Everything posted by தமிழ் சிறி
-
அமில சம்பத் ரஷ்யாவில் கைது!
அமில சம்பத் ரஷ்யாவில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான அமில சம்பத், அல்லது ‘ரோடும்பா அமில’, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது குறித்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1426919
-
யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை ஆரம்பம்
திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ். வந்த முதல் இண்டிகோ விமானம்! இந்தியாவின் திருச்சிராப்பள்ளியிலிருந்து முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) படி, வருகை தந்த விமானத்துக்கு நீர் வணக்கம் செலுத்தி வரவேற்க்கப்பட்டது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதன் பாதை வரைபடத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும், இண்டிகோ திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமானங்களை தொடங்கியுள்ளது என்றும் AASL மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1426910
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற பகுதியிலேயே நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பழமையான மரமொன்றே இவ்வாறு வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்லு, மண்டி உள்ளிட்ட இடங்களில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426892
-
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்! தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்த எட்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கோபமடைந்துள்ளதாக கூறியுள்ளது. மார்ச் 23 அன்று அல்-ஹஷாஷினில் ஒன்பது பேர் கொண்ட அம்பியூலன்ஸ் குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக IFRC தெரிவித்துள்ளது. ஒரு வாரமாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு மருத்துவர் இன்னும் காணவில்லை. பாலஸ்தீன ரெட் க்ரெசண்ட் சொசைட்டி (PRCS), தங்கள் ஊழியர்களின் உடல்களும், காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களின் உடல்களும், ஒரு ஐ.நா. ஊழியரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியது. அந்த வாகனத் தொடரணி மீது யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பதை அவர்கள் கூறவில்லை – ஆனால் ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைக் குற்றம் சாட்டியது. மூத்த ஹமாஸ் அதிகாரி பாசெம் நைம் தாக்குதலைக் கண்டித்துள்ளார். “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களை குறிவைத்து கொல்வது ஜெனீவா உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும், போர்க்குற்றமாகவும் அமைகிறது” என்று அவர் கூறினார். ஜனவரியில் தொடங்கிய முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்து, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கிய பின்னர், மார்ச் 18 அன்று காசாவில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 900 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியபோது போர் தொடங்கியது, சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேரை காசாவிற்கு சிறைபிடித்தனர். இஸ்ரேல் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலுடன் பதிலளித்தது, இது 50,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றது என்று காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1426876
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியன்மார் நில அதிர்வு: உலக நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை! மியன்மாரில் ஏற்பட்டுள்ள பாரிய நில அதிர்வை தொடர்ந்து அங்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் இருவேறு சந்தர்ப்பங்களில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி பாரிய நில அதிரவு ஏற்பட்டிருந்த நிலையில் சுமார் 72 மணித்தியாலங்களில் 1 700க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே மியன்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்வை தொடர்ந்து தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளதுடன் அங்கு சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் பாங்கொக் நகரின் மிக உயரமான கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கு சிக்குண்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் 76 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது. நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றுவருவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் தற்போது வெப்பமான காலநிலை காரணமாக குறிப்பாக குடிநீர் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மியன்மாரில் மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426903
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆஹா.... என்ன ஒரு அழகிய வேலைப்பாடு. 👍
-
கருத்து படங்கள்
- O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!
O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்! கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426838- ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை! ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) ஈரானை அச்சுறுத்தினார். கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததிலிருந்து ட்ரம்ப் முதல் முறையாகப் பேசியபோது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாக அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுமாறு தெஹ்ரானை வலியுறுத்தி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஓமன் மூலம் ஈரான் பதில் அனுப்பியது. அதிகபட்ச அழுத்தம் பிரச்சாரம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதே அதன் கொள்கை என்று தெஹ்ரானின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஈரான் எப்போதும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது, இப்போதும், மறைமுக பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடரலாம் என்று உச்ச தலைவர் வலியுறுத்தியுள்ளார்,” என்று அவர் ஆயத்துல்லா அலி கமேனியைக் குறிப்பிட்டு கூறினார். NBC நேர்காணலில், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பொருட்களையும் வாங்குபவர்களைப் பாதிக்கும் இரண்டாம் நிலை வரிகள் என்று அழைக்கப்படுவதை ட்ரம்ப் அச்சுறுத்தினார். வெனிசுலா எண்ணெய் வாங்குபவர்கள் மீது அத்தகைய வரிகளை அங்கீகரிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கடந்த வாரம் கையெழுத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தம் செய்கிறதா என்பதைப் பொறுத்து இரண்டாம் நிலை வரிகள் குறித்து ஒரு முடிவை எடுக்கப் போவதாகக் கூறினார். நாங்கள் அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுப்போம், எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்றால், அவற்றை விதிப்போம், நாங்கள் இப்போது அவற்றை விதிக்கவில்லை என்றார். 2017-21 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில், ட்ரம்ப் அமெரிக்காவை ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொண்டார். அது பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு ஈடாக தெஹ்ரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்தது. ட்ரம்ப் மீண்டும் அமெரிக்கத் தடைகளை விதித்தார். அப்போதிருந்து, இஸ்லாமிய குடியரசு அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை விரிவுபடுத்துவதில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை மிக அதிகமாக மீறியுள்ளது. ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் அல்லது இராணுவ விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கையை தெஹ்ரான் இதுவரை நிராகரித்துள்ளது. சிவிலியன் அணுசக்தி திட்டத்திற்கு நியாயமானது என்று அவர்கள் கூறுவதை விட, அதிக அளவிலான பிளவு தூய்மைக்கு யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் அணு ஆயுதத் திறனை வளர்ப்பதற்கான ஒரு ரகசிய நிகழ்ச்சி நிரலை ஈரான் கொண்டிருப்பதாக மேற்கத்திய சக்திகள் குற்றம் சாட்டுகின்றன. தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டம் முற்றிலும் சிவிலியன் எரிசக்தி நோக்கங்களுக்காக என்று கூறுகிறது. https://athavannews.com/2025/1426869- இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
நியாயம்… நீங்கள் கூறிய காரணம் சிந்திக்கக் கூடியதாகவும், சரியானதாகவுமே உள்ளது. 👍🏽- ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்…. ஏப்பிரல் 21’ம் திகதி. வரும்…… ஆனா வராது. 😂 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன்.- இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
“இதெண்டு”…. என்ற ஆராய்ச்சி சுவராசியமாக உள்ளது. பேச்சுவழக்கில் நானும் இந்தச் சொல்லை பாவிப்பேன். உதாரணம்: இது ஒரு இதெண்டு சொல்லிக் கொண்டு திரியிறார். 😂- மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.
மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன். மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இப்பொழுது விகாரை கட்டப்பட்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களால் அந்த விகாரை கட்டி எழுப்பப்படுவதைத் தடுக்க முடியவில்லை. மட்டுமல்ல, கடந்த வாரம் அங்கே ஒரு புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடுத்த பௌர்ணமிக்கு ஒரு போராட்டத்தைச் செய்வதற்கிடையில் மேலும் ஒரு கட்டடம் திறக்கப்படக்கூடும்.கடந்த வாரம் நடந்த அபிவிருத்திக் குழும் கூட்டத்தில் அது தொடர்பாக காணி உரிமையாளரான பாதிக்கப்பட்ட ஒரு பெண் எழுந்து நின்று கதைக்கிறார். அவருக்கு அங்கே தீர்வு வழங்கப்படவில்லை. அதுதான் மாவட்ட அபிவிருத்திகும் குழுக் கூட்டம். அப்படித்தான் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக அங்கு நிகழும் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மது உற்பத்தி போன்றவைகள் தொடர்பாக தொடர்ச்சியாகக் கதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மண் அகழ்வையும் கசிப்பு உற்பத்தியும் கசிப்பு வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப்பொருள் வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை அதில் சம்பந்தப்பட்டவர்கள் நடுவீதியில், கண்டி வீதியில் வைத்துத் தாக்கினார்கள். எந்த மக்களுடைய நன்மைக்காக அவர் அந்தச் செய்தியை வெளியே கொண்டு வந்தாரோ,அதே மக்கள் அவர் தாக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு தம் வழியே போனார்கள். யாரும் அதைத் தடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முக்கியமான பிரச்சினைகளில் எத்தனைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது ? இப்படிப்பட்டதோர் பின்னணியில், அண்மை நாட்களாக நடந்துவரும் வெவ்வேறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அர்ஜுனா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்குவது குறிப்பிட்ட சில யுரியூப்களும் ஊடகங்களும்தான். இம்முறை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அர்ஜுனா பேசுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையின் பின்னணியில்,அவர் தனக்கு கிடைக்கும் ஏனைய மேடைகளை நாடாளுமன்றம் போல பயன்படுத்தத் தொடங்கி விட்டார். தன்னைப் பேச விடாது தடுத்த அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதற்கு அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை பயன்படுத்துகின்றார். அக்கூட்டங்களில் பாவிக்க கூடாத வார்த்தைகளை அவர் பாவிக்கின்றார். அவரால் சீண்டப்படும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு பாவிக்கக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சிக்கி அவமானப்பட விரும்பாத அதிகாரிகள் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறீதரன் இடையில் எழும்பி வெளிநடப்புச் செய்கிறார். அர்ஜுனாவுக்கு பதில்வினை ஆற்றும் அரசியல் தோல்விகரமானது. அவர் தானும் சிரிக்கிறார், மற்றவர்களுக்கும் சிரிப்புக் காட்டுகிறார். எந்த அதிகாரிகளை நோக்கி அவர் குற்றம் சாட்டுகிறாரோ அவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அதாவது அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அங்கே சீரியஸ் இழந்து போகின்றன. அதிகாரிகளுக்கு எதிரான அவருடைய விமர்சனங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலும் அவ்வாறு சீரியஸ் தனத்தை இழப்பதை; ஒரு நகைச்சுவையாக மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. பொது வெளியில் அர்ஜுனாவை எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஏனென்றால் அவரில் வாய் வைத்தால் அவர் திருப்பி எப்படி வாய் வைப்பார் என்ற பயம். கம்பன் கழகத்துக்கு அதுதான் நடந்தது. அதே சமயம் யாரை எதிர்த்ததன்மூலம் அர்ஜுனா மிக விரைவாக வைரல் ஆனாரோ, அந்த அதிகாரிகள் இப்பொழுது கூலாக இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அர்ஜுனா தானே தன்னை தோற்கடிப்பார் என்று அவர்களுக்குத் தெரிகிறது.அவர் தன் வாயாலேயே கெட்டுவிடுவார் என்றும் எல்லாருக்கும் தெரிகிறது. ஒருபுறம் அவர் புத்திசாலித்தனமாகக் கதைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் வைக்கத் தயங்கும் இடங்களில் வாய் வைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தவறிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட, திட்டமிடல் சம்பந்தப்பட்ட எல்லா உரையாடல்களிலும் அவர் மைக்கைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறார். நாடாளுமன்றத்திலும் அப்படித்தான். கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர் கதைக்கிறார். எல்லாவற்றையும் பற்றிக் கதைக்கிறார். அவருடைய வார்த்தைகள் எல்லைமீறிப் போனதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தடைகளால் அவரைத் தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் தனக்குத் தடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் யூடியூப்பர்கள் மத்தியிலும் எடுத்துக் கொள்கிறார்.அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் தன் வாயாலேயே தன்னைக் கெடுத்துக் கொள்வார். தானே தன்னைத் தோற்கடித்துக் கொள்வார். ஆனால் அவருக்கு எதிர் வினையாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு கடந்த கிழமை நடந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு வாக்குவாதப்பட்டு தங்களுடைய கொள்ளளவு இவ்வளவுதான் என்பதனை நிரூபித்திருக்கிறார்கள். அதையே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அர்ஜுனா வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் போதாமைகள், இயலாமைகள், தவறுகளில் இருந்துதான் அவர் தோன்றினார். தமிழ்த் தேசிய அரசியல் என்பதனை எதிரிக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாக மட்டும் குறுக்கியதன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. எதிரிக்கு எதிரான அரசியலை செயல்பூர்வமான அரசியலாக முன்னெடுக்காமல் வெறும் கோஷ அரசியலாக முன்னெடுத்ததன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. தமிழ்த் தேசியம் என்பது திருடர்களும் கபடர்களும் பொய்யர்களும் நபுஞ்சகர்களும் எடுத்தணியும் முகமூடியாக மாறியதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பின்னடைவைக் கண்டன. எனவே அர்ஜுனாக்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள ஒரு தலைமுறையை எப்படி நெருங்கி செல்வது? அவர்கள் மத்தியில் எப்படி வேலை செய்வது? அதற்குத் தொழில்நுட்பத்தையே எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்துவது? என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கோஷ அரசியல் மற்றும் வேஷ அரசியல் என்பவற்றின் சிவப்பு மஞ்சள் நிறங்கள் வெளுரத் தொடங்கிவிட்டன. தேசியவாத அரசியல் என்பது அது தமிழ்த் தேசமாக இருந்தாலும் சரி, சிங்கள தேசமாக இருந்தாலும் சரி, எந்தத் தேசமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் கூட்டத்தை ஆகக்கூடிய பட்சம் பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான். அந்தப் பெரிய திரட்சியின் நன்மை- தீமை; பெரியது- சிறியது; நல்லவை- கெட்டவை; பிரம்மாண்டமானது- அற்பமானது… என்ற எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து அரசியல் செய்வதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருந்தால் அர்ச்சுனாக்கள் மேலெழுவதற்கான வெற்றிடம் தோன்றியிருக்காது. நிதிப்பலமும் அரச அனுசரணையும் உடைய படித்த நடுத்தர வர்க்கம் அரசு அலுவலகங்களில் எப்படியோ சமாளித்துக் கொள்ளும். ஆனால் சாதாரண ஜனங்களின் நிலை அப்படியல்ல.அவர்களுக்குச் சின்னச்சின்னப் பிரச்சனைகள், சின்னச் சின்னக் குறைகள் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வரையிலும் அந்தப் பிரச்சினைகளை ஒத்திவைக்க முடியாது. ஏனென்றால் அவை நாளாந்தப் பிரச்சினைகள்; உடன் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைப் பரப்பின் மீது தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனத்தைக் குவிக்கவில்லை. அவ்வாறு கவனத்தைக் குவிப்பதற்கு என்ன வேண்டும்? திட்டமிடல் துறையில் அடுக்கடுக்காகப் பட்டங்கள் வேண்டுமா? அல்லது நிர்வாகத் துறையில் பட்டங்கள் வேண்டுமா? அல்லது மக்கள் ஆணை வேண்டுமா? இல்லை. இவை எவற்றையும் விட அதிகமாகத் தேவைப்படுவது, பேரன்பு. தனது மக்களை நேசிக்கத் தெரிய வேண்டும். தன்னைப்போல் தன் மக்களையும் நேசிக்கத் தெரிய வேண்டும். மக்களில் அன்பு வைத்தால், அவர்களுடைய நன்மை தீமைகளில் பங்கெடுத்தால் மக்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். எனவே அர்ஜுனாவுக்கு பதில் வினையாற்றுவதை விடவும் அர்ஜுனாக்கள் தோன்றக் காரணமாக இருந்த தமது பலவீனங்களையும் போதாமைகளையும் எப்படி அகற்றலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும். https://athavannews.com/2025/1426843- எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!
நம்மடை ஆள்... தீபாவளிக்கு தீர்வு, தைப்பொங்கலுக்கு தீர்வு என்று கதை சொன்ன மாதிரி... 😂 அனுரா... வேறை மொடலில் கதை சொல்கிறார். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்... தினமும் ஒரு கதை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 🤣- பாடசாலை மாணவர்கள் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்; வைத்தியர் நிபுணர்
தூக்கம் இன்மையால்.. பலரும் அவதிப்படுகின்றார்கள். காரணம்... கைத்தொலைபேசியை நோண்டுவது. 😂 🤣- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அப்பாவிற்கு வயதாகிவிட்டது.
என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன. என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின. இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார். ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றார். என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம். ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை. ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது. எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்.. என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன். நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார். அந்த ஓவியம் சுவர்களில் எனது தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது. அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்.. காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம். (ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு) இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன். மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம். படித்ததில் பிடித்தது.- இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றவர்கள்.. 1. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பாக.. பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன். 2. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பாக கஜேந்திரகுமார் பா.உ 3. ஜனநாய தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக செல்வம் அடைக்கலநாதன் பா.உ 4. ஏனைய பங்காளிக்கட்சிகள் சார்பாக யாராவது ஒருவர். இந்த ஏழு பேரும் சந்திக்க இந்திய தூதரகம் அனுமதி வழங்கியுள்ளது. கட்சிகளே பெயர்களை வழங்கின.. பிரதேசவாதம் இல்லை என நாம் சொல்லியே ஆகவேண்டும் ஆனால் இந்த ஏழுபேரில் திருகோணமலை, அம்பாறை முற்றாக புறக்கணிப்பு மட்டக்களப்பில் மட்டும் ஒருவர். மொத்தமாக ஏழு பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கிழக்கை சேர்ந்தவர். இந்த தவறை தொடர்ந்து தமிழரசுக்கட்சி உட்பட தமிழ்தேசிய கட்சிகள் விடுகின்றன என்பதை சுட்டிக்காட்டவேண்டும். இது பிரதேசவாதத்தை தூண்டும் கருத்தாக யாரும் பார்க்க வேண்டாம், பிரதேசவாதத்தை முறியடிக்கும் பதிவாகவே நான் இதனை பதிவிடுகிறேன். கடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் என்பது உண்மை. இந்தியப்பிரதமரை சந்திப்பதால் ஏதும் நன்மை வரும் என்பது இல்லை. ஒரு செய்தியும், ஒரு படமும் பார்கலாம். மக்களால் தெரிவு செய்யப்படாத தமிழரசுக்கட்சி பதில் தலைவர், பதில் செயலாளருக்கு பதிலாக கிழக்கில் இருந்து இன்னும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அழைத்திருக்க வேண்டும் என்பது மக்களின் கருத்து. Malaravan Uthayaseelan- கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை
ஜனாதிபதியின் கடுமையான கருத்து: பொது மக்களின் பணத்தை எடுக்க வழியில்லாதவாறு மோசடி செய்திருக்கிறார்கள், திணைக்களங்கள் ஒவ்வொன்றிலும் எடுக்க வழியில்லாதவாறு மோசடி செய்திருக்கிறார்கள், இங்கு வந்த பிறகு தான் ஒவ்வொன்றும் புரிகிறது; பலத்தில் இருப்பவர்களோ இல்லையோ, சின்னாளோ பெரியாளோ பாரபட்சம் இன்றி சட்டத்தை உயரிய நிலையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் மீது அமுல்படுத்த செயற்பட்டு வருகிறோம் - திஸ்ஸமஹாராம மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்! Vaanam.lk தமிழரின் பங்களிப்பாக... நாமும் மூவரை அனுப்பி வைக்கின்றோம். 😂- மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது! மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது. மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந் நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தை சந்தித்தன. நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். படுகாயம் அடைந்தனர். ஒட்டு மொத்த நாட்டையும் நிலநடுக்கம் உலுக்கியதை தொடர்ந்து மியான்மார் இராணுவ அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அதோடு நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டது. எனினும் ராணுவம்-கிளர்ச்சி குழுக்கள் இடையேயான மோதல் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை சிக்கலாக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மியான்மரை புரட்டிப்போட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தலைநகர் பாங்காக் உள்பட தாய்லாந்தின் பல நகரங்களை நிலநடுக்கம் தாக்கியது. அங்கும் வானுயுர கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தாய்லாந்திலும் நிலநடுக்கம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந் நிலையில் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது மியன்மாரில் மட்டுமே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மியான்மருக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426833- முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!
முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை! அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426836- எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!
மூன்று, நான்கு வருடங்களில்... அடுத்த தேர்தல் வந்து இவர்கள் வீட்டிற்குப் போய் விடுவார்கள். 😂 அது மட்டும் மக்களின் ஆசையை... தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். 🤣- கருத்து படங்கள்
- O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.