Everything posted by Justin
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
மில்லர் தாக்குதல் நடத்தியது 87 இல் அல்லவா? அந்த நேரம் மேற்கு நாடுகளிலேயே robotics வளர்ந்திருக்கவில்லை. அமெரிக்காவின் முதலாவது ஆளில்லா விமானம் (Predator) 1995 வரை பாவனைக்கு வரவில்லை. நிலைமை இப்படி இருக்க புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இவையெல்லாம் பணம் இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ஒருவர் வானத்தை அண்ணாந்து பார்த்து "எருமை மாடு பறக்கிறது பார்" என்கிறார். நான் அண்ணாந்து பார்க்காமலே "எருமை மாடு பறக்காது" என்கிறேன். அவரோ, "ஏன் எருமை மாடு பறப்பதை மறைக்க முயல்கிறீர்கள்? நீங்கள் பார்க்கா விட்டால் பறக்காது என்று அர்த்தமா?"😎 என்கிறார்! இது தான் உங்கள் கருத்தின் சாராம்சமாக இருக்கிறது. இங்கே மட்டுமல்ல, எந்த திரியிலும் இதே தான் உங்கள் கருத்தாடல். வாசிப்பு என்பது குறைவான ஒருவருக்கு தகவல்கள் எப்படி வரலாற்று நூல்களில் இடம்பெறும் என விளக்குவது கடினம். உங்கள் கருத்துக்களின் படி, நீங்கள் fringe site களில் வரும் விடயங்களை வைத்து நுனிப் புல் மேய்ந்து வரும் ஒருவர் என ஊகிக்கிறேன். treaty என்றாலே எழுத்தில் இருக்க வேண்டும் ஐயா. இந்த அடிப்படை கூட தெரியாமலா நீங்கள் பற்றி இங்கே treaty எழுதுகிறீர்கள்😂?
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
வரலாற்று நூல்களை வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நூல்களில் ஒப்பந்தம் அப்படியே இருக்காது (ஏனெனில் ஒப்பந்தமே ஒரு நூல் சைசில் இருக்கும்😂). ஆனால்,புத்தகங்கள் ஒப்பந்தத்தின் இப்படியான விடயங்களைத் தொட்டுச் செல்லும். இது போன்ற சுவாரசியமான விடயங்கள் வரலாற்று நூல்களில் இருக்கும். உங்கள் கேள்வியின் படி நீங்கள் இப்படியான விடயத்தைக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை வாசித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன். ஆனால், இங்கே இணைக்கும் படி நான் கேட்கப் போவதில்லை! ஏனெனில் பிரின்டில் வாசித்திருப்பீர்கள், அப்படித் தானே😎?
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இப்படிப் பட்ட ஒரு நடைமுறை இருப்பதாக பனிப்போர் காலங்கள் பற்றி நான் வாசித்த எந்த நூலிலும் காணவில்லை (நீங்கள் கேட்க முதல், அவை அனைத்தும் அமெரிக்கர்களால் எழுதப் பட்ட நூல்களும் அல்ல!). ஆனால், "எழுத்தில் இருக்காது, நடைமுறையில் இருக்கும்" என்ற உங்கள் ஏனைய வாதங்கள் போல இதுவும் என நினைக்கிறேன். விமானங்கள் வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமைக்கு மிகவும் எளிமையான இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று தயார் நிலை (readiness), இரண்டாவது இது போன்ற விமானங்களை hangar இனுல் நிறுத்தி வைப்பது மிகவும் செலவும், சிக்கலும் கூடிய ஒரு வேலை. எனவே தான் எதிரிப் படைகள் இலகுவில் அணுக இயலாத தொலை தூரத் தளங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வான் கண்காணிப்பும் இலகு. தாக்குதல் நடந்த இரு இடங்கள் சைபீரியாவின் தூர கிழக்கு-Far East மூலையில் இருக்கின்றன. அமுர் (Amur) நதிக்கு அண்மையான இந்த இடங்களில் வெளியார் கண்காணிப்பில்லாமல் நடமாடுவதே கடினம். இங்கேயே ட்ரக்கில் வைத்து ஏவியிருக்கிறார்கள் என்றால், உக்ரைன் மொஸ்கோவைத் தாக்காமல் பொறுமை காத்து வருகிறது என்று தான் நான் நினைக்கிறேன்😂.
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
இறுதி யுத்தத்தின் போது புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு, தப்பியோடினால் கண்டு பிடிக்கும் வகையில் தலை மயிர் கட்டையாக கத்தரிக்கப் பட்டு, சில சந்தர்ப்பங்களில் இத்தகையோரை வெளியேறும் தறுவாயில் புலிகளே சுட்டுக் கொன்றது..இவையெல்லாம் அமெரிக்காவில் பனி வனத்தில் வசிக்கிற உங்களுக்கு "காணிச் சண்டை எல்லைச் சண்டை" ரேஞ்சுக்குச் சுருங்கி விட்டது அதிசயமில்லை😂. ஆனால், இந்த அனுபவங்களூடாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவை சாதாரண நிகழ்வுகளாக இருக்காது. இப்படிப் பாதிக்கப் பட்ட மக்கள்- அவர்கள் சிங்களவரால் பாதிக்கப் பட்டவர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- கவனமாகக் கையாளப் பட வேண்டியோர். யாழ் களத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் சுய வாக்குமூலங்களின் படி, இதைச் சொல்லும் நீங்களே, ஒரு காலத்தில் உங்கள் உயிர் முக்கியம் என்று விமானமேறி அமெரிக்கா வந்த ஒருவர். உங்களுக்கிருக்கும் சொந்த உயிர் மீதான அக்கறையை விட ஏன் வன்னி மக்கள் குறைவாக அக்கறை கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?
-
ரப் பாடகர் வேடன்
தமிழ் பௌத்தரான அருண் சித்தார்த்தும் இதற்குள் அடங்குவாரா?
-
கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்
இது போன்ற அதிகாரப் பரவலாக்கல் பாதுகாப்பு அமெரிக்காவில் இல்லை. ஒரு நகரம், மாநிலம் செய்வது பிடிக்கவில்லையென்றால் ஏதாவது மத்திய அரசின் சட்டத்தைச் சுட்டிக் காட்டி மத்திய அரசு தடை போடும் (அண்மையில் வாஷிங்ரன் டி.சி யில் BLM இனால் அமைக்கப் பட்டிருந்த ஓவியங்களை (murals) இப்படி அழித்திருந்தார்கள்). அவ்வாறு சட்டங்களால் தடை போட இயலா விட்டால், மத்திய அரசு வழங்கும் நிதியைத் தடுப்பதன் மூலம் அழுத்தம் கொடுப்பார்கள். ட்ரம்பின் விருப்பமான ஆயுதமாக இரண்டாவது வழி முறை இருக்கிறது.
-
ரப் பாடகர் வேடன்
புள்ளிராஜா மைன்ட் வொய்ஸ்: "வசமாக பெண் புரசு சல்லாபங்களில் மாட்டிக் கொண்டு விட்டோம். இனி தமிழ், ஈழம், புலி, பிரபாகரன் என்று கலர் கலராகப் போர்வையைப் போர்த்திக் கொண்டால் தான் தப்பி நிலைக்கலாம்!😎"
-
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
இதெல்லாம் பனிக்கட்டியின் வெளியே தெரியும் முனை மட்டுமே. 1000 கிலோ ரிஎன்ரி வெடிமருந்தை நிரப்பிய MOAB குண்டுகளை விற்பது முதல், இப்படியாக அமெரிக்காவில் கொள்வனவு செய்த உணவை , அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களின் பாதுகாப்போடு விநியோகிப்பது வரை, பிணம் தின்று வயிற்றை வளர்த்து, உழன்று, ஒரு நாள் செத்துப் போய் பூமிக்குப் பாரமாகப் போகும் பேர்வழிகள் நடமாடும் உலகம் இது!
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
திராவிட மொழிக் குடும்பம், தெலுங்கோடு தொடர்பானது என்று இந்தக் கட்டுரையில் இருக்கிறது. இந்தக் கட்டுரையே "கன்னடம் 2500 ஆண்டுகள் பழமையானது" என்ற போலித் தகவலைச் சரிபார்க்கும் முயற்சியாக வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது அதே "2500" இனை கன்னடத்தின் வயதாக கன்னடத் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்😂! Bangalore MirrorFake News Buster: Kannada is world’s oldest living languageThis piece of news is doing the round of the internet naming Kannada as the oldest living language in the world. The news comes with a picture of a certificate that says it has been ratified by the...
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
எந்த தமிழ் பா.உ/ அரசியல்வாதியின் முயற்சி பற்றியும் நான் மெனக்கெட்டு எழுதப் போவதில்லை! ஏனெனில், அதற்குத் தானே மக்கள் தெரிவு செய்து அனுப்பி பாராளுமன்றக் கன்ரீனில் "சத்தான" உணவைச் சாப்பிட அனுமதித்திருக்கிறார்கள்😂? பிறகேன் தனியாக நன்றி பாராட்டுதல் இவர்களுக்கு? ஆனால், உங்களைப் பொறுத்த வரை, நன்றி பாராட்டுவதிலும் குறை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். சுமந்திரன் இதைப் பற்றி பாராளுமன்றத்திற்கு வெளியே பேசியதும், பேட்டிகள் கொடுத்ததும், முயற்சிகள் செய்ததும் யாழிலேயே செய்தியாக இருக்கிறது. ஆனால், கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் பேசியது மட்டும் தான் உங்கள் பார்வைக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியின் பயன், ஆனால் அதைக் கூட ஒரு ஒற்றைப் பா.உ வின் resume யில் போடும் அவசரம் உங்களிடம். இது உங்களிடமும், ஏனைய "சுமந்திரன் லவ்வர்சிடமும்" அடிக்கடி நான் காண்பது தான். சில ஆண்டுகள் முன்னர், கண்ணதாசன் என்ற யாழ் பல்கலை விரிவுரையாளரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். அவருக்காக மன்றில் ஆஜராகி அவரை விடுதலை செய்ய உதவியது சுமந்திரன். அங்கேயும் "இதற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி" என்று மட்டும் நீங்கள் எழுதிய போதும் இதே போல "சில பெயர்களை உச்சரிக்கக் கூடாது" என்ற கட்டுப் பாட்டுடன் இருக்கிறீர்கள் என அறிந்து கொண்டேன்😂!
-
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
இந்த செய்தியில் இந்த " மனிதாபிமான உணவு வினியோகம்" 😎 என்பதன் பின்னணியைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. காலாகாலமாக, காசாவிற்கு உணவு வினியோகம் செய்வது ஐ.நாவின் தொண்டு அமைப்புகள் தான். இஸ்ரேல், காசாவின் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர், இந்த உணவு வினியோகத்தை மிகவும் குறைத்து விட்டது (ஒரு நாளைக்கு 500 லொறிகள் என்பதில் இருந்து 5 லொறிகள் என்ற நிலை தற்போது). உணவை ஆயுதமாகப் பிரயோகிக்கும் இந்த மிருகத் தனத்திற்கு பைடன் ஆட்சியில் ஆதரவு இருக்கவில்லை. எனவே, கொஞ்சமாவது லொறிகளின் எண்ணிக்கையை உயர்வாக வைத்திருந்தார்கள். இப்போது ட்ரம்ப் ஆட்சி வந்தவுடன், புதிதாக மீண்டும் தாக்குதலையும், உணவுத் தடுப்பையும் அமல் படுத்தி விட்டார்கள். இந்தப் பட்டினிப் பின்னணியில், பணம் பார்க்கும் ஆசையில் அலையும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களும் (security contractors), சில உணவு முகவர்களும் ட்ரம்பை அணுகியிருப்பார்கள் என ஊகிக்கிறேன். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் அமெரிக்க ஒப்பந்தக் காரர்களால், இஸ்ரேல் படையின் பாதுகாப்புடன் உணவை வினியோகிக்கும் GHF என்ற அமைப்பு. பெயரில் "மனிதாபிமானம்" இருந்தாலும், இது ஈராக்கிலும், ஆப்கானிலும் செய்தது போல, அமெரிக்க ஒப்பந்தக் காரர்களுக்கு வருமானம் தேடும், காசா மக்களை மந்தைகள் போல அலைய விடும் ஒரு திட்டம் என்பது பலருக்கும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன. "செய்து காட்டுகிறோம் பார்" என்று நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியாக ஆகி விட்டது. என்றாலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்வார்கள், காசா மக்கள் அள்ளுப் படுவர், இஸ்ரேல் படைகள் சுடும். இறுதியில் "காசா மக்களின் பட்டினிக்கு அவர்கள் இப்படி நடந்து கொள்வது தான் காரணம்" என்று பிரச்சார வீடியோக்களை வெளியிட்டு விட்டு, கடையை மூடி விட்டுப் போவார்கள்! இந்த GHF பற்றிய மேலதிக தகவல்கள்: https://www.bbc.com/news/articles/cev41em3r9lo
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
🤣அது தானே? மறந்தும் "மற்றையோருக்கும்" என்பதற்குள் அடங்கிய முக்கியமான நபரின் பெயரைக் குறிப்பிட்டு விடாதீர்கள்! "தமிழ் தேசியக் காளி" கண்ணைக் குத்தி விடும்🤣!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வெளி மாநிலப் பயணம், வேலைகள் என்று தள்ளி நின்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால், திரியை "வாய்க்கால்" வெட்டி வேறு திசையில் ஓட விட்டிருக்கிறார்கள்😂! மடை மாற்றுவதில் தானே பல வேடங்களை மறைக்க இலகுவான வழி இருக்கிறது😎?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இணைப்பிற்கு நன்றி நுணா. (சக கருத்தாளர்களுக்கு) 25 ஆவது நிமிடத்தில் இருந்து இவர் சொல்லும் விடயங்களைக் கேட்கும் போது, இந்தியாவில் பாப்ரி மசூதியை இடிக்கத் தூண்டிய சிவசேனா சங்கிகள் போலவே சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது. "நல்லூர் கோவிலின் கோபுரம் கண்ணுக்குத் தெரியும் இடம் வரை அதிர்வு இருக்கும், எனவே அங்கே மாமிசம் விற்பது கூடாது" என்கிறார். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை மாமிச தவிர்ப்பு வலயம் போட வேண்டிய இடங்கள் இருக்கும் போல தெரிகிறதே😂? இவையெல்லாம் பல மத/நாத்திகர்கள் வாழும் ஒரு நகரத்தில் சாத்தியமா? மாநகர சுகாதாரத் துறை கவனிக்க வேண்டுமென்கிறார். சுகாதாரத் துறை நான் அறிந்த வரை உணவுகள் பொதுச் சுகாதாரத்தை பேணும் வகையில் தயாரிக்கப் படுகின்றனவா என்று மட்டும் தானே சோதிப்பார்கள்? மாமிசம், சைவம் எல்லாம் பொதுச் சுகாதாரத்தோடு எப்படித் தொடர்பாகும்? இது என்ன புதுக் கூத்தாக இருக்கிறது? எப்ப இருந்து இவர் போன்ற ஆட்கள் தாயகத்தில் குரல் தர வல்ல பேர்வழிகளானார்கள்😂?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பிற்போக்குத் தனத்தின் இன்னொரு குணங்குறி தான் இந்த நல்லூர்க் கோவில் எல்லையை தனியார் காணிக்குள்ளும் நீட்டிக்கிற செயல். பரிஸ்ரா தன் வியாபார வெற்றி கருதி இவர்களுக்குப் பணிந்திருக்கிறது. இது அவர்களின் வியாபார முடிவு, அவர்கள் உரிமை. ஆனால், பரிஸ்ராவின் பணிந்து போதல் - compliance என்பது ஒரு தவறான முன்னுதாரணம்.எதிர்காலத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு இறைச்சிக் கடைக்கு அருகில் ஒரு கருங்கல்லைப் பொட்டுப் போட்டு, சரிகை கட்டி வைத்து விட்டு "இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும்" என்று வேலன் ரீம் பதாகை பிடிக்கக் கூடும். அந்தத் துணிவை பரிஸ்ராவின் வியாபார வெற்றி கருதிய முடிவு வேலன் ரீமுக்குக் கொடுத்திருக்கும். இவர்களுக்கும், அரச மரத்தைக் கண்டால் வேலி போட்டு "பௌத்த பூமி" என்று பிரகடனம் செய்யும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கும் இடையே எந்த வேறு பாடுகளும் இல்லை😂!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த கூகிள் படத்தில் சில விருந்தினர் விடுதிகளும் பரிஸ்ரா அளவு தூரத்திலேயே இருக்கின்றன போல தெரிகின்றன. அங்கேயும் சைவச் சாப்பாடு தானாமா? இந்தப் பிரச்சினை தெரிய வந்தது பயனர்களுக்கு நன்மையான விடயம் தான்😂!
-
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஈஸ்வரானந்தன் தயாரூபன்
ஓம், இது நவீன முறை தான். இந்த முறையில் முக்கியமான பல இரசாயனக் கழிவுகள் நீரில் இருந்து அகற்றப் படும். உரக்கழிவுகளோடு தொடர்பான நைட்ரேற்றுகளும் அகற்றப்படும் கழிவுகளில் அடங்கும், எனவே இலங்கையின் வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு மிகவும் பொருத்தமான வடி கட்டல் முறை இது. ஆனால், நான் குறிப்பிட்ட பக்ரீரியாக்களை இந்த வடிகட்டல் அகற்றாது. எனவே, இந்த மென்சவ்வு வடி கட்டலோடு, நீரை UV light கொண்டு தொற்று நீக்கவும் வேண்டியிருக்கும். இதனால் தான் உங்கள் கிராமத்தில் இரண்டையும் இணைத்த முறையைப் பாவிக்கிறார்கள். இந்த நவீன முறையின் மூன்று தீமைகள்: செலவு அதிகம் (மின்சாரப் பாவனை, பராமரிப்பு என்பன காரணம்), சரியாக பராமரிக்காமல் விட்டால் வடி கட்டும் மென்சவ்வில் பக்ரீரியாக்கள் மிகவும் சௌகரியமாக வளரும், வரட்சியான இடங்களில் நீரை விரயம் செய்ய வேண்டிவரும் (ஆனால், நீரை மீள் சுழற்சி செய்து சமாளிக்கலாம்).
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
பொய்ச் செய்திகள், புனைவுகள், ஊதிப் பெருப்பிக்கப் பட்ட செய்திகள், இவை காரணமாக மிகவும் பாதிக்கப் பட்ட நாட்டில் இருந்து எழுதுகிறேன். இதே நிலை நோக்கி "சுமந்திரன் லவ்வர்சும்"😎 தாயக நிலையைக் கொண்டு செல்லாமலிருக்கும் படி கேள்விக்குட்படுத்தி எழுதுவது நேர விரயம் அல்ல என்பது கருத்து! போலித் தகவல்களை காழ்ப்புணர்வு அடிப்படையில் பரப்புவது "மிகவும் பயனுள்ள நேரச் செலவு" என்பது உங்கள் அபிப்பிராயம் என ஊகிக்கிறேன்!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவிங்க தான் சொல்லீட்டாங்களே? இதில் "மத வாதம்" இல்லை! தீவகத்தில் அரச பாடசாலையில் நடந்தது போலவே, பொதுச் சுகாதாரத்தை காக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமே😎! NB: நல்லூர் சுற்றாடலில் திரியும் கட்டாக்காலி நாய்கள் மரக்கறி மட்டும் தான் உண்ணும் என அறிந்திருக்கிறேன். அணில், ஓணான் ஓடினால் கூட, அவை கோவிலில் இருந்து 500 மீற்றர்களுக்கு வெளியே ஓடிய பின்னர் தான் அவை துரத்தவே ஆரம்பிக்குமாம்😂!
-
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஈஸ்வரானந்தன் தயாரூபன்
இல்லை. கடைகளில் கிடைக்கும் புளோரைட் பற்பசையின் புளோரைட்டினால் பல்லுக்கும், உடலுக்கும் ஆபத்து இல்லை. இது ஒரு போலி விஞ்ஞானத் தகவல், அண்மைக் காலமாக விஞ்ஞானத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டவர்களால் பரப்படும் ஒரு விடயம். Fact: புளோரைட் என்ற கனியுப்பு பல்லின் மேற்படையான எனாமலுக்கு அவசியமான ஒன்று. இந்த மேற்படை பலவீனமானால், பற்களிடையே தேங்கும் உணவுத் துணிக்கைகளில் பக்ரீரியா வளர்ந்து அமிலம் சுரக்க, அது இன்னும் பல்லைப் பலவீனமாக்கும் (பல்லுக் கூசுதல் இதன் அறிகுறி). எனவே, குடிக்கும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு புளோரைட் இருக்கும் படி மேற்கு நாடுகளில் நகரங்கள் பார்த்துக் கொள்கின்றன. சில நேரங்களில், நீரில் புளோரைட் சேர்ப்பார்கள். மறு பக்கம், புளோரைட் பற்பசையில் இருப்பது மிகக் குறைந்த வீதமான புளோரைட் அயன். உதாரணமாக, மிகக் கூடிய புளோரைட் % கொண்ட ஒரு பற்பசையில் கூட, ஒரு தடவை பல் விளக்கும் பசையில் 2 மில்லிகிராம் புளோரைட் தான் இருக்கிறது. இந்த அளவு பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு தரும் என ஆதாரங்கள் இல்லை. இந்தப் போலி விஞ்ஞான புளோரைட் வதந்திகளுக்கு பல தோற்றுவாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சில ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் புளோரைட் செறிந்த குடி நீர் பற்றிய தகவல்கள். உதாரணமாக சாம்பியா (Zambia) வில், சில பகுதிகளில் புளோரைட் செறிவு குடிநீரில் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், பல்லும், எலும்பும் புளோரைட் நச்சினால் பாதிக்கப் படுகின்றன அந்த மக்களில். இத்தகைய புளோரைட் நச்சு நிலைமை மேற்கு நாடுகளில் ஏற்பட சாத்தியமில்லை.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இது கிட்டத் தட்ட ட்ரம்ப் அணியின் பரப்புரை போல இருக்கிறது😂: ஒரு புரளியை தமிழரசு சீரியசான செய்தி போல, ஒரு தரவும் இல்லாமல், போடுகிறார். அதன் உண்மைத் தன்மை என்னவென்று நான் கேட்கிறேன். அதற்குப் பதில் தராமல் இன்னொரு முகநூல் பதிவரின் யூ ரியூப் அலட்டலை இன்னொரு விடயப் பரப்பில் இருந்து போடுகிறீர்கள். இந்த முகநூல் "ஊடகவியலாளர்" தானே சுமந்திரன் தோற்ற நாள் முதல் "இந்தா சுமந்திரன் பா.உ ஆகிறார்" என்று யூ ரியூபில் கரடி விட்டுக் கொண்டிருப்பவர்? ஏதாவது உண்மையாக இருந்திருக்கிறதா இந்த யு ரீயூப் அலட்டல்களின் கரடிகள்? இவற்றைப் பார்த்து உங்கள் நேரத்தையும் வீணாக்கி, இங்கே இணைத்து ஏனையோரின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
-
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஈஸ்வரானந்தன் தயாரூபன்
எதைச் சுத்திகரிக்கிறார்கள் என்பதைத் பொறுத்து இருக்கிறது. இந்த நிலையத்தில் என்ன முறையைப் பாவிக்கிறார்கள் (filtration or osmosis) என்று தெரிந்தால் தெளிவாகச் சொல்லலாம். அனேகமாக இலங்கையில் நீரைச் சுத்திகரிக்கும் போது வடிகட்டிகள் மூலம் பக்ரீரியாக்களை (Coliform) அகற்றுவர், இது நல்லது. பக்ரீரியாக்களும், அமீபாக்களும் குடி நீரில் இருந்தால் நோய்கள் வரும். அதை விட சில கனிமங்கள் (minerals) மிகையாக இருந்தால் உயர் தொழில் நுட்பங்கள் மூலம் அகற்றலாம், இலங்கையில் செய்கிறார்களா என்பது தெரியாது. உதாரணமாக, புளோரைட் (fluoride) மிகையாக இருந்தால் பல் ஆரோக்கியம் கெடும். அகற்றுவது அவசியமாகும். சுத்திகரிப்பில், தீங்கு தரும் என்று நிரூபணமான நச்சுக்களும் அகற்றப் படலாம். பார உலோகங்களான ஈயம், குரோமியம் என்பனவும் அகற்றப் பட வேண்டும். இலங்கையில் மிக முக்கியமான நீர் வழி நச்சாக நைட்ரஜன் உரக்கழிவு இருக்கிறது. எனவே, நைட்ரேற்றுகளை அகற்றுவதும் நீரைச் சுத்திகரிப்பதாகும். எனவே இதுவும் குடி நீரை ஆரோகியமாக்கும்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
கீழே உள்ள 1987 இன் பிரதேசச் சபைகள் சட்டத்தின் படி தவிசாளர் தான் "தலை". நிறைவேற்று அதிகாரி - executive officer என்று சொல்கிறார்கள். இது தான் இந்த அடிபாடு. ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள். https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்படி சுமந்திரன் கூறியதாக "தமிழரசு" தன் காணொலியில் கூறுகிறார். கூட்டத்தில் இது தான் நடந்தது என்று தமிழரசு சொல்வதை வைத்து நாம் நம்ப முடியுமா தெரியவில்லை. அப்படிப் பட்ட "சுமந்திரன் லவ்வர்" தமிழரசு😎. அவர் உள்ளூரிலும் இல்லை. இதைப் பற்றி ஏராளன், ஓணாண்டியார் ஏதாவது உள்ளூர் தகவல்கள் தர முடியுமா? அது சரி, வீடியோவில் "பகீர்" எங்கே வருகிறது😂?