Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13,700
 • Joined

 • Days Won

  151

Everything posted by நிழலி

 1. முகம் தெரியாத எத்தனை பேர் எம்மை எம் வாழ்வில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்! 7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?
 2. அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.
 3. செய்தி திரட்டியில் பதியப்பட்ட கொசிப் செய்தி ஒன்று நீக்கப்பட்டது.
 4. மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்? ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர். வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.
 5. நான் யார், எதற்கு வந்தேன், எங்கிருந்து வந்தேன், எங்கு செல்ல போகின்றேன், இதற்கு முதல் என்னவாக இருந்தேன், இனி என்னவாக ஆகுவேன் போன்ற தத்துவ விசாரங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் கடும் சுயநலம் சார்ந்த எண்ணங்கள். தனக்கு அருகில், தன் சமூகத்தில், தன் அருகாமையில் நிகழும், நடக்கும் விடயங்கள் மீது அக்கறை இல்லாமல், சமூக பிரக்ஞை இல்லாமல், தன்னை மையப்புள்ளியாகக் கொண்டு தன்னை மட்டுமே சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு நீர்ப்பந்து போன்றவர்களின் எண்ணங்கள் என்றே நான் இவர்களைப் பற்றி நினைக்கின்றேன். இந்த தத்துவவிசாரங்கள் எல்லாம் தன்னைப் பற்றிய புரிதலை ஒரு போதும் ஏற்படுத்தப் போவதில்லை, அப்படி ஏற்படுத்துவதாக நினைப்பதே ஒரு போதை என்றே என் புரிதல். தன்னை சுற்றி இருப்பவர்கள் மீதான அக்கறை, தன் சமூகம் சார்ந்த அக்கறை, தான் சார்ந்த அக்கறை, இந்த ரம்மியமான உலகத்தினை ரசிக்கும் ரசனை, காதல் மீதான ரசனை, காமம் மீதான ஈடுபாடு போன்றவையே ஒவ்வொருவருக்கும் சுய திருப்தியையும் நிம்மதியையும் கொடுக்க கூடியன என நம்புகின்றேன். இது என் எண்ணம் மற்றும் புரிதல் மட்டுமே. மற்றவர்களுக்கு இது முழுத் தவறாக இருக்கலாம்.
 6. நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)
 7. மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி கள்ள ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 8. மரண அறிவித்தல் பிறப்பு13 AUG 1956 இறப்பு17 OCT 2021 திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மரியதாசன் செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும், யுவன், நவீன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும், மெலோனி, லிஷ்க்கா ஆகியோரின் அன்புநிறை மாமியும், Ayva, Saphirra, Sierra, Nila ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும், கிளீட்டஸ், ஜெனிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா(Good Shepherd), கமிலஸ், குயின்ரஸ், ஜொவிற்றா, விஜிற்றா, மெரிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கிளாறட், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஜஸ்ரினா, டீலியா, டொன்பொஸ்கோ, அருள், ராம்நாத் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சறோசா- மரியதாசன், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் ராஜரட்ணம், ராசபாலன்- யுவான், ராசபுஸ்பம்- ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Live Link: Click Here தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்குGet Direction Wednesday, 20 Oct 2021 5:00 PM - 9:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada பார்வைக்குGet Direction Thursday, 21 Oct 2021 8:00 AM - 10:00 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலிGet Direction Thursday, 21 Oct 2021 10:30 AM St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம்Get Direction Thursday, 21 Oct 2021 12:00 PM Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada https://ripbook.com/clarice-hippolita-mariathasan-616c772c73ea5/notice/obituary-616c77c0bf004
 9. கோஷான், தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட 'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல். சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர். மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது. https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/
 10. “ போதி மரம்” காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு. “என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு யோசிச்சன். படுத்தும் பாத்தன் ஆனாலும் பயமாய் இருந்திச்சு. பரிணாம வளர்ச்சியில் கிணறும் விடுபடேல்லை . வட்டக்கிணறு அதன் விட்டத்தில இருவது வீதம் இழந்து முக்கால் வட்டம் ஆனது. கல்லு மட்டும் அடுக்கின கிணத்துச்சுவர் , சீமெந்து பூசிக்கல்லு வைச்சு ஒரடி அகலமான கிணத்துக்கட்டானது அதோட நிலமட்டத்திலிருந்து உயரவும் தொடங்கியது . கைவாளி மறைஞ்சு துலா, கப்பி ஆனது. சீவின பூவரசந்தடீல கட்டின வாளி கையை நோகப்பண்ண கயிறு, chain எண்டு வந்தது. கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை அதையும் தாண்டி விசேசமானது . தண்ணி இருக்கிற கிணத்துக்கு, தண்ணி அள்ள கப்பி இல்லாட்டி துலா கட்டி, கைப்பற்றப்பட்ட இருவது வீதத்தில அள்ளிற பக்கம் குளிக்கிறதுக்கு தோய்க்கிறதுக்கு சீமெந்து நிலம் வைச்சு, மழைகாலம் நிலம் வழுக்காம இருக்க சிப்பியை கவிட்டு ஒட்டி வைச்சு, அதோட சேந்த உடுப்புத்தோய்க்கிற கல்லும் பக்கத்தில ஒரு தொட்டியும் கட்டி, குளிக்கிற தண்ணி ஒடிற வாய்க்காலோட வாழை வைச்சு, கிணத்துக்கு கிட்ட ஒரு இளநி மரம் நட்டு , கிணத்துக்க இலையக்கொட்டிறத்துக்கு வேலியோட ஒரு வாதநாராயணி இல்லாட்டி பூவரசு இருக்க, அதில உடுப்பு போடுற கொடி கட்டி, இருந்தாத் தான் கிணத்தடி இல்லாட்டி அது வெறும் கிணறு. தேவைக்கு வாழையிலை வெட்டப் போறதும் கிணத்தடி தான். இருட்டுப் பயத்தில மூத்தா போறதும் கிணத்தடி தான் . வீட்டை சண்டை பிடிச்சிட்டு அம்மாவை வெருட்ட இயக்கத்துக்குப் போயிடுவன் எண்டு சொல்லிற காலத்திக்கு முதல் கிணத்தடீல போய் தான் இருக்கிறது. கிணத்தடி பூதத்தை நம்பி இடம் பெயர்வுகளில பயத்தில நகை தாலி புதைச்சு வைச்சதும் கிணத்தடி தான். ஒவ்வொரு ஒழுங்கையிலும் எந்தக் கோடைக்கும் வத்தாத ஒரு வீட்டுக் கிணறு இருக்கும் .அதே போல் நல்ல தண்ணிக் கிணறும் ஒண்டும் இருக்கும். இந்தக்கிணறுகளும் ஒரு பொதுச் சொத்துதான் . பலர் குடிக்கவும் சிலர் குளிக்கவும் போறவை . இப்பிடி தண்ணி அள்ள ஆற்றேம் வீட்டை போகேக்க கிணத்தடீல சண்டையிருக்காது ஆனால் அரட்டை அரங்கம் இருக்கும் . வேலைக்குப் போட்டு வந்த அப்பாட்டை இல்லாட்டி செத்த வீட்டுக்கு போய் வந்த அம்மாட்டை கிணத்தடீல இருந்து அவை தோஞ்சு கொண்டிருக்கேக்க விடுப்புக் கேக்கிறதும் நடக்கிறது . கிணத்தையும் ஒரு சாமி அறை மாதிரித்தான் சுத்தம் பத்தமா பாவிக்கிறது. செத்தவீட்டுக்கு போய் வந்தா , தலைமயிர் வெட்டீட்டு வந்தா இல்லாட்டி பொம்பிளைகளை அந்த மூண்டு நாளும் அள்ள விட மாட்டினம். விளக்கீட்டில ஒரு பந்தம் வைக்கிறதில இருந்து ஐயர் தாற தீத்தம் கொண்டே ஊத்திற வரை அதுக்கு ஒரு மரியாதை இருந்தது. தண்ணி அள்ள கிராமப் பக்கம் தான் கைப்பட்டை இல்லாட்டி துலா இருந்தது . நாலு மரம் நட்டு குறுக்கு மரம் போட்டு சரி பண்ணி துலா கட்டிறது . நட்ட பூவரசங்குத்தி முளைச்சு சிலவேளை மரமாயும் வளந்திடும். வைரமான பனை மரத்தை சீவி ரெண்டாப்பிளந்து நடுவில இருக்கிற சோத்தியை கோதி எடுத்து , ரெண்டையும் சேத்து கட்டை இறுக்கி ,அடிபருத்தும் நுனி சிறுத்தும் இருக்க செய்யிற துலாவில சரியான இடம் பாத்து , வீட்டில வைக்கிற ஓட்டைக்கல்லு மாதிரி செவ்வக ஓட்டை வைச்சு குறுக்கு மரம் போட்டு துலாவை ஏத்தி விட அது காலத்துக்கும் இருக்கும். தென்னை எண்டால் அப்பிடியே சீவி வைக்ககலாம் , பத்து வருசத்திக்கு அசையாம இருக்கும். துலாவின்டை அடியில கட்டிற கல்லு டங்கு டங்கு எண்ட அடிக்க சத்தம் வரும் எண்டதால ரயரையும் சேத்துக்கட்டிறதும் வழக்கம் . ஆனால் town பக்கம் கப்பி தான் கூட. கப்பிக்கு electricity board ல ஆரும் தெரிஞ்சவை இருந்தா high voltage வயர் இழுக்கிற மாபிள் கப்பி கள்ளமா எடுத்துப் பூட்டிறது இல்லாட்டி இரும்புக் கப்பிதான். கப்பிக்கயித்துக்கு மொத்தமான இளைக்கயிறு தான் நல்லம். நைலோன் கட்டினால் வாளி முடிச்சு நிக்காது அடிக்கடி வாளி கழண்டு கிணத்துக்க விழுந்திடும் ,ஆனாலும் அள்ளேக்க வாளிய உள்ள விட ஈசியா வழுக்கிக்ககொண்டு போகும் . தண்ணி அள்ளிறதுக்கு வாளியை தூக்கி கிணத்துக்க போடேக்க கப்பியின்டை தவாளிப்பிக்கால சிலவேளை கயிறு வெளீல பாஞ்சிடும் . கயித்தை எத்தி எத்தி அதை திருப்பி உள்ள போடுறதுகஸ்டம் . அதுகும் அள்ளிற சுகத்துக்கு முடிச்சுப் போட்ட நைலோன் கயிறெண்டால் சரி அவ்வளவு தான் . உயரம் காணாத வயசில அதை திருப்பிப்போட கிணத்துக் கட்டில ஏறித் துள்ள அப்பிடியே கயித்தோட கிணத்துக்க விழுந்து அம்மாவுக்கு தெரியாம ஏறி வந்ததும் நடந்தது. பள்ளிக்குடத்தில வயல் கிணதுக்க குதிச்சு தான் நீந்தப் பழகினது எண்டு ஆரும் சொன்னதை கேட்டு உசுப்பாகி நானும் நீந்தப் போறன் எண்டு நல்லவேளை ஒரு நாளும் குதிக்கேல்லை. ஆனாலும் கள்ளமா கிணத்துக்க இறங்கினது நடந்தது. மழை காலத்தில நிரம்பிறதை எட்டிப் பாக்கிறது சந்தோசம் , தண்ணியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். கையால அள்ளிக் குளிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்க தண்ணி வத்தத்தொடங்கீடும். வீட்டுக்ககிணறு தான் இப்பிடி இறைக்கிறது ஆனால் தோட்டத்திக்கு் தண்ணி ஊர்வழிய சூத்திரத்தில மாடுகள் கட்டி , பட்டையில தான் இறைக்கிறது. வைரமாளிகை நாகலிங்கம் போடிற பனைமட்டை தொப்பியக் கவிட்டு விட்ட மாதிரித்தான் பட்டை இருக்கும். பனையோலையில கட்டிற பட்டை ஒழுகாம காலத்துக்கும் இருக்கும். பட்டையின்டை மூலைக்கு சாக்கு இல்லாட்டி பழைய ரயர் கட்டினால் அடி பட்டாலும் பிய்யாது. தோட்டத்திக்கு தண்ணி இறைக்க துலா மிதிக்கிறதும் இருந்தது , என்ன ரெண்டு பேர் தேவை . ஆனால் சூத்திர மாடு பழக்கி விட்டா ஆள் இல்லாமலே சுத்தும் தண்ணியும் இறைபடும் . தகரம் வைச்சு செய்யிற இரும்புப்பட்டையும் இருந்தது. அடீல ரெண்டு தட்டு வாளி போய் மடார் எண்டு தண்ணீல முட்ட திறக்கும். உள்ள தண்ணீர் நிரம்பினாப்பிறகு மேல வர தண்ணிப்பாரத்திக்கு தட்டு மூடும். சரியா ஒண்டு தண்ணியை கவிட்டுக் கொட்ட மற்றது கோலும். ஏன் இதுக்கு சூத்திரம் எண்டு பேர் வந்தது எண்டு அறிய வெளிக்கிட்டு; மாட்டை கட்டிற கயித்தின்டைநீளம் , அது சுத்திற வட்டத்தின்டை ஆரை , மாடு சுத்திற speed துலாவின்டை நீளம் , அதில் தொங்கிற கயித்திண்டை நீளம் , பட்டையின்டை அகலம் , தட்டின்டை ஓட்டை அளவு மாட்டு வாலின்டை நீளம், எண்டு எல்லா Data வும் computer ல feed பண்ண அது Google application form ஒண்டைத்தருது NASA க்கு வரச்சொல்லி அந்த சூத்திரம் (equation )என்ன எண்டு என்னைக்கேட்டு . இறைக்க இறைக்க வத்தாத அறிவு மாதிரி NASA காரனுக்கே விளங்காத அறிவைத் தந்த அந்த கிணத்தடி போதிமரம் இப்ப புத்தர் எல்லாம் Bathroom வழிய குளிக்கிற படியால் வெறுமையானது . ஆனாலும் அழிந்த அந்த அவதாரம் மீண்டும் திருப்பி வரும் எண்ட நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கியது . Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
 11. தாயகத்தில் தமிழர்கள் மத்தியில் பாலியல் வரட்சியும் அதன் பலனாக பாலியல் வன்முறையும் அதிகரித்துச் செல்கின்றதன் விளைவுகள் தான் இவை. இவற்றை சாதாரணச் செய்திகளாக கடந்து செல்ல முடியாது. அதுவும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை செய்தி திரட்டிப் பகுதியில் இடம்பெறுவது தொடர்பாக எனக்கு கேள்விகளும் உள்ளன. அரசியல் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவற்றுக்கும் கொடுக்கப்படல் நல்லதென நினைக்கின்றேன்.
 12. ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? Wordscape என்ற ஒரு online game உள்ளது. ஐந்தில் இருந்து 9 எழுத்துகள் வரைக்கும் குழப்பி போட்டு இருப்பார்கள். அவற்றில் இருந்து ஒளிந்து இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கண்டு பிடிக்க வேண்டும். anagram வகையான விளையாட்டு இது. கடந்த வருடம் பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிலையில் பொழுது போகாமல் விளையாடத் தொடங்கி அதனால் மிகவும் கவரப்பட்டு இன்று 10,193 ஆவது நிலையில் (level) விளையாடிக்கொண்டு இருக்கின்றேன். இந்த game இல் ஒரு கட்டத்தின் பின் எமக்கான 50 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம். நானும் சும்மா ஒரு குறூப்பை தொடங்கலாம் என 'BePositive' ஒன்றை தொடங்க. அதில் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் ஆட்கள் இணைந்து 50 பேர் கொண்ட குழுவாக ஆகி, ஒவ்வொரு வார இறுதியிலும் இதைப் போல இருக்கும் 50 அணிகளுடன் விளையாடுவோம். அனேகமாக முதல் நான்கு இடங்களிற்கு ஒன்றையாவது தொடர்ந்து தக்க வைப்போம். ஆண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருமா எனக் கேட்டுவிட்டு online game ஒன்றை பற்றி எழுதுகின்றான் என நீங்கள் நினைக்கத் தொடங்கும் இந்த கட்டத்தில் அதைப் பற்றி சொல்ல தொடங்குகின்றேன். அந்த game இல் நன்கு விளையாடும் ஒரு இளைப்பாறிய பாடசாலை பிரதி அதிபர் இருக்கின்றார். பேரப் பிள்ளைகளையும் பார்த்த ஆண் அவர், தன்னால் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என்று கூறினார். ஏன் என்று எல்லாரும் கேட்டதுக்கு கொஞ்சம் தயக்கத்துடன் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதாகவும், திங்கள் (போன் திங்கள்) கிழமை அறுவை சிகிச்சைக்குட்படப் போகின்றேன் என்றும் கூறினார். பின்னர் தொடர்ந்து உரையாடும் போது, மார்பகப் புற்றுனோய் பிரிவில் தான் தானும் இப்போது அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், முழுக்க முழுக்க பெண்கள் சூழ்ந்த அந்தப் பிரிவில் தான் மட்டுமே ஆண் என்றும் அதுவே தன்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றது என்றும் சொன்னார். குறூப்பில் இருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதில் விளையாடும் இரண்டு தாதிகளுக்கு இது ஒரு சாதாரண தகவலாக அமைந்தது இருந்தது. ஆண்களுக்கு மார்பகப் புற்றுனோய் வரும் என்றும் இது ஒன்றும் அதிசயமான விடயம் அல்ல என்றும் சொன்னார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுனோய் மிகுந்த அக்கறையாக இருப்பது போன்று ஆண்கள் இருக்காவிடினும், அது வருதவற்கான சாத்தியங்கள் உள்ளது என்றும் கூறினர். உங்களில் எவராவது இது பற்றி அறிந்து உள்ளீர்களா? ஜஸ்ரின், நெடுக்கு போன்றோர் இது தொடர்பாக மேலும் விரிவாக எழுதினால் நல்லம். இது பற்றி மேலும் தகவல் வேண்டும் என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்க, அவரும் பல தகவல்களை அள்ளி வழங்கினார். அதில் ஒன்று, தமிழ் பிபிசியில் வந்தது. ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் என்ன? ஏனையவை: 'Many men are oblivious they can get breast cancer' Breast Cancer in Men பின் குறிப்பு: அவருக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதி பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.
 13. சகோதரியின் இழப்பினால் துயருற்றுள்ள கண்மணி அக்காவுக்கும், தமிழினியிற்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். நெருக்கமான உறவுகளில் இடம்பெற்றுள்ள அடுத்தடுத்த மரணங்கள் தரும் கவலையை காலம் ஆற்றும் என நம்புகின்றேன். தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
 14. 1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள். மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த காலம் அது, அதற்கேற்ப குயவர்களிடம் சொல்லி இது போல பெரிய வஞ்சிகளை செய்து வீட்டின் தென்மேற்கிலோ வடமேற்கிலோ நிரந்தரமாக பதித்து வைத்து அதில் தானியங்களை நிரப்பி பல மாதங்கள் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமையலறையில் வைத்து தினப்படி சமையல் உபயோகத்திற்கு நெல்லை குத்தி பொங்கியிருக்கின்றனர். எங்கள் தாத்தாவின் அப்பா சோழவந்தானில் இருந்து மதுரை டவுனுக்குள் வந்து இந்த திண்ணை வைத்த காரை வீட்டை கட்டி ஐந்து சிறிய போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அவரின் மகள் தான் இந்த பட்டுப்பாவாடைச் சிறுமி ,அன்று சோழவந்தானில் இருந்து குத்தகைக்காரர் மாட்டு வண்டியில் நெல் கொண்டு வந்து படியளந்திருக்கிறார் , அவர் வந்து நிரப்புவதற்கு தோதாக வாசல் பக்கம் இருந்த தானிய கிடங்கு கதவை அன்று திறந்து வைத்திருக்கிறார் தாத்தா, நெல் படியளப்பவர், உமிக்கு தப்புவதற்காக கண்கள் மட்டும் சிறிதாக தெரியும் படி காதுகளைக்கூட துண்டால் இறுக்க கட்டிக்கொண்டு நெல்லை மரக்காலில் அளந்து கொட்டி நிரப்பியிருக்கிறார், காதுகளை துண்டால் மூடியிருந்தபடியால் அவருக்கு சிறுமியின் வீறிடல் கேட்கவில்லை, காலையில் பால் குடித்து விளையாடப் போனச் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, ஐநூறு அடியில் உள்ள மீனாட்சி கோயில் பிரகாரம், திருப்பாவை மண்டபம், நன்மை தருவார் கோவில், ஆடிவீதி,வளையல்காரத்தெரு, ஆயிரங்கால் மண்டபம், முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டனர், கிடைக்கவில்லை, யாராவது பிள்ளை பிடிப்பவர்கள் பிடித்துப் போயிருக்க வேண்டும், அல்லது வடக்கே இருந்து இராமேஸ்வரம் வந்தவர்கள் சிறுமியை கண்டெடுத்து தூக்கிப் போயிருக்க வேண்டும் என நினைத்திருந்திருக்கின்றனர். இந்த நான்கு பானைகளில் இருந்த நெல்லை வடமிருந்து இடமாக எடுத்தாண்டு வந்திருக்கிறார் தாத்தாவின் அம்மா, அந்த மூன்று பானைகள் தீர ஒன்பது மாதங்களாக , இந்த நான்காவது பானையில் இருந்து நெல்லை எடுத்தாளத் துவங்குகிறார், இந்த வஞ்சியில் இருந்து நெல் தீர மூன்று மாதங்கள் ஆகிவிடுகிறது, அடுத்த நவராத்திரியே வந்து விடுகிறது, கடும் மழையால் நெல்லில் ஈரம் பாய்ந்ததால் பத்து படி நெல் மீதம் இருப்பதை என் தாத்தா சிறுவன் அவரை உள்ளே இறக்கி அள்ளித் தரச் சொல்லியிருக்கிறார், அவர் அள்ளுகையில் நெல் உமி வாடையுடன் சேர்ந்து கெட்ட நாற்றம் கிளர்ந்து எழ,அவர் மேலே ஏறி வந்துவிடுகிறார், இவர்கள் ஏதோ பெருச்சாளி இறந்திருக்கலாம் என்று நினைத்து சுத்தம் செய்ய ஆளை வரவழத்து எஞ்சிய நெல்லை வார, அங்கே பட்டுப்பாவாடையில் சுற்றியபடி எலும்புக்கூட்டை வெளியே எடுத்திருக்கின்றனர், எங்கள் பாட்டிக்கு மயக்கமாகி விழுந்துவிட்டார்,ஆணோ பெண்ணோ புத்திர சோகம் மிகவும் கொடியது, ஏற்கனவே நடைபிணமாக இருந்தவர்கள் நொடிந்து தான் போயினர்,கன்னியா சிறுமியாக இறந்து போனதால் எந்த காரியமும் கிடையாது, என்றாலும் அந்த மூச்சு முட்டி இறந்த மரணம் இவர்களை காலத்துக்கும் நெஞ்சில் ரணமாக வேதனைப்படுத்தியிருக்கிறது. எங்கள் பாட்டி இந்த அறைக்கு மேலே மச்சில் வைத்து தன் கையில் கிடத்தி இரவு தூங்க வைக்கையில் எத்தனையோ கதை சொன்னாலும், இந்த துயரக்கதையை மட்டும் சொன்னதில்லை,அவர் பார்க்காத ஒரு நாத்தனாருக்கு அவருக்கு எப்போதும் ஒரு வாஞ்சையும் பயமும் இருந்தது, வீட்டில் எந்த சுபகாரியம் நடந்தாலுமே அவர் ஒரு ஐந்து வயது சிறுமிக்கு பட்டுப்பாவாடை தைத்து அணிய வைத்து இலையில் அமர்ந்து சாப்பிடச் செய்வார், எங்கள் அத்தை பாட்டி இப்படி கன்னியா சிறுமியாக இறந்து போனதால் அவருக்கு எப்போதும் நவராத்திரிக்கு கொலு வைக்கத் தோன்றியதில்லை. மதுரையில் கொலு மிகவும் விசேஷமானது, அந்நாட்களில் பதினோரு படிகள் கொலு வைத்த வீடுகள் எல்லாம் பார்த்துள்ளேன், எங்கள் ஸ்டோரில் மீனாட்சி அம்மன் கோவிலில் குருக்களாக இருந்த ஐந்து குடும்பங்கள் வசித்தனர், அவர்கள் வீட்டில் நவராத்திரி அப்படி களைகட்டும், எங்கள் வீட்டில் கொலு வைக்காதது ஏன் என எத்தனை முறை கேட்டும் அவருக்கு இந்த உண்மையைச் சொல்ல வார்த்தைகளில்லை, எங்கள் பாட்டி தாத்தாவுக்கு என் அம்மா மூன்றாம் குழந்தை, அவருக்கு ஒரு மூத்த சகோதரி , ஒரு சகோதரர் உண்டு, இம்மூவருக்கு முன் ஏழு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன, இராமேசுவரம் சென்று திலஹோமம் செய்து தான் அதன் பின் பிறந்த குழந்தைகள் பிழைத்து நின்றிருக்கின்றனர். பின்னாட்களில் அந்த நெல்வஞ்சியை துக்க மிகுதியால் இடித்துப்போட்டு விட்டார் என் தாத்தா , அந்த இடத்தில் முன்பு 85 ஆம் ஆண்டு வரை ஒரு லாண்டரி கடை வாடகைக்கு விடப்பட்டு இருந்தது, பின்னாளில் அக்கடையை பெரும் தொகை தந்து காலி செய்த என் சிறிய தாய்மாமா டெய்லர் கடை துவங்கினார், அது செழிக்கவில்லை, அதனை ஒட்டி இருந்த கடைப்பரப்பில் மதுரையின் பெரிய custom order டெய்லர் கடை இயங்குகிறது, என் முதல் தாய்மாமா மற்றும் நடு தாய்மாமாவிடமிருந்து மற்றவர்கள் சம்மதம் இல்லாமல் வாங்கிய பாகங்கள் அந்த சிறுமி சாபம் கொண்ட நெல்வஞ்சி அனைத்தும் இன்று அந்த மேற்படியான் வசம் போய்விட்டது, என் சிறிய தாய் மாமாஅருமையானகதைசொல்லி, அவர் ஆல்பாஸ் காலம் துவங்குவதற்கு முந்தைய எட்டாம் வகுப்பு,எந்த கதையை அவர் மதுரை பாஷையில் சொன்னாலும் அப்படி கேட்கலாம், அக்கம் பக்கம் கூட்டம் கேட்கிறதென்றால் அவருக்கு குஷி அதிகமாகிவிடும், இன்னும் சத்தமாக கதை சொல்வார், அடுத்த முறை பார்க்கையில் அவர் முன்பு சொன்ன அதே கதையை அதே போல துவக்கி அதே போலவே முடிப்பார், ஒரு வார்த்தை அதிகம் ஒரு வார்த்தை குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றாக எழுதி ஆவணப்படுத்த எண்ணமுள்ளது. #மதுரை,#நவராத்திரி,#நெல்_வஞ்சி Geethappriyan Karthikeyan Vasudevan https://www.facebook.com/Geethappriyan
 15. ஒரு குமரை கரை சேக்கிறது….. நீளமான ஒரு மட்டப் பலகை , சின்ன கைபிடி போட்ட மட்டப் பலகை ( மணியாஸ் கட்டை), சாந்தேப்பை மற்ற எல்லாச் சாமாங்களையும் எடுத்துக்கொண்டு வயிரவர் கோயிலடிக்கு வந்து ,”இண்டைக்கு பத்துப்பேராவது வேணும் எண்டனான் சின்ராசு “எண்டு நான் ஞாபகப்படுத்த , ஓம் எடுபிடிக்கும் இன்னுமொருத்தன் புதுசா வாறான்” எண்டார் சின்ராசு . புதுசா வாறவன் கீழ மட்டும் வேலை செய்யட்டும் நல்லாப் பழகும் வரை சாரத்தில ஏற விட வேண்டாம் . அவனுக்கும் சேத்து அரை றாத்தல் பாண் வாங்கும் எண்டு சொல்லி புது வரவை apprentice ஆக சேத்துக்கொண்டு வேலைக்கு வெளிக்கிட விடிய ஆறு மணி தாண்டீட்டு. கல்லுண்டா வெளியால கஸ்டப் பட்டு எதிர்க்காத்தில சைக்கிள் உழக்கி கட்டிற வீட்டடிக்கு வர ,அராலி மேசன் மார் எண்டால் மேசன் மார் தான் எண்டு கட்டிற வீட்டுக்கு கண் படுற கதை கதைக்கிறாக்களின்டை கதையை கேட்டு கர்வப்பட்டு ஆனாலும் ,போன உடனயே கட்டிற வீட்டை தெரியாம கட்டின முன் படங்கை கொஞ்சம் உயத்திக் கட்டீட்டு கண் திருஸ்டி வெருளியும் இருக்குதா எண்டதை பாத்திட்டுத்தான் வேலையை தொடங்கினன், நான் கந்தசாமி. எண்பதுகளில வீடு கட்டேக்க Draughtsman கீறின படத்துக்கு , நிறைய சாத்திர முறைகளும் சில வாஸ்து முறைகளும் பாத்து ,நாள் பாத்து அத்திவாரம் , நாள் பாத்து சாமியறை நிலை எண்டு நிறைய நாள் பாத்து காசுக் கணக்குப் பாத்து , மனிசீன்டை ஆசை பாத்து பெருமையோடு தான் ஒவ்வொரு சாஐகான்களும் வீடு கட்டுறவை. வேலை துடங்க முதல் கட்டிடத்தின்டை நிலையங்கள் எடுக்கிறது வழமை .அதுக்கும் ஒரு நல்ல நாள் பாத்து நிலையம் எடுக்கிறவர் வந்து இடம் அளவுகள் எல்லாம் குறிச்சுத் தருவார் . அப்ப அளவெட்டி விநாசித்தம்பியர் தான் இதில கெட்டிக்காரர். நிலையம் எடுக்கிறது எண்டால் அதில கன விசயம் இருக்கு . ஒழுங்கை , ரோடு இருக்கிற பக்கம் , வீட்டு வாசல் பாக்கிற திசை , மண் , நீர் வாட்டம், பக்கத்தில இருக்கிற கோயில் குளம் எல்லாத்தையும் பாத்து தான் நிலையம் சொல்லுவினம் . வீட்டு வாசல் , சாமியறை , அடுப்படி வாற அக்கினி மூலை , கிணறு எண்டு எல்லாத்தையும் குறிச்சு தருவினம் . குசினீல இருந்து பாத்தா சாமியறை விளக்கு தெரியவேணும். சாமி அறை தான் பெரிய அறையா இருக்கும், அதிண்டை அகலத்திலும் பாக்க எந்த அறையும் விறாந்தையும் அகலத்தில கூடப்பிடாது இப்பிடி பல சம்பிரதாயங்கள் இருந்தது. அப்ப இஞ்சினியர் மார் கனபேர் civil தான் படிச்சவை . ஆனாலும் அப்ப படிச்ச எந்த இஞ்சினியர் மாரும் ஊரில வேலை செய்ததாகவோ வீடு கட்டினதாகவோ தெரியேல்லை . எண்ணெய் எடுக்கிறம் எண்டு எல்லாரும் வெளிக்கிட்டு போயிட்டினம் . பொம்பிளை குடுக்கேக்க டாக்குத்தர், அப்புக்காத்து, accountant , clerk எண்டு தான் பாக்கிறவை educated மேசன் மாருக்கு பெரிய கேள்வி இல்லை. இப்பவும் தானே எண்டு யாரோ கேக்கிறது மாதிரி இருக்கு. இஞ்சினியர் மார் என்னதான் படத்தை கீறி , டேப்பை பிடிச்சு அளந்தளந்து இடிச்சு இடிச்சுக் கட்டினாலும், அப்ப சாத்திரியர் நிலையத்தை எடுத்து தர கண்மட்டத்தில தூக்குக்குண்டும் நீர் மட்டமும் வைச்சு கட்டின கட்டிடம் எல்லாம் இப்பவும் அப்பிடியே இருக்குது. வீடு கட்ட முதல் கிணறு வெட்டி, தண்ணி கண்டு பட்டை கட்டித்தான் வீடு கட்ட தொடங்கிறது. வெட்டின தும்புத்தடி துண்டுகளை அடிச்சு இறுக்கி ,சீமெந்து நூலை இழுத்துக் கட்டிப்போட்டு தான் அத்திவாரம் வெட்டத்தொடங்கிறது. அதோட கல்லரியிற வேலையும் தொடங்கும் , அப்ப ஆறு இஞ்சி , அஞ்சிஞ்சி தான் கல்லு ( அப்பவே செல்லடிப்பாங்கள் எண்டு தெரியும் போல). அத்திவாரம் வெட்டி , நாள் பாத்து அதை கட்டி பிறகு கல்லு வைச்சு சிவரை கடகட வெண்டு கட்டிக்ககொண்டர ஆசாரி மார் கதவு நிலை யன்னல் அளவுகளை கொண்டு வருவினம் . முதல்ல வைக்கிறது சாமி அறை நிலை , யன்னல் தான் . எல்லாத்துக்கும் நாள் பாத்து காரியம் செயிறதுக்கு காரணம்இருந்தது. அட்டமி நவமீல புது வேலை தொடங்கிறேல்லை எண்ட படியால வேலை காரருக்கு leave கிடைக்கும் . நாள் வேலை செய்யேக்க பொங்கல் படையல் வைக்கிறதால வேலை காரருக்கு சாப்பாடும் கிடைக்கும் . அப்ப எல்லாம், நாள் கூலிதான் . எட்டு மணிக்குள்ள வந்து உடுப்பு மாத்தீட்டு வேலை தொடங்கீடுவம். கடகம், சீமெந்து வாளி, சீமைந்தை வைச்சு பூச barrel ன்டை அடித்தட்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சட்டு மேல ஏறி நிண்டு கட்டி இருக்கிற சாரமரங்களை check பண்ணினாப்பிறகு தான் வேலை தொடங்கும். அண்டைக்குரிய வேலைக்கு ஏத்த மாதிரி தேவையான கலவை mixture ஐ சொல்ல பழைய பெயின்ற் வாழியில தண்ணியை கொண்டுவந்த சீமெந்தை குழைக்கத் தொடங்க வேலை சூடு பிடிக்கும். அத்திவாரத்துக்கு , சுவருக்கு, பூச்சுக்கு எண்டு கலவை mixture எல்லாம் மனக்கணக்கு தான். கண்டாவளை மண், நாகர் கோவில் மண் , பூநரி மண் , அரியாலை மண் எண்டு ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு தேவைக்கு இருக்கும். பத்து மணிக்கும் மூண்டு மணிக்கும் ரீ பிரேக் . அலுமினியக் கேத்தில் பிளேன் ரீ ஓட நாலு டம்ளர் கழுவாமலே சுத்த , அதோட ஒரே பீடி பலவாய்க்குள்ள போய் வரும் . மத்தியானம் கொண்டந்ததை கலந்து சாப்பிட்டிட்டு சீமெந்து பாக்குக்கு மேல கொஞ்சநேரம் சரிஞ்சிட்டு திருப்பி வேலை தொடங்கி, பின்னேரம் நாலரைக்கு சாமாங்கள் எல்லாம் கழுவி எடுத்து வைச்சிட்டு உடுப்பு மாத்தி வெளிக்கிட மணி ஐஞ்சாகீடும். காத்தோடு சேந்து உழக்கி காசீன்டை கள்ளுக்கொட்டிலில கொஞ்சம் நிண்டிட்டு வீட்டை வர ஏழு தாண்டீடும். ஒவ்வொரு கிழமையும் வாங்கின வாங்கப்போற சாமாங்ககளுக்கு கணக்குப்பாத்து , சம்பளம் வாங்கி கொந்திறாத்து காசை எடுத்து கூலிக்கணக்கை பிரிச்சுக் குடுத்திட்டு ஞாயித்துக் கிழமையில காசிக்கும் லீவு விட்டிட்டு வீட்ட வேளைக்கு போய் பிள்ளைகளை நித்திரையாக்கீட்டு , மனிசியை தொட முதல்ல புது சீமெந்து பாக் மாதிரி இறுக்கமாக இருந்த மனிசி , நான் கொஞ்சம் இறுக்க, குழைச்ச சீமெந்து மாதிரி இளகத்தொடங்கினா. காலமை எழும்பி மறக்காம போய் புதுசா வந்தவன்னடை தாயிட்டை கூலிக்காசை குடுத்திட்டு என்னவாம் மோன் எண்டு விசாரிச்சிட்டு வேலைக்கு வெளிக்கிட, சின்னராசு வந்து வேலீக்க நிக்குது . “அம்மாவுக்கு சேடம் இழுக்குது ,ஏதும் எண்டால் உடன எடுக்கவும் வேணும்” எண்டு தலையை சொறிய, எனக்கெண்டு பிடிச்சு வைச்ச கொந்திறாத்து காசில கொஞ்சம் எடுத்து குடுத்திட்டு ஒரு எட்டுப் போய் கிழவியை பாத்திட்டு ஏதும் எண்டால் சொல்லி அனுப்பு எண்டிட்டு நான் வேலைக்கு வர கொஞ்சம் பிந்தீட்டு . சின்ராசின்டை தாய்க்கு கடுமையாம் எண்டு கொஞ்சம் முதலே வந்த சின்னவன் சொன்னவன் , எண்டு வீட்டக்கா நான் பிந்தினதுக்கு அவவே காரணம் சொல்ல , மீண்டும் வேலை தொடங்கினன். அண்ணை சின்னவன் குழைக்க கேக்கிறான் விடட்டே , எண்டான் மோகன் . சரி நான் பாத்துக்கொள்ளுறன் நீ இந்தா இப்பிடி கம்பியை வளை எண்டு குடுத்திட்டு பூச்சை பாக்க போனன். ஒரு வருசமாவது முட்டாள் வேலை செய்தாத்தான் அவன் வேலை பழகி மேசன் வேலை தொடங்கலாம் . திடீரெண்டு சின்ராசின்டை நினைப்பு வந்தது. அவன் நல்ல வேலைகாரன் இருந்தால் எல்லாரையும் நல்லா வேலை வாங்குவான் . “ அடுத்த வீட்டுக்கு அவனை தலைமேசனாத் தனிய விடவேணும் “ , எண்டு யோச்சபடி பூச்சை தொடர்ந்தேன் . வாறகிழமை சுவர் எழும்பீடும், கோப்புசம் போடச் சொல்லீட்டன் மரத்துக்கு காசு கேக்கிறான் , ஒட்டிசுட்டானில இருந்து லொறி ஒண்டு வருதாம் நல்ல தேக்கும் இருக்குதாம் எண்டு ஐயா பின்னேரம் வர சொன்னன். முதலே தெரிஞ்ச மாதிரி கொண்டந்த காசைத் தந்திட்டு , “நாள் வைச்சிட்டன் வைகாசி எங்கடை அம்மன்டை பொங்கலுக்கு நானும் பால் காச்சோனும் “ எண்டார். பங்குனி பிறக்க அடுத்த வீட்டின்டை நாள் வேலை தொடங்க வேணும் அப்ப தான் அடுத்த மழைக்கு முதல் மற்ற வேலையை முடிக்கலாம் எண்டு அடுத்த குமரைப்பற்றியும் யோச்சுக்கொண்டிருக்க , “அண்ணை இன்னும் ரெண்டு சீமெந்துப் பக்கற் குழைக்கட்டா எண்டு “ சின்னவன் கேட்டான் . வேலயை கெதியண்டு முடிக்ககோணும் எண்ட யோசனையோட ஓம் போடு எண்டு சொல்லி வீட்டை நிமிந்து பாக்க , கலியாணத்தை வைச்சிட்டு நாள் கிட்டக்கிட்ட வர வாற மாதிரி உள்ளுக்குள்ள ஒரு பயம் வரத்தொடங்கிச்சு . கோப்புசமும் மூலைக்கையும் வைக்கேக்க கொழுக்கட்டை படையல் போட்டு , ஒவ்வொரு அடி உயரத்துக்கும் ஆறு இஞ்சி சரிவை கூரைக்கு வைச்சு ,கூரை வேலை முடிக்கேக்க தான் நம்பிக்கை வந்திச்சு நேரத்துக்கு வேலை முடிக்கலாம் எண்டு. இந்தியாவில இருந்து வாற நந்தி ஓடு தேடி வாங்கி அடுக்கிப் போட்டு சிலாகையால தட்டி இடைவெளி இல்லாமல் இறக்கிப்போட்டு முகட்டு ஓட்டை பூச வெளிக்கிட்டன். குசினிக்க கிழக்க பாக்கிற மாதிரி அடுப்பைக்கட்டி ,புகைக்கூட்டை கூரைக்கு மேல உயத்திக் கட்டி முடிக்க, நிலத்தில பெட்டி அடிச்சு கம்பி அடுக்கி சீமெந்து போட்டு இறுக்கி மூண்டு பிளட் ( flat) செய்யிறது புகைக்கூட்டுக்கு மேல போட. அதை கயித்தக்கட்டி ஏத்தி மேல வைக்கஒரு பெரிய வேலை முடிஞ்சுது . மேல் வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் நிலம் இழுக்கிறது. இரும்பு மொங்கான் போட்டு இறுக்கி, வாட்டம் வைச்சு நிலம் பூச்சிழுத்திட்டு மட்டம் பாத்து கதவுகள் சீவிப்போடத்தொடங்க வீட்டுக்காரர் வந்து சாந்தி செய்யிறதை பற்றிச் சொன்னார். கிணத்தடி வக்கில காவியை போட்டு வீட்டு சிவருக்கு வெள்ளையும் , புகைக்கூடுக்கும் முன் சிவருக்கும் மஞ்சள் கலந்து அடிச்சு முடிக்க தான் வீட்டுக்கு களை வந்திச்சுது. கிணத்தை இறைச்சு வீட்டைக்கழுவி வீடு குடிபூர வீட்டுக்காரர் ஆயத்தமாக , பொம்பிளைப்பிள்ளைக்கு கலியாணம் முடிஞ்சாப் பிறகு கால் மாறிப்போகேக்க அவளை மாப்பிள்ளை வீட்டை விட்டுட்டு வெளிக்கிட்டு வரேக்க அப்பாமாருக்கு வாற சந்தோசம் கலந்த கண்ணீரோட அந்த புதுவீட்டை விட்டிட்டு வந்து அடுத்த குமரை கரைசேக்கிறதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினன். பி.கு: கல்யாணத்தை கட்டிப்பார் வீட்டைக்கட்டப்பார் எண்டு ஊரில சொல்லிறவை , நான் நினைச்சன் கட்டிறதிலை இருக்கிற கஸ்டத்தை சொல்லினம் எண்டு, இல்லை கட்டினதை maintain பண்ணிற கஸ்டத்தை தான் எண்டு ரெண்டையும் கட்டினாப்பிறகுதான் விளங்கிச்சு. Dr. T. Gobyshanger யாழ்ப்பாணம்
 16. போதியளவு கருத்தாடியமையாலும் கருத்தாளார்கள் மீதான சேறடிப்புகளாக திரி மாற்றமடைந்து செல்வதனாலும் 'கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்' எனும் திரி பூட்டப்படுகின்றது.
 17. அட இது தான் இன்றுதான் பிரபா உபயத்தில் கண்ணில் பட்டது. இங்கு ரொரண்டோவில் பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். கரீபீயன் தேசங்களில் இருந்து வருகின்றது. ஒரு முறை இதில் சொன்ன மாதிரி செய்து புரியாணியுடன் சாப்பிட வேண்டும்
 18. நல்ல விடயம். பள்ளிவாசல்களுக்கு நல்ல காலம் பிறந்து இருக்கு. வழக்கம் போல தமிழ் மக்கள் மரம் ஏற விட்டுட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள்..
 19. ஆகவே உங்களுக்கு மற்றப் பக்கத்தின் தகவல் / செய்தி தெரிந்திருக்கு, அல்லது தெரிந்து கொள்ளக் கூடிய இடத்தில் உள்ளீர்கள். அதை தாரளமாக இங்கு எழுதலாம் தானே? ஆனால் அந்த மற்றப் பக்கம் எனும் ஆதிக்க சக்தியின் குரலைத் தான் யாழ்ப்பாணம் மட்டுமல்ல புலம்பெயர் ஊடகங்களில் பெரும்பான்மையானவை பிரதிபலிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குரலை எவராவது வெளிக்கொண்டு வரும் போது மட்டும் ஊடக அறம் எல்லாம் பலரது கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கின்றது.
 20. வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார். முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்காலம் போக துவக்காலை சுடுவாங்கள், அப்பவும் சுள்ளித்தடியோடதான் நிக்கப்போறம்’. வெட்டப்பட்ட கையும் விரல்களும் மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். கிழிக்கப்பட்ட கையும் விரலுமாக அதன் வலியோடு அதே நேரம் உணர்ச்சிவசப்படாத உரத்த குரலோடு அவருடைய வார்த்தைகளிருந்தன. “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற பெடியள், பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள். நாங்கள் சண்டைக்குப் போகேலாதுதானே, அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் அப்பிடியில்லை, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது. அவங்களுக்கு நளவரைக் கொல்லோனும். இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை செம்பாட்டன் தோட்டமெண்டால் அப்பிடி, மூளாயெண்டால் அப்பிடி, தொல்புரமெண்டால் அப்படி, சுழிபுரம் எண்டால் அப்பிடி, எல்லா இடமும் அப்பிடித்தான். தொடந்து இது நடந்துகொண்டிருக்கு, இண்டைக்கு நேற்றில்லை பல வருசமா இது நடந்துகொண்டுதானிருக்கு. எனக்குத் தனிய எண்டால் என்ர பிரச்சினைய நான் பாப்பன், இஞ்ச வா எனக்கடியப்பா எண்டு சொல்லுவன், ஆனால் எனக்கு மட்டுமில்லைத்தானே இஞ்ச நடக்கிறது. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி, இது எங்கடை வேலி, வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப்பிரிச்சிருப்பான். பாருங்கோ, அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ? நாங்கள் இஞ்ச கிடங்குக்க இருக்கிற எலி மாதிரி. அவங்கள் எங்களைச்சுத்தி இருக்கிறாங்கள், வெக்கத்தை விட்டுச்சொல்லுறன் போற வாற எண்டாலே பயம். எங்கடையள் வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வரும் வேலையாலை. அப்ப அதிலை மறிச்சு அடிப்பாங்கள், நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள், வேலிலை குளை முறிச்சனியோ, மாங்காய் ஆஞ்சனியோ எண்டு அடிப்பாங்கள், பிள்ளையள் மூஞ்சை முகரை எல்லாம் வீங்கிப்போய் வருங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள், களை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான். கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் அடிபிடிதான். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள், குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள், இவங்கள் தேடிவந்து ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன? என்ர மருமோன் அண்டைக்கு ஒருநாள் சும்மா வந்தவன், அண்டைக்கு அவனை கத்தியாலை குத்தக் கலைச்சுக்கொண்டு வந்தாங்கள், மனிசி ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்காட்டி குத்தியிருப்பாங்கள். தங்கடை வெறிக்கு டேஸ்ட் நாங்கள்தான், ஒரு சவாரிக்குப்போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. அம்பது வயசு எனக்கு, கோட்சும் தெரியா பொலிசும் தெரியாது, ஆனால் உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை, உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு தைரியம் உவங்களுக்கு” இளைஞர் ஒருவர் அன்றைக்கு சம்பவத்தை விளக்கத்தொடங்கினார். அண்டைக்கு நானும் இவனும் வேலைக்குப்போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள், பேபிகடை முடக்கிலை திரும்பும்போது அவங்கள் நிண்டு பாத்தவங்கள், நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம், எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்கள் ஏன் முறிக்கிறம், நீங்கள் கண்டனீங்களோ நாங்கள் முறிச்சதை எண்டு கேட்டம். குளை முறிக்கிறது நீங்கள் எண்டு நினைச்சுத் தள்ளின்னாங்கள் எண்டிச்சினம். அதுக்கேன் தள்ளுவான் கேட்டிருக்கலாம்தானே, நாங்களேன் குளை முறிக்கிறம் நாங்கள் என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி, நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு.” மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார். ‘’பிள்ளையள விடுங்கோ, உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள்தானே எண்டு நாயிலும் கேவலமாக் கெஞ்சின்னான். ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப்பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, அவங்கள்ள ஒருத்தன் கெல்மெட்ட களட்டி அடிக்க வந்திட்டான். நான் குறுக்க விழுந்து மறிச்சு சமாளிச்சு பிள்ளையளைக் கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள, மோட்டச் சைக்கிளாலை கொண்டுவந்து சைக்கிள்ளை ஏத்திப்போட்டான். மகன் என்னை பிடிச்சு அங்காலை எறியாட்டி நான் துலஞ்சிருப்பன். என்னத்துக்காக இடிச்சனியள் எண்டு நாங்கள் கேக்கப் போக, ரெண்டு பேர் ஆட்டோவிலை வந்து ‘என்னதுக்கடா நளவா, பீனாண்டியள் இஞ்சாலை வாறியள்’ எண்டு கேட்டுக்கொண்டு பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.” என்றார் இளைஞர். அப்போதுதான் இன்பநாதன் அந்த இருளில் பளபளப்பாகத் தூக்கிக் காட்டிய வாளைப் பார்த்த சம்பவத்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். “எனக்கு விளங்கீட்டு இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு, நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். டேய் பு…. யில் நளமே இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன், அண்ணை இஞ்ச வாவண்ணை கதைப்பம் எண்டு நான் கேட்டு முடிக்க முதல் கையுக்கு வெட்டிப் போட்டான், விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் பிறகு அடி நடக்குது, சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள். திருவிழா, சவாரி போன்ற நிகழ்வுகளிலும், வீதிகளில் போகும் போதும் இளைஞர்களுக்கு அடிப்பது துன்புறுத்துவது முதலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கிராம மக்கள், தீடீரென இன்பநாதன் வாளால் வெட்டப்பட்டு, ‘நளவருடைய’ தகர வேலிகளும், கதவுகளும் நொறுக்கப்படுமென்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டுக்குள் அவர்கள் பதுங்க, இருபது நிமிடங்களுக்கு மேல், ஆமியும் இயக்கமும் சண்டையில் ஒரு இடத்தைக் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருப்பது போல் அவ்விடத்தை வைத்துக்கொண்டு ஆதிக்க வெள்ளாளர்கள் ஆடிய சதிரை இன்பநாதன் அவர்கள் விபரிக்க விபரிக்க குரல் நடுங்கியது. “அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே. அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப்பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம். கல்லுமழை. அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரிக் கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். அவங்கள் சண்டேலை நல்லா ஊறினவங்கள் எல்லாரும் கெல்மெட் போட்டுத்தான் வருவாங்கள். அண்டைக்கு ஓடேல்ல எண்டா பெடியளை வெட்டி இருப்பாங்கள். அந்தக் கதவு, வேலிகளை என்ன செய்திருக்கிறாங்கள் பாருங்கோ. எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும். நாங்கள் ஒரு வழக்கெடுக்கேலா, எங்களுக்கு ஒரு பிரச்சினையெண்டு ஒரு இடத்த போகேலா, ஜனநாயகம், ஜனநாயகம் எண்டுறாங்களே, ஜனநாயகம் எண்டால் என்ன?” இன்பநாதனின் நினைவு என்பது அவருக்கு விபரம் தெரிந்த இருபத்தைந்து வருடங்களில் இருந்து பின்னிக்கொண்டு மேலெழுந்து வெட்டப்பட்ட அவருடைய கைவரை ஏறுகின்றது. ஒவ்வொரு முறையும் தாக்கப்பட்ட அவருடைய முன்னோர்களை அவர் நேரடியாக நினைவுகூரவில்லை. அவருக்கு அவர்களை ஞாபகம் இருக்குமோ தெரியாது, ஆனால் அடிகளும், கொடுமைகளும் ஞாபகத்தில் இறுகிப்போயிருந்தது. முன்னோரைக்காட்டிலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே பெரிய ஞாபகமாகவிருந்தது. இரண்டு தாய்மார்கள் சம்பவம் நடந்து பத்து நாட்களாகிவிட்டது. ஒரு கெட்டித்து இறுகிய கோவமும், இழந்து விட்ட நிம்மதியின் நடுக்கமும் அவர்களுக்குள் பரவியிருந்தது. பொருமி வெடித்த கோபமும், கெலித்த உடலுமாக அவர்கள் பேசினார்கள். அவை அங்கிருந்த ஆண்களைக் காட்டிலும் செறிந்து, உறுதி பெற்றிருந்தன. ’இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால் இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு. இதெல்லாம் இவ்வளவு காலமும் இப்பிடியே நடந்துகொண்டு இருக்கு, இண்டைக்கு நேற்றே இது நடக்குது? நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது? சும்மா நிண்ட எங்கட அம்பைய்யா பாவம், அண்டைக்கு நடந்த சம்பவத்திலை அடிச்சுப்போட்டாங்கள், நெத்திலை குத்தி இருக்கு, ஏலாத மனிசன், இப்ப புத்தி மாறி நிக்குது. வயசு போன ஆள் என்ன கேட்டது. அண்டைக்கு பொம்பிளையள ஓடியிருக்காட்டி துண்டு விழுந்திருக்கும், நிண்டிருந்தால் கட்டாயம் வெட்டி இருப்பாங்கள். நாங்கள் ரெண்டுபேரும் போய்க் கதைச்சனாங்கள் அவையளோடை, சின்னப் பெடியங்கள் வந்த இடத்தை ஏதோ தெரியாமச் செய்திருப்பாங்கள். நீங்கள் மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பியவை இந்தப்பிரச்சினை வேண்டாம், பேசாம விடுங்கோ அவையளும் போகட்டும் நீங்களும் போங்கோ எண்டு கெஞ்சிப் பாத்தனாங்கள். எங்களை உங்களுக்குத் தெரியும்தானே, எண்டு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சிப்போட்டு வந்தனாங்கள். வந்தால் பிறகுதான் உது நடந்தது. எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம் இருக்கிது. எனக்கு உதுகள் பிடியாது. என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல, மரியாதையாத்தான் கதைக்கிறது, ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள். நீங்கள் ஆர்? தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்? கேற்றை உடைக்கிறாங்கள், வெளியிலை கத்துறாங்கள் நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம், லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். ‘நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு’ எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்? நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள், அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ? என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது, ஏன் சும்மா பிரச்சினையெண்டு இரவிலை அம்மா வீட்டிலை போய்தான் எல்லாரும் படுக்கிற. இப்ப கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது. அண்டைக்கு எங்கட ஆக்களிட்ட ஒருத்தரிட்டையும் ஆயுதமில்லை, வெறுங்கையோட நிண்டவை. இவங்கள் இப்பிடிச்செய்வாங்கள் எண்டு ஆர் எதிர்பார்த்த? தம்பி நாங்கள் என்னெண்டாலும் செய்யிறம் இதுக்கொரு தீர்க்கமான முடிவு எடுத்துத்தாங்கோ, வாறனியள் வந்து சும்மா கதைச்சுப்போட்டுப் போற மாதிரி இருக்கக்கூடாது. திரும்பவும் இதுக்க இதுமாதிரி ஒரு பிரச்சினை வருமெண்டால் அதுக்குப்பிறகு இஞ்ச ஒருத்தரும் வரக்கூடாது, சொல்லிப்போட்டன். பொம்பிளையள் விடவும் மாட்டம் வர. இரண்டு இளைஞர்கள் அடிகளையும், சாதிவசைகளையும், சமாளித்துச் சமாளித்துச் சோர்ந்துபோன அவர்களுடைய அன்றாடம் முகங்களை விடியவிடாமல் செய்திருந்தது. “பொலிஸ் கோட், கேஸ் வழக்கு ஒண்டும் நிக்காது. இப்ப கூடக் கோட்டுக்குப் போயிருக்குத்தான், ஆனால் என்ன நடக்குமோ எப்பிடி முடியுமோ எண்டு எங்களுக்கு நம்பிக்கையில்லை. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை. நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலா. அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும், ஆனால் அவங்களுக்கு அப்பிடியில்லை. வெளிநாட்டுக்காசு கிடக்கு. அவைக்கு ஜெயிலுக்கு போறதும் வெளியிலை வாறதும் ஒரு பிரச்சினையில்லை. அவங்கள் நிறையப் பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். பைக்கிலை போகேக்க கலைச்சுக்கொண்டு வருவாங்கள், திருவிழா, சவாரி எண்டால் சண்டை, அடி. எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் ஒரு இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல். பள்ளிக்கூடங்களிலை எங்கடை பிள்ளையள் படிக்கிறேல்ல எண்டு கொம்பிளைண்ட். ஏனெண்டு போய்ப் பாத்தால், எங்கடை பிள்ளையள் ஒழுங்கா வாறேல்ல எண்டினம். நாங்கள் ஏன் பிள்ளையள் போறேல்ல எண்டு பாத்தால், பிள்ளையள் ஐஞ்சு நிமிசம் பிந்திப்போனாலும் வீட்ட போய் தாய் தேப்பனைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுவாங்கள், பிள்ளையள் வீட்ட வந்தால் தாய் தேப்பன் கூலி வேலை, வயல் வேலை எண்டு போய்டும், பிள்ளையள் அவை இல்லாம எப்பிடிப்போறதெண்டு பள்ளிக்கூடம் போகாம நிண்டிடும். இதுதான் நடக்கும். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு.” இவ் உரையாடலின் போது அந்த இரவின் சூட்டை உணர முடிந்தது. யாரை யார் காப்பாற்றுவது என்று திணறியபடி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு சாதி வெறித் தாக்குதல் எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. இது சும்மா குழுச் சண்டை என்பதாகச் சித்தரித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாள சாதியைச் சேர்ந்த சிலர் குடிப்பதற்கும் கொண்டாட்டங்களுக்குமாக அரசடியில் ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடித்திருக்கும் போது கிடைக்கும் நளவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் வேறு வெளியாட்களையும் அடிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு. எந்தக் காரணங்களும் இன்றித் தாக்குவார்கள். வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரே இத்தகைய செயல்களினாலும் வன்முறைகளாலும் அந்தக் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அத்தகைய மோசமான குழுவினரை அவ்விடத்தை விட்டு அகற்றும் வல்லமையோ அல்லது அம்மக்கள் மீதான அக்கறையோ பெரிதாக யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலன ஊடகங்கள் பயங்கரமான ஒரு சாதி வெறித் தாக்குதலை, குடி வெறித் தாக்குதலாகச் சுருக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் கவனத்தை சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில் அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களிற்கும் அக்கறையிருப்பதில்லை. அது அவர்களின் நலன்களைப் பாதிக்கும். ஆகவே சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அம்மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். காலந்தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு அடித்தவர்களிடம் சென்று, தவறு செய்யாத மகன்களைக் காப்பாற்ற அப்பாக்களும் அம்மாக்களும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். நாம் அவர்களையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையையும் அகற்ற முன்வரவேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களிற்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். சாதிய ஒடுக்குமுறைகள் தொழிற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் அதற்கெதிராக உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைவதே அம்மக்களுக்கான சமூகநீதிக்கான முதற்படியாகும். நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை, சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல்மயப்படுதலின் முதற்படி. நம் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளை இனங்கண்டு, அந்த ஒடுக்குமுறைக் களைவது பற்றிய அறிதலும் செயலாற்றலுமே அரசியல்மயப்படுதல். சாதியால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் சாதி எப்படி அவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிவு பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும் அவர்களுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அக்கல்வியை அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகக் கையாளவேண்டும். ஆதிக்க சாதியில் பிறந்தவர்களும் தங்களது சொந்த சாதி நலன்களிலே மட்டும் மூழ்கிக் கிடக்காமல் சாதி ஒடுக்குமுறையையும், தாம் எப்படி ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கற்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைக்கு தமது முன்னோர்களும் தாமும் எப்படிக் காரணங்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து அவற்றை மாற்ற முன்வர வேண்டும். இங்கு ஒவ்வொரு சாதியிலும் தனக்கு மேல் கீழென்று சாதிகள் இருக்கிறது என்று மூட நம்பிக்கை கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நம் குழந்தைகளை அறிவூட்டிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடத்தில் நாம் இந்தச் சாதி வெறித் தாக்குதலை நம் கண் முன்னே காண்கிறோம். நமது சமூகம் சாதிய இழிவுகளிலிருந்து மீண்டெழ அறிவார்ந்து சிந்திக்கவும் ஒடுக்கப்படும் மக்களைக் காக்கவும் அவர்களுக்கான சமூக நீதியும் சுயமரியாதையும் மீட்கப்படவும் நம்மாலான ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும். தோழமையுடன் விதை குழுமம் https://www.facebook.com/607026622683610/posts/4614665251919707/
 21. மார்க்கண்டேயன் மிஸ்ரர் விசுகர் அவர்களுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
 22. மா(ன்)மியம் யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் பழம் புரட்டாதீல பூத்து மார்கழீல பழம் வரும் . இது பாக்க பாசி பிடிச்ச சுவர் மாரி இருக்கும், பச்சைத் தோலில கறுப்பு நிறப் படைஒண்டு ,அப்ப பாவிச்ச பிசின் போத்தலில வெளீல வழிஞ்சு காஞ்சு போன பிசின் ஒட்டின மாதிரி இருக்கும் . பெரிய இனிப்பாயும் இருக்காது. வைகாசியில மரமெல்லாம் பூவா இருக்கும் .கொட்டிண்ட பூ போக, காய் வந்ததும் ஆடிக்காத்தில் தப்பின காய் மட்டும் பழுக்கும். இந்த season பழம் தான் யாழ்பாண ஸ்பெஷல். ஆடிக்காத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும், நம்மடை பெட்டைகள் ஒரு கையால சட்டையைப்பொத்தி மற்றதால சைக்கிளையும் பனையோலை தொப்பியையும் பிடிச்சுக்கொண்டு முக்கித்தக்கி உழக்கிக்கொண்டு போகேக்க ,எப்ப காத்தடிக்கும் எண்டு வாய் பாத்த காலம் அது. “கச்சான் அடித்த பின்பு காட்டில் மரம் நின்றது போல் உச்சியில நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை.” இப்படி ஒரு நாட்டார் பாடல் படிச்சதா ஞாபகம். மாங்காயில கனக்க வகை இருந்தது. பாண்டி, புளி மாங்காய், பச்சைத்தண்ணி மாங்காய்,சேலம், கிளிச்சொண்டு, அலரி மாங்காய், ஒட்டுமாங்காய், செம்பாட்டு, விளாட்டு, அம்பலவி, காட்டு மாங்காய், வெள்ளைக்கொழும்பான் எண்டு இருந்தாலும் Signature variety கறுத்தக்கொழும்பான் தான். ஒவ்வொரு மாங்காய்க்கும் ஒரு speciality இருக்கு.கறிக்கும் சொதிக்கும் எண்டா பாண்டி மாங்காயும் , புளி மாங்காயும் தான். தனிய மாங்காயை போட்டு மட்டும் சொதி வைக்கலாம் . திரளி மீன் தலைக்கு மாங்காய் துண்டு போட்டு வைக்கிறது , நல்லூர் வெளி வீதிமுருகன் உலாவும் பத்மநாதன்டை நாதஸ்வரமும் மாதிரி . தனித்தனியவும் இரசிக்கலாம் சேர்த்து ருசிக்கலாம். கிளிப்பச்சை நிறத்தில நல்ல குண்டா இருக்கும் பாண்டி மாங்காய் , காய்க்குத்தான் சரி. புளிப்பு கூடினது , உப்பு தூளோட சேத்து சாப்பிடேக்க அந்த மாதிரி இருக்கும். காய் மாங்காய்க்கு பாண்டி, சேலம், கிளிச்சொண்டு ,பச்சைத்தண்ணி மாங்காய் எல்லாம் நல்ல brands. மாங்காயை புடுங்கேக்க, காம்பு கொஞ்சம் காய்ஞ்சு கறுத்து இருக்க வேணும் அப்ப தான் காய்க்கு பதம் சரி. பாண்டி எண்டால் தோல் பச்சை குறைஞ்சு வெள்ளை பிடிக்க வேணும், சேலம் மாங்காய் காம்படியில் மஞ்சள் குறைஞ்சு சிவப்பாக வேணும். விளாட்டு ஒரு maroon shade ஐ தரேக்க பதம் காய்க்கு சரியா இருக்கும். மாங்காய் புடுங்கேக்க பால் முகத்தில படாமல் புடுங்க வேணும் , பால் பட்டால் அவியும். மரம் ஏறி மாங்காய் புடுங்கிறது ஒரு thrill எண்டால் , கல்லால இல்லை தடியால எறிஞ்சு மாங்காயோட சில பல ஓடுகளையும் கண்ணாடிகளையும் உடைச்சிட்டு புடுங்கின மாங்காயை மடிச்சுக் கட்டின சாரத்துக்குள்ள தூக்கிக் போட்டுக் கொண்டு தப்பி ஓடுறது இன்னொரு thrill ஆன கலை .கள்ளம் காதலில் மட்டும் அல்ல கள்ள மாங்காயிலும் தான், அது ஒரு தனி சுகம். புடுங்கின மாங்காயின் காம்பு பக்கத்தை பூசாத சீமெந்துச்சுவரில இல்லாட்டி தீட்டின மரத்தில கூர் பாக்கிற மாதிரி புடுங்கின மரத்திலேயே , பால் போக தேச்சிட்டு ,பொத்திப்பிடிச்சபடி குத்த வேணும் , அப்பதான் மாங்காய் சிதறி வெடிக்கும் ஆனால் நிலத்தில விழாது. வெடிச்ச கீலத்தில ஒண்டை அப்பிடியே இழுத்துப்பிச்சு உப்புத்தூளோட சேர்ததுச் சாப்பிட ஒரு சுவையரங்கமே நாக்கில் அரங்கேறும். கட்டி உப்பில தனி மிளகாய்ததூள் கலக்கவேணும் எங்கடை கறித்தூள் சரிவராது. மாங்காயால உப்பை குத்தினால் அதோட மிளகாய் தூளும் சேர்நது வரும் . வாய்க்குள்ள வைச்சா கடைவாயில புளிப்பும், நடுநாக்கில உப்பும், நாசிக்ககுள்ளால மூளைக்கு உறைப்பும் ஏறும் அது தான் அந்த சுவையரங்கம். மாங்காயை கழுவி கத்தியால வெட்டி உப்பையும் தூளையும் அரைச்சப் போட்டாலும் இந்த taste வராது. love பண்ணிற மாதிரித்தான் மாங்காய் புடுங்கி சாப்பிடிறதும். பூத்தது காய்க்க தொடங்க கண்வைச்சு , கனியத்தொடங்க தான் , மாங்காய்க்கும் அது நல்ல பதம். பச்சைத்தண்ணி மாங்காய் ,பேர் மாதிரித்தான் சாப்பிட்டா வெத்திலை மாதிரி சாறு மட்டும் வரும். இப்ப அது பெரிசா ஒரு இடமும் இல்லை. கிளிச்சொண்டன் , பேருக்கு ஏத்த மாதிரி, நுனி வளைஞ்சு பச்சையா இருக்கும். இதுவும் காய்க்கு தான் taste. அப்ப Cricket match பாக்கேக்க கச்சான் , மாங்காய் , கரம்சுண்டல் , ஐஸ் பழம், ஜூஸ் பக்கற் எல்லாம் side dishes மாதிரி. ஊரில கிரிக்கட் Match நடக்கேக்க co sponsors ஆன ஐஸ் பழ சைக்கிள், மாங்காய் வண்டில் , கச்சான் ஆச்சி எல்லலாரும் கட்டாயம் வருவினம் . அந்த மாங்காய் வண்டில் காரர் , நீங்கள் காட்டிற மாங்காயை அப்படியே கழுவாம சத்தகக்கத்தியால நுனியை வெட்டி பிறகு நீட்டு நீட்டா வெட்டி , அதுக்குள்ள கொஞ்சம் உப்பு தூள் போட்டு தருவார் . அதை ஒவ்வொரு துண்டா பிச்சு சாப்பிட தொடங்க , அது வரை serious ஆக match பார்த்த எல்லாரும் கை வைக்க , கடைசியில் மிஞ்சிற கொட்டை சூப்பிறதும் சந்தோசம். மாங்காயிலும் ஒரு அடி நுனி தத்துவம் இருக்கு. அது தான் ஒரு நாளும் நாங்கள் குறுக்கால வெட்டிறதில்லை. கரும்பு மாதிரி நுனியில இருந்து கடிச்சுக்கொண்டு போக கொஞ்சம் கொஞ்சமா புளிப்பு குறைஞ்சு இனிமை கூடும். காய் பழமாக கொஞ்சம் காலம் பொறுக்க வேணும் . மாம்பழம், அணில் கொந்தி ஒண்டு இரண்டு பழம் விழும் . உடனே முத்தீட்டு எண்டு எல்லாத்தையும் புடுங்கக் கூடாது. ஆனால் கொந்தின பழம் சாப்பிட்டு பாக்க இந்த முறை பழம் எப்பிடி இருக்கும் எண்டதுக்கு sample ஆ இருக்கும். அநேமா அணில் கொந்த தொடங்க இரண்டு மூண்டு கிழமையால கொஞ்சம் கொஞ்சமா புடுங்கத் தொடங்கலாம் . நல்லா சாம்பல் பத்தி நுனி கரும் பச்சை குறையேக்க பருவம் சரி . முத்தலை சரியா பார்த்து , பட்டை கட்டி சாக்குப் பிடிச்சு புடுங்கிறதில இருந்து , வைக்கல் போட்டு பழுக்க வைச்சு சாப்பிடுறது வரை ஒரு பக்குவம் வேணும். மொட்டைக்கறுப்பன் அரிசிமா புட்டுக்கு , நல்ல செத்தல் தேங்காய்பூ கலந்து , பொரிச்ச சம்பலோட வெட்டின மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுறது ஒரு தனி சுகம் . யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் எண்டு சொன்னாலும் , அது கொஞ்சம் தும்புத்தன்மை கூட . ஆனால் புழு இருக்காது, பழுத்தால் எல்லாம் ஒரே சீரா இனிக்கும். சாப்பிடேக்க இருக்கிற taste ம் மணமும் சாப்பிட்டாப் பிறகு கையை கழுவினா இருக்காது. சாப்பிட்டிட்டு தண்ணி குடிக்கேக்க ஒரு கயர்ப்பு தன்மை தொண்டைக்குள் தெரியும். விளாட்டு எண்டால் காய், முத்தல் ,பழம் எண்டு எல்லாப்பதத்திலும் சாப்பிடலாம் .பழம் பிழைக்காது ,காசுக்கு நம்பி வாங்கலாம் . அம்பலவி செம்மஞ்சள் நிறம் அது ஒரு தனித்துவமான கலர், கன பேர் சீலை வாங்கேக்க தேடித் திரியிற கலர். பழம் முழுக்க ஓரே நிறமா இருக்கும் . நல்ல இனிப்பு ஆனால் நெத்தலி மாரி ஒல்லியா நீட்டா இருக்கும் சதை குறைவு ஆனாலும் நார் இல்லை கையில் சாறு வடிஞ்சாலும் ஒழுகி ஓடாது . சூப்பி முடிச்ச மாங்கொட்டையில் ஒரு தும்பு கூட இருக்காது . ஒரு மாம்பழம் வெட்டி பங்கு பிரிச்சு சாப்பிடேக்க கறுத்தக் கொழும்பான் எண்டா கரைத்துண்டும் அம்பலவி எண்டால் நடுக் கொட்டை பகுதியும் எடுக்க வேண்டும். இந்த பங்கு பிரிக்கும் பிரச்சினையால தான் நாரதர் மாம்பழத்தை முழுசா சாப்பிட சொன்னவர் . செம்பாட்டு மாம்பழம். தனி ரகம், பழம் எண்டா பின்னேரச் சூரியன் பட்ட நல்லூர் தங்க ரதம் மாதிரி , மஞ்சளில Orange கொஞ்சம் கலந்த மாதிரி இருக்கும் . நிறம் , மணம், சுவை எல்லாம் அளவா சேர்நதது, நல்ல சதைப்பிடிப்பு. குட்டி குஸ்பு மாதிரி கட்டையா குண்டா இருக்கும் . நம்பி வெட்ட ஏலாது ஏனெண்டால் உள்ளுக்க புழுப்பிடிச்சிருக்கும். சாப்பிட்டிட்டு கை கழுவினாலும் மணம் அப்படியே இருக்கும். வெள்ளைக்கொழும்பான் பழுத்தாலும் வெளிறின மஞ்சளாத்தான் இருக்கும் உள்ள கொஞ்சம் தண்ணித்தனமை இருக்கும் சாப்பிடேக்க கை எல்லாம் ஒழுகும். புடுங்கின மாங்காயை வைக்கலைப் போட்டு அடுக்கி வைச்சு ,அடைக்கு வைச்ச முட்டை குஞ்சாகீட்டுதோ எண்டு கூடையை துறந்து பாக்கிற மாதிரி மூடின சாக்கை அடிக்கடி தூக்கி பாத்து , பழுத்ததை தேடி எடுத்துக் கொண்டு போய் வெட்டி அப்ப தான் இறக்கின புட்டோட சாப்பிட்டவன் மட்டும் தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவான் . மாம்பழத்துக்கு ஏன் அந்தப் பேர் வந்தது எண்டு தெரியாது ஆனால் “மா” எண்டால் பெரியது எண்டு சொன்னாலும் ,அது எங்களுக்கு எப்பவுமே வரலாறு ,ஏன் எண்டால் குடும்பச்சண்டைக்கு சிவனுக்கு ஒரு மாம்பழம் எங்களுக்கு ஒரு “மா”விலாறு. மாங்காயோ ,மாம்பழமோ சாப்பிடிறது ஒரு கலை ஆனால் கட்டாயம் தெரிய வேண்டிய கலை. Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.