Everything posted by இணையவன்
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
கப்பல் சேவை தாமதம். விமானச் சேவை தாமதம். சேது சமுத்திரத் திட்டம் தாமதம். சீனாவை விட்டால் ஒரு மாதத்தில் செய்து முடிப்பார்கள் 😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஜூன்மாத முனேறித் தாக்கும் நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்பே உக்ரேன் தாம் ஊமையாக இருக்கப் போவதாகக் குறிப்பிட்டது. முன்புபோல் போர் நிலவரங்களை முழுமையாக அறிவிப்பதில்லை. முன்னேறித் தாக்குதலில் உக்ரேன் படைகளுக்கே அதிக இழப்பு உண்டாகும் என்பதும் எதிர்பார்க்கப்பட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் மீண்டும் 1898 இல் உள்ளது.
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் அரை மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
தேயிலை உண்டு. ஆனால் தேனீர் ஊற்றிக் கொடுக்கும் சமையல்காரர் பெலாருஸ்ஸ்ஸில். 😂 அவர் இல்லாமல் புதினால் இயங்க முடியாது என்பதை மேலே எழுதியுள்ளேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நகர்த்தப்பட்டுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மீண்டும் நல்வரவு கோசன் ! சில குளறுபடிகள் நடந்தாலும் நீங்கள் நினைப்பது நடப்பதற்குச் சான்றுகள் குறைவு. ஏனென்றால் பிரிகோஜின் புதினுக்கு வேண்டப்பட்டவர். பிரிகோஜின் இல்லாமல் புதின் இயங்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் பக்மூத் சண்டையின்போதே புதின் இவருக்குத் தேனீர் விருந்து கொடுத்திருப்பார். 🤣
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் ஒரு மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த 24 மணித்தியாலத்துக்குள் நீங்கள் 7 தடவை விருப்பப்புள்ளி பாவித்துள்ளதாக அட்மின் தரவு தெரிவிக்கிறது.
-
தமிழனின் சிற்பக் கலை.
அமைப்பு ஒன்றின் மூலம் அதிக தூரம் போக முடியாது என்பதால்தான் தோல்வி கண்டன. ஒரு உதாரணம். யாழில் ஒவ்வொரு கிராமத்திலும் மரங்களுக்குக் கீழ் கல்லாக இருந்த கடவுள்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தால் கோபுரங்களின்கீழ் குடியேற்றப்பட்டுத் தேர் இழத்துத் திருவிழா காண்கின்றன. திருவிழா என்பது மதிப்பிழந்து தேர் இழுக்கவே மக்கள் போதாமல் உள்ள நிலமைக்கு வந்துள்ளது. இந்தப் பணத்தை வேறு வகையாகச் செலவழிக்கலாம் அல்லவா ? உதாரணம் : - வீடுகளில் தனிப்பட்ட மழை நீர் சேகரிப்பு - இளைஞர்களுக்குப் பொழது போக்கும் வசதிகளை உருவாக்குதல் - இயற்கை எரிவாயு உருவாக்குதல் போன்ற சிறு தொழில்நுட்ப அறிவூட்டல்கள் - காணி வசதி உள்ளவர்கள் தேனீ வளர்த்தல் இப்படி ஏராளம் உண்டு.
-
தமிழனின் சிற்பக் கலை.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமல்ல. நான் குறிப்பிட்டது ஓரளவேனும் எம்மால் துளித் துளியாகவேனும் செய்யக் கூடியது.
-
தமிழனின் சிற்பக் கலை.
தற்போதைய நிலையில் ஈழத் தமிழருக்குத் தீர்வு ஒன்றை யாரும் (தமிழ் அரசியல் வாதிகள் அல்ல) பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தீர்வைப் பரிசாகத் தர வேண்டிய நிலை யாருக்கும் தற்போது கிடையாது. இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று மட்டும்தான். பொருளாதார அறிவியல் நீதியாக எம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் தமிழினத்தை இலங்கையில் தக்கவைப்பது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் ஈழத் தமிழரைச் சூழ்ந்துள்ள தடைகளிலிருந்து வெளியேற வேண்டுமானால் மதம் சாராத பகுத்தறிவுள்ள சமத்துவமான பொருளாதார வளர்ச்சியுள்ள சமுதாயத்தையே எதிர்பார்க்கிறேன். இவ்வாறான சமுதாயத்தால் தான் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த முடியும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.
-
தமிழனின் சிற்பக் கலை.
சின்ன வித்தியாசம்தான். எதிரி புனைவு மகாவம்சத்தைப் பலப்படுத்த தொல்லியல் ஆராதங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். நாங்கள் எமது வரலாற்றைப் புனைவுக் கதைகளால் சோடிக்க முயல்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் தெளிவாக இருக்கிறேன். எமது அரசியல்வாதிகள் பயணிக்கும் பாதை வேறு. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இடையில் போட்டிக்குச் சிலை வைத்து விளையாடுவது, கடையடைப்புக்கு அழைப்பது, ஜெனீவா வலம் வருதல், அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி இடையிடையே உணர்ச்சிவசப்படுவது, தீர்வுத் திட்டம், 13, எல்லாமே கண்ணாமூச்சு விளையாட்டுகள். இதற்குள் இந்துத்துவா சிவபூமி என்று தேவையில்லாத உபாதைகள். இவை வெளிநாட்டில் உள்ள சிலருக்கு உற்சாகத்தைக் கொடுக்கலாம். எனக்கு இல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Databaseஇல் சிறு பிரச்சனை. விரைவில் சரி செய்யப்படும்.
-
தமிழனின் சிற்பக் கலை.
முற்றிலும் தவறான தகவல். கீழடி மக்கள் வாழ்ந்த இடம் 2700 ஆண்டுகள் பழமையானது. அக் காலத்திலேயே கோயில்கள் இருக்கவில்லை. 6000 ஆண்டுக்கு முன் எப்படி ? 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கட்டுரைக்கு நன்றி அக்கா. நேரமின்மையால் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். ஆறுதலாக வாசிக்க வேண்டும். நீங்கள் 6 மாதம் நின்றுள்ளீர்கள், நான் 6 நாட்கள். உங்கள் அனுபவங்கள் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் பதில் தருகிறேன். சென்ற பெப்ரவரி இறுதியில் இலங்கைக்கு 6 நாள் பயணம் போயிருந்தேன். இங்கிருந்து அங்கு போய்க் குடியேறிய ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறுகிய பயணமானாலும் பல அனுபவங்கள் கிடைத்தன. அதீதமான கற்பனைகளுடன் சென்றால் ஏமாற்றம்தான் உண்டாகும். ஒவ்வொரு சமுதாயமும் அதன் சூழலுக்கேற்ப மாற்றங்களை அடைந்துகொண்டே இருப்பது நியதி. எமது சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் இப்போது இதுதான். எப்படி இதற்குள் நுளைய வேண்டும் என்பதே முதலாவது பிரச்சனை. இனொன்றும் உறுதியாக விளங்கியது. போதை மது விற்பனை, குழுக்கள், எமது அரசியல், இந்த மூன்றில் ஒன்றைக் கூட நெருங்காமல் கடந்து செல்ல வேண்டும். இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதி பின்னர் அழித்து விட்டேன். வீணான பிரச்சனை வேண்டாம் என்பதால் இத் திரியிலும் இவற்றைக் கடந்து செல்வோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் சுவி அண்ணா !
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2023]
‘ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம் ! 60 வயதில் கொள்ளை அழகு…! 90 வயதிலும் தாய்மை…!’ என்ற தவறான தகவல்களுடன் புனையப்பட்ட கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2023]
'உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா தடை' என்ற திரியில் அதனுடன் தொடர்பற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி @nunavilan @பெருமாள் @ஈழப்பிரியன் @ராசவன்னியன் @suvy @தமிழ் சிறி @ஏராளன் @நிலாமதி 🙏
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இன்று கருத்துக்கள் மென்பொருள் புதுப்பித்தலுக்காக யாழிணையம் ஐரோப்பிய நேரம் இரவு 9 மணியளவில் 1 மணி நேரம் இயங்காமல் போகலாம். நன்றி நிர்வாகம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கட்டுரை போன்ற ஆக்கங்களை உருவாக்குவதற்கு வேண்ட்டுமானால் CharGPT பாவிக்கலாம். இதற்காக தரவுகளை வெட்டி ஒட்டுவதற்குப் பல்வேறு இணையத் தளங்கள் உள்ளன. கருத்தாடலில் ஒவ்வொருவரும் தம் பக்கக் கருத்துக்களையே எழுத விரும்புவார்கள். CharGPT ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கை சார்பான உரையாடல்களைத் தரும் என்று நினைக்கவில்லை. அதன் தரவுகளும் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். பொய்ப் பரப்புரைகளுக்கும் சதிக் கோட்பாடுகளுக்கும் நிச்சயம் இடம் இருக்காது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் திடீர் வீழ்ச்சி 1850 இல் 😲