Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்று காட்டிக் கொடுத்து விடும் என்கிறீர்கள், அப்படியா? அப்ப இந்த "தமிழ் தேசியம்" என்று நீங்கள் தலையில் தூக்கித் திரியும் "விக்கிரகம்" இதில் எந்த "தமிழ் வழக்கிற்குரியது"?
  2. யுத்தம் முடியாது என்பது இரு தரப்பிற்கும் தெரியும், பார்வையாளர்களுக்கும் தெரியும். இஸ்ரேலியரால் கொல்லப் பட்டது 42000 பலஸ்தீனிய மக்கள், அதில் 3 இல் ஒருவர் குழந்தை- இந்தக் குழந்தைகளின் இளம் பெற்றோர், அல்லது சகோதரங்கள் இஸ்ரேலை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை அடுத்த 30 -40 ஆண்டுகளுக்கு. எனவே, யுத்தம் முடியாது. இதில் ஹமாஸ் போன்ற வன்முறை மட்டுமே வழி என்று நினைக்கும் அமைப்புகளும் ஆச்சரியம் தருகின்றன: "தங்கள் தலை போனாலும் பரவாயில்லை, இஸ்ரேலுக்குக் கீறல் விழுந்தால் போதும்" என்ற மனநிலை, உண்மையில் என்ன மாதிரியான மனப் பாங்கென்று விளங்கவில்லை. இனி இவர் தான் அடுத்த தலைவராக வரக்கூடும் என்று யாரும் சும்மா ஊகித்தாலே அவர்களைத் தூக்கி விடுவார்கள் போல இருக்கு!
  3. எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இதைப் பார்த்த பின் தான் தெரியவந்தது. ஆனால், தோழர் பாலனின் பதிவின் நோக்கங்கள்: சுமந்திரனை இந்தியாவின் சொல்கேட்டு ஆடுபவராகக் காட்டுவதும், "சந்திரஹாசன் புலி எதிர்ப்பாளர்" என்று நினைவுறுத்தி சுமந்திரன் புலிநீக்கம் செய்கிறார் என்று காட்டுவதும். தந்தை செல்வா, சந்திரஹாசன், இப்போது இவர்- மூவரும் வாழ்ந்த காலங்கள் வேறு. அரசியல் படுகொலைகள் மலிந்த காலத்தில் சந்திரஹாசன் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தது அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரின் சாதாரண மனநிலை. அவர் செல்வநாயகத்தின் மகன் என்பதால் அவர் கருத்து பொதுவெளியில் கவனம் பெற்றது. இப்போது அரசியல் படுகொலையும் இல்லை, அதைச் செய்வோரும் இல்லை என்ற காலத்தில் பேரன் எதைக் கொண்டுவருகிறார் என்று தான் வாக்காளர்கள் பார்க்க வேண்டும். ஆனால், தோழர் பாலன் போன்ற தேசிக்காய்கள் "குத்தி முறிந்து" தந்தையின் மீதான எதிர்ப்பை இவர் மீதும், நாசூக்காக சுமந்திரன் மீதும் தூண்டி விடுவர். பட்டாசு றெஜிமென்ற் அதை எல்லா இடமும் பரப்பித் திரியும்😂!
  4. ஒபாமா செய்தது போல முழுநீள பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டினாலும் நம்ப மாட்டியளோ? 😂
  5. இன்னொரு மருந்தும் இருக்கிறது😎: எந்த படமோ, செய்தியோ இணையத்தில் எடுத்தால் ஒரு தடவை அது உண்மையா என்று பார்த்து விட்டு இணைத்தல். அப்படி இணைப்போர் மீது நம்பிகை வரும். இல்லா விட்டால் அவர்கள் உண்மையைச் சொன்னாலும் நான் மேலே குறிப்பிட்டது போல சந்தேகம் தான் வரும். இப்படியான ஆரோக்கியமான நடைமுறை காரணமாகத் தான் யாழ் சில ரொய்லெற் தமிழ் ஊடகங்கள் போல ஆகாமல் இருக்கிறது இன்னும்!
  6. சரி, இதை நீதிமன்றில் சொல்லி குற்றச் சாட்டில் இருந்து ஒருவர் தப்ப முடிகிறதா என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஆதாரம் காட்ட முடியாதா? வாயை (அல்லது வட்சப்பை) மூடிக் கொண்டிருக்க வேண்டும்.
  7. "தோழர்" பாலன் வழமை போல "பெட்டிக்கு வெளியே இருந்து" யோசித்திருக்கிறார். "ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுகிறது, எனவே அவர்கள் அகதிகளாக இருப்பதை ஊக்குவிக்கிறது" என்ற நவீன யோசனை "பெட்டிக்கு வெளியே" இருந்து யோசித்தால் மட்டும் தான் ஒருவருக்கு வரும்😂!
  8. இந்த மதுபானசாலை அனுமதி என்ற விடயம், சந்தேகம் என்ற நிலையில் இருந்து, கட்டுப் பாடற்ற வதந்தியாகி, இப்போது அர்த்தமில்லாத வட்சப் குப்பையாக மாறி விட்டது. இதைப் பரப்பும் ஒருவரை சிறிதரன் செய்தது போல பிடித்து, மடக்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து உதாரணமாக்கினால், இப்படியான "ஒன்லைன் உருட்டல்"😎 குழுக்களுக்கு நல்ல பாடம் கிடைக்கும். அங்கஜன் செய்தாலும் பாராட்டலாம்! செய்வார்களா?
  9. "தன் பாதுகாப்பிற்கு ஆபத்து" என்று சுமந்திரன் முறையிட்ட பொலிஸ் முறைப்பாட்டை இங்கே தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்று இணைக்கும் படி கேட்டு சில வருடங்கள் கடந்து விட்டன. யாரும் இணைக்கவில்லை. ஏன்? அப்படியொரு முறைப்பாடு சுமந்திரனால் செய்யப் படவில்லை. இலங்கைப் புலநாய்வுப் பிரிவு அவருக்கு ஆபத்து இருப்பதாகத் தான் விசேட அதிரடிப்படை (இராணுவம் அல்ல!) பாதுகாப்பு வழங்கப் பட்டது, இன்னும் வழங்கப் படுகிறது. டிபிஸ் எழுதிய கட்டுரை (போன வாரம் நுணா இணைத்திருந்தார்) புலம்பெயர்ஸ் சிலர் உள்ளூரில் இருந்த சிலருக்கு பணம் அனுப்பி சுமந்திரனைக் கொல்ல திட்டம் போட்டதாகச் சொல்கிறது. சுமந்திரன் மீது காண்டில் இருக்கும் புலம்பெயர் தீவிர "உசார் மடையர்களை" அவதானித்தால், இது நம்பக் கஷ்டமான விடயமில்லை😎!
  10. வழமையாக உங்கள் நீண்ட அலட்டல்களை நான் வாசிப்பதில்லை😎. ஆனால், மேலோட்டமாக வாசித்த மட்டில் உங்களுக்கு சில வருடங்கள் முன்பு யாழில் நடந்த உரையாடல்கள் நினைவில் இல்லை, அல்லது அதை நினைவில் வைத்திருந்தால் பட்டாசுக் குழுவின் லைக்குகளை இழக்க வேண்டி வரும் என்ற பயம் காரணமாக denial இல் இருக்கிறீர்கள். எனவே மினக்கடாதீர்கள் - அப்படியே இருங்கள்!
  11. கிளிநொச்சியில் முஸ்லிம் பாடசாலை இருப்பதாக இணையத் தேடலில் எதுவும் வரவில்லை. வழமை போல இது "ஒன்லைன் உருட்டல் குழுவின்" வதந்தியாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன்.
  12. தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார். இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார். ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை. பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும்.
  13. அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று தாவித்தாவி நாளுக்கொரு கொள்கையோடு நின்றவர். இப்போது என்ன கொள்கையோடு நிற்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? அகில இலங்கை கணிதத்தில் முதலாமிடம் என்பது தனிப்பட்ட ரீதியில் சிறப்பு, வாக்குப் போடும் மக்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.
  14. திருநீற்று பூச்சோடு வலம் வரும் விக்கி ஐயாவும், சீனித்தம்பி யோகேஸ்வரனும் "வதை" செய்யா சைவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பில்லை, அது போல சுமந்திரன் பைபிளைப் பின்பற்ற வேண்டியதில்லை. எல்லாத் தரப்பும் தங்கள் மதங்களை தங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கட்டும், அரசியலில் உள்ளக நேர்மை மட்டும் போதும். அது சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? இதையே நான் பல வருடங்களாகச் சொல்லி, அதற்காகவே யாழ் கள சைவக் காவலர்களிடம் திட்டு வாங்கியது (ஒரு பக்கம் உங்களுக்குப் பச்சை போட்ட சாத்தானுக்கும் டோஸ் கிடைத்தது😎) உங்களுக்குத் தெரியாது என்பதாலா😂? தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதியை பதவியில் இருந்து அகற்றுவது மிக மிக இலகு: மக்களின் வாக்குகள் தான் ஆயுதம். 2015, 2020 இல் உங்களைப் போன்றோர் நின்ற இடத்திலேயே நின்று "சுமந்திரன் ஏன் தேர்தலில் நிற்கிறார்?" என்று புறு புறுத்தது சுமந்திரனை அகற்றவில்லை😂. எனவே என்ன வழி? புரட்டுகள் - மேலே நீங்கள் சொன்னது போல "சுமந்திரன் பாதுகாப்பு கேட்டுப் பெற்றுக் கொண்டார்" என்பது போன்ற போலித் தகவல்கள்-, சொல் வன்முறை, புலிகளைத் துக்கித் தலையில் வைக்க வேண்டுமென்ற மிரட்டல், இவையெல்லாம் வேலைக்காவாது! மக்களை வாக்களிக்க விடுங்கள். மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் (பிறகு வாக்கை மாற்றி விட்டார், ஆனால் எங்களிடம் ஆதாரம் இல்லை என்று உருட்டாமல்😎!)
  15. அர்ச்சுனா இராமநாதன் பற்றி முதலிரு நாட்களில் உவகை கொண்டோர் பின்னாட்களில் "தொண்டைக்குள் முள்சிக்கி" தவித்தது போல இங்கே நிகழக் கூடாதென பிரார்த்தனை செய்கிறேன்😎! மற்றும் படி நிஷானுக்கு வாழ்த்துக்கள்👍!
  16. இந்த வழக்கில் வழிகாட்டியாக இருந்தவர் அமரர் கௌரி சங்கரி தவராஜா, தவராசா அவர்களின் மனைவியார். அதையும் பெயர மாற்றிப் பாவித்துப் பிரச்சாரம் நடக்கிறது போல!
  17. சுமந்திரன் தமிழரசு அல்லது கூட்டமைப்பு - இந்த இரு கட்டமைப்புகளோடும் ஒரு அதிருப்தியும் தன்னளவில் கொண்டிருக்காத போது அவர் ஏன் வெளியேறி முகவரி தேட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டும்? ஏன் கேட்பவர்கள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்? ஏதோ "இளைஞர்களை முன்னிறுத்த வேண்டுமென்று" முகமூடியோடு வந்தார்கள் (உண்மை நோக்கம் சுமந்திரனை அகற்றுவது மட்டும் தான், இளைஞர்களில் அக்கறையெல்லாம் கிடையாது!). இப்போது "சீற் தரவில்லை" என்று வெளியேறியோர் எல்லாம் இளைஞர்கள் இல்லையே? 2020 இலேயே இளைஞர்களை புதிதாக கட்சிக்குள் அரசியலில் உள்ளீர்க்க வேண்டுமென்று சுமந்திரன் முயன்று புலம்பெயர் தேசியக் குஞ்சுகளால் அந்த முயற்சி தோற்றது உங்களுக்கு நினைவில்லையா? பெண் வேட்பாளராக அம்பிகாவைக் கொண்டுவர முயன்ற போது என்ன நடந்தது என்று தெரியாமலா இங்கே உரையாடுகிறீர்கள்? சாணக்கியன் என்ற மும்மொழி தெரிந்த ஒரு இளைஞரை அறிமுகம் செய்தது யார்? எனவே, ஒன்று 4 வருடங்கள் முன்னர் நடந்த வரலாற்றையாவது குறைந்த பட்சம் தெரிந்து கொண்டு உரையாட வாருங்கள். அல்லது சுமந்திரன் வெறுப்பை மட்டும் கட்டிக் கொண்டு இப்படியே இருந்து விட்டுப் போங்கள்! தாயக மக்கள் உங்களை விடப் புத்தி சாலிகளாக நடந்து கொள்வர்!
  18. உங்களை மாதிரி திரிக்கும், கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கத் தான் விருப்பம்! முடியவில்லை, எப்படி முடிகிறது உங்களால்😂?
  19. கந்தையருக்கு யாழ் களத்தில் சில வருடங்கள் முன்பு நடந்த உரையாடல்கள் தெரியவில்லைப் போல. சுமந்திரன் மீதும், சாணக்கியன் மீதும் அவர்களது மதத்தைக் குறிப்பிட்டு தமிழ் தேசியம் பேசியது நடந்திருக்கிறது. சாணக்கியன் "பறங்கியருக்குப் பிறந்து விட்டு, மதமும் மாறி விட்டு (சிலரின் கற்பனையில் சிங்களக் காதலியும் வைத்துக் கொண்டு) தமிழரைப் பற்றி யோசிப்பாரா?" என்று கேட்டோரும் இங்கே நிற்கிறார்கள். அப்படி அவர் கேட்ட போது ஓடி வந்து ஆதரவுக் குறிகள் இட்டோரும் இங்கே "அப்பாவிகள்" மாதிரி திரிகீனம் - நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்😂! இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்" என்று பலர் கண்டு கொண்டு கண்டித்தார்கள். அதன் பின் தம் கொண்டையை மறைக்க "சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன்" என்று எல்லோரையும் முழுப்பெயரால் சுட்ட ஆரம்பித்தார்கள் இந்த ரொய்லெற் ஊடகர்களும், புலம்பெயர் தேசியர்களும்! எனவே, நீங்கள் மதம் கடந்த மனிதராக இருக்கலாம், ஆனால் உங்களை உசுப்பேத்துபவர்கள் அப்படியானவர்கள் அல்ல!
  20. "படம் பார்" குழு முன்னர் மாவைக்கு யாரோ குடை பிடிக்கிற படமும் எங்கேயோ தேடியெடுத்துப் போட்டது, அதே போல இப்ப இதுவும் போட்டிருக்கு. இனி வந்து படத்தைப் பற்றி "5 வசனம் எழுதுவினம், மிகவும் "ஆழமாக" இருக்கும் அந்தக் கருத்துக்கள்😂!
  21. ஒரு கருத்தை மட்டும் பார்த்துத் தான் பதில் எழுதுவீங்கள் போல, அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂! நீங்கள் புலவர் இணைத்த தவராசா அவர்களின் செவ்வி பார்க்கவில்லையோ? 2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர். இவர்களுக்கும், நாம் தமிழ்நாட்டின் ஊழல் கட்சிகளில் காணும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு வித்தியாசம் தான்: தமிழ்நாட்டில் வெள்ளை வேட்டி, சட்டை, தவராசா அவர்களுக்கு கோட்டு சூட்டு😎!
  22. Kiri 'Zi அதென்ன எல்லாருக்கும் கட்சி சீட் தரேல்ல எண்டவுடன மட்டும் கோவம் வந்து கட்சிய விட்டு கோவமா வெளியேறுறீங்கள் 🤣 இந்த பதிவிற்கு முகநூலில் வந்த மேல் பின்னூட்டம் "தமிழரசு மீது கோபக் கனல் கக்கும்" ஆட்களின் முகத்திரையைக் கிழித்து விடுவது போல் இருப்பதால் இணைத்திருக்கிறேன். உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?
  23. யாழில் "கள்ள மௌனம், பொய், திரிப்பு, உருட்டல்" என்பவற்றைத் தடவி ஊக்குவித்துத் தான் நட்பைப் பேண வேண்டுமென்றால் அந்த நட்பு எனக்கு அவசியமில்லை! அடிக்கடி மூக்குடைபடும் ஒரு மூண்டு பேர் குழுவாகச் சேர்ந்து தகரடப்பா அடித்து எழுப்பும் ஒலியெல்லாம் "பகை" என்று நான் கருதுவதில்லை! அவர்கள் அப்படித் தங்களை நினைத்துக் கொண்டால், நினைத்து மகிழ்ந்து விட்டுப் போகட்டும்😎. அதில் நான் குறுக்கிட மாட்டேன்!
  24. சிவமோகன் அவர்கள் தமிழரசுக் கட்சி எதிர்ப்பாளர்களின் ஞாபக மறதியைச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 2017 இல் நடந்த சம்பவங்கள் இன்னும் செய்திகளாக இணையத்தில் இருக்கின்றன, யாரும் தேடிப் பார்க்கலாம். ஆனால், சுருக்கமாக: 1. ஐங்கரநேசன், குருகுலராஜா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் மீது ஊழல் புகார் இருப்பதாக கூறி முதல்வர் விக்கி ஐயா பதவி நீக்கம் செய்தார். 2. ஒரு மூவர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து விசாரித்த போது, ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோர் மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருந்தன. எனவே, அவர்கள் பதவி விலகுமாறு கோர, அவர்களும் விலகினர். 3. டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகிய இருவர் மீதுமான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லையென்பதால் மூவர் குழு அவர்களை குற்றவாளிகளாகக் காணவில்லை. ஆனால், "இவர்களை மேலும் விசாரிக்க வேண்டும், அது வரை அவர்களும் பதவி விலகி இருக்க வேண்டும்" என்று விக்கி ஐயா கோர, அதன் பின்னர் மாகாணசபைக்குள் பெரும் குழப்பமும், கட்சி சண்டைகளும் உருவானது. 4. இறுதியில், சத்தியலிங்கம் , டெனீஸ்வரன் மீதான மேலதிக விசாரணையை கோராமல் விக்கி ஐயா பின்வாங்கினார். சத்தியலிங்கம் திரும்பிப் போகாமல், தானே பதவி விலகினார். 5. ஒரு வருடம் கழித்து மேல் நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் போட்டிருந்த வழக்கில் "முதல்வர் அமைச்சர்களைப் பதவி நீக்கியது சட்ட மீறல்" எனத் தீர்ப்பு வந்தது. இதையெல்லாம் மறக்கும் அளவுக்கு சிவமோகன் நினைவு மங்கிய ஆள் அல்ல. ஆனால், தான் முழங்கினால் கேட்கும் தமிழரசு எதிர்ப்பாளர்கள் நினைவாற்றல் குறைந்த ஆட்கள் என நம்புகிறார்😂! இரட்டைக் குடியுரிமை கொண்டோர் பா.உக்களாக வராமல் தடுக்கும் சட்டம் 2022 இல் 21 ஆவது திருத்தமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. என் புரிதல், அப்படியான ஒருவர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை (வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்). ஆனால், பா.உ ஆக வந்தால் அவர் மீது வழக்குப் போட்டு கோர்ட் மூலம் அவரை நீக்கலாம். ஆனால், அவர் மற்றைய குடியுரிமையை துறந்து விட்டால், அவர் பதவியில் நீடிக்கலாம்.
  25. "யார்" என்று பெயரைச் சொல்லக் கூட அச்சமா😎? இப்படி "ஒளிஞ்சு மறைஞ்சு" ஒரு கருத்தாடல் தேவையா😂? (பிரிட்டனுக்கு வந்தும் "சட்டி" யிலா💩? சீச்சி என்ன ஆளப்பா🤭?)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.