Everything posted by பெருமாள்
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இந்தியனை எங்கடை அரசியல்வாதிகள் நம்பும் அளவுக்கு சிங்களவர்கள் நம்ப போவதில்லை வழக்கம்போல் மகஜர் கொடுத்து விட்டு இங்கு வந்து அறிக்கை விட்டு குரைக்க வேண்டியதுதான் . இதெல்லாம் முடியமுன் டெல்லியின் அரசியல் சதுரங்க ராஜா வெட்டு பட்டு இருப்பார் .
-
இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்
யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது. அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது. எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் நெடுந்தீவு என்பவை சக்திவாய்ந்த இடங்களாக மாறபோகின்றன. இலங்கையுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளாலேயே தற்போது அமெரிக்கா விமானங்கள் குறித்த பகுதிகளில் தரையிறங்குவதை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. Tamilwinஇந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணம...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@நிழலி க்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
செட்டப் ஆக இருக்கலாம் .
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
உள்ளுருக்குள் நடக்கும் மீனவர்களின் ஒன்று கூடல்களுக்கு போய் அடிவாங்க முடியாத அடிமை அரசியல்வாதிகள் எஜமானர்களிடம் ஓடிசென்று ஒப்பாரி வைக்க போகினம் போல் உள்ளது . அந்த மீனவர்கள் சொல்வது போல் யாழில் வேலை வெட்டி இல்லாமல் ஏன் இந்திய தூதரகம் இருக்கு ? போதைபொருள் கடத்தலை ஒழுங்கு பண்ணி யாழ் இளையோர்களுக்கு வழங்கலை செய்யவா?
-
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம்
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து முடக்கிவிட்டது. அவ்வாறு முடக்கியதன் மூலம் இனப்படுகொலை என்ற எதிரியையும் அது சம்பாதித்து விட்டது. அதனை எவ்வாறு தமிழர் தரப்பு தமக்கு நலன் பெயர்க்கக்கூடிய வகையில் அறுவடை செய்வது என்பது தமிழ் மக்களின் வல்லமை சார்ந்தும், தகவமை சார்ந்தும் நிர்ணயம் பெறும். இது இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தும் போதைப்பொருள் யுத்தம் பற்றி ஆய்வது அவசியமானது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதனூடாக கட்டமைக்கப்பட்ட தமிழின படுகொலைக்கான கதவுகள் அகல திறக்கப்பட்டு விட்டது. ஆயுதமுனையில் இனப்படுகொலை அரசு என்பது பல முகங்களைக் கொண்ட அதிகார நிறுவனம். இந்த நிறுவனம் சட்டம் நீதி நிர்வாகம் ஆயுதப்படை என்ற கட்டமைப்புகள் மாத்திரமன்றி ஊடகங்கள், வங்கிகள், திணைக்களங்கள் என பல்வகை நிறுவனங்களை கொண்டு இயங்கும் ஒரு செயலாற்றல் மிக்க தாய் நிறுவனம். அந்தத் தாய் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை தன்னுடைய விருப்புக்கு ஏற்றவாறு வளைத்தும், நிமித்தியும் தமிழினப் படுகொலையை வெற்றிகரமாகச் செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும். தற்போது சிங்கள பௌத்த அரசு என்கின்ற செயல் பூர்வமான அந்த நிறுவனம் ஆயுதமுனையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையும் விட ஆயுதமற்று திட்டமிட்ட ரீதியில் தமிழினத்தின் பண்பாட்டையும், அதன் பண்பாட்டு விழுமியங்களையும், உள்ளார்ந்த சமூகத் திறனுக்கு மூளை சாலைகளையும், செயல் திறன்மிக்க அவ்வினத்தின் முன்னுதாரணமான முற்போக்கு சிந்தனை மூளையை அரித்து அழிப்பதுதான் தமிழினத்தை இல்லாத ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட மூலோபாயமாக கொண்டுள்ளது. அமையும் அத்தகைய மூலபாயத்தைதான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு கையாள்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து இப்போது போதைப்பொருள் ஒழிப்பு என அனுர அரசாங்கம் தனது பாதையை திருப்பி உள்ளது. அதே நேரத்தில் தம்மை இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு வலதுசாரிகளாக செயல்படுகிறது மட்டுமல்ல பௌத்த மகா சங்கத்திடமும் சரணடைந்துள்ளது. சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து இலங்கையில் இனவாதம் வேண்டாம், இனி ஒருபோதும் இன வாரத்துக்கு இடமில்லை என்றெல்லாம் இதே ஜேவிபினர் முழக்க முட்டனர். இப்போது தமிழர் தாயகத்தில் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதில் முழு வேகத்துடன் செயல்படுகிறது. முக்கிய அமைச்சர்கள் இது பௌத்த நாடு இது புத்தரின் பூமி என்கிறார்கள். இந்தியாவில் பிறந்த புத்தருக்கு இலங்கை தீவு எப்படி கிடைத்திருக்கும்? என சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து கேள்வி கேட்கும் நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து பெருமெடுப்பிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் "எண்ணெச் செலவுதான் பிள்ளை வளர்ச்சி இல்லை" என்ற தமிழ் பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என கிளம்பி அது தடம் புரண்ட நிலையில் இப்போது "போதைவஸ்து ஒழிப்பு என புறப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய இவர்களின் செயல் நடவடிக்கை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி ஆராய்வது அவசியமானது. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டத்தின் ஆயுத பலத்தை மாத்திரமே முடிவுக்கு கொண்டு வந்தது. ஆயினும் ஆயுதப் போராட்டம் தந்த வலிகளில் இருந்து எழுந்து பலமான ஒரு ஜனநாயக முறைமை தழுவிய அரசியல் போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தக்கூடாது என்பதற்காகவே தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனை அரசினுடைய அனுசரணையுடன் முப்படைகளும் தமது முகவர்கள் மூலம் ஊக்கிவித்தனர். அவ்வாறு போதைப்பொருள் பாவனை வட - கிழக்கில் அதிகரித்து ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் குறிப்பாக பாடசாலை மட்டத்திலான இளம் தலைமுறையினது மூளைகளை அழிக்கவும், அவர்களை முடக்கவும், அடிமையாக்குவதற்காகவே போதைவஸ்து விநியோகம் அரச ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு “எதிரிக்கு மூட்டியது தீ எதிரியை சுடுவதிலும் விட உன்னையே அதிகம் சூடும்“ என்ற சீன பழமொழிக்கு இணங்க சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்ட போதைவஸ்து விநியோகம் ஒரு கூட்டு விளைவை ஏற்படுத்தியது. அது வட-கிழக்கை தாண்டி தென்னிலங்கை நோக்கி மிக வேகமாக பரவத் தொடங்கியது. அரச முகவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, கடத்தல் என்பன சிங்கள தேசத்தில் மிக வேகமாக அதிகரித்து சிங்கள தேசத்தின் இளைய தலைமுறையை சீரழிக்க தொடங்கியது. இந்தப் பின்னணியில் சிங்கள தேசத்தை பாதுகாப்பதற்கு அதற்கு வழங்கலாக இருக்கக்கூடிய வடக்கின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இத்தனை விற்பனையாளர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் நிமித்தமே வட பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர்களும், கடத்தல் காரர்களும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு இலங்கை அரசை தள்ளியுள்ளது. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த 16 ஆண்டுகளும் வடபகுதியில் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகவும், சமூக சீர்கேடுகளின் மூலகர்த்தாக்களாவும் மாற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டத்தை இளைஞர்கள் நினைத்தும் பார்க்கக்கூடாது. இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு தென் இலங்கையை தாக்குகின்ற போது அதனை தடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படையில்தான் கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் வடகிழக்கில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவது என்பது தென்னிலங்கை நோக்கிய கஞ்சா வியாபாரிகள் மாத்திரமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழர் தாயகத்தின் கஞ்சா வியாபாரிகள் யாரும் இங்கே முடக்கப்படவுமில்லை கைது செய்யப்படவுமில்லை என்பதிலிருந்து இலங்கை அரசனுடைய போதைப்பொருள் ஊக்குவிப்பை உணர முடியும். Tamilwinஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் - தமிழ்...ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து மு...
-
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கேட்ட மனோ! அர்ச்சுனாவின் அறிவுரை
உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என ராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ கணேஷன் எம்.பியிடம் கேட்டுக் கொள்வதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கண்டியில் மனோ கணேஷன் எம்.பி மலையகத்தில் காணி இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகளை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிடிருந்தார். மலையக மக்களுக்கு அன்பான கோரிக்கை அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்கள் எங்கள் இரத்த உறவுகள், அவர்களை பார்த்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும். அதனால் உங்களுக்கு மலையகம் வேண்டாம், வவுனியா, யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம். மனோ கணேஷன் எம்.பியின் தந்தை ஒரு நடிகர் என்பதால் அவர்களுக்கு பரம்பரை சொத்து இருக்கிறது தானே. அதை விற்று அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள். பின்னர் நாங்கள் புலம் பெயர் தமிழர்களிடம் காணிகளை பெற்றுத் தருகிறோம். புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தில் தமது உறவுகளை இழந்து தப்பிப் பிழைத்த ஒரு சிலரே புலம் பெயர்ந்து கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். அதனால் நீங்கள் முன்னுதாரணம் காட்டுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். Tamilwinபுலம்பெயர் தமிழர்களிடம் காணி கேட்ட மனோ! அர்ச்சுனாவின் அறி...உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் த...
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
கோத்தபாய கொர்நோவுக்கு எதிராக அந்த மந்திரித்த தண்ணியை இலங்கை ஆறுகளில் கலந்த முட்டாள்தனத்தை விமரிசித்த போது புலியை அடக்கின மனுஷன் கொர்னோவையும் வெல்வார் என்று இதே யாழில் கோத்தபாயவுக்கு புகழ் பாடியோருக்கு இப்பவும் உண்மையை சொன்னால் சுடும்தானே .😁
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக தமிழ் மக்களின் இழவு வீட்டில் ஒரு சதமும் செலவழிக்காமல் வாயால் வடை சுடுகிறார் சுமத்திரன் அவருக்கு இங்கு கொஞ்சம் தார தப்பட்டையுடன் பொழிப்புரை ஆற்றுகினம் அரசியல் சூனியங்கள் . இங்கு உண்மையான கரிசனை மலையக மக்களின் மேல் இல்லை சுமத்திரன் எப்படியாவது என்ன பொய் சொல்லியும் தேர்தலில் ஒரு முறையாவது வென்று விடனும் அதுதான் இங்குள்ள சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உண்மையான கரிசனை அந்த மக்கள் மேல் இருந்து இருந்தால் அந்த மக்களுக்காக இதுவரை சுமத்திரன் ஏதாவது சிங்கள அரசுகளிடம் கதைத்து இருக்கிறாரா ?
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
மேல் உள்ளது உண்மையோ பொய்யோ என்று யோசிக்க முன் கொர்னோ தொத்து தொடங்கும் போது பக்கத்து வல்லரசு என்று தங்களுக்கு தாங்களே சொல்லி கொள்பவர்கள் தாரை தப்பட்டை மணி போன்றவற்றை அவர்களின் நாடு முழுக்க ஒரே நேரத்தில் அடித்து கொர்னோவை வெற்றி கரமாய் கலைத்தவர்கள்😁😁அதே போல் மந்திரித்த தண்ணியை இலங்கை ஆறுகளில் கலந்து கொர்னோவை ஒரேயடியாய் கலைத்த வீரர் கோத்தபாய ராஜபக்சா 😁இப்படியான முட்டாள்கள் இன்னமும் இருக்கிறார்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் அப்படியானவர்களுக்கு மேல் உள்ள ஆக்கம் நல்ல தீனி எங்களுக்கு பொழுது போக்கு .
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் விஜயன், தன்னுடைய இரு குழந்தைகளையும் அரண்மனையில் விட்டுவிட்டு குவேனியை எங்காவது சென்றுவிடும்படி கூறுகின்றான். இதனால் மனமுடைந்த குவேனி தன் இறுகுழந்தைகளையும் அழைத்துக்கொண்டு “லங்காபுர “எனும் இடத்திற்கு செல்ல, அங்கே அவளது குலத்தவர்களே அவளை கொலை செய்ய முயல்கின்றனர் அங்கிருந்து தப்பியோடும் குவேனியின் குழந்தைகளே இன்றைய இலங்கையின் ஆதிவாசிகளின் முன்னோர்கள் என கருதப்படுகின்றது. புகைப்பட உதவி: Facebook.com உண்மையில் விஜயனுக்காக பெரும் விலையைக் கொடுத்தவள் குவேனி. தனது இனத்தால் தனிமைப்படுத்தியதை ஏற்றுக் கொண்டது கூட விஜயனிடம் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். தனது இனத்தவர்களை (இயக்கர்களை) விஜயன் அழிக்க முடிவெடுத்தபோது அந்த அழித்தொழிப்புக்கு விஜயனுடன் ஒத்துழைத்தவள். விஜயன் தலைவனாவதற்கு உதவியவள். அப்படிப்பட்ட குவேனியால் விஜயனின் துரோகத்தை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள இயலுமா என்ன? அவள், தான் தற்கொலை செய்துகொள்ளும்முன் ஒன்பது சாபங்களை விடுகின்றாள், அந்த சாபங்கள்தான் இன்றுவரையில் இலங்கையை பாடாய்படுத்துகின்றது எனும் நம்பிக்கை சிங்கள மரபுவழி இன்றும் உள்ளது . அந்த ஒன்பது சாபங்கள் ” இலங்கைத் தீவு நான்கு திசைகளாலும் அழிக்கப்படட்டும் ” எனும் முதல் சாபத்தின் பிரகாரம் சுனாமி போன்ற பேரழிவினை சிங்களவர்கள் குறிப்பிடுகின்றனர். “சாபுர்ன” என்றழைக்கப்படுகிற இரண்டாவது சாபத்தின்படி இலங்கைக்கு யார் எல்லாம் தலைமை தாங்குகின்றார்களோ அவர்கள் அழிந்து போகட்டும் என்பதே. மூன்றாவது சாபமான அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு சிக்கட்டும்” என்பதன்படி போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என ஆளப்பட்டு இன்று சீனா, இந்தியா, அமேரிக்கா என யாரின் பிடிக்குள் இருக்கின்றோம் என தெரியாமலே சிக்கியிருக்கும் சொப்பனசுந்தரி நிலையே இலங்கைக்கு. நான்காவதாக , ஹெல இனம் இரத்தத் தூய்மை இழந்து தனித்துவத்தை இழக்கட்டும் எனும் “பக்கி மவுரி” என்கிற சாபத்தின்படி இனத்தூய்மை இழந்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாக்காட்டுங்கள் என்கிற சபிப்பு ( சிங்கள வரலாற்றில் ஆட்சிக்காக எழுந்த சகோதர சண்டை காசியப்பன் முதல் ராஜபக்ஷே வரை தொடர்கின்றதோ என்னவோ), ஹெல தீவு இரண்டாகப் பிளந்து கடலுக்குப் பலியாகட்டும் எனும் ‘நிமி மினிச” என்கிற ஐந்தாவது சாபமானது இலங்கை இரண்டாக உடைந்து இறுதியில் சமுத்திரத்தில் மூழ்கட்டும் என்பதே, “தக்னிகா” எனும் ஆறாவது சாபமானது இலங்கையில் அறிவீனமான இனம் தோன்றட்டும் என்பதாகும் , ஏழாவது சாபமானது சூரியன், மழை, காற்று, கடல் மற்றும் நீர் என்பவற்றால் அனர்த்தங்கள் ஏற்படவேண்டும் என்பதே, குணமடைய முடியாததும் விரைவாக பரவக் கூடியதுமான நோய்களுக்கு எப்போதும் இலங்கை ஆளாகிக்கொண்டிருக்கட்டும் எனும் எட்டாவது சாபம், குவேனியின் இறுதி சாபம் என்னவென்றால், கடலில் மிதக்கும் மரக் குச்சி அலைகளுக்கு அகப்பட்டு இங்குமங்குமாக எந்தக் இலக்குமில்லாமல் இறுதியில் மூழ்கிவிடுவது போல எந்தக் கொள்கையும் இல்லாத மக்கள் இலங்கையில் உருவாகட்டும், அவர்கள் சிக்கி சீரழியட்டும் என்பதேயாகும் . விஜயனின் வருகை – புகைப்பட உதவி- www.Alchetron.com இலங்கை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு குவேனியின் சாபம் இன்றுவரை பலித்து வருவது தெரிய வரும். இலங்கையை ஆண்ட எந்த மன்னரும் இடையூறின்றி, நிம்மதியாக ஆட்சி செய்துவிட்டு மாண்டதில்லை. அவர்கள் அனைவருமே பீதியுடனும், போர்களுடனும், சதிகளை எதிர்கொண்டும்தான் ஆட்சி புரிய நேர்ந்தது. அது பண்டைய மன்னர்கள் தொடக்கம் இன்றைய நவீன அரசாங்கங்கள் வரை நீடிக்கின்றன என்பது கண்கூடு! மகா வம்சத்தின் (கிமு 543 கிபி 275) சிங்கள அரசர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பலவீனமானவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருந்ததை மகாவம்சத்திலிருந்தே காணலாம். இந்த வம்சத்தின் 54 மன்னர்களில், 15 பேர் ஓர் ஆண்டிற்கும் குறைவாகவும், 30 பேர் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாகவும், 11 பேர் அரியணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர், 13 பேர் போரில் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் அவர்களின் வாரிசுகளால் கொல்லப்பட்டனர். தொடக்ககால சிங்கள அரசர்களின் இருண்ட அவலமான பதிவு அரியணைக்கான இடைவிடாத போராட்டம், சகோதரக் கொலைகள், சதிகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் ஆகியன இடம் பெற்றன. குவேனியையும் அவளது பிள்ளைகளையும் விபரிக்கும் ஓவியம் – புகைப்பட உதவி- www.erasmusu.com சுதந்திர இலங்கையின் இன்று 73 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் இலங்கைத் தீவு வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாது ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியாக ஆட்சி செய்த ராஜபக்ஷே வம்சம் அசிங்கப்பட்டு வரை நிற்கிறது. நெருக்கடிகள் ஒன்றா இரண்டா? அவை வரிசையாக எழுந்து நிற்கின்றன. நிதித் தட்டுப்பாடு, உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம், கோவிட், விலைவாசி ஏற்றம் , உயிர் காக்கும் மருந்துகள் , உணவுப்பொருட்கள் உற்பட அத்தியாவசிய பொருட்கள் இன்மை போன்ற நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் எதிர் நோக்குகிறது. குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா என்ற கேள்வி எம்மை சிந்திக்கதான் வைக்கின்றது. https://archive.roar.media/tamil/main/history/kuwenis-curse
-
சகோதரருடன் திருமணம்... நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் அரசியல்வாதி
பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவர் எதிர்கொள்ள நேரிடும் என செனட்டர் டெட் க்ரூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெவ்வேறு சட்டங்களின் கீழ் முற்போக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமர், தனது சகோதரர் அமெரிக்கக் குடியுரிமை பெறும் பொருட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ள நிலையிலேயே செனட்டர் டெட் க்ரூஸ் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ள க்ரூஸ், கூறப்படும் போலித் திருமணத்திற்காக ஓமரை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வெளிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஓமர் மூன்று வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியேற்ற விதிகளைத் தவிர்ப்பதற்காக, தெரிந்தே திருமணத்தில் ஈடுபடுவதை எந்தவொரு அமெரிக்கருக்கும் ஃபெடரல் திருமண மோசடிச் சட்டம் தடை செய்கிறது. மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களின் சட்டங்களும் நெருங்கிய இரத்த உறவினர்களுக்கு இடையேயான திருமணத்தை தடை செய்கின்றன. மேலும், மினசோட்டா மாகாணம் இரத்த உறவுக்குள் பாலியல் உறவை ஒரு பெரும் குற்றமாகப் பட்டியலிட்டுள்ளது. அப்படியான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாத தம்பதிகள் கூட்டாக ஃபெடரல் வரித் தாக்கல் செய்வதைத் தடைசெய்யும் மற்றும் 100,000 டொலர் வரை அபராதம் விதிக்கக்கூடிய வரி மோசடிச் சட்டத்தை க்ரூஸ் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக ஓமரை வாட்டி வதைத்து வருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடந்த சமீபத்திய பேரணியில் பேசும்போது ஓமர் தொடர்பில் அந்த கருத்தைப் பரப்பிய பிறகு, அது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. குறித்த பேரணியில் பேசிய ட்ரம்ப், ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஓமர் இங்கே சட்டத்திற்கு புறம்பானவர், அவரை உரிய முறைப்படி வெளியேற்ற வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். உறுதி செய்யவில்லை கடந்த 2020ல் முதல் முறையாக ஓமர் தொடர்பிலான இந்த குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வந்தது. சோமாலிய சமூகத் தலைவரான அப்திஹகிம் உஸ்மான், 43 வயதான ஓமர் தனது இரண்டாவது கணவரான அகமது எல்மி என்பவரை, அவர் அமெரிக்காவில் தங்குவதற்காகவே திருமணம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதை எந்த ஊடகமும் உறுதி செய்யவில்லை என்றும், ஆனால் அவர்களது திருமணச் சான்றிதழ் 2021ல் வெளியாகும் வரையில் வெளியுலகிற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஓமர் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம் மதச் சடங்கின்படி அகமது ஹிரிசியை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. விவாகரத்திற்கு பின்னர், ஓமர், அகமது எல்மியை மத அடிப்படையிலான சடங்குகள் ஏதுமின்றி திருமணம் செய்துகொண்டார், பின்னர் 2011-ல் இருவரும் பிரிந்துவிட்டனர். ஓமர் 2012-ல் ஹிரிசியுடன் மீண்டும் இணைந்தார், மேலும் 2017-ல் எல்மியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார். ஓமரும் ஹிரிசியும் 2018-ல் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். மீண்டும் 2019ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஓமர் தற்போது டிம் மைனெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான ஓமர் சோமாலியாவின் தலைநகரில் பிறந்தவர், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். 12 வயதில் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்கு முன்பு, அவர் நான்கு ஆண்டுகள் அகதிகள் முகாமில் கழித்துள்ளார். ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துகொண்டதாக உறுதி செய்யப்பட்ட எந்த உத்தியோகப்பூர்வ ஆதாரங்களும் இதுவரை எவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Lankasri Newsசகோதரருடன் திருமணம்... நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்...பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவ...
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சிறு பிள்ளை தனமாய் கேட்டு கொண்டு இருக்க முடியாது இனி உங்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை .
-
மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
இதே இடத்தில் சிங்கள மீனவர்களின் வலைகள் அறுக்க பட்டால் சிங்கள கடல்படை பொங்கி எழுந்து இருக்கும் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ஆதாரத்தை சொல்லுங்க இருந்தால் தானே சொல்ல முடியும் .😁
-
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
இப்ப சிங்களவர்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சனை ? அகதி யாகனும் என்று ?
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தனிப்பட்ட அவதூறு அதை சொல்லுங்க பார்ப்பம் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதற்குள் இந்த திரிக்குள் தலைவரை தேவையில்லாமல் ஏன் இழுக்கிரியல் அவர் பேச்சுக்கு முன் செயல் இருக்கணும் என்று அதை செய்தும் காட்டியவர் . பின்கதவால் வந்த உங்கள் சுமத்து தான் மந்திரத்தால் மாங்காய் பறிப்பேன் தேங்காய் பறிப்பேன் ஒரு நாளில் உழுது நெல் சோறு பொங்கி சாப்பிடுவன் என்று நேரத்துக்கு ஒவ்வொரு கதை அறிக்கை விட்டுக்கொண்டு திரிகிறார். அந்த அண்டம் காக்கை ஒத்தை பனை கள்ளை குடித்து விட்டு கண்டபடி கரையுது எண்டால் உங்களுக்கு எங்கு போச்சு அறிவு ? சுமத்தை விட எவ்வளவே துடிப்பான இளையோர் அங்கு இருக்கினம் எங்கை வளர விடுகிரியல் போதைக்கு அடிமையாக்கி நான்கு தலைமுறையை நாசம் பண்ணி வைத்து இருக்கிறியள் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இப்படி ஒரேயடியாய் கட்சி மாறகூடாது சுமத்தினால் சானக்கியால் மாங்காயும் தேங்காயும் புடுங்க முடியாது என்று ஆரம்பம் முதலே சொல்வது இன்றுதான் உங்களுக்கு விளங்கி இருக்குது .😄
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
யாழில் உள்ள இந்திய தூதரகம் யாருக்காக குந்தி இருக்கினம் ?
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இறுதி சண்டையின் பின் வடகிழக்கு தமிழர்களுக்கு கிடைத்த சாபகேடுகளில் முதன்மையானது போரில் எந்த பக்கமும் சம்பந்தமில்லாமல் ஒளித்து கிடந்தவர்கள் கைகளில் தமிழர் களுக்கு தீர்வு பெற்றுத்தரும் அதிகார இயந்திரத்துக்கு பின்கதவால் உள்ளே கொண்டு வந்து தமிழர்களை நம்ப வைத்து மேலும் மேலும் சாணக்கிய சுமத்திர ரை தவிர வேறு ஒருத்தராலும் தமிழர் களுக்கு ஒரு மாங்காய் கூட பறிக்க முடியாது என்று நம்ப வைப்பது . இந்த கோதாவில் இங்கு களத்தில் ஒருத்தர் இருவரை தவிர மற்றைய தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் முக மூடியுடன் வந்து கருத்து மழை பொழிவதும் நீலி கண்ணீர் விடுவதும் சந்தடி சாக்கில் புலிகள் மீது விமர்சனம் செய்கிறோம் என்று அவதூறு பரப்புவதும் இங்கு நடைபெறுகிறது .- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இங்குள்ள பேர்மிங்கம் இந்த கூட்டம் வாழும் இடத்தில் போய் பார்த்தவர்களுக்கு புரியும் ஏன் பிரித்தானிய அகதிகளை அவசர அவசரமாய் தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது என்று .அவர்கள் இடத்தில் போக்குவரத்து விதிகள் வாகன தரிப்பிடங்கள் எவற்றையுமே மதிப்பதில்லை வாகன தண்டபனம் ரிக்கெட் வைப்பவர்கள் பலமுறை அடிவாங்கி உள்ளார்கள் .அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அரச உதவிகளில் தங்கியுள்ளவர்களுக்கே முன்னுரிமை .அந்த பகுதி கடைகளில் கார்ட் மிசின் என்பதே கிடையாது எல்லாமே பண புழக்கம் அதற்கே முன்னுரிமை . அதே போல் கிழக்கு லண்டனும் ஈஸ்ட் காம் தெருக்களும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது வெள்ளி கிழமைகளில் டபுள் மஞ்சள் கோட்டில் சர்வ சாதரணமாய் கார்கள் பார்க் பண்ணி விட்டு தொழுகைக்கு செல்வார்கள் கேட்ப்பார் பார்ப்பார் கிடையாது காரணம் அந்த பகுதி அரசியல்வாதி அவர்கள் இனமாய் இருப்பார் . அதே ஈஸ்ட் காம் தெருவில் மகாலட்சுமி கோவில் கோபுரம் கட்ட அதற்கு எதிராக அருகில் உள்ள மசூதிகளில் இருந்து எதிர்ப்பு பெட்டிசம் போக கவுன்சில் நீதி மன்றத்தை நாட பல காலம் இழுபட்டது கடைசியில் நீதிபதி சொன்ன தீர்ப்பு அனைவரும் அறிந்ததே . - முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.