-
Posts
7383 -
Joined
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by இணையவன்
-
சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள். இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை).
-
ஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.
-
45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!
இணையவன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
போலி நோட்டு என்ற சொல் நமது ஊரில் பாவிக்கப்படுவதில்லை. அது தவிர தமிழில் எழுதாமல் ஏன் வீரகேசரி இப்படி எழுதுகிறது ? -
வணக்கம் ரசோதரன், உங்கள் பெயர் நீங்கள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இணையவன் replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்
ஆழ்ந்த இரங்கல்கள். -
அமெரிக்க இராணுவ உதவிகள் கிடைக்காத நிலையில் உக்ரெய்ன் இராணுவம் எதிர்த்தாக்குதல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றது. ரஸ்ய படைகள் Avdiïvka நகரினை மூன்று பக்கத்தாலும் சுற்றி வளைத்துள்ளன. இங்குள்ள உக்ரெய்ன் இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.
-
கதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இணையவன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது. -
தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.
-
இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஏவுகணைத் தளத்தினைக் கொண்டிருந்த ரஷ்ய கப்பல் ஒன்றை உக்ரெய்ன் மூழ்கடித்திருந்தது. இத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆளில்லா படகுகளில் இரண்டு கப்பலின் உந்து சுழல் கருவிகளைத் தாக்கி கப்பலை நகர முடியாமல் செய்ய ஏனையவை கப்பலின் நடுப் பகுதியைத் தாக்கி அங்கிருந்த ஏவுகணக்களை வெடிக்க வைத்தன.
-
சென்ற வருடம் அங்கு போயிருந்தபோது நானும் மைத்துனனும் பாசயூர் மீன் சந்தைக்குப் போயிருந்தோம். ஆவலில் துடிக்கத் துடிக்க குவித்து வைத்திருந்த மீன் நண்டு இறால் என்று ஏரளமாக வாங்கிவிட்டோம். பெரிய உரப் பை ஒன்றை வங்கி அதற்குள் எல்லாவற்றையும் போட்டு ஸ்கூட்டரில் ஒருவாறு வீட்டுக்குக் கொண்டு வந்தோம். கிணற்றடியில் தென்னை நிழலில் இருந்து எல்லாவற்றையும் வெட்டி முடிக்க இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. கூழுக்குத் தேவையானவற்றை முதலில் வெட்டிக் கழுவிக் கொடுத்திருந்தோம். மதியம் ஏற்பட்ட அகோரப் பசியில் அன்று குடித்த அளவு கூழ் வாழ்க்கையில் குடித்ததில்லை. மீண்டும் இப்படியானதொரு தருணத்தை எதிர்பார்த்தபடி... 🙂
-
விற்பனை செய்த 517 நபர்களைப் பிடித்துள்ளனர் ஆனால் அவர்கள் மூலம் முதலாளிகளைப் பிடிக்க முடியவில்லை. இதென்ன புதிதாக 😃
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
இணையவன் replied to தமிழன்பன்'s topic in நலமோடு நாம் வாழ
உள்ளி, இஞ்சி, மஞ்சள் எல்லா வியாதிகளையும் போக்கும் போன்ற மொட்டையான கருத்தியலை விட்டு அறிவியல் நீதியான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். சிறுநீரகத்தின் வேலைப் பழுவைக் குறைக்க 3 உணவுக் கட்டுப்பாடுகள் : 1. குறைவான உப்பு, சோடியம் உள்ள உணவுகளை உண்ணுதல். 2. ஒரு நாளைக்குத் தேவையான அளவான புரதம். இது அதிகமாகவும் இருக்கக் கூடாது குறைவாகவும் இருக்கக் கூடாது. இறைச்சி வகைகளைக் குறைத்து தாவர புரதங்களையும் உண்ணலாம். இறைச்சி மூலம் குறிப்பாக இரத்த இறைச்சி மூலம் இரும்பு மற்றும் அத்தியாவசிய புரதங்கள் கிடைப்பதால் முற்றாகத் தவிர்க்க வேண்டாம். கோழி மீன் வகைகள் போன்றவற்றை மாறி மாறி உண்ணலாம். 3. பொஸ்பரஸ் அதிகமான உணவுகளைக் குறைவாக உண்ணுதல் (இறைச்சி, மீன், பால் பொருட்கள், பயறு வகைகள்) இவை தவிர பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகளைப் போதிய அளவில் எடுத்துக் கொள்வதும், பழங்களையும் ஒலிவ் எண்ணை போன்ற தாவர எண்ணைகளையும் (பச்சையாக) போதிய அளவிலும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.- 30 replies
-
- 10
-
அன்று நடந்த உரையின் முழு வடிவத்தை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரங்கினுள் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே உள்ளனர். எல்லோருக்கும் பயன்படும் வகையில் இவ்வாறான உரைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாகப் பதிவு செய்து வெளியிட ஆவனை செய்ய வேண்டும். எமது ஊடகங்களும் பயனுள்ள விடயங்களில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
-
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
இணையவன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
அமெரிக்காவில் பல தொழில்நுட்ப முன்னிலை நிறுவனங்களில் தமிழர்கள் உயர் பதவிகளில் இருப்பது உண்மைதானே. அதலால் இருக்கலாம். தமிழ்நாட்டை முன்னிலைப் படுத்தலிலும் தனிமைப் படுத்தப்படலிலும் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என்று நினைக்கிறேன். -
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
இணையவன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
திராவிடம் என்றதும் கிண்டல் செய்பவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பொறுமையாக வாசிக்க வேண்டிய கட்டுரை. அரசியல் ஊழல் மோசடிகளைத் தாண்டி திராவிட இயக்கங்கள் மக்களுக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்டியதன் மூலமே தமிழ்நாடு சமூகவியல் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று நம்புகிறேன். திராவிடக் கொள்கைகள் மூலம் தமிழர் இன்று உலகளவில் தலைநிமிர்ந்து நிற்பதையிட்டுப் பெருமைப்பட வேண்டும். நியூயோர்க் டைம்ஸ் பத்திதிகை புகழாரம் சூட்டியதால் அப்படி எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஐடி , பொருளாதார முன்னேற்றங்கள் மட்டுமல்லாது சமூகவியல் முன்னேற்றம் போன்றவற்றையும் கணிப்பில் எடுத்துள்ளனர். 1960 களின் பின்னரே மாற்றங்கள் உருவானதாகவும் பெண்கள் உரிமைப் போராட்டமும் அன்றே வலுவடைந்ததாகவும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது -
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘கரஞ்ச்’ கொழும்பை வந்தடைந்தது
இணையவன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நாங்களும் கப்பல் விடுவோம் 🙂 அமைச்சர் ஜெய்சங்கர் விளையாட்டாகச் சொல்லவில்லை ! -
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
இணையவன் replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ட்ரம்பிற்கு நோபல் பரிசு 2018 இலேயே பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் 2021 இல் நோபல் பரிசுக்காக நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் Christian Tybring-Gjedde என்பவர் ட்ரம்பினைப் பரிந்துரைத்தார். பின்னர் Capitole தாக்குதல் மற்றும் ட்ரம்பின் குளறுபடியான நடத்தையைப் பார்த்தபின் தான் இப் பரிந்துரை செய்ததற்காக வெட்கப் படுவதாகக் கூறினார். இதுபோன்று கிளாடியா டென்னியும் பின்நாளில் வெட்கப்படாமல் இருந்தால் சரி. -
'கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய கருத்துகள் மற்றும் அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
-
பல தடவைகள் தோல்வியில் முடிந்த செய்மதி ஏவல் ஒன்றை ஈரான் சென்ற வெள்ளி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட 3 செய்மதிகள் மூலம் வேறு நாடுகளின் உதவியின்றி ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் (intercontinental ballistic missile) செலுத்தும் திறனைப் பெறுகிறது. அணுகுண்டினைக் காவிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை தொடர்பான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கேட்டுள்ளது.