Everything posted by நிழலி
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
மேலும் மேலும் உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றி. இன்னும் இரண்டு பகுதிகள் மட்டுமே உள்ளன எழுதி முடிக்க. ராசுக்குட்டியின் அனுபவங்கள் சிலருக்கு பாடமாக அமையலாம்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 2: சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார். "ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது. ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை. இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார். இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும். சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை. உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார். பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை. - தொடரும்;
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பின்னூட்டம் இட்டும் பச்சைப் புள்ளிகள் தந்தும் ஊக்குவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. ராசுக்குட்டி பட்டபாடு நாலு ஐந்து பந்திகளில் அடக்க முடியாது. இன்னும் வரும்..
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
-
அன்புள்ள அம்மா....
நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும். நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
லொக்டவுண்
உப்பிடி காதும் காதும் வைச்ச மாதிரி இங்க எங்கள் சனத்துக்குள் நிறைய நடக்குது. எனக்கு தெரிந்து இப்படி போய் கலந்து கொண்ட ஒரு குடும்பத்தில் மனைவிக்கும் கணவருக்கும் கொரனோ வந்து படுத்தி எடுத்து விட்டது. காலத்துக்கு ஏற்ற கதை. இடையில கட்டுப்பாடுகளை தளர்த்தி 25 பேர் உள்வீட்டில் (indoor) சந்திக்கலாம் என்று அரசு சொல்லிய கடந்த ஆகஸ்டில் நாலு நண்பர் குடும்பமாக ஒரு கொட்டேஜ் இற்கு போய் வந்தோம். கட்டுப்பாட்டு இறுக்கிய காலத்தில் பார்ட்டி ஒன்றுக்கும் போகவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிற்கும் அகஸ்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒன்றாக இணைத்துள்ளேன். சரி பாருங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புத்தன் கள உறவு ஒருவர் இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தப் பதிவையும் இடாத போது தானியங்கியால் அவர் கருத்துக்கள உறவுகள் நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டு விடுவார். இந்த உறுப்பினர் பிரிவில் உள்ளவர்களால் பச்சைப் புள்ளிகளை இட முடியாது. (நீங்கள் இறுதியாக சனவரி 9 இன் பின் இன்றுதான் கருத்து ஒன்றை வைத்துள்ளீர்கள்.) இவ்வாறு பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டுவிட்ட ஒரு உறுப்பினர் மீண்டும் ஒரு வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணைக்கையில் பதிவுகளை இட்ட பின் அவர் மீண்டும் கருத்துக்கள உறவுகள் நிலையிற்கு நகர்த்தப்படுவார். இந்த செயற்பாடு, கருத்துகள் எதுவும் வைக்காது வெறுமனே பச்சை குத்த விரும்புகின்றவர்களை கருத்தாடச் செய்வதற்காகவும், பச்சைப் புள்ளிகளை தவறாக பயன்படுத்த முனைகின்றவர்களை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ஒரு செயற்பாடு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியமைக்கு நன்றி! பிள்ளைகளுக்கு சாட்டுகள் சொல்லி தப்பிக்க முடியாது. அப்படிச் சொன்னால் அவையளும் அவற்றை எமக்கே சொல்லி எஸ்கேப் ஆவார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போன வருடம் என்று நினைக்கின்றேன், இன்னும் கொஞ்சப் பேர் வாழ்த்திய பின் வாழ்த்தலாம் என்று நினைத்து பிறகு அப்படியே மறந்தாச்சு. இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்று உடனே நன்றி கூறிவிட்டேன். பிள்ளைகள் வளர்ந்து முக்கிய பருவத்தில் இருக்கினம் என்பதால் நேரம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கு.. சனி ஞாயிறு என்றால் யாழ்ப்பக்கம் வருவது முடியாமல் போகுது. இடைக்கிடை பிழம்பாருக்கும் வேலையும் கொடுக்க வேண்டும்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித்துக்கும் சகாறாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்று மாவீரர் தினம்!
உயிர் பற்றி எரியும் நினைவுகளுடன் உங்களைத் தொழுகின்றோம் விதைக்கப்பட்ட உங்களையும் உழுது களித்த எதிரி முன் கையறு நிலையில் நின்று மீண்டும் அரட்டுகின்றோம் உங்கள் நினைவுகளை துதிக்கும் உரிமையையும் மறுக்கும் 'சனனாயக' வாதிகளுடன் கண்ணீர் மட்டும் கொண்டு நிராயுதபாணிகளாக தவிக்கின்றோம் எமதருமை மாவீரர் செல்வங்களே உடலையும் உணர்வையும் ஆகுதியாக்கி யாகம் வளர்த்த தியாகிகளே கண்ணீருடன் சிந்தவும் உரிமையற்று வந்திருக்கின்றோம் எங்களை மன்னித்து காப்பீராக ------------- தமிழீழப் போரில் தம் உயிர்களை தியாகம் செய்த தலைவர் பிரபாகரனுக்கும், புலிப் போராளிகளுக்கும் இதே நோக்கத்திற்காக வீரமரணம் அடைந்த அனைத்து இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தமிழ் சிறி, இதை யாழில் சில வருடங்களுக்கு முன்னரும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த பின்னர் தான் நான் பேர்ஸ் சினை பின்னால் இருக்கும் பொக்கட்டில் வைப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். உங்களுக்கு என் நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு சிறு மாற்றம் செய்து பார்த்துள்ளேன்... இப்ப முயன்று பார்த்து சொல்லவும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கு.சா அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் குமாரசாமி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அகத்தான் என்று மாற்றியுள்ளேன். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எமது சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். புரட்சிக்கும் பிந்திய பிறந்த் தின வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நியாயத்தை கதைப்போம், தவறு என்னுடையது. உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை. விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன். இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன். நன்றி நிழலி