Everything posted by பெருமாள்
-
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 'பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன. 'ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்' என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்? அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாய் என்பதால் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்களைக் கட்டணமாக வழங்குவதற்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கான வேலையில் வெளிநாட்டவரை அழைத்து வருவதை நிறுத்துமாறு கூறிய லுட்னிக், "அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். "ஹெச்1பி விசா பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் கொண்டு வரும் ஊழியர்கள், திறமையானவர்கள் என்பதை உறுதி செய்யப்படும்" என, அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப் கூறியுள்ளார். மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாகவும் வில் ஷார்ஃப் தெரிவித்தார். அமெரிக்காவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ள துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வகையில் ஹெச்1 பி விசா வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் அறிவிப்பின் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர். 'குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய இந்திய வர்த்தம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (FICCI) தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ராஜாராம், "ஆண்டுதோறும் சுமார் 70 சதவீத ஹெச்1பி விசாக்களை இந்தியர்கள் பெறுகின்றனர். இதில் அதிக விசாக்களை அமேசான் நிறுவனம் எடுக்கிறது. காக்னிசன்ட், டிசிஎஸ், கூகிள், மைக்ராசாஃப்ட், இன்ஃபோஸிஸ், மெட்டா, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஆட்களைத் தேர்வு செய்கின்றன" என்கிறார். "ஹெச்1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அந்தவகையில், மொத்தமாக ஆறு ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது." எனக் கூறுகிறார், ராஜாராம். தற்போது ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். எந்ததெந்த வகைகளில் பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன.' "இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்?" என ராஜாராமிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர், "இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன. இந்த ஊழியர்கள் அமெரிக்கா செல்வதால், வாடிக்கையாளரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க முடியும்" என்கிறார். "அமெரிக்காவில் இருந்து சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள புராஜக்ட்களை இந்திய நிறுவனங்கள் கையாள்வதாக இருந்தால் சுமார் 15 சதவீத ஊழியர்களை ஆன்சைட் பணியாக அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர். இனி தனி நபருக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும்" எனவும் ராஜாராம் கூறுகிறார். "இதன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்களின் லாபம் என்பது பல மடங்கு குறைந்துவிடும். இது சவாலானதாக இருக்கும்" எனவும் ராஜாராம் குறிப்பிட்டார். விசா கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் பங்குச் சந்தையில் வரும் நாட்களில் இதன் பாதிப்பு தெரியவரும் எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 'அமெரிக்காவுக்கும் சிக்கல்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிய நடைமுறையால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மென்பொருள் துறையில் அமெரிக்கர்களின் சம்பளம் என்பது இந்தியர்களைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் வெளிநாட்டினரை அதிகளவில் பணிக்கு எடுக்கின்றனர்" எனக் கூறுகிறார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக (Chief scientist) பணியாற்றி ஓய்வுபெற்ற சுகி வெங்கட். புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள், குறைவான அனுபவம் உள்ளவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறுகிறார், ராஜாராம். "குறைவான அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டாலர் வரை சம்பளமாக இந்திய நிறுவனங்கள் தருகின்றன. இவர்களுக்கு ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை விசா கட்டணமாக செலுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. சம்பளத்தை விடவும் விசா கட்டணம் அதிகமாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். 'தென்னிந்தியாவுக்கு அதிக பாதிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் பேர் இந்தியர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பட்டியலிட்ட ராஜாராம், "பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் அதிக மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சுமார் 30 முதல் 35 சதவீதம் பேர் அமெரிக்கா செல்கின்றனர்" என்கிறார். அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா மூலம் செல்லும் இந்தியர்கள் குறித்த தரவுகளை கடந்த பிப்ரவரி 6 அன்று மாநிலங்களவையில் இந்திய அரசு தெரிவித்தது. அதன்படி, 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் இந்தியர்கள். இதனை அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்திய அரசு தெரிவித்தது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறுகிறார், ராஜாராம். 'பணத்தைக் கட்டும் வாய்ப்புகள் குறைவு' அமெரிக்க அரசின் புதிய அறிவிப்புக்கு முன்னதாக ஹெச்1பி விசா பெற்றவர்களை 21ஆம் தேதி இரவுக்குள் வருமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. "அவ்வாறு அமெரிக்கா செல்லாவிட்டால் விசா ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" எனக் கூறுகிறார் சுகி வெங்கட். "விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் மீண்டும் அதனைப் பெறுவதற்கு 100 ஆயிரம் டாலர்களைக் கட்ட வேண்டும். இவ்வளவு பணத்தை யாரும் கட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் சுகி வெங்கட், "ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் ஏற்கெனவே பணி செய்கிறவர்களை இந்தியா வருமாறு அழைக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் உற்பத்தி காரணமாக இப்படியொரு முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாகக் கூறும் ராஜாராம், "இந்தியாவில் இதுதொடர்பான நிறுவனங்களை அதிகளவில் உருவாக்கலாம். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கும்" என்கிறார். "மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம்" அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை இந்திய அரசு பார்த்தது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்கா என இருநாடுகளின் தொழில்துறைகளும், புதுமை மற்றும் படைப்பாற்றலில் பங்கு வகிக்கின்றன. சிறந்த பாதையில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன்சார் தொழிலாளர் பரிமாற்றங்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்க மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே பரஸ்பர நன்மைகளை கணக்கில் கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் சமீபத்திய நடவடிக்கைகளை மதிப்பிடுவார்கள். இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறு மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் கண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர், இதில் இந்திய தொழில்துறையும் அடங்கும், இது ஏற்கனவே H1B திட்டம் தொடர்பான சில கருத்துக்களை தெளிவுபடுத்தும் ஆரம்ப பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு BBC News தமிழ்இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - H1B கட்டண உயர்வ...அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாத
-
உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!
அதெல்லாம் ஒரு காலம் இப்ப பண ஆசை பிடித்து பிணத்துக்கும் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் இலங்கை தீவு எங்கும் கூடி விட்டார்கள் . பகல் முழுதும் அரசாங்க வைத்திய சாலைகளில் பெயருக்கு வேலை .அதன் பின் தனியார் வைத்திய சாலைகளில் அடிமை வேலை அவர்களின் ஒரே நோக்கம் பணம் மட்டுமே மேல் சொன்ன அடி பாடுகள் வரும் காலத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாது போகும் .
-
நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வெளியிட்ட சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருக்குமானால் இலஞ்சஊழல் ஆணைக்குழுவினரும் குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவினரும் அதற்கான அடுத்தகட்ட விசாரணையை நோக்கி நகர்வார்கள் என்று அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 100 மில்லியன் சொத்துக்கள் தொடல்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்தானது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியிருந்தது. இதற்கமைய, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு ஒரு கோடீஸ்வரராக வரமுடியும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அமைச்சர் சந்திரசேகரனின் கருத்தை தொடர்ந்து நாமலின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
-
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
அது இன்று இரவு வந்து நம்ம பதிலை பார்த்து விட்டு ரெம்ப்பர் ஆகிற ஆட்களை பொறுத்து இடம் மாறு படும் இவருக்கெல்லாம் கோவிலில் தேவாலயத்தில் மசூதியில் கொடுத்து அவற்றை அசிங்கபடுத்த கூடாது என்று நினைக்கிறேன் .
-
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
உலகில் இருந்து சுமத்திரனுக்கு நிரந்தர ஓய்வு என்றால் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் கொடுப்பதாய் வேண்டுதல் உள்ளது .😀
-
புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம்
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள். அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும். அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும்.அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும்.யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள குடியமர்த்தினோம். தேசிய ஒருமைப்பாடு சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி.எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும். அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே நோக்கமாகும். அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும். அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல. ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல. அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும். உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
-
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
செம்மணி மனிதபுதைக்குழி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மண்டைதீவு மனிதபுதைக்குழி விவகாரமும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. 1990களில் மண்டைதீவு பகுதியில் மிகப்பெரிய பேரவலம் அரங்கேறியுள்ளது. 50ற்கும் மேற்பட்பட்டோர் புதைக்கபட்ட மண்டைதீவு செம்பாட்டு தோட்டம் கிழக்கு தெருவில் அமைந்திருக்ககூடிய ஒரு கிணற்றின் ஊடாகத்தான் பல செய்திகள் வெளிவர காத்திருக்கின்றன. யாழ்.தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவானது 1990களின் பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் இருண்ட சாட்சியமாக மாறியுள்ளது. போர்ச்சூழல் காரணமாக மண்டைதீவு விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் அடிக்கடி கைமாறியுள்ளது. மண்டைதீவு பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோக கதைகளில் ஒன்றாக உள்ளது. https://tamilwin.com/a
-
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார். அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த முகநூல் பதிவில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது. நிரந்தர அரசியல் ஓய்வு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை. தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச, பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும். ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது. அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் - என குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/
-
மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள். செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை. கொழும்பில் வாங்கிய முதல் வீடு ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார். அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார். அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர். அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
-
இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.
இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறை வளர்ச்சி எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை உலக வங்கியின் துணைத் தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டியுள்ளார். மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். https://tamilwin.com/
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
அந்த சிங்களவரே அந்த நாட்டிக்கு வந்தேறு குடி நாளை அங்குள்ள வெள்ளைகள் கறுப்பர் களை தேடி அடிக்கும் போது அவரின் தோல் கடைசி மட்டும் வெள்ளை ஆகாது என்பதை மறந்து ஆட்டம் ஆடுகிறார் .
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உண்மை கடந்த மாதம் நேரடியாகவே இழப்பை சந்தித்தேன் .- கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்
கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம் September 16, 2025 0 வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள். ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் எலும்புப்புரை (osteoporosis) நோயினால் ஏற்படும் பின்விளைவுகளாகும் என்கிறார் தண்டுவட அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர், மருத்துவர் விக்னேஷ் ஜெயபாலன். இதற்கு காரணம் என்ன.. தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். முதுகெலும்பில் உள்ள ஒன்று அல்லது பல எலும்புகள் நசுங்கும்போது முதுகெலும்பு அழுத்த முறிவு ஏற்படுகிறது. இது பொதுவாக பலவீனமான, நுண்துளைகள் கொண்ட எலும்புகளின் காரணமாக நிகழ்கிறது. எலும்புப்புரை பாதிப்பு இருக்கும்போது, முதுகை வளைப்பது, குனிவது, இருமுவது அல்லது பொருட்களைத் தூக்குவது போன்ற அன்றாட செயல்களே இதுபோன்ற முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தாமதமாக கண்டறிவதற்கு முக்கிய காரணம், தாங்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை நோயாளிகள் உணர்வது அவர்களுக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், முதுகெலும்பு அழுத்த முறிவுகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத முதுகுவலியாகவே இருக்கும். மேலும், காலப்போக்கில் அந்நபரின் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப நிகழும் நுண் முறிவுகள் நோயாளிக்கு நாள்பட்ட வலி, உயர இழப்பு மற்றும் கூன் விழுந்த தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிரமப்படுமாறு செய்வதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார்? மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்: இவர்களிடம் ஈஸ்ட்ரோஜென் குறைவாக இருப்பது எலும்பு வலுவிழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நபர்கள்: குறிப்பாக வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைவான அளவு கால்சியம் உட்கொள்பவர்கள். பரிந்துரைக்கப்படும் மருத்துவத் தீர்வுகள் எலும்பு அடர்த்தி சோதனைகள் (DEXA ஸ்கேன்): முதுகெலும்பு முறிவைக் கண்டறிவதில் ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்புப்புரைக்கான பரிசோதனையை குறித்த காலஅளவுகளில் செய்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குறிப்பாக அவர்களுக்கு உயர இழப்பு, முதுகெலும்பு வளைவு போன்ற அறிகுறிகள் இருக்குமானால், இச்சோதனையை தவறாமல் செய்ய வேண்டும். வெர்டிப்ரோபிளாஸ்டி அல்லது கைஃபோபிளாஸ்டி: எலும்பு முறிவானது கடுமையான அழுத்த முறிவு வகையாக இருக்குமானால், வலியைக் குறைக்கவும் முதுகெலும்பை உறுதிப்படுத்தவும், தண்டுவட எலும்பில் முறிவு ஏற்பட்ட இடத்தில், எலும்பு சிமென்ட்டைக் கொண்டு உறுதியாக்கவும் மற்றும் ஊசிமூலம் செலுத்தவும் சிறிய கீறல்கள் மட்டுமே இந்த மருத்துவ செயல்முறைக்கு தேவைப்படும். உடற்பயிற்சி சிகிச்சை: முதுகெலும்பை நீட்டுதல், தோற்றத்தைச் சரிசெய்தல் மற்றும் முதுகின் மையப்பகுதியை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படலாம். ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பின் கீழ், அத்திட்டத்தை செயல்படுத்துவது உதவக்கூடும். பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் முக்கியமானவையே. எனினும், அச்சிகிச்சைக்கு சில வீட்டு வைத்திய வழிமுறைகள் ஆதரவளிக்கக்கூடும்:எலும்பு அடர்த்தி குறையும்போது, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். சுவரில் கைகளை வைத்து நகர்த்துவது அல்லது தாடையை உள்ளிழுத்து (சின் டக்ஸ்) மெதுவாக விடுவது போன்ற உடற்பயிற்சிகள் கூன் விழுவதை தடுக்கவும், குறைக்கவும் உதவும். இதன்மூலம் கூன் விழாமல் உங்கள் உடல் தோற்றத்தை உங்களால் பராமரிக்க முடியும். குறைவான தாக்கம் ஏற்படுத்தும் அல்லது தாக்கம் இல்லாத எடை தாங்கும் பயிற்சிகள் (எ.கா. நடைபயிற்சி, யோகா (கண்காணிப்பின் கீழ்)) வயதாகும்போது எலும்பு அடர்த்தி இழப்பை தாமதப்படுத்தவும் மற்றும் கீழே தவறி விழுவதைக் குறைக்கவும் உதவும். முதியவர்கள் தரையில் ‘விழாமல் தடுக்கும்’ வகையில் வீட்டை மாற்றியமைப்பது: இலேசாக கீழே விழும் நிகழ்வுகள் கூட மோசமடைந்திருக்கும் எலும்புகளில் முறிவுகளை உருவாக்கலாம். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்வது, பொருட்கள் அடைசலாக சிதறிக்கிடக்கும் நிலையை அகற்றுவது தேவைப்படும் இடங்களில் பிடிமானக் கம்பிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம், உங்கள் வீட்டை முடிந்தவரை ‘விழாமல் தடுக்கும்’ வகையில் பாதுகாப்பானதாக மாற்றலாம். பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான தளவாடங்களைப் பயன்படுத்துதல்: முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலிகள் ஒரு நபரின் இயற்கையான நேரான முதுகெலும்பு தோற்றத்தை ஆதரிக்க உதவுகின்றன; மேலும் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன. உணவுமுறை: கால்சியம் (பருப்பு வகைகள், பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள், கீரை வகைகள்) மற்றும் மெக்னீசியம் (பருப்பு / கொட்டைகள்) எலும்புகளின் உறுதியை மேம்படுத்துகின்றன. கூனல் விழுந்த தோற்றத்தை அல்லது உயரம் குறைந்து வருவதை வயது முதிர்வால் வரும் ஒரு பிரச்னையாக கருதி அலட்சியம் செய்யக்கூடாது. முதுகெலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவையே; ஆரம்பத்திலேயே இவை கண்டறியப்படுமானால், சிகிச்சையின் மூலம் சரிசெய்யக்கூடியவையே. எனவே ஆரம்பகாலத்திலேயே பாதிப்புகளையும் மற்றும் அதன் அறிகுறிகளையும் கண்டறிவது மிக முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆகியவை ஒரு நபரின் குறிப்பாக, நடுத்தர வயதை கடந்த நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும். https://akkinikkunchu.com/?p=341076- அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையின் பொறுப்புக் கூறல், நீதி விசாரணை தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரமும் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் விசாரணைகள் சர்வதேச தரத்தின் படி நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் ஜெனீவா அமர்வில் வலியுறுத்தியும் உள்ளது. அதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட இனப்படுகொலை தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் செம்மணி மனிதப் புதைகுழியானது ஒரு இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளையும், மிலேச்சத்தனமான நடவடிக்கைகளையும், அரச படைகளின் கொடூர முகத்தையும் வெளிப்படுத்தி இனப்படுகொலையின் சாட்சியாக நிற்கின்றது. செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டு கட்டமாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவுக்கு வந்துள்ளது. செம்மணி சித்துபாத்தியில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, யாழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முதல் கட்டமாக 9 நாட்களும், அதன் பின் இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக 54 நாட்கள் முழுமையாக அகழ்வுப் பணிகள் இடம் பெற்றிருந்தது. இதன்போது 240 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், அதில் 239 எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 72 சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் சான்றுப் பொருட்களும் செம்மணி சித்துபாத்தியில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக இடம்பெற்ற திட்டமிட்ட இனப்படுகொலையை வெளிப்படுத்தி நிற்கிறது. குற்றங்களை விசாரிப்பதற்கு சுயாதீன அலுவலகம் 14 இடங்களில் எலும்புக்கூடுகள் குவியல்களாகவும், சில எலும்புக் கூடுகள் பாகங்கள் உடைவடைந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்த நிலையிலும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை பலர் கொல்லப்பட்டுள்ளனர். இது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் மத்தியிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மனங்களிலும் மேலும் காயத்தையும், ஆறாத வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், செம்மணி சித்துபாத்தியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன. இது நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், மரபணு பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய மரபணு வங்கியை உருவாக்குதல் ஆகியவற்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி சித்துபாத்தி புதைகுழியை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தெரிவிக்கையில், செம்மணி விவகாரம் நீதிமன்றத்துடன் தொடர்புடையதாகும். நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்திற்கே அறிவிக்கப்படும். நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும. நீதிமன்ற நடவடிக்கைகளுக்குரிய வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். விசேட குழு ஒன்றினால் அதறகுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ஆகியோரின் குறித்த கருத்தும் வெறும் கண்துடைப்புக்கான கருத்தாக இல்லாமல் உண்மையாவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பரிகார நீதியைப் பெறும் வகையில் நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த சம்பவங்கள் தொடர்பான சாட்சிகளைப் பெறுவதற்கு மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை கைதியாகவுள்ள இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச அவர்களையும் பயன்படுத்த முடியும். ஏனெனில் செம்மணியில் 300- 400 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்து இருந்ததுடன், செம்மணி புதைகுழி குறித்து சாட்சியமளிக்க தான் தயார் என அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அவரது சாட்சியங்களின் அடிப்படையில் இதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் என பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும். பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா... படை தரப்பின் வன்ம வெறியாட்டத்தை விசாரிக்க இந்த இலங்கை அரசாங்கம் தென்னிலங்கையில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது இடம் கொடுக்குமா..? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்தும் உள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும். எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அதற்கான திகதி தீர்மானிக்கபடும். 8 வாரங்கள் அந்த அகழ்வு இடம்பெற வேண்டும் என தற்போது எதிர்பர்க்கபடுகிறது. இதற்கான நிதி, நிபுணத்துவ சேவை மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் மட்டுமே அந்த அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதனை அரசாங்கம் செய்து கொடுத்து நீதியான வகையில் பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்துள்ளது. பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் செம்மணி என்பது எவராலும் மறந்து விட முடியாத இடம். அதற்கு காரணம் மாணவி கிருசாந்தி படுகொலை. மாணவி கிருசாந்தி படுகொலையின் 29 ஆம் ஆண்டு நிறைவு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்தது. மரணித்த கிருசாந்தியின் ஆத்மா மற்றும் அங்கு புதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினதும் ஆத்மாக்களும் இன்று அங்கு நடந்த மனிதப் பேரவலத்தை வெளிப்படுத்தி சான்றுகளாக கண் முன்னே வந்து நீதி கேட்கின்றன. ஆக, இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள செம்மணி சித்துபாத்தி விடயத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது. பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் போன்று செம்மணி விசாரணையும் நீதியான முறையில் பக்கச்சார்பின்றி இடம்பெறுமா? தென்னிலங்கையின் அழுத்தங்களுக்கு அடிபணியாது படுகொலைக்களுக்கு காரணமான படைத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை இந்த அரசாங்கம் துடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிள்ளது. https://tamilwin.com/- அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ஆபத்தான சூழ்நிலை கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்களை ஏற்றும்போது கடையின் லொறிகள் வீதிகளை தடுக்கும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி ACT ஆளுநர் ஆண்ட்ரூ பாருக்கு ,இலங்கையரான பிரசாத் அபேரத்னே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை ஆராய்வதாக அமைச்சர் மரிசா பேட்டர்சன் உறுதியளித்துள்ளார். கடை உரிமையாளர் எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் வணிகத்திற்கு ABN மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/- குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!
புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி. புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. லண்டனே ஸ்தம்பித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் நடுவே ஒரு வேடிக்கை காட்சி கமெராவில் சிக்கியது. ஆம், புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்தியவர்களில் சில பிரித்தானியர்கள், சாலையோர இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்று பஜ்ஜி வாங்கி சாப்பிடும் காட்சியை சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள். அத்துடன், பேரணியில் ஈடுபட்ட சிலர், ஆப்கானிஸ்தான் உணவகம் ஒன்றின் முன் வரிசையில் நிற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாக, அவற்றை பார்வையிட்டவர்கள், பிரித்தானியர்களுக்கு, புலம்பெயர்ந்தோர் வேண்டாமாம், ஆனால், அவர்களுடைய சாப்பாடு மட்டும் வேண்டுமாம், என்னும் ரீதியில் கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள்! Lankasri Newsபுலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்...புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக...- மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
உண்மைதான் https://www.zocalopublicsquare.org/the-world-war-ii-wonder-drug-that-never-left-japan/- கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளன. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர். அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர். ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்ககாற்று நடவடிக்கை மூலமாக அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம். ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் Tamilwinகட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரி...இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரத...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட உங்களுக்கும் தானா ?- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
செய் எந்த உலகம் என்றாலும் பெண்கள் தான் பாவம் .- தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன்
வாங்கிய பெட்டி பேசுது .- யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!
ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு ரேட் பில் மிகவும் குறைவாக இருக்கும் வெளிநாடுகளில் இருந்து போவபவர்களுக்கு கண்ட கண்ட ஸ்கானிங் எல்லாம் வலு கட்டா யாமாக செய்வித்து குறைந்தது 5ல் இருந்து பத்து லட்சத்துக்கு பில் வைக்காமல் வெளியில் விடமாட்டார்கள் பகல் கொள்ளைகாரர்கள் . அதே போல் பிரைவேட் மெடிக்கல் சென்ரர் வைத்து இருப்பவர்களும் யாழில் உள்ள மூன்று தனியார் வைத்திய சாலைகளின் அடிமைகளே பருத்திதுறையில் உள்ள அந்த கால வயதான டாக்டரும் நெல்லியடியில் உள்ள தனியார் வைத்திய சாலையின் சிற்றடிமை ஆகினது காலம் செய்த கோலம் .- யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!
நவீன தமிழ் இனவழிப்பை யாழில் உள்ள தனியார் வைத்திய சாலைகள் செய்கின்றன அதற்கு இந்த அரசாங்க வைத்திய சாலைகளில் இருந்து செல்லும் பகுதி நேர வைத்தியர்களும் உடந்தை .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.