-
Posts
7383 -
Joined
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by இணையவன்
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
இணையவன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நிகழ்ச்சி நடத்தி காணிகளை விடுவிப்பதாக விளம்பரப் படுத்திவிட்டு உரிமையாளர்களுக்குக் காணியைப் பார்வையிட மட்டுமே அனுமதித்துள்ளனர். இரு போன்ற விடயங்களை அரச பதவிகளில் இருப்பவர்கள் மூலமாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புகளால் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. ஆனால் தமிழர்களுக்குத் தொடர்ச்சியான பிரச்சனைகள் உண்டு என்பது தொடர்ச்சியாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் இவை தமிழர்களின்மேல் இழைக்கப்பட்ட அடக்குமுறைக்கு வலிமையான ஆதாரங்களாகவும் இருக்கும். 55 ஆயிரம் சதுர அடி பகுதிக்குள் மட்டும் பயணிக்கத் தடையா அல்லது இந்தப் பகுதிக்குள் வெடிப்பொருள்கள் இருப்பதால் 234 ஏக்கர் நிலங்கள் முழுவதுக்கும் செல்லத் தடையா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 55 ஆயிரம் சதுர அடி என்பது இரண்டு ஏக்கருக்கும் குறைவானது. -
சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இணையவன் replied to இணையவன்'s topic in உலக நடப்பு
இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். -
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இணையவன் replied to இணையவன்'s topic in உலக நடப்பு
இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை. -
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இணையவன் replied to இணையவன்'s topic in உலக நடப்பு
நோர்வே அயர்லாந்து நாடுகளிலிருந்து இஸ்ரெயில் தனது தூதுவர்களைத் திருப்பியழைத்துள்ளது. 28 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் பலஸ்தீனை அங்கிகரிக்கப்படும் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது. -
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்கும் அறிவிப்பு ஒன்றினை நோர்வே முன்னெடுக்க உள்ளது. இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக ஸ்பெயின் அயர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரிப்பதாக அறிவிக்க உள்ளன. இஸ்ரெயில் தனது கண்டனத்தை எக்ஸ் இல் தெரிவித்துள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் : https://www.ouest-france.fr/monde/palestine/guerre-israel-hamas-plusieurs-pays-europeens-vont-reconnaitre-lexistence-dun-etat-palestinien-bd808140-17fc-11ef-89e1-9d0ea397ae43
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
இணையவன் replied to பிழம்பு's topic in உலக நடப்பு
சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html -
வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
இணையவன் replied to ஏராளன்'s topic in சுற்றமும் சூழலும்
விளைச்சலை அதிகரிக்க பூச்சிநாசினிகளைப் பாவித்தார்கள். இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட விளைச்சல் குறைந்தது. இப்போது இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸில் தேனீ வளர்ப்பு பற்றி விளிப்புணர்வு செய்கிறார்கள். பரிஸில் நான் வேலை செய்யும் 5 மாடிக் கட்டடத்தின் உச்சியில் மொட்டைமாடியில் தேனீ வறர்க்கிறார்கள். வருடத்தில் இரண்டு தடவை இதிலிருந்து கிடைக்கும் தேனை அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்று பராமரிப்புச் செலவை ஈடு செய்கிறார்கள். எனக்கு இலவசமாக தேனீ வளர்ப்புப் பற்றிய செய்முறைப் பயிற்சி வழங்கினார்கள். இப்போது இங்கு தேனீக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆசியாவிலிருந்து வந்துள்ள தேனீ போல் தோற்றமுள்ள ஒரு வித குழவி ஆகும். -
ஸ்டார்லிங்க் பல சர்ச்சைகளை உண்டக்கியதால் ஐரோப்பாவில் இதற்குக் கணிசமான எதிர்ப்பு உள்ளது. எலன் மஸ்க் தான் விரும்பினால் ஒரு நட்டில் ஸ்டார்லிங்க் மூலம் இணையச் சேவைகளைச் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும் என்று நிரூபித்திருந்தார். ஐரோப்பா சொந்தமாக IRIS² என்ற செய்மதி இணைய வழங்கலை உருவாக்கி வருகிறது. இதனால் ஸ்டார்லிங்க் ஐரோப்பாவில் காலூன்றுவது கடினம். உலகை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியின் இன்னொரு அங்கம் ஸ்டார்லிங்க்.
-
காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520
-
இது மட்டுமில்லை. ஒரு நாட்டின் அதிபர் பயணிக்கும் விமானத்தில் இரகசிய சமிக்ஞைகள் பாதுகாப்பு அணியுடன் இருக்கும். விபத்து ஏற்பட்டாலும் அதன் இடத்தையாவது காட்டும். அத்துடன் ஹெலிகொப்டரின் நகர்வுகள் கண்காணிக்கப்படும். இவருடன் சென்ற ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பத்திரமாக உள்ளன. 40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.
-
மொழிபெயர்ப்புக்கு நன்றி ரஞ்சித். இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமைதான் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒரு பகுதி சிங்களவரையாவது சிந்திக்க வைக்கிறது. இது புதிய சிந்தனை அல்ல. விஜய குமாரதுங்க போன்றவர்களும் முன்னெடுத்ததுதான். இன்று இச் சிந்தனையானது தமிழர்களுடன் சமாதானமாகப் போனால் நாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவரும் முன்னேற்றமடையலாம் என்பதைச் சிங்களவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் உரிமைக்காகப் போரடியது முடிவுக்கு வந்து பல வருடங்களின் பின் சிங்களவர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுடன் எம்மை நோக்கி வரக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் போராட்டங்கள் மூலம் இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கலாம். இதற்கு முக்கிய இடைஞ்சலாக இருக்கப் போவது இலங்கையின் பௌத்த பீடங்கள் தான்.
-
மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
-
துனிசியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரித்து வருகிறது. 2015 இல் இதேபோன்ற கடற்கரை விடுதியில் நுளைந்த ஒருவர் சரமாரியாகச் சுட்டு 39 உல்லாசப் பயணிகளைக் கொன்றிருந்தார். உல்லாசப் பயணிகள் அதிகமுள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளைப் போல் எல்லா இடங்களுக்கும் பயமின்றிச் செல்ல முடியுமா என்பது சந்தேகம். துனிசியாவுக்கு அருகில் இருக்கும் நாடு மொறோக்கோ வித்தியாசமானது. இங்கு புர்க்கா போட்ட பெண்களைக் காண்பது அரிது. தாவணியால் முட்டாக்குப் போடாத பெண்கள் வீதியில் உலாவுவதைச் சதாரணமாகப் பார்க்கலாம். கடற்கரை, பாலைவனச் சோலை, மலை போன்ற அனைத்தையும் பார்க்கலாம். இரண்டுமே முன்னர் பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
இணையவன் replied to பகிடி's topic in வாழும் புலம்
அண்மையில் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் உள்ள நண்பர் ஒருவர் தனது வீட்டு உறுதியைத் தொலைத்ததால் ஏதோ செய்து அதனைப் புதுப்பித்திருந்தார். அதனைத் தனது வெளிநாட்டில் பிரஜாவுரிமையோடு வழும் தனது பிள்ளையின் பெயருக்கு மாற்றியிருந்தார். இந்த இரு பத்திரங்களையும் பார்த்தபோது ஒரு சந்தேகம் வந்தது. இதில் ஒட்டப்பட்ட முத்திரை தவிர அரசாங்க இலச்சினை எதிலும் இல்லை. நொத்தாரிசின் பெயர் விலாசம் கூட மொட்டைக் கடிதம் போன்று சாதாரண ஒற்றையில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இது தவிர 4 தானத்தில் ஒரு இலக்கம் போடப்பட்டிருந்தது. கீழ்ப்புறம் அடிக்கப்பட்ட சீல் கூட Land Regisry - Jaffna என்று மட்டுமே இருந்தது. இந்த உறுதிப் பத்திரத்தை எப்படி நம்புவது ? இது என்ன விதத்தில் சட்ட ரீதியான உறுதிப்படுத்தலாக இருக்கும் ? -
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை
இணையவன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.