Everything posted by இணையவன்
-
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
நல்லதொரு போராட்டம். வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளும் இப் போராட்டத்துக்கு ஆதரவு தருவதுடன் சர்வதேச நீதி அமைப்புகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
எல்லாப் பாடங்களிலும் ஏ சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை வீதம் 4.15% என்பது சிறப்பானது. வாழ்த்துகள். இருந்தாலும் மொத்தமாகச் சித்தியடைந்த வீதம் 73.45% என்பது போதுமானதல்ல. அதிலும் தமிழர் பகுதிகளில் இன்னும் குறைவாக இருக்கலாம். உலகம் முழுவதும் கல்வித் தர நிலை உயர்ந்து வரும் நிலையில் இலங்கையிலும் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்.
-
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
கடவுளைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்கள் அரசியல் மயப்படுத்தப் படாத மாபெரும் பேரணி ஒன்றைச் செய்ய வேண்டும்.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
நீங்கள் சொல்ல வரும் ரவுடிக் கதை புரியவில்லை. பெரிய ரவுடி அமெரிக்காவை எதிர்க்க சின்ன ரவுடி ரஸ்யாவை ஆதரிப்போம் என்கிறீர்களா ? தமிழர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டது நீங்கள்தான். அதற்கு ரஸ்யாவையும் ஆதரிக்கிறார்கள் என்று எழுதியவுடன் பெரிய சிறிய ரவுடி என்று ஒப்பீடு செய்கிறீர்கள். இரு தரப்பினராலும் மனித உயிர்களல்லவா இழக்கப்படுகின்றது. மக்களின் மேல் அனுதாபம் இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் மனித இழப்புகள் ஏற்படும்போது கண்டிக்கலாம். ஒரு நாட்டினை அல்லது அதன் தலைவரை ஆதரித்து அதைவிட இது பரவாயில்லை என்ற வாதம் ஒரு பக்கச் சார்பானதாக இருக்கும். அடுத்து, நீங்கள் இணைத்த ஜெய்சங்கர் கூறிய அமெரிக்க சுய சார்பு பொருளாராதம் மற்றும் இனி வரப்போகும் பிறிக்ஸ் நாடுகள் மீதான மேலதிக வரிகள் அழுத்தங்கள் போன்றவை நீங்கள் விரும்பிய ரஸ்ய சார்புடைய ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததனால் எற்பட்டவை.
-
ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!
தலைப்பில் உள்ளதுபோல் மிகப் பெரிய வெற்றி கிடையது. கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில்தான் நிறைவேறியுள்ளது. 218 வாக்குகள் ஆதரவாகவும் 214 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
-
வணக்கம்
இப்போது சரியாக இருக்கும்.
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை. அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..
-
வணக்கம்
வணாக்கம் விக்தனன், உங்கள் மீள்வரவிற்கு நன்றி. நீங்கள் விரும்பினால் உங்கள் பழைய கணக்கினை மிள இயங்க வைக்கலாம். உங்களது கடவுச் சொல்லை மறந்திருந்தால் கீழுள்ள இணைப்பில் உங்கள் மின்னஞ்சல் மூலமாக அதனைப் புதுப்பிக்கலாம். https://yarl.com/forum3/lostpassword/ வேறு பிரச்சனை இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி.
-
விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்.
இதில் உள்ள பல விடயங்கள் ஏற்கனவே பிரெஞ்சு அரசியல் யாப்பில் உள்ளவை. உதாரணமாக சமயத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய முடியது. பாடசாலைகளில் சமயம் கிடையாது. அது எந்த மதமாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான். சில வருடங்களுக்கு முன் முஸ்லிம் கட்சி என்று ஒரு கட்சியை உருவாக்க முயன்றர்கள். அது உடனடியாகவே சட்ட ரீதியாகக் கலைக்கப்பட்டது. ஆனால் செய்தியில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவே எல்லாச் சட்டங்களும் மக்ரோனால் கொண்டுவரப்பட்டது போல் சொல்லப்பட்டுள்ளது. மதராசாக்களில் படிக்க முடியாது, வீடியோப் பதிவு அனுப்பப்பட வேண்டும் போன்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானது.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன் ட்ரம்பைப் புகழ்ந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின் பாகிஸ்தான் அணுகுண்டினைச் சுமந்து நீண்டதூரம் செல்லக் கூடிய ஏவுகணையை உருவாக்குவது பற்றி அமெரிக்காவ்லிருந்து கண்டனம் எழுந்தவுடன் பாகிஸ்தான் ட்ரம்பைத் திட்ட ஆரம்பித்துள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வீரப் பையன், இந்தத் திரியில் நீங்கள் பல பொய்யான தகவல்களை எழுதியுள்ளீர்கள். மேற்கோள் காட்டியுள்ளது போன்று ஆதாரமற்ற சமூக வலைத் தளங்களில் உலாவும் குறுஞ்செய்திகளை நீங்கள் நம்புபவராக இருக்கலாம். அவற்றை யாழில் கொண்டு வந்து ஒட்டி அதன் நம்பகத் தன்மையைக் கெடுக்காதீர்கள். நன்றி.
-
வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு
பிறேமதாஸ் அவர்களின் செயல் பாரட்டிற்குரியது. வறட்சியான பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு நீரைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் என்பது பற்றியும் அறிவுவுறுத்தப்பட வேண்டும்.
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் புரையோடியுள்ள இந்துக் கடவுள்களின் நம்பிக்கையைப் பொய் என்று மக்கள் இலகுவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புராணங்கள் பொய்யாக இருந்தால் புராணக் கதாநாயகர்களான கடவுள்களும் பொய் என்றாகும். இதேபோல் இலங்கையிலும் என்றாவது ஒருநாள் மகாவம்சம் கூறும் பொய்களும் உடையும்.
-
சிஸ்ட்டர் அன்ரா
ரஞ்சித், உங்கள் மனதிலுள்ள சுமை ஒன்றை இறக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது இலங்கைப் பயணக் கட்டுரையில் சித்தி பற்றி எழுதியவை நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
-
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
இதென்ன நிரந்தர அரசாங்க அதிபர் ?
-
மனிதநேயம் எங்கே
வணக்கம் மந்தாகினி, யாழில் முன்பு எழுதிய அதே மந்தாகினியா நீங்கள் ?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ரஸ்யா - உக்ரேன் இஸ்ரேல் - பலஸ்தீன் ஈரான் - இஸ்ரேல் (+மேற்கு)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீன் தனிநாட்டை ஆதரிக்கும் அதே வேளை இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்குகொள்ளும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விபத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். விமான பாதுகாப்பு விதிமுறைகளும் விமான தொழில்நுட்ப பராமரிப்புகளும் நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. அதேவேளை விமானப் பயணங்களும் அதிகரித்து வருகின்றது. ஒரு வருடத்தில் 3 கோடி விமானப் பறப்புகளில் ஏற்படும் 5 முதல் 6 விபத்துகள் மிகக் குறைவானவையே. இருந்தாலும் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு எதிர்காலத்தில் விமான பயணங்கள் மேலும் உறுதியடைய வேண்டும்.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
உண்மையான ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டும் இணையத் தளங்களில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பொருட்களின் கரிமத் தேதியிடல் ஆய்வு முடிவுகள் 2600 வருடங்களையே காட்டுகின்றன. நான் நினைக்கிறேன் 4000 - 5000 ஆண்டுகள் என புரளியைக் கிழப்புபவர்கள் குமரிக்கண்ட கோஸ்டியாகத்தான் இருக்கும். ஆய்வு ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஊகங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. பாலகிருஷ்ணன் அவர்களது கட்டுரை, காணொலிகளைப் பார்த்துள்ளேன். சிறந்த ஆய்வாளர். தமிழ்நாட்டில் உலாவும் 5000 வருடங்களுக்கு முன் இரும்பு பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியான ஆதாரமற்றது என்று நினைக்கிறேன். இதுவரை உலகில் 3500 வருடங்களுக்கு முன்பே இரும்பு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.