Everything posted by தமிழ் சிறி
-
தேசபந்துவைக் கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேசபந்துவைக் கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னக்கோனை கொலை செய்வதற்கான பொறுப்பு சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432577
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
பிரிகேடியர் பால்ராஜ் எனும் முதுபெரும் தளபதி பற்றித் தெரிய கீழே படியுங்கள். படிக்கும் போதே சிலிர்த்துப் போவீர்கள்💪🏻🐅 குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர் புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர். தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். #பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு 26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது. #தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள். குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர். கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர். தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Rj Prasath Santhulaki
-
காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை!
காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேரம், சர் கெய்ர், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மார்க் கார்னி ஆகியோர், 2023 ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான “கொடூரமான தாக்குதலில்” பிடிபட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்தனர். காசா போர் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். காசாவில் சுமார் 58 பணயக்கைதிகள் உள்ளனர், அவர்களில் 23 பேர் வரை உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹமாஸால் நடத்தப்படும் காசாவின் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் போது 53,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிக்கை, போர்நிறுத்தத்திற்கான ஆதரவையும், இஸ்ரேலுடன் இணைந்து இருக்கும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை முன்மொழியும் “இரு-நாடு தீர்வை” செயல்படுத்துவதையும் மீண்டும் வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1432535
-
கருத்து படங்கள்
- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
- யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி
- யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் யுத்த வெற்றிவிழாவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வதும் எந்த வகையிலும் அர்த்தமற்றது - ராஜ்குமார் ரஜீவ்காந்
- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு! உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உப்புல்மாலி பிரேமதிலக்க தெரிவித்தார். வர்த்தமானியின்படி உப்பு இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைக் கொண்ட எந்தவொரு இறக்குமதியாளரும் உப்பை இறக்குமதி செய்யலாம் என்றும் வர்த்தமானி சுட்டிக்காட்டுகிறது. இதன் கீழ் அயோடின் கலக்கப்படாத உப்பை இறக்குமதி செய்ய முடியும் என்று இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகம் திருமதி உப்புமாலி பிரேமதிலகா தெரிவித்தார். இதற்கிடையில், நுகர்வுக்காக 250 மெட்ரிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட உப்பு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உப்பு இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. https://athavannews.com/2025/1432481- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
உப்பிற்குத் தட்டுப்பாடு: பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு. நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில் ” ‘தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது எனவும், இது தொடர்பாக உரிய அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் எனவும், அதற்காக தாம் காத்திருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். அத்துடன் பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை எனவும். பெரும்பாலும் உப்பு தூளே பயன்படுத்தப்படுகிறது எனவும். உப்புத் தூளிற்கே தற்போது தட்டுப்பாடு காணப்படுவதாகவும்,தெரிவித்த என்.கே. ஜயவர்தன, அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1432484- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
ஒரு பெண்ணின் உயிரை பறிக்க காரணமாக இருந்த அதிபரை... கல்வி அமைச்சுக்கு மாற்றி பதவி உயர்வு கொடுத்துள்ளார்கள்.- பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் – HRW
பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் – HRW இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த வார இறுதியில், இலங்கையில் உள்ள தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த ஒன்றுகூடினர். கடந்த 16 ஆண்டுகளாக அவர்கள் செய்து வருவது போலவே, நீதிக்காகவும் அவர்கள் குரல் கொடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்களால் போர்க்குற்றங்கள் மற்றும் அரசு பாதுகாப்புப் படைகளால் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் எந்தவொரு நம்பகமான பொறுப்புக்கூறல் செயல்முறையையும் தொடங்கத் தவறிவிட்டன. இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் பிற மீறல்களை எதிர்கொள்கின்றன. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போர் இரு தரப்பினராலும் பரவலாக அத்துமீறல்களால் குறிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை நெருங்கி வந்து, இறுதியில் மே 18, 2009 அன்று அவர்களை தோற்கடித்தபோது, வீரர்கள் சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகளை படுகொலை செய்தனர், பாலியல் வன்கொடுமை செய்தனர் மற்றும் பலவந்தமாக காணாமல் போகச் செய்தனர். புலிகளால் போர் மண்டலத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை இராணுவம் கண்மூடித்தனமாக ஷெல்களால் தாக்கியது, அவர்கள் அவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், முந்தைய நிர்வாகங்களிலிருந்து விலகி, அடக்குமுறை மற்றும் பாகுபாட்டின் மரபை நிவர்த்தி செய்வார் என்று நம்பி, பல தமிழர்கள் அனுர குமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி பதவிக்காக வாக்களித்தனர். அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளை திசாநாயக்க அரசாங்கம் ஆதரித்துள்ளது, ஆனால் அவை எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இந்த நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன, அவர்கள் அவற்றை தோல்வியுற்ற வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். இதற்கிடையில், தமிழர்களை குறிவைத்து நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. (GSP+ திட்டங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு வரி இல்லாத அணுகலைப் பேணுவதற்கான நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த கொடூரமான சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் அறிக்கையிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும், எதிர்கால வழக்குகளில் பயன்படுத்த சர்வதேச குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவ வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இலங்கையில் முன்னேற்றம் இல்லாததால், சர்வதேச குற்றங்களைச் செய்பவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு புதுப்பித்தல் மிக முக்கியம். சபையின் தலையீடு நாட்டை “பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும்” என்று திசாநாயக்க அரசாங்கம் எதிர்த்துள்ளது. எனவே, மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் செயல்படுவதாக பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். மேலும் இறுதியில் நீதியை வழங்குவதற்காக பாடுபட வேண்டும் – என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1432505- 100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்!
100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்! 2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர். குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன. அதன்படி 25,672 பேர் வெளியேறிவிட்டனர். இந்த காலகட்டத்தில் மொத்தம் 18,474 பதிவு செய்யப்பட்ட நபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைகளுக்காகவும், 14,162 பேர் கத்தாருக்கும், 12,625 பேர் சவுதி அரேபியாவிற்கும் சென்றுள்ளனர். இந்த நபர்கள் மற்ற நாடுகளுக்கும் பதிவு செய்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக SLBFE தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432509- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
ஈழ அகதிகளை வேறு நாடு செல்லுங்கள் என்று கூறும் உச்ச நீதிமன்றம், தீபெத் அகதிகளிடமும் இவ்வாறு கூறுமா? இந்தியா என்ன சத்திரமா என்று பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளிடம் உச்சநீதிமன்றம் கேட்குமா? தமிழருக்கு ஒரு நீதி. மற்றவருக்கு இன்னொரு நீதி. இதுதான் உச்சநீதிமன்ற நீதியா? தோழர் பாலன்- தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
தமிழரசு கட்சியை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள் பாருங்கள்.- ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இஸ்ரேல் தூதுவர் வலியுறுத்தல்!
ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இஸ்ரேல் தூதுவர் வலியுறுத்தல்! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் அழைப்பு விடுத்துள்ளார். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போல, பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்று கூறிய இந்திய தூதர், சவாலை எதிர்கொள்ளும் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை வலியுறுத்தினார். அண்மைய பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் பேசிய சிங், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளைக் குற்றம் சாட்டினார். மேலும், 2008 மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரெஹ்மான் லக்வி போன்ற உயர்மட்ட பயங்கரவாதிகளை இஸ்லாமாபாத் பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பல யூதர்களும் உயிரிழந்த மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதிகள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிவதாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் “இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்றும் “முடிவடையவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். இஸ்ரேலிய தொலைக்காட்சி சேவைாயன i24 உடன் திங்களன்று (19) பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1432496- ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்
ட்ரம்புக்கு... ஒரு, நோபல் பரிசு...... 😂- ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்
ரஷ்யாவும் உக்ரேனும் உடனடி போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் – ட்ரம்ப் தெரிவிப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், ரஷ்யாவும் உக்ரேனும் போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். திங்களன்று (19) நடந்த தொலைபேசி உரையாடலானது “மிகவும் சிறப்பாக” நடந்ததாக விவரித்த ட்ரம்ப், இரு தரப்பினருக்கும் இடையே அமைதிக்கான நிபந்தனைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால், போர் நிறுத்த செயல்முறைக்கு மொஸ்கோ நேரம் எடுக்கும் என்றும் கூறிய ட்ரம்ப், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க புதிய தடைகளுடன் ஐரோப்பாவில் சேரத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு இரு தரப்பினரும் தங்கள் முதல் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்காக கடந்த வாரம் துருக்கியில் சந்தித்த பின்னர், மொஸ்கோவிற்கும் கெய்விற்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவளித்த ட்ரம்ப்க்கு புட்டின் இந்த தொலைபேசி உரையாடலின் போது நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பேர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார். ட்ரம்புடனான நேரடி தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் “முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான” உக்ரேனின் விருப்பத்தை ஜெலென்ஸ்கி மீண்டும் இதன்போது உறுதிப்படுத்தினார். புட்டினுடனான ட்ரம்ப்பின் உரையாடலுக்கு முன்னதாகப் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரேன் பற்றிய எந்தவொரு முடிவும் தனது நாடு இல்லாமல் எடுக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும், அவை உக்ரேனுக்கு “இறையான்மை விடயங்கள்” என்றும் கூறினார். https://athavannews.com/2025/1432490- அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சூறாவளி; 28 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, மிசோரி, விர்ஜீனியாவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர். குறித்த சூறாவளியினால் கென்டக்கி மாகாணமே கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் மாத்திரம் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சூறாவளியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன் வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மணிக்கு 140 கி.மீ, வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளதோடு கனமழை மற்றும் புழுதிப் புயலும் வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப் பகுதி வாழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளதாகவும்,போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்கா முழுவதும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதேவேளை டெக்சாஸ் மற்றும் அர்கான்சாஸ் பகுதிகளுக்கும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432476- இரசித்த.... புகைப்படங்கள்.
தந்தையின் ஆசை நிறைவேறியது.- தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
இன்னுமொரு யுத்தம் இலங்கையில் இல்லை - 16வது யுத்த நிறைவை நினைவுப்படுத்தும் இராணுவ விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி அனுரகுமார மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்! Vaanam.lk- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
- பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
அவருக்கு வேறு நாடுகளுக்கு, சுற்றுலா போக முடிவில்லை என்ற கவலை.- தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
இந்த சஜித்துக்குத்தான்... சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுத்து, தனது "சுமந்திரம்" எனும் பத்திரிகையின், முதல் பதிப்பை... சஜித்தின் கையாலே வெளியிட வைத்தவர்.- 30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? -மனோ கணேசன்
30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? -மனோ கணேசன் இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது” இலங்கை சமூகத்தில் சமூகத்தில் மரணித்து போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூர படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்த படுகிறது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால் அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களை தேடி அறிந்து அவற்றுக்கு தீர்வு தேடாமல் அடைய முடியாது. 1948 ம் வருட குடியுரிமை-வாக்குரிமை பறிப்பு சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம், பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் மற்றும் சந்திரிக்காவின் 2000ம் வருட தீர்வு திட்டம் ஆகியவை அகெளரவமான முறைகளில் உதாசீன படுத்த பட்டமை, 13ம் திருத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படாமை, பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட இலங்கையின் பன்முக தன்மை அங்கீகரிக்க படாமை, கற்றுகொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல் செய்ய படாமை, யுத்தத்தின் பின் மகிந்த-பான்கி-மூன் வெளியிட்ட கூட்டறிக்கை அலட்சிய படுத்த பட்டமை, ஆகிய தவறுகளை திருத்தி முன் நகர முடியாவிட்டால் எமது நாட்டின் தேசிய பயணம் நின்ற அதே இடத்திலேயே நிற்கும்” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார். Athavan News30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல்...இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...- இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!
இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்! தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார். இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும். ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது. மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த விஜயம் அமைந்துள்ளது. மதராசி திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியில் இப்படம் தில் மதராசி என்ற பெயரில் வெளியாகிறது. ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸின் தயாரிப்பு முயற்சியான மதராசியில் ருக்மணி வசந்த் கதாநாயகியாகவும், வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இதற்கு இசையமைத்துள்ளனர். https://athavannews.com/2025/1432362 - தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.