-
Posts
15244 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
பழைய மதுரா ஓனர் இப்பவும் பில்டிங் ஓனர் அவர்தான் 2௦19 ல் வந்த படத்துக்கு இப்ப ஏன் அழுகிரான்கங்கள் ? தேவையில்லாமல் சீமான் இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார் @நிழலிசொல்வது போல் புலி காய்சல்உள்ள நபர் நேரில் பார்த்தால் மிக அமைதியானவர் . கடைசியாக மோர்டனில் ஒன் பவுண்டு சொப் மிக அமைதியாக நடாத்தி கொண்டு இருந்தார் இந்தியன் ஆமி காலத்தில் யாழில் இருந்து வல்வைக்கு சென்ற மினி பஸ் படுகொலை செய்தவர் பெயரில் இவரின் பெயர் உள்ளது நேரில் கேட்டேன் அது தான் இல்லை என்கிறார் !................... இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கிறார் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறார் போல் உள்ளது . ஆள் லண்டன் வந்தால் மிகுதி கதைப்போம் அதை இங்கு பகிர்ந்து கொள்கிறன் நன்றி @கிருபன்
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அண்ணேய் அவர் பகிடிக்கு சொல்கிறார் . -
புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
சவாரி வருமா வராதா ? வரும் ஆனால் வராது 😀 -
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது. இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை. இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/newly-printed-money-central-bank-explanation-1730210195
-
இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். பாதகமான விளைவு கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமுகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பை உணர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் பொருட்களுக்காக 10 ஆயிரம் ரூபா செலவிட்ட நிலையில், அதே பொருட்களுக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலவிடுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆட்சியை பொறுப்பேற்றதுடன் பல்வேறு மாற்றங்களை செய்யப் போவதாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்த சமகால ஜனாதிபதி, தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவதாகவும், மக்கள் நலன்சார்ந்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் பலர் குறைப்பட்டுள்ளனர். டொலரின் பெறுமதி கடந்த ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சாதகமான நிலைப்பாட்டினை சமகால அரசாங்கம் அனுபவித்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வேலைத்திட்டங்களை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்திருந்தனர். அதன் காரணமாக பெருந்தொகை சுற்றுலா பயணிகளால் அமெரிக்க டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது. மத்திய வங்கியில் டொலரின் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் கட்டுப்பாட்டு விலையை சடுதியாக குறைக்கவும் சமகால அநுர அரசினால் முடிந்துள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடவுச்சீட்டு நெருக்கடி அதேவேளை, கடந்த பல மாதங்களாக நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருக்கின்றனர். கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாலை நான்கு மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டிருந்த அநுர அலை தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதுடன், அரசின் மீது மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, புதிய அரசாங்கம் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்காக சில காலங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சில தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/people-angry-on-anura-government-economic-crisis-1730124992
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நன்றி -
பாஸ் இங்கு கதை வேறை நட்டம் அதிலும் லாபம் வரும் வழி வகைகள் உண்டு இந்த நாடுகளுக்கு நான் ஜனதிபதிஆனால் முதலில் அரிச்சந்திரன் பாடத்தையே எடுத்து விடுவேன் விரிவாக எழுத நேரமின்மை ஒரு பொழுது எழுதுவேன் இன்னும் மற்ற திரிகள் உள்ளது அங்கும் போவனும் லண்டனில் நேற்று 1மணிநேரம் எக்ஸ்ரா வாக கிடைத்த நேரத்தில் இந்த ஆட்டம் ஆடுகிறேன் மன்னிக்கவும் .
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தேர்தலுக்கு பின்தான் அனுராவுக்கு உண்மையான பிரச்சனையே என்கிறார்கள் பார்ப்பம் சொன்னதை நிறைவேற்றுகிறாரா என்று . அந்த இணைப்பை தேடிக்கொண்டு உள்ளேன் இங்கு இணைத்து விடுகிறேன் . -
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் 2024 பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களினதும் அவர்களுடைய செயற்பாடுகளும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியுமா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்திருக்கிறது. மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா.. அந்த அளவிற்கு தமிழர் தாயக பரப்பெங்கும் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு சின்னா பின்னப்பட்டு தமிழர்கள் தமிழர்களாக வாழாது பதவி வெறி பிடித்த அரசியல் மிருகங்களாக மாறும் அளவிற்கு தமிழ அரசியல் பரப்பு தற்போது ஒரு துயரகரமான பக்கத்தை நோக்கிச் செல்கிறது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1947 இல் ஆகஸ்ட் , செப்டெம்பர் ஆகிய இரண்டு மாதங்களிலும் 13 நாட்கள் தேர்தல்கள் நடைபெற்றன. அன்றைய காலத்தில் இருந்த வசதி வாய்ப்புகள் இவ்வாறு தேர்தலை நடத்த பல நாட்கள் தேவையாக இருந்தது என்பதையும் நினைத்துக் கொள்க. சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 101 அதில் ஆறு பேர் நியமன உறுப்பினர்கள். ஆகவே 95 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் சில நுாறு வேட்பாளர்களே போட்டியிட்டனர். ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் பிரகாரம் இன்றைய நாடாளுமன்றத்தில் 225 ஆசனங்கள் இருக்கின்ற போதிலும் 195 ஆசனங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக திணைக்களம் அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியல் செல்போக்கில் தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆயினும் இந்த தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்த விரும்புவர்கள் கடந்த காலத்தில் மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா என்று தேடினால் அது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. அப்படியாயின் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பம் எவ்வாறு தோன்றுகிறது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அது மிக நுணுக்கமாகவும் சமூகவியலுடனும், உளவியல், மெய்யியல் சார்ந்தும் நோக்கப்பட வேண்டிய விடயம் என்பதனால் அதனை இப்போது விட்டுவிட்டு நடைமுறையில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம். முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒப்பிட்டு ரீதியில் இலங்கை தீவின் அதிகூடிய சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடும் பகுதியாக தமிழர் தாயகம் மாறி இருக்கிறது. சிங்கள தேசத்தையும்விட பன்மடங்கு அதிகமான வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் போட்டியிடுவதை அவதானிக்க முடிகிறது. இதற்கான முதற்காரணமாக அரசியலுக்கு வந்தால் எதையும் சாதிக்கலாம், பணம் பண்ண இலகுவான தொழில் என எண்ணும் மனநிலையே பொதுவாக எல்லோரிடமும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய ஒரு மனநிலை தமிழர் தாயகத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் பல. ஆயினும் அதற்கான அடிப்படை காரணமும் அதற்கான சூழலையும் தோற்றுவித்தது முள்ளிவாய்க்கால் பேரவலம்தான் என்பதை யாரும் மறுத்துவிட. முடியாது. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுதியான தலைமைத்துவங்கள் முன்வரவில்லை. அதேநேரத்தில் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை இன்னும் யாரும் இனங்காணவும் முடியவில்லை. ஆனால் ஓடுகாலி தலைமைகள் பலவும் முளைத்து எழும்பத் தொடங்கிவிட்டது என்பது இன்னொரு பக்க துரதிஷ்டம். முள்ளிவாய்க்காலுக்கு பின்னான கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் வெளியில் தலைமைத்துவம் அற்றதாகவும், அல்லது அவ்வாறு காட்டப்படும் தலைமைத்துவங்கள் செயலற்றவையாகவும், எதிரிக்கு சேவகம் செய்வனவாகவும், அல்லது எதிரிகளோடு ஒத்தோடுபவையாகவும் மக்களால் இனங்காணப்பட்டு இருக்கிறன. இந்நிலையில் புதிய தலைமைத்துவங்கள் வருவதை சந்தேகக் கண்கொண்டு மக்கள் பார்க்கும் நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இங்கே யார் உண்மையானவர்? யார் நேர்மையானவர்? யார் தேசியவாதி? என இனம் காணுவது தமிழர் தாயகத்தில் மிக கடினமானதொரு முயற்சியாகவே இன்று எம்முன்னே எழுந்து நிற்கிறது. ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்பு கடந்த 15 ஆண்டு கால தமிழர் அரசியலை வழி நடத்தியவர்களும், அரசியலில் பங்கு கொண்டவர்களும் தமிழ் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை என்பது மாத்திரமல்ல தமிழ் மக்கள் செல்வதற்கான வழியையும், திசையையும் காட்டத் தவறிவிட்டனர். இன்று தமிழ் மக்கள் ஒரு அரசியல் அனாதைகளாக, மேய்ப்பான் இல்லாத மந்தைகளாக அலைகிறார்கள். முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தமிழ் மக்கள் நம்பக்கூடிய தமிழ்த் தேசியத்தை கட்டமைக்கக்கூடிய எந்த தலைவர்களையும் இந்த நிமிடம் வரையும் தமிழ் மக்கள் இனங்காணவில்லை அல்லது இனங்காட்டப்படவில்லை என்பது ஒரு தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு பெருத்த பின்னடைவும் அவமானமும்தான். ஆயினும் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான அறிவியல் வளர்ச்சி தமிழ் மக்களிடம் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது தமிழ் மக்கள் தமது அறிவியல் வளத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றிடத்தை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் உள்ளது என்று சொல்வதே பொருந்தும். தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான தலைவர்களோ முன்னுதாரணமான தலைவர்களோ இல்லாதவிடத்து தமிழ் மக்கள் சாத்தானின் கையில் விடப்பட்டவர்கள் போல பல திசைகளிலும் பயணிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்தக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இறுதியாக விட்டுத்தான் சென்றது. ஆயினும் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை சம்பந்தனோ, மாவை சேனாதிராஜாவோ அல்லது அவர்களுக்கு பின்னே இருக்கின்ற யாராயினும் சரியாக வழி நடத்த தவறிவிட்டனர். அவர்கள் வழிதவற விட்டதன் விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இணைந்த அனைத்துக் கட்சியினரும் வெளியேறிவிட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் மூன்று அணியினராக இப்போது களத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த மூன்று அணியிலும் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் பல அணிகளாக தோற்றம் பெற்று இருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளில் இருந்து அவர்களுடைய செயல்பாடுகளின் நம்பிக்கை இழந்து, கட்சிகளுடைய தான்தோன்றித்தனங்களிலிருந்து தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இலட்சியத்துக்குமான பாதையில் யாரும் செல்லவில்லை என்ற மனவிரக்தி, கோபம் பல சமூக செயற்பாட்டாளர்களையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும், தன்முனைப்பாளர்களையும் தம்மாலே எல்லாம் முடியும் என்ற பேராசையுடன் தகுதி இல்லாமல் தகுதியற்ற இடத்தில் இருந்து தகுதியான மக்களை ஆளலாம் என்ற நப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசம் அதேநேரத்தில் தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் செல்வாக்கு உள்ள தனிநபர்கள் பலரும் இந்த தேர்தலிலே சுயேட்சை போட்டியாளர்களாக போட்டியிட களத்துக்கு வந்துவிட்டனர். திரும்பும் திசையெங்கும் வேட்பாளராகவே தாயகத்தில் தென்படுகிறது. அதேநேரத்தில் வேட்பாளர்கள் உடைய வகைப்படுத்தல்கள் எவ்வாறு அமைகின்றது என்று பார்த்தால் சட்டத்தரணிகள், முன்னாள் ஆசிரியர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என்ற வகைக்குள்ளேயே பெரும்பாலான வேட்பாளர்கள் அடங்குகின்றனர். இந்த வேட்பாளர்கள் சட்டம் படிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்கள் அல்லது அவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிதான். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோஷத்துக்கு இந்த அரசியல்வாதிகள் செய்த வேலை யாதும் அறியா பாலகர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தியதுதான். அதுவும் ஒரு கட்சி அவரை கொண்டு வருவதென பேசி ஒப்பந்தமிட்டுவர இன்னும் ஒரு கட்சி அவருக்கு இன்னொரு ஆசை வார்த்தை கூறி தம்பக்கம் எடுத்து வந்து தேர்தலில் நிறுத்த வைத்தார்கள். ஒரு நாளிலேயே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் மனநிலை என்னவென்று சொல்ல! அதே நேரத்தில் சிறுவர்களை இப்படி அரசியலில் கொண்டுவந்து நிறுத்தும் ஒரு தவறான முன்னுதாரணமாகவும் இது சொல்லப்பட வேண்டும். வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர், இன்னொரு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை அவர் போட்டியிடுகிறார் என்று அறியாமலே தற்செயலாக சந்தித்தபோது "எனக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக்காக வேலை செய்ய வேண்டும்" என அந்த இளைய மாணவ வேட்பாளர் போராளி வேட்பாளரின் கையைப் பிடித்து கேட்ட. சம்பவம் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்தின் முன்னால் நடந்தது என்பதிலிருந்து நிலைமையைப் புரிந்துகொள்க. தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல அவ்வாறே தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த பிற்பாடு தான் போட்டியிடுகின்ற தொகுதிக்குள் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளை தெரிந்து கொண்ட பல வேட்பாளர்கள் உள்ளார்கள். ஒரு மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறை பற்றி எதுவுமே தெரியாத பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய தகுதி, தராதரம் பற்றி எடை போட்டுக் கொள்க. இது இந்த நிலை என்றால் தமிழ் மக்களிடம், அதிகம் பாமர மக்களிடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலையே இப்போது தென்படுகிறது. தாம் யாரை நம்புவது, யாரின் பின்னே செல்வது, யாருக்கு வாக்களிப்பது என்பது ஒரு குழப்பகரமான நிலையிலே மக்கள் உள்ளனர். இந்த குழப்பகரமான நிலை தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. தமிழ் அறிவியலாளர்களும், நேர்மையான அறிவார்ந்த ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களை வழிப்படுத்துவதற்கான கருத்தாளர்களை மிக வேகமாக தமிழர் தாயகத்தில் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி களத்திலே இறங்கி இருக்கும் வேட்பாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்ற, தமிழ் மக்களின் இருப்பையும் தாயகத்தின் இருப்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் சிங்கள தேசிய கட்சிகளுடனும் சிங்கள இடதுசாரி அரசியலுக்குள்ளும் தாமும் அமர்ந்து போய் தமிழ் மக்களையும் அழித்துவிடும் அபாயகரமான ஒரு செல்நெறி தாயகத்தில் தற்போது நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரக் களம் பாமர மக்களுக்கு இந்த அரசியல் பித்தலாட்டங்கள் புரியவில்லை என்று எடுத்துக் கொண்டாலுங்கூட கல்வி கற்றிருக்கும் குறிப்பாக அரச ஊழியர்களுக்கு இன்றைய அநுரா அரசியல் சுனாமியை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழர் தாயகத்தின் ஊழல் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு சிங்கள இடதுசாரி சாத்தான்களுடன் கூட்டுச் சேரவும் அவர்களுக்கு வாக்களிக்கவும் தமிழர்களின் கல்வி கற்ற ஒரு வர்க்கம் தயாராக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்க. இவ்வாறு தேர்தலில் பலதரப்பட்ட வகையறாக்களும் போட்டியிடுகின்ற போதும் இன்றைய நிலவரம் என்னவெனில் இந்த தேர்தலுக்கான பிரசாரக் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. புயலுக்கு முந்திய அமைதியாகவே தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் அமைந்திருப்பது போல தோன்றுகிறது. நகரங்களின் சுவர்களில் பெரியளவு தேர்தல் சுவரொட்டிகளை காணமுடியவில்லை. கிராமப்புறங்களில் மந்தமான ஒரு சூழல் தென்படுகிறது. ஆயினும் அடுத்த வாரங்களில் தமிழர் தாயகத்தின் சுற்று மதல்கள், தூண்கள், சுவர்கள் என அனைத்திலும் பலவர்ண சுரட்டிகள் ஒட்டப்பட்டு பொதுஜனங்களின் சுவர்கள் அலங்ககோலப்படுத்தப்படும் அறிகுறிகள் மட்டும் தற்போது தென்படுகிறது. தேர்தல் சட்ட ஒழுங்குகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேர்தல் சட்ட காவல்துறை ஒழுங்குகள் இவற்றை ஓரளவு கட்டுப்படுத்தினாலுமங்கூட தேர்தலின் இறுதி வாரங்களில் இவை சூடுபிடிப்பது தவிர்க்க முடியாது. ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய பிரசாரப் பணிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்ட ஊழியர்களையே பயன்படுத்துகின்றனர். இங்கு என்ன விந்தை எனில் ஒரே நபர் இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டவும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகிறார் என்பதிலிருந்து தமிழர் தாயக அரசியல் எங்கு செல்கின்றது என்பதை புரிந்துகொள்க. அதே நேரத்தில் இந்திய அரசியல் போன்று தேர்தலுக்கான மதுசார விருதுகள் அரங்கேறி விரிவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. https://tamilwin.com/article/tamil-election-field-one-poster-both-rival-parties-1730103410
-
நடந்த விடயங்களை நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்ற கசப்பான விடயங்களை கூறி விடுவது நல்லது காரணம் சிங்களம் ஒரு போதும் திருந்தாது தமிழரை சந்தேக புத்தி கொண்டு பார்ப்பார்கள்.அத்துடன் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இனபிரச்சனை தீர்வு கண்டால் அவர்களின் வருமானம் பாதிக்கும் அங்கிருந்து தப்பினாலும் வடக்கன் இந்தியாக்காரன் விடமாட்டன் . இப்பவே எங்களின் வயது வட்டுக்குள் வந்து விட்டது பேரன்களின் காலத்திலாவது அவர்களின் காலத்தில் சிந்தித்து அப்போதைய உலக அரசியலுக்கு ஏற்ப முடிவெடுக்கட்டும் .
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
பெருமாள் replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்
உந்த சொத்த சொதப்பல் உங்களை போல ஆட்கள் நம்பலாம் நான் நம்புவதில்லை அங்கு அரசுக்கு சேவகம் செய்யும் அரசு அதிகாரிகளை போன் போட்டு கேட்டேன் அதே பதிலையே சொல்கிறார்கள் . முடிந்தால் இலங்கையில் 6௦ வயதுக்கு மேல் உள்ளவரும் சாட்சி கையெழுத்து வைக்கலாம் என்ற வரியை இங்கு கொண்டு வந்து காட்டுங்க அதை விட்டு யாழில் எல்லோரிடமும் கொள்ளுபடுவதை போல் என்னிடம் சேட்டை விட வேண்டாம் . -
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சைனாவின் புதிய 3௦மில்லியன் டொலர் கடன் தொகைக்கு மண்டையை ஆட்டியவர் அனுராதானே ? கடன் ஒத்தி வைப்பு சில நிபந்தனைகளின் மேல் கொடுக்கப்பட்ட ஒன்று அந்த நிபந்தனைகளின் ஐந்து வீதம் கூட பூர்த்தி ஆக்கப்படவில்லை என்கிறார்கள் . -
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
பெருமாள் replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
புலம்பெயர் கவலைப்படுவது வடகிழக்கில் நீதியான ஒரு தேர்தல் நேற்று கூட தேர்தல் பரப்புரைக்கு சென்றவர்களை சுமத்திரன் குழு அடித்து காயபடுத்தி வைத்தியசாலையில் கூட அடித்தவனை விட்டு அடிவாங்கியவர்களை கை விலங்கிட வைத்த காணொளி களை நீங்கள் பார்க்கவில்லையா ? முதலில் சுமத்திரன் குழு நீதியான ஒரு தேர்தலை வடகிழக்கில் நடத்த விட சொல்லுங்க சண்டித்தனம் இல்லாமல் . -
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சூனியம் வைத்தவர் அவரல்ல அனுரவேதான் தனக்கு தானே சைனாவின் உதவிகளை கடன் முறிவுகளை தள்ளி போடுவதுடன் பழைய கடனுக்கான பகுப்பாய்வுகளை தீவிரமாக்கியதின் பலன் ...... -
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
பெருமாள் replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்
என் அனுபவத்தில் நடந்ததை சொல்ல நேரம் வேணும் உங்களை போல் வெட்டியாய் இருப்பவன் நான் அல்ல . -
தேடி தேடி பார்த்தாலும் தெளிவான கட்டுரைகள் எவையுமே இல்லை . சிலவேளை தோற்றாலும் வெல்லுவார்கள் எனும் நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆக்கும் .
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
பெருமாள் replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இங்கு என்னுடைய நண்பர் ஒருத்தர் ஊர் போய் மோட்டார் சைக்கிள் ஓடியுள்ளார் 2௦௦5ல் அது என்னுடைய பெயரில் வாங்கி ஓடினேன் விக்க மனமில்லாமல் கிடந்ததை அவர் ஓட போலிஸ் பிடிக்க கோர்ட் கேசாகி விட்டது சிங்கனின் கொலிடே முடிந்து இங்கு ஆள் இருக்கணும் எனவே இன்னுமொரு ஆளை அனுப்பி அவரை வாய்தா வாங்க சாட்சி கையெழுத்து போட அனுப்பினேன் அப்போதுதான் தெரிந்தது 6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாது என்னும் சட்டம் . அதன் பின் 3௦ வயது ஆளை அனுப்பி பிரச்சனையை முடித்து கொண்டேன் .போதுமா ?