Everything posted by தமிழ் சிறி
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கடையின் பெயர் BARISTA. பெயரிலேயே... Bar உள்ளதை பார்த்தால், மாட்டு இறைச்சியுடன், மதுபானமும் இருக்கும் போலுள்ளது. மானிப்பாயில், சுமந்திரன் இப்பிடி ஒன்றைத்தான் திறந்து வைத்தது பழைய செய்தி. 😜 😂
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
சட்டங்கள் சரியாக பாய்ந்திருந்தால், எதற்கு இந்த முள்ளிவாய்க்கால்.
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை. இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் கை குழந்தைகளுடன் வந்தவர்களைக்கூட எமது இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர். இன அழிப்பு என்பது தமிழர்களை இராணுவத்தினர் தேடி தேடி கொலை செய்திருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றதா? யுத்தக்காலத்தில் சரணடைந்த அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களை இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர்.” என்றார். இதேவேளை, தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோஷங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் ஏன் எடுக்கப்படுவதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். https://a7tv.com/if-comments-such-as-tamil-ethnic-cleansing-are-shared/?fbclid=IwY2xjawKcJepleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR6phOI2bFaOe3EqOUMe1CkIAwQnweqaOvv1U23JHvznDYUoNshC8Izf9UhHog_aem_RTtVPlmO59bwXgnjIo9_4Q
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
- 22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
👉 https://www.facebook.com/watch?v=1747521376144972 👈 யாழில்... காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய சகோதரன். வெளியாகிய அதிர்ச்சி காணொளி! 👆- பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்! இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை(21) கைது செய்யப்பட்டிருந்த வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27 ஆம் ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு 27 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432844 @Kandiah57 அண்ணை ... யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு புதிதாக ஒருவர் இன்று வந்திருக்கின்றார். 😂- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்! இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக இத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று இரவு(22) நாட்டிற்கு வரவிருந்தது. இந்தநிலையில் தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் , அதன் பின்னர் நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் எனவும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432861- NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432847- சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
அநியாயமாக ஒரு நாட்டிற்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம் மயிரிழையில் தவறிப் போய் விட்டது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை.- பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
அவர் வாங்கிய லஞ்சங்களில் இவருக்கு பங்கு கொடுக்காவிடில்…. காண்டு வரத்தானே செய்யும். 😂- பிரபாகரன் உப்பு என்று எதுவும் நாட்டில் தற்போது இல்லை - நாடாளுமன்றத்தில் சுனில் ஹந்துநெத்தி
நாங்கள் இப்போ வாழை மரத்தில் கொத்திய மரங்கொத்தியாகிவிட்டோம். Vic Jeyathevan- பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக OIC கைது 5 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா பூவரசம்குளம் காவல் நிலைய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. AB Amam- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வீட்டுக்காரன் மாமிசம் சாப்பிடுவதையும், கோவில் அருகில் கடைக்காரன் இறைச்சிக் கடை வைப்பதையும் ஒரே தராசில் வைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள். கடை என்றால்... 100 - 200 பேர் வந்து மாட்டு எலும்பை உறிஞ்சி திண்டுவிட்டுப் போக, கழிவு எலும்பையும் வாழை இலையையும் வீதியில்தான் போடுவார்கள். அதை தெருநாய் தூக்கிக் கொண்டு போய் கோவில் வாசலில் இருந்து சாப்பிட்டால் நல்லாவா இருக்கும். 😂 அதற்காக வருமுன் காப்பதே சிறந்தது. இப்ப தடுக்காவிடில்.... ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக... கச்சான் கடை கூட வைக்க இடம் இல்லாமல்... எல்லா இடமும் கவுச்சி கடை வைக்க, புலம் பெயர் தேசத்தில் இருந்து புற்றீசல் போல் கிளம்பி வந்திடுவார்கள். 🤣 பிகு: அந்தக் கடைக்கும் சுமந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்று நானும் வாசித்தேன். அதன் நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தவுடன்... ஆதாரத்துடன் பதிகின்றேன். 😂 🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி! ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களை குறிவைத்து இஸ்லாமபாத்துக்கு எதிரான பதிலடி இராணுவத் தாக்குதலான “ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் 22 நிமிடங்களில் இந்தியா பழிவாங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ராஜஸ்தானில் இன்று (22) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளின் ஒன்பது பெரிய மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். இதன் மூலம், குங்குமம் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகத்தின் மற்றும் நாட்டின் எதிரிகள் பார்த்திருக்கிறார்கள். 26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 அன்று இந்திய பதிலடி இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அரசாங்க வட்டாரங்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 100 பயங்கரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா ஒன்றுபட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) 140 கோடி இந்தியர்களை பாதித்தது. பயங்கரவாதத்தின் மையத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம். அரசாங்கம் இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்தது, ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – என்றும் அவர் கூறினார். இந்த உரைக்கு முன்னதாக ராஜஸ்தான், பிகானீருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தை வைத்தார். மேலும், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர், பிரதமர் மோடி பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேஷ்னோக்கில் உள்ள கர்ணி மாதா ஆலயத்திலும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். https://athavannews.com/2025/1432787 இந்தியாவிற்குப் பின்னால்.... இஸ்ரேல் வந்திருக்க வேண்டும். சோனகனுக்கு அடிப்பதென்றால்.... இஸ்ரேலுக்கு வலு புளுகம் வந்திடும். 😂- சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்! இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார். திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒப்பந்தத்தை தங்கள் உரிமைகளுக்கு துரோகம் செய்வதாகக் கருதுவதாக கூறி வழக்குத் தாக்குல் செய்துள்ளார். அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு வழங்கப்பட்ட உத்தரவில், “சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் அழைக்கப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க அரசாங்கம் எந்தவொரு உறுதியான அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது அல்லது அத்தகைய எந்தவொரு பரிமாற்றத்தின் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்று கூறுகிறது. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகோசியர்கள் சாகோசிய தீவுகளின் முன்னாள் குடியிருப்பாளர்கள், அவர்கள் 1960களின் நடுப்பகுதிக்கும் 1970களின் முற்பகுதிக்கும் இடையில் தீவுகளிலிருந்து பெரும்பாலும் மொரீஷியஸுக்கு வெளியேற்றப்பட்டனர். தீவுகளில் பிறந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால் பிரிட்டிஷ் எல்லைக்கு வெளியே பிறந்த அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நிலையில் அண்மைய ஆண்டுகளில், தீவுகளை மொரீஷியஸிடம் திருப்பித் தருமாறு இங்கிலாந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432800- மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி! ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், “விழுந்த சிதைவுகளை அகற்றும் பணியில் அவசர சேவை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இது கடந்த ஒரு நாளுக்கு முன்பு மாஸ்கோ மீது 27 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் வந்துள்ள அடுத்த பெரும் தாக்குதல் ஆகும். உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இரு நாடுகளும் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்றாலும், மாஸ்கோ மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்படுவது அரிது. வியாழக்கிழமை அன்று, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களான ஷெரமெட்டியோவோ, வ்னுகோவோ, டொமோடெடோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி ஆகியவற்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் Rosaviatsiya தெரிவித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். 2014 இல் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் உட்பட உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தற்போது கட்டுப்படுத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த புதிய ட்ரோன் தாக்குதல், மோதலின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், ரஷ்ய தலைநகரின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. https://athavannews.com/2025/1432812- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான். ஆனால் அந்த இடம்... நல்லூர் திருவிழாவின் போது, வாகனங்கள் செல்லாமல் வீதித் தடை ஏற்படுத்தும் எல்லைக்குள் வருகின்றதாம். அப்படி என்றால்... நிச்சயம் நல்லூர் கோவிலில் இருந்து 300 - 400 மீற்றர் அளவான இடத்தில் அமைந்திருக்கலாம்.- 22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
சாரி, எனக்கு... இருபாலைக்கும், இளவாலைக்கும்.... கொன்புயூஸ் ஆயிட்டு சார். 😂- கருத்து படங்கள்
சுமந்திரனும், சிவஞானமும் நடத்தும் வில்லுப்பாட்டு. 😂 🤣 இந்த வருடத்தின்... மிகச் சிறந்த கருத்தோவியம். 👍- தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
சுமந்திரனும், சிவஞானமும் நடத்தும் வில்லுப்பாட்டு. 😂 🤣 இந்த வருடத்தின்... மிகச் சிறந்த கருத்தோவியம். 👍- முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
- ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்
- வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி!
வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பணவியல் கொள்கை CBSL மேலும் தளர்த்தியது. தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பூகோள பொருளாதாரப் போக்குகளை கவனமாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கை சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் படிப்படியாக 5 சதவீத இலக்கை அடைவதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432740 - 22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.