-
Posts
15244 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
"சிரிக்க மட்டும் ..."
பெருமாள் replied to kandiah Thillaivinayagalingam's topic in சிரிப்போம் சிறப்போம்
-
கணவன் காலில் விழுந்தால் நம்பாதீங்க! நேற்று என் புருசன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று என் காலில் விழுந்து சத்தியம் பண்ணினார்! ஓ! அப்ப உன் வீட்டுக்காரர் குடிப்பதை நிறுத்தி விட்டார் என்று சொல்லு! நீ வேற என் ரெண்டு கொலுசையும் கழட்டி விற்று குடித்து விட்டார்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெருமாள் replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
19 வயதில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க ரகசிய சேவையில் ஊடுருவி நாட்டின் பல ரகசியங்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவரது தந்தை தனியாக வசித்து வந்த முதியவர். ஒரு நாள், அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை நடவு செய்ய விரும்பினார், ஆனால் அவரது முதுமை காரணமாக அவ்வாறு செய்ய அவருக்கு வலிமை இல்லை. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அது கூறியது: சிறிது நேரம் கழித்து, தந்தைக்கு மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இரகசிய சேவைகளும் இராணுவமும் அந்த வீட்டை சுற்றி வளைத்தன. அவர்கள் பூமி மீட்டரை மீட்டரைத் தோண்டி, எல்லாவற்றையும் அகற்றினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு வாரம் கழித்து, தந்தைக்கு ஒரு புதிய கடிதம் வந்தது. -
கொஞ்சம் சிரிங்க பாஸ் ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார், பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் . பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் , ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..?? இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் . சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை . கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து , அவர்களிடம் பேசினார்கள் . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் . இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . அப்படி என்னதான் தீர்வு .." அது " ..?? சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் .... ........ " வாழ்க வளமுடன் " ..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
தமிழ் மீது தேவயற்ற சந்தேகம் இருக்கும் வரை அதாவது கொஞ்ச அதிகாரம்களை கொடுத்தால் அதையே கயிறாக பாவித்து தனி நாடு உருவாக்கி சிங்களவர்களை இலங்கையை விட்டே கலைத்து விடுவார்கள் என்ற பயம் சந்தேகம் இருக்கும்வரை உங்க நினைப்பு ஈடேராது சாமியார் . -
21 நிமிட வாசிப்பு இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 3 September 19, 2023 | Ezhuna ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது. இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும் ‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை இவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது. “விசைப்படகுகளில் சென்று வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்க முடியும் என்றும், பருவநிலைக்கு ஏற்ப மாறும் இத்தகைய கடல் நீரோட்டங்கள், பாக்குநீரிணையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பிரச்சினை தான் என்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்.” எல்லை தாண்டிய இந்திய நாசகார மீன்பிடியை ஆதரிப்போர் அனைவரும், தொழில்நுட்பச் சொற்பதங்கள் மற்றும் கடல்சார் கலைச்சொற்களை திரித்துச் சொல்கின்றனர். அல்லது அவற்றுக்குத் தவறான விளக்கம் கொடுப்பதன் மூலம் இலகுவாகத் தெரிந்து கொள்ளக்கூடிய தரவுகளை நேர்மையாக எழுதாமல், “மீனவர்கள் சொல்கின்றார்கள்” என்ற சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலம் உண்மைக்கு மாறானவற்றை எழுதி தமது அரசியல் அங்கிடுதத்தத்தை வெளிப்படுத்துகின்றனர். ரோலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தியே, இலங்கைக் கரையோரத்தின், பிரத்தியேக பொருளாதார எல்லைக்குள் இந்திய எல்லை தாண்டிய நாசகார மீன்பிடி நடைபெறுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் பாக்கு நீரிணையில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் ஈராயிரத்துக்கும் அதிகமானவை மன்னார் கரையோரத்திலிருந்து பருத்தித்துறை முனை வரையான பிரதேசத்தில் மீன்பிடிக்கின்றன. இவைகள் அனைத்தினதும் வலைகள் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டா இலங்கையில் கரைப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கும் உள்ளான பகுதிக்கு வருகின்றன? அடுத்ததாக, இழுவைப்படகின் கடையாலில் (Stern of the Trawling Vessel) பின் பகுதியில் பிணைக்கப்பட்ட மடியையே (Trawling Net) இயந்திரவலுவின் உதவியுடன் படகு இழுத்துச் செல்கிறது. மடியின் அல்லது வலையின் அசைவுகள் முழுவதும் படகின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே மீன்களைக் குறிவைத்து மடியின் உதவியுடன் பிடிக்க முடியும். ஒரு இழுவைப்படகின் (அல்லது புதியஜனநாயகம் கட்டுரை பாவிக்கும் சொல்லான விசைப்படகு) வலுவும், இழுதிறனும் நீரோட்டத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாததாக இருந்தால் அதனை நீரோட்டமும், கடல் அலையும், அதிக விசையுடன் வீசும் காற்றும் உள்ள எந்தக் கடலிலும் பாவிக்க முடியாது. குறிப்பாக பாக்கு நீரிணையில் பாவிக்கவே முடியாது. இந்நிலையில் “வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்று விடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்க முடியும்” எனத் தவறான தகவல்களை தமது அரசியலுக்குத் தக்கதாக சொல்வதுடன், “பாக்கு நீரிணையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பிரச்சினைதான் இதுவென்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்” என மீனவர்களைச் சாட்சிக்கு இழுப்பது அடிப்படை அரசியல் நேர்மையற்ற விடயமாகும். தொழில் நேர்மையும், சுய மரியாதையும், பெருமையும் கொண்ட எந்தக் கடற்றொழிலாளியும் மேற்படி கருத்தை கூறியிருக்க முடியாது என்பதே எனது வாதமாகும். இதேவேளை, நாம் இலங்கையில் செய்வது போன்ற வலைப்படுப்பு தொழில் இந்தியர்களாலும் செய்யப்படுகிறது. நைலோன் வலைபடுப்புத் தொழில் இந்தியர்களால் நாட்டுப் படகுகளிலும் கட்டுமரங்களிலும் கரையோரத்திலிருந்து ஐந்திலிருந்து – பத்து கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியிலேயே செய்யப்படுகின்றது. இவர்கள் எல்லை தாண்டுவதுமில்லை, இவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்டதாக எந்தவித ஆதாரமுமில்லை. இதற்கு காரணம் என்ன? நாட்டுப்படகு மற்றும் கட்டுமரத்தில் தொழில் செய்யும் மீனவர்கள் உபயோகிக்கும் வலையின் அடிப்பகுதியில் கற்கள் கட்டப்பட்டிருக்கும். அதனால் வலையைக் கடலிலிருந்து படகில் ஏற்றும்போது நீரோட்டம் மற்றும் காற்றின் வலுவுக்கு எதிராக அவை ஈடுகொடுக்கும். ஆகவே, படகு அடையும் தூரம் கட்டுப்படுத்தப்படும். அத்துடன், இந்தியக் கரைக்கு அருகில் படுக்கப்படும் ஒரு கிலோ மீற்றர் வரை நீளமான இவ்வலைகள், நீரோட்டத்தின் வலுவால் இலங்கையின் வடகரை வரையும் வந்தடைவது என்பது சாத்தியமில்லாத விடயம். இந்தியர்கள் நடத்தும் கடற்கொள்ளையை நியாயப்படுத்துபவர்கள், எவ்வாறு தொழில்நுட்ப சொற்பதங்கள் மற்றும் கடல்சார் கலைச்சொற்களைத் திரிகின்றார்கள் என்பதற்கு உதாரணமாக, ‘இழுவைப்படகு’ (Trawling Vessel) என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்தியர்கள் நமது கடல்வளங்களை இழுவைப்படகுகளை உபயோகித்தே அழிக்கின்றனர். ஆனால், இழுவைப்படகு என்ற சொல்லுக்குப் பதிலாக ‘விசைப்படகு’ என்ற சொல் திட்டமிட்ட முறையில், எந்தவித விளக்கமும் இன்றி, இந்திய பெரும்மூலதன மீன்பிடிக்கு ஆதரவானவர்களால் பாவிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் விசைப்படகு என்று கூறுவது இயந்திரம் இணைக்கப்பட்ட படகுகள் அல்லது கடற்கலங்களையே (Motorized Sea Vessels). இயந்திரங்களை (Inboard or Outboard Motors) கட்டுமரங்களிலும், வள்ளங்களிலும், சிறுவகைக் கண்ணாடிநார்ப் படகுகளிலும், நாட்டுப்படகுகளிலும் கூட இணைக்கலாம். ஆகவே, விசைப்படகு என்பது பொதுவாக இயந்திரம் இணைக்கப்பட்ட எல்லாவகைப் படகுகளுக்கும், கப்பல்கள் தவிர்த்த அனைத்துக் கடற்கலங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, மீனவ சமுதாயம் கடற்கலன்களை வகை வகையாகப் பிரித்துத் தனித்தனியான பெயரை உபயோகித்து வருகின்றது. வள்ளம், தோணி, கட்டுமரம், இழுவைப்படகு, 17-25-30-40 அடி உள்இணைப்பு இயந்திரப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள், வெளியிணைப்பு இயந்திரப் படகுகள் என பலப் பல வகைகளில் ‘விசைப்படகுகள்’ அழைக்கப்படுகின்றன. ஆகவே இன்று மீனவர் பிரச்சினை பற்றி விவாதிக்கும் போது எந்தவகையான ‘விசைப்படகு’ என விபரிப்பதுடன் அதில் எந்த வகையான வலைகள், உபகரணங்கள் மீன்பிடிக்கப் பாவிக்கப்படுகிறன என்பதை பகிரங்கமாக முன்வைத்து விவாதிப்பது தான் நேர்மையானதாகும். அதை விடுத்து ‘பெரிய விசைப்படகு’, ‘சிறிய விசைப்படகு’ என்ற சொற்பதங்களைப் பாவிப்பது விவாதத்தில் முக்கியமான விடயங்களை மறைப்பதற்கேயாகும். இந்திய மீனவரும் தமிழ்–சிங்கள தொழிலாளர் உறவும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல் ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜே.வி.பி இல் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 77 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு, உலக நாணய நிதியத்தின் உதவியுடனும் மேற்கு நாடுகளின் உதவியுடனும் இப்பகுதியைச் சேர்ந்த 80% மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்களில், உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகள், கேளிக்கை அரங்குகளை அமைத்தது. இன்றும் கூட 70 % வீதத்திற்கும் அதிகமான உல்லாச விடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் அங்கு ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப்பயண வியாபாரம் வீழ்ந்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில்செய்ய முடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உட்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துறை, பேருவளை, ஹிக்கடுவ, காலி, மிரிஸ்ஸ, தங்காலை போன்ற இலங்கையின் தெற்கு கரையோரப் பிரதேசங்கள் உல்லாசப்பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்டமையை இலங்கை மீன்பிடித் துறையின் முந்தைய பெருமைமிகு செயற்பாடுகளுக்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறு தென்னிலங்கை மீனவர் சமுதாயத்தில் பொருளாதார வறுமை நிலவிய காலமான 1977 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சில ஆயிரம் சிங்கள கடல்தொழிலாளர்கள், வடக்கில் மன்னார், பொலிகண்டி, பருத்தித்துறை, மயிலிட்டி, மண்டைதீவு, குருநகர், ஊர்காவற்துறை, தொண்டைமானாறு போன்ற தமிழ் பிரதேசத்தில் தமிழர்களுடன் இணைந்து ஒன்றாக தொழில் செய்தார்கள் என்பதும், பலர் இப்பகுதிகளில் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்பதும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் நினைவிற்கொள்வது நன்று. தமிழ், சிங்கள மீனவர்களுக்கு இடையிலான உறவானது பல நூறாண்டு வரலாற்றை கொண்டது. சிங்கள மீனவர்களுக்கு படகு கட்டும் உதவியை பல நூறாண்டுகளாக தமிழர்களே செய்தார்கள். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பருத்தியடைப்பு, நயினாதீவு, தோப்புகாடு, அராலி, வட்டுகோட்டை போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள், பல பரம்பரையாக கப்பல் கட்டி வணிகம் செய்த வரலாறைக் கொண்டவர்கள். ஆங்கிலேய நீராவிக் கப்பல்கள் இவர்களின் பாய்கப்பல் வணிகத்தை இலாபமற்றதாக ஆக்கியதால், சிறு வள்ளங்கள் செய்தும், மீன்பிடியில் ஈடுபட்டும் தமது சீவியத்தை நடாத்தினர். இந்தக் காலகட்டத்தில் இச் சமூகத்தை சேர்ந்தவர்கள் திருகோணமலை, புத்தளம், போன்ற தமிழ் பிரதேசங்களிலும் கொழும்பு, ஜாஎல, சீதுவ போன்ற சிங்களப் பிரதேசங்களிலும் குடியேறி மீன்பிடி மரக்கலங்களை கட்டும் தொழில் செய்தனர். இதே சமூகத்தினர்தான் பிற்காலத்தில் ‘சீ-நோர்’ நிறுவனத்தின் ஊடாக கண்ணாடி இழைப் படகு செய்யும் முறையை சிங்களப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தினர். இதே போன்று வடமாராட்சி, மண்டைதீவு, குருநகர் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ மீன்பிடிச் சமூகம் நீர்கொழும்பு மீன்பிடி சமூகத்துடன் 83 ஆம் ஆண்டுவரை நெருங்கிய நல்லுறவைக் கொண்டிருந்தது. திருமணங்கள் கூட இந்த சமூகங்கள் இடையில் நடந்துள்ளன. இலங்கையின் சிங்கள மீனவச்சமூகம், ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசின் சுற்றுலா அபிவிருத்தியால் பாதிக்கப்பட்டவேளை, மேற்கூறிய தமிழ் மீனவ சமூகத்தவர்கள் சிங்கள மீனவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். இந்திய இராணுவ நடவடிக்கையால், பின்வந்த காலத்தில் மேற்கண்ட சமூகத்தவர் பலர், நீர்கொழும்பு பகுதியில் தற்காலிகமாக குடியேறினர். சிலர் அங்கு மீன்பிடியையும் தொழிலாகச் செய்தனர். இதற்கு அடிப்படைக் காரணம், வரலாற்று ரீதியாக இந்த இருவேறு இனம் சார்ந்த மீன்பிடி சமூகங்களுக்கிடையே நிலவிவந்த நெருங்கிய உறவேயாகும். இணையத்தளம் ஒன்றில், இந்தியர் ஒருவர் தனது கட்டுரையில் “கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருநாள் தமிழ்நாடு மீன்பிடிச் சமூகமும், இலங்கை தமிழ் மீன்பிடிச் சமூகமும் தமது தொப்புள்கொடி உறவை வளர்க்கும் நிகழ்வு” என்று தொனிப்பட எழுதியிருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. பொதுவாக கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருநாள், குடும்பங்கள் பங்குகொண்டு கலந்துறவாடும் விழாவல்ல. அது பெரும்பாலும் இலங்கை-இந்திய ஆண்கள் பங்குகொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். பண்டமாற்றுச் செய்யும் பொருட்டு மக்களை ஈர்க்கும் இடமாகவும் இது இருந்து வந்துள்ளது. (கிராம்பு, ஏலம், கறுவாப்பட்டை, தேங்காய் எண்ணையும், கோம்பா சோப், சந்தனசோப், ரேக்ஸ்சோனா சோப் போன்ற சவற்கார வகைகளை இலங்கையர்கள் கச்சத்தீவுக்கு கொண்டுபோய், பண்டமாற்றாக பிளாஸ்டிக் பொருட்கள், காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள், கைத்தறிப் புடவைகள், வேட்டி, கிப்ஸ் சாரம் போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர்.) இதனோடு ஒப்பிடும்போது, தமிழ் மற்றும் சிங்கள கிறீஸ்தவ மீன்பிடிச் சமூகங்கள், மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும் காலமான ஆவணியில், குடும்பம் குடும்பமாக வந்து சந்திக்கும் மன்னார் (மாந்தை) மடுமாதா ஆலயத் திருவிழா, பல பரம்பரைகளாக நடைபெறும் பண்பாட்டு தொடர்ச்சியுடைய விழாவாக அமைகிறது. இது யுத்தம் தொடங்கிய பின்னும் நடைபெற்றது. அதே போன்று தமிழ் மீன்பிடிகார கிறீஸ்தவர்கள், நீர்கொழும்பு தேவாலயத் திருவிழா, புத்தளம் ‘தனைவில்லு சந்தானாள்’ ஆலய திருவிழா ஆகியவற்றில் பங்குகொண்டதுடன், அப்பிரதேசங்களில் வாழ்ந்த நீண்டகால சிங்கள நண்பர்களின் குடும்பங்களை தரிசித்தும் வந்தனர். மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் சைவர்களில் பலர், தென்மன்னாரில் அமையப்பெற்ற அரிப்பு முதல் முந்தல் வரையான பகுதிகளில் பறிக்கூடு மூலமும், களக்கடல் வலைகள் மூலமும் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். இதே பகுதியில் சிங்களத் தொழிலாளர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதும், தமிழர்களும் சிங்கள மீன்பிடிகாரரும் அருகருகு வாடிகளில் தங்கியிருப்பதும் வழமை. இவர்கள் கூட, வருடத்தில் சில நாட்கள் உடப்பு பத்தினியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வது வரலாறு. இவ் வரலாறு புளொட் இயக்கத்தினர் ‘நிகரவேட்டிய’ வங்கிக்கொள்ளை நடத்தும் வரை தொடர்ந்தது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாக தொழில் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த இரு மீன்பிடிச் சமூகத்திற்குள்ளும் இருந்த உறவு, மறுபுறத்தில் வடபகுதி மீனவர்களின் ஒரு பகுதியினரால், இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட பொருட்களை சிங்களப் பிரதேசத்தில் சந்தைப்படுத்துவதற்கும், அப்பகுதிகளில் தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இவ்வுறவு பலகாலம் நின்று நிலைப்பதற்கு பல காரணங்கள் கூறலாம். முதல் முக்கிய காரணம் இரு பகுதியினரின் மீன்பிடிப் பொறிமுறை பெரும்பாலும் வித்தியாசமானதாகும். உதாரணமாக மேற்கூறியபடி அரிப்பு பிரதேசத்திற்கும் புத்தளம் முந்தல் பிரதேசத்திற்கும் இடையில் தொழில் செய்த சிங்களத் தொழிலாளர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டனர். பருவகாலத்தில் வடபகுதியை சேர்ந்தோர் இப்பகுதியில் பறிக்கூடு, வலைபடுப்பு, கடலட்டை குளித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டனர். இந்த இரு பகுதியினராலும் குறிவைக்கப்படும் மீன்வகை கூட ஒரே வகையானதல்ல. இதனால் முரண்பாடுகள் சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கவில்லை. அடிப்படையில் இரு பகுதியினரின் தொழில் பார்க்கும் முறையும், தொழில் செய்யும் பிரதேசங்களும் பெரும்பாலும் வெவ்வேறானதாகவே உள்ளன. இதை அடிப்படையாக் கொண்டே பருத்தித்துறை தொழிலாளி ஒருவர் வீரகேசரி பத்திரிகைக்குகருத்து தெரிவிக்கும்போது “சிங்களவர்களால் அல்ல, இந்திய மீனவர்களால் தான் தமக்கு பாதிப்பு” என்று கூறினார். ஆனால் இந்திய குறுந்தமிழ் தேசியவாதிகளும், இடதுசாரித்துவம் பேசும் புலம்பெயர் தமிழினவாதிகளும் இணைந்து அத்தொழிலாளியை சிங்களப் பேரினவாதிகளின் பேச்சாளர் என முத்திரை குத்தினர். இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் குறுந்தேசிய, பாசிச சக்திகள் கூறுவது போல இவ்விரு மீன்பிடி சமூகத்தினருக்கிடையில் மீன்பிடித் தொழில் ரீதியாக முரண்பாடு நிலவுகின்றதென யாராவது கூற முயன்றால் அது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்வது போலாகும். அதேபோன்று இனப்பிளவை விரிவாக்க அயராது செயற்படும் குறுந்தேசியத்துடனும் தமிழ் இனவாதிகளுடனும் தமிழ் நாட்டின் இடதுசாரிகளான ‘ம.க.இ.க’ போன்ற அமைப்புக்கள் கைகோர்ப்பது குளத்தைக் கலக்கி பருந்திற்கு இரைகொடுத்தது போலாகும். குறிப்பு : இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில், இலங்கையில் சிங்கள – தமிழ் மீனவர் பிரச்சினைகள் தோன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று, நீண்டகால யுத்தம், தமிழ் மீனவ சமூகத்தின் புலம்பெயர்வு, சிங்கள சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் ரீதியான சமூகமாற்றம், பேரினவாத அரசியல் போன்ற காரணிகளால் இந்த இரு சமூகத்திற்குமான உறவு மங்கிய நிலையில் உள்ளதென்பது நிதர்சனம். தற்போது இக் கட்டுரை ஆசிரியர் முல்லைத்தீவில் நடைபெறும் தமிழ் – சிங்கள மீனவர் பிரச்சினை தொடர்பான ஆய்வைச் செய்துவருகிறார். ஒரு நினைவு நினைவு மீட்டல் எனது கிராமம் இலங்கையின் பொருளாதார அடிப்படையில், ஒப்பீட்டளவில் அநேகமாக நடுத்தர வர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர் இருந்தார். அவரை ‘அய்யா மாமா’ என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை நான் எங்கு கண்டாலும் அவர் என் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டுப் பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ‘அய்யா மாமா’ என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை ‘சர்க்கரைச் சம்மாட்டி’ என்று அழைப்பார்கள். சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் அவர் பதின்ம வயதில் இருந்தபோது, ஒருநாள் அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார். கடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும் சர்க்கரை மூட்டைகளுடனும் அங்கிருந்து தலைமறைவானார். பலவருடங்கள் கழித்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு, ‘Toyota Rosa Bus’ வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். ஆனால் அவரின் நெருங்கிய குடும்பத்தினரோ, அவர் மனைவி தமிழச்சிதான் என்றும், அவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினர். மாமா வரும்போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன் முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன், தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள், உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களையும் படகையும் அவரின் மனைவியின் உறவினர்களும், சில தென்னிலங்கைத் தொழிலாளிகளும் கடல் வழியால் எமது ஊருக்கு கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு, சர்க்கரை கடத்தியவர்களிடமிருந்து இவர் களவாடியதும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் ‘சர்க்கரைச் சம்மாட்டி’ என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. சம்மாட்டி என்றால் வழமையாக ‘முதலாளி’ என்று விளங்கிக் கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் உண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச் சமூகத்தில், அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. உதாரணமாக, பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள் மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச் செலவுபோக மீதமானது, படகும் வலையும் சொந்தமான ஒருவருக்கு இரண்டு பங்கும், தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம்-வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்காக தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது-கெட்டது நடந்தால், ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதே போலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொதுச் செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை ‘உழைப்பெடுத்தல்’ என்று கூறுவர். சர்க்கரைச் சம்மாட்டியான எனது மாமனும் சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு உள்நாட்டு யுத்த சூழலில் கடல்வலய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாகத் தொழில் செய்ய முடியாததினால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த ‘வீரயா சூரயா’ என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டன. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்தில் ஒரு நாள் வீரயா சூரயா பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள் பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்திவிட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள் பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்.வி.ஜி. பீடியை கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழீழ ஆதரவாளராக வலம் வந்ததுடன், வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் மீண்டும் எல்லாவற்றையும் இழந்தவர், ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி, தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர், இன்று அதே பிள்ளைகளுடன், தனது குடும்பத்தின் அன்றாடச் செலவுக்காக கடல் தரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து, மாதகல் கரையிலும் பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோது, சரி பிழைகளுக்கப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி இருந்தது. இன்று அவர் அன்றாடம் காய்ச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்டப்படும் வேளை, இந்திய அழிவு மீன்பிடிக்கு எதிரான அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ அவருக்கென்று ஒருவருமில்லை. உசாத்துணை : Anders Jensen J: The story of Norwegian cod fisheries Marine Resource Economics, Vol. 18., 2003 . Harvest Functions: The Bottom Trawl Fisheries Massachusetts Division of Marine Fisheries : Technical Report TR-38 பாட்டாவழிச்சமூகம் வட்டுக்கோட்டை : வணிகர்வரலாறு Commissioner of Fisheries, Chennai-6 : TamilNadu fisheries development 2007-2008 Director of Marine Products Export Development Authority, Chennai: Marine Products Export 2007- 2008 Ministry of fisheries and aquatic resources, Sri Lanka : Framework of the fisheries and aquatic resources sector 2007-2016 https://www.ezhunaonline.com/surpassed-of-indian-fishermen-into-sri-lankan-boarder3/
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக………....ஏதோ சொன்னார் , இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்' "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த தந்தை வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். ' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்: 'வாழ்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் . ஆனா சில நேரங்கள்ல அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமல் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் எந்த முடிவுக்கும் வந்துடக்கூடாது.' பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,, '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"' ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் "அவங்க கூடத்தான் பல நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்" னு. வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது… வாழ்வோம்…. மகிழ்வோம் ….. THANKS - Sri Valar Rajan -
இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 2 September 15, 2023 | Ezhuna ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது. மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே. உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்கு உண்டு. ஆனால் மீன்பிடித் தொழிலானது, ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன் வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். சந்தை நிலைவரத்திற்கு ஏற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருளாகும். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் தட்ப வெப்பநிலை எனப் பல காரணிகளில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய சூழலியல் காரணிகள் மீன்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள்தான் உருவாகும். மீன்களின் வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாக உள்ளபோது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00.2 – 00.5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால், இந்தக் காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன்களின் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம். இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித் தொழில் செய்வதானது, மீன் வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் ஆகக் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஒரு பங்காவது கடலில் மீதம் இருந்தால்தான் அதன் மறு உற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மூன்றில் ஒரு பங்கு மீன்களில் குறைந்தது 75 சதவீத மீன்கள் மறு உற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்க வேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கொள்ளை இலாபத்தையே குறியாகக் கொண்டு இயங்கும்போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும்; மீன்களை கடலிலிருந்து அடியோடு பெயர்த்தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து , மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதே வேகத்தில் மீன் வகைளின் மறு உற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறு உற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறு உற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். இறுதியில் கடல்கள் மீன்வளம் இல்லாதவையாக மாறிவிடும். மீன்களின் மறு உற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில், அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுத்து, கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள், தமது தேசத்தின் கடற்பரப்பில் உள்ள மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர், இன்னுமின்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்துகொண்டே இருப்பார்கள். இதனை, மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில், இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து, அடியோடு தண்ணீரை உறுஞ்சுவதற்கு ஒப்பிடலாம். இயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி – ஒரு சர்வதேச உதாரணம் மேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின், அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கை வளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் இட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இந்தப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் கடல்சார் வளங்களுக்கு மிகப் பாரதூரமான அழிவை ஏற்படுத்திய நாடு ஸ்பெயின் ஆகும். பல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித் திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சதப் படகுகள் மூலமும் ரோலர்கள் மூலமும் மீன்களைப் பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக 1980 களின் நடுப்பகுதியில் மீன்வளம், 1960 களில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டின. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல் ஆய்வின்படி பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள், அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க, குறைந்தது நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகைக் கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாகச் சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பைப் பெறவும், வேறும் பல முக்கியமான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முதலாவது, இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தையும் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது, ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயண உட்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப் பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது. ஆனால் மேற்காபிரிக்கக் கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பெயினின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயினின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது. அது மட்டுமல்லாமல் ஸ்பானிய அரசு, செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித் தனத்திற்கெதிராக போராட புறப்பட்ட உள்நாட்டு மீனவர்களையும், அவர்களின் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலை செய்தது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின் கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோர நாடுகளில், தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்களின் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது. எப்படித்தான் இருந்தாலும், எந்தவகைக் கடற்கொள்ளையில் ஈடுபட்டாலும், ஒரு காலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பெயின் இன்றுவரை அந்த இடத்தை திரும்பவும் பிடிக்க முடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும் வேறு வலய நாடுகளினதும், கடல்வளங்களை கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கும் புதிய கடல் கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும், 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்து நாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள். மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகியிருக்கும் நிலைபோல, இன்று இலங்கையின் தெற்கில் சீனாவானது ‘அரக்கத்தனமான’ கொள்ளையை ஆரம்பித்துள்ளது. வடக்கில் இந்தியப் பெரு முதலாளிகள் எமது கடல்வளங்களை பல வருடங்களாக கொள்ளையிடுகின்றனர். இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடியானது, இயற்கை வளத்திலும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையிலும் எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதெனப் பார்ப்போம். அதற்கு முன், இதனால் பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தைப் பற்றியும் அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பன பற்றி விளங்கிக் கொள்வதற்கும் இலகுவாக இருக்கும். வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கத்திற்கான இருவகைச் சூழல்கள் காணப்படுகின்றன. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம். ஐந்து பாகத்துக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலய எல்லை வரையான பிரதேசம்.) 1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம். இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக் கல்லும், மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும். இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம். 1.1 கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம். 1.2 ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம். 1.1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம் இக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்ப காலத்தில் தரையாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன் வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது. இந்த மாற்றங்கள் கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்குச் செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்த வகையான உயிரினங்கள் அந்தக்கடல் பகுதியில் உருவாகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்தக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால், கடல் அறுகு – சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக் கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும் வெள்ளை இறால், மட்ட இறால், வெள்ளை நண்டு, குழுவாய் நண்டு போன்ற நண்டு இனங்களும் ஆடாத்திருக்கை, புலியன் திருக்கை போன்ற திருக்கை இனங்களும் இங்கு உருவாகி, ஆழ்கடல் சென்று, மீண்டும் பருவகால இனப்பெருக்கத்திற்கென, உருவான இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக, தோப்புகாட்டு முனங்குக்கும், தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி – நாவாந்துறை – பண்ணை – பாசையூர் ஈறாக, கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது. 1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம். இந்த களக்கடல், ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழமுடையதாக இருப்பதால், அதன் கடலடி நிலம், மணலையும் சிறு முருகைக் கற்தளத்தையும் கொண்டிருக்கும். இப்பகுதியின் கடலடித் தாவரங்களென சாட்டாமாறு காடுகளையும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லினப் பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன் கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்டு இனமும், கட்டித் திருக்கை, கருவால் திருக்கை போன்ற திருக்கை இனங்களும் உருவாகின்றன. இக்கடல் பிரதேசம் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. இப்பகுதியின் சாட்டமாறு, கடல் தாளைத் தண்டுகளில் கணவாய்கள் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த களக் கடலின் கரைப் பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால், முட்டைகள் கணவாய் குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்த இடத்தைச் சென்றடைகின்றன. இக்கணவாய்கள், ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில், களம்கண்டி வலை பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக்குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது, அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் (சிறையா) இருக்கும் ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அவை காடன் என்று அழைக்கப்படுகின்றன. இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது, கிட்டத்தட்ட முழு வளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக்கடலுக்கு முட்டையிட கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னாரின் விடத்தல்தீவு – இலுப்பைக் கடவை – வெள்ளாம்குளம் – நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும், பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை – செட்டிபுலம் – புங்குடுதீவு – நயினாதீவு – அனலைதீவு – எழுவைதீவு போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் நீள்கிறது. 2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம் (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலய எல்லை வரையான பிரதேசம்.) இது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்கு நீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால் – மேற்கு வாய்க்கால் – காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக, பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அடங்கும். இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இற்கும் – 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், 1979 – 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ’பிரித்ஜோப் நான்சென்’ செய்த ஆய்வின்படி, இப்பகுதி ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசம் என அறியப்பட்டது. இப்பகுதி, மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனவும் கணிக்கப்பட்டது. இப்பகுதியின் கடலடித்தளத்தில் பாரிய கடலடித்தள ‘Coral Reef’ எனப்படும் முருகைகள் (பவளப்பாறைகளைக்) காணப்படுவதால், இப்பகுதி அதற்கே உரித்தான தாவரவியலையும் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூவாபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளை இறால், சாக்குக் கணவாய், கல்லுத் திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும். இழுவைப் படகுகளின் பாதிப்புகள் இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது. அவையாவன : மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல் கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றத்தை ஏற்படுத்துதல் கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகள் என்பவற்றை அழித்தல் மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியைத் தடைப்படுத்துதல் இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல். பல மணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதால் அதற்குப் பயன்படுத்தப்படும் பல நூறு லீற்றர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல். இதில் முதல் நான்குவகைப் பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரிடையே தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், மனித குலத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பமாகும். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மை கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை இதற்கு நிகராக மாற்றுத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை தவிர்த்து அதனை நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதற்குக் காரணம் கடலின் இயற்கையான பௌதீகத் தன்மைக்கு முரணாக ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும். இந்த இழுவைப்படகு தொழில் நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகன்ற முதற்பகுதி மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டி வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும். கடலடித்தளத்திலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவை மடியுடன் இணைக்கப்படும் இரும்புச் சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவைத் தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியின் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவை மடியை உருவாக்க முடியாது. கடலில் பெளதிகவியலுக்கு ஏற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரே நிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் தான் மிதந்தபடி இருக்கும், இதனால் மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்தத் தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இதனைக் கண்டுபிடித்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் இழுவைப் படகுப் பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர், அல்லது கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் ஜீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்களைப் பிடிக்கின்றன. இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களில் இருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்திய நாசகார மீன்பிடியால் இலங்கை வடகடல்சார் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் –சில உதாரணங்கள் உதாரணம் 1 : இந்திய இழுவைப்படகுகள், எழுவைதீவுக்கும் காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்களைப் பிடிப்பதனால், ஊர்காவற்துறை – பருத்தியடைப்பு – மெலிஞ்சிமுனை – கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில், கடந்த ஆறு வருடங்களாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில், 2003 ஆம் வருட கணக்கெடுப்பின்படி, மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் சராசரியாக ஒவ்வொருவரும் 45 கிலோ கணவாய்களைப் பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய்ப் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி, 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயை மட்டுமே மாதாந்தம் பிடித்துள்ளனர். கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே இவ்வாறு பிடித்துள்ளனர். பிடிபாடு குறைந்ததால், பெரும்பான்மையானோர் தை மாதத்தின் பின் களங்கண்டித் தொழிலையே நிறுத்திவிட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் மந்தமானதற்கு இந்திய இழுவைப்படகுகளே நேரடிக் காரணமென தொழிலாளர்கள் குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும் காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைக் காடுகளிலும் சாட்டாமாறுப் புதர்களிலுமே கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால், முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறைத் தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறன. இழுவைப்படகுகள், முட்டையிடும் கணவாய்களை வகைதொகையின்றிப் பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும் சாட்டாமாறுகளையும் அழிப்பதனால், கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர்களின் கருத்து மட்டுமல்ல; செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும். உதாரணம் 2 : ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து, கடற் தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப் படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக் கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதால், அவை வேறு பகுதிக்கு புலம் பெயர்ந்துவிடும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்துவிடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பலர், வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் (வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில்) விடுவலை, மற்றும் சிறையாவலையைப் பாவித்து, சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள், சிறையாக்களின் வாழ்விடமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன் பிடியில் ஈடுபடுவதனால், தற்போது விடுவலைத் தொழில் முற்றாக அழிந்துவிட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் . உதாரணம் 3 : காரைதீவு, கற்கோவளம் தொடக்கம் பருத்தித்துறை வரையான பகுதியின் கடலடித்தளம் சிங்கறால் வளர்ச்சிக்கான சாதகமான தன்மை கொண்ட பகுதி. இப்பகுதியில் சாட்டாமாறும் முருகைகளும் அதிகமாகவுள்ளன. முருகைகள், பதுங்கி இருக்கும் பொந்துகளைக் கொண்டதனால் சிங்கறால்கள் உற்பத்தியாகும் இடமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அதேபோல் மன்னாரின் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்குமான கடற்பிரதேசமும் சிங்கறால் உற்பத்தியாகும் இடங்களாகும். சிங்கறால் ஏற்றுமதி இலங்கையில் எண்பதுகளிலேயே ஆரம்பித்தது. மீன்பிடி குறைந்த சோழகக் காற்று வீசும் காலத்தில் தொழிலாளிகள் வள்ளங்களில் சென்று நீரில் குழிபுகுந்து கைகளாலேயே இந்த சிங்கறால்களைப் பிடிப்பர். ‘ஒரு இறால் பிடித்தால் ஒரு நாள் சீவியத்திற்கு காணும்’ என்பார்கள் இப்பிரதேசத்தில் தொழில் செய்யும் தொழிலாளிகள். இன்று சிங்கறால் இந்தியாவில் இருந்து சிங்கபூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பல கோடி அந்நியச் செலவாணியை இந்தியர்கள் சம்பாதிக்கின்றனர். சிங்கறால் உற்பத்தியாகும் கடல் பிரதேசம் பெருமளவில் இலங்கையின் வடபகுதியிலேயே அமைந்துள்ளது. இதனாலேயே, மீனைவிட பெறுமதி வாய்ந்த சிங்கறாலைக் குறிவைத்து, பல நூற்றுக்கணக்கான இந்திய நாசகார இழுவைப்படகுகள், மேற்கூறியபிரதேசங்களில் இழுவைமடியை உபயோகித்து சிங்கறால்களைப் பிடிக்கின்றன . ஏற்றுமதிக்கு தகுதியான சிங்கறால்கள் உயிருடன் பிடிக்கப்படல் வேண்டும். ஆகவே கையால் பிடிப்பது அல்லது இழுவைமடி மூலம் பிடிப்பது போன்ற இரண்டு முறைகளே உண்டு. வலை மூலம் முயன்றால் கால்கள் உடைந்து அவை இறந்து விடும். இலங்கையில் இழுவைப்படகு தடைசெய்யப்பட்டுள்ளதனால் தொழிலாளிகள் கைகளாலேயே சிங்கறால் பிடிப்பது வழக்கம். இது இயற்கை சார்ந்து, கடல்வளத்திற்கு பங்கமேற்படாமல் செய்யப்படும் தொழிலாகும். இந்தியர்கள் எல்லை கடந்து இழுவைமடி மூலம் பல இலட்சம் பெறுமதியான இறால்களை பிடிக்கின்றனர். தான் அமர்ந்திருக்கும் மரக்கொப்பை தானே வெட்டுவதைப் போன்ற இக் கண்மூடித் தனமான செயல், சிங்கறாலது எதிர்கால உற்பத்தியையும் அதற்கு ஆதாரமான கடலடித்தள தாவரவியலையும், முருகைகளையும் அழிக்கின்றது. பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில், இழுவைமடி மூலம் சிங்கறால் பிடித்த இந்திய இழுவைப்படகுகளையே அந்தப்பகுதி தொழிலாளிகள் சிறைப்பிடித்தனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்று. உதாரணம் 4 : இந்திய இழுவைப்படகுகள் இலங்கையின் வடகடலின் கரையோரத்தில் மடியிழுப்பதால் பாதிப்படைவது சிங்கறால் வளர்ச்சியும், கடலடித்தள தாவரவியலும் மட்டுமல்ல; ஐப்பசி மாதத்திலிருந்து சித்திரை வரையான, மாரிக்கும் வசந்த காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், கரையோரம் வரும் கட்டா – பாரை – சூவாப் பாரை – கருங்கண்ணிப் பாரை – காலை – அறுக்குளா போன்ற பதினைந்து வகை இன மீன்களை நம்பி, அறக்கொட்டியான் வலை பாவித்து தொழிலில் ஈடுபடும் 6000 தொழிலாளிகளுமே. இழுவைப்படகுகள் மேற்படி தொழிலாளர்களை இரண்டு வகையில் நேரடியாகப் பாதிக்கின்றன. முதலாவது, மேற்கூறிய மீன்கள் பருவகாலத்தில் கரைப்பகுதிக்கு வரமுன்பே, ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் தமது பாரிய பிடிதிறன் மூலம் மீன்களைப் பிடித்தல். இதனால் கரையோரப் பகுதிக்கு வரும் மீன்களின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதிலிருந்தும் தப்பிவரும் மீன்களையும் இவர்கள் கரையோரமாக சிங்கறால்களுக்காக மடி இழுக்கும் போது அள்ளிவிடுகின்றனர். இரண்டாவது, மீதமாக இருக்கும் மீன்களைப் பிடிக்க தொழிலாளர்களால் படுக்கப்படும் வலைகளையும் இந்திய இழுவைப்படகுகள் வெட்டி அழித்துவிடுதல். இவ்வாறு, இலங்கை மக்களுக்குச் சொந்தமான கடல்வளங்களைக் களவாடுதல் மட்டுமல்லாமல், அவர்களின் பல இலட்சங்கள் பெறுமதியான படுப்புவலைகளை வெட்டுவதன் மூலம் பொருளாதார நஷ்டத்தையும், வறுமைச் சுமையையும் எம் தொழிலாளிகள் மீது இந்தியர்கள் சுமத்துகின்றனர். உதாரணம் 5 : இதே அடிப்படையில் தான், மன்னார்ப் பகுதியில் கரைவலைத் தொழில் செய்யும் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்படுகின்றனர். கரைவலைத் தொழிலானது, வெள்ளம் நுகைக்கும் போது கரைக்கு கூட்டமாக வரும் மீன்களை வலையால் வளைத்து, பின்பு அவ்வலையை கரைக்கு இழுக்கும் தொழில்முறையாகும். இந்திய இழுவைப்படகுகள் அம்மீன்கள் கரைக்கு வருமுன்பே கரையிலிருந்து ஒரு கடல் மைல் தூரத்தில் பிடித்து விடுவதனால், கரைவலைத் தொழிலும் அது சார்ந்து வயிற்றைக் கழுவும் தொழிலாளிகளின் குடும்பங்களும் பாதிப்படைக்கின்றன. வடபகுதியில் கரைவலைத் தொழில் செய்வோர் மிகவும் வறிய நிலையிலுள்ள தொழிலாளர்கள் என்பதை இங்கு நாம் நினைவிற் கொள்வது நன்று. தொடரும். https://www.ezhunaonline.com/surpassed-of-indian-fishermen-into-sri-lankan-boarder2/
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல்வாதியை பார்த்து கேள்வி கேட்பது குற்றமா ? அனால் அங்கு நடந்தது என்ன கேள்வி கேட்டவர்களை கூட்டத்தில் இருந்து போலிஸ் வெளியேற்றி உள்ளது இதை அங்குள்ள புதிய விருசுவானம் அனுரா ஏன் அந்த போலீஸ்காரர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை அவர் எடுக்கமாட்டார் என்பதும் நமக்கு தெரியும் இதன் பின் அங்கு ஒழுங்கான தேர்தல் நடந்தது என்று யார் நம்புவார்கள் ? -
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சுமத்திரன் எப்படியும் சுத்து மாத்து பண்ணி உள்ளே வந்து விடுவார் என்று பலவாரங்களுக்கு முன்னே எழுதி விட்டேன் இப்ப என்ன புதுசா எழுதுவது இப்பவும் சொல்கிறேன் அவர் தமிழ் மக்களின் மேல் சவாரி செய்ய வந்த கொள்ளைக்காரன் புலத்திலும் சரி நிலத்திலும் சரி தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவர் இந்திய இலங்கை அதிகார சக்தி களால் வெல்ல வைக்கபட்ட ஒரு கோடாலி காம்பு இம்முறையும் அவர் வெல்வார் அவர் வெல்லாமல் போனால் உண்மையிலே தேர்தல் நடந்து இருக்குது என்று அர்த்தம் அதோடை அவரின் சொல் போல் அமைதியாக அரசியல் ஓய்வு போக சொல்லுங்க இல்லாவிடின் அவரின் ஒவ்வொரு கூட்டம்களும் தமிழ் மக்களின் கல்லெறி வாங்கும் கூட்டமாக இருக்கும் . -
இந்த கட்டுரை ஒருவருடத்துக்கு முன் வந்தது காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கபடுகிறது . ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடந்தபடி இருந்தன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்பார்த்தபடி எந்தவித உடன்பாடுகளையும் எட்ட முடியவில்லை. எனினும், தீர்வொன்று கிடைத்தால், தமது ஆட்சிக்கு உட்படப்போகும் பிரதேசங்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உடன்பட்டார்கள். இதன் பின்னணியில் பல பொருளாதார நலன்களையும் மற்றும் சில தொடர்புச் சாதனங்களையும் அதற்கான கருவிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நோர்வேயின் மேற்பார்வையில் பல நாடுகள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதற்காக முதலீடுகளைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில், அந்த அபிவிருத்திகளின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், அவை தொடர்பான துல்லியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நோர்வே தயாரிப்புகளில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் நோர்வேயைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி சம்பந்தமான வரைவுகளை மேற்கொண்டன. இந்த வகையில் இரு ஆய்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அவையாவன, போர் நடக்கும் பிரதேசங்களில் தமிழ் இளையோரும் தற்கொலையும், வடக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலின் இன்றைய நிலையும் அதன் சவால்களும், என்பவையாகும். இதில், முதலாவது தவிர இரண்டாவது ஆய்வு முற்றுமுழுதாக முடிக்கப்படவில்லை. ஆய்வின் தரவுகளை சேகரிப்பதற்கான களவேலைகள் மட்டுமே முடிந்து விட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டதனால் அது நிறுத்தப்பட்டது. ஆனால் கிடைத்த தரவுகளை அடிப்படையாக் கொண்டு 2011 இல் தமிழில் இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகளில் அரைகுறை கட்டுரைத் தொடர்களை எழுதி வெளியிட்டேன். இதன் திருத்திய மறு வெளியீடு (17.05.2018) தமிழரங்கம்.com மற்றும் ndpfront.com இணையங்களில் வெளியிடப்பட்டன. அவை இன்றுவரை பலரால் அவரவர் அரசியலுக்கேற்ப பாவிக்கப்படுகிறன. அவ்வாறு எழுதிய கட்டுரையில் ஒன்றே இங்கு வெளியாகின்றது. இந்தக் கட்டுரை எழுதிய காலம் சில வருடங்களுக்கு முன்பு என்றாலும், இதன் பேசுபொருள், உள்ளடக்கம், மற்றும் தரவுகள் அனைத்தும் இப்போதும் எம் மீனவர் சமுதாயத்தின் தீர்க்கப்படாத, எரிந்து கொண்டிருக்கும் சமுதாயத் தீயின் வெளிப்பாடாகவே உள்ளன. அறிமுகம் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறைப் போர் இராணுவ ரீதியில் முடிவுக்குவந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகின்றது. ஆனாலும், தமிழ்பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மையிலோ, உக்கிரத்திலோ எந்தவித காத்திரமான மாற்றங்களும் நிகழ்ந்து விடவில்லை. இனவாத ஒடுக்குமுறையானது பல புதிய வடிவங்களில் இன்னும் தொடர்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் பாரம்பரிய விவசாய நிலங்களும், காடுகளும், கரம்பைகளும் அபகரிக்கப்படுகின்றன. சர்வதேசப் பொருளாதார உதவி மற்றும் முதலீடு என்ற பெயரில் மேலாதிக்க நாடுகளுக்கு எமது தேசத்தின் (ஒட்டுமொத்த இலங்கையின்) வளங்களை, ஆளும் இனவாத சக்திகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளென தம்மைக் கூறிக்கொள்வோரும் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் விற்கின்றனர். இது ஒரு புறமிருக்க, நம் தேசத்தின் கடல் வளங்கள் கேட்க எவருமின்றி கொள்ளையடிக்கப்படுகிறன. இந்தக் கொள்ளைகள் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாயில்லை. தமிழ் மொழிப் பாரம்பரியத்தில் நிலங்களையும் அல்லது பாரம்பரிய வாழ்நிலைப் பிரதேசத்தை – அதாவது தேசத்தின் நிலத்தை – அவற்றின் அமைப்புக்கு ஏற்பவும், உபயோகத்திற்கு ஏற்பவும், அதன் கலை – கலாசாரம், வாழும் பண்பாடு சார்ந்தும் முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என வகைப்படுத்தி உள்ளனர். ஆனாலும், பொதுப் புத்தியின் ஆதிக்கத்தால் மக்கள் தேசம் என்பதை நிலம் என்று மட்டுமே விளங்கிக் கொள்கின்றனர். இங்கு, கடலும்-கடல் சார்ந்த பிரதேசமாக வகைப்படுத்தப்படும் நெய்தல் நிலத்தின் அரைப்பகுதியான கடல் சார்ந்த நிலப் பகுதி (கரையோர நிலங்கள்) மட்டுமே தேசமென்ற வரையறைக்குள் மக்களால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள கடற் பிரதேசமும் அதன் வளங்களும் ஏதோ அந்நியமானதொன்றாக – எடுப்பார் கைப்பிள்ளையாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், சமூகப் போராளிகளும், தேசியவிடுதலைப் போராளிகளும் கூட “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற அரைகுறைப் புரிதலைக் கொண்டிருந்தால், அந்தத்தவறான புரிதல் பாரிய எதிர்மறைத் தாக்கத்தை அந்தத் தேசத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்தும். இலங்கையைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ள சிங்களமொழி பேசும் மேலாதிக்க இனவாத சக்திகள் முதல், தமிழ்பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் போராடுபவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற வரையறைக்குள் நின்று கொண்டே அரசியல் செய்கின்றனர். மேற்கூறிய சக்திகள் ஏதோ விளங்காத்தனமாக இப்புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இப்புரிதல் இவர்களின் அரசியற் கொள்கை மற்றும் பொருளாதாரச் சிந்தனையை சார்ந்ததாகும். சந்தர்ப்பவாத அரசியற் பாதைகளையும், ஆதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து, அவர்களின் அடிவருடி, அவற்றில் தங்கிவாழும் அரசியலை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின் வெளிப்பாடுகளேயாகும். மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து, அவர்களை நிரந்தரப் பொருளாதார அடிமைகளாக்கும், தமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் சக்திகளான, விதேசியவாதிகளான இவர்களிடம் வேறு எந்த வகையான ‘தேசியப்’ புரிதலை எதிர்பார்க்க முடியும்? பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பது போல, இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியக் கடற்பிரதேசம் இன்று இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கின் மீன்பிடிச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் எல்லாவகை செயற்பாடுகளும், முயற்சிகளும் இவ் இந்தியக் கடற்கொள்ளையால் மூர்க்கமான முறையில் கருவிலேயே சிதைக்கப்படுகிறன. இந்தியாவின் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், ஏன் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும் கூட இந்தியக் கடற்கொள்ளையை எல்லா வகையிலும் ஆதரிக்கின்றனர். பொதுவாக இந்தியர்கள் தமது தேசநலன் சார்த்த விடயத்தில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவாத அரசியலைத் தோற்கடித்து, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறப் போராடுவதாக ‘தமிழ்த் தேசியத் தலைவர்கள்’ கூறுகின்றனர். தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அரசியற் சக்திகளான இவர்கள், மேலாதிக்க இந்திய அரசுக்கு வால்பிடிக்க முயல்வதுடன், தென்னிந்திய தமிழ் இனவாதிகளான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற சீரழிந்த மூன்றாந்தர அரசியல்வாதிகளை இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். மறுபுறத்தில், இடதுசாரிகள் எனவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்பவர்கள் எனவும் தம்மைக் கூறும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர், இந்தியக் கடற் கொள்ளைக்குத் துணைபோகும் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) போன்ற ‘இடதுசாரித்துவம்’ பேசும் இந்திய அமைப்புக்களை, எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் புரட்சியின் நட்புச் சக்திகளாகவும், பங்காளிகளாகவும் மதித்து, அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி அரசியல் செய்கின்றனர். மேற்படி காரணங்களினால் இலங்கைத் தமிழினவாதிகளும், புலம்பெயர் ‘புரட்சிக்காரர்களும்’ இலங்கையின் கரைகளில் நடைபெறும் இந்தியர்களின் நாசகார மீன்பிடியை மூடி மறைத்து, இந்திய மீன்பிடிசார் பெரும் மூலதனக்காரர்களுக்கு சார்பாக நடாத்தும் அரசியலைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாய் உள்ளனர். புலிகளின் பின், ஏகப்பிரதிநிதித்துவம் கதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியக் கடற்கொள்ளைக்கு எதிராக இது வரை ஓர் அறிக்கை கூட விடவில்லை. இந்த நிலைமை ஏன்? இந்தச் சந்தர்ப்பவாத, மெளன அரசியலானது இந்திய ‘நாசகார மீன்பிடியால்’ பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களில் பெரும் பகுதியினரின் நாளாந்த சீவியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகளுடன் நின்று கடைசி வரை போரிட்ட பல போராளிகளும், அவர்கள் சார்ந்த சமூகங்களும் என்பதுதான். இலங்கை இனவாத அரசுக்கும், அதற்கு ஆதரவான அரசியல் சக்திகளுக்கும் எதிரான மனப்பான்மையுடன், ‘தமிழ் தேசிய உணர்வையும்’ கொண்டதாக இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் நின்றார்கள். ஆனால் இன்றுள்ள தமிழ்த் தரகுகளுக்கும் இனவாதிகளுக்கும் திடீர் அரசியல்வாதிகளுக்கும் இன்று இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் தேவையில்லாத பொருளாகப் போயுள்ளனரா? சிறு மனிதாபிமான தளத்தில் நின்று கூடவா இவர்களால் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதுள்ளது? வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1970 – 1977) பதவிக் காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடித் தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டன. இந்தக்கடன்கள் மூலம் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மர வள்ளங்களும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களும், வலைகளும் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டன. அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித் தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள், சிறு வள்ளங்களுக்கும் கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரைகடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலன்களை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கியமான காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம் : தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைந்த தனிநபர்களுக்கு இடையிலான வட்டிக்கு வழங்கும் முறை இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தமை. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர்கள் மரப்படகு கட்டும் தொழில் நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தான் பிற்காலத்தில் ஜா-எல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்களத் தொழிலாளர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.) நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனமானது காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடி நார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களைப் பெற முடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும், தொழிலாளர்களும் தென் இலங்கையருக்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக ஜா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடி நார் இழைப் படகுகளை தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் பயன்படுத்தின. அந்தப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி, புளொட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம், புளொட் இயக்கத்தாலும் புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.) மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் (Continental Shelf) ஆழ்கடலுக்கும் பரவைகடல் / களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றரில் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே, இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தள மேடை கேரளக் கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கியமான மீன்பிடிப் பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் வாழ்வதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டன. இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி, வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது.1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்திருந்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்தச் சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 1983 ஆம் ஆண்டில் மொத்தமாக, உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 உம், வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2,600 உம், மரவள்ளங்கள் 3,865 உம் இருந்தன. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப் படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மர வள்ளங்களாலேயுமே பிடிக்கப்பட்டன. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தம் காரணமாக வடபகுதி ரோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. வடபகுதியில் இருந்த ரோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே. வடபகுதியின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல, வலைப்படுதலேயாகும். இவ்வலைகளின் கண்கள் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீற்றர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீற்றர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தன. கண்ணாடி இழைப் படகுகளில் தொழில் செய்தோர், 3 இஞ்சி கண்விட்டத்திலிருந்து 5 இஞ்சி கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாகச் செய்யப்பட்டது. இவ்வாறு ஒப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடித் துறை, 1983 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்த காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக, சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், 1995 இறுதியில் போர் காரணமாக மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வன்னிக்குச் சென்றபோது, யாழ். மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உட்கட்டுமானமும் முற்றாக அழிக்கப்பட்டன. மன்னாரின் நிலையும் அதேபோன்று, படகுகள் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது. இன்று வடக்கின் மீன்பிடித் துறையானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும்,1800 மர வள்ளங்களையும்,120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக் கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் ரோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டின் மீன்பிடி : சிறு வரலாற்றுப் பார்வையும் சில தரவுகளும் தமிழ்நாட்டின் மீன்பிடி, உள்நாட்டு உணவுக்காகப் பயன்தரும் வளமாகவே பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் இந்திய மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின்படி அது சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில், நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன், அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப் படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான நவீன பொறிமுறையைப் பாவிப்பதன் மூலம், உற்பத்தித் திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 ஆம் ஆண்டளவில் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித் திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72,644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18,131.4 மில்லியன்) இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளன. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடித் துறையானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது. ஆனால், மீன்பிடியால் பெறப்படும் செல்வம் முக்கியமாக யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் இந்திய அரச திட்டத்தில் கூறப்பட்டதோ, அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடித் துறை மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள், இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமே. அரச மீன்பிடித் திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச இயந்திரத்தின் இலஞ்சக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானது எனலாம். நோர்வே அரசினால் ரோலர் இழுவைப் படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்க்கை, பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியைத் தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர்கள் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்குத் துணைபோன நோர்வே அரசு, தனது கேரள அபிவிருத்திச் செயற்திட்டத்தை ஆய்வுசெய்தது. அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கை வள அழிவுக்கும் வழிவகுத்ததென, ஐக்கிய நாடுகள் சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத் தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ‘ஒரு நாட்டில் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளக்கூடாது’ என்பதற்கு சிறந்த உதாரணமாகவுள்ளது. ஆனால், இவை எவற்றையும் கணக்கில் எடுக்காது, இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும், கேரளாவில் சமூகப் பாதிப்பையும் இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி, ஒரு சில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தின. அதன் விளைவு, பஞ்சத்திலும்கூட அடுத்தவருக்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமை மிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரப் படகுகளில் நாட்கூலிகளாக ஆக்கப்பட்டனர். மேற்கூறப்பட்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடித் தளமேடையில், நாகப்பட்டினம் வடக்கில் இருந்து இராமேஸ்வரம் தெற்கு வரையாக, சுமார் 480 கிலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களே இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து, நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கரையோரப் பிரதேசத்தில் சுமார் 43 சதவீதமாகும். அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1,465 ரோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 ரோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1,865 ரோலர்களில் 980 ரோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றன.) – அதாவது மொத்தமாக 3780 இந்திய ரோலர்கள் – பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்தத்தகவல் 2002 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதிக் கொம்பனிகளுக்கும் சொந்தமானவையாகும். இதைவிடவும் இந்தப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12,500 மரவள்ளங்களும், 19,500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறன. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளைப் பாவித்தே மீன்பிடிக்கின்றனர். தொடரும். About the Author மரியநாயகம் நியூட்டன் சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார். https://www.ezhunaonline.com/surpassed-of-indian-fishermen-into-sri-lankan-boarder/
-
மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
பெருமாள் replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
இன்னுமொன்றும் உள்ளது அரசியலை விட்டு ஓடுறேன் என்பது . -
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அரசியல் ஒரு சுத்து மாத்து நான் அடிக்கிறது போல் பாய்வன் நீ விலகுவது போல் விலகனும் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் மறைவாக தண்ணியடிக்கும் இடங்களில் முடிவு செய்வது அவர்கள்தான் . -
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இதுவே ஒரு சாதாரன ரோசம் மானம் சோத்தில் உப்பு போட்ட மனிதர்களுக்கு நடந்து இருந்தால் தனக்கு தானே தூக்கு போட்டு செத்திருப்பான் . -
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு கேவலமாய் அசிங்கபட்டு மக்களிடம் பேச்சு வாங்கி கேவலமான அரசியல் செய்து அடிவாங்காத குறையாக புலம்பெயர் தேசங்களில் திரத்தப்ட்ட அரசியல் வாதி சுத்துமாத்து சுமத்திரன் ஆகத்தான் இருக்கும் . -
எந்த காலமும் எண்டாலும் தமிழருக்கு தேவையானது என்ன அதை கொடுத்ததால் ஒரு பிரச்னையும் இல்லை தமிழர் சுய உரிமையுடன் வாழத்தானே போராடுகிறார்கள் உங்கள் அரசியல் வாதிகள் தானே தேவை அற்று இந்த தீவை நாசமாக்கினார்கள் ? இப்பவே என்றாலும் இந்த அனுரா உண்மையான பிரச்சனையை அறிந்தால் நாடு சுபிட்சமாகும் இல்லா விட்டால் சுடு காடாகும்
-
தமிழ் சினிமா போல் ஒரு கேவலம் உலகில் எங்கும் கிடையாது இன்னி வரைக்கும் எந்த நீச்சல் பாய்தலிலும் வண்டி அடிபட த்தானே நாயகனும் நாயகியும் பாய்கிறார்கள் முதலில் அதை மாத்துங்கடா பார்க்கவே சகிக்கலே . மற்றபடி நாகேஷ் பற்றி சொல்வது என்றால் நிறைய சொல்லலாம் . தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த நடிகர் என காலம் கடந்தும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நாகேஷ். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நாகேஷ் அவர்களின் பூர்வீகம் மைசூர்.
-
வணக்கம் வில்லவன்... தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.