Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. நிலாந்தன் கிளிநொச்சியில் ஒரு காலத்தில் (உருத்திரபுரமென்று நினைவு) தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்பித்ததால் "மாஸ்ரர்" என அழைக்கிறார் என நினைக்கிறேன்.
  2. சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?
  3. முற்றிலும் தவறான செய்தி - தமிழ்மிரர் காரருக்கு ஆங்கிலம் புரிவதிலும், மொழிமாற்றம் செய்வதிலும் உள்ள சிக்கலால் இந்த நிலை. இரண்டு "வழக்குகள்" அல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் உட்பட்ட 18 பேருக்கெதிரான ஒரு வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளை (counts of felony) மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்ற தொழில் நுட்பக் காரணத்தினால் நீதிபதி நீக்கியிருக்கிறார். இதே போல 6 குற்றச்சாட்டுகள் மார்ச் மாதமும் தொழில் நுட்பக் காரணங்களால் நீக்கப் பட்டன. இன்னும் 8 மோசடிக் குற்றச்சாட்டுகள் (felony counts) ட்ரம்பின் மீது இந்த 1 வழக்கில் சுமத்தப் பட்டிருக்கின்றன. ஒரு மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டாலே தண்டனை பலமாகத் தான் இருக்கும், எனவே 8 என்பது மிகப் பெரிய ஆபத்து நிலை தான். இந்த போலிச் செய்திகளை "அப்படியே சாப்பிடும் அப்பாவிகள்" உலவும் இடங்களில் போடுவது அவர்களுக்கு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்தால் அதுவும் நல்லது தான்😎! உண்மையான செய்தியின் இணைப்பு: https://www.npr.org/2024/09/12/nx-s1-5110238/georgia-trump-case-supremacy-clause-counts-quashed
  4. கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.
  5. இந்தக் கதையை வாசிக்கையில் ட்ரம்பும் கமலாவும் நினைவுக்கு வருகிறார்கள். பெண்களிடம் தோற்பதைச் சகிக்க முடியாத ட்ரம்ப், கமலாவிடம் விவாதத்தில் தோற்றதாகத் தான் தெரிகிறது. "இனி விவாதம் இல்லை!" என்று நாண்டு கொண்டு நிண்ட பின்னர், கட்டாயம் மீண்டும் விவாதிக்க வருவார் என்கிறார்கள்! பார்க்கலாம்!
  6. உங்கள் போல ஒரு சிலர் இருக்கிறார்கள், நன்றிக்குரியது தான். ஆனாலும் தற்போதைய நிலைமைகள் - யாழ் களத்திலும் சரி, யாழுக்கு வெளியேயும் சரி- cut and dry ஆகத் தகவல்களைத் தருவோரை விட சும்மா அலட்டிக் கொண்டிருப்போரை முன்னிறுத்தும் நிலைமைகள். Return of Investment (ROI) என்றொன்று இருக்கிறது. 3- 4 மணி நேரம் செலவு செய்து ஒன்றை உருவாக்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு அது பயன்படுகிறது? அந்த 3 மணி நேரத்தை ஒரு வேலை விடயத்தில் செலவழித்தால் ROI பதவியுயர்வு, முன்னேற்றம், சம்பள உயர்வு. பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் அவளுக்கு பரீட்சையில் அதிக புள்ளிகள் ROI . காணியை துப்புரவு செய்தால் மனைவியிடம் நல்ல பெயர்😂..இப்படி ROI மிக அதிகம். எனவே, ஓணாண்டியார் நினைப்பது போல இது உணர்ச்சி வசப்பட்டு வந்த ஒதுங்கல் அல்ல, calculated withdrawal!
  7. இது தமிழ், அவமரியாதை அல்ல. என்னிடம் "உங்கள் நிலைப்பாட்டிற்கு விளக்கம் தேவை" என்று ஒரு தாயக அரசியல் திரியில் கேட்டீர்கள். அப்படியான ஒரு விளக்கம் கேட்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. ஆனாலும், நான் என்ன செய்தேன்? "குய்யோ முறையோ" என்று திரியைத் திசை மாற்றினேனா? உங்களுக்கு ஒரு விளக்கம் தந்தேனா இல்லையா? அப்படி செய்யாமல் நீங்கள் உரையாடலை "நீங்கள் இப்படியானவர் தான் என அறிவேன்" என்று திசைமாற்றுவதை பம்முதல் என்றேன். நிற்க: களத்தின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர், கருத்து எழுதும் எல்லோரையும் நட்போடு நடத்த வேண்டியதில்லை, ஆனால் மரியாதையோடு நடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நியாயமானது. அதிலும், யாழ் களத்தில் பகிரப் படும் தகவல்களை தரமானவையா, ஆதாரம் மூலம் பலம் பெறுபவையா என்று தேடும் முயற்சியைச் செய்வோரை நோக்கி நீங்கள் கோபம் கக்குவது இது முதல் தடவையல்ல. நீங்கள் கவனித்தீர்களோ தெரியாது, இதன் விளைவை ஏற்கனவே யாழ் களத்தில் காண்கிறோம் என நான் நம்புகிறேன்.
  8. 👆 இதெல்லாம் நான் எழுதியதாக நீங்கள் புரிந்து கொண்டது. இது என் கருத்து அல்ல😂! இதற்காகத் தான் நான் முன்னர் எழுதியவற்றை வாசித்திருந்தால் இப்படியாக விளங்கியிருக்காது என்றேன். யார் தான் வாசிக்கிறார்கள்? இதனால் தான் எதையும் கட்டுரை வடிவில் பகிராமல் என் வேலை, என் வருமானம் என்று மாறி விட்டேன்!
  9. சீண்டல் என்பதை விட போலியான சில தகவல்களை நீங்கள்பகிர்ந்த போது சுட்டிக் காட்டியிருக்கிறேன், அல்லது நீங்களே உங்களைப் பற்றி இங்கே பகிர்ந்தவைக்கும் நீங்கள் ஆதரிக்கும் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்கள் வெளிப்படும் இடங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவு தான்! உங்களோடு கொள்கை ரீதியில் முரண்பட்டவர்களை நீங்கள் கடந்த காலங்களில் அவமரியாதை செய்தது போல நான் எதுவும் செய்யவில்லை! நினைவிருக்கும் என நம்புகிறேன்!
  10. நீங்கள் மீண்டுமொரு தடவை யாழ் நிர்வாகம் உங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தப் போகிறீர்கள் என நினைக்கிறேன்😂. ஆனால், என்னை நோக்கிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்: மூன்று கால் உள்ள முயலுக்கு மூன்று கால் என்று தான் வாதிட முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கு 4 கால் என்று யாராவது ஆதாரத்தோடு நிறுவியதாக நான் கருதவில்லை. எனவே, மூன்று கால் தான் என் வாதம்! "call a spade, a spade" என்பார்கள். இந்த விடயத்தில் ஜெயமோகனோடு எனக்கு 100% உடன்பாடு. ஒருவர் தரவுகளைத் தருகிறார். இன்னொருவர் தரவுகளே இல்லாமல் வந்து "நான் இணையத்தில் கண்டேன்" என்று தரவுகளேயில்லாமல் பேசுகிறார். இத்தகையோர் - தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது போல- ஒரு தரவுகளின் பின்னால் செல்பவரை நக்கலோ, தாக்குதலோ செய்யும் போது அவர்களை கழட்டிப் பூட்டி விடுவது நான் செய்திருக்கிறேன். அதற்கு மட்டந்தட்டல் தான் பெயரென்றால் அப்படியே இருக்கட்டும். போலிசெய்திகள், தகவல்களில் உழல்வோர் மட்டம் தட்டப் பட வேண்டியோரே! மக்கிறகர் என்னை விடப் படித்திருக்கட்டும். அவரோடு போட்டி போட நான் வரவில்லை. ஆனால், இவரை விட ஆய்வுகளை ஆழமாகச் எழுதிய தகவல் மூலங்கள் இருக்கின்றன என்பதே கருத்து. செய்திகள் என்பவை செய்தி ஊடகங்களில் வருபவை. நான் வாசிக்கும் அதே செய்தியை வாசிக்க வேண்டியதில்லை. ஆனால், சம்பவம் எல்லா நம்பிக்கையான செய்தி ஊடகத்திலும் ஒன்று தான். அதற்காக RT நம்பிக்கையான செய்தி ஊடகம் என்று நீங்கள் நம்பினால் நான் எதுவும் சொல்வதற்கில்லை😎! உங்களுக்கான பதில் மேலே இருக்கிறது, நுணாவிற்கு எழுதிய பதிவில்👆. தரவுகளை, ஆதாரங்களை நீங்கள் பின்பற்றிக் கருத்துப் பகிர்ந்த சந்தர்ப்பங்கள் அரிது. இதற்கு நீங்கள் வைத்திருக்கும் ஒரு காரணம் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற" எண்ணம். இதனால் போலித் தகவல்களை நம்பகமாகக் கருதி நேரம் விரயமாக்க வேண்டிய அவசியமில்லை!
  11. ஏன் விளக்கம் தராமல் பம்முகிறீர்கள்? நான் ஊகிப்பது: விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் ட்ரெண்டோடு சேர்ந்து எடுபட்டுப் போகும் இணையப் பாவனையாளர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இப்படி இருப்பது உங்கள் உரிமை, ஆனால் இதைத் தாண்டி வாசிக்கும், யோசிக்கும் ஏனையோரை எள்ளல் செய்யும் போது, முரண் நகையைச் சுட்டிக் காட்டுவதும் அவ்வாறானவர்களின் உரிமை என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். பல நூறு இராணுவ ஆய்வாளர்களுள் (முன்னாள் ஜெனரல்கள், கல்வியாளர்கள் உள்ளடக்கம்) ஒரேயொரு மெக்கிறகர் நீங்கள் கேட்க விரும்புவதைச் சொல்கிறார். அதை மட்டும் நீங்கள் தேடிக் கேட்பது ஒரு வரலாற்று நூலை வாசிப்பதற்கு ஒப்பானது அல்ல. இந்த வித்தியாசத்தை நீங்களே முயற்சித்து உணர்ந்து பார்க்கலாம். யாரும் தடையில்லை. உதாரணமாக, 2000 களில் புரின் பதவிக்கு வந்த பின்னர் ரஷ்யா எப்படி மாறியது, அது எப்படி தற்போதைய நிலைக்கு வந்தது என்பதைப் பற்றி ஒரு வரலாற்றாசிரியர் எழுதிய நூலை வாசித்த பின்னர், மக்கிறகரின் வீடியோவை மீண்டும் பாருங்கள். போரை ஆரம்பிப்பவர்களை எதிர்ப்பவர் புரினை அல்லவா முதலில் வைய வேண்டும்😂? ஏன் நீங்கள் செய்யவில்லை? காரணம் இது தான்: உக்ரைன் தேர்தல் முதல், அதன் ஐரோப்பிய சார்பு நோக்கிய முயற்சிகள் வரை இணையக் குப்பையில் இருக்கும் மக்கிறகர் தரவழிகளின் வீடியோவை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அந்த சம்பவங்கள் பற்றிய archived செய்திகளைக் கூட நீங்கள் தேடியறிய முயலவில்லை. எனவே "நேட்டோ போரை ஆரம்பித்தது" என்ற குண்டுச் சட்டியினுள் நிற்கிறீகள். புரிகிறதா உங்கள் பிரச்சினை?
  12. என்னுடையது அமெரிக்க விசுவாசமென்பதை விட அமெரிக்காவும், ஸ்கண்டினேவியாவும், ஐரோப்பிய மேற்கும் பகுதியளவிலாவது முன்னகர்த்த முயலும் ஜனநாயகம், தனி நபர் சுதந்திரம், தாராளவாதம் ஆகியவற்றின் மீதான பலமான விசுவாசம். இவை தான் என் பிறவுண் தோல் கொண்ட பெண் குழந்தை நான் போன பின்னும் உலகில் தப்பி வாழ உதவும் என்ற புரிதலே என் விசுவாசத்தின் அடிப்படை! அந்தப் புரிதலின் அடிப்படை "யூ ரியூபில் கிண்டி முத்தெடுக்காமல்"😎 நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!) உங்களுடையது யார் மீதான விசுவாசம்? தம் மக்களையே பலிக்கடாக்காளாக்கும் சர்வாதிகாரிகள் மீதான ஒரு வினோதமான ஈர்ப்பு! கிருபன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்: Macho பலவான்களை நோக்கி ஒரு இனம்புரியாத கவர்ச்சி யாழ் களத்தில் சிலருக்கு இருப்பதாக! எல்லோரிடமும் "விளக்கம்" கேட்பீர்கள், உங்கள் விளக்கம் என்ன? ஏன் macho பலவான்கள் மீதான இந்த "கவர்ச்சி"😂?
  13. நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ள "வித்துவான்களாக" இருப்பதை விட "மாணவர்களாக" இருந்தால் போதும்! ஒரு தகவலை இணையத்தில் காண்கிறோம், அது உண்மையா, சாத்தியமா என்று எப்படித் தீர்மானிப்பது? வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலம் தான் வழிகாட்டி என கருதுகிறேன். வரலாற்றின் சம்பவங்களை விடுங்கள், சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களையே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீங்கள் இங்கே போலி வீடியோக்கள், கீச்சக இணைப்புகளைக் கொண்டு முற்றிலும் தவறான தகவலாக இணைத்திருக்கிறீர்கள். இப்படி இணையத் தகவல்களை சரிபார்க்க இயலாத நீங்கள் ஏனையோரை "வித்துவான்" என்று எள்ளுவது பெரிய நகைச்சுவை, எனவே நீங்கள் தலைகீழாக நின்று சிரிப்பது தகும்😂!
  14. நீங்கள் தரவுகளை மெனக்கெட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் அமெரிக்க எதிர்ப்பு, புரின் புரியன்மாரிடம் "பூச்சிய வலு". சும்மா ஒரு யூ ரியூப் குப்பையை அல்லது கேலிச் சித்திரத்தை நீங்கள் கொடுத்தால் "அப்படியே சாப்பிடுவார்கள்"😎!
  15. அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதைப் பற்றிய என் கருத்தை மட்டுமல்ல, வியற்நாம் மீது செய்த கொடுமையையும் அதற்குரிய இடத்தில் எழுதியிருக்கிறேன். வாசித்திருக்கிறீர்களா? இல்லை, எனவே உங்களுக்குத் தெரியாத தகவல் - அறிவலட்சியம்- நான் முட்டுக் கொடுப்பதாகச் சொல்ல வைக்கிறது. இந்த விடயத்தில் நீங்களும் ஒருவர் வேறு இடங்களில் எழுதியதை அலட்சியத்தோடு கடந்து போய் விட்டு தீர்ப்பெழுதும் ஏனைய சில உறவுகள் போலவே இருக்கிறீர்கள். இங்கே பேசப்படும் விடயம் என்ன? நாசிகள் குண்டைத் தயாரிப்பார்கள் என்ற அந்த நேர அச்சம் நியாயமானது. அதனால் ஐன்ஸ்ரைன் உட்பட்டோர் அமெரிக்காவை ஊக்குவித்தது நியாயமான செயல். ஜப்பான் மக்கள் மீது அணுகுண்டை அமெரிக்கா சும்மா அவர்கள் இருக்கப் போட்டு விடவில்லை. மேலே மறைமுகமாக நான் சுட்டிக் காட்டியிருப்பது போல நாசிகளுக்கு ஈடாக கொரியா, சீனா உட்பட்ட கிழக்காசிய நாடுகளினுள் நுழைந்து ஜப்பானிய இம்பீரியல் படைகள் செய்த கொடுமைகள் இருந்தன. இதை நிறுத்த அமெரிக்கா முதலில் படை பலத்தைப் பிரயோகிக்கவில்லை. எண்ணை, ஜப்பான் இராணுவ தளபாடங்கள் செய்யப் பயன்படுத்தும் கழிவு இரும்பு ஏற்றுமதி என்பவற்றை தடை செய்தது. இந்தக் கோபத்தில் தான் ஹவாயின் மீது ஜப்பான் தாக்கி சில ஆயிரம் அமெரிக்க படைகளைக் கொன்றது. அதன் பின்னரும் உடனே அணுகுண்டு வீசப் படவில்லை. அமெரிக்கா படையெடுத்து இவோஜிமா தீவு வரை பிடித்த பின்னர், சரணடையுமாறு கேட்டார்கள். அந்த நேரம் "வாய்பேசா மடந்தையாக" இருந்த ஜப்பானிய பேரரசரை, பேச விடாமல் ஜப்பானிய இம்பீரியல் ஏஜென்சி தடுத்து சரணடைய மறுத்தது. அப்போதும் அணுகுண்டு வீசப் படவில்லை. Fire bombing என்று, ரோக்கியோ மீது ஜேர்மனியில் செய்தது போலவே தொடர் உண்டு வீச்சு நடத்தினார்கள். அப்போதும் சரணடையவில்லை. பின்னர் தான் லிற்றில் போய் வீசப் பட்டது. ஜப்பான் சரணடைந்ததா? அப்போதும் இல்லை. பின்னர் Fat man வீசப் பட்டது. இதன் பின்னர் பேசாமடந்தையான பேரரசர் ஜப்பானிய வானொலியில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார். நாசிகளோடு சேர்ந்து நின்ற ஜப்பானிய இம்பீரியல் அரசின் மக்களும், நாசிகளின் நாட்டில் வாழ்ந்த ஜேர்மன் மக்கள் போல பெரும் விலையைக் கொடுத்தார்கள் என்பதே இந்த வரலாற்றின் பாடம். ஜேர்மனியில், ஹிற்லரைக் கொன்று நாசிகளை அகற்ற சில முயற்சிகளாவது எடுத்தார்கள். "பேரரசர் சூரியக் கடவுள்" என்று நம்பும் ஜப்பானிய மக்களோ பேரரசின் வாயைப் பார்த்தபடி மௌனமாக இருந்தனர். இந்தப் பின்னணியெல்லாம் உங்களுக்கு எற்கனவே தெரியுமா? அல்லது புதியதாக இருக்கிறதா?
  16. ரஷ்ய சார்பு ஆய்வாளர்கள் இப்படி சொல்லத்தானே வேண்டும்? இல்லாமல், "உக்ரைன் படைகளை எதிர்க்க இயலாமல் ரஷ்யா தடுமாறுகிறது" என்று அவர்கள் ஒப்புக் கொள்வார்களா😂? ஆனால், ரஷ்யாவின் இராணுவ பலத்தை (அல்லது பலமில்லாமையை) தோலுரித்துக் காட்டிய 3 வது சந்தர்ப்பம் இது: 1. கியேவ் நோக்கி டீசல், தண்ணீர் எதுவும் கொண்டு வராமல் வந்து முன்னேற இயலாமல் திரும்பிப் போனது, 2. பிரிகொஷினின் கூலிப் படை மொஸ்கோ நோக்கி முன்னேறும் போது தடுக்காமல் றோட்டைக் கிண்டியது. இப்போது இது! எனவே, இது தான் உக்ரைன் ஊடுருவலின் விளைவு: விம்ப உடைப்பு.
  17. ஹிரோஷிமா , நாகாசாகியில் அணுகுண்டு அமெரிக்கா வீச முன்னர் ஜப்பான் காரன் செய்ததென்ன? யாருக்கு செய்தார்கள்? இதைப் பற்றி உங்கள் "சமூகவலை ஊடக குப்பன் சுப்பன்கள்" ஒன்றும் உங்களுக்கு சொல்லவில்லையோ? அல்லது வேலையிடத்தில் பிலிப்பைன்ஸ், கொரியா, சீனா நாட்டவர்கள் அருகில் இல்லையோ😎? எனவே, ignorance is bliss என்று கடந்து போங்கள்!
  18. சாதகமோ, பாதகமோ உக்ரைன் தன் நலன்களுக்கு ஏற்புடையதைத் தான் செய்ய முடியும். "உக்ரைன் சுருண்டு விடாமல் ரஷ்யாவை எதிர்த்து போர் தொடங்கியதால், லண்டனில் நான் சலாட்டிற்குப் போடும் மரக்கறியின் விலை ஏறி விட்டது!" 😎என்று முறைப்பாடு செய்யும் உக்ரைனியர் அல்லாத நோக்கர்களின் நலன்களுக்காக உக்ரைன் முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை. நான் ஊகிப்பது, உக்ரைன் குறுகிய காலப் போக்கில் கிழக்கில் இருக்கும் இராணுவ அழுத்தத்தை சிறிது தளர்த்த முயன்றிருக்கிறது. நீண்ட காலப் போக்கில் "தற்கால ரஷ்யா, 40 களில் இருந்த சோவியத் இராணுவ வல்லமையைக் கூட கொண்டிருக்கவில்லை" என்ற விம்பம் ஏற்பட்டிருக்கிறது. இது ரஷ்ய ஆதரவாளர்களுக்கே உறைத்திருக்கும் போது, யாழ் களத்தில் இருக்கும் ஓரிரு "புரினின் புருஷன்மாருக்கு" (நீங்கள் அல்ல) உறைக்காமல் விடுமா😂?
  19. அமெரிக்கா அணுவாயுதம் செய்திருக்கா விட்டால் சோவியத் ஒன்றியம் செய்திருக்கும். கவனிக்க வேண்டிய ஒரு விடயம், நாசிகள் V2 ஏவுகணையை வெற்றிகரமாக தயாரித்து பிரிட்டன் மீது ஒரு தாக்குதல் செய்யக் கூடப் பயன்படுத்தியிருந்தார்கள். இந்த இயலுமையோடு அணுவாயுத இயலுமையும் கிடைத்திருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும். சிலார்ட்டும், ஐன்ஸ்ரினும் அந்த சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் நியாயமானது தான்.
  20. உங்களுடைய ஊகத்திற்கு ஆதாரமாக: 1. பிரிட்டனில் நீங்கள் மட்டும் சாட்சியாக இருக்கும் நேட்டோ பயிற்சி 2. பயிற்சி பெற்றோர் உக்ரைனுக்கு சிறு குழுக்களாகச் சென்ற flight manifest 3. மேலும் "முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார்கள்" என்ற அவதானிப்பு (ஒரு சிங்கக் குகைக்குள் புகுந்திருக்கிறார்கள், employee ID அணிந்து கொண்டா படத்திற்கு போஸ் கொடுப்பர்😂?) போன்ற "பலமான தரவுகள் இருப்பதால், உங்கள் ஊகம் மிகவும் சாத்தியமே! என்னுடைய தரவு (data) Statista வில் இருந்து பெறப்பட்டதால் வலு மிகவும் குறைவு, ஓட்டைகள் அதிகம்! போங்கப்பு சும்மா சீரியசாகப் பகிடி விடாம😎!
  21. இந்த கொமெடி நிகழ்வைப் பற்றிய செய்திகள் பார்த்தேன். வழமை போல தொழில்னுட்பக் கோளாறுகளால் திக்கி முக்கி ஆரம்பித்து இருவரும் பல்வேறு "பொய்யான தகவல்களை" காற்றில் இருந்து பிடுங்கிப் போட்டு சகோதரத்துவ உணர்வோடு உரையாடியிருக்கிறார்களாம். சமூக நீதியை ஆதரிக்கும் பல நிறுவனங்கள் எக்ஸ் இல் விளம்பரம் செய்யாமல் விலகிக் கொண்டிருக்கின்றன. இதனால் எக்ஸ் இற்கு வருமான இழப்பு. ட்ரம்பிற்கு கமலா ரீம் செய்திகளில் முன்னணி வகிப்பது உறுத்தியிருக்கிறது. வேலிக்கு ஓணான் சாட்சி போல இப்படியொரு SNL skit செய்திருக்கிறார்கள் இரு தரப்பும்😎!
  22. நேட்டோ நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் போகலாம் - போகாதீர்கள் என்று உத்தியோகபூர்வமாக அரச அறிவித்தல் இருந்தாலும் கூட. ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் ஈரூடகப் படையில் இருந்தவர்களும் , பிரிட்டன் முன்னாள் படையினரும் போய் பிடிபட்டு ரஷ்ய ஊடகங்களில் வீடியோ காட்டினார்கள். அதை அந்த நாடுகளும் உறுதி செய்தன. இதற்கு நேட்டோ என்ன செய்ய முடியும்? உக்ரைனின் மொத்தப் படை 2 மில்லியன், இவர்களுள் ஒரு மில்லியனுக்கும் கீழே standing force. மிகுதி reserve. இதில் இருந்து ஆயிரக் கணக்கானோரை அனுப்ப இயலாமல் உக்ரைன் இருப்பதாக நம்பித் தான் உங்கள் ஊகத்திற்கு பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது😂. (இது முன்னர் பிரிகோஷினின் கூலிப்படை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படை என்ற கவிண்ட லொஜிக்கின் தொடர்ச்சியாக இருக்கிறதென நினைக்கிறேன்😎!)
  23. உங்கள் "மனதில்" இருப்பதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு உங்களை அவமானம் செய்ய விரும்பவில்லை😎. ஆனால், இது போன்ற விடயங்களை பொது இடங்களில் எழுத முதல் லொஜிக்கை யோசியுங்கள்: ரஷ்ய நிலப்பரப்பினுள் நேட்டோவின் உறுப்பு நாடுகள் படைகளை அனுப்புவது எவ்வளவு சீரியசான விடயம்? நேட்டோ படைகளை ரஷ்ய நிலப்பரப்பினுள் அனுப்ப, அது ரஷ்யாவிற்கு தெரியாமல் இருக்கிறது. அல்லது தெரிந்தும் தொண்டையில் முள்ளு சிக்கி சொல்லாமல் தவிர்க்கிறது என்று நம்புகிறீர்களா? ஏற்கனவே "-நேட்டோ வருகிறது" என்று பூதம் காட்டித் தான் புரின் பதவியில் இருக்கிறார். இப்ப நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆட்கள் நுழைந்திருந்தால் ஆதாரத்தை எடுத்து உள்ளூர் செய்தியிலாவது கட்டி விட மாட்டார்களா ஐயா😂?
  24. ரஷ்யாவுக்குள் 30 கிமீ ஊடுருவல், ஆயிரக்கணக்கானவர்களை அனுப்புவது என்பது துணிச்சலாக - daring இருக்க வேண்டும், அல்லது தற்கொலை முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால், கிழக்கு எல்லைகளில் சில இடங்களில் இருந்த இராணுவ நெருக்கடியைக் குறைத்திருக்கிறார்கள் என சில செய்திகளில் தெரிகிறது. நான் நினைக்கிறேன் இறக்கும் படையினர் போக எஞ்சியோர் சிறு சிறு அணிகளாகப் பிரிந்து மிக உள்ளே போய் ஒளிந்து கொள்வார்கள் போல. சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணைந்த பிறகு இவை நடக்கின்றன. பின்லாந்து இது போன்ற நடவடிக்கைளில் நிபுணத்துவம் கொண்ட படைகளை வைத்திருக்கிறது. "Kursk's acting governor Alexei Smirnov is now speaking at Putin's meeting with officials. Smirnov tells him that Ukraine controls 28 villages in the region. "The situation remains difficult," he says. Ukrainian forces are 7.4 miles (12 km) deep inside the region, and the front line there is 40 km wide, he says. 🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped".
  25. பொருளாதாரத் தடை என்பது மென்வலு அணுகுமுறை தானே? எனவே செய்யலாம். புத்திசாலித்தனமான அணுகுமுறை (மொக்கன் மாதிரி புரின் ஆப்பிழுத்து அந்தரிக்கும் கணக்காக எந்த நாடும் நடந்து கொள்வதில்லை😎!) . ஏழை நாடுகளை ஆள்வோர் சர்வாதிகாரமாக இருந்தால் தடை வரும் தான், மக்கள் பாதிக்கப் பட்டால், அந்த மக்களே ஆட்சியை மாற்றுவர். எனவே, உலக அரசியலில் இருக்கும் இது போன்ற nuanced அணுகுமுறைகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு இடது, வலது பக்கம் வேலை செய்யும் ஆட்களிடம் கேட்பதை விட, ஒழுங்கான மூலங்களை வாசித்து தேடி அறியலாம். அது தானே பிரச்சினை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.