Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. இருவரும் "படம், படம்" என்கிறீர்கள், ஆனால் படமெதையும் காணவில்லை? இதுவும் "வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்காமல் பின்கதவு வழியாக ஓடினார்" என்று நீங்கள் விட்ட கரடி போல ஒன்றா அல்லது உண்மையிலேயே ஒரு "படம்" இருக்கிறதா😎?
  2. இது இந்த மருத்துவ சேவை நிலையத்தின் ஒரு பாரதூரமான குறைபாடாக தெரிகிறது. எக்ஸ் கதிர்கள் பயன்படும் அறை, காந்தப் புலம் பயன்படும் எம்.ஆர்.ஐ அறை என்பன பயன்பாட்டில் இருக்கும் போது உள்ளே யாரும் நுழைய முடியாதபடி கதவு பூட்டப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக தொழில் நுட்பவியலாளரின் வேலை பறி போகும்.
  3. GDP படி பார்த்தால் இந்தப் பட்டியல் சரி. நான்காவது நிரலில் இருக்கும் GDP per capita படி பார்த்தால், சுவிஸ் முதலாமிடம், நோர்வே மூன்றாமிடம் (அமெரிக்காவிற்கு அடுத்து). கடஞ்சா சொல்வது போல இது ஒரு பரிமாணத்தை மட்டும் காட்டும் ஒரு அளவீடு. ஒரு தேசத்தின் பல பரிமாணங்களைக் கருதி எடுக்கப் படும் அளவீடு மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) எனப்படுகிறது. HDI படி பார்த்தால், முதலிடம் ஐஸ்லாந்து, அமெரிக்காவிற்குப் 17 வது இடம். இந்தியா 130 வது இடம், இலங்கையின் 89 வது இடத்திலும் கீழே தான் இந்தியா😂! https://hdr.undp.org/data-center/country-insights#/ranks
  4. வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!
  5. பாராட்டுக்கள்! ஆனால் இது ஏன் ஆதவன் செய்தியாக வருமளவு அதிசயமென எனக்கு விளங்கவில்லை! ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ😂? நான் அறிந்த வரையில், பல ஆண்டுகளாக சில ஈழத்தமிழர்கள் பாரிய தாரை (jet) இயந்திரங்களைக் கொண்ட பயணிகள்/சரக்கு விமானங்களை இயக்கும் கப்ரன் தர விமானிகளாக இருந்து வருகிறார்கள். கேணல் சங்கர், கனடா எயார் இல் சரக்கு விமானங்களை இயக்கிய ஒரு கப்ரன் என நினைக்கிறேன். இந்த தம்பி பெற்றிருப்பது, பயிர்களுக்கு மருந்தடிக்கும் (dusting) சிறிய விமானங்களை அவை ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தால் இயக்கும் அனுமதிப் பத்திரம். இந்த லைசென்சை வைத்துக் கொண்டு சில பயணிகள் விமான சேவைகள் இன்னும் பயன்படுத்தும் turboprop விமானங்களையும் இயக்க முடியாது. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்று விளங்கவில்லை!
  6. எனக்கும் வவுனியாவில் தான் முதன் முதலில் சலக்கடுப்பு என்றால் என்னவென்று அனுபவம் வந்தது. அதற்கு முதல் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் காட்டு வெய்யிலில் சைக்கிளில் நாளாந்தம் அலைந்திருக்கிறேன். எதுவும் வரவில்லை. ஆனால், இந்த கொதித்தாறிய நீர் எப்படி சலக்கடுப்பை தடுக்கிறதென தெரியவில்லை, அல்லது உண்மையில் தடுக்குமா என்றும் தெரியவில்லை. ஈகோலையையும், ஏனைய பக்ரீரியாக்களையும் அழிப்பது இலகு. குளோரின் ஒரு வழி, கொதிக்க வைப்பது இன்னொரு வழி.
  7. சீமானைச் சந்தித்தால் தலை கட்டாயம் சுத்தும்! இந்தப் பின்விளைவுக்குப் பயந்து தான், மூளையை off செய்து விட்டு பின்னால் செல்லும் ஆட்கள் மட்டும் சீமானைச் சுற்றி இருக்கிறார்கள்😎!
  8. "தந்தை பெயரற்ற குழந்தை முறை" 😂 அதென்ன "முறை"? அரசாங்கம் செயற்கை முறை மூலம் பெண்களைக் கருவுறச் செய்யும் முறையா அல்லது பொஸ்னியாவில் போர்க்காலத்தில் சேர்பியர்கள் செய்தது போல பெண்களை சிறைப் பிடித்து, கட்டாயமாக கருவுறச் செய்த பின்னர் வெளியே விடும் முறையா? சமூகத்தில் தந்தையின் அடையாளம் தெரியாத குழந்தைகள் அல்லது ரசோதரன் மேலே சொல்லியிருப்பது போன்ற முறைகளில் வரும் குழந்தைகளுக்கு தந்தையின் பெயர் தேவையில்லாமல் ஆவணங்கள் கொடுப்பது இலங்கை சமூகத்திற்கு அவசியமில்லை என்கிறீர்களா? உங்களிடம் இருப்பது பிற்போக்குத் தனம் மட்டுமல்ல! ஊர் உலகத்தில் நிகழ்பவை பற்றித் தெரியாத அல்லது தெரிந்தும் அக்கறையில்லாத அலட்சியமும் நிறைந்திருக்கிறது!
  9. மிகவும் பிற்போக்குத் தனமான, முன் யோசனையற்ற ஒரு கருத்து இது. தந்தையின் பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலைமைகள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. இதில் பிறக்கும் பிள்ளைக்கு பல சமூக, வேலை வாய்ப்பு நிலை, சில சமயம் குடிவரவு நிலைகளில் கூட சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காகத் தான் தந்தை பெயரை optional ஆக மாற்றும் தீர்வு. தாயகத்திலும், புலத்திலும் தனியே தாயினால் வளர்க்கப் பட்டு சிறப்பாக வாழும் பிள்ளைகளை நீங்கள் இது வரை கண்டதேயில்லைப் போல!
  10. நீர் உவராதல், சலக்கடுப்பு/சிறு நீர் கடுப்பு, கிணற்று நீரின் குடிக்கும் தகுதி, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். நீர் உவராதல் என்பது கடல் நீரின்/பாறைகளின் உவர்த்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக நன்னீர் நிலைகள், கிணறுகளுக்குள் பரவுதல். இது இலங்கை போன்ற சிறிய தீவுகளில், கடலுக்கு அண்மையில் இருக்கும் நீர் நிலைகளில் நிகழக் கூடியது. இது நிகழும் வேகம் மட்டுமே வேறுபடும். உதாரணமாக, உள்நாட்டு யுத்த காலத்தில் எரிபொருள் தட்டுப் பாட்டினால் வடக்கில் கிணறுகளை இறைக்கும் செயல்பாடுகள் குறைவாக இருந்தமையால், அந்தக் காலப்பகுதியில் ஒரு அவகாசம் ஏற்பட்டு நீர் உவராதல் தாமதமாகி இருக்கலாம். இப்போது அந்த வேகம் அதிகரித்திருக்கலாம். இதை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தள்ளிப் போடலாம், முற்றாக இல்லாமலாக்க இயலாது. சலக்கடுப்பு என்பது எங்கள் உடல் நீரைச் சேமித்து முக்கிய தேவைகளுக்காக பத்திரப் படுத்தும் போது, சிறு நீர் வெளியேறும் அளவு குறைவதால் சிறு நீர் வெளியேற்றும் பாதைகளில் ஏற்படும் வலி. இது நீரிழப்பின் (dehydration) ஒரு தற்காலிக அறிகுறி. இதற்கும் நீரில் இருக்கும் கல்சியத்திற்கும் தொடர்பில்லை. இலகுவான தீர்வு, ஒரு தேக்கரண்டி சீனியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இந்த சீனி கலந்த தண்ணீர், குடல் நீரை உறிஞ்சிக் கொள்ள உதவுவதால் உடல் சாதாரண நிலையை உணர்ந்து சிறு நீரை வெளியேற அனுமதிக்கும். சலக்கடுப்பும் நீங்கும். சலக்கடுப்போடு நீரில் இருக்கும் கல்சியத்திற்குத் தொடர்பில்லா விட்டாலும், குடி நீரில் கல்சியம் இருந்தால் சிறு நீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கல்சியம் அதிகரித்த குடிநீர் தீங்கற்றது என்று சொல்ல முடியாது. ஒரு கிணற்று நீரின் குடிதண்ணீர் தராதரம் அப்படியானால் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? மேற்கத்தைய நாடுகளில் கிணற்று நீர் சில பகுதிகளில் குடிநீராக இருக்கிறது. அங்கே, குடி நீரில் இருக்கும் வயிற்றோட்டம் தரக் கூடிய பற்றீரியாக்களின் அளவு (Coliform count), கல்சியம், புளோரைட் போன்ற கனியுப்புக்களின் அளவு, என்பவற்றுடன் தீங்கு தரும் இரசாயனங்களின் அளவுகளும் பரிசோதிக்கப் படும். இவற்றை எப்படி நாம் சிறி லங்காவில் பயன்படுத்தலாம்? நகரப் பகுதிகளில் கிணற்றிற்கும், septic tank (?) எனப்படும் மலசலக் குழிக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்கிறார்கள். இதனால், நகரக் கிணறுகளின் தண்ணீரை நிச்சயம் Coliform count செய்து தரத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். எங்கள் நாட்டில் பாரிய தொழிற்சாலைகள் இல்லாமல், விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதனால், விவசாய உரங்களில் இருந்து வரும் கழிவுகள், நைற்ரேட் போன்றவை, பரிசோதிக்கப் பட வேண்டும். நகரங்களுக்கு வெளியே இருக்கும் கிணறுகளுக்கு இந்த உரக்கழிவுப் பரிசோதனைகள் முக்கியமாக இருக்கும். எனவே, கிணற்று நீரைக் குடிக்கலாமா என்ற கேள்விக்குப் பதில், வடக்கைப் பொறுத்த வரை 1. பற்றீரியாக்களின் செறிவு. 2. உரக்கழிவின் செறிவு 3. கல்சியத்தின் செறிவு ஆகிய 3 காரணிகளில் தங்கியிருக்கும் ஒரு பதில்.
  11. உண்மை மதங்கள் அவசியமில்லை. சரி பிழை கண்டு பிடித்து அதற்கேற்ப செயல்பட வைக்கும் அறத்திசை காட்டி (moral compass) பலமாக இருந்தால் போதும் என்பது என் அபிப்பிராயம். இப்படியான அறத்திசைகாட்டியை, மத அமைப்புகளுக்குள்ளும் ஊக்குவிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்பதன் ஒரு உதாரணமாகத் தான் யேசு சபைக் குருக்களைப் பற்றி எழுதினேன். சில சமயங்களில் மத அமைப்புகளின் உள்ளே இருந்து தான் விடயங்களை மாற்ற வேண்டும். உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.
  12. இந்த லொயோலா கல்லூரி ஒரு கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். கத்தோலிக்க திருச்சபையில், யேசு சபை (Society of Jesus) என்ற ஒரு குருக்கள் சபை இருக்கிறது. இந்த யேசு சபையினரால் நிர்வகிக்கப் படும் பல உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்று தான் லொயொலா கல்லூரி. இந்தச் சபையில் விண்ணப்பிக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அனேகமாக ஒரு உயர் கல்வித் தகுதி இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு துறை சார் நிபுணராகவும் இருக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யேசு சபையில் சேரும் கத்தோலிக்க குருக்கள் முற்போக்காளர்களாக இருப்பர். முன்னாள் போப் பிரான்சிஸ் யேசு சபையைச் சேர்ந்தவர், அவரது முற்போக்கான கொள்கைகளுக்கு இது ஒரு காரணம்.
  13. கதைக்கு நன்றி @ரசோதரன் . கிறிஸ்மஸ் மரமாக இருக்கும் pine, spruce மரங்கள் குளிர்காலத்தில் பனியுறைந்த நாடுகளின் வைக்கிங்குகள் தங்கள் மர வீடுகளில் நறுமணம் வீசுவதற்காக வைக்க ஆரம்பித்து, பின்னர் கிறிஸ்தவ மதம் அவர்களிடம் பரப்பப் பட்ட போது, அதுவே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் மரமாக மாறி விட்டது என்பார்கள். வீட்டில் வைக்க அழகாகத் தான் இருக்கும். ஊரில் நாம் வைக்கும் கிறிஸ்மஸ் மரம் Casuarina என்ற சாதியைச் சேர்ந்தது. கசூரினா (Casuarina) பீச் இந்த கசூரினா சாதி சவுக்கு மரங்களால் அழகு பெற்ற ஒரு இடம். 85, 86 இல் என்று நினைக்கிறேன். மில்க்வைற் கனகராசா அவர்கள் நூறு மில்க்வைற் சவர்க்காரப் பொதிப் பேப்பர்களைச் சேர்த்து அவர்களிடம் மீள ஒப்படைத்தால், ஒரு சவுக்குக் கண்டு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார். நான் 200 சேர்த்துக் கொடுத்து 2 சவுக்குக் கண்டுகள் பெற்றுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரி வீதி ஸ்ரேஷன் வீதிச் சந்தியில் நாம் வாடகைக்கு இருந்த வீட்டின் முற்றத்தில் நாட்டினேன். இரண்டும் கிடு கிடுவென வளர்ந்து வந்தன. பின்னர் நாம் 90 இல் வீட்டை மாற்றிக் கொண்டோம். 2002 இல் நான் போய்ப் பார்த்த போது மரங்கள் இருந்தன. 2012 இல் இரண்டு மரங்களும் காணாமல் போய் விட்டன!
  14. ஆம். நான் யாரும் இறக்கவில்லை என்று எழுதிய போது இந்த தகவல்கள் வெளிவந்திருக்கவில்லை. பொதுவாகவே வெள்ளத்தை நகரங்களில் வசிக்கும் மக்கள் குறைத்து எடை போடுவது வழமை. ஆனால், வேகமாக நகரும் மூன்றடி ஆழ வெள்ளமே ஆளை இழுத்துச் சென்று மீள முடியாத கான்களுக்குள் முடக்கிக் கொன்று விடும் சக்தி வாய்ந்தது. இங்கே நாம் இவ்வளவு கவனமாக இருக்கிறோம். கிளிநொச்சிக் குளம் நிரம்பி உருத்திர புரம், கனகபுரம், ஜெயந்தி நகர் எல்லாம் வீதிகளில் இடுப்பளவு வெள்ளம் ஓடிய ஒரு தருணத்தில் அதற்கூடாக நடந்து போன முட்டாள் தனத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்😂
  15. புலவர், இது உங்கள் ஆதாரம்? "தமிழ் நாட்டின் பால் உற்பத்தி குறைகிறது" என்றல்லவா குறைப்பட்டீர்கள்? அதற்கு ஆதாரமாக "இந்தியா உற்பத்தி செய்யும் பால் மக்களுக்குக் கிடைக்கவில்லை" என்ற ஒரு தகவலை ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு நீங்கள் எழுதியதே உங்களுக்கு மங்கலாகத் தெரிகிறதா😂? சீமான் ரீமிடம் கொடுத்து விட்ட மூளையை உடனே போய் மீட்டு கம்பீரமாக உரையாட ஆரம்பியுங்கள்! ஒவ்வொரு கருத்திலும் புதுப் புது கேள்விகளை உருவாக்காமல், தரவுகளைத் தேடி விட்டு எழுத ஆரம்பியுங்கள்!
  16. விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.
  17. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகள் பரமேஸ்வரன் கோவிலில் சென்று வழிபட்டு திருநீறு அணியக் கூடிய சைவர்களுக்குத் தான் கிடைக்கும். ஏனையோர் குதிரைக் கொம்பு போல அரிது! அதே டிசைனில் முஸ்லிம்களுக்கு என்று உருவான பல்கலை தான் தென்கிழக்குப் பல்கலை. இது இலங்கையில் சாதாரணமான போக்கு. ஆனால், நீங்கள் சொல்வது போல இஸ்லாமியப் பாணி கட்டுபாடுகள் கடுமையென்பது பொய்க்கதை. இலங்கையின் ஏனைய அரச பல்கலைகள் போலவே இங்கேயும் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக சைவக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன இருக்கின்றன.
  18. ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!
  19. ஆனால், மூன்றாவது பெரிய கட்சிக்கு வைப்புத் தொகையே கிடைக்காத ஒற்றையெண் வீதம் அல்லவா வாக்கு வீதம்? அதனால் கருத்துக் கணிப்பில் கூட பெரும்பாலும் உள்ளடக்குவதில்லை என நினைக்கிறேன். அதிருக்கட்டும். அந்த புள்ளி விபரம், பால் உற்பத்தி பற்றி என்ன நிலைவரம்? எஸ்கேப் தானா?
  20. 10 மில்லியன் மக்களை பீடைகளை ஒழிப்பது போல தொழில் நுட்பத்தைப் பாவித்து ஹிற்லர் கொன்றான். அவர்களுள் எத்தனை பேர் யூதர்கள் என்ற காரணத்தால் கொல்லப் பட்டார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?
  21. வாழ்த்துக்கள்! எப்படியும் வென்று வருவீர்கள் என்று தெரியும்.
  22. ஆடு, மாடுகளின் வாய்வை அப்படியே சிறைப்பிடித்துத் தான் நீங்கள் முன்னர் எழுதியது போல "பின்விளைவுகள் இல்லாத இயற்கை உரம்" செய்கிறீர்களா😂? சீமான் தம்பிகள் என்றாலே யோசிக்காமல் ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதைத் தூக்கி நிறுத்த வேறொன்றை எழுதுவது வழமை. வெட்டினால் மொட்டை, வளர்த்தால் கூந்தல் என்ற ரீதியிலான தீர்வை இதற்கு இங்கே யாரும் முன்மொழியவில்லை. அப்படிப் புரிந்து கொள்வது "நிலம் எல்லாம் விவசாய நிலமாகத் தான் இருக்க வேண்டுமென்ற" சீமான் தம்பிகளின் மூளையின் பிரச்சினை! பேச்சு வாக்கில் உங்கள் "நலியும் தமிழக பாலுற்பத்தி" பற்றிய ஆதாரத்தைத் தர மறந்து விடாதீர்கள்! காத்திருக்கிறேன்😎.
  23. உங்களைப் பற்றிப் பேசுகிறீர்களா🤣? அப்படியெல்லாம் ஆட்டு, மாட்டிறைச்சியை "பிடி பிடி"ப்பதைக் குறையுங்கள். கோழி இறைச்சி ஆரோக்கியமானது. பூமி வெப்பாகும் என்ற அக்கறையினால் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நாடி இதைச் செய்ய வேண்டும்!
  24. புலவர் என்பது முற்காலத்தில் "அறிவுடையோர்" 😎என்ற அர்த்தத்தில் பயன்பட்ட ஒரு பெயர். அதை அவதாரப் பெயராக வைத்துக் கொண்டு முட்டாள் போலப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆடு, மாடுகளின் "கழிவில்" இருந்து வரும் மீதேன் அல்ல, அவற்றின் வாயுவில் (eructation) இருந்து வரும் மீதேன் தான் பச்சை வீட்டு விளைவை உருவாக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆறுதலாக வாசித்தீர்களானால், சூரியப் படலங்களை அமைப்பதற்கு மேய்ச்சல் நிலம் எடுக்கப் பட்டால், அது சூழல் மாசடைதலை, பூமி வெப்பமாதலைச் சமாளிக்கும் ஒரு சமன் படுத்தும் செயலாக இருக்கும் என எழுதியிருக்கிறேன். இதன் அர்த்தம், நிலத்தில் இருந்து எடுக்கும் இயற்கை வாயுவையும் குறைக்கலாம் என்பது தான். உலகின் சில பகுதிகளில், போக்குவரத்தினால் உருவாகும் புவி வெப்பமாக்கும் விளைவை விட , ஆடு, மாடு, செம்மறி ஆடுகளால் வெளியிடப் படும் மீதேன் வாயுவினால் ஏற்படும் விளைவு அதிகம் - இது சூழலியல் ஆய்வுகளின் முடிவு, நாதக பாணி அரசியல் பிரச்சாரம் அல்ல! ஏன் அப்படி அதிகமாக இருக்கிறது? உயிர்சுவட்டு எரிபொருளை எரித்து உருவாகும் காபனீரொட்சைட்டை விட, மீதேனின் வெப்பமாக்கும் இயலுமை 6 மடங்கு அதிகம் என்பதே காரணம். வீகன் உணவுப் பழக்கத்தின் ஒரு விஞ்ஞான அடிப்படையும் இந்த தரவு தான்! தமிழ் நாடு என்ன, சிறந்த விவசாய மாநிலமான பஞ்சாப் கூட சீசனலாக பால் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது காலனிலை மாறுதல்களால் சந்தைகளில் கேள்வி கூடிக் குறையும் போது நிகழ்வது. பால் உற்பத்தி தொடர்ந்து வீழச்சியடைவதால் ஏற்படும் நிலை அல்ல! இப்படி பால் உற்பத்தி தமிழ் நாட்டில் குறைகிறது என்பதற்கான புள்ளி விவர ஆதாரம் இருந்தால் இங்கே பகிருங்கள், தொடர்ந்து பேசலாம். யூ ரியூபில் குப்பனும் சுப்பனும் அலட்டுவதை ஆதாரமாக இணைத்து மெனக்கெடாதீர்கள்!
  25. அப்ப கனடாவில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் எப்படி? உங்கள் அணி கிண்ணம் ஏதும் வென்று வந்தீர்களா? என்னையும் இந்த அணியொன்றில் இணைத்து வார இறுதியில் சீரியசாகப் பெண்டு நிமித்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ஒரே நேரத்தில் பல குடும்பங்கள் அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவிற்காக வட கரோலினாவிற்குப் போக வேண்டியதாகி விட்டது! ரீம் காலி😂! பின்னர் வட கரோலினா பற்றி விரிவாக எழுதுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.