Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. எண் சோதிடம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிலும் இந்தியர்கள் / தமிழர்கள் / இந்துக்கள் அதிகம் எண் சோதிடத்தை நம்புகின்றனர். உண்மையில் எனக்கு ஆச்சரியம் தரும் விடயமும் இதுதான். இவர்களால் எவ்வாறு இதனை நம்ப முடிகின்றது என. ஏனெனில் எண் சோதிடம், நாம் பிறந்த திகதியின், மாதத்தின்,ஆண்டின் அடிப்படையில் கணிக்கப்படுவது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின் அடிப்படையில் இது கணிக்கப்படுகின்றது. நாம் இன்று பயன்படுத்தும் இந்த காலண்டர் Gregorian Calendar ஆகும். இது 1582 இல் போப்பாண்டவர் Gregory XIII இனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காலண்டர். இவ்வாறான ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய (கத்தோலிக்கர்கள்) முக்கிய தலைவர் ஒருவரால், அதுவும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படுவது எப்படி சரியாகும்? ஒரு இந்துவோ, ஒரு சைவரோ,ஒரு பெளத்தரோ, ஒரு நாத்திகரோ, ஒரு ஆத்திகரோ இதனை எப்படி நம்புகின்றனர்? இவர்கள் தம் காலண்டரின் அடிப்படையில் அல்லவா எண் சாத்திரத்தை கணிக்க வேண்டும்? உதாரணமாக இந்து ஒருவர், இந்துக் காலண்டரின் அடிப்படையில் அமைந்த திகதியை அல்லவா, கணிப்பீட்டுக்கான திகதியாக கொள்ள வேண்டும்? நான் எண் சாத்திரத்தை நம்புகின்ற சக சைவர்களை நோக்கி கேட்கும் கேள்வி "நீங்கள் இந்து மதம் சார்ந்த சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு எவ்வாறு கத்தோலிக்க மதத்தை சார்ந்த காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படும் எண் சாத்திரத்தையும் நம்புகின்றீற்கள் என. யாராவது இதற்கு பதில் தர முடியுமா?
  2. ‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology
  3. இந்தக் கேள்வியை என் மகனிடம் முந்த நாள் ஒரு யாழைச் சேர்ந்தவர் இங்கு கேட்டு இருக்கின்றார். அவர் genuine னாக கேட்டும் இருக்கலாம், அல்லது நீ என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிய கேட்டும் இருக்கலாம் என அவனிடம் தெளிவுபடுத்தினேன். ஏற்கனவே சாதி பற்றி கதைத்துள்ளதால் விளக்க முடிந்தது.
  4. மாநில, மத்திய அரசுகளின் அதிகாரம் பற்றிய என் கருத்துகள் இலங்கை அரசின் அழுத்தங்கள் இப்போதைக்கு இந்த இனப்படுகொலை நினைவுத் தூபியை ஒன்றும் செய்யாது என்பதற்காக எழுதியவை. அக் கருத்துகளுக்கும் நீங்கள் குறிப்பிட்ட நடக்காத விடயம் பற்றிய என் பதில்களுக்கும் ஏன் முடிச்சு போடுகின்றீர்கள் எனப் புரியவில்லை.
  5. முளைவிட்ட உருளைக்கிழங்கை , முளைகளை நீக்கிவிட்டு இது வரைக்கும் ஒரு இலட்சத்து பத்தொன்பாதியிரத்து முன்னூற்று இருபது தடவைகளாவது வீட்டில் சமைத்து இருப்போம். என் அம்மா இதனை விட பல மடங்கு தரம் சமைத்து உண்டுள்ளார். அவருக்கு இப்ப வயது 80!
  6. கனடாவில் தமிழர் இனப்படுகொலை தூபி இன்றுவரைக்கும் சேதப்படுத்தப்படவோ, நொறுக்கப்படவோ இல்லை. அவ்வாறு வந்த சில சமூகவலைத்தள செய்திகள் பொய்யானவை. இப்படியான ஆதாரமற்ற வெறும் சமூகவலைத்தள தகவல்களை நம்பாதீர்கள். இதைப் பரப்புகின்றவர்களின் அரசியல் தம் வயிற்றை பாதுகாக்கும் அரசியல். பற்றிக் பிரவுண் உணர்ச்சி வேகத்தில் அப்படிச் சொல்லி விட்டார். மாநகரசபை யிற்கு இப்படியான ஒரு அதிகாரமும் இல்லை .
  7. நான் மேலே எழுதியதில் ஒரு தவறு உள்ளது. மாகாண அரசால், மாநகர சபையின் அதிகாரங்களில் கைவைக்க முடியும். ஏனெனில் மாநகர சபை என்பது மாகாண அரசின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் அங்கம் என்பதால். ஆனால் மாநகர சபையால் சட்டத்திற்குற்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு தூபியை, கட்டிடத்தை அகற்ற இலகுவில் முடியாது.
  8. கனடாவில் மாநகரசபை தன் அதிகாரத்துக்குட்பட்ட ஒன்றை செய்தால் அதனை மாகாண மற்றும் மத்திய அரசால் நிராகரிக்க முடியாது. அவ்வாறு கடும் அழுத்தம் கொடுத்து நிராகரிப்பின், வழக்கு போட்டு, அரசியலமைப்புக்கு எதிரான செயல் என தீர்ப்பை வாங்கிவிடுவார்கள். ஆகவே இலங்கை அரசு தலையைக் குத்தி தாளம் போட்டாலும், கனடிய மத்திய அரசு கடும் அழுத்தம் கொடுத்தாலும் இந்த நினைவுத்தூபியை இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பற்றிக் பிரவுணது மேயருக்கான பதவிக் காலம் முடிவடைந்த பின் அடுத்து வருகின்றவர் நினைத்தால், மிச்ச மாநகர சபை உறுப்பினர்களும் சம்மதித்து வாக்களித்தால் இந்த நினைவுத் தூபியை ஏதும் செய்ய முடியும்.
  9. ஆழ்ந்த இரங்கல்கள். நல்ல குணச்சித்திர நடிகர். இவர் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். நல்ல கம்பீரமான குரல். இவர் கெட்டவனாக இருந்து பின்னர் திருந்தும் பாத்திரத்தில் நடித்த "சிறை" எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் தன் மகனது திருமணத்தை இந்த வருடம் ஆகஸ்ட் டில் நடாத்த திட்டமிடப்பட்டு இருந்தார். தன் ஆயுள் 75 இல் முடியும் என கணித்திருந்தால் அதை முதலிலேயே நடாத்த முயன்று இருப்பார். இவர் 99 வயது வரை வாழ்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பற்றி பலருக்கு ஆலோசனைகள் சொல்பவர். மரணம் என்பது கணிக்கப்பட முடியாத சூத்திரம்.
  10. லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..
  11. வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. All reactions: Thank you:Ravindran Pa https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/
  12. இதில் பாதியளவு தான் உண்மை. ஐக்கிய அரபு நாட்டில் (UAE) முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பன்றி இறைச்சி விற்கின்றனர். அதற்கென்றே தனி அறை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சில பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். நான் வாங்கி சமைத்துள்ளேன். UAE தவிர கட்டார், பஹ்ரெயின், எகிப்து, ஓமான், லெபனான் ஆகிய அரபு நாடுகளிலும் விற்கின்றனர். முஸ்லிம் நாடுகளில் பெரிய நாடான இந்தோனேசியாவிலும் விற்கின்றனர்.
  13. இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள். இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை. விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.
  14. ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள். இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.
  15. சாத்தான், இந்தக் கட்டுரையில் சிங்கள இனவாதிகளை பற்றி மட்டுமல்ல, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தால் இலகுவாக படுகொலை செய்ய ஏதுவான சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்காமல், உள்ளுக்கை வரவிட்டு அடிப்போம் என்று சூளுரைத்த தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
  16. இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும். நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
  17. இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பண்டைய கால பொருட்கள் ஏற்கனவே கண்டு பிடித்து இருக்கின்றார்களா? ஓம் எனில் எங்கெங்கு கண்டு பிடிக்கப்பட்டன என எவருக்காவது தெரியுமா? கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளில் இலங்கை தமிழ் பிராமி எழுத்துகளின் தாக்கம் இருக்குமாயின், இலங்கை தமிழ் பிராமி எழுத்துகள் கீழடிக்கும் அதிகம் தொன்மை வாய்ந்ததாக அல்லவா இருக்க வேண்டும். --- இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையையும், அது வெளிப்படுத்தும் நாகரீகத்தையும், தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் பிஜேபி யின் சங்கி அரசு ஒரு போதுமே விரும்பப் போவதில்லை. சிந்து வெளி நாகரீகம் தான் உச்சம் என கட்டமைக்கப்பட்டு இருக்கும் பிம்பம் உடைந்து விடும் என்று அது அச்சம் கொள்வதில் வியப்பும் இல்லை.
  18. தாயிற்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார மற்றும் விலைவாசி நிலையில், ஒரே சமயத்தில் 5 குழந்தைகளை வளர்த்து எடுப்பது என்பது மிகக் கடினம். எந்த அமைப்பாவது இவர்களுக்காக நிதி திரட்டுமாயின் புலம்பெயர்ந்த சமூகமும் தன் பங்களிப்பை நல்க வழி கிடைக்கும்.
  19. இலங்கை முழுதும் மதம் சார்ந்த குட்டி குட்டி தாலிபான் குழுக்கள் உருவாகத் தொடங்கி விட்டன என்பதைத் தான் இந்தச் சம்பவமும் நல்லூர் சம்பவமும் உணர்த்துகின்றன. அறுகம்குடாவில் அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். ஏற்கனவே அங்கே வரும் இஸ்ரேலியர்கள் தம் மத வழிபாட்டு தலங்களை உருவாக்கி வருகின்றனர் என குறைபட்டு இருந்தனர். இப்பொழுது பிகினிக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். இலங்கை நாடும் சனமும் நாசமாக போக என்று சபிக்க வேண்டிய நிலைக்கு மீண்டும் வந்து கொண்டு இருக்கின்றது'
  20. சுண்டிக்குளி நகரம் சார்ந்த மேட்டுக் குடிகளின் இடம். ஆனால் வேலணை அப்படி அல்ல. பலரால் கொஞ்சம் குறைத்து மதிக்கப்படும் தீவகத்தை சேர்ந்த இடம். அதனால் தன்னை முன்னிலைக்கு நகர்த்த போராட வேண்டிய தேவையுள்ள, மூர்க்கம் உள்ள இடம். எனவே நான் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு அந்த மூர்க்கம் தான் காரணம் என நம்புவதால் இந்த எண்ணம் வந்திருக்கலாம். இதே போன்ற ஒன்றைத்தான் நான் இளையராஜாவிடமும் அவர் சமூகம் சார்ந்து எதிர்பார்த்தேன்.
  21. என் அப்பா வேலணை. அம்மா சுண்டுக்குளி. ஆனாலும் என்னை தீவான் அடையாளப்படுத்துவதில் ஒரு தில் / கெத்து / திமிர் எல்லாம் இருப்பதாகவே எப்பொழுதும் உணர்வேன். என்னுடன் வேலை பார்ப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் இங்கு கல்வி கற்று பல்கலைக்கழக degree வைத்திருப்பவர்கள். அவர்களுடன் சரிக்கு சமமாக வேலை செய்வதுடன் mentor ஆகவும் சில வேளை இருக்கும் போது எனக்குள் இருக்கும் தீவான் Gene தான் காரணம் என நினைப்பேன்.
  22. 91 , 92 ஆம் பக்கங்களில் உள்ளதாக வாலி குறிப்பிட்டதன் பின் வாசித்து பார்த்தேன். நல்லூரில் இருந்து வெளியேறிய சோனகர்களே நாவாந்துறையில் குடியேறினார்கள் என உள்ளது. இந் நூலின் இணைப்பு ஏற்கனவே இத் திரியில் தந்துள்ளேன்.
  23. வாலி, கீழுள்ள இணைப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை நூல் உள்ளது. இதில் நீங்கள் எழுதிய வரலாற்றுத் தகவலை நல்லூர் கந்தசுவாமி கோயில் எனும் உப தலையங்கத்தின் கீழ் நுனிப் புல் மேய்ந்து பார்த்தேன். என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. முடிந்தால் எங்கிருக்கின்றது எனச் சொல்ல முடியுமா? https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0040880/TVA_BOK_0040880_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_1949.pdf நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.