காமல் விட்ட கணத்தில், அதனுள் காபன் 14 புதிதாகச் சேர்வதும் நின்று விடும். 3. இறந்த அந்த உயிரியின் உடலில் அது வரை சேர்ந்த காபன் 14 மெதுவாக அழிய ஆரம்பிக்கும் (decay). இந்த அழிவு எவ்வளவு மெதுவாக நிகழும்? காபன் 14 இனைப் பொறுத்த வரை அதன் அரைவாசி அழிவடைய ~5,700 ஆண்டுகள் எடுக்கும். இதனை காபன் 14 இன் அரை வாழ்வுக் காலம் (half-life) என்பார்கள். 4. இவ்வளவு மெதுவாக அழிவடையும் காபன் 14 இனை வைத்துக் கொண்டு மிக அண்மையில் (1990 என்று வைத்துக் கொண்டாலும்) இறந்த உடல் எச்சங்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமானது. எனவே, சாதாரணமாக காபன் 14 வயது கணித்தல் சில நூறு ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரையான வயதைக் கணிப்பதற்கே பயன்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும், காபன் 14 இனை வித்தியாசமாகப் பயன்படுத்தி 1980 இல் இறந்த உடல்களின் வயதைக் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை கீழே இருக்கிறது. https://www.science.org/doi/10.1126/science.321.5895.1434 ஆனால், இந்த முறை இலங்கையில் இருந்து எடுக்கப் படும் உடல்களில் பயன்படுத்தக் கூடியதா என்பது இன்னும் தெரியாது.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
வணங்காமுடி சொன்னது விஞ்ஞான ரீதியில் சரியான தகவல் தான். பொய்யல்ல. புகையிலைப் பயிர் நிலத்தின் பல போசணைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் உறிஞ்சி நிலத்தைச் சக்கையாக்கி விடும் ஒரு பயிர். இதனைப் பணத்திற்காக விரைவில் வளர்க்க, மேலும் களை நீக்கிகளும், அசேதன உரங்களும் போடுவார்கள். இதனால், புகையிலைத் தோட்டத்திற்கு அயல் நிலங்கள் கூட மாசடையும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. கீழே இருக்கும் கட்டுரையில், புகையிலையைப் பணப்பயிராக வளர்க்கும் சிறிய நாடுகளில் உணவுப் பயிர்களுக்கான நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4669730/ ஆரோக்கியமான பயிர்களை விளைவித்து உள்ளூர் மக்களின் பசியை நீக்குவதை விட்டு விட்டு புகையிலையைப் பயிரிட்டு, பெரும் விலைக்கு விற்று, பல ஆயிரம் பேருக்கு புற்று நோயைக் கொடுத்து, பின்னர் வெளிநாட்டில் இருந்து அரிசியும், உணவுகளும் இறக்குவது எவ்வளவு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.
-
வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்
சுக்ரோசு (sucrose) என்பது நாம் கரும்பில் இருந்து எடுக்கும் சீனியில் (sugar) இருப்பது. இந்த சுக்ரோசில் ஒரு குளுக்கோஸும் (glucose) ஒரு பிரக்ரோசும் (fructose) இருக்கும். உணவுக் கால்வாயில் சுக்ரோசு குளுக்கோசாகவும், பிரக்ரோசாகவும் உடைத்துத் தான் உடல் உறிஞ்சிக் கொள்ளும். குளூக்கோசை உடல் கலங்கள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளும். பிரக்ரோசை ஈரல் மட்டும் பயன் படுத்திக் கொள்ளும். ஈரல், பிரக்ரோசைப் பயன்படுத்தி கொழுப்பை உற்பத்தி செய்து தன்னிடம் சேமித்துக் கொள்ளும், சில சந்தர்ப்பங்களில் இரத்தம் வழியாக ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கும். இப்போது இதை யோசித்துப் பாருங்கள்: சீனியை அதிகம் எடுத்துக் கொண்டால், சுகர் வருத்தம் எனப்படும் நீரிழிவு உருவாக சீனியில் இருக்கும் குளூக்கோஸ் முதன்மைக் காரணமாக இருக்கிறது. ஆனால், சீனியில் இருக்கும் பிரக்ரோசு கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவுக்கு துணைக் காரணமாகவும், உடல் பருமன் அதிகரிப்பிற்கு (obesity) முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது. எனவே, பிரக்ரோசு "தீங்கற்றது" என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆனால்: பழங்களில் இருக்கும் பிரக்ரோசை எடுத்துக் கொள்ளும் போது, அது நார்த்தன்மையோடு சேர்ந்து உள்ளெடுக்கப் படுவதால், குடலின் ஊடாக மெதுவாக நகர்ந்து செல்லும். உடலினுள் உறிஞ்சப் படும் வேகமும் குறைவாக இருக்கும். இதனால் பழங்களில் இருந்து கிடைக்கும் பிரக்ரோசு அளவாக எடுக்கப் படும் போது தீங்குகள் குறைவு. அளவாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
இந்த நபர்களுக்கு இருக்கும் "வியாதி" (உங்கள் வார்த்தை, என்னுடையதல்ல😎) குணமாகி விட்டதா? இல்லையல்லவா? பிறகேன் அதைச் சுட்டிக் காட்டுபவனை "வியாதிக் காரர்" என்கிறீர்கள்? சில நாட்கள் முன்பு நல்லூர் சுற்றாடல் பற்றிய திரியில் கூட வியாதி சாதுவாக வெளிப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் சாக்கினுள் கூட்டி மறைத்து விட்டு, கள்ள மௌனம் காத்த படி "ஒற்றுமைக்காக" உழைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க எனக்கு உரிமை இருக்கிறது.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இந்தத் தகவலை ஆங்கில பிபிசி தளத்தில் பார்த்த பின்னர் தான் கிருபனின் வீடியோ பார்த்தேன். ஒரு விமானம் மேலெழும் போது மிக முக்கியமான பகுதியாக இந்த மடிப்பு என்கிற flaps இருப்பதால், ஓடு பாதையில் ஓடுவதற்குத் தரித்து நிற்கும் வேளையில் இந்த மடிப்புகளை இயக்கிச் சரி பார்ப்பார்கள். விமானப் பயணங்களில், இறக்கை மட்டத்திற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இந்த மடிப்பின் இயக்கங்கள் தெளிவாகத் தெரியும். மேலெழும் விமானத்திற்கு ஒரு முக்கியமான சவால் stalling எனப்படும் "ஏறா நிலை". வேகமாக ஓடி மேலெழும் போது, பூமியின் ஈர்ப்பு விசையை விமானத்திற்குக் கிடைக்கும் மேலுதைப்பினால் மேவ முடியாவிட்டால் விமானம் stall ஆகி , தொப்பென்று விழும். இந்த stalling மிக உயரத்தில் நிகழ்ந்தால், சமாளித்து விமானம் விழாமல் தடுப்பது இலகு. விமானிகளுக்கு இதைச் செய்யும் பயிற்சி இருக்கிறது. ஆனால், தரைக்கு மிக அருகில் விமானம் stall ஆனால், சமாளிப்பது இயலாத காரியம்.
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
நீங்கள் எழுதுவதே உங்களுக்கு நினைவில் இருக்காது போல😂? தமிழ் நாடு சென்று ஸ்ராலினுடன் சுமந்திரன் செல்பி எடுத்துப் போட்ட திரியில், போலித் தகவல்களின் பின் சென்று நீங்கள் எழுதியவற்றை மீளச் சென்று பாருங்கள். அங்கேயே உங்கள் "சுமந்திரன் லவ்" வெளிப்பட்டிருக்கிறது. சுமந்திரனையும், மேலதிகமாக சாணக்கியனையும் சில யாழ் கள லவ்வர்ஸ் வெறுப்பதே மதத்தின் அடிப்படையில் என்பது நேரடியாகவே வெளிப்பட்ட திரிகளில் ரொம்ப "பொறுப்போடு நீங்கள் கடந்து போனதை" யாவரும் அறிவர்! அந்தப் பொறுப்புணர்வு (?) 😎 என்னிடம் இல்லை!
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
பிபிசியில் தகவலைப் பார்த்த பின்னர், கிருபன் மேலே இணைத்த காணொலியைப் பார்த்தால், விமான இறக்கைகளின் flaps பகுதி இறக்கைகளோடு ஒரே தளத்தில் இருப்பது தெரிகிறது. விமானங்கள் மேலெழும் போது, இறக்கைகளின் பின் ஓரத்தில் இருக்கும் flaps நன்கு கீழிறங்கி இருக்கும். இதனால், மேலுதைப்பு உருவாகி விமானம் இலகுவாக மேலே எழ உதவும். இது நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் ஒரு சிறந்த பிரயோக உதாரணம். ஏதோ காரணத்தால், இந்த விமானத்தில் விமானம் ஏறிக் கொண்டிருக்கும் போதே flaps பழைய நிலைக்கு மீண்டு விட்டது. பாரிய விமானங்களில் ஒரு 3000 அடிகள் உயரம் போகும் வரை flaps பழைய நிலைக்குத் திரும்பாது. இதன் பௌதீகவியலை விளக்கும் ஒரு காணொலி:
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
கஜேந்திரகுமார் தன் பரம்பரைப் பெருமையை (legacy) நிலை நாட்ட பா.உ வாக வந்தவர் என்பது என் அபிப்பிராயம். ஆனால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும், தேர்தலில் தோற்க வேண்டும் என்று நான் எங்காவது எழுதியிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள். அவரையும் தாயக தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வழி உண்டு என்று தான் சில இடங்களில் எழுதியிருக்கிறேன். நீங்களும், ஏனைய சுமந்திரன் லவ்வர்சும் அப்படியல்லவே? உங்களுக்கு சுமந்திரன் ஒரு குறிப்பிட்ட "விக்கிரகத்தை" தலையில் சுமக்கவில்லை என்ற கோபம் மட்டுமே அவரை அகற்றுவதற்குப் போதுமாக இருக்கிறது😂. சிலருக்கு அவரது பேச்சுப் பிடிக்கவில்லை. ஒரு சிலருக்கு அவர் கிறிஸ்தவராக இருப்பது பிடிக்கவில்லை. இப்படிப் பல காரணங்கள் சுமந்திரன் லவ்வர்சுக்கு! தாயக தமிழர்களுக்கு எது நன்மை என்ற அக்கறை இந்தக் காரணங்கள் எதிலும் இல்லை!
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
விசித்திரமான ஒரு வியாதி தான் இந்த "சுமந்திரன் லவ்வர்சுக்கு" வந்திருப்பது. மண்டையன் குழுவை வழி நடத்தியவரை ஏற்றுக் கொள்வார்கள். ஏற்கனவே பார் இருந்த பெண்ணுக்கு இன்னொரு பார் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்த விக்கி ஐயாவை ஏற்றுக் கொள்வார்கள். "நான் பார் லைசென்ஸ் எடுத்துக் கொடுக்கவில்லை" என்று ஒரு வரியில் ஒப்புக் கொள்ள முடியாமல் வெட்டியோடும் சிறிதரனையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், "ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைக்கவில்லை" என்று சொன்ன சுமந்திரனை ஒதுக்க தலையால் கிடங்கு கிண்டுவார்கள். கிடங்கு கிண்டுவோர் அனேகம் பேர் யார் என்று பார்த்தால், "ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்" என்று சொல்லி விட்டு, தாயகத்தில் வசிக்காமல் புலத்தில் அடைக்கலம் தேடிய "வீர தீரர்" களாக இருப்பர்😂!
-
யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது
சாவகச்சேரியில் இந்த முஸ்லிம் நபர் மட்டும் இல்லா விட்டால், நாத்தமே இருக்காது என்கிறீர்களா? ஆமி விற்கிறான், பொலிஸ் பிடிக்காமல் விடுகிறான், முஸ்லிம் வியாபாரியும் விற்கிறார். எங்கள் தமிழ் பொடியள் பாவம் பால்குடிகள்😂!
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
தமிழ் நாட்டின் 5 இடங்களில் இருந்து எடுக்கப் பட்ட சான்றுகளின் வயதுக் கணிப்பின் படி, இரும்புப் பாவனை 5000 வருடங்கள் முன்பு ஆரம்பித்ததாக அண்மையில் தகவல் வெளியிடப் பட்டது உண்மை. இதைப் பற்றிய பிபிசி கட்டுரை கீழே. Earliest iron use found in India...Earliest iron use found in India? Tamil Nadu digs spark d...Tamil Nadu’s iron artefacts may predate Turkey's Anatolia, reshaping early Iron Age history. ஆனால், இந்த உண்மையான ஆய்வுக் கண்டு பிடிப்பை "தமிழ் நாட்டில் தான் மனித இனமே தோன்றியது" என்று வியாக்கியானம் செய்வது தொல்லியலாளர்கள் அல்ல, திராவிட - தமிழ் என்று பிரிப்பரசியல் செய்யும் முகநூல் பதிவர்கள் தான் இந்தத் திரிப்பைச் செய்கிறார்கள். அந்த பிபிசி கட்டுரையிலேயே ஒரு தொல்லியலாளர் இப்படிச் சொல்லியிருக்கிறார்: "..Parth R Chauhan, a professor of archaeology at the Indian Institute of Science Education and Research (ISSER), urges caution before drawing broad conclusions. He believes that iron technology likely emerged "independently in multiple regions".
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
என்ன இப்பிடிக் கேட்டு விட்டீர்கள்? "பேச்சுக்கு "ஸ்" போட்டு speech வந்தது, "பேரீடு என்பதில் இருந்து தான் எகிப்தின் பிரமிட் வந்தது" என்று அவர்களும் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடித்தபடி தான் இருக்கிறார்கள்😎?
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
தமிழ் நாட்டில் 5000 ஆண்டுகள் முன்னர் இரும்பு பாவனை இருந்தால், தமிழ் நாட்டில் இருந்து தான் நவீன மனிதர்கள் உருவாகி வடக்கே போனார்கள் என்பதை நிரூபிப்பதாகுமா? எப்படி? ஆதி மனிதர்களின் கண்டு பிடிப்புகளில் பல ஒரே காலத்தில், அல்லது சிறிது கால இடைவெளிகளில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பு முதல், சக்கரம் வரை இப்படியாக உதாரணங்கள் இருக்கும் போது, தென்னிந்தியாவின் இரும்புப் பாவனை Out of Asia தியரியை நிறுவப் போதுமானதா?
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
இந்த வழி முறைகள் இன்னும் தாயகத்தில் வேலை செய்கின்றனவா என்று அறிய ஆவல். 90 களின் ஆரம்பத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் எச்.ஐ.வி தொற்று யாழ் மருத்துவ மனையில் இரு நபர்களில் அடையாளம் காணப் பட்டது. உடனே, பொதுச் சுகாதார அதிகாரிகள் (PHI) யாழ் பாடசாலைகளில் இது பற்றிய கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களை அறிவூட்டிய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் கருத்தரங்குகளால், பல இளையோர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என நம்புகிறேன் (யாழ் கோட்டையின் சுற்றாடலின் காடு மண்டிய இடங்கள் இரகசிய காதல் மையங்களாகவும், ஓர் பால் உறவைப் பரீட்சித்துப் பார்க்க எண்ணிய ஆண்களாலும் நிரம்பிய காலங்கள் அவை).
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
இப்படியான அரசியல் கலந்த மடை மாற்றல்களால் பல பிரச்சினைகளுக்கன தீர்வுகளை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருக்கிறோம். வடக்கின் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சில சமயம் நிற்காமல் போய் தமிழர்கள் பலியான போதும் "இது அரசின் திட்டமிட்ட இன அழிப்பு" என்று வாதிட்டவர்கள் இருக்கிறார்கள். போக்கு வரத்து விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் படி மக்களை ஊக்குவிப்பதே தீர்வு என்று இருக்கும் போது, "இல்லை, அரசு பாதுகாப்பான கேற் போட வேண்டும்" என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் இருக்கும் ரயில் கடவைகளில் கதவு போட்டு, திறந்து மூட ஆள் கூலிக்கு வைப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று யோசிக்க மாட்டார்கள். அதே போலத் தான் இதுவும். சிங்கள இராணுவம் போதை வஸ்து விற்பதும், ஊழல் காவல் துறை காணாதது போல இருப்பதும் உண்மையாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட, நாம் தான் எங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்து, போதைக்கு அடிமையானால் காலம் கடக்க முதல் சிகிச்சையும் வழங்க வேண்டும். இவையிரண்டையும் தூர வைத்து விட்டு, "ஐயோ சிங்களம் சதி செய்யுது" என்றால் என்ன பயன்? சிங்களம் உடனே வெட்கப் பட்டு நிறுத்தி விடுமா😂?
-
சுய அறிமுகம் பற்றி
இது ஏதோ ஆங்கிலத்தில் இருக்கும் சுயவிபரத்தை மொழிபெயர்ப்பு செயலி மூலம் தமிழுக்கு மாற்றியது போல தெரிகிறதே?
-
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
பில்லியன்களில் வருட வருமானம் பெறும் மஸ்க், தன்னுடைய முதல் 3 மாதங்களில், வேலையைப் பறித்துத் தெருவில் விட்ட அரச ஊழியர்கள் மாதாந்த வேதனத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மத்திய தர வகுப்பினர். இத்தகைய "ஆன்மா இல்லாத சதைக் கோளமான" எலான் மஸ்க்கை, தீவிர ட்ரம்ப் ஆதரவாளர்கள் "ஒரு கை" பார்ப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை😎! ஆனால், ரெஸ்லா வாகனம் வைத்திருக்கும் ஆட்கள் கதி தான் கவலை தருகிறது. இது வரை தீவிர இடது சாரிகள் மட்டும் கொழுத்தினார்கள். இனி அவர்களை விட மோசமான வெள்ளையின வலதுசாரிகளும் சேர்ந்து கொழுத்தப் போகிறார்கள். கனடாவிற்கும் தப்பிப் போக முடியாது! அங்கேயும் நொருக்குவார்கள்😂!
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
இது ஒரு புலத்தில் இருந்து சென்ற நபரின் கட்டுரை. மேலே யாயினியும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, உள்ளூர் பயனர்களை விட வெளிநாட்டுப் பயனர்களை வித்தியாசமாகக் கவனிக்கிறார்கள் என்ற என் எண்ணம் வலுப்படுகிறது. வடக்கின் ஒரு அரச மருத்துவ மனையில் தந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த வேளையில் என் அனுபவமும் இப்படித் தான் இருந்தது. "மகன் வெளிநாட்டில் இருந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் டொக்ரர்" (நான் என்ன செய்கிறேன் என்றே என் சிறிலங்கா உறவுகளுக்குத் தெளிவில்லை😂) இப்படி முதல் இரு நாளும் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்த ஒரு மருத்துவ நண்பர் மூலமாக நிலைமையை விசாரிக்க வைத்தேன். 3 ஆம் நாள் நான் மருத்துவ மனை போய் அப்பாவைப் பார்த்த போது என்னோடு அக்கறையாக அப்பாவின் நிலைமையைப் பற்றி உரையாடினார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அதே வேளை, ஏனைய 6-7 ICU நோயாளிகள் பற்றிய நிலையை அவர்களின் உறவுகளுக்கு கேட்டாலும் தெளிவாகச் சொல்லாமல் நடந்து கொள்வதை அவதானித்தேன். ஒரேயொரு சிங்கள மருத்துவர் மட்டும் எல்லோரோடும் ஒரே விதமாக பண்பாக நடந்து கொண்டார். இளம் மருத்துவர்களாவது எல்லா நோயாளிகள், உறவுகளோடு ஒரே மாதிரிப் பண்பாக நடந்து கொள்ளும் வகையில் பழக்கப் பட வேண்டும். வெளிநாடு, அரச அதிகாரி, விஐபி நோயாளி ஆகியோருக்கு மட்டும் விசேட கவனிப்புகள் கொடுப்பது நல்லதல்ல!
-
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
நேற்று எனக்கு சாப்பிட நேரமில்லாத வேலை பிசியானாலும், மகிழ்ச்சியான நாள்😂. பூசலின் தோற்றுவாய் ட்ரம்பின் செலவைக் கூட்டும் (அதுவும் மில்லியனர்களுக்கு வரியைக் குறைத்து செலவைக் கூட்டும்) சட்ட முன்மொழிவு. இதை செனற் அனுமதித்தால், ட்ரம்ப் உடனே கையெழுத்து வைப்பார். ஜூலை 4 இற்கு முன்னர் இதைச் செய்வது ட்ரம்பின் திட்டம். நேற்று மஸ்க் தெரிவித்த ஒரு கருத்து, "ட்ரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகள் தான் பதவியில் இருப்பார், நான் இங்கே 40+ ஆண்டுகள் இருக்கப் போகிறேன்" - இதைப் பார்த்த சிவப்புக் கட்சி செனரர்களுக்கு வயிற்றில் புளி கரைந்திருக்கும். ஏனெனில், மஸ்க்கின் பண உதவியில்லாமல் அவர்கள் தேர்தலில் வெல்வது கடினம். வீம்பிற்கு மஸ்க் எதிர் தரப்பிற்கு பண ஆதரவைக் கொடுத்தால், சவால் இன்னும் கூடும். என் ஆசை: தன் கொள்கை எதிரிகளைக் கையாள்வது போலவே சட்டத்திற்கு வெளியால் ட்ரம்ப் மஸ்க்கை அடக்க முயல வேண்டும். தென்னாபிரிக்காவிற்கே திருப்பி அனுப்பி விட்டாலும் பரவாயில்லை!
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
👇"மருத்துவ சோதிடம் - Medical Astrology " என்ற துறையில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் போட்டிருக்கிறார். ஆனால் "மருத்துவ சோதிடம்" என்ற துறையே மருத்துவத்திலோ, விஞ்ஞானத்திலோ ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை (இப்படி செயற்கை நுண்ணறிவு சொல்கிறது). செயற்கை நுண்ணறிவு இப்படிச் சொல்லாமலே, இது கஞ்சா கப்சா என்று முனைவர் பட்ட ஆய்வு பற்றிப் பரிச்சயம் உள்ளோர் எவரும் உடனே கண்டு பிடித்து விடுவர். இதெல்லாம் எடு கோள் எடுத்து ஆராய இயலாத விடயம். நீங்கள் குறிப்பிட்ட பல்கலைகள் எந்த சோதிடருக்காவது முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறதாமா? "தமிழர் வாழ்வில் சோதிடத்தின் பங்கு" என்று ஒருவர் சமூகவியல் ஆய்வு செய்தால் , அது "சோதிடத்தில் முனைவர் பட்டம்" என்று கொள்ளப் பட வும் முடியாது. "சமூகவியல் முனைவர் பட்டம்" என்று தான் எடுத்துக் கொள்ளப் படும். சுருக்கமாக, சோதிடர் ஒருவர் தனக்கு சோதிடத்தில் PhD இருக்கிறது என்று சொன்னால், அதை "permanent head damage" 😎என்று எடுத்துக் கொண்டு நகர்ந்து விடலாம்!
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
"செவ்வாய் தோஷம்" என்று திருமணங்களைத் தாமதமாக்குதல், அல்லது சாதகத்தை முன்னிலைப் படுத்தி வெறும் பயலுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தல், இது போன்ற துன்பகரமான பின் விளைவுகளும் இருக்கின்றன. இவற்றைக் கடந்து போகாமல், ஏறி மிதித்து விட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து!
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இந்த திரியின் மூலக் கட்டுரையே சோதிடம், சாதகம் பொய் என்று விஞ்ஞான முறைமையால் நர்லிகர் நிரூபித்திருக்கிறார் என்பதைப் பற்றியது தான். அதை வாசிக்காமல் கடந்து வந்து இப்படி கேட்கிறீர்கள்😂?
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
சோதிடத்தில் முனைவர் பட்டம் இருப்பதாக இன்று தான் அறிகிறேன். எந்த உயர் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது?
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
கோசானே எழுதி விட்டார் பல விடயங்களை. மேலதிகமாக, இராணுவத்திடம் இருந்தது போன்ற பார வாகனங்கள் முதல் கொண்டு, தாங்கிகள் , பீரங்கிகளை எப்படி ஒரு தடை செய்த அமைப்பு சந்தையில் வாங்கியிருக்க முடியும்? வாங்கினாலும் எப்படி சமுத்திரங்களூடாகக் கொண்டு வந்திருக்க முடியும்? நீங்கள் புலிகள் அமைப்பின் உள் நிலைமைகள் தெரிந்த ஒருவராக இருந்தவர், இப்படியாக எங்கே பலவீனம் இருந்தது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து, உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கைவிடப் பட்ட ஆயுதங்கள் சட்ட விரோத ஆயுதக் கடத்தல் காரர்களிடம் மாட்டிக் கொண்ட பின்னர் தான், புலிகளுக்கு ஆயுதங்கள் சர்வதேசச் சந்தையில் இலகுவாகக் கிடைக்க ஆரம்பித்தன என ஊகிக்கிறேன். இத்தகைய சோவியத் ஆயுதங்களை, கைவிடப் பட்ட அன்ரனோவ் சரக்கு விமானங்களில் கூலிக்கு விமானிகளை வைத்து உலகம் முழுவதும் கடத்திய ரஷ்யர் Victor Bout, அண்மையில் தான் அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். கிழக்கு, தெற்கு ஆசியாவிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
முதலில் ஒப்பந்தங்களில் "எழுதாத" விடயங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த மீறலைக் கண்டறியும் "தங்க மலை இரகசியத்தைச் சொல்லி விட்டு, மற்றவர்களுக்கு தெனாலி கதை சொல்லுங்கள்😂. வரலாற்று நூல் என்றால் நான் மார்க்கோ போலோ எழுதிய வரலாற்றைச் சொல்லவில்லை. 1991 இல் ரஷ்யா உடைந்த கதை 2010 இல் வரலாறாக வெளி வந்திருக்கிறது (இதை 1992 இல் ராணி கொமிக்ஸ் போல யாரும் எழுதியுமிருக்கலாம், ஆனால் அதை யாரும் சீரியசான வரலாறாகக் கற்பதில்லை). நான் முன்னரே சொன்னது போல, உங்களுக்கு வாசிப்பு மிகவும் குறைவு. ஆனால், வாசிக்காத, இல்லாத விடயங்களை வைத்துக் கொண்டு பெட்டி, கடகம், பாய் என்று பின்னும் திறன் அதீதம்😎!