Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மேலும் வாழ்த்துக் கூறிய நொச்சி, ஜெகாதுரை, பெருமாள், ராசவன்னியன் அண்ணா மற்றும் எப்போதும் தமிழன் ஆகியோருக்கும் என் நன்றி. வாழ்ந்த காலங்களை விட வாழப் போகும் காலம் குறுகிக் கொண்டு செல்லும் நேரம் இது. இந்த மிச்ச சொச்ச வாழ்க்கையில் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி பாஞ்ச் அண்ணா என் 100 ஆவது வயதில் இப்படி தான் இருப்பேன் என நினைக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சுவி அண்ணா, கிருபன், உடையார், குமாரசாமி அண்ணா, வாதவூரன், ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன், யாயினி, நிலாமதி அக்கா, தமிழ் சிறி, புரட்சி, நந்தன், கந்தையா, நுணா, இணையன் மற்றும் புங்கையூரன் ஆகியோருக்கு என் நன்றிகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
ஐம்பதில் ஆசை
பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄
-
ஐம்பதில் ஆசை
முகம் தெரியாத எத்தனை பேர் எம்மை எம் வாழ்வில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்! 7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?
-
ஐம்பதில் ஆசை
அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.
-
ஐம்பதில் ஆசை
நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மார்க்கண்டேயன் மிஸ்ரர் விசுகர் அவர்களுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Red pepper இல் சோறு வைத்து Oven னில் வைத்து Bake செய்யப்பட்ட உணவா? எப்படி செய்தார் இதனை? நேற்று இதே மாதிரி, கணவாயிற்குள் (குடலை எடுத்த பின்) சோறு கறிகளை வைத்து bake பண்ணிய ஒரு சாப்பாட்டின் செய்முறையை கண்டனான்.
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
அப்படி வாடகை சைக்கிள் என்ற விடயம் பற்றிய எந்த நினைவும் இல்லை. சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம் என்பதை ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி செந்தில் நடித்த கட்சியில் மட்டுமே அந்த காலத்தில் பார்த்து இருந்தேன். என் வீட்டுக்கு முன்பாக சுண்டிக்குளி / பாண்டியன்தாழ்வு பகுதியில் பிரசித்தி பெற்றிருந்த ஒரு சைக்கிள் கடை இருந்தது. அதனை வைத்து இருந்தவர் முடிகள் அற்று மொட்டையாகவே இருப்பார். அங்கு சைக்கிளை வாடகைக்கு கொடுத்ததான ஞாபகம் இல்லை. ------- ஏனோ தெரியவில்லை சின்ன வயசில் இருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு அப்பா அம்மா விளையாட்டுத்தான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன். அண்மையில் பிறந்த தினம் கொண்டாடிய புத்தன் மற்றும் குமாரசாமி ஆகியோருக்கும் என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கள் யாழ் களத்து ரம்போ கிருபனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பழுத்த பச்சை அப்பிளா? அல்லது முத்தி இன்னும் பழமாக அப்பிளா? இங்கு பச்சை நிறத்திலும் அப்பிள் இருப்பதால் நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள் என தெரியவில்லை. தாய்லாந்து சமையல் தெரிந்த என் நண்பன், பச்சை பப்பாக்காயை இவ்வாறு சீவி அதை சலட் டில் கலந்து தருவான். நல்லா இருக்கும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது. மெலிதான சோகம் இழையோட, தனித்து பாதையை கடக்கும் ஒரு வழிப்போக்கன் பாடும் பாடல் போன்ற பாடல் இது.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உப்புப் போட்டால் அதன் அரோக்கியத்தன்மை அற்றுப் போய்விடும் என்று சலட்டிற்கு நான் உப்புப் போடுவதில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆஹா... ! இப்படி ஒரு வழி இருப்பது இன்றுதான் எனக்கு தெரிந்தது! நன்றி நன்றி நன்றி...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கன நாட்களாக களத்தில் எந்த பதிவும் இடாதவர்களை தானியங்கி அலேக்காக தூக்கி அப்படியே கொண்டு போய் கருத்துக்கள பார்வையாளர்கள் பிரிவில் போட்டுவிடும். கருத்துக்கள பார்வையாளர் பிரிவில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே உண்டு. உங்களை மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும். நீண்ட இணையத்தள முகவரிகளை திண்ணையில் இட முடியாது. இப்படியான சந்தர்ப்பங்களில் கீழே உள்ள இணையத்திற்கு சென்றால் நீண்ட முகவரிகளை சிறிய முகவரிகளாக மாற்றித் தரும். அதனை ஒட்டலாம். https://tinyurl.com/ இவ் இணையத்தளம் எமதல்ல. இது ஒரு External இணையத்தளம் என்பதால், அதை பயன்படுத்துவதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் யாழ் இணையம் பொறுப்பேற்க முடியாது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்தாயிட்டு, பார்க்கவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாற்றியாச்சு, சரி பார்க்கவும்
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
நான் மூன்று வாரங்களுக்கு முன்னர் பைசர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பை போட்டேன். கையை தூக்கும் போது மட்டும் லேசான வலி ஒன்று இருப்பது போல் இருந்ததை தவிர வேறு எந்த பின் விளைவுகளும் இருக்கவில்லை. மனைவிக்கு இரண்டு நாட்கள் கை வலி இருந்து மூன்றாம் நாள் படிப்படியாக குறைந்து இல்லாமல் போய்விட்டது.