Everything posted by நிழலி
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாகரிகமான கருத்தாடல்களுக்குரிய அறிவில் வரட்சி ஏற்படும் போது இருக்கவே இருக்கின்றது எதிர் கருத்தாடல் செய்கின்றவர்களை தரக்குறைவான, மலினமான வார்த்தைகளால் தூற்றி சந்தோசமடைவது. இவ்வாறு செய்வதன் மூலம் தம் தரப்பில் இருக்க கூடிய நியாயங்களை கூட ஏளனப்படுத்தி மலினப்படுத்தி விடுகின்றனர்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அயலில் வீடு வாங்கியிருப்பின், அசைவம் சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள். ஏனெனுல் தேவதைகளுக்கு அசைவம் பிடிக்காதாம்.😍
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நீதி கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த காமுகனிடம் இருந்து 5 பெண் பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர் சொன்னது 200 வீதம் தவறான தகவல். என் நண்பர்கள் சிலர் இன்னும் அங்கு தான் வாழ்கின்றனர்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் அயலில், பொன்னம்பலவாணேச்சர் கோயில் அயலில், மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள பிரசித்த பெற்ற இந்துக் கோவில் அருகில் எல்லாம் இப்படி எத்தனை கோப்பிக் கடைகளும், அசைவ உணவகங்களும் உள்ளன! யாழில் எனக்கு தெரிந்த பல சின்ன மற்றும் நடுத்தர இந்துக் கோவில்களின் அருகில் எத்தனை பேக்கரிகள் உள்ளன. அதில் எப்பவும் 'மாலு பாண்' விற்பார்கள். சாமியை கும்பிட்டுப் போட்டு பசிக்கு மாலுபாணும் ரோல்ஸும் வாங்கி சாப்பிடுகின்ற எண்ணற்றவர்கள் உள்ளனர். இதை எதிர்க்கும் கூட்டத்திடம் போய் கவுணாவத்தையில் செய்யப்படும், ஆடு மாடு சேவல்களை அறுத்து செய்யப்படும் வேள்வி தவறாகாதா என கேட்டுப் பாருங்கள். அதை நியாயப்படுத்த இன்னொரு லொஜிக் சொல்வார்கள். வர வர யாழ்பாணம் சங்கிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இப்படியான மதவாத செயல்கள் ஈற்றில் தமிழ் /யாழ்ப்பாண சமூகத்தை மேலும் மேலும் ஒதுக்கப்படும் சமூகமாகவும் நலிவுற்ற சமூகமாகவும் மாறவே உதவி செய்யும்
-
கருத்துக்களில் மாற்றங்கள் - 2025
சமூகவலைத்தள உலகம் பகுதியில் பகிரப்பட்ட நா.த.க கட்சி சார்பான காணோளி நீக்கப்பட்டது. யாழ் களத்தில் கட்சி சார்பான, கட்சி கூட்டங்களின் மற்றும் பிரச்சார ரீதியிலான எந்த ஒரு காணோளியும் இணைக்கப்படுதல் கள விதிகளை மீறும் செயல் என்பதை கவனத்தில் எடுக்கவும்.
-
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஈஸ்வரானந்தன் தயாரூபன்
தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஜஸ்ரின்!
-
இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஈஸ்வரானந்தன் தயாரூபன்
முன்னர் நான் இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் நாம் வழக்கமாக வாங்கும் பற்பசைகளை வாங்குவதில்லை. ஏனென்றால், அவற்றில் இந்த புளோறைட் (fluoride) உள்ளது என்றும், வர்த்தக மாபியாக்கள் தான் இதனை பற்களுக்கு நல்லது என சொல்லி விற்கின்றார்கள் என்றும், என்னையும் அப்படியான பற்பசைகளை தவிர்க்குமாறும் ஆலோசனை சொன்னார். Off topic என்றாலும் ஒரு கேள்வி. இந்த புளோறைட் (fluoride) பற்பசைகள் உண்மையாகவே உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
கொட நாடு கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியே எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, (ஆனால்) ரகசியம். அவ்வளவு நல்லவர் அவர். 'குத்தவைச்சு உட்கார்ந்துட்டு இருந்தவளையா நான் கொண்டு போய் வயக்காட்டில் வைத்து கற்பழித்தேன்' என்று வீறாப்பு பேசும் கண்ணியமற்ற ஒரு தலைவரைக் கொண்ட கட்சி இப்படியான தீர்ப்பு தொடர்பாக எப்படி கருத்து வைக்கும்?
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
முதலில் வாழ்த்துக்கள் கரி ஆனந்தசங்கரி கரிக்கு இந்த அமைச்சுப் பதவி குருவி தலையில் பெரிய பனங்காயோ என தோன்றுகின்றது எனக்கு. இந்த அமைச்சுப் பதவிக்குள் தான் எல்லைப்பாதுகாப்பு விடயமும் வருகின்றது. கனடா மீது வரிகள் விதிப்பதற்கு காரணம் என ரம்பால் குற்றஞ்சாட்டப்படும் எல்லை பாதுகாப்பு பிரச்சினையையும் இவரது அமைச்சு தான் பொறுப்பு. அத்துடன் கனடிய உளவுத்துறை, மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் RCMP (Royal Canadian Mounted Police) பொலிஸ் பிரிவும் வருகின்றது. கடுமையாக சீர் திருத்தம் செய்யப்பட வேண்டிய பிரிவுகள் இவை. ருடோவின் லிபரல் அரசின் மெத்தனப்போக்குகளால் மிகவும் பலவீனமடைந்து இருக்கும் துறைகள் இவை.
-
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?
இன்னும் பீகாரில் திருமணமான பெண்கள் இரவில் வீட்டில் நைட்டி அணிகின்றனர். தமிழ் நாட்டில் (இங்கும் தான்) நைட்டியை கை கழுவி கன காலம். இதுவும் பிறப்பு விகிதம் குறைய ஒரு முக்கிய காரணம் என சுவாமி நிழலியானந்தா சொல்கின்றார் 😃.
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
Web series போன்ற ஒன்றில் தொடராக எடுக்கப்பட வேண்டியது பால்ராஜ் எனும் காவிய நாயகனின் போராட்ட வாழ்க்கை. சொல்வதற்கும், வியப்பதற்கும், உருகுவதற்கும், போற்றுவதற்கும் என சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றது அவர் வாழ்வில்.
-
யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட் செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
18 அல்லது 21 வயதுக்குட்பட்டவர் எனில், சுயமாக சிந்திக்க தெரியாத வயது என பாவம் பார்க்கலாம். ஆனால் 27 வயதில் அதுவும் ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிய பின்னும், ஹெரோயின் போன்ற மிக மோசமான போதைப்பொருளின் விளைவு பற்றிய அக்கறை இன்றி, பொறுப்பும் இன்றி உட்கொண்டு இருக்கின்றார். இப்படியானவர்கள் இருந்து என்ன பிரயோசனம்? படுகுழி எனத் தெரிந்தும் அதற்குள் போய் விழ விரும்புகின்றவர்களை ஒன்றும் செய்ய ஏலாது.
-
யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட் செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
தேவையற்ற ஆணி ஒன்று தானாகவே கழன்று விழுந்தது சமூகத்துக்கு நல்லதே.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விடியும், மூன்று வேளை உணவு கிடைக்கும், பாலியல் உறவுக்கு சக ஆண் கைதிகள் கிடைப்பர், நித்திரை கொள்ள வசதி கிடைக்கும், இடைக்கிடை சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதைப்பொருளும் கிடைக்கும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தம் வாழ் நாள்முழுதும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவர தினமும் போராட வேண்டி இருக்கும். ஆகக் குறைந்தது இந்த குற்றவாளிகளுக்கு ஆண்மையகற்றமாவது செய்ய வேண்டும். ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர். குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பிணையில் வெளியாவனர் பெயர்: சங்கரன் படம்: ராஜேஸ்வரி கல்வி நிலையத்தின் உரிமையாளரும் மாணவியின் தற்கொலைக்கு தூண்டப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாராயணபிள்ளை சிவராஜா படம்: பிரபல பாடசாலை என்று குறிப்பிடப்படும் பாடசாலையின் பெயர்: இராமநாதன் மகளிர் கல்லூரி
-
கருத்துக்களில் மாற்றங்கள் - 2025
வணக்கம், அண்மைக் காலமாக செய்திகளில் (ஊர்புதினம், தமிழக, இந்திய மற்றும் உலகச் செய்திகளில்) சகட்டு மேனிக்கு பலவகையான மீம்ஸ்கள் ஒட்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவற்றில் பல செய்திளின் தரத்தை, அதன் நம்பகத்தன்மைகளை பாதிக்கும் வண்ணம் அமைந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்னும் சில, அரசியல் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளதையும் உணர முடிகின்றது. இனி வரும் காலங்களில் செய்திகளில் இவ்வாறான மீம்ஸ் கள் ஒட்டப்படுவதை கூடிய வரைக்கும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரம் மீம்ஸ்களை விட தரமான செய்தித்தளங்களில் இருந்து கார்ட்டூன்கள் / கருத்துப்படங்கள் பகிரப்படுவதை வரவேற்கின்றோம். நன்றி
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
இதில் ஒரு சில இடங்களைத் தவிர, எந்த இடங்களிலும் தமிழ் கட்சி எதுவும் பெரும்பான்மை பெறவில்லை. தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும் அதிக உறுப்பினர்களை பெற்ற இடங்களில் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவில் சபைகளை கொண்டு நடத்த வேண்டும், அல்லது இருவரும் (தமிழரசுக் கட்சி + தமிழ் தேசிய பேரவை) இணைந்து சபைகளை கொண்டு நடத்த வேண்டும். இன்னும் சில இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யின் ஆதவில் சபைகளை நடாத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், தேசிய மக்கள் சக்தியுடன் அல்லது ஈபிடியுடன் தான் கூட்டு சேர வேண்டி வரும். முக்கியமாக தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாவிடின், ஈபிடியும், தேசிய மக்கள் சக்தியும் பலம் பெறும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகள் கொள்ளையர்கள் அல்ல. ஆனால் இந்த தங்கம் வாங்கும் விடயத்தில் சில இடங்களில் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளம் உள்ளன. எம் அயலில் கணவனை இளம் வயதில் இழந்த, அக் கணவனின் ஓய்வூதியத்தில் 2 பெண் பிள்ளைகளை வளர்த்து கொண்டிருந்த என் உறவுகார பெண்மணியை கடுமையாக திட்டி, அப் பெண் பிள்ளை போட்டிருந்த சின்னஞ்சிறு தோட்டை கழற்றிக் கொடுக்க சொல்லு வற்புறுத்தி வாங்கிச் சென்றார்கள். 90 இன் ஆரம்பத்தில் பாண்டியந்தாழ்வு பகுதியில் இது நிகழ்ந்தது. இவ்வாறு மிரட்டி பணம் பெறுவதை சமாதான கால கட்டத்தில் வேறு விதமாக செய்தனர். இங்கு கனடாவில் நிதி அளிக்க மறுத்த பலர் ஊருக்கு போகும் போது A9 வீதியில் புளியங்குளம் பகுதியில் இருந்த புலிகளின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்தே கைது செய்து மிரட்டி கனடாவில் உள்ள குடும்ப அங்கத்தவர் காசு கொடுத்த பின் விடுவிக்கப்பட்டனர். என் நெருங்கிய நண்பனின் அப்பாவுக்கும் இது நடந்தது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் பேரால் நிகழ்த்தப்பட்டது. நீலன் பங்களித்த தீர்வு மீது கடுமையான விமர்சனங்களும் அந்த தீர்வில் பல குறைபாடுகளும் இருப்பினும், அதை ஆரோக்கியமான விவாதங்களு உட்படுத்தப்படாமல், அதை தயாரிக்க துணை புரிந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார். இவரது கொலையால் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் ஏற்படவில்லை. ஆனால் சிங்களம் இதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி ராஜதந்திர ரீதியில் பயனடைந்தது. இவ்வாறு நிகழ்ந்தது முதல் தடவையும் அல்ல, இறுதித் தடவையும் அல்ல. இன்றும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலும் குரல்களும் எம்மிடம் இருந்து நீங்கவில்லை.
-
மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
மூன்று கோமாளிகள்: தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணத்து எம்பிக்கள். பைத்தியம்: பைத்தியர்
-
மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!
இவரது கணவர் ஒரு சீன நாட்டவரா என அறிய விரும்புகின்றேன். ஏனெனில் பழக்க தோசத்தில்.....