Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. 😂 கடைசியில் இப்பிடித் தான் எங்கையாவது ஆப்பு வைப்பாங்கள் மொசாட் காரர். மோதிரத்தை வாங்கிக் கொண்டு போய் டி.என்.ஏயை எடுத்து sequence செய்து, தலைக்கு என்னென்ன நோய் இருக்கெண்டு ஆராய்ச்சி செய்த பின்னர், எடுக்கும் மருந்துகளை இடை மறித்து எதையாவது போட்டு அனுப்பி வைப்பாங்கள். ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு பேஜர் வெடிச்சது போல இருக்கும்! அதுவா முக்கியம் நமக்கு? "புளகாங்கிதம்" தான் முக்கியம்😎!
  2. நல்ல விடயம் தானே? இனி மக்களே போராடி எல்லாவற்றையும் செய்து கொள்ளக் கூடிய ஒரு நிலை வந்திருக்கிறது. காணாமல் போனவர்களின் உறவுகளின் வருடக் கணக்காகத் தொடரும் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய , அமெரிக்க கொடிகளைக் கண்டிருக்கிறேன். இப்படி நேரடியாக மக்களே எல்லாவற்றையும் நிறவேற்ற வேண்டும். அரசியல் பிரதிநிதிகள் பின் சீற்றில் அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கட்டும். பி.கு: பிற்காலத்தில், "மக்கள் போராட்டம் நடத்தினர், ஒரு தமிழ் அரசியல்வாதி கூட எட்டிப் பார்க்கவில்லை" என்று மூக்கால் அழுது முகநூல் காவியம் எழுதும் ஆட்களுக்கும் இது வாய்ப்பாக அமையும்😎!
  3. மம்தானியின் பலஸ்தீன விடுதலை ஆதரவு நிலை, இஸ்ரேல் மீதான விமர்சனம் வைக்கும் துணிவு ஆகியவை பாராட்டுக்குரியவை. ஆனால், அவரது இலவச வீட்டுத் திட்டம், இலவச குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் நியூ யோர்க் நகரில் சாத்தியமற்ற "ஆகாயக் கோட்டைகள்". அனேகமாக இந்த முறை நியூ யோர்க் நகர நிர்வாகம் சிவப்புக் கட்சியிடம் போய் விடும். சாத்தியமில்லாதவற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேர்தல்களைச் சந்திக்கும் நீலக் கட்சியினருக்கு இன்னொரு பாடம் கிடைக்கும் போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  4. இது போன்ற ஈரான் பெண்களுக்கு இருக்கும் சவால்களையும் அனுபவங்களையும் சிறுமை செய்யும் பிரச்சார வீடியோக்கள் பல இருக்கின்றன (அவற்றுள் பல கணணித் திரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு, மிச்ச எல்லாவற்றையும் மறந்து விட்ட இந்திய ஐ.ரி துறை சார்ந்தவர்களால் பரப்பப் படுகின்றன என்றும் அறிவேன்). இதைப் பார்க்கும் மாஷா அமினி போன்ற பெண்களின் குடும்பத்தினர் புண்ணில் புளி தடவியது போல மேலும் துன்புறுவர். ஆனால், இப்படியான பிரச்சார வீடியோக்களை முல்லாக்கள் ரீம் மட்டுமா வெளியிட்டிருக்கின்றன? ஈரானில் இருந்து சில ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் சிறி லங்காவில், உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையென்று நீங்கள் வெளியேறிய காலம் 90 கள்? அந்த நேரம் சிறி லங்கா "பூலோக சொர்க்கமாக இருக்கிறது" என்று கூறும் வீடியோக்கள் இன்னும் இணைய வெளியில் இருக்கின்றன. ஒன்றை சாம்பிளுக்கு கீழே இணைத்திருக்கிறேன். இதைப் பார்க்கையில், "பூலோக சொர்க்கத்தை" விட்டு வெளியேறிய உங்களுக்கு உருவாகும் மன அழுத்தத்திற்கு வருந்துகிறேன்😎!
  5. ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதலாம். ஆனால் தரவுகளையும், வரலாற்றையும், ஏன் நேற்று, போன வாரம், போன மாதம் நடந்த சம்பவங்களைக் கூட அறியாமல் சகட்டு மேனிக்கு எழுதும் கருத்துக்கள் சவாலுக்குள்ளாகும். ஈரான் இஸ்ரேலுக்கு என்ன செய்தது, ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், வளைகுடாக் கடலினூடாக உங்கள் நாட்டுக்கு வரும் சிவிலியன் சரக்குக் கப்பல்களுக்கும் என்ன செய்தார்கள்- இந்த தகவல்கள் எவை பற்றியும் அறியாமல் "ஈரானுக்கு நடந்தது அநீதி" என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள் என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள். உங்களை யாரும் உங்களுக்கு ஆர்வமில்லாத விடயங்களை அறிந்து கொள்ளும் படி வற்புறுத்தவில்லை. ஆனால், அறிந்து கொள்ளாத விடயங்களை வைத்துக் கொண்டு இங்கே போலியான கதையாடல்களையும், தகவல்களையும் எழுதி வாசகர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள் என்றே கேட்கிறார்கள்.
  6. உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் நீங்கள் எவ்வளவு தூரம் சாதாரண செய்திகளைக் கூட வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரேலின் வடக்கு முனைக்கும், ஹிஸ்பல்லா அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் தென் லெபனானிற்குமிடையே தூரம் ஆயிரம் அல்ல, நூறு கிலோ மீற்றர்கள் கூடக் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில், ஹிஸ்பல்லாவிற்கு ஏன் 1000 கிலோமீற்றர் செல்லும் ஏவுகணை தேவை? ஹிஸ்பல்லா அமைப்பின் ஒரே நோக்கம் வடக்கு தெற்காக 420 கிலோ மீற்றர்கள் நீண்டிருக்கும் இஸ்ரேலை அழிப்பது மட்டும் தான். இதற்கேன் 1000 கிலோமீற்றர் போகும் கணை? ஆனால், ஈரானிடம் இந்த இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்திற்காக பல வகை ஏவுகணைகளை ஹிஸ்பல்லா அமைப்புப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில், Qadr-1 என்ற 300 கிலோமீற்றர்கள் செல்லும் ஈரானிய தயாரிப்பு ஏவுகணையை முதன் முதலாக இஸ்ரேல் நோக்கி ஹிஸ்பல்லாக்கள் ஏவினார்கள். இவையெல்லாம் சாதாரண செய்திகளில் காணக்கிடைக்கும் தகவல்கள்! எப்படி இவை தெரியாமல் இங்கே வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறீகள்🙄?
  7. என் அவதானிப்பில், சில ஆதரவு நிலைப்பாடுகள் முழுமையான முட்டாள் தனத்திலிருந்து தான் உருவாகின்றன. பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள் தனம் தான் இந்த ஈரான் முல்லாக்களுக்கான ஆதரவும், மக்களைப் பட்டினி போட்டு தான் தின்று கொழுக்கும் கிம்மை "தலைவா!" என்று பணியும் நிலைப்பாடும். அடிப்படை வாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்த பூமியில் இழப்பதற்கு எதுவும் இல்லையென்று வாழ்வோர். வானத்தை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி விட்டு, செத்தால் "சாஹிட்" ஆவோம், விண்ணுலகில் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் இவர்கள். இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂! இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள, ஒரு மனிதனுக்கு எத்தனை நியூரோன்கள் தேவை?
  8. அதென்ன ராசதந்திர காரணம்? அணு உலைக்கு வேண்டிய max 20% தூய யுரேனியம், அதன் கழிவுகள் இவற்றைக் கூட ஈரானிடம் நம்பிக் கையளிக்காமல் ரஷ்யாவுக்கு ராசதந்திரக் காரணம் என்ன இருக்கிறது? ஈரானின் உள்ளக பாதுகாப்புப் பற்றிய புரிதல் தான் காரணம். இதை ஒரு treaty இல் வந்து சொல்லும் வரை நீங்கள் நம்ப மாட்டீர்கள் போல, அல்லது treaty இல் எழுதாத ரெக்னிகல் டெரெய்ல்சில் ஒளிந்திருந்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் போல😂! உங்கள் "எருமை மாடு பறக்கும்" கதையை எத்தனை ஏரியாக்களில் பார்த்து யாழ் வாசகர்கள் Alex Jones Channel போல கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்! நீங்களோ இன்னும் சளைக்காமல் புதிதாக பொங்கல் வைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்!
  9. எமிராற்றிகள் செய்வது சரியென்று யார் இங்கே சொன்னார்கள்? ஈரான் தவறென்று யாரும் சொன்னால் பக்கத்தில் கொண்டு வந்து எமிராற்றி, சவூதி என்று நிறுத்தி வைத்தால் ஈரான் நல்ல நாடாகி விடும் என்ற அதே குழந்தை பிள்ளைத் தனமான அலட்டலை எல்லா இடமும் பிரயோகிப்பீர்கள் போல! "சதாமை, ஹிற்லரை, ஆங்கிலேயரை விட மகிந்த ஒன்றும் பெரிசாக செய்யவில்லை!" என சிங்களவனும் தான் சொல்லித் திரிகிறான், ஏற்றுக் கொண்டு பேசாமல் இருப்பீர்கள் போல உங்கள் போன்ற புத்திசாலிகள்😂! நாடுகள், தலைவர்கள், அமைப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் அல்ல, துணிவிருந்தால் அந்த ****** இனுள் மறைந்திருக்கும் சொற்களை இங்கேயே வெளிப்படையாக எழுதுங்கள்.
  10. அப்படி வெளியே இருந்து கற்றுக் கொண்ட தொழில் நுட்பத்தை உள்நாட்டில் ஈரான் வளர்த்தமையால் தானா முன்னாள் ஈரான் அதிபரின் விமானம் "உதிரிப்பாகங்கள்" இல்லாமல் விபத்துக்குள்ளானதா ஐயா😂? "பொருளாதாரத் தடையால் இது நிகழ்ந்தது" என்று அவர்களே இணையத்தில் முறைப்பட்டுக் கொண்டார்களே? உள்நாட்டிலேயே வெளிநாட்டு உதவிகள் இல்லாமல், திருடிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் technology வளர்ந்தமைக்கு சிறந்த உதாரணம் இந்தியாவின் றொக்கற் தொழில் நுட்பம் தான். ஈரானின் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையே ரஷ்யாவினால் நிர்வகிக்கப் படுகிறது என்றால் எதைத் தான் உள்ளூரில் வளர்த்தார்கள்? பெண்களுக்கு முட்டாக்குப் போடும் ஆடை நெய்யும் தொழிலகங்களையா😎? கணக்கில்லாமல் அளக்கிற கதையை வேறெங்காவது போய் அளவுங்கள் ஐயா! இங்கே வருவோரும் வாசிப்போரும் உங்களை விட உசாரான வாசகர்கள்!
  11. ஆச்சரியம் தான். புலிகளுக்கு எதிராக எங்கே எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுக் காட்டினால் ஆச்சரியம் நீங்கி விடும். ஏனெனில் புலிகள் செய்த தவறுகளுக்கெதிராக மட்டுமே எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன், ஏனெனில் பக்தி என் கண்ணை மறைப்பதில்லை. விளக்கம் கேட்டு, நான் கடமை இல்லாத போதும் தந்த விளக்கத்தையும் மறக்கும் அளவுக்கு நினைவாற்றலோடு இருக்கிறீர்கள்😎! அணுவாயுதம் கைவசம் இல்லாமலே இன்னொரு நாட்டை அழிப்போம் என்று கூறியிருக்கும் ஒரே நாடாக ஈரான் இருக்கிறது. அதே நேரம் அரை டசின் அடிப்படை வாத முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆயுத ரீதியில் ஆதரவாக இருக்கிறது. இவர்களது பொறுப்பற்ற கொள்கை வெறியை, அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரத்தோடு ஒப்பிட முடியாது. உங்களுக்கு "கதிர் வீச்சை" விளங்கிக் கொள்வதில் ஆர்வம் இருக்கிறதல்லவா? ஒரு தடவை dirty bomb என்றால் என்னவென்றும் தேடிப் பாருங்கள். அணு சக்தி ஆலையில் இருந்து கழிவாகும் புளூட்டோனியம் ஈரானுக்குள் வந்து போகும் முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் கிடைத்தால், நீங்களும் கூட பயந்து ஒடுங்கித் தான் அமெரிக்காவில் நடமாட வேண்டிய நிலை வரும். இது கூட உங்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது இன்னொரு ஆச்சரியம் (ஆனால், உண்மையில் ஆச்சரியம் இல்லை!😂)
  12. நீங்கள் "not mutually exclusive" என்ற சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரண்டு விடயங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும்: இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு செய்வது அநியாயம் என்பதும் உண்மை. இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் ரஞ்சித்திடம் இருப்பதால் எழுதியிருக்கிறார் என்கிறீர்கள். போன ஆண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எழுதிய போது, ஒபாமாவையும், பைடனையும் அவர்களுடைய லிபரல் கொள்கைகளுக்காக சில சமயங்களில் போலி வீடியோக்களை இணைத்து நீங்கள் எழுதிய போது யாருக்கெதிரான வாதம் உங்களை இயக்கியது? குடியேறிகள்? முஸ்லிம்கள்? பெண்கள்? அல்லது யாருடைய அடிமையாக இருந்தீர்கள்?
  13. 🤣 ஓம் தம்பி! ஈரான் பெண் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்குவிக்கும் ஒரு இஸ்லாமிய நாடு! எவ்வளவு ஊக்குவிப்பென்றால், 2022 சியோல் ஒலிம்பிக்கில் தலையில் ஹிஜாப் இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய எல்நாஸ் றெகாபி என்ற ஈரானிய வீராங்கனையை உள்ளே வர விட்டுக் கைது செய்து, பின் அவரது வீட்டையும் புல்டோசரால் இடித்துத் தரை மட்டமாக்கி, மிகுந்த ஊக்குவிப்பைக் கொடுத்தது ஈரான். ஈரானின் ஊக்குவிப்பு மிகையாகி விட்டதால், வீராங்கனை இப்போது ஸ்பெயினில் வசிக்க வேண்டியிருக்கிறது😎! https://iranwire.com/en/women/139724-iranian-climbing-champion-elnaz-rekabi-leaves-country/
  14. விளங்காத மாதிரி எழுதினாலும், அதற்குள்ளும் சில புரட்டுகளை உள்ளடக்கி விடுகிறீர்கள்😂. ஈரான் ஷாவிடம் இருந்து இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் விழுவதற்கு முன்னர், Atom for Peace என்ற திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நுட்பங்களில் உதவியது அமெரிக்கா. அந்தக் காலத்தில் ஜேர்மன் நிறுவனமான சீமன்ஸ் கட்ட ஆரம்பித்த அணு சக்தி ஆலை 79 புரட்சியோடு இடையில் நின்று போக, பின்னர் ரஷ்யா தான் அந்த அணு சக்தி ஆலையைப் பூரணப் படுத்தி இயக்க உதவியது. இது தான் "சமாதான நோக்கங்களுக்காக யுரேனியம் செறிவாக்கும்😎" ஈரானின் ஒரேயொரு அணு சக்தி ஆலை. இன்று வரை, இந்த ஒரேயொரு அணு சக்தி ஆலைக்கான யுரேனியம் கூட ரஷ்யாவில் இருந்து தான் வருகிறது . ஈரான் "சமாதானத்திற்காக செறிவாக்கும் யுரேனியம்" இந்த அணு சக்தி ஆலையில் பயன்படுவதாக ஈரானே எங்கும் சொல்லவில்லை. அணு ஆயுதம் செய்வதற்காக மைய நீக்க சுழலிகளை ஈரானே தயாரிக்க உதவியது பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி காதிர் கான். இவரும் தானே சுயம்புவாக விஞ்ஞானியாகவில்லை, ஐரோப்பாவில் மேற்கு நாட்டு உதவித் தொகையில் அணு விஞ்ஞானம் படித்து பின் அதையே உலக அழிவு நாடும் வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு பணத்திற்காக தொழில் நுட்பத்தை விற்றார். எனவே, ஈரானின் அணுவாயுத தொழில் நுட்பம் அவர்களே கட்டியமைத்ததல்ல.
  15. இது பொதுவான களம், தனிமடல் சேவையல்ல! குப்பை கொட்டினால் யாரும் "கொட்டாதீர்கள்" என்று சொல்லலாம். இன்னொருவருக்கு போலித் தகவலைப் பதிலாகக் கொடுத்தாலும், ஏனையோர் அதைச் சவாலுக்குட்படுத்தலாம். இவை தான் கருத்துக் களத்தை மோகன் இன்னும் இயக்கி வருவதற்கான மூலக் காரணம். இதில் நரித்தனமெல்லாம் கிடையாது, இது தான் நடை முறை. நான் சொன்னது போல, புலம்பலுக்கு பதில் எழுதப் போவதில்லை, ஆனால் தகவல் தவறாக இருந்தால் சவாலுக்குட்படுத்துவேன்! இது உங்களுக்காகச் செய்வதல்ல, ஏனையோருக்கு திருத்தமான தகவல்களை வழங்கும் நோக்கத்தில் செய்வது.
  16. மன்னிக்க வேண்டும் இதைச் சொல்வதற்கு: உங்களுடைய புலம்பலுக்கு பதில் எழுதி நேர விரயம் செய்ய முடியாது. ஆனால், "உலக சமாதான தேவதை" ட்ரம்ப் என்று வரலாற்றை ரிக் ரொக்கில் வாசித்து விட்டு 2024 நவம்பர் வரை இங்கே எழுதிய உறவுகளிடம் தான் நீங்கள் "எங்கே என்ன பிசகியது?" எனக் கேட்க வேண்டும் (போன் போட்டும் கேக்கலாம், தப்பில்லை😎!) ஆனால், இணையவன் ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, செயற்கை நுண்ணறிவு தயாரித்த போலி வீடியோக்கள், படங்களை இங்கே இணைத்து யாழ் களத்தைக் குப்பைத் தொட்டியாக்காமல் இருங்கள். குப்பை கொட்டுவதற்குரிய போதிய இடத்தை எக்ஸ், முகநூல் போன்றவை உங்கள் போன்றோருக்குத் தந்திருக்கும் நிலையில், தமிழர்களுக்கென்று இருக்கும் ஒரே தளத்தில் வந்து குப்பை கொட்டுவது கண்டிக்கத் தக்கது!
  17. இது அடிக்கடி இஸ்ரேலில் வந்து போகும் தடை தான், ஆனால் முக்கியமாக பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஏரியாக்களின் தகவல்கள் வெளிவராமல் தடுப்பதே நோக்கம். கீழே இருப்பது அல் ஜசீராவில் இருக்கும் தடை பற்றிய பட்டியல்: Specifically, journalists and editors are prohibited from: Filming or broadcasting images from impact sites, particularly near military installations. Using drones or wide-angle cameras to show impact areas. Detailing the precise location of affected areas near security installations. Broadcasting images of Israeli missiles being launched or of Iranian missiles being intercepted. The directive also bans the sharing of videos from social media without prior review by the censor, cautioning – as a side note – that some may be “enemy-generated fake news”. ஈரானில் இணையச் சேவையையே முடக்கி, ஆமை வேகத்தில் வைத்திருக்கிறார்களாமே? முல்லாக்களின் "குரல் தரவல்ல அதிகாரி" உங்களுக்கே தெரியவில்லையா😂?
  18. ஏன் தான் இப்படியெல்லாம் தலையங்கம் போட மாட்டாங்கள்? ரிக் ரொக், இன்ஸ்ரா, முகனூல், யூ ரியூப் மட்டுமே பார்த்து வளரும் "புரின் புரியன் மாரை" கவர இப்படி போட்டால் தானே அவங்களும் சில்லறை பொறுக்கலாம்😂?
  19. உண்மை, அறவே வீழ்த்தப் பட முடியாத விமானம் என்று ஒன்று இல்லை. ஆனால், வீழ்த்தப் படக்கூடிய நிகழ்தகவு மட்டும் தான் சில போர் விமானங்களுக்குக் குறைவு. உதாரணமாக, F-35 இன் வேகம் 1.6 Mach. இதனோடு ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தையும் சேர்த்து, அது சுடப் படக்கூடிய நிகழ்தகவை குறைக்க மட்டுமே முடியும். இந்தப் பாதுகாப்புக்களை மீறி அதை வீழ்த்தும் ஆயுதம் ஈரானிடம் இல்லையென நினைக்கிறேன். ஏனெனில், பழைய F-16, F-18 இனையே அவர்கள் வீழ்த்தியதாக செய்திகள் இல்லை. B-2 Spirit Bomber ஒலியை விட குறைவான வேகம் (0.9 Mach) கொண்ட, ஆனால் நெடுந்தூரம்/நேரம் (long-range) பறக்கக் கூடிய விமானம் . எனவே இலகுவாக சுடப் படலாம். இதற்காகவே ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைத்து, 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியதாகச் செய்திருக்கிறார்கள். இதன் ஒரே சிறப்பு, 300,000 இறாத்தல்கள் நிறையுடன் மேலெழக் கூடிய வேக விமானமாக இருப்பது தான். இரண்டு 30,000 lbs குண்டுகளை தாங்கிச் சென்று வீசக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு அமெரிக்க விமானம்.
  20. இந்தியாவின் சில "கொப்பியடி" ஊடகங்கள் இருக்கின்றன. Economic Times, Hindustan Times அவற்றுள் இரண்டு. யூ ரியூப் வதந்திகளில் இருந்து கொப்பி செய்து, தங்கள் நிருபர் நேராகச் சென்று பார்த்த கணக்காக எழுதுவார்கள்😂. தமிழ்வின் இந்த இரண்டு ஊடகங்களிலும் வரும் இது போன்ற செய்திகளை மீளக் கொப்பி செய்து தன் செய்தி போலப் போடுவதை முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஆனால் உண்மைத் தன்மை என்ன? F-35 இனை சுட்டு வீழ்த்துவது என்பது மிகப் பெரிய டீல். இந்தியா ரபேலை இழந்த போது உருவான பரபரப்பை நாம் பார்த்தோம். அதை விடப் பல மடங்கு பிரபலமாக F-35 வீழ்த்தப் படுவது செய்தியாகும். அடுத்த சந்தேகம்: தன் எல்லையினுள் வரும் எந்த விமானத்தையும் எதிர் கொள்ள இயலாமல் இஸ்ரேலினால் முடக்கப் பட்ட நிலையில் இருக்கும் ஈரானின் படையமைப்பு, F-35 இனை வீழ்த்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
  21. உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்?? இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது. அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும். எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!
  22. அணுக்கதிர் வீச்சால் யாராவது இறந்ததாக எங்கே நீங்கள் கேள்விப் பட்டீர்கள்? இணைப்பை இங்கே தாருங்கள், உண்மையைப் பரிசோதிக்கலாம். அணு ஆயுதங்கள் அழிக்கப் பட்டதாக யார் சொன்னார்கள்? எந்த ஊடகம்?
  23. இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே? அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான். கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?
  24. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை குழிகளில் சில எலும்புக் கூடுகளில் இரும்புச் சங்கிலிகள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. அந்த எச்சங்களை புளோரிடாவுக்கு அனுப்பும் ஆயத்தங்கள் நடந்த போது சுமந்திரன் "பலருக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவுகள் கிடைக்கலாம்" என்று சொன்னதாக நினைவு. பின்னர், அந்த எச்சங்கள் "300 வருடங்களுக்கு முன் இறந்தவர்களுடையவை" என்று காபன் 14 கணிப்பு வந்ததாக நினைவு. மன்னாரில் சங்கிலியன் மன்னனால், போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தமிழர்கள் கொல்லப் பட்டது 1544 இல் என்று கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ஈழத்தமிழர் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். திருக்கேதீஸ்வர எச்சங்களின் காபன் 14 வயது முடிவு பற்றி அந்த நேரம் ஓடிய யாழ் திரியில், இந்த வரலாற்றை மறுதலித்து "சிங்களவன் பொய் சொல்லி விட்டான்" என்று சில உறவுகள் வாதிட்டிருக்கின்றனர். அதெப்படி சுமந்திரனுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இது பற்றித் தெரிந்திருக்க, ஏனையோருக்கு இது புதிராக இருக்கிறது? காரணம் வாய்வழிப் பாரம்பரியமாகக் (oral tradition) கடத்தப் படும் மன்னார் வரலாற்றில் "மன்னார் வேத சாட்சிகள்" பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. மன்னார் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் இந்த வழியாக இந்த வரலாற்றை அறிந்திருக்கிறார்கள். இப்போது உங்கள் கேள்விக்குப் பதில்: ஆம், மன்னாரில் கொல்லப் பட்டவர்களின் வயதைக் கணிக்க இயலும் (பல்லில் இருக்கும் எனாமலின் காபன் 14 இன் அளவை வைத்து இதனைச் செய்யலாம்). ஆனால், எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று காபன் 14 இனால் கண்டறிய இயலாது. அதற்கு சட்ட (forensic) மருத்துவ/தொல்லியல் நுட்பங்களைப் பாவிக்க முடியும்.
  25. இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன். இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன). இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.