Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது . மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்ததுடன் அவர்கள் சட்டவிரோதமாக ரூ. 100,000 பணத்தைப் பெற்று ஊழல் குற்றத்தைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427141
  2. ஜப்பான் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம்! ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO மற்றும் ETAJIMA என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக (2025 ஏப்ரல் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Uraga-Class Minesweeper Tender வகைக்கு சொந்தமான ‘BUNGO’ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் TANAKA Koji பணியாற்றுகிறார். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Minesweeper வகைக்கு சொந்தமான ETAJIMA என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ODA Takayuki பணியாற்றுகிறார். மேலும், இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அன்று கப்பல்களானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427130
  3. திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது. கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது. மேலும், விசேட பூஜை நடைபெற்று அம்பிகையானவள் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு காட்சியளித்தார். பின்பு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது. அம்பிகை அடியார்களுக்கு மகேஸ்வர பூஜை என்று அழைக்கப்படும் அன்னதானமும் வழங்கப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 8.00 மணிக்கு இரதோற்ஸவமும், வெள்ளிக்கிழமை (11) தீர்த்தோற்ஸவமும், அன்று இரவு துவஜ அவரோஹணம் என்னும் கொடியிறக்கமும் இடம்பெறும். காராம்பசு வாகனம், மகர வாகனம், சர்ப்ப வாகனம், அன்ன வாகனம்,மஞ்சத்தில் பவனி வருதல், கைலாச வாகனம்,புராதன சிம்ம வாகனம், குதிரை வாகனம், சப்பரத் திருவிழா, இரதோற்சவம், தீர்த்தோற்சவம் என 11 நாட்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உற்சவங்கள் நடைபெறும். இறுதியாக பூங்காவனத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். மகோற்சவ காலங்களில் விசேட நாதஸ்வர தவில் கச்சேரிகளுடன் திருவிழா சிறப்புற நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1427107
  4. இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்! அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1427104
  5. 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இது தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலை மாணவர்களை உதவியற்றவர்களாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் தயாராகி வந்த நிலையில், அந்த நேரத்தில், தற்போதைய அரசாங்கம் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார். பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், கீழ்நிலை உயர்தரப் பிரிவுகளை மூடிவிட்டு, அவற்றை ஏனைய பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது. இது சாதாரண தரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்தரம் பரீட்சை எழுதும் அபாயத்தையும் உருவாக்குகிறது என்றும் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அந்தப் பாடத்திற்கு ஏற்ற ஆசிரியர்களை வழங்குவதும், வசதிகளை வழங்குவதுமே தவிர, அந்தப் பிரிவுகளை மூடுவது இவற்றுக்கு தீர்வாக அமையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1426997
  6. அண்ணாமலையின் பதவி பறிப்பு…? தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்ணாமலைக்கு பதில், புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427009
  7. குஜராத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து -13 பேர் உயிரிழப்பு. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது திடீரென ஏற்பட்டவெடிவிபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவியதோடு தொழிற்சாலையின் மேற்கூரையும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 4 பேர் காயமடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1427062
  8. பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில். நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. நாளை முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும். ஆனால் 9ஆம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது. இந்த அனுமதி சீட்டை அயர்லாந்து நாட்டவர்கள் தவிர மற்றவவர்கள் ஒரு முறை பெற்றால் 2 வருடங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை பிரித்தானியா சென்றால் அதிகபட்சம் 6 மாதங்கள் தங்கி இருக்கலாம் என தெரிவிக்கபடுகின்றது. வயது வராத சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த அனுமதி பெறுவது கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. https://athavannews.com/2025/1427023
  9. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்! பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது. உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பிடெய்ர் தனது மகனுடன் சேர்ந்து கொல்லப்பட்டதை ஹெஸ்பொல்லா உறுதிபடுத்தியுள்ளது. லெபனான் பாதுகாப்பு வட்டாரம், பிடெய்ர் ஒரு நடுத்தர தரவரிசை தளபதி என்றும், பாலஸ்தீனக் கோப்புகளை கையாள்வதும் அவரது பொறுப்புகளில் அடங்கும் என்று கூறியுள்ளது. ஹெஸ்பொல்லா கட்டுப்பாட்டில் உள்ள புறநகர்ப் பகுதியான பெய்ரூட்டில் ஐந்து நாட்களில் இஸ்ரேல் நடத்திய இரண்டாவது வான்வழித் தாக்குதலாக இது அமைந்தது. இது கடந்த ஆண்டு பேரழிவு தரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்காவின் மத்தியஸ்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்கள், இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளதுடன், செங்கடல் கப்பல் போக்குவரத்தைத் தாக்குவதை நிறுத்துமாறு ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுத்திகளை அமெரிக்கா தாக்கியுள்ளது. https://athavannews.com/2025/1427121
  10. ட்ரம்ப் வரி விதிப்பு: நாளை முதல் கனடாவில் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலே வரி விதிப்பு என்பது பாரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. அதிலும் அயல் நாடான கனடா மீது வர்த்தக போரை அறிவிக்கும் வண்ணம் இரு நாடுகளும் பிரச்சனையை பெரிதாக்கி கொண்டே செல்கிறது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல் நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? ட்ரம்பின் வரி விதிப்பால் உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம். முதலில் பாதிக்கப்பட இருப்பது மளிகைப்பொருட்கள்தான். அதுவும் குறிப்பாக எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் விலை அதிகரிக்கலாம். ஃப்ளோரிடா ஆரஞ்சுகள் விஸ்கான்சின் cheddar வகை சீஸ் ஆகியவைதான் முதலில் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள். கனேடியர்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் பாதிக்கும் மேல் குறிப்பாக காய்கறிகள் பழங்கள் அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கு கனடா எப்படி எதிர்வினையாற்றப்போகின்றது என்பதை. https://athavannews.com/2025/1427039
  11. அரசியல்வாதிகள் எல்லா இடமும், ஒரே மாதிரித்தான். ஊரை அடித்து... உலையில் போடுவது என்றால் ஒற்றுமையாகி விடுவார்கள். இதற்குள்... மக்களுக்கு சேவை செய்ய வந்தது என்று, வாய்கிழிய கதைப்பார்கள்.
  12. ஓணாண்டி, 4ம் வாட்டில் வேலை பார்க்கிறவங்க எல்லாம், ஆம்பிளை நேர்சுங்களாம், பரவாயில்லையா. 😂 🤣
  13. முட்டாள் தினம் அன்று.. முதல் வந்து ஏமாந்த அக்னியஷ்த்ராவிற்கு, முட்டாள் தின வாழ்த்துக்கள். முட்டாள் தினத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த, அனைத்து முட்டாள்களுக்கும் வாழ்த்துக்கள். 🤣
  14. பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தேகுட்டிகளைதந்து உதவுகிறேன். இதற்கு ஆகும் செலவு 5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000, 25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000, கொட்டாய் செலவு ரூ.10,000, பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000 ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை: குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றைஇன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம். ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: அந்தோணிராசு A12/219, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின்ரோடு, துபாய். (ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. "சதுரங்கவேட்டை"படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு) 😂 பின்குறிப்பு: ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள். 🤣 Joseph Anthony Raj
  15. நிலாமதி அக்கா... நீங்கள் காலையிலேயே எச்சரிக்கையாகதான் இருந்துள்ளீர்கள். 😂
  16. வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள்... தமது தேர்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை செல்வோம் என வீராவேசமாக பேட்டி கொடுத்து இருந்தார்கள். இதுவரை... அப்படி எவரும் போனதாக தெரியவில்லை. எல்லோரும் பம்மிக் கொண்டு இருக்க... முஸ்லீம்கள் நீதிமன்றம் போய் தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளார்கள்.
  17. இந்தியா கட்டிக் கொடுத்த கட்டிடத்தில் பாவிக்க முடியாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாம். அது... நல்ல நிலையில் இருந்தபோது கூட... ஒருவரையும் பாவிக்க விடாமல், பூட்டி வைத்திருந்தவர்கள்தானே... இப்பிடியாவது போய் துலையட்டும்.
  18. கந்தர்மட மக்கள் நுளம்புக் கடியை தாங்க மாட்டார்கள். மின்விசிறியும், கொசுவத்தி சுருளும் கொடுத்தால்... இன்னும் நல்லாய் இருக்கும்.
  19. குப்புற படுத்தால்... பாவிகள், சாரத்தையும் உருவிக் கொண்டு போடுவாங்கள். மல்லாக்க படுத்திருங்கோ....
  20. கன நேரம் பிடித்துக் கொண்டு நின்றால்... கை நோகும். இரண்டு, மூன்று பனங்குத்தி எடுத்து... முட்டுக் கொடுத்து விடுங்கோ.
  21. ஏராளன், வவுனியாவில் உள்ள வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். அப்பிடி பார்க்கும் போது... சித்தங்கேணி, மூளாய் பகுதிகளிலும் நிச்சயம் அதன் பாதிப்பு தெரிந்திருக்கும்.
  22. காலைச் சாப்பாட்டுக்குதான் ஒரு வடை. மதியம், இரவு சாப்பாடு என்று நிறைய சாப்பிட வேண்டி வரும்.
  23. நான், சற்று முன்... ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, நித்தியானந்தாவின் உடல் நலத்தை கேட்ட போது.... அது வசந்தி என்றும், இன்று காலை கூட... இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையும் சாப்பிட்டதாக கூறினார். 😂
  24. யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது. பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது. இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள். பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள். http www. Lusan .com.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.