Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7237
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ஓவியம் மட்டுமன்றி எழுத்தாற்றலும் உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்.
  2. இதை நான் மிகப் பெரிய பகிடி என்று சொன்னால் இந்தத் திரியும் கிழித்துத் தொங்க விடப்படும். 😂 உள்ளூரில் வெள்ளைச் சீனிக்கு மாற்றீடாக பனஞ்சீனியைப் பாவிக்கலாம். அதற்காகப் புரளிகளைப் பரப்பக் கூடாது.
  3. பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என்று சொல்லும்போதே நினைத்தேன், நீங்கள் கூட வேலை செய்யும் நண்பர்கள் சொல்வதைத்தான் ஒப்புவிக்கிறீர்கள் என்று. வெள்ளை சிவப்பு வைன்களில் சீனி இல்லை. 100 கிராம் சிவப்பு வைனில் 0.6 கிராமும் வெள்ளையில் 1கிராமும் உண்டு. கலோரி அளவில் வெள்ளை வைனை விட சிவப்பில் சற்று அதிகமாக உள்ளது (ஜஸ்ரின் குறிப்பிட்ட sweet wine வேற). உங்கள் வைத்தியர் தலையாட்டியது மிகச் சரி. வெள்ளை வைன் அருந்தியதால்தான் மாரடைப்பு வந்தது என்று முடிவெடுப்பதற்கு நீங்கள் ஒன்றும் பகுத்தாய்வாளர் இல்லை. சிவப்பு வைன் பாவித்திருந்தால் சில வேளை முன்னதாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று தெரிந்து கொள்வது தவறல்ல. கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களில் எத்தனை கலோரி, சீனி, கொழுப்பு உண்டென்று குறிக்கப்படுவது கட்டாயம். ஏனென்றால் நாமாகவே இன்னென்ன உணவில் சீனி உண்டு இல்லை என்று முடிவெடுக்க முடியாது. நாம் தெரியாமலே இத்தனை நாள் சாப்பிடும் உணவில் கலோரிகள் ஏதாளமாக இருக்கலாம். அரைகுறை அறிவோடு எனக்கு நானே வைத்தியன் என்ற முடிவை நான் எப்போதும் எடுக்க மாட்டேன். வைத்தியரின் ஆலோசனையைப் பிரதானமாகவும் எனது தேடலை மேலதிகமாகவும் கொண்டே எனது உணவு, மருந்து பாவனைகள் இருக்கும். இறுதியாக, இது இலங்கையில் சராசரி ஆயுட்காலம் 60 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை. 60 ஆம் ஆண்டுக்கு முன் வைன் குடிக்கவில்லை, சீனி, பசுமதி, இனிப்பு, இறைச்சி உண்ணவில்லை, சதாரண வருத்தத்துக்கு மாத்திரைகள் எடுக்கவில்லை, அமெரிக்கன் மருந்து விற்பதற்காகப் புதிய நோய்களை உருவாக்கிப் பரப்பவில்லை, வைத்தியர் வியாபாரியாக இருக்கவில்லை… ஆனாலும் அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை? இவ்வளவு அறிவுரை கூறும் உங்களிடமே இதற்கான பதிலையும் எதிர்பார்க்கிறேன் (வழக்கம்போல், எழுதினால் வெட்டுவீர்கள் என்று நழுவ வேண்டாம்).
  4. Cognac போன்ற மதுபானங்களில் சீனி மிக மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஏராளமான கலோரிகள் உண்டு. இந்தக் கலோரிகளை பிரெஞ்சில் வெறுமையான கலோரிகள் என்று சொல்வார்கள். இவற்றை உடலில் சேமிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உடலால் உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டியவை. தேவைக்கதிகமான கலோரிகள் உடலில் ஏறியதும், ஜஸ்ரின் குறிப்பிட்டதுபோல் உடலுக்குச் சக்தியை வழங்க வேண்டிய இரத்தத்தில் உள்ள சீனி சும்மா சுற்றித் திரிந்து எரிக்கப்படாமல் சீனி அளவைக் கூட்டும். 5 சென்ரிலீற்றர் Cognac இல் 100 கிலோ கலோரிகள் உள்ளன. இது 5 கட்டிச் சீனிக்குச் (25 கிராம்) சமன்.
  5. ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள். ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள் Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன. என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.
  6. இன்னும் 10 நிமிடத்திலிருந்து சில நிமிடங்கள் யாழ் இயங்காமல் போகலாம்.
  7. இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம்.
  8. மதுரங்கேணி, நான் எழுதியதைத்தான் நீங்களும் எழுதியுள்ளீர்கள். இதில் எங்கே புரளி உள்ளது ? 🙂 பாகற்காய்க்குப் பதிலாக புடலங்காயைச் சேர்த்துக் கொண்டாலும் ஒன்றுதான். அது தவிர மரக்கறியிலுள்ள நார்ப்பொருள் இரத்தத்தில் சீனியின் அளவைக் (glycemic index) கட்டுப்படுத்துமே தவிர நீரிழிவு நோயைக் (இன்சுலின்) கட்டுப்படுத்தாது.
  9. யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதால் சாக்குச் சொல்லாமல் நிச்சயமாக நீங்கள் பதில் எழுத வேண்டும். கருத்தை நீக்க வேண்டுமா இல்லையா என்பது கள விதிகளைப் பொறுத்தது.
  10. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  11. நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன. நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன். பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம். நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.
  12. உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣
  13. சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கட்டுரையாளர் கோவைக்காய் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகிறாரே தவிர எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.
  14. முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் வயோதிபர் = அதிக வயதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் பருவங்கள் மாறினாலும் ஒவ்வொரு நாள் விடியலையும் ஆவலோடு எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு இறக்கும் வரை மனதளவில் 70, 80 எல்லாம் கடந்துவந்த ஆண்டு எண்ணிக்கைகள் மட்டுமே 🙂
  15. உக்ரெயின் போரில் ரஸ்யா வென்றால் அது சீன மேலாதிக்கத்திற்கான கதவுகளைத் திறந்து விடுவதற்க்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது அமெரிக்கா நேரடியாக ஈடுபடாத உக்ரெயின் போருக்காகச் செலவிடும் பணத்தை விடப் பன்மடங்கு பணச் செலவை அமெரிக்காவுக்கு உண்டாக்கும். ஏனென்றால் ரஸ்யா வெல்லும் பட்சத்தில் ஐரோப்பாவை நோக்கி அமெரிக்கா தனது கடல் ஆகாய கண்காணிப்பு எதிர்ப்பு இராணுவத் தளபாடங்களை நகர்த்த வேண்டி வரும். இதனால் தாய்வானின் பிடியை அமெரிக்கா தளர்த்த வேண்டி வரும். வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் இஸ்ரெயில் போரும் இதேபோல் இருக்கலாம். இந்த இரு போர்களுக்கும் அமெரிக்கா தற்போது செலவிடும் பணம் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரத்துக்கு வாய்ப்பானவையே. இதில் ஐரோப்பாவும் பெரும் பலனடைகிறது. அமெரிக்கா உக்ரெயினைக் கைவிட்டால் இப் போரை முழுமையாக ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும்.
  16. விமான நிலையத்தை நடத்த முடியாது என்பது இலங்கை அரசின் இயலாமையைக் குறிக்கும். நாளுக்கு நாள் விமானப் பயணங்கள் அதிகமாகிவரும் நிலையில் விமான நிலையங்கள் நட்டமடையாது. இதனை வேறொரு நிறுவனம் எடுத்து நடத்தித் தாமும் இலாபம் ஈட்டி மேலதிகமாக இலங்கை அரசங்கத்துக்கும் பங்கு கிடைக்குமாம். இதனையே இலங்கை அரசாங்கத்தால் தனியாக நடத்த முடியாதென்பது இலங்கையின் நிர்வாகத் திறனைக் கேவலமாகக் காட்டுகிறது.
  17. இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.
  18. காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
  19. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பையா !
  20. தமிழினத்தின் இணையில்லா மாவீரரின் பிறந்த நாளை நினைவு கூருகிறோம்.
  21. வாழ்த்துகள் ! சப்பாத்து அணியாமலே அவர் பயிற்சி செய்திருப்பார். அதன்படியே சப்பாத்து இல்லாமல் போட்டியிலும் கலந்து கொள்வது அவருக்கு வசதியாக இருந்திருக்கும். 1500 மீற்றரில் முதலாவதாக வந்துள்ளார். 5000 மீற்றரை விட இதுவே கடினமானது, வேக ஓட்டம். ஒருவேளை 5000 மீற்றர் ஒரே நாளில் அல்லது ஒரு நாள் இடைவெளியில் இடம்பெற்றிருக்கலாம். சரியான ஓய்வு இல்லாததால் நான்காம் இடம் கிடைத்துள்ளது.
  22. சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
  23. போலிஸ் அல்ல ரவுடி. ஒவ்வொரு கடவுளும் தாம்தான் பெரியவர் உண்மையானவர் என்றே கூறுகின்றனர். கும்பிடுபவனுக்குச் சொர்க்கம், கும்பிடாதவனுக்கு நரகத்தில் சித்திரவதை. சில மதங்கள் இன்னும் மேலே சென்று அந்த மதத்தைப் பின்பற்றாதவர் எல்லோருக்கும் நரகம் என்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.