Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்! குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட இந்திய ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர காவல் படை வெற்றிகரமாக அடையாளம் கண்டது. இந்நிலையில் படகில் இருந்தவர்கள் தங்களை கப்பல் நெருங்குவதை கண்டு படகில் இருந்த சரக்கை கடலில் வீசிவிட்டு சர்வதேச எல்லையை கடந்து தப்பிவிட்டனர். இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மேல் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இது மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். பிறகு அந்த போதைப் பொருள் தொடர் விசாரணைக்காக ஏடிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலோர காவல் படையும் குஜராத் ஏடிஎஸ்ஸ{ம் இணைந்து சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்று 13 நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. இவ்வாறு இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. அமித் ஷா பாராட்டு: குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள இத்தகவலை உள்துறை அமித் ஷாவும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருள் இல்லாத பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான இடைவிடாத முயற்சியில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை வேரறுப்பதற்கான மோடி அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த மகத்தான வெற்றிக்கு குஜராத் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1428492
  2. அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு! அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவர். சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அமெரிக்கா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதேபோல அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று வாழும் வெளிநாட்டினர் மீதான கெடுபிடிகளும் அதிகரித்து உள்ளன. மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து அமல்படுத்தி உள்ளனர். இதன்படி எச்-1பி விசா, மாணவர் விசா வைத்திருப்போர் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்போர் 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் பிள்ளைகள் 14 வயதை எட்டிய உடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பெற்றோரே பொறுப்பு என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்யவில்லை என்றால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1428488
  3. அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா! அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து ஒட்டுமொத்த உலக நாடுகளின் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. சீனாவின் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும்போது, அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம், யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற கனரக அரிய மண் தாதுக்கள் அடங்கிய ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. எனவே ,சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து வரும் அரிய மண் தாதுக்களை அமெரிக்காவிலுள்ள லாக்ஹீட் மார்ட்டின், டெஸ்லா, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த வகை சீன அரிய மண் தாதுக்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளில் ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதால் அங்கு உற்பத்தி பாதிக்கப்படும் பேரபாயம் நேரிட உள்ளது. சீனாவால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிய பூமி உலோகங்கள் காந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார கார்கள், ட்ரோன்கள், ரோபோக்கள், ஏவுகணைகள், விண்கலம், பெட்ரோலில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வகையான மின்சார மோட்டார்களுக்கு இந்த வகையான அரசிய உலோகங்கள் மிகவும் அவசியமாகும். தற்போது திடீரென இந்த வகை உலோகங்கள், அரிய மண் தாதுக்களை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்திருப்பதால் அமெரிக்க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஏற்றுமதி தடையால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1428484
  4. முதன்முறையாக விண்ணைத் தொட்ட சிங்கப்பெண்கள் குழு! அமெரிக்காவில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்து திரும்பி புதிய சாதனையை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் விண்வெளி சுற்றுலாவுக்காக தனியார் விண்வெளி மையங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீபத்தில் ப்ளூ ஆரிஜின் முழுவதும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை விண்வெளி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டது. அதன்படி ஜெப் பெசோசின் வருங்கால மனைவி லாரன் சான்செஸ், பாப் பாடகி கேட்டி பெரி, நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே உள்ளிட்ட 6 பெண்கள் விண்வெளிக்கு பயணம் செய்தனர். நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள் விண்வெளிக்குள் சென்று சில மணி நேரங்களை கழித்து பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளனர். இந்த பயணம் மூலம் விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு செய்த முதல் விண்வெளி பயணமாக இந்த பயணம் சாதனை படைத்துள்ளது. https://athavannews.com/2025/1428477
  5. ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428434
  6. "விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறந்துள்ளது. https://athavannews.com/2025/1428423
  7. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏
  8. தமிழ் புது வருசம் பிறக்கின்ற நேரம்…. ஆட்களை வம்பிலை மாட்டி விடாதேங்கோ. 😂
  9. 👉 https://www.facebook.com/reel/978884160670215 👈 ஈழப்பிரியன், மேலே உள்ள காணொளியையா சொல்கிறீர்கள். Made in California. 😂 🤣
  10. ஐயையோ... நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை. 😂
  11. ஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂
  12. @குமாரசாமி அண்ணையை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
  13. இப்பவே... இப்பிடி என்றால், அப்ப எப்பிடி இருந்திருப்பா... 😂
  14. ஊர் யாரோடு? நிலாந்தன். பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார். அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் தேசிய விடுதலை என்பது சமூக விடுதலை இல்லாமல் முழுமை அடையாது என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உருவாகியிருந்தது. எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை. சண்முகதாசன் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 1964இல் பிரிந்து சென்றவர்தான் ஜேவிபியின் தலைவராகிய ரோகன விஜயவீர. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது அதுதொடர்பாக சண்முகதாசன் பின்வருமாறு கூறியிருக்கிறார்… “பழைய இடதுசாரி கட்சிகள் இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத அரைப்பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு,தமிழர் எதிர்ப்பு,இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது” சண்முகதாசன் தலைமை தாங்கிய சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய ரோகன விஜயவீர 1965இல் ஜேவிபியை ஸ்தாபித்தார்.அதாவது மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், அதன் பிரதமரான ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா? பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது. ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் மட்டும் தமிழரசு கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். பலாலி பெருஞ்சாலையை திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பெருஞ்சாலையை அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு பெருஞ்சாலையை திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன. போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன. நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது. எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டி எழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரசு சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா? தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள். “வெற்றி நமதே ஊர் எமதே”என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று வாக்களித்த தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசமும் வேண்டாம் என்று வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது தேசமாகத் திரண்டு வாக்களிக்கப் போகிறார்களா? https://athavannews.com/2025/1428410
  15. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு! வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும். https://athavannews.com/2025/1428407
  16. தமிழ் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும் புரியவில்லை. இன்னும்... இந்தியா ஏதாவது செய்யும் என, வீணீர் வடிய பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் நகர்வுகளை எடுக்க... அடிப்படை அறிவு இல்லாதவர்களிடம், நாம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்.
  17. ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்த பெற்றோரை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளையை... கவனிக்கத் தெரியாதவர்கள் ஏன்... குழந்தை பெறுகின்றார்கள். 😡 ஜேர்மனியில் இப்படி ஒரு சம்பவம் நடை பெற்று இருக்குமானால்... பெற்றோர் பெரும் தண்டனையை பெற்று இருப்பார்கள்.
  18. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து! சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது திறந்த சுழற்சி செயற்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும் எனவும் இந்த மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்உற்பத்தி செயற்பாடுகள், 2028 ஆம் ஆண்டு முதல் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றமடைவதால், எரிபொருள் செலவுகளை 50 வீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428381

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.