Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு! நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டின்போது துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான கோப்பை (file) யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் , துசித ஹல்லோலுவ மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432161
  2. ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி! ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேவேளை, இந்த தொடரில் குகேஷ் 6 வது இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432137
  3. இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லபட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தாக்குதல்களில் 459 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1432164
  4. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1432173
  5. அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு! அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432133
  6. நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை - 2015 செப்டெம்பர் ஜெனிவாவில் சுமந்திரன்... சுவிஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ குறித்தும் அது பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பார்களா என்பது பற்றிய கேள்வி திரு.லதன் என்பவரால் கேட்கப்பட்டது. திரு.சுமந்திரன் இதற்கு பதிலளிக்கும் பொழுது, ” …‘இனப்படுகொலை’ என்று பேசியதால் பல்வேறு விடயங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம். இங்கு நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதிவிசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும். மனித உரிமை ஆணையாளர் கூட அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது. இதை கவனத்தில் எடுக்காமல் இனப்படுகொலை என்று பேசுவதால் நாம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்… ” இவ்வாறு சொன்ன சுமந்திரன் இன்று இனப்படுகொலை பற்றி பேசி கஞ்சியும் குடிக்கிறார். சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சிக்கே மக்கள் இன்றும் அதிகமாக வாக்களித்துள்ளனர். விடுதலைப்போரையே ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் ஒருபோதும் இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. யாழ் அன்ரனி
  7. 👉 https://www.facebook.com/100076314756096/videos/1032250969007183 👈 நல்ல காலம்.... இதையும், ஒருவரும் பார்க்கவில்லை. 🤣 @suvy 😂
  8. இங்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு இரண்டு சாரதி இருப்பார். அதிலும் ஒரு ஒருவர் ஓடும் நேரம் அவரது டிஜிட்டல் முறையில் கணக்கு எடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் இடைவேளை எடுக்காவிட்டாலோ, எட்டு மணித்தியால ஓய்வு எடுக்கா விட்டாலோ... அவருக்கு தண்டப் பணம் அறவிடப் படும். அந்த டிஜிட்டல் பதிவுகளை பொலிஸார் ஒரு வருடம் கடந்தும் பார்த்தால் தண்டனை கிடைக்கும். ஆதலால்... சாரதிகள் மிக, மிக அவதானமாக இருப்பார்கள். குற்றம் செய்து விட்டு... பொலிசை ஏமாற்ற முடியாது என்பது சிறப்பு. அதனால்... இங்கு விபத்து ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.
  9. கவி அருணாசலம் உங்களது முதல் அனுபவம் இப்படி ஒரு சோகத்தில் முடிந்தது கவலை என்றாலும், நல்ல வர்ணனையுடன் மண்வாசனைக்குரிய கதையை கேட்ட திருப்தி ஏற்பட்டது.
  10. தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்! தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார். திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை கபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432123
  11. இலங்கை வீதிகளுக்கு... லொறியின் உடல் பாகத்தில் தயாரிக்கப் பட்ட பேரூந்துகளே பொருத்தமாக இருக்கும். பயணிகளுக்கு என்று பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்ட பஸ்களை இலங்கையில் ஓடுவதற்குரிய சாலைகள் எல்லா இடமும் இல்லை. முதலில் நல்ல சாலைகளை அமையுங்கள், சாரதிகளுக்கு நல்ல பயிற்சி கொடுங்கள், முக்கியமாக சாலி விதிகளை மீறுபவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்குகள், முக்கியமாக சாரதிகள் எட்டு மணித்தியாலம் வாகனம் ஓடினால்... அடுத்த எட்டு மணித்தியாலம் வேறு ஒருவர் ஓடக் கூடியமாதிரி ஆட்களை ஒழுங்கு பண்ணுங்கள். இது பொதுமக்களின் உயிருடன் சம்பந்தப் பட்ட விடயம். மேற்கு நாடுகள் மாதிரி பார்த்து, பார்த்து நிறைய வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். சும்மா.... அரசியல்வாதிகள் மாதிரி, வாயாலை நெடுக வடை சுட்டுக் கொண்டு இருக்க முடியாது.
  12. மக்கள்... மலிவான விலையில், நிறைய பொருட்களை கொண்டு செல்லலாம் என மகிழ்ச்சியில் இருக்க... இந்த போதைப் பொருள் கடத்துபவர்களின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது.
  13. சுவியர்.... வெத்திலை பாக்கு போடும் பழக்கம் புதிதாக தொடங்கியதா, அல்லது அண்மையில் பழகியதா. பல் டாக்டர் ஒன்றும் சொல்வதில்லையா. 😂
  14. இந்தியாவில் துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து! இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் (Celebi Aviation) நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான மனித வளங்களை துருக்கி வழங்கியமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,பாகிஸ்தான் பிரதமரை ‘சகோதரர்’ எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறியமையினாலும் துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்கிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினாலும் அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. அதன்படி, துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையின், ‘சிவில் விமான பாதுகாப்பு பணியகம்’ அதிரடியாக ரத்து செய்துள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸெலெபி ஏவியேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரை இருக்கின்ற நிலையில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக ஸெலெபி ஏவியேஷன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432088
  15. தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்! கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை சுமார் 14,200 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1432093
  16. சங்குடன் கூட்டணி வைத்ததற்கு... எதிர்ப்பு தெரிவித்த யாழ்.கள அரைகுறை அரசியல் ஆய்வாளர்களை வரிசையாக வரும்படி அழைக்கின்றோம். 🤪 சுமந்திரனுக்கு...சங்கு ஊதப் படுவது நிச்சயம். ஊ.... ஊ..... ஊ............ 😂 🤣
  17. சுமந்திரன்... பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைய, முயற்சி பண்ணி சத்தியமூர்த்திக்கும், சிறிதரனுக்கும் ஆசை காட்டிப் பார்த்தும், எவரும் இவரின் சுத்துமாத்து நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நழுவிய பின்... இனி அடுத்த தேர்தல் மட்டும் பொறுத்து இருக்க ஏலாது என்று இவரே மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றாராம். ஆபிரஹாம் சுமந்திரனின் இந்த மூஞ்சைக்கு எவனும் வாக்குப் போடுவானா? தமிழரசு கட்சி இதோடு... வடக்கில் துடைத்து எறியப் படுவது நிச்சயம்.
  18. உடனடி பதிலிற்கு நன்றி இணையவன். 👍🏽 அவர் ஈமெயிலை மாற்றவில்லை என்றே நினைக்கின்றேன். நீங்கள் தந்த தகவல்களை அவரிடம் தெரிவிக்கிறேன். மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள் இணையவன். 🙂
  19. சங்கு சின்னத்தில்... இவர்கள் போட்டியிட்டதற்கு, விளக்கம் கேட்டு எப்போ சுமந்திரன் கடிதம் அனுப்பப் போகிறார். நீங்களும், உங்கடை சுத்துமாத்து அரசியலும். 😂 உங்களுக்கு வெள்ளை அடிக்கவும்.. "நட்டு கழண்டதுகள்" இருக்கிறாதாலை தான் இந்தப் பிரச்சினை. 🤣
  20. மண்டையன் குழுவும், சுமந்திரன் குழுவும் ஒன்றுக்குள் ஒன்று சங்கமமாகியது. முன்னர் இவர்களை மண்டையன் குழு / ஆயுதக்குழு என விமர்சித்த... சுமத்தின் குழு இப்போது மீண்டும் அவர்களுடன். அது கூட பறவாயில்லை அரசியலில் இது சாதாரணம்! ஆனால் பிரிந்ததுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் பாருங்க 🤣😂🤣😂🤣😂 ஒற்றுமையாக பிரிந்து கேட்டதால் தான் அதிக ஆசனம் இரண்டு கட்சியும் பெற்றன என்று🤣😂😜 K J Arun Kumar
  21. @மோகன் , @இணையவன் , @நிழலி , @nunaviIan ஆகியோரின் கவனத்திற்கு.. பாஞ்ச் அண்ணை இரண்டு மாதம் யாழ். களத்திற்கு வராமல் இருந்து விட்டு, இன்று யாழ். களத்திற்கு நுழைய முற்பட்ட போது, முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு ஏற்பட்ட சிரமத்தை நிவர்த்தி செய்து உதவும்படி கேட்டுக் கொண்டார். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.