Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by இணையவன்

  1. இந்த ஊசியின் விலை 3000 ஈரோவுக்கு மேல் என்று பேசப்படுகிறது. யாருக்கு இலல்வசமாகத் தருவார்கள் என்று பார்க்கலாம். 48 நோயாளிகளில் 3 மாதங்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஸ்ய சுகாதாரத் திணைக்களமே இன்னும் இதன் ஆற்றலை உறுதிப்படுத்தவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதினுக்கு வாழ்த்துத் தெரிவிக்க முண்டியடிப்பதை என்னவென்று சொல்வது. பிரான்ஸ் அல்லது ஜேர்மனி ஒரு புது அரிய மருந்தைக் கண்டுபிடித்தால் அதனை வைத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் விளம்பரம் செய்வார்களா ?
  2. அது நீங்கள் மாற்றும் உறுப்புகளைப் பொறுத்தது 😁 ஒவ்வொரு உறுப்புகளும் காலப்போக்கில் பழுதடைவது போல மூளைக்கும் ஆயுட்காலம் உண்டு. அது ஆகக் கூடுதலாக 120 வருடங்கள் இயங்குமாம். பெரும்பாலானோருக்கு 90 வயதுக்குமேல் ஆட்டம் கொடுக்கும். ஏனைய உறுப்புகளை மாற்றியபின் உங்களை நீங்களே மறந்து விட்டால் என்ன பிரயோசனம் 😂
  3. மனித உரிமை பற்றித் தேரருக்கு மட்டுமல்ல தமிழர் உட்பட இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு என்னவென்று தெரியாது. கடவுள் பக்தி உள்ளவர்கள் மிருகங்களைப் பாதுகாப்பவர்கள் மனித உரிமையை மதிப்பவர்கள் என்று கூற முடியாது. முதலில் ஒரு மனிதனை அவனது இனம், மதம், சாதி, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி சக மனிதனாக மதிக்கத் தெரிய வேண்டும். அது எம்மிடம் கிடையாது.
  4. குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை வழங்கப்படும்வவரை குற்றம் செய்தவர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். போலீஸ் இவர்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் அலட்சியமாக இல்லாமல் தீவிர தேடுதல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
  5. மிகவும் அபாயமான சூழலை நோக்கி எமது தாயகம் நகர்கிறது. மக்கள் விழிப்படைந்து தனிப்பட்ட ஒவ்வொருவரும் சிறு முயற்சியையேனும் மேற்கொள்ளாவிட்டால் முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டங்களும் பயனளிகாது. முதலில் யாழில் எல்லோரும் குழாய்க்கிணறு மூலம் நீர் எடுப்பதை நிறுத்தி மாற்று வழிகளைத் தேட வேண்டும். சில வருடங்களுக்கு முன் வவுனியாவுக்கு அருகில் ஒரு வயலின் ஒரு பகுதி நெல் விதைக்கப் படமல் விடப்பட்டிருந்தது. ஏனைய பகுதிகளில் நெல் செழிப்பாக வளர்ந்திருந்தது. ஏன் என்று கேட்டதற்கு ஒரு விவசாயி, அந்த இடத்தில் உவர் பிடித்துள்ளது என்றார். உற்றுப் பார்த்தபோது சூரிய ஒளியில் உப்புப் படிவு மினுக்கமாகத் தெரிந்தது. வவுனியாலில் எப்படி உப்பு வர முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.
  6. அமெரிக்க தேர்தலின்போது ட்றம்ப் உலகில் அமைதியையும் சமாதானத்தை ஏற்படுத்துவார் என்று யாழில் எழுதிய ஒரே நபர் நீங்கள்தான். அதனையே ஜஸ்ரின் மேலே சுட்டிக் காட்டியுள்ளார். உங்களுக்கக எழுதப்படும் பதில்களை வாசித்திருந்தால் உங்களைப் பார்த்து நீங்களே உருண்டு பிரண்டு சிரித்திருக்க வேண்டி வந்திராது.
  7. ஒருவேளை உலாவியில் தற்காலிகமான பிழையாகவும் இருக்கலாம். மறுபடி முயன்று பாருங்கள்.. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ?
  8. நேட்டோவில் இல்லாத நாடுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஆஜண்டீனா போர் விமானங்களை வழங்கியிருந்தது. அவுஸ்திரேலியா ஆயுதங்களை வழங்கியிருந்தது. பலஸ்தீனுக்கு இஸ்லாமிய நாடுகள் இராணுவ உதவிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மனிதாபிமான உதவிகள் செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் அகதிகளையாவது உள்வாங்கியிருகலாம் அல்லவா ?
  9. இணையத்தில் மாம்மழத்தை வேறு பழங்களுடன் ஒப்பிட்டுத் தேடியபோது கிடைத்த தகவல். 100 கிராம் மாம்பழத்தில் 14 கிராம் சீனி உண்டு. 100 கிராம் வாழைப்பழத்தில் 12 கிராம் சீனி உண்டு. இரண்டிற்கும் Glycemic Index அளவுகள் ஏறத்தாள ஒரே மாதிரியானவை.
  10. குறுகிய காலத்தில் ஏஐ எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலைகளில் பாரிய தாங்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. நான் தற்போது செய்யும் வேலையில் இன்னும் இரண்டு வருடங்கள் தாக்குப் பிடிப்பேனா என்பது சந்தேகம். வேலை நாட்களைக் குறைப்பது இன்னொரு மாற்று வழி. இளைஞர்கள் இந்தக் குறைந்த நாள் வேலையை விரும்பாவிட்டாலும் கூட அது அவர்கள் மிது திணிக்கப்படலாம். 3 நாட்கள் விடுப்பினை அவர்கள் தமது உள, உடல் நலனுக்காகப் பயன்படுத்தட்டும்.
  11. விஜய் தனது தொகுதிகளில் வெல்வாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் விஜய் சொன்ன சொல் தவறாமல் தேர்தலில் நிற்பாராக இருந்தால் வழமையான வாக்கு வீதங்கள் சிதறடிக்கப்பட வாய்ப்புளது. சென்னை மாநாட்டில் விஜய் தனது ஆதரவாளார்கள் ம்லுன்னிலையில் தனது கட்சியின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்று முழங்கியது ஆறுதலான செய்தி. இனிமேல் விஜய் பாஜக வுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பது உறுதியாகிறது. திமுக தமிழகத்தில் ஆலமரம் போல் வேரூன்றியுள்ளது. அதனைத் தாங்கி நிற்பவர்கள் அரசியல், கல்வி, நிதி, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு போன்ற பல துறைகளிலும் அனுபவமுடைய பல தலைவர்கள். விஜய் அதிமுக விலிருந்து தலைவர்களைத் தனது கட்சிக்கு வரவைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
  12. செம்மணி புதைகுழி விடயத்தில் தாயகத்திலுள்ள மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை. வெளிநாடுகளில் பயனற்ற விடயங்களுக்குப் போராட்டங்கள் நடத்துபவர்கள் இந்த முக்கியமான போராட்டத்தில் தாயகத்துக்கு உறுதுணையாக எதுவும் செய்யவில்லையா அல்லது இது தொடர்பான செய்திகளை நான் பார்க்கவில்லையா ? செம்மணி விவகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதைப் பதிவு செய்ய முயற்சிக்கலாம்.
  13. இரு பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களான எயர்பஸ் போயிங் ஆகியவை 2024 இல் மொத்தமாக 1114 விமானங்களைத் தயாரித்துள்ளன. இந்த ஆண்டில் அது 7 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் கோமக் நிறுவனம் இந்த ஆண்டு முதல் விமானங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் விமான எஞ்சின்களைப் பெற முடியாமல் இந்த நிறுவனம் தனது இலக்கான 50 விமானங்களை எட்ட முடியாமல் உள்ளது. ஆனால் விரைவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும். உலகெங்கிலும் விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆசிய நாடுகளே அதிகமான விமானங்களை வாங்குகின்றன. இதில் இலங்கை இலாபம் ஈட்டாமல் இருப்பது அதன் மோசமான வர்த்தகக் கொள்கையைக் காட்டுகிறது. பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு - கிழக்கிற்கு வர விரும்பும் உல்லாசப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியா மூலமாக வர விரும்புவார்கள்.....
  14. உங்களுக்கு என்ன பிரச்சனை ? 30-16=6 என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களே. சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
  15. செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் பலஸ்தீனைத் தனியரசாக பிரான்ஸ் அங்கீகரிப்பதாக அறிவிக்கப் போவதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
  16. இதுவரை சிம்மாசனத்திலிருந்து சுகபோகங்களை அனுபவித்து வந்த தாய்லாந்து அரசர் இனிமேல் களத்தில் இறங்கிப் போர் செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டது.
  17. பிரான்சில் ஒரு ஈழத் தமிழரின் மகன் பிரஞ்சு இராணுவத்தில் தாக்குதல் விமானத்தின் விமானியாக இருந்தார். பெயர் தெரியாது, சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
  18. எந்தக் கொரியா ? இரண்டும் குடியரசுதான். படத்தில் உள்ள கொடிக்குச் சொந்தக்கார கொரியா பரவாயில்லை. மற்றக் கொரியாவை நம்பினால் ரஸ்யாவில் 'வேலை' செய்ய வேண்டி வரலாம் 😀.
  19. கிளி/ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தமது முகப்புத்தகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்: ஊற்றுப்புலத்தின் வரலாற்று சாதனை.... வெளியாகிய 2024(2025) க/பொ/த சாதாரண தரப்பெறுபேற்றில் எமது பாடசாலை மாணவன் செல்வன் சக்திவேல் குயிலன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான் பாடசாலை சார்பாக 9A சித்தி பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மாணவனுக்கும் இச் சித்தியினை பெற அவனை நெறிப்படுத்திய எமது பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திரு மு.பிரேம்குமார், வகுப்பாசிரியை திருமதி பன்னீர்ச்செல்வி சிவகுமார் , ஆசிரியர்கள்,மற்றும் அவனது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்..... இவ் மாணவன் கல்விச் செயற்பாடு மட்டுமன்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்குபவர் என்பது குறிப்பிட தக்கதது க.பொ.த உயர்தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றினை பெற இறையாசியினை வேண்டி நிற்கின்றோம்
  20. இறுதியில் மூளைதான் இறுதி முடிவு எடுக்கிறது. வயிற்றுக்குள்ளே ஒரு இடதுசாரி அரசாங்கமே நடக்கிறது என்பதைத் தத்துரூபமாக விளக்கப்பட்டுள்ளது. 😂 இன்னொன்றையும் இக் கட்டுரையில் சேர்த்திருக்கலாம். சர்க்கரை நோய் கண்டவுடன் சனி பகவானுக்கு நேர்த்தி வைத்து பூசைகள் செய்ய வேண்டும். ஏனென்றால் ... இப்படியான குப்பைகளை நம்பும் தமிழர்களும் உள்ளனர்.
  21. பதிவை இரண்டு முறை வாசித்து "அந்த கிராமத்தின்" பெயர் ஊற்றுப்புலம் என்று கண்டுபிடித்தேன். 😂
  22. அறிவுபூர்வமான நாகரீகம் எப்போது வீழ்ச்சியடைந்தது ? வெள்ளைக்ராரன் வந்த பின்னரா அதற்கு முன்பா ? பல திரிகளிலும் நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு இங்கு பொறுமையாகப் பலர் பதில் எழுதுகிறார்கள். பதில் தரப்படாத உருட்டல்கள் எவை என்று பட்டியலிடுங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.