Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. நான் மஹ்தியின் குடும்பத்தில் ஒருவராக இருப்பின், இறுதிவரைக்கும் இவரை மன்னிக்க மாட்டேன். கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடலை அப்புறப்படுத்த முயன்ற ஒருவர் இவர். காரணம், தனது பாஸ்போர்ட்டினை மஹ்தி வாங்கி வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தினார் (பாலியல் துன்புறுத்தல் அல்ல) என கூறுகின்றார்.
  2. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்! திரியில் இணைக்கப்பட்ட நா.த.க வினரின் பிரச்சார காணொளிகள் நீக்கப்பட்டன. எந்தக் கட்சியினதும் பிரச்சார காணொளிகள் இணைக்கபடல் ஆகாது என்பது கள விதி. அத்துடன் இணைக்கப்படும் காணொளிகள் மற்றும் செய்திகள் அனைத்தும் தரமான, நம்பத்தகுந்த தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  3. தமிழ் சிறி, மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.
  4. இன்று தான் நேரம் கிடைத்தது ஆறுதலாக வாசிக்க. உங்கள் எழுத்து நடை தனித்துவமானது. முதல் இரண்டு பந்திகளில் சொல்லப்பட்ட விடயங்களை தனித்து பார்க்கையிலும், மூன்றாம் பந்தியுடன் சேர்த்து பார்க்கையிலும் வெவ்வேறு வாசிப்பனுவங்களைத் தருகின்றது. மாதுளை பற்றிய விடயமும் அவ்வாறே. எல்லாவற்றையும் சேர்த்து வாசிக்கும் போது நல்லதொரு கதையை அனுபவத்தை வாசித்த உணர்வு வருகின்றது. --- எல்லாரும் ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகள் தான். வாழ்க்கை முழுதும் ஏதோ ஒன்றிற்காக அஞ்சியபடியே தான் வாழ்கின்றோம். அறத்துக்கு, மற்றவர்களின் திட்டுக்கு, அரசுக்கு, அதன் சட்டங்களுக்கு, தெருவில் திடீரென அணையும் மின் விளக்குகளுக்கு, தனிமைக்கு, பெருங் கூட்டம் ஒன்றில் விடப்படுவதற்கு.. எல்லாவற்றையும் விட தவறு ஒன்று செய்து விட்டு, அதை மீட்டிப் பார்க்கும் போது மனசு கேட்கும் கேள்விகளுக்கு... என்று பயந்தபடிதான் வாழ்கின்றோம். மரணம் ஒன்று மட்டுமே பயமற்றது. எல்லா பயத்திலும் இருந்து விடுவிப்பது.
  5. ஏராளன், இவ்வாறான ஒரு சம்பவத்தின் / செய்தியின் புதிய தகவல்கள் பல நாட்கள் கழித்து வருமாயின், அவற்றை புதிய திரி திறந்து பகிருங்கள். ஏற்கனவே உள்ள, பல நாட்களுக்கு முன்னர் திறந்த திரியில் இணைத்தால் அது பலரைச் சேர்ந்தடைய வாய்ப்புகள் குறைவு. நான் இந்த செய்தியை புதிய திரியாக மாற்றியுள்ளேன்.
  6. அரசின் மனித உரமை மீறல்கள் VS புலிகளின்மனித உரிமை மீறல்கள் – ஒன்றுக்கொன்று சமனாகுமா? நடராஜா_குருபரன் புலிகளின் துணுக்காய் முகாம் சமன் = செம்மணி மனிதப் புதைகுழி அல்ல! ஜே.வி.பியின் கொலைகள் சமன் = பட்டலந்தை வதை முகாம் அல்ல! 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெற்கின் குடிமக்கள் கொல்லப்பட்டதல்ல. அனுராதபுரம், காத்தாண்குடி படுகொலைகள் + தற்கொலைத் தாக்குதல்கள் சமன் = முள்ளிவாய்க்கால் அல்ல! அரசுகள் செய்த தவறுகளும், ஆயுத அமைப்புகள் செய்த தவறுகளும் ஒழுக்கம், பொறுப்பு, சட்டம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இரண்டையும் சமமாகக் மதிப்பிடுவதென்பது “திட்டமிட்டு மெதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட துஷ்பிரயோகத்துக்கும்”, “தற்காப்பு அல்லது எதிர்ப்புச் செயல்களுக்குமான” வேறுபாட்டை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது நீதிக்கே விரோதமானது. குறிப்பாக “அரசுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை ஆயுத அமைப்புகள் செய்யும் மீறல்களுடன் ஒப்பிட்டு சமப்படுத்த முயலும் போது, மனித உரிமைகள், அதிகாரம் சார் ஒழுக்கநெறிகள், அரசியல் நியாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்க வேண்டும். ஒரு நாடு அல்லது குடிமக்களின் அரசு என்பது சட்டத்தால், மக்களால், சர்வதேச ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அதிகார அமைப்பு. மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை அரசின் அடிப்படை கடமைகளாக உள்ளன. அதனால், அரசு செய்த செய்யும் தவறுகள் "சாதாரணக் குற்றங்கள்" அல்ல அவை அதிகாரத்தையும், நம்பிக்கையையும் சிதைப்பது, சமூகத்திற்கே எதிரானது. அரசு மனித உரிமைகளை மீறும்போது, அது சட்ட ஒழுங்கின் மேல் தன்னுடைய உரிமையை இழக்கும். அவ்வாறு செய்யும் போது, அது அதிகாரத் தவறை மட்டுமல்லாமல், சமூக ஒழுங்கைப் பற்றிய புரிதலையும் பிழையாக்குகிறது. ஆனால் பெரும்பாலான ஆயுத அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்பெற்ற அமைப்புகள் அல்ல. அவை அரசுக்கு எதிராக, சட்டத்திற்கு பறம்பாக உருவாகின்றன. அவை பெரும்பாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளாகவும் தோன்றுகின்றன. அரசிடம் அதிகாரமும் பொறுப்பும் இரண்டும் உள்ளன.ஆயுத அமைப்புகளிடம் குறிப்பட்ட அளவில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் பொறுப்புக்கட்டமைப்பு நிச்சயமற்றது. இதுவே அவற்றை அரசுகளுடன் ஒப்பீடு செய்ய முடியாத முக்கிய புள்ளியாகிறது. அரசும், அதற்கு சமமாக ஆயுதஅமைப்புகளும் தவறு செய்தார்கள் - தவறு செய்கிறார்கள் என்ற சமப்படுத்தல்கள் அரசியல் சீரழிவுக்கு வழிவகுக்கும். இது அதிகாரத்தின் தவறுகளையும், வன்முறையின் பிறழ்வுகளையும் சமமாக்கும் தோற்றத்தை உருவாக்குகிறது. இதனால், சமூகங்கள் வன்முறையின் காரணங்களை புரிந்துகொள்ளாமல், இருவரையும் ஒரே அளவில் நிராகரிக்கும் நிலையை அடைகின்றன. ஒருவேளை ஒரு ஆயுத இயக்கம் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை, பழிவாங்கல்களை, சித்திரவதைகளை, கொலைகளை செய்தது என்றால் அது தவறானதே. ஆனால் அதனைச் செய்வதற்கான சூழ்நிலைகளையும், அரசியல் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகவியல் பார்வையில், அது ஒரு வன்முறையின் வடிவக் குரல் (violence as political expression) என்ற கருத்து நிலவுகிறது. அதனைத் தவிர்த்து தவறுகளை மதிப்பீடு செய்வது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு ஏற்கும் வன்முறையை மறைக்கும் நிலையாகிவிடும். அரசுகள் உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு (UDHR, Geneva conventions, etc.) கையெழுத்திட்டுள்ளன. அதனால் அவர்களின் செயல்கள் ஒரு சர்வதேச நியாயக் கோட்பாட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மாறாக ஆயுத அமைப்புகள் பெரும்பாலும் அந்தப் பொறுப்புகளுக்கு உட்பட்டதாகவோ – உட்பட்டிருப்பதாகவோ இருப்பதில்லை. மக்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், தவறாக நடந்துகொள்ளும் கட்டமைக்கப்பட்ட அரசே, எதிர்ப்பு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆக அரசின் தவறுகளை - சட்டவியல், ஒழுக்கநெறி, சர்வதேச ஒப்பந்தம் ஆகிய அனைத்தையும் மீறும் கட்டமைக்கப்பட்ட துஷ்பிரயோகமாக சர்வதேச சட்டங்கள் வரையறுக்கின்றன. ஆயுத அமைப்பின் தவறுகள், பொறுப்பு இன்மை, சட்டப்பூர்வ அடையாளம் இன்மை, அல்லது அரசியல் கோணத்தின் கீழ் எதிர்ப்பு வன்முறை என இவை அனைத்தையும் கொண்ட ஒரு குழப்பநிலையாக கருதப்படுகின்றன. அதனால் "அவர்கள் செய்தார்கள், நாமும் செய்தோம்" என்பது நீதியின் மொழியல்ல. ஒவ்வொரு செயலையும் அதன் அதிகார பின்புலத்தோடு, அரசியல் சூழலோடு, சமூகக் காரணங்களோடு மட்டுமே மதிப்பீடு செய்யவேண்டும். மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் பேசுகிறோம். அவை பெரும்பாலும் இரு திசைகளில் நிகழ்கின்றன. ஒரு பக்கம் அரசுகள் – சட்டமும் அதிகாரமும் கையில் கொண்ட அமைப்புகள் – மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கின்றன. மறுபக்கம், ஆயுதங்களைத் தூக்கிய இயக்கங்கள், எதிர்ப்பின் அரச எதிர்ப்பின் பெயரால், சில வேளைகளில் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. இவை இரண்டுமே தவறுதான். ஆனால், இவை இரண்டையும் ஒரே தட்டில் – ஒரே தராசில் வைத்து எடையிட முடியாது. ஒரு அரசு என்பது தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் அல்ல. அது ஒரு கட்டமைப்பின் நிழல். அதனை சட்டம் ஒழுங்கு, பொறுப்புக் கூறல் பதிலளிக்கும் கடப்பாடு, அதிகாரம், உரிமை என அனைத்தும் சூழ்ந்திருக்கின்றன. அதனால் அரசுகள் செய்வது சாதாரண தவறு அல்ல – அது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைப்பதாக, துரோகிப்பதாக அடையாளப்படுத்தப்படும் போர்குற்றம் செய்கிற அரசும், சித்திரவதை செய்கிற அதிகாரியும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டியவர்களே. ஆனால் விடுதலை இயக்கங்களும், ஆயுத குழுக்களும் பெரும்பாலும் ஒரு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பிறக்கின்றன. அவற்றின் வன்முறைகளையும், செயல்களையும் தயவுதாட்சன்யம் இன்றி விமர்சிக்க வேண்டும். வெளிப்படுத்த வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அந்த வன்முறையின் பிறப்பிடமும், கண்ணீரோடு சேர்ந்த கோபமும், கவலையும் சரியாக மதிப்பீடு செய்யப்படுவது அவசியம். ஒரு அரசு, தன்னுடைய குடிமக்களை வஞ்சிக்கையில், அந்த வஞ்சனையில் ஏற்பட்ட பிளவு, சில சமயங்களில் பாறைகளை பிளக்கும் நதியாக ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கின்றன. அந்த நதி திசை தவறி ஓடினாலும், அதன் பிறப்பிடம் – அரசின் அநீதி என்பதை மறக்கக் கூடாது. அதனால், அவர்கள் சித்திரவதை செய்தார்கள், இவர்கள் செய்ததில் என்ன தவறு?” என்ற வாதம், நீதியின் வேரில் நைவேதியமிட்டுவிடும். இரு பக்கமும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இருவரையும் ஒரே தரத்தில் சமப்படுத்துவது, அதிகாரமற்றவரின் அழுகையையும், அதிகாரத்துடன் செய்கிற அடக்குமுறையையும் ஒரே கோடில் வரைவது போல ஆகிவிடும் அது ஒரு தவறான ஒப்பீடாகிவிடும். அதிகாரத்தின் பெயரில் செய்யப்படும் வன்முறைக்கும், அதிகாரமற்றவரின் எதிர்ப்பின் வன்முறைக்கும் இடையே ஒழுக்கமும் சட்டமும் வரையக்கூடிய வரம்புகள் உள்ளன. அரசுகளுக்கு சட்டப் பிணையங்கள் உள்ளன. அவை சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை மனித உரிமைகளை காக்கவே ஏற்படுத்தப்பட்டவை. அந்த அரசுகளே அந்த உரிமைகளை மீறும்போது, அது வன்முறையைவிட மோசமான ஒரு துரோகமாகிவிடும். அரசியல், சமூகம், நீதிமுறை – இவை மூன்றும் அதிகாரத்தின் தரக்கோலாக இருக்க வேண்டும். ஆனால், அவை அதிகாரவந்தத்துக்கு பணிந்து விடும் பொழுது, ‘நீதி’ என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக மாறிவிடும். நம் பார்வை நுணுக்கமாக இருக்க வேண்டும். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால், அவற்றை சமப்படுத்துவதில் உள்ள குற்றவுணர்வின்மையான தன்னிலை நம்மை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். அரசுகள் நிழல்களை விழுங்கும்போது, அந்த நிழல்களில் அடியெடுத்துச் செல்லும் எச்சங்களும் கூட நாம் மறக்கக்கூடாத உண்மைகள். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை புலிகளின் துணுக்காய் முகாமோடு ஒப்பீடு செய்து அதனை நீர்த்துப்போகச் செய்ய முனைவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist # நடராஜா_குருபரன் https://www.facebook.com/share/p/1ZRkwXtxcE/
  7. நான் organ donation இற்கு எழுதிக் கொடுத்து இருக்கின்றேன். என் health card இல் நான் அவ்வாறு எழுதிக் கொடுத்ததுக்கு சான்றாக ஒரு முத்திரை இட்டுள்ளார்கள்.
  8. இந்த வழக்கில் என் புரிதல் (எனக்கு புரிவதற்கு மிகக் கஷ்டமான விடயங்களில் ஒன்று சட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் சொற்களும் / வார்த்தைகளும்) 1. இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வெளியிடும் போது, அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக அமைந்தது என கூறியிருந்தது 2. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என தமிழ் தரப்புகள் சுட்டிக் காட்டின. நிசாம் காரியப்பர் இதனை பற்றி தெளிவாக தமிழ் கட்சிகளுக்கு எடுத்துரைத்து இருந்தார். தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தில் இதை முன்வைத்து கடுமையாக எதிர்த்து இருந்தது. இதில் முன் நின்றவர் சுமந்திரன். கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு இந்த வர்த்தமானி அறிவிப்பு பற்று தெளிவாக எடுத்துரைத்தது நினைவு. 3. பாராளுமன்ற விவாதங்களும் அழுத்தங்களுக்கும் பின்னர் இனவாத அனுர அரசு இந்த வர்த்தமானியை மீளப் பெறப் போவதாக அறிவித்தது. 4. ஆனால் மீளப் பெறும் வர்த்தமானி அறிவித்தலை அனுரவின் இனவாத அரசு இன்னும் வெளியிடவில்லை 5. எனவே காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என்ற விடயத்தின் அடிப்படையில் சுமந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்க செய்து இருந்தார் 6. அந்த மனுவை எடுத்து கொண்ட நீதிமன்றம், அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்கி உள்ளது (ஏனெனில் சட்ட ரீதியில் இவ் அறிவிப்பு செல்லுபடியற்றது என மன்றுக்கு புரிந்து இருக்கும்) 7. அத்துடன் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பாக அரசு ஏதாவது செய்து இருப்பின் அதனை சமர்பிக்க சொல்லியுள்ளது நான் நினைக்கின்றேன், அனுரவின் இனவாத அரசுக்கு வேறு வழி இல்லையென. வர்த்தமானியை மீளப் பெறும் அறிவித்தலை விடுக்கும் என நினைக்கின்றேன் (பின்னர் இன்னொரு விதமாக காணி அபகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்)
  9. நல்ல பலனளிக்க கூடிய முயற்சி. சிங்கள இனவாத அரச இயந்திரத்தின் முதுகொழும்பாக இருக்கும் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு விளைவை ஏற்படுத்துவது சவாலான விடயம். இதைச் செய்த சுமந்திரனுக்கு நன்றி.
  10. ஆஹா... நல்லதொரு உதாரணம். ரசித்து சிரிக்க முடிந்தது.😆 ட்றம் தன் முதல் ஆட்சியில் செய்த வேலைகளில் ஒன்று, ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியை கொன்றது. அத்துடன் ஈரானுடனான அணு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது. இரண்டாம் தடவை ட்றம் வந்தால் கண்டிப்பாக ஈரானின் முல்லாக்களுக்கு அடி இருக்கு என்று அவர் வர முன்னரே சில தடவைகள் யாழில் எழுதியிருந்தேன். இதே கருத்தை வாலியும் தெரிவித்து இருந்தார்.
  11. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரியான தகவல்களாக இருக்க வாய்ப்பில்லை. பிரான்ஸ் இவ்வாறான புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஏதேனும் உறுதிப்படுத்தக் கூடிய செய்திகள் உள்ளனவா?
  12. தமிழ் சிறி, இவர் அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்று மிகவும் விரும்பியர்களில் நீங்களும் ஒருவர் என நினைவு. ஆனால் இப்ப ஏன் இந்த திடீர் மாற்றம்?
  13. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  14. இதே கருத்து தான் எனதும். ஈரான் அரசு பலவீனமாக்கப்பட்டு முல்லாக்களின் அதிகாரம் முற்று முழுதாக செயலிழக்க செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கும் அணு சக்தி ஆற்றல் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.
  15. நல்லதொரு கவிதை. யாழில் இணைந்தமைக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள் எமக்கு.
  16. இந்த சம்பவத்தை வைத்து Sully எனும் படம் 2016 இல் வெளியானது. மிகவும் சுவரசியமான படம். Netflix இல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.
  17. இனப்படுகொலையில் உச்சம் தொட்டு இருக்கும் இஸ்ரேலுக்கு ஒரு போதும் நான் ஆதரவளிக்கப் போவதில்லை. அதே வேளை தன்னை எதிர்க்கும் தன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும், எதேச்சதிகார முல்லாக்களின் தலமை ஈரானில் இருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும். ஈரானுக்கு அடிக்கும் அடி புட்டினது புட்டத்திலும் வலியை ஏற்படுத்தும்.
  18. ஓம்.. இந்த விபத்தில் இவர் மட்டுமே தப்பியுள்ளார் போல இருக்கு. Business Class இருக்கை எண் 111 இல் இருந்த இவர், விபத்து நடந்த விமானத்தின் இருந்து தானாகவே தப்பி நடந்து வெளியே வந்துள்ளார்
  19. கடும் துயரமான செய்தி. ஒரே நொடியில் 240 இற்கு மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். விமானம் வீழ்ந்து நொருங்கிய கட்டிடம், மருத்துவ மாணவர்களின் கன்ரீன் (Canteen) என்கின்றனர். அந்தக் கட்டிடத்தில் இருந்தும் பலர் பலியாகியிருக்க வாய்ப்புகள் உள்ளதாம். பேரிழப்பு இது.
  20. விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?
  21. ஒரே செய்தியை ஒரு பொறுப்பான ஊடகம் ஒன்றும், பொறுப்பற்ற ஒரு ஊடகம் ஒன்றும் எவ்வாறு தலைப்பிட்டு உள்ளது என்பற்கு இந்த திரியே சாட்சி.
  22. அந்தப் பாடல் படத்தில இல்லையாம். மணி இனி ஓய்வெடுக்கலாம். இல்லையேல் இருக்கும் நல்ல பெயரும் இல்லாமல் போய் விடும்.
  23. கொலை செய்தவனிம் கூற்றை அப்படியே நம்புகின்றனர பலர். கொலை செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் தன் பக்க நியாயங்களை கூறுவதற்கு கூட சந்தர்ப்பம் இல்லாத நிலையில் கொலைஞன் கூறுவதை அப்படியே எந்தக் கேள்வியும் இன்றி நம்புகின்றனர். அல்லது அப்படி நம்ப விரும்புகின்றனர். உண்மை முற்றிலும் வேறானதாகக் கூட இருக்கலாம். கொலைகாரன் எப்பவும் தன் செயலை நியாயப்படுத்ததான் செய்வான். தன்னால் கொல்லப்பட்டவர் மீது பிறருக்கு வெறுப்பை வரச் செய்வதன் மூலம் தன் செயலை நியாயப்படுத்தவே முயல்வான். அதை அப்படியே நம்புகின்றவர்களை என்னவென்பது? படுகொலைகளை செய்தவர்களுக்கு கூட தம் பக்க நியாயங்களை சொல்வதற்கு சட்டங்களும் நீதி அமைப்பும் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை வழங்காது உடனடியாக தண்டனை கொடுப்பதும் அதை நியாயப்படுத்துவதும் காட்டுமிராண்டித்தனம்.
  24. இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார். எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர். தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.