Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. உங்களைப் பற்றிப் பேசுகிறீர்களா🤣? அப்படியெல்லாம் ஆட்டு, மாட்டிறைச்சியை "பிடி பிடி"ப்பதைக் குறையுங்கள். கோழி இறைச்சி ஆரோக்கியமானது. பூமி வெப்பாகும் என்ற அக்கறையினால் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நாடி இதைச் செய்ய வேண்டும்!
  2. புலவர் என்பது முற்காலத்தில் "அறிவுடையோர்" 😎என்ற அர்த்தத்தில் பயன்பட்ட ஒரு பெயர். அதை அவதாரப் பெயராக வைத்துக் கொண்டு முட்டாள் போலப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆடு, மாடுகளின் "கழிவில்" இருந்து வரும் மீதேன் அல்ல, அவற்றின் வாயுவில் (eructation) இருந்து வரும் மீதேன் தான் பச்சை வீட்டு விளைவை உருவாக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆறுதலாக வாசித்தீர்களானால், சூரியப் படலங்களை அமைப்பதற்கு மேய்ச்சல் நிலம் எடுக்கப் பட்டால், அது சூழல் மாசடைதலை, பூமி வெப்பமாதலைச் சமாளிக்கும் ஒரு சமன் படுத்தும் செயலாக இருக்கும் என எழுதியிருக்கிறேன். இதன் அர்த்தம், நிலத்தில் இருந்து எடுக்கும் இயற்கை வாயுவையும் குறைக்கலாம் என்பது தான். உலகின் சில பகுதிகளில், போக்குவரத்தினால் உருவாகும் புவி வெப்பமாக்கும் விளைவை விட , ஆடு, மாடு, செம்மறி ஆடுகளால் வெளியிடப் படும் மீதேன் வாயுவினால் ஏற்படும் விளைவு அதிகம் - இது சூழலியல் ஆய்வுகளின் முடிவு, நாதக பாணி அரசியல் பிரச்சாரம் அல்ல! ஏன் அப்படி அதிகமாக இருக்கிறது? உயிர்சுவட்டு எரிபொருளை எரித்து உருவாகும் காபனீரொட்சைட்டை விட, மீதேனின் வெப்பமாக்கும் இயலுமை 6 மடங்கு அதிகம் என்பதே காரணம். வீகன் உணவுப் பழக்கத்தின் ஒரு விஞ்ஞான அடிப்படையும் இந்த தரவு தான்! தமிழ் நாடு என்ன, சிறந்த விவசாய மாநிலமான பஞ்சாப் கூட சீசனலாக பால் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது காலனிலை மாறுதல்களால் சந்தைகளில் கேள்வி கூடிக் குறையும் போது நிகழ்வது. பால் உற்பத்தி தொடர்ந்து வீழச்சியடைவதால் ஏற்படும் நிலை அல்ல! இப்படி பால் உற்பத்தி தமிழ் நாட்டில் குறைகிறது என்பதற்கான புள்ளி விவர ஆதாரம் இருந்தால் இங்கே பகிருங்கள், தொடர்ந்து பேசலாம். யூ ரியூபில் குப்பனும் சுப்பனும் அலட்டுவதை ஆதாரமாக இணைத்து மெனக்கெடாதீர்கள்!
  3. அப்ப கனடாவில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் எப்படி? உங்கள் அணி கிண்ணம் ஏதும் வென்று வந்தீர்களா? என்னையும் இந்த அணியொன்றில் இணைத்து வார இறுதியில் சீரியசாகப் பெண்டு நிமித்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ஒரே நேரத்தில் பல குடும்பங்கள் அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவிற்காக வட கரோலினாவிற்குப் போக வேண்டியதாகி விட்டது! ரீம் காலி😂! பின்னர் வட கரோலினா பற்றி விரிவாக எழுதுகிறேன்.
  4. மேலே புலவர் பொங்கியிருப்பதைப் பார்த்தீங்கள் தானே? நா.த.கவாவது இல்லாமல் போறதாவது! இவையள் பாம்பு பூச்சி ஓணாணைக் கூப்பிட்டு சீமான் மாநாடு வைச்சாலும் "இது வரை யாரும் செய்யாததைச் செய்பவன் தான் தலைவன்!" 😎 என்று பின்னால் செல்லும் மூளை பிரஷர் வாஷரால் மினுக்கப் பட்ட ஆட்கள்! இவையள் பெருகிவீனமேயொழிய அருகாயீனம்!
  5. அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்த பைடனும், ஹிலாரியும், ஜோன் கெரியும் "இடதுசாரிகள்" என்று நம்பும் அளவுக்கு உங்கள் அறிவு இருக்கிறது 😂- ஆனால் உங்கள் வாசிப்பு பற்றி நீங்களே இங்கே அறிக்கையிட்டிருப்பதால் இதில் அதிசயமில்லை! ஒபாமா, ஹிலாரி, பைடன், கெரி: இவர்கள் இருந்த காலத்தில் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் மீதான குற்றங்கள் பற்றிய தீர்மானங்கள் வந்தன (அந்த வேளையில் எதிர்த்து வாக்களித்த புரினின் ரஷ்யவைத் தான் இங்கே தமிழ் தேசியப் போர்வை போர்த்தியபடி உலாவரும் சில "யாழ் கள நடிகர்கள்" 😎விருப்பம் என்று எழுதியிருக்கிறார்கள்). ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த மனித உரிமைகள் எல்லாம் பின் தள்ளப் பட்டு விட்டன. ட்ரம்புக்கும் ருபியோவுக்கும் சிறிலங்கா எங்கே இருக்கிறது என்பதே தெரியுமோ என்பது சந்தேகம். இனியென்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் புரிதலில் "இடது சாரிகளான" ரஷ்யாவிடமும், சீனாவிடமும் நீதி கேட்பீர்களா?
  6. இது ஏன் "நலமோடு நாம் வாழ" பகுதியில் இணைக்கப் பட்டிருக்கிறது? யாரோ பொழுது போகாமல் முகட்டைப் பார்த்து யோசித்த பின் இணையத்தில் அலட்டும் பதிவுகளை ஆரோக்கிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ள முடியுமா? அடுத்த தடவை வயிற்றோட்டம், வாந்தி வந்தால் அதை அப்படியே தடுக்காமல் "நஞ்சை மூளை வெளியேற்றட்டும்" என்று வீட்டிலேயே இருந்து பாருங்கள்😂. உடலின் நீர்ச்சத்தும், கனியுப்புக்களும் சேர்ந்து வெளியேறி, சிறு நீரகம் முதல் இதயம் வரை திருத்த இயலாத சேதம் அடையும். அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருக்க வேண்டும், பின்னர் டயலிசிசோடு நாட்களைக் கழிக்க வேண்டியும் வரலாம். அடிப்படையான மருத்துவப் புரிதல் அற்ற இந்த முட்டாள் தனங்களைப் பின் பற்றுவது தனிப்பட்டவர்களின் உரிமை, ஆனால் மருத்துவ ஆலோசனை போலப் பரப்புவது சமூக விரோதச் செயல்.
  7. இதில் இருக்கும் சில தகவல்கள் தவறானவை, அனேகமாக நா.த.க அணியின் சமூகவலை ஊடகங்களினால் பரப்பப் படுபவை, அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே இதை எழுதுகிறேன்: 1. தமிழ் நாடு அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை, அப்படி விற்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை. ஆனால், தனியார்/அரச கூட்டுத்தாபனங்கள் சில தொழில் முயற்சிகளைச் செய்யும் போது அந்த நிலம் குத்தகையாக வழங்கப் படும். மேய்ச்சல் நிலம் இப்படியாக அண்மையில் பறி போன ஒரு சந்தர்ப்பம் ஒரு சூரிய மின்படலப் பண்ணை (Solar farm) அமைக்கப் பட்ட சந்தர்ப்பமாக இருக்கிறது. ஆடு மாடுகள் வெளியிடும் மீதேன் வாயுவினால் சூழல் மாசடையும். சூரியப் படலங்களை அமைத்தால் அந்த மாசடைதலால் வரும் விளைவை பசுமைத் தொழில் நுட்பம் மூலம் கொஞ்சம் நிவர்த்திக்கலாம். இது சரியான சமன் செய்யும் முயற்சி தான். 2. அதை விட தமிழ் நாடு உயர் நீதிமன்றம் (தமிழ் நாடு அரசு அல்ல!) சில வனப் பாதுகாப்புப் பிரதேசங்களில் கால்நடை மேய்க்கத் தடை விதித்திருக்கிறது. புலி வேட்டை போன்ற சட்ட விரோத நடவடிக்கைளைத் தடுக்கும் இந்த நடவடிக்கையும் புரிந்து கொள்ளக் கூடியதே. 3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை. இந்த தரவுகளையெல்லாம் சீமான் அணியினர் நம்பவும் மாட்டார்கள், தங்கள் ஆதரவாளர்களை தேடிப் பார்க்குமாறு ஊக்குவிக்கவும் மாட்டார்கள். எனவே பொய்யில் கட்டியமைக்கப் பட்ட ஒரு வாக்கு வேட்டை முயற்சி இந்த மாடுகளுக்கான மாநாடு!
  8. எங்கட ஆட்களில் ஒரு பகுதியினருக்கு இன்னும் உலக வாழ்க்கையில் எது முக்கியமென்பது பற்றிய அறிவு கிடையாது என்பதைக் காட்டும் பதிவு. பிறக்கிறோம், இறக்கிறோம். இடையில் ஏனையோரை தட்டிச் சுத்தாமல், பிராண்டி வாழாமல், கொல்லாமல் வாழ முடிந்தால் அதுவே போதும். இதை விட்டு விட்டு , செத்த பின்னர் என்னைக் கொண்டாட வேண்டும், நினைவுகூர வேணும், புகழ ஒரு கூட்டம் வேணுமென்பதெல்லாம் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத பினாத்தல் ரீமின் ஐடியாக்கள். இந்தப் பதிவைக் கூட சொந்தப் பெயரில் எழுத இயலாத இந்த முகநூல் பதிவர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சம்பந்தர் செய்ததை விட எதுவும் செய்து விடாமையால் தான் ஒளிந்து நின்று எழுதுகிறார் போல இருக்கு என ஊகிக்கிறேன்😎!
  9. ஐரோப்பாவிற்குச் சென்று கொண்டிருந்த கப்பல்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இப்படித் தொடர்ந்தால் கப்பல் கம்பனிகளின் காப்புறுதிச் செலவு உயரும். உயரும் செலவைக் கப்பல் கம்பனிகள், தன் வாடிக்கையாளர்களை நோக்கி நகர்த்த, அந்த வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் நுகர்வோர் மீது சுமத்துவர். உக்ரைன் போர் ஆரம்பித்த நேரம் "ஐயோ தக்காளி விலை கூடிற்றுது, நேட்டோ தான் காரணம்" என்று அழுத ஐரோப்பியத் தமிழர்கள் இங்கும் வந்து ஹௌதிகளைத் திட்டாமல் அமெரிக்காவைத் தான் திட்டுவர்😂!
  10. இடது சாரிகளை விட வலதுசாரிகள் உங்களை சுரண்டாமல், சொகுசாக நடத்துகிறார்கள் என்கிறீர்களா? மண்ணிறத்தோலோடு உங்கள் போன்றோர் வலதுசாரிகளிடம் கூழைக் கும்பிடு போட்டால் கூட உங்களை ஒரு தூரத்தில் தான் வைத்திருப்பர். ஏனெனில் வலது சாரி வாத்தின் உள்ளீடே xenophobia தான். இது புரியாமல் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போட்ட கோழிகள்" போன்ற அமெரிக்க பலஸ்தீனர்கள் போல பலர் இருக்கிறீர்கள்😎. மிஷேல் ஒபாமா என்ன சொன்னார் என்பது விளங்காமல் தான் "அவர் ஒபாமாவை வறுக்கிறார்" என்றிருக்கிறீர்கள் என்பது புரிந்ததால், அவர் சொன்னதை அப்படியே பிரசுரித்த கார்டியனை செய்தியை இணைத்தேன். "வாசிப்பு, தேடல், விளங்கிக் கொள்ளல்" என்பன ட்ரம்ப் பக்தர்களின் strong suit அல்ல! 😂 என்பதை அறிந்ததால் நீங்கள் கடந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஒபாமா ஜனாதிபதியாக வர முதலே உலகின்/அமெரிக்க சமூகத்தின் தீவிரவாதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒருவர் , ஐரோப்பிய நாடுகளில் இருந்த முற்போக்கு சக்திகளுக்குக் கூட அதனால் நன்மைகள் விளைந்தன. இதற்காகத் தான் கொடுத்தார்கள்.இதைப் பற்றியும் வாசிக்காதீர்கள்😎! சோசியல் மீடியாவில் தலையைக் கொடுத்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருங்கள்!
  11. ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂! PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  12. அமரர் சம்பந்தரை தமிழ் சமூகம் மறக்கவில்லை. அப்படி மறப்பதற்கு தீவிர தேசியர்கள்/வாய் வீச்சாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்! ஏனெனில், சம்பந்தரையும், உயிரோடிருக்கும் சாணக்கியன், சுமந்திரன் ஆகியோரையும் boogeyman ஆகக் காட்டிக் கவனத்தைக் கலைக்கா விட்டால், இந்த தீவிர தேசிய வாய்வீச்சு பா.உ க்கள் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் கவனிக்க ஆரம்பித்து விடுவர்😂. எனவே, இந்த சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பு தகரடப்பா சத்தங்கள் தொடரும். போன வாரம் நடந்த அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) ஒரு கூட்டத்தில் இதைக் காணக் கிடைத்து. ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் "சம்பந்தர் இறந்தது எவ்வளவு நல்லது" என்று ஒரு தீவிர தேசிய ஆர்வலர் அரை மணித்தியாலங்கள் பேசியிருக்கிறார். பேசியவர், தான் 150 ஆண்டுகள் வாழ்வார் என்று நம்பினாரா அல்லது சம்பந்தரை விட அதிகமாக தான் இந்த இளம் வயதிலேயே நிறைய சாதித்து விட்டதாக நம்பினாரா தெரியவில்லை😎!
  13. இது அவங்கட "பாரம்பரியம், கலாச்சாரம்" எல்லோ? எப்படிக் குற்றமாகும்?😎
  14. இதைத் தான் "ஒற்றைப் பரிமாணப் பார்வை" என்றேன். அதையே மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். மீள மீள எழுதுவதால் ஒரு ஆய்வுக்கு பல பரிமாணங்களும் ஆழமும் கிடைத்து விடாது. அரசுகள் எப்படி இருந்தாலும், முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த நாடுகளின் மக்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர முற்படுவதன் காரணங்கள் மனித அபிவிருத்தி சார்ந்தது. இதை எவ்வளவு விவசாயிகள் உள்நாட்டில் தொழிலை இழந்தார்கள் என்ற இலக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பிட முடியாது. சில தீமைகள் இருக்கும், பல நன்மைகள் இருக்கும். நிகர விளைவை அந்த நாடுகளின் நிலைமைகளே தீர்மானிக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, அமெரிக்காவின் டொலர் கடன் காரணமாக உலகில் செல்வாக்கிழக்கும் என்று கூட நீங்கள் எழுதிய நினைவு. அதுவும் ஒரு பரிமாணப் பார்வை என்று சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்க டொலரை உலகம் நம்பி, சேமிப்பு நாணயமாக வைத்திருக்க அமெரிக்காவின் பொருளாதாரம்/கடன் நிலை மட்டும் காரணமல்ல என்று சுட்டிக் காட்டியிருந்தேன். இன்னும் உங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விடயத்தை அணுகும் கலை வாய்க்கவில்லையென நினைக்கிறேன்.
  15. ஏனைய ட்ரம்ப் பக்தர்கள் போல சோசியல் மீடியா துணுக்குகளில் இருந்து தான் நீங்கள் செய்திகள் அறிந்து கொள்கிறீர்கள் போல! கீழே கார்டியன் இதழில் மிஷேல் ஒபாமா சொன்னதன் முழுவடிவம் இருக்கிறது. மணவாழ்க்கை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா என்று பாருங்கள். https://www.theguardian.com/us-news/2022/dec/29/michelle-obama-couldnt-stand-husband-barack-10-years
  16. இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது. 33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!
  17. தவறு கர்ப்பமாகுமாறு ஊக்குவிக்கப் படும் பள்ளி மாணவிகளின் வயதில் இருக்கிறது. பள்ளி மாணவிகள் என்றால் அதிக பட்சம் 18 வயது தான் அனேக நாடுகளில் வரும். ரஷ்யாவின் தூர தேசங்களான சைபீரியாவில் இன்னும் வறுமை, வேலையின்மை என்பன இருக்கின்றன. இந்தப் பிரதேசங்களில் "மாட்டுப் பட்டிருக்கும்" பள்ளி மாணவிகள் பொருளாதாரம் நாடிக் கர்ப்பமாக ஆரம்பித்தால் ரஷ்யாவின் அனாதைக் குழந்தைகள் இல்லங்களில் தேங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ரஷ்யாவில் பல அனாதைக் குழந்தைகள் இல்லங்கள் இருக்கின்றன என்பதும்,அங்கேயிருந்து மேற்கு நாட்டினர் குழந்தை தத்தெடுப்பது வழமையென்பதும் உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றிய அக்கறை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. நீங்களோ வழமை போல நீங்கள் சிறிலங்காவில் இருந்த போதே உங்களுக்கு சோறு போட்ட மேற்கு நாட்டினரைத் திட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
  18. கீழேயிருக்கும் கட்டுரையில் எந்தெந்த நாடுகள் பெண்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொண்டு "வீட்டு மனைவியாக"😎 இருந்து கணவரையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் வேலையைச் செய்ய ஊக்குவிக்கின்றன எனக் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். போலந்து (தீவிர கத்தோலிக்கர்கள்), ஹங்கேரி (Eastern Orthodox - பழமை வாதக் கிறிஸ்தவர்கள்), ரஷ்யா ((Eastern Orthodox- பழமை வாதக் கிறிஸ்தவர்கள்) - ஆகியவையே இந்த நாடுகள். The ConversationRussia is paying schoolgirls to have babies. Why is pron...Public opinion is split in Russia over a new move to pay schoolgirls who have babies.இவர்களோடு எங்கள் சில யாழ் கள உறவுகளில் "ஆதர்ச தலீவர்" ட்ரம்பும் இதே போல பெண்கள் குழந்தைகள் பெற்றால் சில ஆயிரம் டொலர்கள் சும்மா கொடுக்கும் திட்டம் ஒன்று வைத்திருக்கிறார். இந்த திட்டங்கள் பிள்ளைப் பேற்று வீதங்களை அதிகரிக்கின்றனவா என்றால் , பெரும்பாலும் இல்லை என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள். காரணம், பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தியாகம் செய்து தான் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நவீன சமூக இயங்கியலை பணத்தை வாரி இறைத்து மாற்ற முடியாது.
  19. ஆப்பு நிச்சயமாக உண்டு. நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கும், 2026 இல் அமலுக்கு வரும் வரிக்குறைப்புகள் 2028 இல் காலாவதியாகும் போது கையில் காசு வாங்கும் (tips) தொழில் செய்வோருக்கும், வேலை செய்ய இயலாமல் அரச மருத்துவக் காப்புறுதியில் தங்கி வாழும் வயசாளிகள், உடல் இயலாதோருக்கும் உடனடி ஆப்பு. ஏனைய பெரும்பணக்காரர்களுக்கான வரிக் குறைப்புகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ள இயலாத வகையில் கார்னி வெறுப்பு உங்களை ட்ரம்ப் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறதென நினைக்கிறேன். ஆனால், கார்னியின் கனடாவிற்கு ஆப்பு விழுந்தால் உங்களுக்கும் பாதிப்புத் தானே என்றும் யோசிக்க மறுக்கிறீர்கள்.
  20. இதில் ஒரேயொரு தகவல் பிழை இருக்கிறது: சர்வாதிகாரியான பரிஸ்ரா 1950 கள் வரையில் அமெரிக்க, மேற்கு சார்ந்த அரசொன்றை நடத்தி வந்தார். ஆனால், உள்ளூர் மக்களுக்கு பல துன்பங்கள், மனித உரிமை மீறல்கள் அவரால் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் அவரைக் கண்டிக்க ஆரம்பிக்க, பிடல் காஸ்ரோவின் புரட்சியினால் 1953 இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. கியூபப் புரட்சியின் பின்னர் உடனடியாக அமெரிக்கா தடைகளை விதிக்கவில்லை. காஸ்ரோ கூட ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் பக்கம் சாய்ந்து விடவில்லை. 1959 இல் கியூபத் தலைவரான காஸ்ரோ அமெரிக்காவிற்கு வந்த போது அவருக்கு மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அந்த நேரம் உப ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் காஸ்ரோவைச் சந்தித்துப் பேசிய பின்னர் "a nice young man with strange ideas" என்று தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். 1961 இல் கியூபாவைக் கைப்பற்ற சி.ஐ.ஏ தன்னிச்சையாக முயன்ற பன்றிக் குடா நடவடிக்கை, பின்னர் 1962 இல் சோவியத் ஏவுகணைகளை இரகசியமாக கியூபாவினுள் நிறுத்த முயன்றமை, இந்த இரு கட்டங்களில் தான் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் முகலில் போடப் பட்டன.
  21. @ரசோதரன் 10 நாட்கள் மெதுவாக என் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, இன்று தான் வாசித்தேன். அருமையான ஜீவ காருண்யக் கதை! அமெரிக்காவில் உரிமையாளர் இல்லாத நாய்களைக் காண முடியாது, ஆனால் உரிமையாளரும், வீடும் இல்லாத பூனைகள் எல்லா நகரங்களிலும் காணலாம். எமது வீட்டுச் சுற்றாடலிலும் ஒரு கறுப்பு வெள்ளைப் பூனை இப்படிச் சுதந்திரமாக உலவுகிறது. அவருக்கு ஒரு நேர சூசிகையும் இருப்பதைக் காண்கிறோம். இரவு 7 மணிக்கு முன் வளவினால் நடந்து வளவின் இடது மூலைக்குப் போய் விட்டு, 8 மணியளவில் அதே பாதையால் திரும்பிச் செல்லும். முன் பக்கக் கமெரா இரவு 7 க்கும் 8 க்கும் அலேர்ட் கொடுத்தாலும் இப்போது மெனக்கெட்டுப் பார்ப்பதில்லை, "பூனை குறொஸ்ஸிங்" 😂 என்பது தெரிந்திருப்பதால். தாய்ப்பூனையோ, கடுவன் பூனையோ குட்டிகளைச் சாப்பிடுவது சாதாரணமாக/இயற்கையாக நிகழ்வதில்லை. நாய், பூனை , எலி போன்ற விலங்குகள் குட்டியீன்ற பதட்டத்தில் இருக்கும் போது சில சமயங்களில் இது (cannibalism) நிகழும். குட்டியீன்ற இந்த விலங்குகளை மனிதர்கள் கிட்ட நெருங்கி பதட்டத்தைக் கூட்டினால் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே தான், குட்டியீன்ற மாமிசமுண்ணி விலங்குகளை அதிகம் நெருங்கிச் சென்று பதட்டப் படுத்தாமல் விலகி நடந்து கொள்ள வேண்டும். பூனையைப் பற்றிப் பேசும் போது இன்னொரு ஆச்சரியமான விடயமும் மிருகவைத்தியப் பார்வையில் குறிப்பிடத்தக்கது: ஒரு வளர்ப்பு (domesticated) யானையைப் பரிசோதிக்க பக்கத்தில் அதன் பாகன் இருந்தால் ஒருவர் போதும். ஆனால், ஒரு வளர்ப்புப் பூனையைப் பரிசோதிக்க மூவர் தேவை: ஒருவர் முன் கால்களையும், தலையையும் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொருவர் பின்கால்களைத் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவர், மிருக வைத்தியர், பரிசோதிக்க வேண்டும். இல்லையேல், நகங்களை வெளியே நீட்டிய கால்களால், தாறுமாறாகக் கீறித் தள்ளி விடும்!
  22. சிறிதரனுக்கு, பார் லைசென்ஸ் கறுப்புப் புள்ளி வருவதற்கு முதலே பல ஊழல், உள்ளடி வேலைகளில் "நல்ல பெயர்"😎 இருக்கிறது. இங்கே யாழிலேயே பாதிக்கப் பட்ட ஆட்கள் தேசியம் கருதி பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சிறியர் அரசியலுக்கு வந்தது சுமந்திரன் போல தன் தகுதியைப் பாவித்து தீர்வை நோக்கி நகர்வதற்காக அல்ல. தான் ஒரு புலிகளின் முக்கிய தளபதியின் உறவினர் என்ற அறிமுகத்தோடு கையில் காசு பார்க்க மட்டும் தான். இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமந்திரனிடம் இல்லை. வேறு குறைகள் அவரை எதிர்க்கும் மக்கள் மனங்களில் இருக்கலாம், ஆனால் சிறிதரன் போல ஊழல் பேர்வழி அல்ல சுமந்திரன்.
  23. ஜனநாயகம் என்ற பெயரில் குழப்பம் விளைவிக்கும் றௌடிகளையெல்லாம் அணைத்துச் செல்லாமல் ஏற்பாட்டாளர்கள் இனி வரும் காலங்களில் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த நிகழ்வில் சர்ச்சை கிளப்பிய றௌடிகளுக்கு உண்மையில் மக்களிடம் ஆதரவு இருக்கிறதா என்று அறிய அவர்கள் சுயாதீனமாக இனி வரும் தேர்தல்களில் நின்று பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.