Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13824
 • Joined

 • Days Won

  151

Everything posted by நிழலி

 1. ரதி இந்த திரியில் எதுவும் இன்னும எழுதவில்லை சுமே. அத்துடன் அப்படி எழுதிவிட்டு அதை தூக்க சொல்பவரும் இல்லை அவர்
 2. சந்தோசமான விடயம். வாழ்த்துகள் சுமே! மேலும் மேலும் எழுதுங்கள்! நாவல் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள். ஊடகவியலாளரும் எழுத்தாளரும் மான என்.சரவணனின் நூல் ஒன்று கடந்த ஆட்சியில் இலங்கை அரசின் விருது பெறும் போதும் இப்படியான அவமதிப்புகள் பலரால், அ.இரவி உட்பட பலரால் நிகழ்த்தப்பட்டது. இப்படியானவர்களும் இல்லையென்றால் ஊக்கமும் இருக்காது. கடந்து செல்லுங்கள்.
 3. சுமந்திரன் பட்டத்திருவிழாவுக்கு வந்தால் பெருமாள் காப்பாற்ற வருவார்
 4. @Justin இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி. இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?
 5. நான் இந்தச் சட்டத்தை வரவேற்கின்றேன். வெளி நாடுகளில் கள்ள மட்டை பயன்படுத்தி மாட்டுப்பட்டவர்களில் இருந்து, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் வரைக்கும் தங்களின் குற்றங்களை மறைத்து ஊருக்கு போய் அப்பாவிப் பெண்களை திருமணம் முடித்து ஏமாற்றுவது இதன் மூலம் தடுக்கப்பட்டும் என நம்புகின்றேன். வெளினாட்டு வரன் என்றவுடன் எந்தக் கேள்வியும் இல்லாமல் தம் பிள்ளைகளை கட்டிக் கொடுக்கும் சிலர் இதன் மூலமாவது தமக்கு கிடைத்த வரன் பற்றி அறிந்து கொள்ள முடியும். கனடாவில் இருப்பவர்கள் குற்றம் எதுவும் செய்திருக்காவிடின், இப்படியான பொலிஸ் கிளியரன்ஸ் பெறுவது இலகு. ஆனால் ஏதாவது குற்றம் செய்து இருந்தால், தெளிவாக அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
 6. தலையிடுதல் இடையூறாக அமையாத வரைக்கும் பிரச்சினை இல்லை. தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர் என்ற பிரிவு நிச்சயம் உள்ளது. அன்றாட பிரச்சினைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான, பொருளாதார பிரச்சினைகள் வரை இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் முற்றிலும் வேறானவை. உணர்வு பூர்வமான உறவு என்று பார்த்தால் கூட எம்மால் தாயகத்தில் இன்றிருக்கும் ஒருவரது உணர்வை புரிந்து கொள்வதில் சவால்களும் கேள்விகளும் உள்ளன. தாயக மக்களின் அரசியல் தெரிவுகளுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் மட்டுமே எம்மால் கொடுக்க முடியும், தலையீட்டை அல்ல. நதி கீழ் இருந்து மேல் நோக்கி பாய முடியாது. தாயக மக்கள் முன் இருக்கும் தெரிவு கொஞ்சம் நல்ல பேயை தெரிவு செய்வதா அல்லது மோசமான பேயை தெரிவு செய்வதா என்பதே. தாயக மக்கள் கொரனாவுக்கு கொஞ்சம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர். ஏனெனில் நவீன துஷ்ட கைமுனுக்கள் போட இருந்த பேயாட்டத்தை இந்த கொரனா கொடுத்த நெருக்கடி வெகுவாக குறைத்து விட்டது.
 7. எந்த தமிழர்களை குறிப்பிடுகின்றீர்கள் ரஞ்சித்? தாயக தமிழர்களையா அல்லது புலம்பெயர் தமிழர்களையா? தாயக தமிழர்கள் எனில் அவர்கள் நிச்சயம் மகிந்த சகோதரர்களின் ஆட்சி தொடர விரும்பப் போவதில்லை.
 8. ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 9. நிழலியானந்தா பூனை வளர்த்தால், அது உள்ளாடைகளை திருடுவதுடன் நிறுத்தில் கொள்ளும்... வேறு எதையும் திருடாது. ஆம்பிளை நேர்ஸ்தானே இப்ப அவரை பார்ப்பது... அது தான்.
 10. முக்கியமாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பெரும் இனப்படுகொலை மூலம் போரை அவலத்தினூடாக (தற்காலிகமாக) நிறுத்தினார்கள்.
 11. நலம் பெற்று மீண்டு வந்து எம்மை சிரிக்க வைக்க வாழ்த்துகள் !
 12. எனக்கு படம் பிடித்து இருக்கு. முக்கியமாக இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள், எஸ்.ஜே.சூர்யாவின் (மிகை) நடிப்பு, இடையறைக் கலந்து இருக்கும் நகைச்சுவை... நல்ல விறுவிறுப்பான படம். ஒரு 5 நிமிடம் கவனிக்காவிட்டாலும். அடுத்தடுத்த காட்சிகள் விளங்காமல் குழப்பி விடும். எல்லாரும் சொன்ன மாதிரி எடிட்டிங் சூப்பர்!
 13. முகத்துவாரம் விஸ்ட்வைக் பங்களாவில்: வுயிஸ்டின் ஆவி! (கொழும்பின் கதை - 8) என்.சரவணன் ஆளுநர் வுயிஸ்ட் இலங்கையில் மேற்கொண்ட குற்றங்களுக்காக டச்சு இராணுவ நீதிமன்றம் (Heeren XVII) நிறைவேற்றிய கொடூரமான மரண தண்டனையைப் பற்றிப் பார்த்தோம். வுயிஸ்ட் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரின் மனைவி பார்பரா வுயிஸ்டைக் காப்பாற்றுவதற்காக ஒல்லாந்திலிருந்த Heeren XVII இடம் சென்று உதவி கோரினார். ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யொஹான் (Johan de Mauregnauld) என்பவர் தலைமையில் விசாரித்து முடிக்கப்பட்ட இந்த வழக்கின் அறிக்கை 400 பக்கங்களை விட அதிகமானது. சட்டவிரோதமாக இராணுவ நீதிமன்றத்தை அமைத்தது, அதற்குத் தன்னைத் தானே தலைவராக நியமித்துக்கொண்டது, தண்டனை நிறைவேற்றுபவராக தன்னை ஆக்கிக்கொண்டது, அதன் மூலம் அப்பாவிகள் 19 பேரை ஈவிரக்கமின்றி கொன்றது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கு அன்றைய டச்சு நீதித்துறைக்கு ஒரு பெருமதிப்பைக் கொடுத்தது. இதைப் பற்றி 1735 இல் ஒல்லாந்திலுள்ள ரோட்டர்டாமில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. "ஆளுநர் பெட்ரஸ் வுயிஸ்ட் இலங்கையில் சட்டவிரோதமாக நீதியைக் கையாண்டார். அப்படிப்பட்ட ஆளுநருக்கு பத்தாவியா நீதித்துறை தகுந்த தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டியது.” இந்த வழக்கின் விளைவாக இனிமேல் எந்தவொரு நாட்டு டச்சு ஆளுநரும், தளபதியும் நீதிச்சபையின் கூட்டங்களில் பங்குபற்றக்கூடாது என்றும், நீதித்துறை விவகாரங்கள் உயர் அதிகார தலையீடு இன்றி இயங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் வுயிஸ்டின் அக்கிரமங்களுக்கு ஆதரவளித்த இராணுவ நீதிமன்றத்தைச் சேர்ந்த பதினைந்து பெரும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய போதும் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள். சிலர் சிறையிலேயே இறந்துபோனார்கள். சிலர் தொடர்ந்தும் சிறையில் சில வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அரசின் பொது மன்னிப்பு பெற்று 1736 ஆம் ஆண்டு எஞ்சிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். வுயிஸ்டின் மனைவி பார்பராவும், மகள்மாரும் 1733 ஆம் ஆண்டு வுயிஸ்டின் சொந்த இடமான ஒல்லாந்திலுள்ள ஹார்லம் (Haarlem) திரும்பினார்கள். பார்பரா 1746ஆம் ஆண்டு அவரின் 53 வது வயதில் இறந்தார். பொதுவாக ஆளுநர்கள் இடமாற்றம் பெற்று இன்னும் சில நாடுகளை ஆளும் தகுதியையும் பெற்று ஆள்வார்கள். ஆனால் வுயிஸ்ட் இளம் வயதிலேயே தனது கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். அவ்வளவு ஆஸ்தியும், அந்தஸ்தும் இருந்தும் தனது குற்றங்களால் அவர் 41 வயதிலேயே அவர் கொல்லப்பட்டுவிட்டார்.இலங்கையை அவர் மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும் ஆளுநராக வாழ்ந்தார். வுயிஸ்டின் ஆட்சிக் காலத்தை டச்சு ஆட்சிக்காலத்தின் கறைபடிந்த பக்கம் என்று குறிப்பிடுவார்கள். இலங்கையின் சரித்திரத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆளுநர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களே அதிகாரம் படைத்த முதன்மை ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களில்; இப்படி விசாரணை செய்யப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்பட்ட ஒரேயொருவர் பேத்ருஸ் வுயிஸ்ட் தான். இலங்கையில் பல ஆளுநர்கள் கொடுங்கோலர்களாக இருந்திருகின்றனர். ஆனால் இங்கே தமது அதிகார வரம்புகளை மீறியதற்காவும், சொந்த அதிகாரிகளையே துன்புறுத்திக் கொன்றமைக்காகவும் அதிகமாக அவர் சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்கு உள்ளானார். Kasteel Batavia - வுயிஸ்ட் சிறை வைக்கப்பட்டிருந்த அன்றைய பத்தாவியா கோட்டை. வுய்ஸ்ட் விக் ஆவி வுய்ஸ்ட் தனது ஆட்சிக் காலத்தில் காலத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்மாவத்தை வழியாக மட்டுக்குளி சென்றடையும் பாதையை வுயிஸ்ட் தான் அமைத்தார். 1720களில் அமைக்கப்பட்ட அந்த வீதியின் வரலாறு இப்போது முன்னூறு ஆண்டுகளை எட்டுகிறது. கொழும்பின் நீளமான வீதிகளில் ஒன்று அது. இன்று அது ஒரு முக்கியமான பாதையாக ஆகியிருப்பதை அறிவீர்கள். கொழும்பு - மட்டக்குளியில் காக்கைத்தீவு வழியாக களனி கங்கையின் முகப்பு வரை செல்லுகிறது வுய்ஸ்ட்விக் வீதி (Vuystwyk Road). வுயிஸ்ட் அளுத்மாவத்தை முடிவில் தனக்கான ஒரு பங்களாவைக் கட்டினார். நீச்சல் தடாகத்துடன் அமைக்கப்பட்ட அந்த பங்களாவில் உல்லாசமாக களித்தார் அவர். அதற்கு Vuystwijk என்கிற பெயரைச் சூட்டியிருந்தார். வுய்ஸ்ட் கிராமம் என்று அதற்குப் பொருள். அந்த பங்களாவுக்கு குதிரை வண்டிலில் செல்வதற்கு சரியான பாதை இருக்கவில்லை. அதற்காகவே போடப்பட்ட வீதி தான் அது. முகத்துவாரத்தில் (Mutwal) அழகான காட்சி அமைப்புடன் கூடிய இடமாக அப்போது அவருக்கு பிடித்திருந்த இடத்தில் தான் அவர் அந்த பங்களாவைக் கட்டினார். கோட்டையிலிருந்து முகத்துவாரம் வரையிலான பாதையை உருவாக்குவதற்காக கற்களை கைமாற்றி கைமாற்றி இரு மருங்கிலும் பாதையோரங்கள் அமைக்கப்பட்டது. இன்றும் கொழும்பில் விஸ்ட்வைக் பார்க்கை (பூங்கா) அறியாதவர்கள் வெகு சிலராகத் தான் இருப்பார்கள். ரசமுன கந்த என்கிற மேட்டில் தான் வுயிஸ்டின் பங்களா அன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்று பல வீடுகளும், கடைகளும், தொழிற்சாலைகளும் நிறைந்த சூழல் அது. வான் டோர்ட் (Van Dort) இலங்கையின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். இலங்கையின் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த கேலிச்சித்திர சஞ்சிகையான “முனியாண்டி” சஞ்சிகையில் அவர் வரைந்த ஓவியங்களும் கட்டுரைகளும் இன்று பேசப்படுகின்றன. அதில் அவர் எழுதிய கட்டுரையில் பதினாறு வயதையுடைய கொழும்பு அக்காடமி மாணவன் வுயிஸ்ட் முன்னர் வாழ்ந்த வீட்டிலிருந்து சுமார் 300 யார் தூரத்தில் அமைந்திருந்த நீச்சல் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். "இரவும் பகலும் புலம்பல்களும் பெருமூச்சுகளும், அழுகையும் கேட்கின்றன" என்று உள்ளூர்வாசிகள் அந்த இளைஞனுக்குத் தெரிவித்ததை வான் டோர்ட்திடம் தெரிவித்திருக்கிறார். தனிமையும், கடற் காற்றின் சலசலப்பும் குளத்தைச் சுற்றி வளரும் மூங்கில்களால் உருவாகும் சத்தமாக அது இருக்கக்கூடும் என்று வான் டோர்ட் எண்ணினார். அவர் 1894 இல் Vuyst Wyk ஐ சென்று பார்வையிட்டபோது, கிணறும் குளமும் சிதைந்து கிடப்பதைக் கண்டார், மேலும் மூங்கில்கள் கூட எப்போதோ இல்லாமல் போயுள்ளன. அப்படியிருக்க எவ்வாறு இந்த சத்தம் வருகின்றன என்று சற்று வியப்புற்றார், உள்ளூர்வாசிகள் சிலர் அவரிடம், கவர்னர் வுயிஸ்ட்டின் ஆவி எழுப்புகின்ற சந்தம் தான் அவை என்றும் உறுதியாக நம்புகின்றனர். வுயிஸ்ட் அங்கே தனது மலே நாட்டு சமையல்காரருடன் சேர்ந்து மனித இறைச்சிகளை உண்டதாக அதற்கு முன்னர் ஒரு கதையும் நிலவிருக்கிறது. அது உண்மையோ பொய்யோ. ஆனால் அவரின் காணியில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை வான் டோர்ட் பதிவு செய்திருக்கிறார். வுய்ஸ்ட் வைக் பகுதியில் ஆவிக் கதைகளை நம்புபவர்கள் இன்றும் உள்ளார்கள். அவர் கண்மூடித்தனமாக செய்த அராஜகங்களின் இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும். 1738 இல் சிங்களத்தில் வெளிவந்த முதலாவது நூல் Singaleesch belydenis boek - சிங்கள எழுத்துருவாக்கத்துக்கு தடை இலங்கையில் முதன் முதலில் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணி குறித்து இதற்கு முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் தான் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஜாகோப் (Jacob Christian Peilat) 1725 ஆம் ஆண்டு கேபிரியேல் ஷாட்டிடம் ஒப்படைத்திருந்தார். நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட். 1726 இல் வுயிஸ்ட் ஆளுனராக பதவியேற்றதும் இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிட்டார். சுதேச மொழி எழுத்துவார்ப்புப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. பல சித்திரவதைகளுக்கும் உள்ளானர் ஷாட். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. வுயிஸ்டுக்குப் பின் ஆளுநர் Gustafi Willem Baron Van Imhoff பதவியேற்றதன் பின்னர் தான் ஷாட் விடுதலையானார். சிறை-சித்திரவதையை அனுபவித்துவிட்டு விடுதலையான ஷாட் அதன் பின் வந்து உருவாக்கிய எழுத்து வார்ப்புக்களைக் கொண்டு தான் 1737 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிங்கள நூல் (“The Singaleesch Gebeede-Boek”) வெளியானது. இன்னும் சொல்லப்போனால் அது தான் இலங்கையின் முதலாவது சுதேச மொழி நூல் எனலாம். சில வேளை வுயிஸ்ட் ஷாட்டை சிறையிடாமல் இருந்திருந்தால் இலங்கையின் முதலாவது சுதேசிய மொழி நூல் 1720களிலேயே வெளிவந்திருக்கக் கூடும். கேபிரியேல் ஷாட் தான் இலங்கையில் முதலாவது அசையும் சிங்கள எழுத்துக்களின் பிதா என்று தான் கூற வேண்டும். பின்னாட்களில் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்த Dutch Burgher Union வெளியிட்ட சஞ்சிகையில் வுயிஸ்ட் ஒரு பயங்கரவாத ஆட்சியாளன் என்று வர்ணித்தது. அடுத்த இதழில் கொழும்பின் புதிய கதை. நன்றி - தினகரன் - 19.12.2021 https://www.namathumalayagam.com/2021/12/VuystGhost.html?fbclid=IwAR1fCxJhly1GYIoMuoxZxWm_FFG0ZMFAqz3DYXxekjFpCx_47K49ibPF4TY
 14. தமிழக கட்சிகளுக்கு இடையிலான குடுமிபிடி சண்டைகள் தொடர்பான செய்தி ஒன்று நீக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையிலான இத்தகைய சண்டைகள் தொடர்பான செய்திகளை/ தரக்குறைவான மீம்ஸ்களை இணைப்பதை தவிர்க்கவும்.
 15. ஹர்த்தால் “ நாளை யாழ்குடா நாடு முழுவதும் ஹர்த்தால்”எண்டு முரசொலியில முன்பக்கம் வாசிச்சவுடன் எனக்குள் ஒரு குறுகுறுப்பு . ஏன் இந்த ஹர்த்தால் , ஹர்த்தால் எண்டால் என்ன , யார் இதை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள் , யாரை எல்லாம் ஹர்த்தால் செய்யச் சொல்லுறார்கள் எண்ட சிந்தனை ஒண்டும் இல்லை, ஆனாலும் எனக்குள் இருந்த வேற ஆர்வம் அம்மாவுக்கு தொற்ற முதல் நான் வெளிக்கிட்டன் . இண்டைக்காவது கொஞ்சம் இருந்து மெல்லச் சாப்பிடன் எண்டு வீட்டை சொன்னதை எல்லாம் கவனிக்காம , அவசரமா வெளிக்கிட்டன் ஹர்த்தாலை எப்பிடி முழுமையா அமுல் படுத்துவது எண்டு. நல்ல ஞாபகம் , நிசாகரன் லண்டனுக்கு படிக்கப் போய் அனுப்பின முதலாவது கடிதத்தில் “ மச்சான் இங்கேம் உங்க மாதிரித்தான் திடீரெண்டு holiday எண்டு அறிவிச்சா, விசிலடிச்சு கூக்காட்டுறாங்கள்” எண்டு எழுதி இருந்தான். படிக்கேக்க மகிழ்ச்சி தாறது ரெண்டே ரெண்டு விசயம் , ஒண்டு திடீரெண்டு பாடம் free வாத்தி வரேல்லை எண்டதும், மற்றது நாளைக்கு ஹர்த்தால் பள்ளிக்கூடம் இல்லை எண்டிறதும் தான். “ நான் போட்டு வாறன் எண்டு சொல்லீட்டு“ அம்மா ஓமெண்ட முதல் வெளிக்கிட்டிட வேணும் இல்லாட்டி வாசிக்காமலே sign பண்ணிற bank agreement மாதிரி அம்மான்டை condition list பெரிசா இருக்கும். மத்தியானம் வந்து உடுப்புத் தோய்க்கிறது , பின்னால வாழைக்கு பாத்தி வெட்டிறது , தூசு தட்டிறது ஒம்பதாம் வாய்ப்பாடு, ரெண்டு தேவாரம் , English spelling பாடமாக்கிறது எண்டு மனிசி போற mood ஐயே குளப்பீடும். அவைக்கு ஒரே கருத்துத்தான் “ விளையாட்டு படிப்பைக் கெடுக்கும் , படிப்பெண்டாக் கஸ்டப்பட்டு படிக்கோணும் “ . ஹர்த்தால் அண்டு சைக்கிளில எங்கேம் தூரப்போயிடுவன் எண்டு சைக்கிளைப் பூட்டி துறப்பை ஒளிச்சு வைச்சிட்டினம். மதிலால நடந்து போய் பக்கத்து ஒழுங்கை நவாஸ் குறூப்பாட சேர cricket தொடங்கிச்சுது. சிவசொரூபன் open bowling , அரவிந்தன் open batting எண்டு team ஐப் போட்டு வழமை போல எங்களை கடைசிக்குத் தள்ளி விட்டாங்கள். எப்பவும் கடைசிவரை batting தர மாட்டாங்கள் அதுகும் ஆக்கள் கூட எண்டால் team இலயே இல்லை. Last-man I chance கேட்டு ஒருக்கா என்னை அவுட்டாக்கேலாம கஸ்டப்பட்டாப்பிறகு தான் ஒரு மாதிரி team இல சேத்தாங்கள் , reserve playerஆய். எங்கடை சாபம் பலிக்க ரெண்டாவது ஓவரிலயே அடிச்ச பந்து பக்கத்து வெறும் வளவுக்கை விழுந்து துலைஞ்சு போக , பத்தைக்குள்ள பந்தில்லாத ஆத்திரத்தை பக்கத்து தென்னை மரத்தில காட்டினம். இவ்வளவு நேரமும் கடைசியாய் இருந்த நான் இப்ப open batsman ஆ வந்தன் வேற ஆக்கள் இல்லாத படியால். நான் மரம் ஏறி இளனீர் , தேங்காய் எல்லாம் புடுங்கிப் போட , cricket plan மாறிச்சுது. தேங்காயை உரிச்சு பக்கத்து வீட்டையே வித்து , அதில முன் ஒழுங்கையில ஜெயந்தன் வீட்டை கோழி வாங்கி ,செல்லடிப் பயத்தில வேலணைக்கு வீட்டை விட்டுப் போன lecturer வீட்டை ஆக்கிரமிச்சம் . ஒரு வீட்டை மிளகாய்த்தூள், ஓரு வீட்டை வெங்காயம் எண்டு உரிமையோட களவெடுத்து ஒரு சமத்துவக் கறிவைக்க , என்னத்தோட கறியைச் சாப்பிடிற எண்டு கேள்வி வந்திச்சிது. சந்திக்கடையில ரொட்டி வாங்குவம் எண்டு முடிவெடுக்க , நான் போறன் எண்டு வெளிக்கிட்ட கணேஸ்குமார் அண்ணையையும் , சிவசொரூபனையும் ரொட்டியோட வருவினம் எண்டு வெந்த கோழியும் , வெறும் வைத்தோட நாங்களும் பாத்துக் கொண்டிருந்தம். ஓடிப்போனா ஐஞ்சு நிமிசத்தூரம் ஆனால் அரை மணித்தியாலமாக் காணேல்லை , சுடச்சுட ரொட்டி போட்டுக் கொண்டு வாறாங்களோ எண்டு யோசிக்க ஒழுங்கையால நடந்து போன ரெண்டு பேரும் மதில் பாஞ்சு ஓடி வந்து , “ பங்கர் வெட்டப் பிடிக்கப் பாத்தாங்கள் நல்ல வேளை அருந்தப்பு” எண்டு விவரிக்க , ரொட்டி போச்சே எண்டு நவாஸ் கவலைப்படத் தொடங்கினான். கொண்ட கொள்கையில மாறக்குடாது எப்பிடியும் ரொட்டி தான் சாப்பாடு எண்டு ஆரோ சொல்ல , தினேசின்னடை அப்பா பாங்( bank) மனேஜர் அரை நேரத்தோட பாங்கை பூட்டிட்டு வந்தார். ஆபத்துக்குப் பாவமில்லை எண்டு அவரைக் கேக்க தம்பி எனக்கும் சாப்பாடு வேண்டப்போறன் , வாங்கித்தாறன் எண்டு சொல்லி காலத்தால் அவர் செய்த உதவிக்கு நன்றியாக அடுத்தமுறை அவர் வீட்டுக் கோழியையே பிடிச்சு சமைச்சனாங்கள். ஹர்த்தால் இன்னும் தொடரக் காலமைச் சாப்பாடு முடிஞ்ச உடனயே set ஆகி cards, carom எண்டு தொடங்கினம். , நெல்லிக்காய் , மாங்காய் , புளியங்காய் எண்டு எல்லா மரத்துக் காயும் வயித்தை நிரப்பிச்சுது. உழைக்கும் வர்க்கத்து உறுப்பினர்களின் உபசரிப்பால் சில நேரம் ரொட்டியும் கறியும் வாங்கி பிச்சுக்கொத்தி( கொத்து ) சாப்பிட்டம் . ஆர்வத்தில கனக்க தேங்காயைப் புடுங்கீட்டு விக்கப் பாக்க ,” sorry கள்ளத் தேங்காய் வாங்க மாட்டம் “ எண்டு அக்கம் பக்கம் சனம் சொல்லிச்சது. கொம்பனிக்கு நட்டம் வராம இருக்க , பால் புளிஞ்சு தொதல் கிண்ட, வந்தது கழியா தொதலா எண்டு ஆராயாமல் சட்டியோட சாப்பிட்டம் . ரெண்டு நாள் ஹர்த்தால் முடியாமல் , தொடர்ந்து பள்ளிக்கூடத்தைப் பூட்ட ,தென்னை எல்லாம் மொட்டையாக , கோழி எல்லாம் கூட்டுக்க பாதுகாக்கப்பட சாப்பட்டுக்கு வீட்டை நம்பி இருக்க வேண்டிய நிலை வந்தது. ரெண்டு நாளில வாறகிழமை பள்ளிக்கூடம் திறக்குதாம் எண்டு பேப்பர் தலைப்புப் போட , எங்கடை நிஜ உலகத்தில இருந்து கனவுலகத்திக்கு ( பெற்றோரின் கனவு) போக ரெடியானோம். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
 16. 1. அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா 2. பன்னாடைக்கு வடிகட்டும் ஆற்றல் உள்ளது.
 17. கூகிளின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியுடன் ரஷ்ய அதிபர் புட்டின் கூட யாழ் களத்தை வாசித்த பின் தான் படுக்கையில் இருந்தே எழும்புவார் என்று சொல்லினம். பைடன் கொஞ்சம் லேட்டாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் தான் பார்ப்பவராம்.
 18. திடீர் ஸ்ரைக் அல்ல இது. ஒரு நாள் முன்னரே தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தார்கள். அத்துடன் இந்த ஸ்ரைக் பல நாட்களுக்கு நீடிக்கவும் இல்லை.
 19. இவர் பாராட்டிய ஒரு விடயம் ஏதும் உள்ளதா? எல்லாக் கட்சிகளுடனும் முரண், எல்லாவற்றிலும் ஒரு குறை....
 20. மேலும் வாழ்த்துக் கூறிய நொச்சி, ஜெகாதுரை, பெருமாள், ராசவன்னியன் அண்ணா மற்றும் எப்போதும் தமிழன் ஆகியோருக்கும் என் நன்றி. வாழ்ந்த காலங்களை விட வாழப் போகும் காலம் குறுகிக் கொண்டு செல்லும் நேரம் இது. இந்த மிச்ச சொச்ச வாழ்க்கையில் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
 21. வாழ்த்துக்கு நன்றி பாஞ்ச் அண்ணா என் 100 ஆவது வயதில் இப்படி தான் இருப்பேன் என நினைக்கின்றேன்.
 22. காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன்.
 23. பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சுவி அண்ணா, கிருபன், உடையார், குமாரசாமி அண்ணா, வாதவூரன், ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன், யாயினி, நிலாமதி அக்கா, தமிழ் சிறி, புரட்சி, நந்தன், கந்தையா, நுணா, இணையன் மற்றும் புங்கையூரன் ஆகியோருக்கு என் நன்றிகள்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.