Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6192
  • Joined

  • Last visited

  • Days Won

    70

Everything posted by Justin

  1. முன்னர் ஒரு சர்தார்ஜி பகிடி சொல்வார்கள் - இன அடையாளங்களை நக்கல் செய்வது கண்டனத்திற்குரியது என்பதால், சர்தார்ஜியை நீக்கி விட்டு அந்தப் பகிடி இப்போது பல வடிவங்களில் உலவுகிறது. ஒருவர் ஒரு கடையில் "பளபளப்பான தொலைக்காட்சிப்" பெட்டியைக் கண்டு, உடனே கடைக்காரரிடம் போய் "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை நான் வாங்க வெண்டும்" என்றிருக்கிறார். கடைக்காரர் முடியாது என்று விட்டார். வாங்க வந்தவருக்கு ஒரு வேளை "என் தோற்றம் காரணமாக கடைக்காரர் இதை விற்க மறுக்கிறாரோ?" என்ற சந்தேகம். மேலும் இரு முறைகள், வெவ்வேறு மாறு வேடங்களில் வந்து "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை" எனக்கு விற்பாயா என்று கேட்டிருக்கிறார். கடைக்காரரோ மறுத்து விட்டார். இறுதியில் வெறுத்துப் போய் "ஏன் நான் எந்த வேடத்தில் வந்தாலும் இப்படி விற்க மறுக்கிறாய்?" என்று கேட்ட போது தான் கடைக்காரர் சொன்னாராம்: "நீ எந்த வேடத்தில் வந்தாலும் நான் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை விற்க முடியாது, ஏனெனில் அது தொலைக்காட்சிப் பெட்டியல்ல, மைக்ரொவேவ் சூடாக்கி" . ஊரில் என்ன நினைக்கிறார்கள் என்பது ஏராளனுக்குத் தெரிந்திருக்கும் - மறுக்கவில்லை. ஆனால், மேலே தமிழ் வின்னின் படங்களைப் பார்க்கையில் "சுமந்திரனைத் தூக்க வேண்டும்" என்பதை மாறு வேடத்தில் வந்து கேட்கும் வழி தான் இந்த "இளைஞர்களை முன்னுக்கு விட வேண்டுமென்ற திடீர் அக்கறை". மாறு வேடத்தைக் கூடச் சரியாகப் போடத் தெரியாமல் தள்ளாடுகிறது சுமந்திரன் எதிர்ப்பு ஊடகமான தமிழ்வின்😂!
  2. முட்டாள் தனத்தை முட்டாள் தனமென்று தான் சொல்ல முடியும்.
  3. இது எப்போது எழுதப் பட்ட கட்டுரை நுணா? 2020? "மக்கள் தமிழ் தேசியவாதிகளை விட்டு விட்டு, மிதவாதிகளைத் தேர்ந்திருக்கிறார்கள்" என்று சரியாகக் குறிப்பிட்டு விட்டு "மக்கள் அப்படி இருக்கக் கூடாது" என்று குமுறியிருக்கிறார்! 2020 நிலை? 2024 இல் இது இன்னும் தேசியக் கட்சிகள் நோக்கி சாதகமாக மாறும். ஏன் அப்படி மாறும் என்பது பற்றித் தான் கருத்து வேறு பாடுகள்!
  4. இந்த அமைப்புகளைப் பற்றி நிலாந்தனும் எழுதியிருந்தார். வர்த்தக சமாசங்கள், இன்ன பிற என்று சில இருந்தன. இவற்றின் சார்பாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவெடுத்தவர்கள் "மக்கள் பிரதிநிதிகள்" என்று அடையாளப் படுத்தப் பட முடியாதவர்கள். உதாரணமாக "வவுனியா வர்த்தகர் சங்கம்" என்றால் "வர்த்தகர்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் - trade body, "வவுனியா மக்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் என்று சொல்லி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தரமுயர்த்த இயலாது. அவர்கள் வாடி வீட்டில் கூடிக் கதைத்து எடுத்த பொது வேட்பாளர் முடிவை "ஜனநாயகம்" என்று மெச்சும் நீங்கள், தமிழரசுக் கட்சியின் பா. உக்கள் கட்சியின் மத்திய குழுவில்எடுத்த 19/23 முடிவை "இருவரின் முடிவு" என்று நிராகரிக்கிறீர்கள்😂. உங்களிடம் ஏன் இந்த வேறுபாடென்று விளக்கம் கேட்க முயலவில்லை. ஆனால், இப்படியான முட்டாள் தனங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறேன்.
  5. அது தான் வித்தியாசமென்றால், அதையல்லவா சுட்டிக் காட்ட வேண்டும்? தேசியப் பட்டியலிலும், தேர்வானவரைத் தூக்கி விட்டும் முதல் பதவி எடுத்தவர் உங்கள் பார்வையில் "மண்ணுக்காக" குரல் கொடுத்தால் எப்படி வந்தார்கள் என்பது பற்றிக் "கள்ள மௌனம்"😂. ஏனையோர் "குரல் கொடுக்கவில்லை" என்று நினைத்தால் அவர்களை வாக்காளர்கள் தேர்வு செய்தாலும் "பின் கதவு" என்ற வசவு. இந்த இரட்டை நீதிக் கூத்தை ஆமி ஊருக்குள் வர முன்னரே வெளிநாட்டுக்கு வந்து விட்ட சில புலம்பெயர் தமிழர்கள் செய்வது, தாயக புலம் பெயர் தமிழர்களை எதிரெதிர் திசைகளில் நகர்த்தி வருகிறது என்பது பொது வேட்பாளர் தோற்ற பின்னரும் கூட உங்களுக்கு புரியவில்லையா? இது உங்கள் கேள்வியா இல்லையா? இதற்குத் தான் பதில். இப்ப கேள்வி வேற என்கிறீர்களா?😂
  6. நீங்களும், விசுகரும், ஈழப்பிரியனும் "பக்கத்தில் நின்று பார்த்து விட்டு" எழுதுகிறீர்கள் என்று முதலே சொல்லியிருந்தால் நான் அப்பவே சரணடைந்திருப்பேனே ஐயா😎? ஏன் இவ்வளவு லேற்றாக இந்த முக்கிய விடயத்தைச் சொல்கிறீர்கள்? முதலில் "ஒருவரைத் தூக்கி விட்டு பதவிக்கு வந்து" பின்னர் ஒரு தேர்தல் வென்ற அரியநேத்திரன் "முன்வாசல்". முதலில் தேசியப் பட்டியலில் வந்து, பின்னர் இரு தேர்தல்கள் வென்ற சும் "பின் வாசல்". இது என்ன புதுக் கணக்கு😂? இதே கேள்வி அமரர் ஈழவேந்தன், அரியநேத்திரன் ஆகியோர் குறித்து உங்களுக்கு எழவில்லையே, ஏன்😂?
  7. உங்களுக்கு தேவையான தகவல்கள் இப்போது கிடைத்திருக்குமென நம்புகிறேன். சுமந்திரனும், சாணக்கியனும் தேர்தல்களில் நின்று வென்றவர்கள். அரியநேத்திரன், தற்போது இருக்கும் கஜேந்திரன், அண்மையில் அமரரான ஈழவேந்தன், ஒரு காலத்தில் ஜோசப் எம்.பி இவர்களெல்லாம் உங்கள் மொழியில் "பின்கதவு". "எல்லோரும் பின்கதவு என்றார்கள், நானும் நம்பினேன், சொன்னேன்" என்பது எவ்வளவு தூரம் முதிர்ச்சியான வாதமென நினைக்கிறீர்கள்? வாத்தியார் சொன்னது போல "மொள்ளக் கடந்து" போங்கள்😂!
  8. ஒமோம், வலு கவனமாக, பூனைப்பாதங்களால் சத்தமின்றிக் கடந்து செல்வோம்😂!
  9. இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?
  10. 2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு கடந்து போயிருக்கின்றனர்? இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்). இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!
  11. கூட்டத்திற்கு வராத 20 உறுப்பினர்களுக்கு வாக்கு இருந்திருக்காது. அப்ப வந்த 23 பேரில் 19 பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்? "இருவர் மட்டும் எடுத்த முடிவு என்று மேலே நீங்கள் பரப்பியது " புரளி என்று புரிகிறதா? நான் சிலுவை தான் சுமக்கிறேன், உங்கள் போன்ற தகவல்களின் தரக்கட்டுப் பாடு அறியாத "தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு😎" எதிராகத் தான் சிலுவையேயொழிய, எந்த அரசியவாதிக்காகவும் அல்ல! அப்படி உலகம் சொல்லி நான் காணவில்லை. உங்கள் உலகம் எது? ஆதவன், அக்கினிக்குஞ்சு, தமிழ்வின், முகநூல்?
  12. தலைவர் யார்? மாவையா சிறிதரனா? காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு வேட்பாளர் பக்கம் நின்ற மாவை சொல்வதை நம்புகிறீர்கள். ஆனால் ஒரு முடிவெடுத்து அதன் படி நின்ற சும்மையும், சாணக்கியனையும் சந்தேகிக்கிறீர்கள்😂! அந்த முடிவெடுத்த கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்த்திருந்தால், வாக்கெடுப்பு நடந்திருக்கும். அதன் படி தான் முடிவும் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாமல் தான் எல்லோரும் ரொய்லெற் ஊடகங்களை நம்பிக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்! "காப்பாற்றி விட்டார்கள்" என்பது மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாமல் தமிழ் வின் அவித்த பொங்கலை "அப்படியே சாப்பிட்டவர்களின்" நம்பிக்கை😂. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது, இனி மீண்டும் முதலில இருந்தா😅?
  13. சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
  14. 😂 சரி, 53% வரவு. எனவே கூட்டம் நடத்த quorum இருந்திருக்கிறது. அல்லது யாப்பில் quorum வர எத்தனை பேர் தேவையென்று இருக்கிறதாமா? இந்த 23 பேரில் எத்தனை பேர் சஜித்தை ஆதரித்தார்களாம்? ஏதாது தகவல் அதைப் பற்றி?
  15. மத்திய குழுவில் எத்தனை பேர்? வவுனியா கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? இருட்டுக்குள் சும் நடந்து போக "கள்ளா" என்று கத்தின ஒரு நிமிட வீடியோவை வைத்துக் கொண்டு இப்பவும் நம்புகிறீர்கள் ஒரு வதந்தியை! நிச்சயம் "வேரோடு புல்லை மேய்ந்திருக்கிறீர்கள்" என நம்புகிறேன்😂!
  16. இது பதிலடி😂? இதற்கு சும் பதில் சொல்ல முதல் பொது வேட்பாளராக சிறிகாந்தா அவர்கள் ஏன் நிற்க முன்வரவில்லை என்பதற்கு பதில் கொடுத்து விட்டாராமா😎? பலியாடு போல அரியநேத்திரன் அவர்களை முன்னிறுத்தி விட்டு, வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் போன்றோர் நின்று, வென்று பாராளுமன்றக் கன்ரீனில் திண்டு கொழுக்கிற பிளானில் இருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் இந்த அர்த்தமில்லாத கேள்விகள் வேற?
  17. இந்தப் பந்திகளில் இது வரை எழுதாத எதையும் நீங்கள் புதிதாக எழுதவில்லை! ஆனால், இங்கே சிலர் காதில் அமிர்தமாகக் கேட்க விரும்பும் வசவுகளைச் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்😂! தேர்தலில் உங்கள் நிலைப்பாடு- என் புரிதலின் படி- வாக்காளர்கள் பயனற்றது என்று கருதியதால் தோற்றிருக்கிறது. அவ்வளவு தான் விடயம். இதனால் இப்போது உங்கள் நிலை apoplectic ஆக இருக்கிறது. உங்கள் நிலைப்பாடு , வருகின்ற பொதுத் தேர்தலிலும் பொது வேட்பாளர் தோற்ற அதே காரணங்களுக்காகத் தோற்கும். தாயக மக்களின் கரிசனைகள், நோக்கங்களில் இருந்து வெகு தூரத்தில் நிற்கிறீர்கள் என்பதை எப்ப தான் உணரப் போகிறீர்களோ தெரியவில்லை!
  18. ஆம், இப்போது இங்கே சிலர் தம் தேவைக்காக வதந்திகளை வைத்து செய்கிற அரசியல் அப்போதும் நடந்தது. சம்பவம் நடந்து மறு நாள், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அங்கஜன் மூவரும் சசிகலாவை சந்தித்து "இதை நீங்கள் விடக் கூடாது, நாம் உயர் நீதிமன்றில் வழக்குப் போட உதவுகிறோம்" என்று உசுப்பேத்திய அரசியல் நடந்தது. இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், இந்த மூவரும் தேர்தல் வேட்பாளராக அனுபவம் கொண்டவர்கள். இந்த வாக்குகள் திருடிய விடயம் நடந்திருக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்த ஆட்கள். தங்கள் அனுபவ அறிவை ஓரமாய் சுருட்டி வைத்து விட்டு "சுமந்திரன் லவ்" காரணமாக சசிகலா அவர்களை மேலும் அசிங்கப் படுத்த முயற்சித்தார்கள்.
  19. தெரியவில்லை, "சுருட்டு பத்த வைக்க நெருப்பிருக்கிறதா?" என்று கேட்கப் போயிருப்பாரோ😂? தெரிவத்தாட்சி அலுவலர் (யாழ் அரச அதிபர்) பணியில் இருந்தார். பணியில் இருக்கும் தெரிவத்தாட்சி அலுவலரை உத்தியோக பூர்வ வேட்பாளர்கள், அவர்களின் ஏஜெண்டுகள் யாரும் போய் சந்திக்கலாம். காரணம் உங்களுக்கும் எனக்கும் தெரியாமல் இருக்கலாம், அவர் சந்தித்தாலேயே ஏதோ கோல் மால் நடந்திருக்கிறது என்பதை "எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுகிறது" என்பதை நம்பும் யாரும் நம்புவர்😎. ஆனால், வாக்கு எண்ணும் இடத்தில் சுமந்திரன் இருந்ததாகச் சொன்ன சசிகலாவுக்கு, அதை இன்னும் காவித்திரிவோருக்கு தேர்தல், எண்ணும் நிலையம் என்பன பற்றி ஒன்றும் தெரியாது என்பது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
  20. ஐங்கரன் மாஸ்ரர் இதே கோசத்தோடு பொதுத் தேர்தலில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில சமயம் அதியுச்ச வாக்குகள் பெற்று பா.உ ஆவார்😂!
  21. உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி? சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.
  22. சரி: 1. சிறிமாவோ, 2. சந்திரிக்கா. இவர் இப்போது 3 வது பெண் பிரதமர்.
  23. சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும். இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!
  24. 20% பதில் வந்த பின்னத்தின் பகுதியெண் என்ன? பொது வேட்பாளரின் சொந்த தொகுதியையும் தூக்கி விட்டுக் கணித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.