Everything posted by நிழலி
- Eiden.jpg
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு உங்கள் உறுப்பினர் மட்டத்தினை நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா. உங்கள் பிறந்த நாளுக்கு தான் சுட்ட முறுக்கை தமிழ் சிறி உங்களுக்குத் தரவில்லையா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி!!
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
எப்படி பிரச்சனையை தீர்த்தார்கள்?
-
என் கொறோனா அனுபவம்
இங்கும் அப்படித்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒட்சிசன் அளவு குறைந்தால் அல்லது மூச்சு விட மிகவும் சிரமப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சொல்கின்றனர். ஒரு நாளைக்கு 1500 பேருக்கு வந்தால் அதில் 100 பேர் வரைக்கும் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் 98 பேராவது பிழைத்துக் கொள்கின்றார்கள். இரண்டாம் தடவை வருவது மிகவும் அபூர்வம் அல்லவா?
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
முழுமையாக வாசித்து முடித்தேன். அருமையான எழுத்து நடை. இந்தளவுக்கு எழுதும் திறமை இருந்தும் குடத்துள் விளக்காக ஏன் இருக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசின் அழிவுகள் கொடுக்கும் பொருளாதார சுமைகளில் இருந்து சக மக்களை மீட்கவும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தான் இப்பவும் தேவையாக இருக்கின்றார் என்றால் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிவிட்டு கொள்ளை அடிப்பது மட்டுமன்றி வேண்டும் என்றே வலைகளையும் படகுகளையும் நாசப்படுத்தும் தமிழக மீனவர்களின் அட்டூழியங்கள் கொடுக்கும் பொருளாதாரச் சுமையையில் இருந்தும் அதே புலம்பெயர் தமிழன் தான் மீட்க வேண்டி இருக்கு. கரையில் நின்றாலே இந்திய படகுகளின் சத்தங்களை கேட்க கூடியதாக இருக்கின்றதெனில் அவர்கள் தெரியாமல் எல்லை கடக்கவில்லை; நன்கு தெரிந்து கொண்டே எல்லை மீறுகின்றார்கள். முடிவை இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். வேகமாக முடித்து விட்டீர்கள்.
-
என் கொறோனா அனுபவம்
அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே. ஆனால் கொரனா வந்தால் எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று சொல்வது சரியல்ல. ஒருவருக்கு ஒட்சிசன் அளவு குறைந்து கொண்டு சென்றால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் பிழைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இல்லாவிடின் மிகவும் ஆபத்தாக போய்விடும். வீடியோவின் ஆரம்பத்தில் குடும்பத்தில் 3 பேருக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மூன்றவதாக யாருக்கு வந்தது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய இணையவனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்தும் இனிப்புகளும்.
-
அண்ணா அறிவாலயம்.
மலரும் நினைவுகள் எப்பவுமே அருமையாக இருக்கும். ஈழப்பிரியன் அண்ணாவின் நினைவுகளும் அப்படியே அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
தொடர் நன்றாக உள்ளது. ஊரில் இருந்து கொண்டு எழுதும் போராட்டக் கதைக்கும் வெளி நாட்டில் இருந்து கொண்டு அதில் பங்கு கொள்ளாமல் போர்காலம் பற்றி எழுதும் கதைக்கும் சூழ்நிலை சார்ந்த யதார்த்தம் , சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. அது உங்கள் கதையில் தெரிகின்றது.
-
இனி இளவேனில் காலம் - நிழலி
எழுதத் தொடங்கும் போது எதைப்பற்றி எழுதப்போகின்றேன் என்ற கரு மட்டுமே மனதில் இருக்கும், வார்த்தைகளும் வரிகளும் அதன் போக்கில் இழுத்துச் சென்று எழுத வைக்கின்றன. முதன் முதலாக குறுக்கு கட்டியவள் என்ற படிமம், அது எழுதும் போது தானாக வந்த படிமம். மாதுளளையின் தளிரின் நிறத்தை மனசு அணுகின்றது. எவ்வளவு நாட்கள் அதைப் பார்த்து...! நாம் வெவ்வேறு துருவங்களில் வாழக்கிடைத்ததன் பின்னாலும் எமக்கு தெரியாத ஒரு காரணம் இருக்கலாம். சில தசாப்தங்களின் பின் நாம் ஒரு பெரும் பொருளாதார பலமிக்க, நன்கு கற்ற, பல நுட்பங்கள் அறிந்த ஒரு இனமாக நாளை எழுவதற்காகத்தான் இன்று இப்படி சிதறுண்டு வாழ்கின்றோமோ என்று அடிக்கடி நினைப்பதுண்டு.
-
இனி இளவேனில் காலம் - நிழலி
நன்றி நிலாமதி அக்கா. ஆரம்பத்தில் நான் 'சூழ்' என்று எழுதியிருந்தேன், ஆனால் நீங்கள் சரியாக அதை 'சூல்' என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். நான் இக் கவிதையை என் முகனூலில் பகிரும் போது நண்பரும் ஊடகவியலாளருமான விக்கினேஸ்வரன் இவ் எழுத்து பிழையை (சூழ் எனும் போது அர்த்தமும் பிழைக்கின்றது) குறிப்பிட்ட பின்னரே நான் உணர்ந்து கொண்டு திருத்தி விட்டேன். நன்றி ஈழப்பிரியன் அண்ணா இளவேனில் காலம் ஊர் தொடர்பான பல நினைவுகளை கொண்டு வரவும் தயங்குவதில்லை. முக்கியாம பிள்ளைகள் ஊஞ்சல் ஆடும் காட்சி எப்பவும் என் சிறு வயது நினைவுகளை கொண்டு வருவன. உண்மை.. .இளவேனில் காலம் அப்பதான் தலையில் முழுகி முடித்து ஈரத்துவாயை தலையில் சுற்றி வந்து நிற்கும் இளம்பெண் போன்று அழகானதுது நன்றி பசுவூர்கோபி. உங்களது கவிதைகளுக்கு நானும் ரசிகன் நன்றி அக்கா நானும் ஜக்கெட் போடாமல் ஒரு மெல்லிய சுவற்றர் மட்டும் போட்டு காலாற வெளியில் சென்று நடந்து வந்தேன். நன்றி புத்தன். அங்கும் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்று நிறம்மாறி அழகாக காட்சி தருமா?
-
இனி இளவேனில் காலம் - நிழலி
இனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
பகுதி 2: தேவபிரானும் அம்மாளாச்சியும் பெருஞ்சுழலாக பாலைவனப் புயல் வீசி தணிந்து இருந்தது. ஆயினும் புழுதி இன்னமும் சரியாக அடங்கவில்லை. பொழுது மம்மலாகவும் புழுதி படந்தும் இருந்தது. தேவபிரான் தன் வெள்ளை அங்கி உடல் முழுதும் தவழ நடந்து வருகின்றார்.கண்களில் கருணை ஒளி அந்த மம்மல் வெளிச்சத்தில் இரண்டு வெள்ளிப்பூக்களாக மின்னுகின்றன. பூக்களின் வாசனையை ஒத்த நிறம் பாலை எங்கும் கமழத் தொடங்குகின்றது. கருணை கொண்ட நெஞ்சத்தானின் கூரிய பார்வை நெடிய கோடொன்றை மண்ணில் வரைந்து செல்கின்றது. அவளை அவர்கள் விரட்டி வருகின்றனர். எல்லோரின் கைகளிலும் அவளை கொல்வதற்காக கற்கள். அவளை நோக்கி கற்களை வீசிக் கொண்டே விரட்டுகின்றனர். சிலர் வீசும் கற்கள் அவளுக்கு மிக நெருக்கமாக விழத் தொடங்குகின்றன. அவள் பயத்தில் அலறியபடியே அந்த பாலை எங்கும் அங்குமிங்கும் ஓடுகின்றாள். கால்கள் துவளத்தொடங்குகின்றன. உடல் தளர்கின்றது. அவளுக்கும் விரட்டுகின்றவர்களுக்குமான இடைவெளி குறையத் தொடங்குகின்றது. அவர்கள் எறியும் கற்கள் அவளின் மேல் விழப் போகும் அளவுக்கு அவளுக்கும் அவர்களுக்குமான இடைவெளி மிகவும் சுருங்குகின்றது. இனி ஓடுவதற்கு தெம்பும் இல்லாமல் சரிந்து விழ போனவள் தேவபிரானை காண்கின்றாள். அவர் கால்களில் வீழ்கின்றாள். கண்ணீர் அவர் கால்களை நனைக்கின்றன. அவளை நோக்கி கொல்வதற்காக விரட்டி வந்தவர்கள் தேவபிரானை கண்டவுடன் விரட்டுவதை நிறுத்துகின்றனர். அவர் அவளை வாஞ்சையுடன் கண்களில் இருந்து கருணை பெருக்கெடுக்க தொட்டுத் தூக்கின்றார். விரட்டி வந்தவர்கள் தேவபிரானை நோக்கி "இவள் ஒரு பாவி. பிற ஆடவருக்கு தன் உடலை விற்கின்ற பாவத்தை புரிகின்றவள். மரணதண்டனைக்குரியவள் " என்கின்றனர். தேவபிரான் அவர்களை நோக்கி "நல்லது, அப்படியே அவளுக்கு தண்டனை கொடுங்கள் ஆனால் உங்களில் எவர் எந்தப்பாவமும் செய்யவில்லையோ அவரே முதல் கல்லை அவள் மீது வீசட்டும்" என்கின்றார். விரட்டிவந்தவர்கள் தயங்கி நிற்கின்றனர். தம்மில் பாவங்கள் செய்யாத எவரும் இல்லை என்று உணருகின்றனர். தேவபிரான் அவளின் பாவத்தை மன்னிக்கின்றார். தேவபிரானுடன் சேர்ந்து விரட்டி வந்தவர்களும் அவளை மன்னிக்கின்றனர். அவளை மன்னிப்பதுன் மூலம் தங்கள் பாவங்களையும் கழுவுகின்றனர். அவள் விடுதலை அடைகின்றாள். *********************************** கணக்கர் சந்தியில் இருந்து பாசையூர் கடலை நோக்கி செல்லும் வீதியில் சற்று தூரம் கழிந்த பின் இரண்டு குளங்கள் உள்ளன. தண்ணீர் இருக்கும் காலங்களில் டோபி மார் வந்து உடுப்பு தோய்ப்பினம். குளங்களில் கொண்டு வந்த உடுப்புகளை தோய்த்து குளத்தின் கரைகளில் விரித்துப் போட்டு காயவைப்பினம். குளத்தின் நீரும் காயவைத்த உடுப்புகளின் விதம்விதமான நிறங்களும் அந்த இடத்தை வண்ணமயமாக்கும். வண்ணான் குளம் என்று அழைக்கப்படும் இக் குளங்களில் தண்ணி இல்லா காலங்களில் சின்ன பெடியல் வந்து பட்டம் விடுவினம். பாம்புப் பட்டமும், கழுகுப் பட்டமும் ஒன்றாக பறக்கும். பட்டங்களில் கட்டப்பட்டு இருக்கும் பாட்டு கசட்டில் இருந்து அறுத்து ஒட்டப்பட்டு இருந்த 'விண்' அடுத்தடுத்த ஊர்கள் வரைக்கும் கேட்கும். இக் குளங்களை கடந்து போனால், பெரும் விளையாட்டு மைதானம். அதையும் கடந்து போனால் பாஷையூர் புனித அந்தோணியார் கோயில் இருக்கும். அதன் பின்னால் சற்று தூரத்தில் இருக்கும் பாசையூர் கடலில் இருந்து வீசும் காற்று அந்தோணியாரை கோயில் எங்கும் நிறைந்திருக்கும் மெழுகுவர்த்தி வாசனையுடன் கலந்து ரம்மியமாக வீசும். அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு முறையும் பாதிரியார் தேவபிரான் அந்த பெண்ணை மன்னித்து விட்ட கதையை சொல்லும் போது எனக்குள் கண்ணீர் கசியத் தொடங்கும். என்னை அவர்கள் விரட்டி வருவதை கற்பனை செய்யத் தொடங்குவேன். விரட்டியவர்களில் என்னை தொட்டு பசியாறியவர்களும், பசியாக நான் இருக்கும் போது உணவு கொடுக்காதவர்களும், வீரமாகாளி அம்மன் கோவில் பூசகரும். சின்ராசும், மணியத்தாரும், ஜேக்கப்பும், பாக்கியம் அக்காவும், பரிசுத்த மலரும் நிற்பினம். எல்லாரது கைகளிலும் கற்கள் இருக்கும். செங்கலடி வீட்டில் கட்டிமுடிக்கப்படாத பகுதியில் இருந்து எடுத்த கொங்கிரீட்டும் இருக்கும். அவர்கள் என்னை கொல்ல நெருங்குகையில் தேவபிரான் வருவார். என்னை காப்பாற்றுவார். நான் விடுதலை அடைவேன். அந்தோணியார் கோவில் பிரசங்கத்தின் பின்னரும் இந்தக் கதை என் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். என்னையும் கற்களால் எறிந்து கொல்லுவினமா என்று லேசாக பயம் வரும். ஆனாலும் தேவபிரான் அப்படி செய்ய விடமாட்டார் என எண்ணம் வரும் போது பயம் கலைந்து விடும். நானே வெள்ளை அங்கி அணிந்து சின்ராசுவையும், ஜேக்கப்பையும் மன்னித்து இரட்சிப்பதாக சிலவேளைகளில் இரவின் நடுச்சாமத்தில் கனவு வரும். கடைவாயிலில் மெல்லிய புன்னகை அந்த நித்திரையிலும் ததும்ப நிம்மதியாக உறங்கிப் போவேன். போன இரவும் அப்படி ஒரு கனவும் தேவபிரானும் சின்ராசுவும் கனவில் வந்து போயினர். ஆனால் இது தான் கடைசியாக காணும் கனவு என்று நினைத்து இருக்கவில்லை. கணக்கர் சந்திக்கு பஸ் பிடிக்க அந்த காலையில் நான் வருவேன் என்று அந்த பெடியனுக்கு எப்படி தெரியும் என தெரியவில்லை. ஒவ்வொரு செவ்வாயும் நான் வருவது அவனுக்கு தெரிந்து இருக்கலாம். அவர்கள் அறியாமல் காற்று கூட வீசாது என்று கிளி அக்கா அடிக்கடி சொல்வது உண்டு. மூன்று கிழமைக்கு முன் ரத்வத்தையுடன் சேர்ந்து கொடி ஏற்றினவர்களில் தொக்கையரும் இருந்தவர் என்று அவர்கள் அறிந்து அவர் வீட்டில் இரவு புட்டுச்சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது சுட்டுக் கொன்றனர் என்றும், அவர் இரத்தம் வழிந்த புட்டுக் கோப்பையை மகள் கழுவாமல் அப்படியே வைத்திருக்கின்றாள் என்றும் கிளி அக்கா சொல்லும் போதும், அவர்கள் தொக்கையர் போன்றவர்களை தான் கொல்வார்கள் என்று இருந்து விட்டேன். இன்று அந்த பெடியன் என் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் போது கூட எப்படியும் என்னை விட்டுவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். அவன் என்னை விடாவிட்டால் கூட, தேவபிரான் வந்து என்னை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். வெள்ளை அங்கியுடன் வந்து என்னை மீட்டு பெடியனை தடுத்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். தேவபிரான் வராவிடினும் அம்மாளாச்சியாவது என்னை காப்பாற்றுவார் என்று நினைத்தேன் ஆனால் தேவபிரானும் வரவில்லை அம்மாளாச்சியும் வரவில்லை சாவு மட்டுமே என்னை ஆட்கொள்கின்றது. -தொடரும்
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு. "என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின் பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. கவிதைக்கு நன்றி
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்ஷ். என் அம்மா கொழும்பில் தனியாகவே இருக்கின்றார். கனடா தனக்கு சரிவரவில்லை என்று இங்கிருந்து போன பின் அங்குதான் தனியாக இருக்கின்றார். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக குறைக்கும் Acute lymphocytic leukemia வகையான புற்றுநோயும் கடந்த 5 வருடங்களாக - எந்தவிதமான பிரச்சனையும் கொடுக்காமல் - உள்ளது. இயல்பிலேயே உறுதியான ஓர்மம் கொண்டவர் என்பதால் 75 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளார். கடந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் 7 பேரின் அம்மாக்காள் இறந்து விட்டனர். ஒவ்வொருவரினது அம்மாக்களின் இறப்பு செய்தி வரும் போது, நெஞ்சு பதறுகின்றது. கொரனா காலத்தில் ஏதும் நிகழ்ந்து விட்டால், போய் பார்க்க கூட முடியாமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது. ஒரு 40 வயதுக்கு மேற்பட்ட மகனுக்கோ, மகளுக்கோ அம்மா தான் நெஞ்சுடன் அணைத்து ஆறுதல் கொடுக்கும் நீண்ட கால நெருங்கிய உறவு. மனைவியோ மகனோ மகளோ கணவனோ அத்தனை ஆண்டு காலம் உறவு கொண்டாடும் அளவுக்கு எம் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுள்காலத்தின் நாட்கள் விடுவதில்லை. அப்படியான ஒரு நிலைத்த நீண்ட உறவை சடுதியாக இழப்பது என்பது கடும் துயரம் தரும் விடயம். நெடுக்ஸ், உங்கள் துயரையும் இழப்பையும் காலம் ஆற்றுப்படுத்தட்டும்.
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு. என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே நான் நல்ல கறுப்பு, என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும். இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான். சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும் இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள். ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும். இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. கிட்ட வருகின்றான். அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான். அவன் விடவில்லை அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான். பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான். என் நெற்றியில் வைக்கின்றான். எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது வெடி வைக்கின்றான் என் தலை சிதறுகின்றது பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது. மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது. தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல... என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. அது எனக்காக அல்ல... நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய. -தொடரும்
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முடிவு வரைக்கும் வாசித்த உறவுகளுக்கும், பின்னூட்டங்கள் இட்டும் பச்சைப்புள்ளிகளை வாரி வழங்கியும் உற்சாகப்படுத்திய உறவுகளுக்கும் நன்றி. ராசுக்குட்டி பற்றி இன்னும் நிறைய கதைகள் உள்ளன. அவர் பெண்பார்க்கும் படலத்தில் நடந்த கதை, அவரது அம்மா கந்தசஷ்டி விரதம் பிடிக்கும் நிலை வரைக்கும் அவர் கொண்டு போய் விட்ட கதை, பிஸ்ஸா டிலிவரிக்கு போன காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் கதை என்று நீளமாக ஒரு பட்டியலே இருக்கு. உண்மைக் கதை, கொஞ்சம் புனைவுகள் கலந்து எழுதப்பட்டது. ராசுக்குட்டி ஆஸ்பஸ்திரியில் CT scan எடுக்கப் போயிருந்த போது, அவர் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத்தின் பிதாமகனுக்கு இப்படி தான் ஸ்கான் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல் அனுப்பி அந்த பிதாமகனையும் கவலைப்பட வைத்த விடயத்தினை இடையில் செருக மறந்து விட்டார் என்று தகவல் வந்திருக்கு
-
காவலூர்க் கனவுகள்
நேரில் பார்த்தறியாத காவலூரை கவிதை வாயிலாக காண வழி செய்த கண்மணி அக்காவுக்கு நன்றி
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது. இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது. என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
அந்த வித்தையை எனக்கு கற்றும் தாருங்கள். என்னால் எல்லாம் ஒரு போதும் சுருக்கி எழுத முடியாது. ஆனால் இந்தக் கதைதை இன்னொரு பகுதியுடன் முடித்தால், அது பெரிய நல்ல நாவல் ஒன்றின் முன் குறிப்பு மாதிரி ஆக சுருக்கமாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்தகர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். நிரந்தரப் பாதிப்பு மற்றும் உடலில் விசம் ஏறுதல் போன்றவை ஏற்படாமையால் நட்ட ஈடு கேட்கவில்லை. அப்படி கேட்டால் 5 ஆயிரத்துக்குள் தான் வரும் என்பதால் ராசுக்குட்டிக்கு மினக்கெட நேரமில்லை (5 இலட்சம் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நட்ட ஈடு கேட்டு இருப்பார் என்பது வேறு விசயம்)
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 3: - தவறான மருந்து இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில் இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை. பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி, சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். "எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார். "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார். " நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார். அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு. - தொடரும்