Everything posted by நிழலி
-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்
மாட்டை களவெடுத்தவர்களின் படங்களையும் பெயர்களையும் பிரசுரிப்பார்கள். ஆனால் இப்படியான குற்றங்களை செய்கின்றவர்களின் பெயரையோ அவர்களின் புகைப்படங்களையோ வெளி விட மாட்டார்கள். இங்கு (கனடாவில்) இப்படியான குற்றங்கள் நடந்து ஒருவரை கைது செய்தால், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு பெயரையும் வெளிவிடுவார்கள். இதன் மூலம், இவர்களால் பாதிக்கப்பட்டு இன்னும் வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள் துணிந்து வந்து சாட்சி சொல்வார்கள் (அப்படி சொல்கின்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ரகசியம் காப்பார்கள்)
-
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு!
இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு தீர்ப்பை ஒத்தி வைத்து விட்டு, பின் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். வயசு வட்டுக்குள் போன பின், அரவணைக்க கூடிய ஆட்களும் உறவுகளும் இல்லாமல் போன சூழ் நிலையில் வெளியில் வந்து வாழ்வை மீள ஆரம்பிக்கும் போது தான், உண்மையான தண்டனையை அனுபவிப்பார்கள் இந்த காட்டேரிகள்.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
இந்த திரியில் யாரும் இன்னும் தடக்கி விழவில்லை போலும்...
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
எனக்கு பிடித்த Kama Sutra: A Tale of Love படத்தையும் இவரின் அம்மாதானே இயக்கினார்? 😊😊😊❣️
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
இவர் ரணிலின் மற்றும் மகிந்தவின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார் என்றும், அதனால் தான் அரசியல் ரீதியில் பழிவாங்கபட்டார் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையான காரணம் எதுவென அறிய முடியவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே நினைத்தீர்கள்?😀 ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
உண்மை தான் உடையார். ஆனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தன் விருப்பின்றி தீண்ட முற்பட்ட ஒருவரைத் தன் திருமண வைபவத்துக்கு அழைத்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதமும் பெற்று, அதனை புகைப்படமும் எடுத்து வெளி உலகுக்கு பகிரவும் செய்வார்களா? இங்கு வைரமுத்து இந்த விடயத்தில் மிக மோசமான மனிதர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சின்மயி?
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
சரிநிகரின் மூலம் அறிமுகமானோரின் list பெரியது. அதில் சிலரைத் தான் குறிப்பிட்டு இருந்தேன். யாழின் மூலமும் அறிமுகமானோரும் பலர்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ரணில் உடனான சமாதான முயற்சி காலகட்டத்தில் 2002 இல் முதன் முதலில் ஏ9 வீதி திறக்கப்பட்டு யாழுக்கு வீதி வழி தெற்கில் இருந்து சென்றவர்களின் நானும் என் சிறு நண்பர்கள் குழுவும் இருந்தது. நான் வெளிக்கிட்ட அன்று தான் தலைவரின் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பும் வன்னியில் இடம்பெற்றுக் கொண்டு இருந்தது. அன்று தெற்கில் இருந்து சென்றவர்களில் ஏழு எட்டு முஸ்லிம்களும் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது முஸ்லிம் 'பெரியவர்கள்' போன்று, தாடி வளர்த்து, வெள்ளை உடை அணிந்து வந்திருந்தனர். புலிகளின் முதலாவது காவலரணில் இருந்த புலிகள் இந்த முஸ்லிம்களை இனிப்பும் கொடுத்து வரவேற்று தம் பயணத்தை தொடர அனுமதித்தனர். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றத்தை துன்பியல் நடவடிக்கை என குறிப்பிடவில்லை. ஆனால் அரசியல் பிரிவில் இருந்தவர்கள் அது ஒரு பெரும் பிழை என்று வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தொடர்பாக தலைவரிடம் கேள்வி கேட்டனர் என ஞாபகம் உள்ளது. ஆனால் அவர் என்ன பதில் சொன்னார் என நினைவில் இல்லை.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உலகம் மிகச் சின்னது என நினைக்க தோன்றுகின்ற தருணம் இது. நான் குருணாகலில் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு சிறு பகுதியினர் குருணாகலுக்கும் வந்து வாழத் தொடங்கினர். சிங்களத்தில் ஒரு சொல் தானும் தெரியாத, மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு அங்கிருக்கும் போது கிடைத்தது. மன்னாரில் ஒரு பெரிய புடவைக் கடையின் உரிமையாளராக இருந்த ஒருவரின் குடும்பமும் அதில் ஒன்று (மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் கொண்ட குடும்பம்). குடும்பத்தை காப்பாற்ற குருணாகலில் வீதியில் பெட் சீட் விரித்து சிறு சிறு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அவர்கள் பட்ட பாடுகளையும், அவமானங்களையும் நேரில் பார்த்தவன் நான். அந்த நேரத்தில் தான் சரிநிகர் பத்திரிகை என் கண்ணில் பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோரோ முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கள்ள மெளனம் சாதித்துக் கொண்டு இருந்த நேரத்தில் சரிநிகர் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டு இருந்தது. முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றம் தொடர்பாக எதிர் கருத்துகளை கொண்ட என்னைப் போன்ற எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்களின் பகுதியினரின் ஆன்மாவாக அது ஒலித்துக் கொண்டு இருந்தது. இதே காரணத்திற்காகத்தான் ரஞ்சித்தும் சரிநிகரில் பங்களிக்க தொடங்கியிருக்கின்றார் என அறிய ஆச்சரியமாக இருக்கின்றது. ......அன்றில் இருந்து சரிநிகரில் நானும் பல சிறு கட்டுரைகளையும், நையாண்டி பத்திகளையும் எழுத ஆரம்பித்து, சரிநிகர் நிறுத்தப்படும் வரை அது தொடந்தது. சரிநிகர் மூலம் தான் எனக்கு சேரன், வ,ஐ.ச ஜெயபாலன், விக்கினேஸ்வரன், கவிஞன் றஷ்மி, அவ்வை, கொல்லப்பட்ட டி.சிவராம் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது..
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
அமெரிக்கா இதைச் செய்யவில்லையா? ஐரோப்பா இதைச் செய்யவில்லையா? அவுஸ் இதையும் செய்யுது தானே? ஐ நா இவற்றைப் பார்த்தும் கண்ணை மூடிக் கொண்டு தானே இருக்கின்றது. ஆகவே ஆனந்தன் செய்தது எல்லாம் குற்றமா என்ன?
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
என் வீட்டுக்கு அருகில் இரண்டு பெண் பிள்ளைகள், மகன் ஆகியோருடன் (பிள்ளைகள் மூவமும் 10 வயதுக்குட்பட்டவர்கள்) ஒரு பெண்மை வாழ்ந்து வந்தார். அவரது கணவர் குடியால் இறந்து போன அரச சேவையில் கடைநிலை ஊழியராக வேலை செய்தவர். அவரது சொற்ப வருமானத்தில் தான் சீவியம் போய்க் கொண்டு இருந்தது. அவர்களிடம் தங்கம் வாங்க வந்த ஆண் போராளிகள், மூத்த மகளின் காதில் ஒட்டிக் கொண்டு இருந்த மிகச் சிறு தோட்டை கட்டாயப்படுத்தி புடுங்கிக் கொண்டு போனார்கள். இது என் கண் முன்னால் நிகழ்ந்தது. புலிகள் மரபுவழி இராணுவமாக மாற முன் நிகழ்ந்த விடயங்கள் இவை.
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!
என்னைப் பொறுத்தவரைக்கும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அதி குறைந்த பட்ச தண்டனை தான் மரண தண்டனை. மரண தண்டனை கண்டிப்பாக அவசியமான ஒன்று. சிறுவர் மீது பாலியல் வல்லுறவு புரிகின்றவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், மரண தண்டனை மிக அவசியம்.
-
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
அரபு / இஸ்லாமிய நாடுகளில் புகைத்தல் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒரு பழக்கம் அல்ல. அதாவது புகைத்தல் ஹராம் அல்ல. அதனால் தான் அரபு நாட்டு முஸ்லீம்கள் தாராளமாக புகைப்பார்கள்.
-
கைகூ வடிவில்!
மீள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் எம்முடன்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
சாவகச்சேரி என்றால் எம் வைத்தியருக்கு அல்லது தங்கத்துக்கு தெரிஞ்ச ஆளாக இருக்குமோ...
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
பார்த்தேன், மனசுடைந்தேன். வெலிக்கடைக்கு சென்று பார்ப்பது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.😊 மூக்குத்தியை மூக்கில் தான் குத்த முடியும்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
ஆனாலும் ஆனாலும் இஷாரா கைதானது எனக்கு இனிப்பான செய்தியே அல்ல.. இப்படிக்கு, அகில உலக இஷாரா விசிறிகள் சங்கத் தலைவர் நிழலி
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
அடடா.. அது மனோரஞ்சனா? காற்றுள்ள பக்கம் சாயும், நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் மனிதர். அப்படி சாய்ந்து சாய்ந்து தமிழர்களின் நலனை அடகுவைக்கும் அரசியல் புரோக்கர். நான் சரிநிகரில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில் சில தடவைகள் இவரை சந்தித்து இருக்கின்றேன். சந்திரிக்காவுக்கு வால் பிடித்துக் கொண்டு, புலிகளை தூற்றிக் கொண்டு திரிந்தார்.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
இந்த சொல் எதனை மறைமுகமாக குறிக்கின்றது என்பது புலவர் உங்களுக்கு நூறு வீதம் தெரியும். ஆனாலும் இந்த தரக்குறைவான வார்த்தையை மீண்டும் மீண்டும் யாழில் வந்து எழுதுகின்றீர்கள். தரம் தாழ்ந்த தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் காவாலிக் கூட்டங்களும் பயன்படுத்தும் இத்தகைய தரங்கெட்ட வார்த்தைகளை யாழில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
அதே நேரம், பல நூற்றுகணக்கான தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல மனசுள்ள சிங்கள மக்களும் இருந்தனர் அந்த காலப்பகுதியில். இவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தமிழ் குடும்பங்களில் என் குடும்பமும் உண்டு. அண்மையில் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து, தம் சிறு வீட்டில் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை பார்க்க சென்ற காணொளி. அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண் இன்று மிக வயதாகி இருந்தார். கனடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை. நானும் அந்த காலப்பகுதியில் குருணாகலில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ரோகணவை நேரில் கண்டு உள்ளேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கே வாக்களித்தும் இருந்தனர்,
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
83 ஜூலைக் கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு தொடர்பாக இன்று வரைக்கும் உறுதியான ஆதாரங்களை நான் காணவில்லை. ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வன்முறை கும்பல்களாலும், ரவுடிகளாலும், பொலிசாராலும், இராணுவத்தினராலுமே இவை நிகழ்த்தப்பட்டன என்றும், அந்த பழிகளை எல்லாம் ஜேவிபி மீது போட்டு அவர்களை தடை செய்தனர் என்றுமே அறிந்துள்ளேன்.
-
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren”
வணக்கம் @kandiah Thillaivinayagalingam , யாழ் இணையம் தமிழுக்கு முதலிடமும் முன்னுரிமையும் கொடுக்கும் தளம் என்பதால், உங்கள் சொந்த ஆக்காமாயிருப்பினும் கூட, முற்றுமுழுதான ஆங்கில பதிவுகளை இணைப்பதனை தவிர்க்கவும். தமிழ் மக்களுக்கு தேவைப்படும் ஆங்கிலத்தில் அமைந்த செய்திகள், செய்திகள் தொடர்பான கட்டுரைகள், விவரணங்கள் போன்றவை - அது எம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் நோக்கத்தை கொண்டிருப்பின் யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கலாம். நன்றி