Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  6,169
 • Joined

 • Days Won

  15

Everything posted by இணையவன்

 1. 'பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரைச் சீண்டி எழுதிய கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
 2. வணக்கம் தோழி, உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் வேண்டுகோளுக்கமைய உங்கள் பெயர் தமிழில் தோழி என்று மாற்றப்பட்டுள்ளது.
 3. அகத்தான், நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான். எல்லோரையும்போல் நீங்களும் மூட நம்பிக்கையில் மூழ்குவதற்காக அறிவியலை இழுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. வான சாஸ்திரத்தையும் சாத்திரத்தையும் ஒன்றாகக் குழப்பியுள்ளீர்கள். இன்று இந்தியாவில் சாத்திரிகளால் சூரிய சந்திர கிரகணங்கள் கணிக்கப்படுவது மூட நம்பிக்கைகளுக்காகவே. இவற்றைக் கணிப்பதற்காக அன்று உருவாக்கப்பட்ட சமன்பாடுகளை வைத்து இதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை. பாம்பு சந்திரனை விழுங்கும் நம்பிக்கையுடனேயே இவற்றை இன்றும் கணிக்கிறார்கள். அன்றைய அறிவியலின்படி சந்திரனையும் சூரியனையும் கிரகங்களாக்கி ஏழு கிரகங்களை மட்டுமே கண்டவர்கள் இன்று அதிலிருந்து மீழ முடியவில்லை. அன்று மதத்திற்கு எதிரான அறிவியல் கருத்துக்களைக் கூறியவர்களைக் கொலை செய்த வத்திக்கான் இன்று அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது. அரேபியர் மூலமாக ஐரோப்பாவுக்குக் கணிதம் படிப்பித்தவர்கள் இப்போது எங்கே ? ஒன்று தவறு என்று தெரிந்தால் அதைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். இதை விட்டு வெளியே வராமல் பழைய பெருமை பேசிக் குறுகிக் கொண்டே போக வேண்டுமா ? தமிழ் இனத்தைப் படிப்படியாக அழிப்பது இந்த மூட நம்பிக்கைதான். தமிழரின் கலாச்சாரம் பண்பாடு அழியாமல் இருக்க வேண்டுமானால் மூட நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து சரியானவற்றைக் காவிச் செல்லவேண்டும். பழங்காலத்தில் செய்யப்பட்ட நல்ல சடங்குகளைத் தொடர வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் பழைய பெருமை பேசி என்ன பயன் ?
 4. இது நீண்ட திரியாக பல திசைகளில் சென்றதால் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை. ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். வீடு என்பது அண்மைக் காலமாக வெப்பத்தைத் தாங்கிப் பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. அழகுக்காகக் கட்டப்படும் நவீன சீமெந்து வீடுகள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றவை. சென்ற வருடம் எனது உறவினர் ஒருவருக்குச் சிறிய வீடொன்றிற்கான வரைபடத்தைக் கீறி அனுப்பியிருந்தேன். அதில் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் சூரியனின் பாதையையும் இந்த இரு காலங்களிலும் வீட்டில் எந்தப் பகுதி சூடாகிறது என்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம். அதற்கேற்றவாறு வாசல் ஜன்னல்கள் மற்றும் அறைகளை எங்கு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அதிகம் சூரியனால் தாக்கப்படும் பகுதியில் வெப்பத் தடுப்புக்கள் வைக்கப்படும். வெளிப் புறமாக அப் பகுதிகளில் மரங்கள் வைக்க ஏதுவாகவும் வரையப்பட்டது.
 5. குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.
 6. குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.
 7. தலைப்பைப் பார்த்ததும் கல்வானில் வைத்துக் கொடுத்ததோ என்று நினைத்துத்துவிட்டேன்.
 8. சாதாரண நீருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஈவியன் என்ற மலையில்லிருந்து பனியும் நீரும் மண், பாறைகளூடாக வடிந்தோடி நிலங்கீழ் நீர்நிலைகளை அடைந்து பின்னர் அங்கிருந்து எடுத்து விற்கிறார்கள். நீர்த்துளி மலை உச்சியிலிருந்து நிலங்கீழ்அடிவரை செல்ல 15 வருடங்கள் வரை ஆகுமாம். இதனால் இந் நீர் இயற்கையாகவே வடிகட்டப்பட்டு மிகவும் சுத்தமானதாகக் கருதப்படுகிறது.
 9. மிகச் சிறிய வயதில் எனது பாட்டனாருடன் காட்டுக்குச் சென்று ஈச்சங்குருத்து சப்பிட்டுள்ளேன். கோடாலிப் பிடி போன்ற நீளமான பிடி போட்ட கத்தியால் ஈச்சை மரத்தை வெட்டுவார்கள். அதன் சுவை சரியாக ஞாபகம் இல்லை. பின்னர் வளர்ந்த பின்னர் இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். தென்னங்குருத்து பல தடவை சாப்பிட்டுள்ளேன். பலத்த காற்று வீசினால் சில வேளைகளில் தென்னை சரிந்து விழுவதுண்டு.
 10. ஆனால் மோடி ஆதரவு போர் விரும்பிகளின் () கர்ஜனையை சமூக இணையங்களில் சகிக்க முடியவில்லை.
 11. வெளியே எழுதாவிட்டாலும் புத்தன், சுவி அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்களும் யாழில் உள்ளனர். சிறந்த எழுத்தாளுமை உள்ள இன்னுமொருவன் யாழுக்கு வெளியே எழுதுவதில்லை என்று எங்கோ சொன்னதாக ஞாபகம்.
 12. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு பையன்26 $349,00 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
 13. முகப்பில் மேலுள்ள 'தாயக மக்களுக்கு உதவிடுவோம்' பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாழ்த்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. https://yarl.com/order/ நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/ விளம்பரம், மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.
 14. யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் மூலமாக (விளம்பரம் போடாமலே) தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உதவி வழங்கியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள். தாயக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இதே முறையில் உதவ முன்வரலாம்.
 15. முகப்பில் மேலுள்ள பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாத்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. https://yarl.com/order/ நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/ மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.
 16. ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா. உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
 17. 2007 இல் இருந்து பிரான்சில் இதனை நிறுத்தி விட்டார்கள். டிபி நோய் உள்ள நாடுகளில் இதனைக் கட்டாயம் போட வேண்டும். ஒரு தடவை தடுப்பூசி போட்டால் அது 30 - 40 வருடங்கள் வரை டிபி பக்ரீரியா எதிர்ப்பை உடலில் ஏற்படுத்திக் கொள்ளும். இதன்பின் மறுபடி தடுப்பூசி போட வேண்டுமோ தெரியவில்லை. பிரான்சில் அநேகமான தடுப்பூசிகளை 30 - 40 வயதுக்கு மேல் மறுபடி ஏற்றிக் கொள்வார்கள்.
 18. மடகஸ்கார் ஆய்வாளர்கள் artemisia மூலிகை மருந்து ஒன்றினை கொரோனாவுக்கெதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆய்வு விபரங்கள் எதனையும் தரவில்ல்லை. எந்த அளவு உண்மை என்று தெரியாது. https://www.francetvinfo.fr/monde/afrique/societe-africaine/madagascar-covid-organics-le-remede-du-president-rajoelina-contre-le-coronavirus-voit-le-jour_3925621.html#xtor=AL-79-[article]-[connexe]
 19. தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். . இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். தனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு. தினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம்.
 20. அது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.
 21. இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. இத்தாலியிலும் இவ்வாறு படுக்க வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி அதன் சிலபகுதிகளை அழிப்பதால் மூச்சித் திணறல் உண்டாவதால் செயற்கை முறையில் ஒட்சிசன் வழங்கப்படுகிறது. நுரையீரலின் பாதிக்கப்பட்ட பாகங்களிலிருந்து நீர் சுரப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைத்து ஒட்சிசன் கிரகிக்கப்படுவது தடை படுகிறது. முப்புறப் படுக்க வைப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைப்பது தடுக்கப்பட்டு ஒட்சிசன் உடலில் செல்ல வழி ஏற்படும். சாதாரண நோயாளியைக் குப்புறப் படுக்க வைப்பதால் மூச்சு விடுவது கடினம். ஆகவே குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். https://www.rtbf.be/info/dossier/epidemie-de-coronavirus/detail_coronavirus-pourquoi-les-patients-des-soins-intensifs-sont-ils-allonges-sur-le-ventre?id=10463249
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.