Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு! பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் மிக்க ஒப்பந்தம் என்று பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மிக முக்கியமான மறுசீரமைப்பை திங்களன்று (19) பிரித்தானியா ஒப்புக் கொண்டது. அதன்படி, சில வர்த்தக தடைகளை நீக்கி, அதன் பொருளாதாரத்தை வளர்க்கவும் கண்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பாதுகாப்புத் துறையில் அது ஒத்துழைத்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் திங்களன்று (19) நடைபெறும் EU-UK உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பாதுகாப்பு, மீன்வளம் மற்றும் இளைஞர் இயக்கம் குறித்து ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது பிரித்தானிய நிறுவனங்கள் பெரிய EU பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பங்கேற்க வழி வகுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் பிரதிநிதிகள் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொதுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உரையைப் பெற்றனர். மேலும், இந்த ஆவணம் இப்போது 27 ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் திங்கட்கிழமை பிற்பகுதியில் லண்டனில் சந்திப்பார்கள். 2020 ஜனவரியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியபோது, போரிஸ் ஜான்சன் ஆரம்ப பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதிலிருந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் முதல் முறையாகும். Athavan Newsஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கு...
  2. நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 57பேர் உயிரிழப்பு! நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்ற நிலையில் போகோ ஹாரம் எனும் குழு போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டதுடன் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 34பேர் .உயிரிழந்துள்ளனர். இந்த கிராமங்களிலும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொத்தம் 57பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Athavan Newsநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்...நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பய...
  3. ரஷ்யா உக்ரேன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்! ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் உயிரிழப்புக்கும் வழி வகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே போர் முடிவுக்கு வருவது குறித்து எதிர்பார்க்கப்படும் தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக இந்த தாக்குதல் வந்துள்ளது. ரஷ்யா ஒரே இரவில் 273 ஷாஹெட் ட்ரோன்களை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. முக்கியமாக மத்திய கீவ் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 28 வயது பெண் ஒருவர் இதனால் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உட்பட மூன்று பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை (19) புட்டினுடன் தொலைபேசியில் பேசுவதாக ட்ரம்ப் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடந்தது. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான வொஷிங்டன் மற்றும் கீவ் முன்மொழிவை ரஷ்யத் தலைவர் முன்னர் புறக்கணித்துள்ளார். மேலும், கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த அழைப்பை அவர் நிராகரித்தார். இதனிடையே, புட்டினுடன் பேசும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி, புட்டினுடன் அதிகரித்து வரும் பதட்டத்தால் விரக்தியில் இருப்பதாக பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். முந்தைய நாள் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் கூறினார். இதற்கிடையில், கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் சனிக்கிழமை ரஷ்ய ட்ரோன்கள் தெற்கு கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை குறிவைத்ததால், ரஷ்ய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய இராணுவத் தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 75 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் செய்தி நிறுவனமான டாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2025/1432266
  4. தேசிய போர் வீரர் நினைவு விழா; விசேட போக்குவரத்து! 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று (19) விசேட போக்குவரத்துத் திட்டம் அமலில் இருக்கும். இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, குறித்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். உள்நாட்டு போர் வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இன்று நடைபெறும் தேசிய போர்வீரர் தின கொண்டாட்டங்களானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும். இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளையும் வழிநடத்திய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலக உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உச்ச தியாகத்தைச் செய்த முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் துணிச்சல்மிகு உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்வானது கொண்டாடப்படுகிறது. https://athavannews.com/2025/1432237
  5. ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு! ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும் மின்னஞ்சல் மூலம் BCCI தெரிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக்கிஸ்தான் அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையிலேயே இந்திய கிரிக்கெட் சபை இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432262
  6. முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432250
  7. ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது 82 வயதான அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் மருத்துவரைச் சந்தித்த பின்னர் வெள்ளிக்கிழமை (17) புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. புரோஸ்டேட் – புற்றுநோய் என்பது புரோஸ்டேட் சுரப்பியில்/ முன்னிற்குஞ்சுரப்பியில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். 2021-2025 ஜனாதிபதி பதவிக் காலத்தில் பைடனின் உடல் ஆரோக்கியம் மற்றும் மனக் கூர்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது பைடன் தனது தோல்வியைத் தழுவியது, சக ஜனநாயகக் கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்திய சில வாரங்களுக்குப் பின்னர், கடந்த ஜூலை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து திடீரென விலகினார். ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பைடனை பலமுறை திட்டி வரும் ஜனாதிபதி ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இட்ட ஒரு பதிவில், பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்லுக்கு அனுதாபம் தெரிவித்தார். https://athavannews.com/2025/1432251
  8. நம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், இந்நேரம் மந்திரிசபையோ மாகாணப் பதவியோ ஏற்றுக்கொண்டு குழந்தைகளை பெரும் பதவிகளில் அமர வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குறைந்தபட்சம் குடும்பத்தோடு உயிரோடாவது இருந்திருக்க முடியும். ஆனால் அவன் நினைத்ததெல்லாம்... தமிழ்த்தேசியம். அவனுக்கொரு பெரும் கனவு இருந்தது. தமிழ்மண் தமிழருக்கானது என்ற ஒரே கனவு. அவனது இலக்கும் வெறியும் இலட்சியமும் அதுவொன்றே. முப்பது வருடகாலமும்-தினமும் முழிப்பது கூட மரணத்தோடு என்றிருந்தவன் மண்ணுக்குள் போவதற்குள்-தமிழ் மண்ணை அடைந்திட நினைத்தான். அதற்குள் மாவீரனாகி விண்ணை அடைந்தான். நம்மெல்லோரின் மன்னை அடைந்தான்.! 'அவன் நினைத்திருந்தால்' என்பதிருக்கட்டும். இத்துயர் தடுக்கப்பட்டிருக்கலாம். இம்முடிவு மாற்றப்பட்டிருக்கலாம். இவனோடு சேர்த்து இலட்சோப இலட்சம் உயிர்கள் இன்றிருந்திருக்கலாம். நாம் நினைத்திருந்தால். நம்மை ஆள்வோர் நினைத்திருந்தால்.! ------------------ குறிப்பு: இரண்டுநாள் ஈழத்து பகிர்வு செய்ததற்கு ரீச் குறைந்து "தம்பி, நோ தீவிரவாதம்..!" என்று நோட்டிஃபிகேஷன் வந்தது. இதோடு மொத்த ரீச்சும் அம்பேல் ஆகுமென்று தெரியும். 'நான் நினைத்திருந்தால்' லேசாக வேறொன்று எழுதியிருக்கலாம். மனம் வரவில்லை. Writer Charithraa's
  9. உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து, எழுந்து நின்ற போராட்டம்! உலக நாடு... உதவி கொடுத்து, சூழ்ந்து செய்த சதியாட்டம்! Sj Tâmïzhâñ
  10. "பல்லாயிரக்கணக்கான" என்று இங்கு குறிப்பிடுகின்ற சொற்பதம் தவறு. "பல லட்சம்" என்பதே சரி. 1990 யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்னால் நடந்த 'தேனிசைச் செல்லப்பா' நிகழ்ச்சிக்குப் பிறகு 2003 வவுனியாவில் நடந்த 'பொங்கு தமிழுக்குப்' பிறகு அதிக அளவிலான தமிழ் மக்கள் ஒன்று கூடியது இன்று நடைபெற்ற 'முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வில்' தான். மேலே கூறிய இரண்டுக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். இன்றைய நிகழ்வுக்கு மக்களை யாரும் அழைக்கவில்லை. மக்கள் தாமாகவே வந்தனர். இன்று கூடிய சுமார் இரண்டு லட்சம் மக்களை ஒழுங்குபடுத்த யாரும் இல்லை. அப்படி இருந்தும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் தாமாகவே அமைதியாக ஒன்று கூடிப் பின்னர் தாமாகவே அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஸ்ரீலங்கா காவல்துறைக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை! 16 வருடங்களுக்கு முன்னர் இதே மண்ணில் மண்ணுக்காய் மாண்டு போன மண்டியிடா வீரனின் ஆன்மா இந்த மக்களை வழி நடத்துகிறது என்று நான் கூறினால் மிகையில்லை! Kunalan Karunagaran
  11. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது. இதேவேளை, இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது. இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1432209
  12. சுவியர்... அடுத்து, அடுத்து நட்டம் வரும்போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கு. 😎
  13. 👉 https://www.facebook.com/watch?v=744327178257931&locale=de_DE 👈 👆 கைதட்டல்களுடன் சந்தோஷமாக அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட். மேலே சென்ற சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சோகம்..! Polimer News
  14. இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான ஆபரேசன் சிந்தூரிலும் தோல்வி, இஸ்ரோவின் ராக்கெட்டிலும் தோல்வி… என்ன கஸ்ரகாலமப்பா. @goshan_che 😂
  15. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த... போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள். 🙏
  16. தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்! இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை வழங்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த விண்கலத்தில் சரியாக 8 நிமிடம் 13 செக்கன்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432197
  17. வணக்கம், நல்ல ஒரு கவிதையுடன் அறிமுகமாகி உள்ளீர்கள். உங்களை யாழ்.களம் அன்புடன் வரவேற்கின்றது. உங்கள் வரவு, நல் வரவாகட்டும்.
  18. 16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன். நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அல்லது தென்னிலங்கைக்கு நோகக் கூடிய விதத்தில் எவ்வளவு தூரம் போராடியிருக்கிறார்கள்? சில “எழுக தமிழ்கள்”,ஒரு “பி ரு பி”,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள், தமிழ்ப் பொது வேட்பாளர் போன்றவை… தவிர நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடர்ச்சியானதாகவோ அல்லது தென்னிலங்கையை அசைக்கக் கூடியதாகவோ இல்லை. ஏன் ? ஏனென்றால் கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியலானது பெருமளவுக்கு கட்சிகள் மைய அரசியலாகத்தான் இருக்கின்றது.தேர்தல் மைய அரசியல்தான். பெருமளவுக்குத் தேர்தலை நோக்கியே கட்சிகள் உழைக்கின்றன .அதேசமயம் பொதுமக்கள் போராடும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போராடும் போது அல்லது மக்கள் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கட்சிகள் அவற்றில் இணைக்கின்றன.நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான ஒரு அரசியல் பேரியக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஓர் அரசியல் இயக்கம் என்று கூறிக் கொண்டது. தமிழ்த் தேசியப் பேரவையையும் அது அவ்வாறு தான் தன்னை அழைக்கின்றது. ஆனால் நடைமுறையில் அவை தேர்தல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான். பொது வேட்பாளருக்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பும் ஒரு பேரியக்கமாக அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு தமிழ்மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில், கட்சி மைய அரசியலுக்கு ஊடாக நீதிக்கான போராட்டத்தை முழு அளவுக்கு தாக்கமானதாகவும் செறிவானதாகவும் தொடர்ச்சியானதாகவும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமைதான் காணப்படுகிறது. தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் போராடவில்லை என்று இல்லை. ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை. எல்லாப் போராட்டங்களையும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கும் மையக் கட்டமைப்பு இல்லை. தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அப்படித்தான். அங்கேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை. கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அடைவுகளைப் பெற்றிருப்பது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். இன அழிப்புக்கு எதிரான தடைகள்,தீர்மானங்களை நிறைவேற்றியதிலும் சரி; இன அழிப்பு நினைவுச் சின்னங்களை நிறுவியதிலும் சரி; இன அழிப்பை அனைத்துலக மயப்படுத்தியதிலும் சரி; இன அழிப்பை நோக்கி ஐநாவும் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை குவிய வைப்பதிலும் சரி; இன அழிப்பு ஆவணங்களை வெளியிடுவதிலும் சரி; ஒப்பீட்டளவில் அதிகம் உழைப்பதும் முன்னணியில் நிற்பதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் சுதந்திரமான,செல்வச் செழிப்புள்ள ஒரு சூழலுக்குள் வாழ்கின்றது. சுதந்திரமான ஒரு சூழலுக்குள் வாழ்வதால் அவர்கள் இன அழிப்புக்கு எதிராக தாயகத்தை விடவும் ஒப்பீட்டளவில் வினைத்திறனோடு போராடக்கூடியதாக உள்ளது. அதனால் நீதிக்கான ஈழத் தமிழர்களின் கடந்த 16 ஆண்டு காலப் போராட்டத்தில் போராட்டத்தின் கூர்முனை போல காணப்படுவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். ஆனால் அங்கேயும் ஒருங்கிணைவு இல்லை. மைய அமைப்பு இல்லை. தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவும் தமது கொள்ளளவுக்கு ஏற்பவும் அங்குள்ள தனிப்பட்ட நபர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு போன்றவற்றுக்கு ஏற்பவும் வெவ்வேறு பரிமாணங்களில் நீதிக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அங்கே ஒரு மைய அமைப்பு கிடையாது. ஐநா மையச் செயற்பாடுகளிலும் சரி ராஜதந்திர மட்டச் செயற்பாடுகளிலும் சரி இன அழிப்புக்கு எதிரான ஏனைய எல்லாச் செயற்பாடுகளிலும் அங்கே ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத நிலைமைதான் காணப்படுகிறது. இந்த விடயத்தில் தாயகத்தின் தொடர்ச்சியாகத்தான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பும் காணப்படுகின்றது. அது மட்டுமல்ல, மேற்படி செயல்பாடுகளில் ஒரு அடிப்படையான தலைகீழ் பொறிமுறை உண்டு. அது என்னவெனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன அழிப்புக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் யதார்த்தத்துக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்றவை.அவை தாயகத்திலிருந்து வழிநடத்தப்படுகின்றவை அல்ல. மாறாக இன அழிப்புக்கு எதிரான நீதிக்கான போராட்டம் என்பது தாயகத்திலிருந்துதான் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு இல்லை. அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. தாயகத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் உண்டு. அரசாங்கமும், ஏன் எதிர்க்கட்சிகளும்கூட நாட்டில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்மையில் கனடாவில் இன அழிப்பு நினைவுச் சின்னம் நிறுவப்பட்ட பொழுது அதற்கு எதிராக மஹிந்த குடும்பத்தின் சார்பாக நாமல் ராஜபக்ஷ என்ன சொன்னார்? ராஜபக்சகளின் வழக்கறிஞரும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகிய அலி சப்ரி என்ன சொன்னார்? எனவே இன அழிப்புக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் சில அடிப்படையான வரையறைகள் உண்டு. இது காரணமாகவே அவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் வினைத்திறனோடு முன்னெடுக்கப்படுகின்றன. அதன் விளைவாகவே அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்புக்கு எதிரான தடைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாயகத்துக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிக தொகையில் வாழ்வது கனடாவில் ஆகும். அதனால் அங்கு சக்தி மிக்க தமிழ் வாக்காளர் தொகுதி ஒன்று எழுச்சி பெற்று வருகிறது. இது கனடாவின் வெளியுறவுத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறக்கூடும்.சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் அவ்வாறு தடைகளை விதித்திருக்கின்றது. இவ்வாறாக கடந்த 16 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ராஜதந்திர வெற்றிகளை புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் பெற்றிருக்கின்றது. எனினும் அவை முழுமையானவை அல்ல. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் மெது மெதுவாகவே தமிழ் மக்கள் முன்னேறி வருகிறார்கள். ஐநா இன்றுவரையிலும் இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தாயகத்திலிருந்து வழிநடத்தப்படவில்லை. தாயகத்திலும் அதை வழிநடத்தத்தக்க மைய அமைப்பு இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டு கால நீதிக்கான போராட்டத்தில் பொருத்தமான ஒருங்கிணைப்புகள் இல்லை. நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் உலக சமூகத்தை தங்களை நோக்கித் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். உலகில் தமக்கு நட்பாக உள்ள நாடுகளின் ஆதரவையும் நிறுவனங்களின் ஆதரவையும் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஒரு தேசமாகத் திரட்டி கொள்ள வேண்டும்.ஆனால் தமிழ் மக்கள் தாயகத்தில் தங்களை ஒரு பலமான மக்கள் கூட்டமாக, தேசமாகத் திரட்டுமளவுக்கு தமிழ் தேசியக் கட்சி அரசியல் இல்லை.நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளும் அதன் பின்னரான அரசியல் உரையாடல்களும் அதைத்தான் காட்டுகின்றன. வாக்களிப்பில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்தான் நிற்கிறார்கள்.ஆனால் கட்சிகள் அவர்களை வாக்காளர்களாகப் பிரித்து வைத்திருக்கின்றன. இதுதான் 16 வது மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் கள யதார்த்தம். https://athavannews.com/2025/1432176
  19. சின்னக் கதிர்காமர் என்ற பட்டமும் சுமந்திரனுக்கு உண்டு. கொடுத்த பட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், சொந்த இனத்திற்கு குழி பறித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
  20. மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி ! மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் தூபி நேற்று (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை அவதானித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். சுமார் நான்கு அடி கொண்ட சதுர வடிவில் முள்ளிவாய்காலில் அமைந்துள்ள நினைவு தூபி புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் எழுதப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுவர்த்தி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1432170

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.