Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு... ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க... ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க... பொம்மையா முருகன்
  2. Beltஆல அடிக்காதீங்க அண்ணா.. ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு.. ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது. மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்... சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது... ஜெயிலுக்குள்ளே சாகட்டும்... Ranjith Priyan
  3. எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
  4. கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம். அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்துச் சம்பவமொன்று இன்று(14) இடம்பெற்றுள்ளது. நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த வான் ஒன்றே கொத்மலை- கெரண்டியெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தின் போது குறித்த வேனில் 7 சிறுவர்கள் உட்பட 18 பேர் பயணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆம் திகதி கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431843
  5. ஹ்ம்ம்... இங்கு இறந்தவர்களும் தமிழர்களாகவே உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  6. செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம். யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியைஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன. பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431790
  7. இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்! கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் “வெசாக் பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு “, இரண்டாவது நாளாக நேற்று ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் இரண்டாவது நாளில், இலங்கை விமானப்படை இசைக்குழு, பிரபல பாடகர் இலியாஸ் பேக் மற்றும் இலங்கை விமானப்படை பக்திப் பாடல் குழுவுடன் இணைந்து நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் இந்த பக்தி பாடல் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறுவதோடு வெசாக் கொண்டாட்டங்களைக் காண கொழும்புக்கு வரும் மக்களுக்காக 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சிற்றுண்டி தானசாலை நடைபெறும். இதே வேளை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தன்ஸல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று உயர் இராணுவ அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதுதவிர, கங்காராம “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பௌத்தலோக” வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்ததாக, ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் அண்டிய பகுதிகளில் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகளை மின் விளக்குகளால் அலங்கரித்தல், வெசாக் கூடு கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஜனாதிபதி பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. https://athavannews.com/2025/1431795
  8. கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள். ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ” தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர் எனவும் தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். மேலும் குறித்த உப்பளத்தில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை எனவும், இந்த மாதம் தொடங்கி இதுவரை தமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது எனவும், மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவினையே உப்பள நிர்வாகத்தினர் பயன்படுத்துகின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த உப்பளத்தில் பணி புரியும் தமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்திய போராட்டக்காரர்கள் இவ் உப்பளத்தை திறந்து வைக்கும்போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறிய போதும் 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தடன் ஊழியர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் அதிகாரியை இடமாற்றம் செய்கின்றனர் எனவும், இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் பணி தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர் எனவும், அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர் எனவும், இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பிய ஊழியர்கள் இங்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகத் தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431829
  9. நாமலும்... இப்பவே இனவாதம் கக்க வெளிக்கிட்டுது. தொடர்ந்து பிக்குகளும் ஊளையிட தொடங்குவார்கள். கனடா அமைச்சரவையில்... இரண்டு தமிழர்கள் உள்ளார்கள். அதுகும் இதுகளுக்கு... வயித்து எரிச்சலாய் இருக்கும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன... எந்தக் காலத்திலும், ஆட்சிக்கு வராமல் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது.
  10. சிவஞானம், சுமந்திரனின் தமிழரசு கட்சிடன்... சேர சந்தர்ப்பம் உள்ளது என ஊர்க்கிழவி சொல்லுது.
  11. கோவில் திருவிழாக்களில்... லட்சக் கணக்கான ரூபாய்க்கு வெடி கொளுத்தி... காசை கரியாக்குபவர்களும், திருவிழாவிற்கு யானையை கூட்டி வந்து... அதை மிரள வைத்து... சாமி கும்பிட வந்த மக்களுக்கு, யானையால் மிதி வாங்கிக் கொடுத்து அவர்களை அங்கவீனர்களாக்குபவர்களும் இந்தச் சிறுமிக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இந்த விடயத்தில்... கோவில் நிர்வாகங்கள் அவர்களுடன் பேசி நல்ல ஒரு முடிவிற்கு வர வேண்டும்.
  12. இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று(14) நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளது. அமர்வின் பின்னர் இந்த மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷலா ஹெராத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431810
  13. தேசிய மக்கள் சக்தியும், தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியும்.... ஈ.பி.டி.பி. யுடன் கூட்டு இல்லை என்று அவர்களின் முன்னைய அறிக்கைகளில் சொல்லப் பட்டு விட்டது. பிறகு ஏன்... இவர்கள் கிடந்து முக்குகின்றார்கள். 😂
  14. இவர், சுமந்திரனிடம் ரியூசன் எடுத்துள்ளார் போலுள்ளது. இரண்டு பேரும் வக்கீல் என்ற படியால்... பொய், பிரட்டுகள், சுத்துமாத்துகள் செய்யும் ஊத்தைக்குணம் அவர்களிடம் உள்ளது.
  15. கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு. கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி, அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக, அனிதா ஆனந்துக்கு அந்த பதவி கையளிக்கப்பட்டுள்ளது. அனிதாவின் தாய் பஞ்சாபைச் சேர்ந்தவர் எனவும் தந்தை தமிழகத்தை ச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் 1960களின் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Athavan Newsகனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவுகனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் க...
  16. இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேருமாக 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார். குறித்த வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும்வரை தற்போது அங்கு கிருமி நீக்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1431758
  17. @குமாரசாமி , @Kandiah57... அளவுக்கு மிஞ்சின முஸ்லீம் அகதிகளை வைத்து, சோறு போடும்... ஜேர்மனிக்கு ஒரு ஒப்பந்தமும் கிடைக்கவில்லையா. 🤣 எல்லாவற்றையும் @ஈழப்பிரியன்னின் , அமெரிக்கன் லவட்டிக் கொண்டு போகிறான். 😂
  18. வெறுங்கையுடன் வந்தோம், வெறுங்கையுடன் செல்வோம். இறக்கும் போது... எவரும் இந்தப் பூமிப் பந்திலிருந்து எதனையும் கொண்டு செல்ல முடியாது என்பதனை நன்கு புரிந்து, அதற்கமைய வாழ்ந்து காட்டிய பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தப் பதிவை... மகிந்த, கோத்தா கண்ணில் படும் வரை பகிரவும். 😂
  19. உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு. ”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில் ”2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை எனவும் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1431784
  20. பாகிஸ்தான்... வெடி மருந்து நிரப்பப் படாத டம்மி ட்ரான்களை நூற்றுக்கணக்கில் இந்தியாவை நோக்கி செலுத்த... அதனை பிரம்மோசை வைத்து இந்தியா அழித்ததாம். ஒரு பிரம்மோசின்... செய்கூலி, சேதாரம் எல்லாம் பல கோடிகளை தண்டுமாம். எறும்பை கொல்ல .... பீரங்கியை பாவித்த கதையாய் போச்சுது இந்தியாவில் நிலைமை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.