- இன்று மாவீரர் தினம்!
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தலைவருக்கு வாழ்த்துகள்.
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்
அவர்களுக்குப் புரியும். புரிந்தும் என்ன பயன் ? மீண்டும் இதே நபர்களே தேர்தலில் நின்று வெல்கிறார்கள். அல்லது மாற்றீடாக ஒரு பைத்தியத்தை வெல்ல வைக்கிறார்கள்.
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
பொதுவாக உலகில் ஆண்களை விடப் பெண்கள் விகிதாசாரப்படி அதிகம். இதற்கான முக்கிய காரணம் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகமானது. எப்படியிருந்தாலும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள். 😁
-
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?
95 ஆம் ஆண்டில் 39 ரூபாவுக்குச் சாதாரண செருப்புத்தான் வாங்க முடியும். 30 ஆண்டுகள் அழியாமல் இருக்குமானால் செருப்பின் விலை அதனைச் செய்யும்போதே அச்சில் முப்பரிமாணமாகப் பதியப் பட்டிருந்ததா ?
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
முதலில் கடலில் கவிழ்ந்த கோஷான் என்று வாசித்து விட்டேன்.😆 இந்தப் பந்தியில் எழுதியிருப்பது யாருக்காவது புரிகிறதா ?
-
சாட்ஜிபிடி அட்லஸ் பிரவுசரில் உள்ள புதிய அம்சங்கள் என்ன? குரோமுக்கு சவால் விடுக்குமா?
இது கூகுள் குரோமை ஒத்த வடிவமைப்புடன் உள்ளது. வேகமும் அதிகம். சாட்ஜிபிடி அதிகமாகப் பாவிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். முதலில் திறக்கும்போது உங்களது கணணியிலுள்ள உலாவியின் தரவுகள யாவற்றையும் எடுத்துக் கொள்ளவா, நீங்கள் பாவிக்கும் உலாவியிலுள்ள தடயங்கலை ஆராய்ந்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளவா என்று கேட்கிறது. அநேகமாக கூகிள் உலகின் ஒற்றையாட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
-
அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
இக் கட்டுரையை எழுதியவர் எப்படியெல்லாம் யோசித்துள்ளார் 😂 https://ta.wikipedia.org/wiki/குதிரைத்_திறன்
-
'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
Nvidia வின் இன்றைய பங்குச்சந்தை மதிப்பு 4.45 டிரில்லியன் டொலர்கள் ! இது பிரான்சின் மொத்த உற்பத்தியை விட சுமார் ஒன்றரை மடங்கு. அப்பிள் மைக்ரோசொஃப்ட் ஆகிய பெரிய நிறுவனங்களைவிட அதிகம். மிகக் குறுகிய காலத்தில் எவ்வாறு இவ்வளவு மதிப்பைப் பெற்றுக் கொண்டது என்பதை நினைத்தால் தலை சுற்றும். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த நிறுவனம் மீது நம்பிக்கை இல்லை.
-
அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரிய பூமி காந்தத் தட்டுப்பாடு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில் நெருக்கடிகளை ஏற்படுத்தும். சீனா அதிக காலம் கட்டுப்பாடுகளை நீடித்தால் இக் காந்தங்களுக்கான மாற்றீடு அதிகரித்து அதன் சந்தையைப் பாதிக்கும். காந்தங்களின் மீதான சீனாவின் ஆதிக்கம் உணரப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான மாற்றீடுகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய பூமி தனிமங்கள் இல்லாமலே சூழலை மாசுபடுத்தாத வகையில் காந்த உற்பத்தி செய்யும் Niron நிறுவனம் 2024 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் 5 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 2026 இல் இந் நிறுவனம் விரிவாக்கப்பட்டு வருடத்துக்கு 1500 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Niron MagneticsNiron Magnetics is reshaping tomorrow’s technologies with the world’s only high performance, rare-earth-free permanent magnets.
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
புகழ் வணக்கங்கள்
-
காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
நல்லது, இந்த ஒப்பந்தத்தின் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் பலஸ்தீன் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள் பற்றிய அருமையான புரிந்துணர்வு. இன்றைய தொலைத் தொடர்புப் பரிமாற்ற வசதி இல்லையென்றால் இன்றைய ஹீரோக்களும் நாளைய உண்மையான கடவுள்களே. விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டாடப்படுவார்கள்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை. வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.