Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து அவரின் நாவினைச் சுவைத்த சிங்கள மிருகங்கள் ‍ - தொடரும் இனக்கொலை ஜூலை 1983 தம்மைக் கொல்லப்போகும் சிறைக் காவலர்களால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் குட்டிமணியும் தேவனும் சுமார் இரவு 8 மணியளவில் வெளியே நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து தமிழ்ச் சிறைக்கைதிகள் அறிந்துகொண்டனர். திருநெல்வேலித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற செய்தியை குட்டிமணியே தமிழ்க் கைதிகளுக்குத் தெரிவித்திருந்தார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு நாளாந்தம் செய்தித் தாள்களை வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசதாசன் ஆகியோர் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் குற்ற‌வாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர். தமக்கெதிரான‌ தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். தமிழ்க் கைதிகளின் கொலைக்களம் ‍ கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை இரவு 10 மணியளவில் சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகிவருவதை தமிழ்க் கைதிகள் உணரத் தொடங்கினர். அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 72 தமிழ்க் கைதிகளில் பெரும்பாலானோர் சக ("+") அடையாளம் போன்ற வடிவில் கட்டப்பட்ட இரு மாடிக் கட்டடத்தினுள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சக அடையாளத்தினாலேயே அப்பகுதி தேவாலயப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டட‌திற்கு ஏ, பி, சி டி என்று நான்கு பிரிவுகள் இருந்தன. இவற்றுள் கீழ்த்தளத்தில் இருந்த பகுதிகள் ஏ3, பி3, சி3, டி3 என்று பெயரிடப்பட்டிருந்தன. குட்டிமணியும் ஏனைய ஐந்து கைதிகளான தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசுதாசன் ஆகியோரும் கீழ்ப்பகுதியின் முகப்பில் அமைந்திருந்த பி3 சிறையறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். டி 3 சிறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 29 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும், விரைவில் இவர்களை விடுவிக்க எண்ணியிருந்ததாகவும் ஜான்ஸ் கூறியிருந்தார். சி 3 பகுதியில் மேலும் 28 தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், ரொபேர்ட், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பாஸ்கரன், தேவகுமார், ஜயக்கொடி ஆகியோர் உட்பட மேலும் சில தமிழ்க் கைதிகளும் அங்கே தடுத்துவைக்கப்படிருந்தனர். ஏ3 பகுதியில் தீவிர கிரிமினல்க் குற்றவாளிகளும், தப்பிப் போக எத்தனித்தவர்களும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அலிடாலியா விமானத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட சேபால எக்கநாயக்கவும் அப்பகுதியிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தான். இந்த நான்கு பகுதிகளுக்கும் பொதுவான சந்திபோன்ற பகுதியில் மண்டபம் போன்றதொரு அறை அமைக்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவுக்கும் செல்லும் வாயில்ப் பகுதியில் தடித்த இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட பாரிய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு இரும்புக் கதவிற்கு அருகிலும் இரு ஆயுதம் தாங்கிய காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இப்பகுதிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த இரு பிரிவுகளிலும் சுமார் 800 வரையான கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனைவிடவும் மேலும் 9 இளவயது தமிழ் அரசியல்க் கைதிகள் தனியான பகுதியொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இளவயதுக் குற்றவாளிகளுக்கான கட்டடம் என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் வைத்தியர் வி. தர்மலிங்கம், கோவை மகேசன், வைத்தியர் ராஜசுந்தரம், ஏ. டேவிட், கே நித்தியானந்தன், பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சின்னராசா, பாதிரியார் ஜயதிலகராஜா மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் இப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், இவர்களினால் ஆபத்துக்கள் எதுவும் இருக்காது என்று கருதியதனாலும், அரசாங்கம் இவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தது. அதிகாலை 2 மணியிருக்கும், தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மிக அண்மையாக பலபேர் ஆர்ப்பரித்தவாறே வந்துகொண்டிருப்பதை தமிழ்க் கைதிகள் உணர்ந்துகொண்டனர். "தமிழர்களைக் கொல், குட்டிமணியைக் கொல்" என்று அவர்கள் ஆவேசமாகக் கத்திக்கொண்டுவருவதை அவர்கள் தெளிவாகக் கேட்டார்கள். இடையிடையே, "அவர்களின் இரத்தத்தை நாம் குடிப்போம்" என்றும் பலர் வெறிகொண்டு கத்தத் தொடங்கினார்கள். சிங்களக் கைதிக் கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தவனை குட்டிமணி நன்கு அறிந்திருந்தார். "தம்பி" பிரபாகரனின் உடல்ச் சாயலில் அவன் காணப்பட்டதால் அவனை "தம்பி" என்றே குட்டிமணி அன்புடன் அழைத்துவந்தார். குட்டிமணியைப் போலவே ஏனைய தமிழ்க் கைதிகளும் அந்தச் சிங்களக் கைதியை தம்பி என்றே அழைத்துவந்தனர். தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதில் அவனே ஈடுபட்டுமிருக்கிறான். அந்தத் தம்பியே வெறிகொண்ட சிங்களக் கைதிக் காடையர்களை குட்டிமணியின் அறைநோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். கைகளில் வாட்கள், கத்திகள், இரும்புக் கம்பிகள், சட்டங்கள், கூர்மையான முனையினைக் கொண்ட பல ஆயுதங்களை காவிக்கொண்டு சுமார் 25 பேர் அடங்கிய சிங்களக் கைதிகள் தலைமை தாங்க மீதிச் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாவதாக ஆறு டெலோ போராளிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பி 3 அறியினை தாம் கொண்டுவந்த திறப்புக்களைக் கொண்டு திறந்தார்கள். கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்த ஆறு தமிழ்க் கைதிகளின்மீதும் பாய்ந்தது சிங்களக் காடையர் குழு. சாவது உறுதியாகிய நிலையில் வெற்றுக்கைகளால் தம்மைத் தற்காத்துக்கொள்ள எதிர்த்தாக்குதலில் இறங்கினார்கள் தமிழர்கள். குட்டிமணிக்கு தற்காப்புக் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. அதனால், ஆரம்பத்தில் தன்னைத் தாக்கவந்த சிங்களவர்களை அவர் திருப்பித் தாக்கிக்கொண்டிருந்தார். தனது கைகளாலும், கால்களாலும் அவர்கள் மீது கடுமையாகத் தாக்கினார். ஆனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் ஈடுகொடுக்கமுடியவில்லை. பல சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஆயுதங்களால் தாக்கியபோது அவர் பலமிழந்து கீழே வீழ்ந்தார். கீழே வீழ்ந்த குட்டிமணியை இரும்புக் கம்பிகளால் தாக்கியபின்னர் வாட்களால் கடுமையாக வெட்டத் தொடங்கினர் சிங்களவர்கள். குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை சிறை அறையிலிருந்து நடுப்பகுதியில் அமைந்திருந்த மண்டபத்திற்கு அக்கூட்டம் இழுத்துவந்தது. பின்னர் அவரை முழங்காலில் இருத்திவிட்டு கூராக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை அவரின் கண்களுக்குள் செலுத்தி அவரின் கண்கள் இரண்டையும் பிடுங்கியெடுத்தார்கள். இந்தக் கொடூரத்தை முன்னால் நின்றவர்கள் செய்துகொண்டிருக்க மீதமாயிருந்த அனைத்துச் சிங்களக் காடையர்கள் வெற்றி ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவரின் கண்களைத் தோண்டியெடுத்தவர்கள் அவரைப் பார்த்து, "இந்தக் கண்களால்த்தானே ஈழம் மலர்வதைப் பார்க்கப்போகிறேன் என்று கூறினாய்? இனி எப்படிப் பார்க்கப் போகிறாய் என்று பார்க்கலாம்" என்று எள்ளி நகையாடினார்கள். குட்டிமணிக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவேளை அவர் ஒரு பேச்சினை தனது கூண்டிலிருந்து வழங்கியிருந்தார். அப்பேச்சின் போது, தான் இறந்ததன் பின்னர் தனது கண்களை பார்வையற்ற தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்குத் தானமாக வழங்கத் தான் விரும்புவதாகவும், அவன் கண்களூடாக மலரப்போகும் தமிழ் ஈழத்தைத் தான் கண்டு மகிழ்வேன் என்றும் கூறியிருந்தார். இப்பேச்சினையே சிங்களக் காடையர்கள் அந்தவேளயில் எள்ளி நகையாடி குட்டிமணியின் கண்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது குட்டிமணியின் தலை கீழே தொங்கத் தொடங்கியது. முழங்காலில் இருந்துகொண்டு கீழே வீழும் தறுவாயில் இருந்த குட்டிமணியின் அருகில் ஓடிச்சென்ற இன்னொரு காடையன், அவரின் தலைமயிரைப் பிடித்து, பின்னால் இழுத்து, வாய்க்குள் தனது கைய்யினை விட்டு அவரது நாவினை வெளியே இழுத்தெடுத்தான். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியினால் குட்டிமணியின் நாவினை வெட்டியெடுத்த அவன், தன் வாய்க்குள் அதனைப் புகுத்திக்கொண்டே, "புலியின் இரத்தத்தைக் குடித்துவிட்டேன்" என்று வெற்றிக்களிப்புடன் பாடத் தொடங்கினான். இதன் பின்னர் குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை அக்கும்பல் தமது வெறியடங்கும் வரையில் தாக்கிக் கொன்றுபோட்டது. முதலாவது அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு டெலோ போராளிகளைக் கொன்றபின்னர், சிங்களக் காடையர்கள் டி 3 ஆம் அறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படியில் கைதுசெய்து அடைத்துவைக்கப்படிருந்த தமிழ்க் கைதிகளின் அறை நோக்கி ஓடத் தொடங்கியது. அந்த அறையினுள் 29 தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தமது கைகளில் இருந்த திறப்புக்களைப் பாவித்து அந்த அறையினைத் திறந்துகொண்ட கும்பல், தமிழ்க் கைதிகளின்மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. தாக்குதல் நடந்துகொண்டிருந்தவேளை வெறும் 16 வயதே நிரம்பிய மயில்வாகனம் எனும் சிறுவன் அறையின் ஓரத்தில் குறுக்கிக்கொண்டே ஒளிந்துகொண்டார். சிங்களக் காடையர்களுடன் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சிறைக் காவலன் ஒருவன் சிறுவன் மயில்வாகனத்தைக் கண்டுகொண்டான். உடனே அச்சிறுவன் மீது பாய்ந்த காவலாளி தனது கத்தியால் அச்சிறுவனைச் சரமாரியாக் குத்திக் கொன்றான். டி 3 அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு தமிழ்க் கைதிகள் இந்த கொடூரத்தை மிகுந்த அச்சத்துடன் அனுபவித்துக்கொண்டிருந்தனர். காற்று உட்புகவென சுவர்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஓட்டைகளினூடாக அடுத்த அறைகளில் நடக்கும் அகோரத்தினை மாணிக்கதாசன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையிலும் கொல்லப்பட்ட தமிழர்களை வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள் அவ்வுடல்களை மண்டபத்தின் நடுப்பகுதியில் வீற்றிருந்த புத்தனின் சிலையின் முன்னால் குவிக்கத் தொடங்கினர்.புத்தனின் சிலைக்கு அருகில் இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் எனப்படும் கந்தையா ராஜேந்திரன் அங்கு நடந்துகொண்டிருந்த அகோரங்களை அறையில் இருந்த ஏனையவர்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாணிக்கதாசன் தான் அங்கே கண்ட அக்கிரமங்களை, படுகொலையின் அகோரத்தினை வெளியுலகிற்குச் சொல்ல உயிர்தப்பினார்.இரண்டாம் நாள்ப் படுகொலையில் ரொபேர்ட் கொல்லப்பட்டாலும் கூட, அவர் முதல் நாள் வழங்கிய படுகொலைகளின் தொடர்ச்சியான விவரணத்தை இன்னும் அங்கிருந்து உயிர் தப்பிய பலர் மறக்கவில்லை. திங்கட்கிழமை இரவு நடந்த படுகொலைகள் முடிந்தநிலையில், தாக்குதலை முன்னின்று நடத்திய சிங்களவர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் நின்று படுகொலைகளில் பங்கெடுத்துக்கொண்ட சிறைக்காவலர்களுக்கும் இடையே சிங்களத்தில் நடந்த சம்பாஷணையினை ரொபேர்ட் தனது சக தமிழ்க் கைதிகளுக்கு தமிழில் கூறிக்கொண்டிருந்தார். முதலாம் நாள் படுகொலைகளுக்குப் பின்னர் சி 3 அறையில் 28 கைதிகளும், இளவயதுப் பகுதியில் 9 பேரும் இன்னமும் மீதமிருந்தனர். தாக்குதல்க் கூட்டத்தில் பேசிய சிறைக் காவல் அதிகாரியொருவன், "இன்றைக்கு இது போதும்" என்று கூறினான்.
  2. சிறைச்சாலைப் படுகொலைகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கான வாசல் அன்று பிற்பகல் 2:45 மணிக்கே சிறைச்சாலையில் நடக்கும் கலகம் பற்றி பொலீஸார் அறிந்திருந்தனர். தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை பொலீஸ் ரேடியோ வலையமைப்பில் பின்வரும் தகவல்கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன. தெற்கு பிரிவு 2 இலிருந்து தெற்கு பிரிவு 1 இற்கான தகவல் : சிறைச்சாலையில் மிகவும் தீவிரமான சூழ்நிலை ஒன்று நிலவுகிறது. தமிழ்ச் சிறைக்கைதிகளை கொன்றுகொண்டிருக்கிறார்கள். திரு ஜான்ஸ் அவர்கள் பொலீஸாரின் உதவியைக் கோரியிருக்கிறார். ஆனால், எம்மால் அங்கு போக முடியாது. அவ்விடத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் இப்போது வைத்திருக்கிறது. தெற்கு பிரிவு 1 இலிருந்து பிரிவு 2 இற்கு : இராணுவம் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதென்றால், நாம் அப்பகுதியிலிருந்து விலகியிருப்பதே நல்லது. இராணுவத்தினருடன் மோதுப்படுவது அவ்வளவு நல்லதல்ல. தெற்குப் பிரிவு 2 இலிருந்து பிரிவு 1 இற்கு : புரிகிறது சேர், அப்படியே செய்யலாம். கிறிஸ்டோபர் தியடோர் ஜான்ஸ் எனும் அதிகாரியே உதவிச் சிறைச்சாலைகள் ஆணையாளராக‌ அந்நாட்களில் கடமையாற்றி வந்தார். சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொட வெளிநாடொன்றிற்குப் போயிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் திட்டமிட்ட வகையில் கலவரங்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. சரியாக 2 மணி அடிக்க, முன்னர் திட்டமிட்டதுபோலவே சுமார் 300 இலிருந்து 400 வரையான சிங்களச் சிறைக்கைதிகள் ஆலயப் பிரிவு (Chapel Section) அமைந்திருக்கும் பகுதிநோக்கி திரளாக ஓடிக்கொண்டிருந்தனர். சிறைச்சாலையின் தேவாலயப் பகுதி என்றழைக்கப்படும் பகுதியிலேயே அதியுயர் பாதுகாப்புக் கொண்ட பகுதி அமைந்திருந்தது. அப்பகுதியை நோக்கி ஆவேசமாகக வந்துகொண்டிருந்த சிங்களச் சிறைக்கைதிகளின் கும்பல், "தமிழர்களைக் கொல்", "குட்டிமணியைக் கொல்" என்று உரக்கக் கோஷமிட்டவாறே அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை, சிங்களச் சிறைக்கைதிகளால் மனித நேயத்திற்கு முரணனான வகையில் கொடூரமாக தமிழ்ச் சிறைக்கைதிகளில் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய 19 தமிழர்களில் மூன்று பேருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடனான நேர்காணலின்போது, தாம் அனுபவித்த இக்கொடூர நிகழ்வினை அவர்களின் பார்வையிலேயே இங்கு எழுதுகிறேன். இதே சாட்சியத்தைத்தான் உயிர்தப்பிய தமிழர்கள் ஜனாதிபதியின் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையிலும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிங்களக் காடையர்களால் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியான பொரள்ளைச் சந்திக்கு அண்மையாகவே வெலிக்கடைச் சிறைச்சாலை அமைந்திருக்கிறது. வெளியில் நடந்துகொண்டிருந்த கலகம், தீவைப்புக்கள், கட்டட இடிப்புக்கள் போன்றவற்றை உள்ளேயிருந்த கைதிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கின்றனர். "வெளியே பாரிய அசம்பாவிதம் ஒன்று நடந்துகொண்டிருப்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் எதற்காக நடக்கிறதும என்பதுபற்றி எமக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை" என்று புளொட் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவர் மாணிக்கதாசன் என்னிடம் கூறினார்.
  3. வேண்டுமென்றே தாமதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் - ‍ தொடரும் தமிழ் இனக்கொலை, ஜூலை 1983 தமிழரின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்களுடன் சாதாரணச் சிங்களப் பெண்மணிகள் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களின் கைகளில் இருந்த தமிழர்களின் வீடுகள் குறித்த விபரப் பட்டியல்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களே தமிழர்கள் மீதான தாக்குதலை தலைமையேற்று முன்னின்று நடத்தியமை ஆகியவை மட்டுமே அரச உயர்பீடம் இத்தாக்குதல்களை பின்னால் இருந்து இயக்கிவருகிறது என்பதை நிறுவதற்கான காரணங்களாக இருக்கவில்லை. தாக்குதல்கள் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்தவேளை அதனைத் தடுக்காது, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த இறுதிவரை ஜெயார் காட்டிய அசமந்தப் போக்கும் இத்தாக்குதல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அதியுயர் பீடமே நடத்துகிறது என்பதற்கு இன்னொரு காரணமாகிவிடுகிறது. ஜூலை 83 இனக்கொலையினைத் திட்டமிட்டு நடத்திய சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதி ஜே ஆர் ஜெயவர்த்தன‌ தனது அலுவலகத்திற்கும், வாசஸ்த்தலத்திற்கும் வெளியே நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான தாக்குதல்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஜெயவர்த்தன சொல்லலாம். ஆனால், நடந்துவரும் அக்கிரமங்கள் குறித்து அவரது ஆலோசகர்களாலும், காவல்த்துறை அதிகாரிகளாலும் அவருக்குத் தொடர்ச்சியாகவே அறிவுருத்தப்பட்டு வந்தது. தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதும் அவர்களது சொத்துக்களும் உடைமைகளும் எரியூட்டப்பட்டு வருவதும் அவருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசின் அருகில்க் கூட கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் உடல் கிடப்பதை ஒரு பொலீஸ் அதிகாரியே ஜெயாருக்குச் சொல்லியிருந்தார். ஞாயிறு இரவு முதல் நிலைமை மோசமாகி வருவது குறித்து பொலீஸ் அதிகாரிகள் ஜெயாருக்கு எச்சரித்து வந்ததுடன் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறும் பலமுறை கேட்டிருந்தார்கள். மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் ஜெயாரின் அமைச்சர்கள் சிலரும் பொலீஸ் அதிகாரிகளும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு ஜெயாரிடம் மன்றாட்டமாக வேண்டிக்கொண்டிருந்தார்கள். கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பொலீஸாரின் தலைமைச் செயலகத்தில் திங்கள் காலை 6:30 மணிக்கு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதென்றும், பொலீஸ் மா அதிபரூடாக பொலீஸார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனும் தகவலை ஜனாதிபதிக்குச் சொல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பொலீஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு தமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தெரிவித்தார். ஆனால், பொலீஸ் மா அதிபர் பரிந்துரைத்த ஊரடங்கினை ஜெயார் அமுல்ப்படுத்த விரும்பவில்லை. அத்துடன், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பொலீஸாரையோ, இராணுவத்தையோ பணிப்பதையும் ஜெயார் முற்றாக நிராகரித்திருந்தார். தமிழரின் உடைமைகள் கடைகளிலிருந்து வெளியே வீசி எறியப்பட்டுத் தீமூட்டப்படுகின்றன‌ அமைச்சர்களான தொண்டைமான், பெஸ்ட்டஸ் பெரேரா, ரொனி டி மெல் மற்றும் தேவநாயகம் ஆகியோர் தாம் ஜனாதிபதியை திங்கள் காலை சந்தித்தபோது ஊரடங்குச் சட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோரியதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால், ஜெயார் அவர்கள் கோரிக்கையினை நிராகரித்து விட்டார். என்னுடன் பின்னர் பேசிய அமைச்சர்களும், பொலீஸ் அதிகாரிகளும் நாட்டில் நடந்துகொண்டிருந்த அக்கிரமங்கள் குறித்து ஜெயார் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை என்று கூறினார்கள். தொண்டைமானும் இதனையே என்னிடம் கூறினார். ஆனால், அன்று காலை ஜெயாருடன் பேசிய சில பொலீஸ் அதிகாரிகள் எனக்கு வேறுவிதமான செய்தியைச் சொன்னார்கள். அதாவது பொலீஸ் உயரதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதிக்கும் தேவையான நேரத்தில் அறிவுரைகளை வழங்கிய ஜெயார், அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் பணித்ததாகக் கூறினர். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவெனில், இந்திய உதவி உயர்ஸ்த்தானிகரான அப்யங்கரின் மனைவிக்குப் பாதுகாப்பளிக்குமாறு ஜெயார் உதவிப் பொலீஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டபோது நடந்த சம்பவமாகும். இந்திய உயர்ஸ்த்தானிகர் சத்வால், தில்லியில் அப்போது நின்றதால், உதவி உயர்ஸ்த்தானிகர் அப்யங்கரே அப்பதவியை அப்போது வகித்துவந்தார். அவரது வாசஸ்த்தலம் பார்க் வீதியில் அமைந்திருந்தது. எட்வேர்ட் குணவர்த்தனவே கொழும்பு நகரின் உதவிப் பொலீஸ் மா அதிபராக அப்பொழுது பணியாற்றி வந்தார். அவர் ஜெயாருக்கு நன்கு விசுவாசமான ஒரு அதிகாரி. அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் எழுதிய இரத்தமும் சயனைட்டும் எனும் புத்தகத்தில் 1983 ஆம் ஆண்டு இனக்கொலையில் இடம்பெற்ற சில விடயங்கள் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறார். 256 ஆம் 257 ஆம் பக்கங்களில் அப்யங்கரின் மனைவியின் பாதுகாப்புக் குறித்த திகிலான பதிவுகளை அவர் சேர்த்திருக்கிறார். பொலீஸாரின் வானொலி வலையமைப்பில் தலைமைச் செயலகத்தின் பணிப்புரை வெளிவந்தபோது எட்வேர்ட் குணவர்த்தன நாரஹேன்பிட்டவில் இருந்தார். "அனைத்து அதிகாரிகளுக்கும், கொழும்பு தெற்குப் பிரிவில் நடமாடும் பிரிவுகளுக்கும் தலைமையகத்திலிருந்து விடுக்கப்படும் அறிவித்தல்: இந்திய உப உயர்ஸ்த்தானிகரின் இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். திருமதி அப்யங்கர் எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் அகப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மீண்டும் கூறுகிறேன், உடனடியாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக்கிய பணியாகும்" என்று கூறப்பட்டது. அதற்குப் பதிலளித்த குணவர்த்தன, "கொழும்பு தெற்குப் பிரிவிலிருந்து தலைமைஅயகத்திற்கான செய்தி : உங்கள் தகவல் கிடைக்கப்பெற்றது, நாம் உடனடியாக அங்கு செல்கிறோம்" நடமட்டும் தெற்குப் பிரிவிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு : "தகவல் கிடைத்தது, வெள்ளவத்தை நிலையத்தில் நிற்கிறோம், பார்க் வீதி நோக்கிப் பயணமாகிறோம். எல்லா வீதிகளும் மிகுந்த நெரிசலாகக் காணப்படுகிறது". கொழும்பு தெற்கு, பிரிவு 2 இலிருந்து தலைமையகத்திற்கான செய்தி : "நாம் பார்க் வீதிக்கு அருகில்த்தான் நிற்கிறோம். வாகன நெரிசலூடாகப் போக முடியவில்லை. கால்நடையாக இரு கொன்ஸ்டபிள்களுடன் அப்பகுதி நோக்கி ஓடிக்கொன்டிருக்கிறேன். பார்க் வீதியின் திசையிலிருந்து கரும்புகை மேலெழுந்து வருகிறது" தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து செய்தி: நான் பார்க் வீதிக்கு உப பொலீஸ் மா அதிபருடன் சென்றுகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அறிவியுங்கள்". கொழும்பு தெற்கு பிரிவு 2 இலிருந்து பொலீஸ் மா அதிபருக்கு : "நான் பேசுவது கேட்கிறதா சார்?" பொலீஸ் மா அதிபர் : "ஆம் கேட்கிறது". கொழும்பு தெற்கு பிரிவு 2 : "நான் பார்க் வீதியில் நிற்கிறேன், அங்கு புகை மண்டலம் எதனையும் காணவில்லை. உயர்ஸ்த்தானிகரின் வீட்டில் நெருப்பு எதனையும் காண முடியவில்லை. திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருக்கிறார். சற்றுத் தொலைவிலிருக்கும் ஜிம் ரட்ணத்தின் வீட்டிலிருந்தே புகைமண்டலம் எழுந்து வருகிறது சேர்". பொலீஸ் மா அதிபர் : "நன்றி தெற்கு பிரிவு 2, நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்". தெற்கு பிரிவு 2 : "அப்படியே செய்கிறோம் சேர்". திருமதி அப்யங்கரின் வீட்டினை பொலீஸ் மா அதிபர் அடைந்தபோது அவரை வரவேற்ற திருமதி அப்யங்கர், அவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். அப்போது கொழும்பு தெற்கின் பொலீஸ் அதிகாரியும் இரு கொன்ஸ்டபிள்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு தனது நன்றியை பொலீஸ் மா அதிபர் தெரிவித்தார். பொலீஸ் மா அதிபருக்கும் அவரது உதவியாளருக்கும் தேநீரை வழங்கியவாறே பேசிய திருமதி அப்யங்கர், தான் தனது வீட்டில் தீப்பிடித்ததாக எவருக்கும் சொல்லவில்லை, அயலில் தீப்பற்றியிருக்கிறது என்றுதான் வெள்ளவத்தை பொலீஸாருக்கு அறிவித்தேன் என்று கூறினார். உடனேயே அவ்விட்டிலிருந்து ஜனாதிபதிக்குத் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பொலீஸ் மா அதிபர், நிலைமையினை விளக்கி, திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருப்பதாகக் கூறினார். குணவர்த்தனவின் தகவல்கள் ஜெயார் நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தார் என்பதையே கூறுகின்றன. கொழும்பில் நிலைமை மிக மோசமாகக் காணப்பட்டது. வீதிகளில் பல அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள தொழிலாளர்கள் அத்திணைக்களங்களுக்குச் சொந்தமான பாரவூர்திகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சனமிகுதியால் பாரவூர்திகளின் பின் கதவினை கீழே இழுத்துவிட்டு அதன் மீதும் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவ்வாறு பயணித்துக்கொண்டே, "தமிழர்களை அடித்து விரட்டுங்கள், தமிழர்களைக் கொல்லுங்கள், சிங்களவர்களுக்கே வெற்றி" என்று கோஷமெழுப்பிக்கொண்டே சென்றனர். காலை 10 மணியளவில் சமூகத்திற்கும், மதத்திற்குமான மத்திய நிலையத்தின் இயக்குனர் பாதிரியார் திஸ்ஸ பாலசூரியர் டீன் வீதிக்குச் சென்று தனது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல வருமாறு வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டிக்கு சைகை காண்பித்தார். இதனை அவதானித்த நவ சம சமாஜக் கட்சியின் லீனஸ் ஜயதிலக்க தமிழ் அகதிகளை இராணுவத்தினரிடம் கையளிக்க வேண்டாம் என்று தடுத்தார். "அவர்கள் சாதாரண இராணுவத்தினர் இல்லை, இராணுவ சீருடையில் பவனிவரும் அரச காடையர்கள். அவர்களிடம் தமிழர்களைக் கையளித்தால் நிச்சயம் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார். லேக் ஹவுஸில் என்னுடன் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் என்னுடன் பேசும்போது பல அரச அமைச்சர்கள் தமது தொகுதிகளில் இருந்து காடையர்கள் பலரை அரச வாகனங்களிலேயே கொழும்பிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினர். இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களும் இத்தேவைக்காகப் பாவிக்கப்பட்டன. இலங்கை மின்சார சபையின் பல வாகனங்களும் காடையர்களை கொழும்பிற்கு ஏற்றிவந்தன. அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்களும் இத்தேவைக்காக அரச அமைச்சர்களால் பாவிக்கப்பட்டன. வீதிகளில் இராணுவ வாகனங்கள் தென்பட்ட போதெல்லாம், "சிங்கள் இராணுவத்திற்கு வெற்றி கிட்டட்டும்" என்று சிங்களக் காடையர்களும் மக்களும் உரக்கக் கோஷமிட்டனர். தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த காடையர்களுடன் பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்பட்டனர். பியதாச பின்வரும் சம்பவத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார், "காலி வீதியும், டிக்மன்ஸ் வீதியும் சந்திக்கும் சந்தியில் உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த ஆறு தமிழர்களைத் துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் மறித்து வைத்திருந்து அவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த காடையர்களிடம் அவர்களைக் கையளித்தபோது, அவர்கள் தமிழர்கள் ஆறு பேரையும் அடித்துக் கொன்றதோடு இராணுவத்தினருடன் சேர்ந்து உடல்களைத் தீமூட்டி எரித்தனர்" என்று கூறுகிறார். எரிக்கப்பட்ட மினிபஸ், இனக்கொலை ஜூலை 1983 தமிழ்மக்கள் மீதான படுகொலைகளும், அவர்களின் சொத்துக்களை சூறையாடுதலும், சொத்தெரிப்புக்களும் தெகிவளை, கொகுவளை, கோட்டே, நாவலை, பேலியகொட‌ மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவின. இறுதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளை கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. இந்தியர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. உலக வங்கியிடமிருந்து கடன்பெற்ற ஒரே இலங்கையரான ஏ. வை ஞானம் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், மகராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், சுமார் 4,000 சிங்களத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த இந்திய புடவைத் தொழிற்சாலையான ஹிட்ரமணி உள்ளிட பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன.யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான கே குணர்டணம் என்பவருக்குச் சொந்தமான கே ஜி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது பல சினிமாக் கொட்டகைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கையின் மிகப்பெரிய ஆடையுற்பத்தி நிறுவனமான ஹென்ட்லி காமன்ட்ஸ் உட்பட பல ஆடைத் தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டன. இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் ஓமான் வங்கி என்பனவும் எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கொழும்பில் இயங்கிவந்த அனைத்து சினிமா அரங்குகளும் எரிக்கப்பட்டன. தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சர்வதேசச் செய்தியாளர்களின் கூற்றுப்படி இந்த வன்முறைகள் மிகக் கொடூரமாகவும், இரத்தக்களறி நிறைந்தும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனது விசாரணைகளின்படி, தாக்குதல் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தல் யாதெனில், "உங்களின் தாக்குதல்கள் வேகமாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்" என்பதுதான். தமிழர் மீதான இந்த திட்டமிட்ட இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு அரச உயர்பீடம் சிங்களக் காடையர்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான நான்குமணிநேர அவகாசத்தினையே வழங்கியிருந்தது. ஆகவே, சிங்களக் காடைக்குழுக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் சரியாக காலை 10 மணிக்குத் தாக்குதல்களை ஆரம்பித்ததுடன், சரியாக 2 மணிக்கு தாக்குதல்களை முடித்துக்கொண்டு பின்வாங்கத் தொடங்கினர். கொழும்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்தது இதுதான். 4 மணிநேரத்திற்கு தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதனால்த்தான் சில வீடுகள் தப்பிக்க முடிந்தது. குறிப்பாக தாக்குதல் ஆரம்பித்த இடங்களில் இருந்து தொலைவில் அமைந்திருந்த தமிழரின் வீடுகள் சில இதனால் தப்பிக்கொண்டன. திங்கள் காலை முதல் பிற்பகல் வரை ஜெயார் ஜனாதிபதி செயலகத்திலேயே தங்கியிருந்தார். பின்னர், மாலையாகியதும், இராணுவத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அக்கூட்டத்தில் பிரட்மண் வீரக்கோனும் சமூகமளித்திருந்தார். பொலீஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் சிறைச்சாலை ஒன்றில் படுகொலை ஒன்று நடந்திருப்பதாக செய்தி வந்திருப்பதாக பிரட்மன் வீரக்கோன் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
  4. தமிழர்களின் விடுதலைக்காகப் போராட கிளம்பியவர்கள் பலர் பின்னர் என்ன செய்தார்கள் என்பது நாம் அறியாதது அல்லவே? ஆகவே, எல்லோரையும் நம்பிவிட முடியாது. இங்கே சொல்லப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியாமலேயே எப்படி வெளிப்படைத் தன்மையில்லாமல் வேலை செய்கிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம், விட்டு விடுங்கள்.
  5. தமிழ் அரசியல்க் கைதிகள் படுகொலை - தொடரும் தமிழ் இனக்கொலை ஜூலை 1983 எரிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான புடைவைக் கடை ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் உறுப்பினராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் ஜெயார் தமிழருக்குக் கொடுக்கவிருந்த இறுதித் தீர்வு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அதன் அர்த்தம் எனக்கு முழுவதுமாகப் புரிந்திருக்கவில்லை. 1957 இல் இருந்து டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் அரசியல் நிருபராக வேலை செய்துவருபவன் என்கிற ரீதியிலும் இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளைப் பிந்தொடர்ந்து வருபவன் என்கிற ரீதியிலும் ஜெயாரின் தமிருக்கான தீர்வு என்பதுபற்றி எனக்கென்று ஒரு கருத்தினை அதுவரை நான் கொண்டிருந்தேன். ஆனால், இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தினை ஜூலை 24 ஆம் திகதி இரவு நடைபெற்ற வன்முறைகளையடுத்தே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸில் நான் பணிபுரிந்த நாட்களில் பல முன்னணி ஆசிரியர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அப்படியான ஒருவர்தான் மேர்வின் டி சில்வா. இவர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பதவி வகித்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் லங்கா கார்டியன் எனும் பத்திரிக்கையினை வெளியிட்டு வந்ததுடன், ஞாயிறு ஐலண்ட் பத்திரிக்கையிலும் "மனிதர்களும் அவரது நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் பகுதியொன்றினை தொடர்ச்சியாக எழுதியும் வந்தார். 1992 ஆம் ஆண்டு மாசி மாதம் 2 ஆம் திகதி அவர் எழுதிய ஆக்கத்தில் "கொடூரமான வன்முறைகளை நடைபெறுவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பதாகவே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக கதைகள் உலாவத் தொடங்கின. தமிழர்களுக்கு பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்காக மிக மிலேச்சத்தனாமன அசம்பாவிதங்கள் நடைபெறப்போகின்றன என்கிற செய்தியே அது" என்று எழுதியிருந்தார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்த காரணத்தை எனது சிங்கள ஊடக‌ நண்பர் ஒருவர் பின்வருமாறு விபரித்திருந்தார். "தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, கொழும்பில் மட்டுமல்ல, தெற்கில் மட்டுமல்ல, அவர்களின் யாழ்ப்பாணத்திலும் எரிக்கமுடியும் என்று காட்டவேண்டிய தேவை எமக்கு இருந்தது" என்று கூறினார். ஜெயவர்த்தனவையும் சிங்களவர்களையும் எதிர்த்தால் அல்லது அவர்களின் பலத்திற்குச் சவால் விட்டால் தமிழர்களுக்கு மிகக் கொடுமையான பாடம் ஒன்றினைப் படிப்பிக்க அவர்கள் முனைவார்கள் என்பதையும், அதுவே ஆடி 24 ஆம் திகதி, ஞாயிறு அன்று அவர்கள்மேல் கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதையும் நன்கு உணர்ந்துகொண்டேன். தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனுபவித்தவன் என்கிற வகையில் எனது அனுபவத்தினை முன்னர் பதிந்திருந்தேன். இத்தாக்குதல்களின் ஒற்றை இலக்கு தமிழர்களின் பலம் பொருந்திய வணிக, பொருளாதார, நிபுணத்துவ தளத்தை சிதைத்து, அவர்களைப் பலவீனமாக்கி, இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்குவதே என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறான நிபுணத்துவத் தளத்தைச் சிதைப்பது என்பதற்குள் குறிவைத்துத் தாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறு இலக்குவைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சிலரின் பெயர்களையும் நான் பட்டியலிட்டிருந்தேன். அவ்வாறனவர்களில் ஒருவர்தான் தினகரன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கையின் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவருமாகப் பணியாற்றிய ஆர் சிவகுருநாதன். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட பிரதம நீதியரசர் எஸ் சர்வானந்தா தலைமையில் இயங்கிவந்த ஜனாதிபதி உண்மைகளைக் கண்டறியும் கமிஷனின் முன்னால் சிவகுருநாதன் சாட்சியளித்திருந்தார். தனது ஆசிரியர் பணிக்கப்பால் கொழும்பு சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த சிவகுருநாதன், எரிக்கப்பட்ட தனது வீட்டிற்கும், களவாடப்பட்ட தனது உடைமைகளுக்கும் நட்ட ஈடு கேட்டிருந்தார். கமிஷனினால் தனக்கு வழங்கப்பட்ட 75,000 ரூபாய்கள் தனது இழப்பினை ஈடுசெய்ய எந்தவிதத்திலும் போதுமானதாக இருக்கவில்லை என்று என்னிடம் பின்னர் அவர் கூறியிருந்தார். இனக்கொலை அரங்கேற்றப்பட்ட வேளை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் அமைந்திருந்த ஒழுங்கையில், அக்கட்டிடத்தின் முன்னாலேயே அவரது வீடு அமைந்திருந்தது. பொரள்ளையில் கலவரம் வெடித்த நாளான ஞாயிறு மாலை அவர் லேக் ஹவுஸ் நிலையத்தில் என்னுடன் இருந்தார். நள்ளிரவானபோது நாரஹேன்பிட்டவில் அமைந்திருந்த அன்டேர்ஸன் தொடர்மாடி வீடுகளின் மீது சிங்களவர்கள் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்தது. ஜனாதிபதி உண்மையறியும் கமிஷன் முன்னிலையில் சிவகுருநாதன் வழங்கிய சாட்சியத்தைப் பார்க்கலாம், ஆர் சிவகுருநாதன் "இன்னொரு பத்திரிக்கையில் பணிபுரிந்துவந்த எனது நண்பரான திருச்செல்வத்தை நான் தொடர்புகொண்டேன். தனது அயலவரின் வீடு தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் அவரை நான் மீள அழைத்தபோது தனது வீடும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அதன் பின்னர் என்னால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்". "அன்றிரவு பல நண்பர்களுடன் நான் பேசினேன், அவர்கள் அனைவரும் தமக்கு நடந்த அநியாயங்கள் குறித்து என்னிடம் சொல்லி அழுதார்கள்". "மறுநாள், கொழும்பு சட்டக் கல்லூரிக்கு விரிவுரையாற்றச் சென்றேன். அன்று எனது வகுப்பில் வெறும் ஐந்து மாணவர்களே சமூகமளித்திருந்தார்கள். நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். அங்கிருந்து வங்கிக்குச் சென்ற நான், வீட்டிலிருந்து என்னுடன் எடுத்து வந்திருந்த நகை ஒன்றினை அங்கு பாதுகாப்பாக வைத்தேன். நான் வங்கியிலிருந்து வெளியே வந்தபோது பெட்டா (புறக்கோட்டை) பகுதி எரிந்துகொண்டிருந்தது. லேக் ஹவுஸிற்குச் சென்று அங்கிருந்து வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயன்றேன். ஆனால், வீட்டில் தொலைபேசி வேலை செய்யவில்லை". "ஆகவே அமைச்சர்களான ஏ சி எஸ் ஹமீட் மற்றும் எம் எச் மொகம்மட் ஆகியோரைத் தொடர்புகொண்டு எனக்கு உதவுமாறு கேட்டேன். வீட்டிற்குச் செல்லலாம் என்று எண்ணி வாகனம் ஒன்றினை ஒழுங்குசெய்யலாம் என்று முயன்றபோது, அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. லேக் ஹவுஸ் பத்திரிக்கையாளன் என்கிற வகையில் மாலை 5:30 மணிவரை பயணம் செய்வதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அலுவலக வாகனமொன்றை அமர்த்திக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சாரதி, என்னை ராமகிருஷ்ணா ஒழுங்கையின் முகப்பில் இறக்கிவிட்டார். சிங்கள சாரதியொருவர் தமிழர் ஒருவரை அவரது வீட்டிற்கு தனது வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் பார்த்தால் சிங்கள‌வர்கள் தன்மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர் அஞ்சினார்". "ஆகவே, நான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். வீதியின் அருகே ஒரு கும்பல் அப்பகுதி வீடொன்றிலிருந்து பல பொருட்களை வெளியே இழுத்துவந்து எரித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் எனது வீட்டின் அருகில் செல்லும்போது அயலவரான குணதிலக்கவைக் கண்டேன். "இப்போதான் வருகிறீர்களா? எல்லாமே போய்விட்டது" என்று அவர் என்னைப் பார்த்துக் கூறினார்". "நான் எனது வீடு நோக்கி ஓடினேன். வீட்டின் கதவுகள் அனைத்தும் அகலத் திறந்துகிடக்க, வீட்டின் உட்புறத்தில் பல பூச்சாடிகள் வீசப்பட்டுக் கிடந்தன. வீட்டின் சில பகுதிகள் எரிந்துகொண்டிருந்தன. ஒரு அறையில் எமது உடைகள் அனைத்தும் கட்டில்மீது குவியலாகப் போடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கும்போது எமது வீணை அக்குவியலுக்குள் அமிழ்த்தப்பட்டுக் கிடந்தது". "எனது வீட்டின் அயலிலுள்ள திருமதி குணரட்ணவின் வீட்டிற்கு ஓடிச் சென்றேன். என்னைக் கண்டதும் கதவைத் திறந்த அவர், "சிவகுருநாதன் அவர்களே, பயப்பட வேண்டாம். அவர்கள் எல்லோரும் என்னுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று கூறினார். அதன்பின்னரே எனக்கு ஆறுதலாக இருந்தது". "எனது உடமைகள் அனைத்துமே எரிக்கப்பட்டு விட்டன. எனது மனைவியின் கல்யாணக் கூரைச் சேலையையும் இன்னும் ஒரு சில சேலைகளையும் தவிர வேறு எவையுமே மிஞ்சவில்லை". "எனது வீட்டிற்கு எதிரில் இருந்த ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திற்கு எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்றேன். திருமதி குணரட்ண நாம் போவதை விரும்பவில்லை. எமக்கு அடைக்கலம் தருவதால் அவர் கூட தாக்கப்படலாம் என்கிற காரணத்தினால் நாம் அங்கிருந்து கிளம்பி ராமகிருஷ்ண மிஷன் நோக்கிச் சென்றோம்". "நாம் இராமகிருஷ்ண மிஷனில் தங்கியிருக்கும்பொழுது அந்த மண்டபமும் தாக்கப்படப் போவதாக எமக்குச் செய்தி வந்தது. ஆகவே அங்கிருந்தும் வெளியேறி சரஸ்வதி மண்டபத்தில் இயங்கிவந்த அகதிகள் முகாமிற்குச் சென்றோம். பின்னர் இன்னொரு அகதி முகாம் இந்துக் கல்லூரியிலும் உருவாக்கப்பட்டிருந்தது". "இந்த இரு முகாம்களில் மட்டுமே குறைந்தது 5,000 தமிழர்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். அம்முகாம் மிகவும் சனநெரிசலுடன் காணப்பட்டது. சில நாட்கள் நான் மரமொன்றின் அடியிலேயே படுத்துறங்கினேன். முகாமிலிருந்து எனது வீட்டைப் பார்ப்பதற்கு வியாழக்கிழமை கிளம்பிச் சென்றேன். அது முற்றாக எரிந்துபோய்க் கிடந்தது". இவ்வாறான இனக்கொலையொன்று நடைபெற்றதன் பின்னர் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து வாழ்தல் என்பது சாத்தியம் என்று கருதுகிறீர்களா என்று விசாரணைக் கமிஷன் சிவகுருநாதனிடம் கேட்டது. அதற்கு ஆம் என்று பதிலளித்த அவர், இந்த வன்முறைகள் சிங்களவர்கள் தன்னியல்பாகத் தமிழர் மீது நடத்திய தாக்குதல்கள் இல்லையே என்று கூறினார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சில சக்திகள் இக்கலவரத்தைத் தூண்டிவிட்டதாக அவர் கூறினார். தமிழர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாம் தாக்கப்போகும் வீடுகளின் விலாசங்களின் பட்டியலினை தம்முடன் வைத்திருந்தமை, இத்தாக்குதல்கள் ஒரு பலம்பொருந்திய அரசியக் சக்தியாலேயே செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.
  6. யார் இவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? இவர்களின் நோக்கமென்ன? தமிழர்களைப் பிரதேச ரீதியாகப் பிதித்துவைத்து எழுதவேண்டிய தேவையென்ன? நேற்றுக்கூட இதே தளத்திலிருந்து “சுகு” என்கிற ஒருவரின் பேட்டி இங்கே இணைக்கப்பட்டிருந்தது. புலிகளின் தலைமையினைத் தாக்கியும் , இந்தியாவை நியாயப்படுத்தியும் அப்பேட்டி அமைந்திருந்தது. இன்று வட தமிழீழ மக்களை இந்தியாவின் கூலிகள் என்று கூறி இச்செய்தி வருகிறது! யாரடா நீங்கள் எல்லாம்?
  7. இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவே ஜூலை 83 இனக்கொலையின் சூத்திரதாரி ஒட்டுமொத்தச் சிங்கள மக்களினதும் கோபமே இந்த இனக்கலவரம் என்று ஜெயாரும் அவரது அரசாங்கமும் கூறிவந்ததை பொய்யென்று நிரூபிக்கவே இந்த சம்பவங்களை நாம் இங்கே பதிகிறேன். சில சந்தர்ப்பங்களில் நல்ல மனம் படைத்த சிங்களவர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது தமிழர்களைக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படியான சிங்களவர்களை ஏனைய சிங்களக் காடையர்கள் அச்சுருத்தியிருந்தனர். தமிழர்களைக் காப்பாற்ற நினைத்தால், தமிழர்களைப்போலவே அவர்களையும் கொன்று எரித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுருத்தப்பட்டனர். 1983 ஜூலை இனக்கொலையினையடுத்து பாரிய அகதிகள் முகாமாக மாறிய கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் பிரட்மண் வீரக்கோண் ஆறு பிரத மந்திரிகளுக்கு காரியாதிரிசியாகப் பணியாற்றிய உயர் அரச அதிகாரியான பிரட்மண் வீரக்கோண் ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவர் தனது அயலில் வசித்த தமிழர்களை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். தமிழர்களைப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக பல சிங்களவர்கள் அவருக்கு தொலைபேசியூடாக கொலைப் பயமுருத்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களைத் தான் பாதுகாப்பாக அகதிகள் முகாமிற்குக் கொண்டு சென்றதாக அவர் என்னிடம் கூறினார். "நான் பயத்திற்காக அவர்களை அகதிமுகாமிற்கு அழைத்துச் செல்லவில்லை. எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த தமிழர்களின் உயிரைக் காப்பது அவசியமானது. அவர்களைத் தொடர்ந்தும் எனது வீட்டில் வைத்திருந்தால், அவர்களையும் கொன்றுவிடுவார்கள், ஆகவேதான் அவர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றேன்" என்று கூறினார். http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2021/07/055B0D0A-3E4E-491A-8723-7D0444FB1205.jpeg எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வியாபார நிறுவனம் ஒன்று அந்த இனக்கொலையினை அனுபவித்தவன் என்கிற வகையிலும், இனக்கொலையில் அகப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டவன் என்கிற வகையிலும் இந்த இனக்கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்கிற முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கிறது. இலங்கையின் இனக்கொலையும் அதன் பின்னரும் எனும் நூலினை பியதாச எழுதியிருந்தார். அவர் ஆவணப்படுத்திய சாட்சியங்களினூடாக இந்த இனக்கொலையினை திருநெல்வேலித் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருந்தது என்பது தெளிவாகிறது. நான் சேகரித்த முக்கியமான சாட்சியங்களில் ஒன்றான வாக்களர் பட்டியலைப் பாவித்தே தமிழர்களின் வியாபா நிலையங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன என்பதனை பியதாசவும் தனது நூலில் சாட்சியங்களோடு குறிப்பிட்டிருக்கிறார். வியாபார நிறுவனங்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில், தனது திணைக்களத்திலிருந்தே வியாபா நிறுவனங்களின் பட்டியல் காடையர்களுக்கும், தலைமை தாங்கியவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது என்று கூறினார். தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் அரசாங்கத்தின் அதியுயர் பீடமே இத்தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றது என்பதற்கான ஆதாரத்தினை ஞாயிறு இரவும், திங்கள் காலையும் ஜெயார் நடந்துகொண்ட விதத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஞாயிறு மாலை அதிகாரிகளும், ஜெயாரின் ஆலோசகர்களும் பொரள்ளை மற்றும் மரதானை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த வேளை, ஜெயாரோ மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன குறிப்பிடுகிறார். இரத்தமும் சயனைட்டும் என்று தான் எழுதிய புத்தகத்தில் ஞாயிறு இரவு ஜெயார் நடந்துகொண்ட விதம் குறித்து எட்வேர்ட் குணவர்த்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், "ஜனாதிபதி குடும்பத்துடன் தனது நேரத்தைக் களித்தார். மிக விலைமதிப்பான ஊதாநிறத்திலான‌ முழு ஆடையில் தனது ஆசனத்தில் வீற்றிருந்த அவர், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல அதிகாரிகள் தன்னிடம் கூறிய அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை மிகவும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவந்த வன்முறைகள் குறித்து அதிகாரிகளும் ஆலோசகர்களும் பதற்றதுடன் அவரிடம் கூறும்போது அவர் அதிர்ச்சியடையவில்லை, கலவரப்படவில்லை, நிதானம் தளரவில்லை. ஆனால், தனது இராணுவத்தினரும் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டபோது சற்றுக் கவலைப்பட்டார்" என்று கூறுகிறார். நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து ஜெயார் நன்கு அறிந்தே இருந்தார். அது அவருக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கலகத்தில் ஈடுபடலாம் என்பதே அவருக்கு இருந்த ஒரே கவலை. ஆனால், அவர் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவை அன்று நாள் முழுதும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். 13 கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கே வீரதுங்க கொழும்பிற்கு வந்தார். பொலீஸ் உயர் அதிகாரிகளும், மூத்த ஆலோசகர்களும் ஞாயிறு மாலையும், திங்கள் காலையும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்குமாறு ஜெயவர்த்தனவை அயராது வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் மசியவில்லை. அது ஏன்? பிரபாகரன் உட்பட பெரும்பாலான தமிழர்கள் ஜூலை 83 இனக்கொலையில் அரசாங்கமே முக்கிய சக்தியாக முன்னின்று செயற்பட்டதைக் கண்டுகொண்டனர்.
  8. நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடத்தப்பட்ட தமிழினக்கொலை ‍ - ஜூலை 83 திங்கட்கிழமை காலை, தமிழ் உட்டகவியலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு "தூய்மையாக்கப்பட்ட" 20 வீடுகளில் எனது வீடும் ஒன்று. அவற்றில் மூன்று வீடுகள் அரச பத்திரிக்கையான டெயிலி நியூஸில் வேலை பார்த்த தமிழர்களது. நான் அப்பத்திரிக்கையுன் துணை ஆசிரியர், கே நடராஜா என்பவர் விளம்பரங்களுக்கான ஆசிரியர், ப. பாலசிங்கம் அவர்கள் பிராந்திய ஆசிரியர். தினகரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவப்பிரகாசம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் ஆகியோரது வீடுகளும் அன்று காலை எரியூட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் கொழும்பின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தபோதும், அவை யாவுமே ஒரேநேரத்தில் எரிக்கப்பட்டன. காலை 11:30 முதல் மதியம் 12:30 வரையான ஒரு மணிநேரத்தில் இவை அனைத்தும் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் மட்டுமல்லாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வியாபார உரிமையாளர்கள் ஆகிய தமிழர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தமிழர்களின் வியாபாரங்களை, அவர்களின் பொருளாதாரத்தை, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை இலக்குவைத்து நன்கு திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் நடத்துப்பட்டுவருவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். மொன்டேகு ஜயவிக்கிரம 2001 மேலும், இத்தாக்குதல்களை அரசாங்கத்தின் மிக உயர் பதவியில் உள்ளவர்களே திட்டமிட்டு நடத்துவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். திருநெல்வேலியில் சிங்கள ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே சிங்கள மக்கள் தன்னிச்சையாக இத்தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்ற அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களை தமிழர்கள் முற்றாகப் புறக்கணித்தார்கள். திருநெல்வேலித் தாக்குதலை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட தமிழர் மீதான தாக்குதலுக்கான சாட்டாகப் பாவித்ததே அன்றி அதுவே காரணம் அல்ல என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழில்த்துறை அமைச்சராக கடமையாற்றிய மொன்டேகு ஜயவிக்கிரமவின் வீட்டிற்கு அயலில் வசித்துவந்தவர் எனது நண்பர். ஜயவிக்கிரம அந்த வார இறுதி முழுவதும் தனது மலையகத்து வாசஸ்த்தலத்தில் தங்கிவிட்டு திங்கட்கிழமை பிற்பகலே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார். தனது அயலில் இருந்த தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் உடனே செயலில் இறங்கினார். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களுடன் பேசிய ஜயவிக்கிரம, "ஜெயார் தனது வேட்டைநாய்களை தமிழர்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார், அவற்றினை இனிமேல் மீள அழைப்பது இயலாத காரியம்" என்று கூறினார். ஜயவர்த்தனவின் அமைச்சர்களும், அவர்களின் அடியாட்களும் கொழும்பு நகர் முழுவதிலும் தமது காடையர்களை வழிநடத்தி தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். தொழில்த்துறை அமைச்சர் சிறில் மத்தியூ தனது காடையர்களை கொழும்பு கோட்டைப்பகுதியில் அமைந்திருந்த தமிழர்களின் கடைகளைச் சூறையாடி எரிக்கும் நடவடிக்கைகளில் தலைமை தாங்கியிருந்தார். பிரேமதாசாவும் அவரது அடியாட்களும், கோட்டைப்பகுதி நடைபாதை வியாபாரிகளை அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டப் பகுதியில் இருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களையும், வீடுகளையும் எரித்துக்கொண்டு வந்தனர். கொழும்பு நகர மேயர் தனது மாநகர தொழிலாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபையின் அங்கத்தவர்களையும் அழைத்துக்கொண்டு மரதானைப் பகுதியிலிருந்த தமிழர்களின் சொத்துக்களை எரித்துக்கொண்டிருக்க, முஸ்லீமான போக்குவரத்து அமைச்சர் எம். எச். மொகம்மட் தனது அடியாட்களை பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மாவட்ட அமைச்சர் மல்லிமாராச்சி கொழும்பு வடக்கிலிருந்த தமிழர்களின் வீடுகளை எரிக்க, உதவியமைச்சர் அநுர பஸ்டியான் கொழும்பு தெற்கில் தமிழர்கள் மீது தாக்குதல்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். எமக்கு உதவியளிக்குமாறு நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவேளை மன்னாரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் எமது வீடு நோக்கி ஓடிவந்து எமதருகில் மயங்கிக் கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்து அவர் பேசும்போது, தானும், நண்பரும் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது வெறிபிடித்த சிங்களவர்களின் கூட்டம் ஒன்று தம்மைத் துரத்த ஆரம்பித்தது என்று கூறினார். "நாங்கள் ஓடத் தொடங்கினோம், ஆனால் எனது நண்பனை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நான் கட்டடம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன். எனது நண்பரை இரும்புக் கம்பிகளால் அவர்கள் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றார்கள். பின்னர் பழைய டயர் ஒன்றினை இழுத்துவந்து, அதன்மீது எனது நண்பனை தூக்கி எறிந்தார்கள். பெற்றோலினை நண்பன் மீது ஊற்றிப் பற்றவைத்தார்கள்" என்று அழுகையுடன் கூறினார். அவரால் அந்த கொடூரமான அனுபவத்தினை மறக்கமுடியவில்லை. பின்னாட்களில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதனை அறிந்துகொண்டேன். மறுநாள், செவ்வாய்க்கிழமை நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த இன்னொரு நண்பரான குமாரசாமியின் அனுபவம் வித்தியாசமானது. தெகிவளை, ரட்ணகார பிளேஸ் இல் அமைந்திருந்த அவரது வீட்டைச் சிங்களவர்கள் சூழ்ந்துகொண்டபோது அவர் தனது அறையிலேயே இருந்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட சிங்களவர்கள் வீதிக்கு இழுத்துவந்து அங்கே இருக்குமாறு பணித்திருக்கிறார்கள். சிலர் அவரைத் தாக்கியபோது அருகிலிருந்த சிலர் அவரைத் தாக்கவேண்டாம் என்று மறித்திருக்கிறார்கள். குமாரசாமியை என்ன செய்வது என்பதுபற்றி அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருபகுதியினர் அவரை உயிருடன் தீயிட்டுக் கொழுத்திவிடலாம் என்று கூறினர். அதன்படி இரு சிங்கள இளைஞர்கள் அருகிலிருந்து பெற்றோல் நிலையத்திற்குச் செல்ல, மீதிச் சிங்களவர்கள் அவர் தப்பிவிடாதவாறு சுற்றிக் காவல் நின்றுகொண்டனர். அங்கே நின்ற ஒரு சிங்கள இளைஞன், குமாரசாமியின் முகத்தினருகில் குனிந்து, அவரின் காதில், "மடையா, ஏன் இப்படி குந்தியிருக்கிறாய்? எழும்பி ஓடு" என்று ரகசியாமக் கூறியிருக்கிறார். அந்தச் சிங்கள இளைஞன் கூறியதன்படியே குமாரசாமி எழுந்து ஓடத் தொடங்கினார். வீதியின் முகப்பில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவரிடம் அவர் அடைக்கலமாக, அவரோ குமாரசாமியை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். மறுநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வீதியில் செல்லும் வாகனங்களை மறித்துத் தமிழர்களைத் தேடும் சிங்களக் காடையர்கள் ‍- தமிழினக்கொலை ஜூலை 83
  9. ஜெயார் தமிழருக்குக் கொடுத்த இறுதித் தீர்வு - ‍ தொடரும் இனக்கொலை ஜூலை 83 தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் காப்பற்ற நினைத்த சிங்கள இனவாதிகள் ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் தமக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்னரே எடுத்திருந்தனர். தனது மகன் ரவியின் முதல்த்தாரமும் தமிழருமான சார்மெயின் வன்டர்க்கோன் மற்றும் அவரது மகள், தாயார் ஆகியோரைப் பாதுகாப்பாக தனது செயலகத்திற்கு அழைத்துவர ஆயுதம் தாங்கிய ராணுவப் பிரிவொன்றினை அனுப்பிவைத்தார் ஜெயார். தமிழரான சார்மெயின் சிங்களக் காடையர்களால் தாக்கப்படக் கூடும் என்று ஜெயார் கருதினார். தான் கொல்லப்படுவதற்கு முன்னர் சிங்களக் காடையர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழர் ஒருவர் ‍ - தமிழ் இனக்கொலை ஆடி 1983 சிங்களக் காடையர்களால் முன்னாள் அமைச்சர் குமாராசூரியர் அவஸ்த்தைக்குள்ளாகியுள்ளார் என்று கேள்விப்பட்டபோது அவரைப் பாதுகாப்பாக அழைத்துவர ராணுவ ஜீப் வண்டியொன்றினை ஜெயார் அனுப்பிவைத்தார். குமாராசூரியரை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள், அவரது கைகளைக் கட்டி அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் வரை இழுத்துச் சென்று கொல்வதற்கு முயற்சித்ததை தாம் கண்ணுற்றதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவரைக் கொல்வதற்கு வாட்களை வெளியே சிங்களவர்கள் எடுத்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த ஜெயார் அனுப்பிய ராணுவத்தினர் அவரை மீட்டிருக்கின்றனர். http://www.oferrceylon.com/wp-content/uploads/2017/01/chief.jpg செல்வாவின் மகனும், பின்னாட்களில் இந்தியாவின் முகவராகவும் மாறிய சந்திரஹாசன் காலஞ்சென்ற தந்த செல்வாவின் மகனான சந்திரகாசனையும் அவரது தாயாரையும் காப்பற்ற காமிணி திசாநாயக்கா தனது பாதுகாப்புப் பிரிவினை அனுப்பியிருந்தார். சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து காமிணியும் சந்திரகாசனும் நண்பர்களாக இருந்தவர்கள். தொண்டைமான் என்னுடன் பேசும்போது, தனது பேத்தியை பாதுகாப்பாகக் கூட்டிவர பிரேமதாசா தனது குண்டர்படையினர் சிலரை அனுப்பி காடையர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்ததாகக் கூறினார். வணிக மற்றும் கப்பற்றுரை அமைச்சரான லலித் அதுலத் முதலியை இனக்கொலை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் அவரது அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. "நான் வன்டேர்வட் பிளேசில் இருந்த எனது நண்பர்கள் சிலரைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அன்று ஈடுபட்டிருந்தேன், என்னிடம் நீங்கள் கேட்டிருந்தால் உங்களது வீட்டையும் என்னால் காப்பாற்றியிருக்க முடியும்" என்று அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அந்தவேளையில் நான் வேறு அமைச்சர்களுடன் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். எனது வீடு எரிந்துகொண்டிருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது, எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் எனது இரு மகன்களையும் காப்பற்றிக்கொள்வதுதான். எனது வீட்டைப்பற்றி எனக்குக் கவலை இருந்தது. நிச்சயம் எனது வீடு தாக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, வீடும் எரிக்கப்படும் என்று நான் ஊகித்திருந்தேன். நான் காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தபோது தொலைபேசி வேலை செய்தது. அரைமணித்தியாலம் சென்றபின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சித்தேன், இம்முறை தொலைபேசி மெளனமாகக் கிடந்தது. எனது அயலவரான சோமதாசவுடன் தொலைபேசியூடாகப் பேசினேன். எனது வீடு எரிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். மறுமுனையில் அவர் விசும்புவது எனக்குக் கேட்டது. "எமது பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளைப் பாதுகாக்க‌ நாம் முயன்றோம், ஆனால் எம்மால் அது முடியாமற் போய்விட்டது" என்று சில வாரங்களுக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். "தமிழர்களின் வீடுகளைத் தேடி ஒரு கூட்டமொன்று எமது பகுதிக்குள் நுழைந்தது. நாம் இங்கு தமிழர்கள் எவரும் இல்லையென்று கூறவே அக்கூட்டம் சென்று விட்டது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே கூட்டம் தெகிவளைப் பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிங்களப் பொலீஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் எமது பகுதிக்குள் நுழைந்தார்கள். கையில் வக்காளர் அட்டையினை வைத்திருந்த பொலீஸ் அதிகாரி, "தமிழர்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேவலமாகத் திட்டிக்கொண்டே உங்கள் வீட்டிற்கு காடையர்களை அழைத்துக்கொண்டு போனார்" என்று கூறினார். 1983 இனக்கொலையில் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட தமிழரின் வீடு ஒன்று எனது அயலவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள அனைவரையும் நாம் அடித்துக் கலைக்கவேண்டும், அவர்கள் இங்கே வாழக்கூடாது என்று அந்தப் பொலீஸ் அதிகாரி எம்மைப் பார்த்துக் கத்தினார். எமது வீதியில் (பி டி டி சில்வா மாவத்தை, தெகிவளை) இருந்த மூன்று தமிழர்களின் வீடுகளைக் கொழுத்திவிட்டு வெளியே வந்த அந்தப் பொலீஸ் அதிகாரி தன்னுடன் வந்த சிங்களவர்களைப் பார்த்து, "அப்பி சுத்த கரா" ( நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்) என்று சிங்களத்தில் கோஷமிட்டார்" என்று கூறினார். அதாவது அப்பகுதியை தமிழர் எனும் கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தி விட்டோம் என்பதே பொருள். எனது வீடு மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததாக அயலவர் கூறினார். எமக்கு ஒவ்வொருநாளும் மீன் வழங்கும் மீனவரான சைமன் எமது வீட்டினை எரித்த சிங்களக் காடையர் குழுவில் தானும் இருந்ததாகக் கூறினார். "அவர்கள் முதலில் உங்களின் வீட்டுக்கதவை உடைத்துத் திறந்தார்கள். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள் விருந்தினர் தங்கும் அறையில் இருந்த ஷோகேஸ் (காட்சிப்படுத்தும் அலுமாரி) இனை அடித்து நொறுக்கினார்கள். வீட்டினுள் இருந்த உங்களின் புத்தகங்களை வெளியே எடுத்துவந்து இருக்கைகளில் பரப்பினார்கள். பின்னர் புத்தகங்கள் மீது கொண்டுவந்த பெற்றொலினை ஊற்றினார்கள்" என்று கூறினார். சைமன் மேலும் கூறும்போது, "கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பொலீஸ் அதிகாரி கூட்டத்தைப் பார்த்து, "உங்களுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறவும் வெறும் 10 நிமிடத்தில் அங்கிருந்தவற்றை அவர்கள் சூறையாடினார்கள். பின்னர் உங்கள் வீட்டிற்கு அவர்கள் நெருப்பு மூட்டினார்கள்" என்று கூறினார். எனது காட்சிப்படுத்தும் அலுமாரியில் நூதணப் பொருட்கள் எவற்றையும் நான் வைத்திருந்ததில்லை. அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவையே அதில் அடுக்கப்பட்டிருந்தன. 1957 இல் நான் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தபோது இலங்கை சமூக கலாசார மாற்றம் ஒன்றிற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடர்பாடல் மொழியாக அதுவரை இருந்துவந்த ஆங்கில மொழியினை சிங்களமும், தமிழ் மொழியும் பிரதியீடு செய்துவந்தன. இதனாலேயே அகராதிகள், சொற்களஞ்சியங்கள் ஆகியவற்றின் தேவை அந்நாட்களில் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எனக்கிருந்த புலமை காரணமாக கல்வியமைச்சினூடாக வெளியிடப்பட்டு வந்த அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல்கலைக்கழக நூட்களை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான எனது மனைவிய மணந்துகொண்டதன் பின்னர் பாடசாலைப் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். எமது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பெருமளவு ஆங்கிலம் ‍- தமிழ் அகராதிகளை, சொற்களஞ்சியங்களை நாம் வாங்கிச் சேகரித்து வந்தோம். நாம் காலம் காலமாகச் சேகரித்து வைத்திருந்த தடித்த அட்டையிலான அகராதிகள் சிங்களக் காடையர்கள் தமது நாசகார வேலையினைச் செய்ய வரப்பிரசாதமாக அமைந்தன. ஆகவேதான் தொடர்ந்து இருநாட்களாக எரிந்த வீட்டிலிருந்து அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனது வீட்டிற்கு வெளிப்புறமாக எனது படிக்கும் அறையினை நான் அமைத்திருந்தேன். அதற்குள் நான் சேகரித்து வந்த அரசியல் புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய பத்திரிக்கைச் செய்திகள், நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்க்கள், பெறுமதியான நூட்கள் என்று பல சேமிக்கப்பட்டிருந்தன. அங்கும் சென்ற சிங்களவர்கள் அவற்றின் மீது பெற்றோலினை ஊற்றி பற்றவைத்திருந்தனர். எனது புத்தகங்களில் எவையுமே மிஞ்சியிருக்கவில்லை.
  10. ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - ‍ஜூலை 83, தொடரும் இனக்கொலை டெயிலிநியூஸ் ஆசிரியர் ஆரனை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார். "தாற்போதைக்கு வரை" என்று நான் பதிலளித்தேன். முழுக் கொழும்பு நகரமே எரிந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைப் போலல்லாது இம்முறை தமிழரின் வீடுகள் மட்டுமே இலக்குவைக்கப்பட்டு எரியூட்டப்படுவதாக அவர் கூறினார். பின்னர், கவனமாக இருந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். மதியம் ஆகிக்கொண்டிருக்க ஆரன் சொல்வதன் அர்த்தத்தை நான் உணரத் தொடங்கினேன். நாங்கள் தங்கிருந்த வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் கடைசியாக அமைந்திருந்த வீடு தமிழர் ஒருவருடையது. அவ்வீட்டின் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் கடற்கரையோரமாக வந்திருக்க வேண்டும். வேறு சில தமிழர்களும் நாம் தங்கியிருந்த வீட்டில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். எனது மருமகனின் மூத்த சகோதரரும் பல்வைத்தியருமான எஸ் அருளம்பலம் அவர்கள் வேலைநிமித்தம் கொழும்பிற்கு வந்திருந்தார். அன்று வெளியில்ச் சென்ற அவரும் மிகுந்த பதற்றத்துடனும், களைப்புடனும் வீடு வந்து சேர்ந்தார். கொழும்பு மாநகரசபை அமைந்திருந்த பகுதியிலிருந்து கால்நடையாகவே பம்பலப்பிட்டி வரை அவர் நடந்து வந்திருக்கிறார்.வீதியில் பல தமிழர்களை அடித்தே கொன்ற சிங்களவர்கள், அவர்களை அவ்விடத்திலேயே எரித்துக்கொண்டிருப்பதைத் தான் பார்த்ததாகக் கூறினார் . எனது ஒழுங்கையின் முடிவிலிருந்து இரண்டாவது மூன்றாவது வீடுகளும் இபோது தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நான் வீட்டிலிருந்த அனைவரையும் வீட்டின் மதிலைத் தாண்டி அயலவரின் காணிக்குள் குதிக்குமாறு கூறினேன். அயலவர் ஒரு இஸ்லாமியர், எம்மைத் தமது கழிவறையில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினார். வைத்தியர் உடற்பருமன் கொண்டவர், ஆகவே ஐந்தடி மதிலைத் தாவிக் குதிப்பதென்பது அவருக்கு மிகவும் கடிணமாக இருந்தது. ஆகவே, இந்தப்பக்கம் இருந்து இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கி மதில் மேலால் எறிந்துவிட, அடுத்த பக்கம் நின்ற சிலர் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது இரு மகன்களையும் அன்று எம்முடன் வீட்டில் இருந்தவர்களையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆகவே மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அவரது மனைவி, "தனது நண்பர்களில் ஒருவருக்கு உதவுவதற்காக அவர் வெளியே சென்றுவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். அவருடன் பேசி எனது நேரத்தை மேலும் வீணடிக்க நான் விரும்பவில்லை. ஆகவே நான் நிதியமைச்சர் ரொனி டி மெல்லுக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் கூட்டம் ஒன்றில் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்ட்டஸ் பெரேராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரும் ஜெயவர்த்தனவுடன் அச்சமயம் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது. ஆனால், என்னுடன் பேசியவர் பெஸ்ட்டஸ் பெரேராவுக்கு ஏதும் தகவலை வழங்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அப்போது தங்கியிருந்த வீட்டின் முகவரியை அவரிடம் கொடுத்து, எனக்குப் பாதுகாப்பு தரமுடியுமா என்று அமைச்சரைக் கேளுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன். ஜெயார் காலை 8 மணியிலிருந்து ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்திருக்கிறார். பின்னாட்களில் ரொனி டி மெல் என்னிடம் பேசும்போது அன்று காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஜெயாருடன் தான் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினார். தமிழ் மக்களின் சொத்துக்களைக் குறிவைத்து சிங்களவர்கள் காலை 10 மணிக்கு அன்று தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்தே தான் ஜெயாரைச் சந்திக்க காலை 11 மணியளவில் அவரது செயலகத்திற்குச் சென்றதாக ரொனி டி மெல் கூறினார். பெஸ்ட்டஸ் பெரேரா பேசும்போது தான் அன்று நாள் முழுதும் ஜெயாருடன் இருந்ததாகக் கூறினார். ஜெயாரை அன்று தொண்டைமானும் சந்தித்ததாகக் கூறினார். அவரது சுயசரிதையினை எழுதியவன் என்கிற முறையிலும், அவருடன் சுமார் 30 வருடங்களாக நட்பில் இருந்துவருபவன் என்கிற வகையிலும் அவரை எனக்கு நன்றாகப் பரீட்சயமாகியிருந்தது. அன்று தான் ஜெயாரைச் சந்தித்தபோது ஜெயார் மகிழ்வாகவும், நிதானத்துடனும் காணப்பட்டதாக தொண்டைமான் என்னிடம் கூறினார்.தன்னைச் சந்திக்க வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியே தாம் கண்ட பயங்கரங்கள் குறித்து கூறும்போது ஜெயார் அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் என்று தொண்டைமான் கூறுகிறார். "என்னை கோபம் ஆட்கொண்டிருந்தது. நான் அப்போதுதான் எனது பேத்தியை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எனது வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்து வர முடிந்திருந்தது.எனது வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துகொண்டிருக்கும்போது வீதிகளில் தமிழர்களை சிங்களவர்கள் அடித்துக் கொல்வதையும், அவரது சொத்துக்களை சூறையாடி எரித்துக்கொண்டிருப்பதையும் கண்டேன். "நீங்கள் கட்டாயம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ஆத்திரம் கொண்டு ஜெயாரைப் பார்த்துக் கத்தினேன். அதற்கு அமைதியாகப் பதிலளித்த ஜெயார், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று அலட்சியமாக என்னைப் பார்த்துக் கேட்டார். "உடனேயே ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்துங்கள்" என்று நான் பதிலளித்தேன். "ஊரடங்குச் சட்டமா? அதை அமுல்ப்படுத்தப்போவது யார்?" என்று ஜெயார் என்னைப் பார்த்து மீண்டும் கேட்டார். அதன்பின்னர் அவரோடு பேசுவதில் பயனில்லை என்று எனக்குப் புரிந்தது, எனக்குத் தேவையானதெல்லாம் தமிழர் மீதான வன்முறைகளை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்பது மட்டும்தான்" என்று தொண்டைமான் கூறினார். நான் வேண்டிக்கொண்டதற்கேற்ப பெஸ்ட்டஸ் பெரேரா எனக்குப் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தார். நான் தங்கியிருந்த பம்பலப்பிட்டி காஸல் ஒழுங்கைக்கு பொலீஸ் ரோந்து அணியொன்று வந்துசென்றதுடன், எனது ஒழுங்கையின் முகப்பிலும் பொலீஸ் காவல் இடப்பட்டது. ஏற்கனவே ஒழுங்கையின் பின்புறத்தால் தமிழர்களின் வீடுகளைத் தாக்கிக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பொலீஸாரின் பிரசன்னத்தைக் கண்டதும் அங்கிருந்து விலகி மற்றைய பகுதிகள் நோக்கிச் சென்றது.
  11. ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு -‍ தொடரும் ஜூலை 83 இனக்கொலை நள்ளிரவு வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. எமது செய்திப்பிரிவிற்கு வந்துகொண்டிருந்த அறிக்கைகள் மிகவும் கவலையளித்தன. பொரள்ளையில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான இனவன்முறைகள் கொழும்பில் தமிழர்கள் கணிசமானளவில் வாழ்ந்து வந்த பகுதிகளான மரதானை, தெமட்டகொடை, திம்பிரிகஸ்யாயை, கிருலப்பொனை ஆகிய பகுதிகளுக்கும் பரவிவிட்டிருந்தன. எனது இரு மகன்கள் குறித்தும் எனக்குக் கவலை ஏற்படலாயிற்று. வீட்டில் அவர்கள் தனியாக இருந்தனர். எனது மனைவி நைஜீரியாவுக்கு கல்விச்சேவை ஒன்றிற்காக அவ்வேளை சென்றிருந்தார், மகள் யாழ்ப்பாணம் வைத்திய பீடத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். நான் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோது மூத்த மகன் பேசினார். வீட்டின் அருகில் அசம்பாவிதம் எதனையும் பார்க்க முடியவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். அதிகாலை 1 மணிக்கு லேக் ஹவுஸின் போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்ற நான் என்னை வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடும்படி அங்கிருந்த சாரதிகளைக் கேட்டேன். "தமிழர்களைக் கொன்று எரித்துக்கொண்டிருக்கிறார்கள், இந்தவேளையில் நீங்கள் எங்கும் போகவேண்டாம்" என்று கூறி என்னைச் செல்லவிடாமல்த் தடுத்தனர். ஆரியரட்ண எனது நிலையினைக் கண்டு என்னை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொண்டார். தெகிவளை நோக்கி காலி வீதியூடாக சென்றுகொண்டிருந்தவேளை அசம்பாவிதங்களை நான் காணவில்லை, தெகிவளை அமைதியாக இருந்தது. காலை 5 மணியிருக்கும், எனது சிங்கள நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். "சபா, உங்களின் பிள்ளைகளை இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், காலை 9 மணிக்கு முதல் பாதுகாப்பான பகுதியொன்றிற்குச் சென்றுவிடுங்கள்" என்று என்னை எச்சரித்தார். "ஊரடங்குச் சட்டத்தினைப் பிறப்பித்து விட்டார்களா?" என்று அவரிடம் கேட்டேன். "இன்னும் இல்லை"என்று அவர் பதிலளித்தார். "ஏன், நேற்று இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்போவதாக பொலீஸார் கூறினார்களே?" என்று நான் மீண்டும் கேட்டேன். எரிச்சலடைந்த அவர், "என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம், சொன்னதை மட்டும் செய்யுங்கள்" என்று சறுக்கென்று கூறினார். எங்களுடன் பேசிய பொலீஸ் அதிகாரிகள் தாம் ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி வலியுறுத்தப் போவதாகவே கூறியிருந்தனர். ஆனால் ஜனாதிபதியோ, "ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது பற்றி ஆறுதலாகச் சிந்திக்கலாம்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த பொலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஊரடங்குச் சட்டத்தினை ஜெயார் அமுல்ப்படுத்தவில்லை. ரொனி டி மெல் 2002 என்னுடன் பின்னர் பேசிய நிதியமைச்சர் ரொனி டி மெல், ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். தன்னுடன் பேசுகையில் ஜெயார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தும் உத்தேசத்தில்த்தான் இருந்தார் என்று கூறினார். ஜூலை இனக்கொலை நடந்துகொண்டிருந்த நாட்களில் ஜெயாரின் ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சன் கொழும்பிலேயே இருந்தார். அவர் லங்கா கார்டியன் பத்திரிக்கையில் இதுகுறித்து எழுதியிருந்தார். "அன்று நள்ளிரவு ஜெயாருடன் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ல்படுத்துமாறு தொலைபேசியூடாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது குறித்து பேச மறுத்துவிட்டார். வீட்டிலேயே இருங்கள், வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்" என்று வில்சன் எழுதுகிறார். எனது சிங்கள நண்பர் கூறியதன்படியே நடக்க நான் முடிவெடுத்தேன். வீட்டில் அன்று காலையுணவை உட்கொண்டோம். எனது மகன்களிடம் சில உடைகளையும் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனது மூத்த மகன் அவ்வருடம் ஆவணி உயர்தரப் பரீட்சைக்கும் இளைய மகன் அவ்வருடம் மார்கழியில் இடம்பெறவிருந்த சாதாரண தரப் பரீட்சைக்கும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். எமது வீட்டுத் திறப்பினை அயல்வீட்டுச் சிங்களப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, கலவரங்கள் அடங்கியபின்னர் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். காலை 8 மணியளவில் பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், காஸ்ட்டல் வீதியில் அமைந்திருந்த எனது மருமகனின் வீட்டிற்கு வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றோம். போகும் வழியில் பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரி இயங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன், நகரின் அநேகமான பாடசாலைகள் இயங்குவதாகவே எனக்குச் சொல்லப்பட்டது. கடைகள் திறந்திருந்தன, வீதியில் போக்குவரத்தும் வழமைபோன்றே காணப்பட்டது. காலை 10 மணியளவில் மதிய உணவை வாங்கிவர மகனை அனுப்பினேன். அவரும் உணவினை வாங்கிக்கொண்டு வந்தார், மீண்டும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன என்கிற செய்தி எமக்குக் கிட்டியது. மகன் வீட்டிற்கு வரும் வழியில் பலர் கடைகளைப் பூட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும், காலி வீதியில் உள்ள தமிழர்களின் கடைகளை இலக்குவைத்து ஆயுதம் தரித்த சிங்களவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். காலி வீதி முடிவடையும் இடமான காலி முகத் திடலில் இருந்தே தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. காலை 10:30 மணியிருக்கும், எனது மருமகனின் வீட்டில் தங்கியிருந்து கொழும்பில் வேலை பார்த்து வந்த துரைரட்ணம் மிகுந்த பதற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார். மிகுந்த வேடிக்கையாகவே எப்போதும் பேசும் அவரை அவ்வளவு பதற்றமாக அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பம்பலப்பிட்டிச் சந்தியை அடைந்தபோது தான் அப்பகுதியில் இருந்ததாகக் கூறினார் அவர். அப்பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகளை உடைத்துச் சூறையாடிவிட்டு பின்னர் அவற்றிற்குத் தீவைத்ததை தான் கண்டதாகக் கூறினார். அப்பகுதியில் அவரைப்போலவே வந்திருந்த தமிழர்களை அந்தச் சிங்களக் காடையர்கள் தெருவுக்கு இழுத்துவந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தெய்வாதீனமாக காடையர்களின் கண்களில் படாமல் தப்பி வீடு வந்து சேர்ந்திருந்தார். சீருடையணிந்த பொலீஸார் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் துரைரட்ணம் மேலும் தான் கண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும்போது, ட்ரக் ஒன்றில் வந்திறங்கிய இரு வாட்டசாட்டமான சிங்களவர்கள் வீதியில் குதித்து தமிழர்களின் கடைகளை உடைக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்க்கும்போது இராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ பயிற்சியெடுத்தவர்கள் போலக் கணப்பட்டனர். அவர்களின் கைகளில் ஒரு பெயர்ப் பட்டியல் இருந்தது. ஒவ்வொரு கடையினையும் உடைக்குமுன்னர் அக்கடைகளின் பெயர்ப்பலகையில் இருந்த பெயர்களைத் தாம் கொண்டுவந்திருந்த பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தபின்பே உடைக்க ஆரம்பித்தனர். இந்த இரு ஆயுததாரிகளில் ஒருவரின் கையில் கோடரியும் மற்றையவரின் கையில் அலவாங்கும் காணப்பட்டன. கோடரியை வைத்திருந்த சிங்களக் காடையன் முதலில் கோடரியின் பின்புறத்தால் கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டினை உடைக்க, அலவாங்கினை வைத்திருந்தவன் கதவிடுக்கினுள் அதனை செருகி கதவுகளை அகலத் திறந்துவிட்டான். அதன்பின்னர் அவர்களோடு வந்திருந்த மீதிச் சிங்களக் காடையர்கள் கடையினுள் புகுந்து அதனைச் சூறையாடினர். ஒரு கடை முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அடுத்த கடைக்குச் சென்றது அக்காடையர் கூட்டம். இப்படியே அவ்வீதியெங்கும் இருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகள் உடைத்துச் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. சிங்கள் கட்டட உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகளில் நடத்தப்பட்டு வந்த தமிழரின் வியாபாரங்கள் சூறையாடப்பட்டதுடன், அக்கடைகள் அமைந்திருந்த‌ கட்டடங்களை எரிக்காது விட்டுச் சென்றது காடையர் குழு. துரைரட்ணம் தொடர்ந்தும் அப்பகுதியில் நிற்க விரும்பவில்லை. தமிழர் ஒருவரை வீதியில் துரத்தித் துரைத்தி சிங்களவர்கள் தாக்குவதைக் கண்டதும் துரைரட்ணம் வேகமாக நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் நாம் அன்று தங்கியிருந்த பம்பலப்பிட்டி வீட்டின் அருகில், காலி வீதியில் ஏதோ களேபரம் நடக்கும் சத்தம் கேட்டது. யன்னலின் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த எனது மகன்கள் பிள்ளையார் கோயிலைச் சுற்றியிருந்த கடைகள் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினர். அப்பகுதியில் தங்கியிருந்த இரு இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நன்கு பயிற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் கோயில்ப் பகுதியை அடைந்தபோது அந்த இரு தமிழ் இளைஞர்களும் அங்கே நின்றிருக்கிறார்கள். அப்பகுதியில் இருந்த தமிழரின் கடைகளும் அதேவகையில் இரு பயிற்றப்பட்ட ராணுவ வீரர்களால் உடைக்கப்பட, பின்னால் வந்த சிங்களக் காடையர் கூட்டம் கடைகளைச் சூறையாடிவிட்டு ஆர்ப்பரித்தவாறே அவற்றிற்குத் தீமூட்டிக்கொண்டிருந்தது. தம்முடன் கொண்டுவந்திருந்த பெற்றோலினைக் கடைகள் மீது ஊற்றிவிட்டு சிகெரெட்டைப் பற்றவைக்கும் லைட்டர்களைப் பற்றவைத்து கடைகளினுள் எறிந்தது சிங்களக் காடைக் கூட்டம். அக்கடையும், கட்டடமும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமானது.
  12. ஜெயாரினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்வு பொரள்ளைப் பகுதியிலிருந்து தீயின் நாக்குகள் மேலெழுந்துவருவதைப் பார்த்தபோது நான் கலக்கமடைந்தேன். அந்த நெருப்பு நானிருந்த திசைநோக்கி நகர்ந்துவரவே நான் மிகுந்த துயரமடையத் தொடங்கினேன். பியதாச என்னிடம் சிலநேரத்திற்கு முன்னர் கூறிய விடயங்கள் உண்மைதானோ? இதற்கு மேலதிகமாக எனது அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்த தொலைபேசி அழைப்புக்கள் மேலும் கவலையைக் கொடுத்தன. எனது அலுவலகத்திற்குப் பதற்றத்துடன் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய பல தமிழர்கள் தம்மீது இன்னொரு இனக்கலவரத்தினை சிங்களவர்கள் ஆரம்பித்துவிட்டார்களா என்று கேட்டபோது என்னால் பேசமுடியாது போய்விட்டது. அவ்வாறு என்னுடன் பேசிய பல தமிழர்களில் ஒருவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர். "ஜெயவர்த்தனா தமிழர்கள் மேல் தனது குண்டர்களை இன்னுமொருமுறை ஏவி விட்டாரா?" என்று அவர் என்னைக் கேட்டார்.நான் அவரிடம் பியதாச என்னிடம் கூறிய விடயங்களைக் கூறி, அரசுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஜெயார் தமிழர்கள் மீது திருப்பிவிட்டிருக்கிறார் என்று கூறினேன். "நான் மடத்துடன் பேசியிருக்கிறேன் (சிறிமாவைக் குறிப்பிட்டுக் கூறினார்), அந்த ராஸ்க்கல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்னவும் செய்யக்கூடியவர் என்று மடம் என்னிடம் கூறினார்" என்று குமாரசூரியர் கூறினார். சிறிமாவின் ஆட்சியில் குமார‌சூரியர் அமைச்சராகப் பதவி வகித்தவர், அதனாலேயே சிறிமாவை அவர் "மடம்" என்று விளித்திருந்தார். ராஜன் ஹூல் பொரள்ளைச் சம்பவத்தை தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" என்பதில் பின்வருமாறு விபரிக்கிறார், "என்னிடம் பேசியவர்கள் அனைவரும் பொரள்ளை மயானத்திலிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிச்சென்ற மக்களிடம் அரசுக்கெத்கிரான உணர்வே இருந்தது என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் மேலும் கூறும்போது இரவு 10 மணியளவில் புதிதாக காடையர் குழுக்கள் அப்பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இவர்களே அக்கூட்டத்தின் அரசுக்கெதிரான ஆத்திரத்தினை தமிழருக்கெதிரான கோபமாக மாற்றினார்கள். அவர்கள் அனைவரும் அரசின் காடையர் குழுக்கள். ஆரம்பத்தில் இவ்வாறு அரசால் இறக்கப்பட்ட காடையர் குழுவுக்கும் மயானத்தில் இருந்து வெளியேறி பொரள்ளைச் சந்தி நோக்கி வந்துகொண்டிருந்த ஆத்திரப்பட்ட மக்கள் கூட்டத்திற்கும் இடையே முறுகல் ஏற்பட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அரசுக்கெதிரான தமது கோஷங்களைக் கைவிட்ட மொத்தக் கூட்டமும் தமிழருக்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையினைப் பாவித்தே அரச காடையர் குழு தன‌து நோக்கத்தினை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பொரள்ளைப் பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான சொத்துக்களைக் குறிவைத்து தான் ஏலவே திட்டமிட்டதன்படி தாக்குதலை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து மொத்தக் கூட்டமும் தமது கைகளில் அகப்பட்ட தமிழர்களை அடித்துக் கொல்லத் தொடங்கியது". தமிழரின் கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, அவர்களின் வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டன, தமிழரின் கடைகளில் இருந்து பொருட்களைச் சிங்களவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர். அன்றிரவு எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்களுடன் ராஜன் ஹூலின் பதிவுகளும் ஒத்துப் போவதால் அவற்றினை இங்கே பாவித்திருக்கிறேன். பொரள்ளையிலிருந்து கொழும்பு நகர் நோக்கிய பாதையில் அமைந்திருக்கும் புஞ்சி பொரள்ளைப் பகுதிக்கு பியதாசவும் இன்னும் சில நிருபர்களும் நிலவரத்தை ஆராயச் சென்றிருந்தனர். அங்கே அரசின் தொழிற்சங்கக் காடையர் குழுவான ஜாதிக சேவக சங்கமய கலவரங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பதைக் கண்டனர். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஜாதிக சேவக சங்கமயவில் நானும் ஒரு உறுப்பினராக அப்போது இருந்தேன். அன்றிரவு நிறுவனத்தில் சாரதியாகக் கடமையில் இருந்த வாகனச் சாரதி ஆரியரட்ண ஜாதிக சேவக சங்கமயவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.அவரே பியதாசவையும் ஏனையவர்களையும் புஞ்சி பொரள்ளைச் சந்திக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆரியரட்ண என்னுடன் பேசும் போது புஞ்சி பொரள்ளைப் பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தனது தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அமைப்பாளர்களும்தான் என்று கூறினார். அவர் குறிப்பிட்டுக் கூறியவர்களில் முக்கியமானவர் கொழும்பு மாநகரசபையின் கவுன்சிலர் சங்கதாச, இவர் பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அன்றிரவு 11 மணிக்கு பியதாசவும் ஏனையோரும் நிலையத்திற்குத் திரும்பினர். அவர்கள் அங்குநடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கின்ஸி வீதி, பார்ன்ஸ் வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், ரோஸ்மீட் பிளேஸ், காஸ்ட்டல் பிளேஸ், மற்றும் கொட்டா வீதி ரயில்வே நிலையத்தின் அருகிலிருந்த பிரதேசங்கள் அனைத்திலுமிருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் இக்காடையர் குழு இலக்குவைத்து தாக்கி எரித்து வருவதாகப் பதற்றத்துடன் கூறினர். வீதி விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழரின் கடைகளிலிருந்து வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகள் அப்பிரதேசத்தை இரவு வேளையிலும் வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. எரிந்துகொண்டிருந்த தமிழர்களின் கடைகள் வீடுகளிலிருந்த கூரைகளும், கன்னார்த் தகடுகளும் தீயின் வெப்பத்தில் வெடித்துச் சிதறியபோது துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று தமக்குக் கேட்டதாக அவர்கள் கூறினர். சிங்களவர்கள் தங்கு தடையின்றி தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடிக்கொண்டிருந்தனர்.
  13. ஆயுதப் போராட்டம் தவிர்ந்த ஏனைய வழிகளால் இதுவரை தமிழ் மக்கள் அடைந்தவை எவை? சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தொடர்ச்சியாக பலவேறு தலைவர்கள் துணையுடன் போராடியே வந்திருக்கிறார்கள். செல்வநாயகம் முதல் ஆயுதப் போராட்டம் தலையெடுகக்க ஆரம்பித்த காலம் வரை ஜனநாயக அரசியல் செய்த அமிர்தலிங்கம் வரை தமிழர்களது ஜனநாயகவழிப் போராட்டம் ஈற்றில் ஆயுதப் போராட்டமே சரியானது எனும் வழியில் தமிழ் மக்களைக் கொண்டுவந்து சேர்த்திருந்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்கிற போர்வையில் அழித்து முடிக்க இன்று உதவிய சர்வதேசம் தமிழர்கள் ஜனநாயக ரீதியில் போராடியபோதுகூட தமிழருக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீதியை ஒருபோதுமே பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையே அன்று எழுந்திருக்காது. ஜனநாயக ரீதியில் போராடிய தமிழர்கள் மீது வன்முறைகளை இனவாத அரசுகள் ஏவிவிட்ட வேளை சர்வதேசத்தால் கண்டன அறிக்கைகளும், அனுதாபங்களும் மட்டுமே வெளியிடப்பட்டன. அதனைத் தாண்டி பேரினவாதத்திற்கெதிரான செயற்பாடுகளையோ அல்லது தமிழ் மக்களுக்கான நீதியையோ அவர்கள் ஒருபோதுமே முன்னெடுக்க விரும்பியதில்லை. இன்னொருவகையில் சொல்வதானால், அதற்கான தேவை அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. சுதந்திரம் அடைந்த காலத்தில் தமிழரை பேரினவாதிகளின் காலடியில் நிரந்தரமாக விட்டுச் சென்ற ஆங்கிலேயர்கள் இன்றுவரை தமது தவறு பற்றி உணர்ந்ததாகவோ அல்லது அதனை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை. இனப்பிரச்சினை தொடர்பாக ஆங்கிலேயர் இதுவரையில் செயற்பட்ட விதம் கீனி மீனி முதல், 80 களிலிருந்து இலங்கை ராணுவத்திற்கும் அதிரடிப்படைக்கும் பயிற்சிகளும், கவச வாகனங்களும், இயந்திரத் துப்பாக்கிகளும் வழங்கி இறுதியில் 2009 இனவழிப்புப் போரில் இலங்கையரசிற்குச் சார்பான நிலைப்பாடினை எடுத்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. தமிழ் மக்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தினை ஆரம்பமுதலே இடதுசாரிகளின் சோசலிச‌ப் போராட்டமாகப் பார்த்துவரும் அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் எமது போராட்டம் முற்றாக அழிக்கப்படவும், எமக்கான நீதிதேடல் என்பது தனது நலன்களுக்காக பேரம்பேசும் பொருளாகப் பாவிக்கப்படவும் இன்றுவரையும் முயன்று வருகிறது. எமது தந்தையர் நாடு என்று நாம் கூறிக்கொள்ள ஆசைப்படும் இந்தியாவும் தனது நலன்களுக்காகவே தமிழ் மக்களின் அவலங்களைப் பாவித்தது. ஆயுதப் போராட்டம் முற்றான வெற்றியினை அடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இலங்கையரசைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆரம்பத்தில் எம்மைப்பாவித்தே முயன்று வந்தது. ஆனால் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் நலன் சாராத ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுடன் நேரடியான மோதல் போக்கினை ஆரம்பித்த இந்தியா, 2009 இல் தானே முன்னின்று தமிழர்களின் ஒரே கவசமாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து, பேரினவாதத்திடம் நிரந்தர அடிமைகளாக எம்மை கைவிட்டது. 1987 இல் தானே முன்னின்று செய்த ஒப்பந்தத்தினை இன்றுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கையை அழுத்தம் கொடுக்க விரும்பாத இந்தியா, தமிழருக்குக் கிடைக்கக் கூடிய மிக அற்ப சலுகைகளைக்கூட எடுத்துத்தர மறுத்து வருகிறது. சர்வதேசத்தில் மீதமாகவிருக்கும் சீன, ரஸ்ஸிய, பாக்கிஸ்த்தானிய அரசுகளின் நிலை பற்றிக் கேட்கத் தேவையில்லை. தமிழ்ப் பயங்கரவாதத்தினை அழிக்க அவை எந்தக் கணத்திலும் பேரினவாதிகளுக்கு உதவுவதற்கு ஆயத்தமாகவே இருக்கின்றன. இன்று தமிழர் தாயகத்தில் பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதியான நிலக்கொள்ளைகளையும், சிங்கள பெளத்த மயமாக்கலையும் சர்வதேசம் எப்படி பார்க்கின்றது? தமிழர் தாயகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுவரும் இராணுவப் பிரசன்னத்தை, இராணுவமயமாக்கலை அவை எப்படிப் பார்க்கின்றன? அல்லது, இவற்றினை அகற்றி தமிழர்களை சுதந்திரமாக வாழ வைப்பதற்காக எவ்வகையான செயற்பாடுகளில் அவை ஈடுபட்டிருக்கின்றன? அல்லது, அவ்வாறு செய்வதற்கான தேவை அவற்றுக்கு இருக்கின்றனவா? அதனால் அவற்றுக்குக் கிடைக்கவிருக்கும் நண்மைகள் என்ன? இவற்றுக்கெல்லாம் இருக்கும் ஒரே பதில் சர்வதேசம் என்பது தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் அவர்களின் அழிப்பிலும், அவர்கள் மீதான ஆக்கிரமிப்பிலும் பேரினவாதிகளுடன் கைகோர்த்து நின்று, ஆக்கிரமிப்பை இனவழிப்பை ஆமோதித்த சக்திகளேயன்றி வேறில்லை. தமிழ்மக்கள் தொடர்ந்தும் சர்வதேசத்திடம் கையேந்துவதும், இரைஞ்சுவதும் அவர்களை இன்னும் இன்னும் பகடைகளாக பாவிக்கப்படவே வழிவகுக்கப்போகிறது. ஆகவே , சர்வதேசம் எமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்கிற மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும். எமக்கான விடுதலையினை நாமே உருவாக்குவதற்கான பாதையின் முதலாவது தடைக்கல்லே இந்தச் சர்வதேசத்தினை நம்பும் எமது முட்டாள்த்தனம் தான்.
  14. தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா? பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பினை தொடர்ச்சியாக பேணுவதிலும் அதனை விஸ்த்தரிப்பதிலும் ஈடுபட்டுவரும் பேரினவாதம், தமிழ் மக்களின் மீளெழுச்சியை எப்பாடுபட்டாவது முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும் என்பதில் முழுமுச்சுடன் ஈடுபட்டிருக்கிறது. இராணுவ, பொலீஸ் உளவாளிகளாக எம்மிடையே வலம்வரும் பலர் எந்தவொரு தேசியவாதச் சிந்தனனையினையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றினை வேருடன் பிடுங்கியெறிந்துவிட நிழலாகத்தொடர்வது அப்பட்டமாகத் தெரிகிறது. இவற்றினைப் பார்க்கும்போது எமக்குள் எழும் வினாக்களில் ஒன்றுதான், தமிழர்கள் மீளெழுச்சி பெற்றுவிடக்கூடாதென்று செயற்படும் பேரினவாதம், உண்மையிலேயே அவ்வாறானதொன்று இடம்பெறப்போகிறதென்பதை எதிர்பார்க்கின்றதா என்பது தான். அதாவது 2009 இற்குப் பின்னரான பேரினவாதத்தின் முடுக்கிவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்களும், நில அபகரிப்புக்களும், சிங்கள பெளத்த மயமாக்கல்களும் தமிழ்மக்களை இயல்பாகவே வேறு வழியின்றி மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளிவிடத்தான் போகின்றன என்று பேரினவாதம் எதிர்பார்ப்பதாகவே படுகிறது.
  15. கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் இக்கட்டத்தில் யாழ்நகர் எரியத் தொடங்கியிருந்தது. பலாலி முகாமிலிருந்து பல ட்ரக்குகளில் கிளம்பிய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த திருநெல்வேலிப் பகுதியை வந்தடைந்தனர். பலாலியிலிருந்து திருநெல்வேலி வரையான வீதியெங்கும் இருந்த கடைகளை சேதப்படுத்தியவாறே அவர்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிச் சந்தியை அடைந்ததும், தமது ட்ரக்குகளை சந்தியில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்தனர். செல்லக்கிளி மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய கடையினை உடைத்ததிலிருந்து அவர்களின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. அப்பகுதியின் அருகில் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டதாக அவர்கள் கருதிய மதில்களை உடைத்தனர். பின்னர், வீதியின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தத் தொடங்கினர். வீதியில் தாம் எதிர்கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். அன்று தமது வெறியாட்டம் முடிந்து முகாம் திரும்பிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மீண்டும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கல்வியங்காட்டுப் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சைக்கிள் ஒன்றில் வந்துகொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கண்ட இராணுவத்தினர் அவனை நிற்குமாறு உத்தரவிட்டனர். ஒரு கையில் பாண் ஒன்றை ஏந்தியபடி சைக்கிளை மிதித்துவந்த அந்தச் சிறுவனும் உடனடியாக சைக்கிளை விட்டு கீழிறங்கவே, அவனருகில் சென்ற இராணுவ வீரன் ஒருவன் அச்சிறுவனின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். அச்சிறுவன் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தான். சிறுவனது உடலும், அவன் மிதித்துவந்த சைக்கிளும், காவி வந்த பாணும் அவ்விடத்திலேயே மாலைவரை கிடந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன. "அவனது மூளைப்பகுதி சிதறி தலையின் வெளியே கசிந்துகொண்டிருந்தது" என்று தனது புத்தகத்தின் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுவனைத் தான் பார்த்தபோது நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தவிர வேறு எதுவும் தன்னால் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார். வீதியின் இருபக்கத்திலும் இருந்த பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்தனர். அங்கிருந்த வீடுகளை அவர்கள் எரித்துக்கொண்டே சென்றதுடன் கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றபடி சென்றனர். இவ்வாறான வீடொன்றில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதைப்பார்த்த ராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதுடன் வீட்டிற்கும் தீமூட்டினர். மாதகல் முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற ராணுவத்தினரும் இதேவகையான படுகொலைகளில் ஈடுபட்டனர். மானிப்பாய் நகர்ப்பகுதிக்குச் சென்ற அவர்கள் வீதியால் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியொன்றினை மறித்து, அதிலிருந்தவர்கள் கீழே இறங்குமாறு பணித்தனர். பஸ்ஸினுள் இருந்து கீழே இறங்கிய ஒன்பது பாடசாலை மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கட்டளையிட்டனர். பின்னர் அம்மாணவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆறு மாணவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிழ, ஏனைய மூவரும் கடுமையாகக் காயப்பட்டனர். இவ்வாறே வல்வெட்டித்துறை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற இராணுவத்தினரும் கடைகளையும் வீடுகளையும் எரிக்க ஆரம்பித்தனர். ஒரு நாளில் மட்டும் இந்த மூன்று இடங்களிலும் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. குறைந்தது நூறு வீடுகளும் கடைகளும் அன்று இராணுவத்தால் எரியூட்டப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் ஆடி 24 ஆம் நாளன்று இரவு ராணுவத் தளபதி வீரதுங்க குருநகர் முகாமிலேயே தங்கியிருந்தார். அவர் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் நடக்கும் கலவரம் குறித்த அறிக்கைகள் அவருக்கு வந்துகொனண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்குப் பின்னரே பார்க்கச் சம்மதித்தார். திருநெல்வேலிப் பகுதிக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து முனசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார், "1983 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் நாள், காலை 10 மணியிருக்கும். நாம் எமது வாகனங்களில் ஏறி திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தளபதி வீரதுங்கவும் எம்முடன் இணைந்துகொண்டார். எல்லாத்திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் கேட்டோம். திருநெல்வேலியை அடைந்த நாம், சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திக்கில் நடக்கத் தொடங்கினோம். வீதியின் இரு பகுதியிலும் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக வீதியை நோக்கி வருமாறு உரக்கக் கத்தினோம்". "இலங்கை இலகு கலாட்படையின் தளபதி லெப்டினன்ட் ரஜீவ் வீரசிங்க என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனது உடலைக் கண்டபோது பெருமூச்சொன்றினை விடுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. அவன் ஓட்டிவந்த சைக்கிளும், காவிவந்த ஒரு இறாத்தல் பாணும் அவனது சடலத்திற்கருகில் அப்படியே கிடந்தன. அவனது தலைப்பகுதி சிதறிக் கிடக்க மூளை வழிந்து வீதியில் ஓடிக் கிடந்தது. அவனை மிக அருகில் வந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது". "அதேவேளை, நாம் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் ராணுவ வீரர் ஒருவர் பதுங்கியிருந்து எம்மை நோக்கித் தனது துப்பாக்கியை திருப்புவதை நான் கண்டேன். என்னிடம் பிஸ்ட்டல் ஒன்று மாத்திரமே இருந்தது. லெப்டினன்ட் வீரசிங்கவிடம் அவரது பிரத்தியேக துப்பாக்கி இருந்தது. ஒருகணம் அந்த ராணுவ வீரன் எம்மைக் கொல்வதற்காகவே பதுங்குவதாக நான் நினைத்தேன். தெய்வாதீனமாக வீரசிங்கவுக்கு அந்த ராணுவ வீரனை நன்கு தெரிந்திருந்தது. ஆகவே, வீரசிங்க அவனைப் பார்த்து "வீதிக்கு வா" என்று கட்டளையிட, அவனும் வெளியே வந்தான். திருநெல்வேலிச் சந்திப்பகுதியில் அக்கிரமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரை மீள வெளியே இழுத்துவர எமக்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது எடுத்திருக்கும். தளபதி வீரதுங்க மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். படுகொலைகளிலும், சொத்தழிப்புக்களிலும் ஈடுபட்ட ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை சில இடைநிலை அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன. அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை அநுராதபுரம் தடுப்புச் சிறைச்சாலைக்கு நாம் அனுப்பி வைத்தோம்". "இதேவகையான படுகொலைகள் வல்வெட்டித்துரை மற்றும் மாதகல் முகாம்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அரங்கேறின. பின்னர், மாதகல் முகாம் அதிகாரியான மேஜரும் அவரது ராணுவத்தினரும் தம்மை வேறு முகாம்களுக்கு மாற்றவேண்டாம் என்றும், தாம் மாதகல் முகாமிலேயே தங்கியிருப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டிக்கொண்டதாகவும் நாம் அறிந்தோம். மாதகல் முகாமின் பொறுப்பதிகாரியான ராணுவ மேஜர் முகாமை விட்டு ராணுவத்தினர் வெளியே செல்லக்கூடாது என்று வாயிலின் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டதாகவும், ஆனால் அவரைத் தூக்கி வாயிலின் வெளியே எறிந்துவிட்டு தமது ட்ரக்குகளில் ஏறிச்சென்ற ராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் எமக்குக் கூறப்பட்டது". இராணுவத் தளபதி இந்த நாட்களில் நடந்துகொண்ட விதம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அப்பாவித் தமிழர்களை தனது இராணுவத்தினர் படுகொலை செய்துவருகிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மீண்டும் மீண்டும் ரேடியோ அறையிலிருந்து அறிவிக்கப்பட்டே வந்தது. ஆனால், மறுநாள் காலை 10 மணிவரை அவர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஏன்? மேலும், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுமார் இருவாரங்கள் முடிந்தபின்னரே தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் டேவிட் பெரெஸ்ஃபபோர்ட் ஜெயாரிடம் யாழ்ப்பாணப் படுகொலைகள் குறித்து ஆவணி 7 ஆம் திகதி வினவுகையில், "யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினரை இதுவரை நீங்கள் விசாரிக்காதது ஏன்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரியவந்தது. இப்போது நாட்கள் சென்றுவிட்டன‌, இனிமேல் விசாரிப்பதில் பயனில்லை" என்று வெகு சாதாரணமாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்து வீடு 2001 ஜெயாரிடம் பேசிய பெரெஸ்போர்ட், "யாழ்ப்பாணதில் சிறுவர்கள் வயோதிபர்கள் உட்பட 51 பொதுமக்களை உங்கள் இராணுவத்தினர் படுகொலை செய்திருக்கின்றனரே?" என்று கேட்டபோது, "அத்தனை பேர் சாகவில்லை சுமார் இருபது வரையிலான மக்கள் இறந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார். மேலும், யாழ்ப்பாணத்துப்படுகொலைகள் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப்பின்னரே தான் அதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகக் கூறிய ஜெயார், இராணுவத்தினர் தன்னிடமிருந்து இவ்விடயத்தை மறைத்துவிட்டார்கள் என்றும் கூறினார். அப்படியானால், ஜனாதிபதி ஜெயாரிடமிருந்து இந்த படுகொலைகளை இராணுவத் தளபதி வீரதுங்க மறைத்தது ஏன்? யாழ்ப்பாணத்துப் படுகொலைகளும், தெற்கில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளும் உண்மையாகவே ஜெயாரினால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட "தமிழருக்கான இறுதித் தீர்வு" எனும் திட்டமிட்ட இனக்கொலைக்குள் அடக்கமா என்கிற கேள்வி எழுகிறது. இந்த வினாக்களும், சந்தேகங்களும் இன்றுவரை தமிழர்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த சந்தேகங்களே பிரபாகரனை போராடும்படி முந்தள்ளி விட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதம், தமிழினக்கொலை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகும் நிலையில் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிடம் பேசிய பிரபாகரன், "எமது பார்வையில் 1983 ஆடியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையானது நன்கு திட்டமிட்ட ரீதியில், ஒருமித்த வழிநடத்துதலில், அதிகாரத்திலிருந்த கட்சியின் இனவாத முக்கியஸ்த்தர்களால் நடத்தப்பட்டதாகவே உணர்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனை உருவ‌மைத்த அவரது சிந்தனையின் வெளிப்பாடான இந்தக் கேள்வி பதில் பகுதியை இங்கே இணைக்கிறேன், அனித்தா பிரதாப் : 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இலங்கை இராணுவத்தின் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்துவதற்கு உங்களின் தாக்குதல் காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பாரிய பழிவாங்கும் தாக்குதல்கள் நீங்கள் நஎதிர்பார்த்தீர்களா? பிரபாகரன் : ஜூலை இனக்கொலையினை தமிழ்ப் போராளிகளின் பதுங்கித் தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கலாக நீங்கள் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்ப்பது நடத்தப்பட்ட இனக்கொலையினை மிக இலகுவாக கடந்துசெல்லக் காரணமாகிவிடும். ஆண்டாண்டு காலமாக தமிழருக்கெதிரான இன வன்முறைகளை இந்த நாடு தொடர்ச்சியாக அரங்கேற்றியே வந்திருக்கிறது. எமது போராளி இயக்கம் ஆரம்பிக்கும் முதலே தமிழர் மீதான இனக்கொலைகள் நடந்தே வந்திருக்கின்றன. எமது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் திருகோணமலயில் தமிழர்கள் மீது திட்டமீட ரீதியில் படுகொலைகளும், சொத்தழிப்புக்களும் நடந்திருந்தன. ஆகவே, தமிழர் மீதான திட்டமிட்ட இனவன்முறைகளை ஒரு தாக்குதல் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட நெடிய‌ கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை நாம் நடத்தி பல சிங்கள இராணுவத்தினரையும், பொலீஸாரையும் கொன்றிருக்கிறோம். ஆடியில் எம்மால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல்கூட எமது போரட்டத்தின் இன்னொரு சம்பவமே அன்றி வேறில்லை. ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் ஒரு தாக்குதல் நிகழ்வே காரணமானது என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஆடியில் எம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது, அவை எம் மக்களை கொல்வதற்காக மட்டுமே நடத்தப்படவில்லையென்பதும், கொழும்பில் எம்மக்களின் பொருளாதாரப் பலத்தினைச் சிதைக்கவும், வாழ்வாதாரத்தை அழிக்கவும் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்கள். எமது பார்வையில் ஆடியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையென்பது மிகவும் திட்டமிட்ட வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த இனவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்ட இனக்கொலையாகவே பார்க்கிறோம். ஆரம்பத்தில் இப்படுகொலைகளுக்கான ஒட்டுமொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்திவிடவே சிங்கள இனவாத அதிகார மையம் முயன்றது. பின்னர் திடீரென்று இடதுசாரி கட்சிகளை நோக்கி இனவாதிகள் தமது விரலை நீட்டினர். ஆனால், இன்றும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் இனவாத தலைமைப்பீடமே இப்படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்.
  16. இந்த இராணுவ வீரர் தென்கொரியாவில் 2022 இல் இருந்து இன்றுவரை குறைந்தது இருமுறை களியாட்ட விடுதிகளில் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார், பொலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தினார் என்று வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கொரியாவில் இவரால் ஏற்படுத்தப்பட்ட நஷ்ட்டங்களுக்குத் தண்டப்பணமும் இவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் அமெரிக்க ராணுவத்தின் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு விசாரணைகளுக்கு அனுப்பப்பட ஒரு நாள் இருக்க , கொரிய எல்லையைப் பார்க்கக் கூடும் மக்கள் கூட்டத்துடன் இணைந்து எல்லையைத் தாண்டி வட கொரியாவின் பக்கம் சென்றிருக்கிறார். தனது செயல்களுக்காக விசாரணை, தண்டனை என்று முகம் கொடுக்க நேரும்போது இவர் தண்டனையிலிருந்து தப்புவதற்காக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவே படுகிறது. மற்றும்படி இவர் கறுப்பினத்தவர் என்பதற்காக அமெரிக்கா இவரைத் தண்டிக்கப் பார்த்தது என்று கதைவிடுவது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.
  17. ஜெயாருக்கெதிராகத் திரும்பிய சிங்களவரின் கோபம் http://ahfesl.free.fr/Images/Image_blak_july_1983_04.jpg ஆத்திரத்துடனும், உணர்வு மேலீட்டுடனும் கனத்தைப் பகுதியில் குழுமியிருந்த சிங்களவர்களுக்கு முதன்முதலாக கட்டளைகளைப் பிறப்பித்துத் தலைமை தாங்கியவர்கள் நாரஹேன்பிட்ட‌ ராணுவ முகாமிலிருந்து வந்த ராணுவத்தினரே. தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கருகில் சென்ற அவர்கள், அருகிலிருந்த மண்ணை அக்குழிகளுக்குள் தள்ளி அவற்றினை மூடினார்கள். பின்னர், "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் எம்மிடம் தரப்பட வேண்டும், அவர்களை நாய்களைப் போல்ப் புதைக்க விடமாட்டோம்' என்று உரக்கக் கோஷமிடத் தொடங்கினார்கள். இந்தக் கோஷங்கள் அங்கே குழுமியிருந்த சிங்களவர் கூட்டத்தின் உணர்ச்சி நரம்புகளை உசுப்பிவிட, அவர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து கோஷமிடவும் கலகத்தில் ஈடுபடவும் தொடங்கினர். "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை அவர்களிடம் உறவினர்களிடம் கொடுத்துவிடு" என்று அரசாங்கத்தை நோக்கிக் கோஷமிடத் தொடங்கினர். மரணச் சடங்கினை மேற்பார்வையிட அங்கு அனுப்பப்பட்டிருந்த உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர், மயானத்தின் ஒரு பகுதியில் மக்கள் கோஷமிட ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்றார். அவர் அப்பகுதியை அடைந்தபோது, கூட்டத்திலிருந்தவர்கள் மரப்பலகை ஒன்றினால் அவரை இடிக்கவே அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அதிஷ்ட்டவசமாக, தோண்டப்பட்ட குழிகளுக்குள் அவரைத் தள்ளி வீழ்த்த அவர்கள் எடுத்த முயற்சியை அவரால் தடுக்க முடிந்தது. கனத்தை மயானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களைத் துரத்தும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர் ‍ 24, ஆடி, 1983 அங்கு குழுமியிருந்த சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களின் கலகம் கட்டுக்கடங்காமல்ப் போனது. ரேமண்ட் மலர்ச்சாலையின் ஊழியர்களால் மரணச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பித்தளையிலான கட்டமைப்புக்களும், வளைவுகளும் கலவரக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மயானத்தின் அப்பகுதியிலிருந்த ஏனையவர்களின் கல்லறைகளை அவர்கள் உடைத்து நாசம் செய்தார்கள். பல கல்லறைகளின் நினைவுக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டன. கலவரக்காரர்கள் வந்திருப்பது தமது கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்துகொண்ட கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிட, அவர்களுடன் பிரித் ஓதவென்று அழைக்கப்பட்டிருந்த பிக்குகளும் அச்சத்தில் மெல்லக் கழன்றுகொண்டனர். மாலை 7 மணி ஆகிக்கொண்டிருந்தது. உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவும், பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவும் மீண்டும் கனத்தை மயானத்திற்கு வருகை தந்தனர். தனது நுவரெலிய விடுமுறையினைப் பாதியில் கலைத்துவிட்டு கனத்தைக்கு வந்திருந்த பொலீஸ் அத்தியட்சகர் ருத்ரா ராஜசிங்கத்திடம் அவர்கள் நேராகச் சென்றனர். மயானத்தில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று அவர்கள் கேட்கவும், நிலைமை சிறிது சிறிதாக மோசமாகிக்கொண்டு வருகிறது என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து, "நீங்கள் இங்கேயே இருந்து நிலைமையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நாங்கள் உடனடியாக ஜனாதிபதிக்கு தற்போதைய நிலைமையினை நேரடியாகச் சென்று அறிவிக்கிறோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசுக்குச் சென்றனர். சுமார் மாலை 7:30 மணியளவில் எமது புகைப்பிடிப்பாளர் பியதாசவும் ஊடகவியலாளர் ஒருவரும் லேக் ஹவுஸ் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர் வரும்போது கனத்தைப் பகுதியில் தன்னால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைக் காண்பித்தார். கலவரபூமியாகக் காட்சியளித்த கனத்தை மயானத்தை அவர் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். இரண்டாவது பதிப்பிற்குச் செல்லும் பத்திரிக்கைகளில் அப்புகைப்படங்களை உள்ளடக்குவதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தலைவர் ரணபால போதினாகொட, டெயிலி நியூஸின் ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஜெயாரின் வீட்டிற்கும் இடையே தொடர்ச்சியாகப் போய்வந்துகொண்டிருந்ததுடன், கனத்தைக் கலவரத்தை பெரிதாகப் பிரசுரிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதுடன், டெயிலி நியூஸ் ஆசிரியர் மணிக் டி சில்வாவிடம், "அபாயகரமான சூழ்நிலையொன்று வலுப்பெற்று வருகிறது" என்று தலைப்பிட்டால்ப் போதும் என்று பணித்தார். ஆனால், பியதாசவுக்கோ நிறுவனத்தின் தலைவரின் செயல் அமைதியைத் தரவில்லை. தான் எடுத்துவந்த புகைப்படங்களை போதினாகொடவிடம் காட்டிய அவர், "நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது" என்று ஆவேசத்துடன் கூறினார். பின்னர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார், "சபா, கவனமாக இருங்கள். இப்போது சிங்களவர்களின் கோபம் அரசாங்கத்தின் மீதே இருக்கிறது. ஆனால், இந்த கோபத்தை தமிழர்களின் மீது திருப்பிவிட முக்கியமான சிலர் முயற்சித்து வருகிறார்கள்". பியதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அரசியல்த் தலைமைப் பீடத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்தன. அவற்றினூடாகவே நிலைமையினை அறிந்துகொண்ட அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். மேலும் என்னுடன் பேசும்போது, "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் அவர்கள்" என்றும் கூறினார். ராணுவத்தினரின் உடல்களைத் தம்மிடம் தருமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளைக் கேட்டுவந்ததனால், அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம் என்று அதிகாரிகள் பதிலளித்தைத் தான் பார்த்ததாக பியதாச கூறினார். மேலும், கனத்தை மயானத்தில் கூட்டு மரணச் சடங்கினை அரசு நடத்தத் தீர்மானித்தன் நோக்கம், தாக்குதலில் அகப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் முற்றாகச் சிதைந்து சேதமடைந்து விட்டதனால், அவற்றினைத் தனித்தனியாக அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது கடிணம், ஆகவேதான் கூட்டு மரணச்சடங்கினை அரசு நடத்த முடிவெடுத்தது என்றும் அவர்கள் உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர். லேக் ஹவுஸின் இரண்டாவது நிருபரும், அவரது உதவியாளரும் இரவு 8:30 மணிக்கு நிலையத்திற்குத் திரும்பினர். கனத்தையில் நடக்கவிருந்த மரணச் சடங்குகள் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மயானம் முழுவதிலும் ஒலிபெருக்கியால் அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் கடுமையான கலவரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். "மக்கள் ஜனாதிபதிக்கெதிராகவும், அரசாங்கத்திற்கெதிராகவும் கோஷமிட்டபடி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அவர்கள் கூறினர். நாம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கூட்டமொன்று இரவு 8:30 மணியளவில் மயானத்திற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் கம்மியூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்கள். அந்த மாணவர் கூட்டத்திலிருந்த இருவர் அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது , "ராணுவத்தினரின் மரணங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஆவேஷமாகக் கூறினர். பின்னர் ஆத்திரத்துடனும் உணர்வு மேலீட்டுடனும் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை ஜனாதிபதியின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேஸ் நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஆனால், ஜனாதிபதியின் இல்லம் நோக்கிய சிங்களவரின் பேரணியை பொலீஸார் இடைமறித்தனர். அரசுக்கெதிரான உணர்வு மேலீட்டு வருவதை உணர்ந்துகொண்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன, ஜனாதிபதியில் இல்லத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடைவதைத் தடுக்கும் நோக்கில் வேர்ட் பிளேசுக்கான தொடக்கப் பகுதியிலும், கின்ஸி வீதியிலும் தடைகளை ஏற்படுத்தி பொலீஸாரை காவலுக்கு அமர்த்தினார். உணர்வு மேலீட்டுடன் ஆவேசமாக கணத்தையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு, தம்மை எதிர்கொள்ள பொலீஸார் தயாராகி வருவதை அறிந்ததும், கூட்டத்திலிருந்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். இவர்களுள் பலர் தமது வீடுகளுக்கே திரும்பியிருந்தனர். சுமார் இரவு 10 மணியிருக்கும். லேக் ஹவுஸில் அந்நேரம் பணிபுரிந்துகொண்டிருந்த எல்லோரும் பொரள்ளைப் பகுதியிலிருந்து ஆகாயம் நோக்கிப் புகைமண்டலம் மேலெழுந்துவருவதைக் கண்ணுற்றோம். நான் உடனடியாக தீயணைப்புப் படையினருடன் தொடர்புகொண்டேன். மறுமுனையில் பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி, கனத்தையிலிருந்து வெளியேறி வந்த ஆர்ப்பாட்டர்க் காரர்கள் பொரள்ளைச் சந்தியிலிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை எரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து பாரிய தீச்சுவாலைகள் மேலெழுந்துவருவதை எம்மால் காண முடிந்தது. டெயிலிநியூஸ் ஆசிரியர் அறையிலிருந்து பார்க்கும்போது, கோட்டைப் புகையிரத நிலையம், புறக்கோட்டை சந்தைப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை எம்மால் தெளிவாகப் பார்க்கமுடியும். கொழும்பு எரியத் தொடங்கியிருந்தது !
  18. இராணுவத் தளபதியின் சீற்றம் "ராணுவத் தளபதி வீரதுங்கவுக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் கொழும்பிலிருந்து வந்திருந்தன.அவற்றுள் ஒன்று பாதுகாப்புச் செயலாளரிடமிருந்தும் இன்னொன்று ஜனாதிபதியிடமிருந்தும் வந்திருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி அவர் பேசுவது எங்களுக்குப் புரிந்தது. தனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிடம் மரணச் சடங்குகள் நடைபெறவேண்டிய விதம் குறித்த பணிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவர் மிகுந்த சீற்றத்துடன் யாரிடமோ பேசுவது கேட்டது. "எனது நாயைக்கூட யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ நான் புதைக்கமாட்டேன்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு பேசினார்". "பின்னர் எம்முடன் பேசிய அவர், அரச அதிகாரிகள் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை யாழ்ப்பாணாத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்தோ அல்லது புதைத்துவிடும்படி" தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். சேபால ஆட்டிகல கொழும்பு கனத்தை மயானத்திற்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து, அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவது கண்டு, மீண்டும் அலுவலகம் திரும்பியிருந்த பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவே உடல்களை யாழ்ப்பாணத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்து விடும்படி ராணுவத் தளபதியைக் கேட்டிருந்தார். கனத்தைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாக புலநாய்வுத்துறையினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுடன் கனத்தை மயானத்திற்கு மாலை 6 மணியளவில் நிலைமையினை ஆராயும் பொருட்டு செயலாளர் ஆட்டிகல சென்றிருந்தார். எனது ஆசிரியரான ஆரன் மாலை 4 மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் தெகிவளையில் அமைந்திருந்த எனது வீட்டில் இருந்தேன். கனத்தை மயானத்தில் மரணச் சடங்குகள் நடைபெறவிருப்பதால் என்னை உடனடியாக அலுவலகம் வரும்படி அவர் அழைத்தார். திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதல் பற்றி எனக்கு அப்போது தெரிந்தே இருந்தது. அன்று இரவு பணியில் நான் ஈடுபட்டிருந்ததால், மாலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதே வழமை. டெயிலிநியூஸ் பத்திரிக்கையின் உப ஆசிரியராக நான் அப்போது கடமையிலிருந்தேன். ஆரன் என்னுடன் பேசும்போது, "கனத்தையில் மரணச் சடங்கினை நடத்துவது எனும் முடிவு இன்னமும் இரகசியமாகவே இருக்கிறது. மாலை 5 மணிக்கு சடங்கினை நடத்தப்போவதாக செய்தி வந்திருக்கிறது. செய்தி நிருபர்களையும், புகைப்படப் பிடிபாளர்களையும் அங்கு வருமாறு அதிகாரிகள் கோரியிருக்கின்றனர். நான் பியதாசவையும் இன்னும் இரு நிருபர்களையும் அங்கே அனுப்பப்போகிறேன்" என்று கூறினார். பியதாச எமது செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய சிறந்த புகைப்படப் பிடிப்பாளர். இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் அனுப்பியிருந்தது. மாலை 5 மணிக்கு லேக் ஹவுஸ் நிலையத்திற்கு நான் சென்றபோது நிலைமை சுமூகமாக இருப்பதாகவே தெரிந்தது. மாகாணத் தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பதிப்புக்கள் ஓரளவுக்கு முற்றுப்பெற்ற நிலையில் புலிகளின் தாக்குதலை தலைப்புச் செய்தியாக அவை காவி இருந்தன. சுமார் மாலை 4:30 மணியளவில் பியதாசவும் செய்தியாளர்கள் இருவரும் கனத்தைக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களுடன் தினமின‌, தினகரன் ஆகிய சகோதரப் பத்திரிக்கைகளின் நிருபர்களும் சென்றனர். மாலை 5 மணிக்கு ரேமண்ட் மலர்ச்சாலையிலிருந்து எம்முடன் பேசிய எமது செய்தியாளர் மரணச் சடங்குகள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார். "சடலங்கள் இன்னமும் பலாலியை விட்டு நீங்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு கூடிவருகிறார்கள். மக்கள் கூட்டமொன்றும் அதிகரித்து வருகிறது" என்று கூறினார். மரணச் சடங்கிற்கான ஆயத்த வேலைப்பாடுகள் பூர்த்தியாகி விட்டதாகக் கூறிய அவர், சில ராணுவ வீரர்களும், பொலீஸாரும் மயானத்தினுள்ளும், வெளியேயும் காவலுக்கு நிற்கிறார்கள் என்றும் கூறினார். சடலங்களைப் புதைப்பத்கற்கான குழிகள் தோண்டப்பட்டு, ராணுவ பாண்ட் வாத்தியக் குழு வரவழைக்கப்பட்டு, பிரித் ஓதுவதற்கு பிக்குகள் கூட்டிவரப்பட்டு, தொலைக்காட்சிக் கமெராக்கள் ஒழுங்குசெய்யப்பட்டு, வளைவு வெளிச்சங்கள் ஏற்றப்பட்டு அப்பகுதி மரணச் சடங்கிற்கு ஆயத்தமாகி இருப்பதாக அவர் கூறினார். ஆனால், உயர் ராணுவ அதிகாரிகளோ அல்லது பொலீஸ் அதிகாரிகளோ அப்பகுதியில் காணப்படவில்லையென்றும் அவர் கூறினார். மேலும், கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு மரியாதை செய்யும் முகமாக சில அமைச்சர்கள் அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் எமக்குக் கூறப்பட்டது. ரேமண்ட் மலச்சாலை பலாலியிலிருந்து ராணுவத்தினரின் உடல்கள் வருவதற்கு ஏன் தாமதமடைகிறதென்பதற்கான காரணம் எவருக்குமே அங்கு தெரிந்திருக்கவில்லை. விமானப்படை விமானம் ஒன்றின்மூலம் பலாலியிலிருந்து கொழும்பு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு உடல்கள் கொண்டுவரப்படவிருந்த நிலையில், வீரதுங்க குருநகரிலிருந்து பலாலிக்கு உலகுவானூர்தி ஒன்றின்மூலம் சென்றடைந்தார். உடல்கள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றன என்று யாழ்த் தளபதி பல்த்தசார் வீரதுங்கவுக்குக் கூறியதையடுத்து, தானும் உடல்கள் கொண்டுசெல்லப்படுகையில் கொழும்பு செல்லும் நோக்குடன் அவர் பலாலிக்குக் கிளம்பிச் சென்றார். யாழ் வைத்தியசாலை சவ அறையிலிருந்து மாலை 5 மணிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் என்னிடம் கூறினர். மேலும், பலாலியில் இருப்பவர்களே அனைத்தையும் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். கொழும்பிலிருந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருப்பதால் பலாலியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் குழப்பமான நிலையில் காணப்படுவதாகவும் எமக்குக் கூறப்பட்டது. பலாலி ராணுவத் தளத்தில் அப்போதிருந்த உயர் அதிகாரியொருவர் இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஜெயவர்த்தனவின் கட்டளைகளே என்று கூறினார். தளபதி வீரதுங்கவை அன்றிரவு குருநகரில் இருக்குமாறு கட்டளையிட்டதன் மூலம் அனைத்து விடயங்களையும் தாமதித்துக் குழப்பியது ஜெயவர்த்தனவே என்று அவர் கூறினார். தினமினப் பத்திரிக்கையின் கல்கிஸ்ஸைப் பகுதி நிருபர் இரத்மலான விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்படுவதைச் செய்தியாக்கப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் பின்னர் பேசுகையில், "இரத்மாலனை விமான நிலையத்தில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்றே எவருக்கும் இங்கு தெரியவில்லை" என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார். கனத்தை மயானம் - பொரள்ளை, கொழும்பு கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உறவுகள் சிலர் குழுமியிருந்த பொரள்ளை ரேமண்ட் மலச்சாலையிலும் இதேவகையான குழப்பநிலை காணப்பட்டது. மேலும், அவ்வேளை உடல்கள் தாக்கப்படவிருக்கும் கனத்தை மயானத்திற்கு கூட்டம் கூட்டமாக பலர் வரத் தொடங்கியிருந்தார்கள். எவருமே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது நிதானத்துடன் நடந்துகொள்ளவோ முயலவில்லை. யாவுமே மிகவும் குழப்பகரமாகக் காணப்பட்டது. அப்பகுதிக்கு வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தாம் எண்ணிய வழியில் கூடியிருந்தவர்களை ஒவ்வொரு வகையில் வழிநடத்த, அப்பகுதி கலவர பூபியாகக் காட்சியளித்தது. நேரம் செல்லச் செல்ல, குழப்பமான சூழ்நிலை கலவரமாக மாற்றமெடுத்தது. குழப்பநிலையினை உருவாக்கும் நோக்கில் கூட்டம் ஒன்று மயானத்திற்குள் நுழைவதனை எமது நிருபர்கள் அவதானித்தார்கள். தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு, வெண்ணிற டீ சேர்ட்டுக்களும், கட்டைக் காற்சட்டைகளும் அணிந்த இக்கூட்டம் ஏலவே திட்டமிட்டது போன்று சவக் குழிகள் தோண்டப்பட்டிருந்த இடத்தினை நோக்கிச் சென்றது. முதலில் இக்கூட்டத்தினை ரஜரட்ட ரைபிள் படைப்பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இவர்கள் பொரள்ளை வீதியில் , நரஹேன்பிட்ட பகுதியில் இருக்கும் ராணுவ முகாமின் வீரர்கள் என்பது தெரியவந்தது.
  19. ராணுவத்தினரால் பரிமாறப்பட்ட ரேடியோத் தகவல்கள் ஆடி 24 ஆம் நாள் பலாலிக்குச் சென்ற இராணுவத் தளபதி வீரதுங்க அங்கிருந்து உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் குருநகர் இராணுவ முகாமிற்குச் சென்றார். அவர் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் படுகொலைகள் அரங்கேறத் தொடங்கியிருந்தன. அன்று பிற்பகல் கவலையளிக்கும் சில ரேடியோத் தகவல்கள் பலாலி இராணுவப் படைத்தளத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன. இந்த ரேடியோத் தகவல்கள் இரண்டினைப்பற்றி தனது "ஒரு ராணுவ வீரனின் நாட்குறிப்பு" எனும் புத்தகத்தில் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். "மாதகல் முகாமிலிருந்தும், வல்வெட்டித்துறை முகாமிலிருந்தும் கிளம்பிச் சென்ற இராணுவ வீரர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்" என்று முதலாவது செய்திபற்றி அவரது புத்தகம் கூறுகிறது. அவரது இரண்டாவது ரேடியோத் தகவல் பின்வருமாறு கூறுகிறது, "டிரக் நிரம்பிய ராணுவ வீரர்கள் பலாலி இராணுவத் தளத்திலிருந்து கிளம்பி யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக்கொண்டு அவர்கள் செல்கிறார்கள்". ராணுவத் தளபதி குருநகரில் இறங்கியவேளையிலேயே இராணுவத்தினரின் அட்டூழியங்கள் ஆரம்பித்தன. யாழ்நகரே இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு எரிந்துகொண்டிருக்க, அம்மாவட்டத்தின் அனைத்து இராணுவ அதிகாரிகளும் திஸ்ஸ வீரதுங்கவை வரவேற்க குருநகர் முகாமிற்கு சமூகமளித்திருந்தனர். குருநகர் முகாமில் நடத்தப்பட்ட மாநாட்டினை திஸ்ஸ வீரதுங்க தலைமை தாங்க, யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசார் புலிகளின் தாக்குதல் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்தார்.கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் விடயங்களைக் கூறிய பல்த்தசார், ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்பிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் எடுத்திருப்பதாகவும் கூறினார். பலாலி ராணுவத் தளத்திலிருந்து வந்துகொண்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்த ரேடியோத் தகவல்கள் பற்றியும் வீரதுங்கவுக்குக் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ அதிகாரிகளிடம் பேசிய வீரதுங்க தனது முதலாவது கவலை கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்பிவைப்பதுதான் என்று கூறினார். அவரிடம் பேசிய பல்த்தசார் 10 சடலங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஏனைய மூன்று சடலங்களும் சற்று உருக்குலைந்த நிலையிலும் இருப்பதாக கூறினார். ஜீப்பில் பயணம் செய்த இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தனவும், பின்னால் அமர்ந்து பயணித்த இரு ராணுவ வீரர்களும் கண்ணிவெடித்தாக்குதலில் நேரடித் தாக்கத்திற்கு உள்ளானதாக அவர் கூறினார்.மேலும், விமானம் மூலம் இவ்வுடல்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், உறவினர்கள் ரேமண்ட் மலர்ச்சாலைக்குச் சென்று தமது ராணுவ வீரர்களை உடுத்த வேண்டிய உடைகளைக் கையளித்தால், தாம் அவர்களைத் தயார் செய்ய முடியும் என்று பொலீஸார் ஊடாகச் செய்தியனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ் வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகள் என்னுடன் பேசும்போது உடல்களில் எவையுமே உருக்குலைந்த நிலையில் இருக்கவில்லையென்றும், அவர்கள் யாருடையவை என்று அடையாளம் காண்பதில் தமக்குச் சிரமம் இருக்கவில்லையென்றும் கூறினர். மேலும், வெடிப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சடலம் என்று பலராலும் கூறப்பட்ட வாஸ் குணவர்த்தனவின் சடலத்தை முனசிங்க மிக இலகுவாகவே தாக்குதல் நடந்த இடத்தில் அடையாளம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பல்த்தசார் திறமையாகச் செயற்பட்டு பல விடயங்களை செய்திருப்பதாக திஸ்ஸ வீரதுங்க பாராட்டியிருந்தார். குருநகர் முகாமிலிருந்து மாலை 5 மணியளவில் கிளம்ப ஆயத்தமானார் வீரதுங்க. தன்னை வழியனுப்ப உலக்குவானூர்தி மேடைக்கு வந்த அதிகாரிகளிடம் பேசிய அவர், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழு இராணுவ மாரியாதை கொடுக்க ஜெயார் விரும்புவதாகக் கூறினார். மேலும், கொழும்பு பொரள்ளை கனத்தையில் அவர்களை அனைவரையும் புதைத்து, அவர்களுக்கென்று நினைவுத் தூபியொன்றினையும் நிறுவ ஜெயார் விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், ராணுவத்தினரின் உடல்கள் கொழும்பு கொண்டுசெல்லப்படும்போது, தானும் அவற்றுடன் செல்லவேண்டும் என்றும் வீரதுங்க கூறினார். ஆனால் கிளம்பிச் சென்ற 30 நிமிடங்களில் திரும்பி வந்தார் வீரதுங்க. அவர் திரும்பி வந்ததையடுத்து அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரை வரவேற்க மீண்டும் உலங்குவானூர்தி மேடைக்கு அரக்கப் பறக்க ஓடிச்சென்றனர். அவர்களிடம் பேசிய வீர்துங்க தான் பயணித்த உலங்குபானூர்தியின் தொலைபேசியில் அரசாங்க உயர்பீடத்துடன் தான் உரையாடியதாகவும், அதன்படி, அன்றிரவு தன்னை யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிடுமாறு ஜெயார் பணித்ததாகவும் கூறினார். பலாலி ராணுவத் தளத்தினூடாக வீரதுங்கவை அவசர அவசரமாக தொடர்புகொள்ள பலமுறை முயன்றதாகவும், ஈற்றில் வானூர்தியில் பயணித்தபோது அவருடன் தொடர்பினை கொழும்பிலிருந்தவர்க‌ள் ஏற்படுத்திக்கொண்டதாகவும் அத்தொடர்பினை ஏற்படுத்திய அதிகாரி கூறினார். வீரதுங்க‌ திருப்பி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது ஏன்? எனக்குத் தெரிந்த அதிகாரிகளிடமிருந்து இதற்கான பதிலை நான் தேட ஆரம்பித்தேன். எனக்குச் சொல்லப்பட்ட ஒரே காரணம் வீரதுங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இராணுவ வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஜெயார் பணித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வீரதுங்க பாதி வழியில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிவந்து மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் ஒருவருக்கு அவர் இராணுவ வீரர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக வரவில்லை என்பது தெளிவாகவே புரியும். அவரது செயற்பாடுகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவரின் மீள்வருகையின் காரணத்தை தெளிவாக எடுத்தியம்பின. யாழ்ப்பாண குருநகர் ராணுவ முகாமுக்குத் திரும்பிய வீரதுங்க செய்தது என்ன? வீரதுங்கவின் செயற்பாடுகளை முனசிங்க தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "தூக்கமற்ற இரவுகளால் நாம் அனைவரும் மிகவும் களைப்படைந்திருந்தோம். அப்படியிருந்தபோதும், நாம் அனைவரும், குறிப்பாக மூத்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராணுவ முகாமின் உணவு விடுதியில் ஆடி 24 ஆம் திகதி மாலை கூடியிருந்தோம். மது அருந்துவதற்காக திஸ்ஸ வீரதுங்கவும் எம்முடன் இணைந்து கொண்டார். இனிமேல் நடக்கவேண்டிய விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து வந்த பணிப்புரைகளின்படி இராணுவாத்தினரை விளிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் இராணுவத்தினரின் ஒழுக்கம் குறித்து கண்டிப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தது".
  20. நீங்கள் சொல்வது உண்மை. அமெரிக்காவுக்கு ரஸ்ஸியா சளைத்து அல்ல. அதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
  21. இச்சந்திப்பில் பிரிகோஷினும் கலந்துகொண்டார். ஆனால், இனிமேல் வாக்னர் குழுவை அன்ரே றெஷேவே வழிநடத்த முடியும் என்றும் புட்டின் கூறியிருக்கிறார். வாக்னர் குழு தமது புதிய தலைவரின் கீழ் வழமைபோல் செயற்பட முடியும் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் புதிய தலைவர் வாக்னர் குழுவினரை சிரியாவில் தற்போது வழிநடத்தி வருபவர் என்பதுடன் சிரிய அதிபர் ஆசாத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடக் தக்கது. சோவியத் ஆப்கான் போரில் பங்காற்றியிருந்த அன்ரே, பின்னாட்களில் ரஸ்ஸிய உள்ளக புலநாய்வுத்துறையிலும் சிறப்புப் படைகளிலும் பணிபுரிந்திருக்கிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.