Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.
  2. தமிழர் பிரதேசம் மட்டுமல்ல, இலங்கையின் பிறப்பு வீதமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், தமிழர் பிரதேசத்தில் மக்கள் சற்று அதிகமாகப் புலம் பெயர்வதால் சனத்தொகையும் வீழ்ச்சியடைகிறது. ஆனால், பிறப்பு வீதத்தை அதிகரிக்க புலம்பெயர் புண்ணியவான்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை. "வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புகிறோம், இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று விளம்பரம் செய்து ஊக்குவிப்பது உழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முறையாகத் தெரியவில்லை. இளைய வயதினர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லாமல் அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி செய்யும் திட்டங்களுக்கு புலம்பெயர் சமூகம் உதவலாம். "பிள்ளை பெற்றால் சன்மானம்" என்பது அவசியமில்லாத தானம் போல படுகிறது!
  3. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை. இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?
  4. "2012 இல் இருந்து இந்த விசாரணையை தாமதித்திருக்கிறார்கள் தமிழ் பிரதிநிதிகள்". 2020 இல் இருந்து பொன்னம்பலம் பிரதிநிதியாக இருக்கிறார். 2019 இல், றோகிங்கியாக்கள் பிரச்சினையை பிரிட்டனில் இருக்கும் ஒரு அமைப்பு ICC இடம் கொண்டு சென்றது. அதே நேரம், ஐ.நாவின் ICJ இடம் கம்பியா (Gambia) றோஹிங்கியாக்கள் பிரச்சினையைக் கொண்டு சென்றது. 2024 இல் மியன்மாரின் முக்கிய தலைவரைச் சந்தேக நபராக அறிவித்து ICC பிடிவிறாந்து பிறப்பித்திருக்கிறது👇. https://www.icc-cpi.int/victims/bangladesh-myanmar என் கேள்வி: இப்படி ICC இற்கு தமிழர் பிரச்சினையைக் கொண்டு செல்ல ஏன் தமிழரசுக் கட்சி தேவை? இங்கிலாந்தில் பரிஸ்ரரான பொன்னம்பலம் பா.உ 2020 இலேயே அங்கேயிருக்கும் அமைப்பு ஒன்றின் மூலம் முயன்றிருக்கலாமே? இப்போது கூட முயல என்ன தடை? என் ஊகம்: இவர்களுக்கும் இந்த விசாரணைகளில் அக்கறையில்லை. செயல்படும் ஊக்கமும் இல்லை, அல்லது எப்படிச் செய்வதென்றும் தெரியாது. தேர்தலில் வெல்வதற்கு காரணங்கள் தேவை, அதில் ஒன்று "அவையள் வரவில்லை, அதனால் சர்வதேச விசாரணை தடைப்படுகிறது". அடுத்த தேர்தலில் இருக்கும் ஒரு ஆசனமும் NPP இடம் பறி போகுமென நினைக்கிறேன்.
  5. ஹா..ஹா! அவர் ஏளனமாக குத்திக் காட்டிய கணக்கு, அவரே இணைத்த செய்தியின் படி பிழைத்திருக்கிறது என்பதை நான் பகிடியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவு தான் விடயமென்றால் அதை நேரடியாக சொல்லி விட்டுப் போயிருக்கலாம் அல்லவா? இவ்வளவு நேரம் சுட்டிக்காட்டிய என்னை குழுவாகச் சேர்ந்து திட்டி, திட்டியவரை தட்டிக் கொடுத்து (வக்கிரம்?😎) திரியை நீட்டிய பிறகு தான் கல்குலேட்டரை எடுத்துக் கணக்குப் பார்த்திருக்கிறீங்கள் போல😂! இனியாவது ஒருவன் எழுதுவதை வாசித்து விட்டு கருத்தெழுத ஆரம்பியுங்கள்!
  6. இந்தப் "பண்பு" பற்றிய உங்கள் அக்கறை மிகவும் வரவேற்கத் தக்கது! ஆனால், அதை எல்லோரது கருத்திலும் காட்டுங்கள், பாராட்டுகிறோம். இப்படி உங்கள் நண்பர்களை, சக தேசியப் பற்றாளர்களை நோக்கிப் பேசும் கருத்தாளர்களிடம் மட்டும் "பண்புப் பொலிஸ் வேலை" நாம் எல்லோரும் உங்களிடம் கண்டு அலுத்துப் போன ஒரு இயல்பு😎. இந்த செலக்ரிவ் பண்பு நாடலினால் ஒரு பயனுமில்லை! பல தடவைகள் சொல்லியிருப்பது போல, படிப்பு உங்களுக்கு கண்ணுக்குள் குத்தினால் நான் எதுவும் செய்ய இயலாது. அது உங்கள் பிரச்சினை, நீங்களே தீர்வு தேடுங்கள்!
  7. அப்படியானால், தமிழ்சிறியே "வயதைக் கவனிக்கவில்லை" என்றல்லவா பதில் போட்டிருப்பார்? போடவில்லையே அப்படி? மட்டு வந்து தணிக்கை செய்ய வேண்டிய பதிலை தமிழ்சிறி எழுதுகிறார், அவருக்கு ஒத்து ஊத பெருமாள் வந்து இன்னும் பல எழுதியிருக்கிறார். அதற்கு பக்க வாத்தியம் சிலர் ஒரிஜினல் கருத்தை வாசிக்காமல் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் கண்டு உங்களுக்கு "கோபம்" வராது😂! செலக்ரிவ் மெமறி போல செலக்ரிவ் கண் பார்வை! ஒருவர் தவறு விடலாம், OK. அதைச் சுட்டிக் காட்டினால் அந்த தவறை சமாளிக்க கோபம் கொப்பளிப்பது "அவர் தெரியாமல் தவறு விட்டிருக்கிறார்" என்று நிறுவுகிறதா அல்லது முட்டாள் தனத்தை இங்கே பரப்ப முனைகிறார் என்று காட்டுகிறதா?
  8. விசுகர், "30 வயது முன்னாள் போராளி எனப்படும் ஒருவரை துப்பாக்கியோடு கைது செய்திருக்கிறார்கள்" இது தான் செய்தி. இதன் பின்னாலிருக்கும் சாத்தியங்கள் என்ன? அவர் புனர்வாழ்வு முகாமில் போராளியாக இல்லாமலே தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிவிலியனாக இருக்கலாம். அவர் இறுதி நேரத்தில் விரும்பி இயக்கத்தில் இணைந்து, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்த ஒருவராக இருக்கலாம். அவர் இறுதிப்போரின் போது கட்டாயமாக இணைக்கப் பட்டு, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்திருக்கலாம். இவையெதுவும் இல்லாமல் அரசினால் பொய்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது கைதாகியிருக்கலாம். இவையெல்லாம் சாத்தியமான விளக்கங்களாக இருக்க, 30 வயது ஆளுக்கு 2009 இல் 6 வயது என்ற "கவுண்டமணி செந்தில்" விளக்கம் ஏன் அவசியம்😂? அந்த முட்டாள் தனமான விளக்கத்தை நிராகரிக்கும் ஒருவரை நோக்கி மன நோயாளி, குரைக்கும் ஜந்து எனும் வசவுகள் ஏன் அவசியம்? இந்த அவசியமில்லாத லூஸ் வேலைகளைக் கண்டிக்க உங்களுக்கு விருப்பமும் இல்லை, தற் துணிவும் இல்லை. ஆனால், "தேசியப் பற்றாளர்" என்று நக்கலுக்குரியவர்களை நான் நக்கல் செய்தால் கோபம் வந்து விடுகிறது உடனே!
  9. எந்த விதமான உடற்பயிற்சியும் கொஞ்சமாவது செய்தால் அதனால் பயனுண்டு என்பதைக் காட்டும் ஒரு ஆய்வு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம், "குறைந்த பட்சம் (minimum) எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?" என்ற கேள்வி பரவலாகக் கேட்கப் படும் ஒரு கேள்வியாக மாறி வருகிறது. "வாரத்திற்கு 150 நிமிடங்கள்" என்று பதில் சொன்னால், "நேரமில்லை" என்ற காரணத்தால் அதை உதாசீனம் செய்வோரும் இருக்கிறார்கள். அவர்களை உடற்பயிற்சியின் பக்கம் இழுக்கும் ஒரு ஆய்வு முடிவாக இது இருக்கக் கூடும். ஆனால், 7000 அடிகளை விட அதிகமாக நடப்பது நல்லது என்று தான் இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. இணைப்பில் இருக்கும் மூலக் கட்டுரையின் வரைபுகளைப் பார்த்தால், 7000 அடிகளுக்கு அதிகமாக நடப்போரில் பெரும்பலான நோய் நிலைகள் தொடர்ந்து குறைந்து செல்வதைக் காணலாம். https://www.thelancet.com/action/showPdf?pii=S2468-2667%2825%2900164-1
  10. உங்களுக்கான "விருது" யாழ் களத்தில் தேசிய வீரர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் "தட்டிக் கொடுத்தல்" தான்! இதைத் தான் குறிப்பிட்டேன், அதை விட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்😂! இங்கே உங்களுக்கு தடவிக் கொடுக்கும் அதே ஆட்களிடம் இருந்து எனக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கின்றன: நாய், நரி, உசாக்காட்டி என்று பட்டியல் நீளம். காரணம் நான் எதையும் தமிழ் தேசியத்திற்கு எதிராகச் செய்ததால் அல்ல! கணக்கு, பௌதீகம், உயிரியல் போன்ற விஞ்ஞானத்தின் வெளிப்படையுண்மைகளை அரசியல் பார்வைக்கேற்ப வளைக்காமல் அப்படியே ஒப்புவிப்பதால் தான் எனக்கு பெரும்பாலான பட்டங்கள் தேசிய ஆர்வலர்களிடமிருந்து கிடைத்தன. வயதைப் பிழையாகக் கணக்கிட்டு ஒரு போலித்தகவலைப் பரப்பியவரை, உங்களைப் போல நானும் தடவிக் கொடுத்து விட்டு, சரியான தகவலைச் சொல்வோரை திட்டிக் கொண்டிருந்தால் நானும் இங்கே "தமிழ் தேசிய பிஸ்தா" வாக வலம் வரலாம்! இப்படியாக நடந்து கொள்வதால் ஏதோ சிங்களவரை நாம் தோற்கடிக்கிறோம் என்ற எண்ணத்தில் நீங்களும் உங்களுக்கு தடவிக் கொடுப்போரும் இருக்கிறீர்கள். உண்மையில் தமிழர்களை வெளியுலகுக்கு முட்டாள்களாகக் காட்டிக் கொண்டிருக்கும் வேரறுக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் மழுங்கிப் போய் இருக்கிறீர்கள்😎!
  11. ஏன் தமிழ்சிறி க்குப் பயத்தில் இப்படி நேரடிப் பதில் சொல்லாமல் சுத்தி வளைக்கிறீர்கள்😂? தற்போது 30 வயதான ஒருவருக்கு 2009 இல் 14 வயது (6 வயது என்பது தமிழ்சிறியின் "கவுண்டமணிக் கணக்கு"😎)! இறுதி யுத்த காலத்தில் 14 வயது என்பது பயிற்சி எடுக்கும் வயதாகவும் வன்னியில் இருந்திருக்கிறது. 6 மாதம் பயிற்சி கொடுத்த பின்னர் முன்னரங்கில் புலிகள் தங்கள் போராளிகளை விட்டது நீங்கள் கடைசியாக இலங்கையில் இருந்து கிளம்பும் போது இருந்த நிலை. 2009 இல் ஒரு நாள் இரு நாள் பயிற்சியோடு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு முன்னரங்கில் பீரங்கித் தீனி (canon fodder) யாக விடப் பட்டோர் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் தெரியாத மாதிரி நடித்தால் தானே "தேசியப் பற்றாளர்" விருது கிடைக்கும்😂?
  12. இது சரியான தகவல் அல்ல. "அம்மாள் வருத்தம்" என்று நாம் அழைக்கும் Pox வைரசுகளால் ஏற்படும் நோயை மனிதரில் உருவாக்கும் வைரஸ் குடும்பம், மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளிலும் மனிதரில் போன்றே பொக்களங்கள் போடும் நோயை உருவாக்குகிறது. பெரியம்மை (Smallpox) நோயை 80 களில் உலகில் இருந்து ஒழித்தார்கள். இந்த பெரியம்மை நோய் ஒழிப்பிற்குக் காரணமான முதலாவது தடுப்பூசி தயாரிக்கப் பட்டது, மாடுகளில் நோய் ஏற்படுத்தும் அம்மை நோய் (Cowpox) வைரசில் இருந்து தான். எனவே, 1980 ஓடு அம்மாள் மனிதர்களில் வருவதும் நின்று விட்டது!
  13. போன வாரமளவில் ஒரு முகநூல் பதிவர் "பூதக் கண்ணாடியோடு" நினைவு தினம் தேடி அலைந்தார் என்று எழுதியிருந்தாரே? அவர் இன்னும் இருக்காரா சார்? 😂
  14. கள் உட்பட எதையும் அருந்தாமல் விட்டாலும் ஒரு வாரத்தில் அது மாறி விடும் என்பது தான் உண்மை!
  15. சாத்தான், நீங்கள் சிங்களவரைப் பற்றி எழுதியிருப்பவையெல்லாம் சரி! ஆனால், வயதுக் கணக்கு பிழையல்லவா? தமிழர் ஒருவரை அப்பாவியாகக் காட்ட, அரிவரியில் படித்த எண்கணிதத்தை அப்படியே மறந்து விடுவோம் என்கிறீர்களா? இந்த முட்டாள் தனங்களால் சிங்களவன் அலறி அடித்துப் பயந்து விடுவான் என்கிறீர்களா அல்லது, உங்களைப் போன்ற தமிழர்கள் "புதுக் கணக்கு" சிஸ்ரத்தைக் கண்டு பிடிப்பார்கள் என்கிறீர்களா😂? உங்களிடமே முட்டாள் தனத்தையும், வெறுமையையும் வைத்துக் கொண்டு ஏனையோரை "பூச்சியங்கள்" என்று சொல்வதற்கும் ஒரு தனித்துவமான devil may care மனநிலை வேண்டும்! உங்களிடம் அது மட்டும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்😎!
  16. எம்.ஆர்.ஐ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாதோரும், இந்த அறைகளுக்கு வெளியே சிவப்பு எழுத்தில் ஒட்டியிருக்கும் அறிவிப்பை வாசிக்க இயலாதோருக்கும் கூட எம்.ஆர்.ஐ எமன் தான்! ஆகவே, "ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல" என்பதை மீள ஆராய வேண்டும்!
  17. 😎யாரது? 1+1=11 என்று உயர்கணிதம் படிப்பித்த பெருமாளா இப்ப 30-16=6 என்ற அதியுயர் கணிதத்தை விளக்கியிருப்பது? விளக்க முடியாத விடயங்களை இலகுவாக இங்கே குப்பை போலக் கொட்டி விட்டுக் கடந்து போக ஒரு சாட்டுத் தான் "இவரோட நாங்கள் டூ, எனவே பதில் சொல்ல மாட்டம்!" என்ற சளாப்பல்! "பதில் இல்லை, அதனால் சொல்லவில்லை" என்று சொன்னால் உங்கள் "கௌரவம்" என்ன ஆகிறது😂? இந்த 30-16-=6 தியரிக்கு, அது பற்றிய பதிலுக்கு சிரிப்புக் குறி இட்டிருப்பது ஒரு மொரட்டுவ எந்திரி என்றால் இலங்கையின் இலவசக் கல்வி எவ்வளவு வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று புரிகிறது😂!
  18. "எனக்கிருக்கும் ஒரு வாழ்க்கையில், நான் ஊர் என்னை "அண்ணாந்து பார்க்கும்" தொழிலைத் தான் தேர்வேன்!" என்று இருப்போர் இப்படி பல தொழில்களைக் கண்டு தூர ஓடத்தான் வேண்டும்! அப்படியே ஓடி ஓடி ஒரு நாள் விட்டு வந்த இடமும் வந்து சேர்ந்த இடமும் பிடிக்காமல் போய்ச்சேர வேண்டியது தான் அவர்கள் நிலையாக இருக்கும்! இது தான் உங்கள் வாழ்க்கைத் தத்துவம் போல தெரிகிறது😎. பி.கு: நுளம்பு மருந்து அடிக்கும் விமானம்?? யாழில் இருக்கும் சிறு பந்திகளையே தட்டுத் தடுமாறித் தான் வாசிக்கிறீர்கள்! எப்படி இவ்வளவு பிழையில்லாமல் தமிழில் எழுதக் கற்றுக் கொண்டீர்கள்😂?
  19. 1500 மணித்தியாலங்கள் Type-specific training. அதாவது B737 என்றால் அந்த வகை விமானத்திலேயே 1500 மணித்தியாலங்கள் பயிற்சி பெற வேண்டும்.
  20. விசுகர் ஏற்கனவே தன் பிள்ளைகளின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் பற்றிப் பெருமைப் படும் ஒரு தந்தை தான். அவர் மட்டுமா? நாம் எல்லோரும் அப்படித் தான். ஆனால், அதைப் பற்றியா இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? இதை ஏன் பத்திரிகையில், அல்லது இணைய செய்தித் தளத்தில் போட வேண்டிய தேவை வருகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப் பட்ட விருப்பு, வெறுப்பு என்று கடந்து போகலாம். ஆனால், இது கருத்துக் களம், எனவே வாழ்த்தும் சொல்லி விட்டு, "இது பெரிய செய்தி அல்ல" என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். மற்றபடி , அனுஜன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை. அவர் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க Naval Academy இல் பயிற்சி விமானியாகி, விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளி வீரராகவும் வரக் கூடும். அது செய்தியாகும்! அப்படி வளர வேண்டுமென்பது தான் எங்கள் வாழ்த்தும்.
  21. படத்தை மட்டும் பார்த்து விட்டுக் கருத்தெழுதாமல், முழுச்செய்தியையும் வாசித்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. ATPL (Air Transport Pilot License) என்பது வணிக விமானங்களை இயக்குவதற்கான அடிப்படையான தகுதி. செய்தியிலேயே சொல்லியிருப்பதன் படி வணிக விமானங்களை இயக்குவதற்கான Commercial Pilot License (Aeroplanes) CPL(A) எடுத்திருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் கொண்ட பிஸ்ரன் (MEP Multi-Engine Piston) விமானங்களை இயக்குவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார். காற்றாடி இயந்திரங்களால் இயங்கும் விமானங்களில் பிஸ்ரன் விமானங்கள்(அவரோடு படத்தில் இருப்பது) குறைந்த உயரத்திலும், வேகத்திலும் பறக்கும் விமானங்கள். Turboprop என்ற வகை அனேகமாக பயணிகளை நீண்ட தூரம் ஏற்றிச் செல்லப் பயன்படும் அதிக உயரத்திலும், வேகத்திலும் பறப்பவை - இதனால் சிக்கலானவை. இதனால் தான் MEP என்று குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் ATPL இனை வைத்துக் கொண்டு B737, A320 எல்லாம் போய்விட்டீர்கள்😂. இந்த சிக்கலான விமானங்களில் First Officer எனப்படும் துணை விமானியாக வரவே, அவர் இன்னும் பல ஆயிரம் மணித்தியாலங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். எடுப்பார் என்று தான் நம்புகிறோம். ஆனால், அப்படி போயிங், எயார்பஸ் பறக்க லைசென்ஸ் எடுத்தாலும் கூட அது ஒரு செய்தியா என்பது தான் இங்கே பலருடைய கேள்வி.
  22. உங்களை மாதிரி ஒரு "கணக்குப் புலியும்", வன்னியில் இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாத @satan உம் இருக்கும் போது, வாசகர்களை யாருமே கேனையர்களாக்கி விட முடியாது😂!
  23. நல்ல வேளையாக இந்தியாவின் வல்லபாய் பட்டேல் வாழ்ந்த போது எம்.ஆர்.ஐ இருக்கவில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.