Everything posted by தமிழ் சிறி
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு. மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதனையடுத்து நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து பிரிந்திருந்த கருணா மற்றும் பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர். https://athavannews.com/2025/1426117
-
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் – ஜனாதிபதி
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் – ஜனாதிபதி. தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426113
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிபடுத்தினார் ஜனாதிபதி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கும் நிகழ்விலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனவும் ஜனாதிபதி, கூறியுள்ளார். https://athavannews.com/2025/1426101
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
அவளைத் தொடுவானேன், அவதிப்படுவானேன்.😂 இப்ப பேரூந்து சாரதிக்கு 1500 + 10,000 ரூபாய் + 6 மாத சிறைத்தண்டனை கிடைத்திருக்கு. 🤣
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
தமிழ் கட்சிகள் விட்ட பிழையை சுட்டிக் காட்டிய காணொளி. ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள். நன்றி ஈழப்பிரியன்.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
அர்ச்சுனாவின் மேலுள்ள பதிவை பார்க்க, தங்கத்தை... வெளியேற்றி விட்டார் போலுள்ளது. அல்லது... இது அவரின் ஒரு வகை நடிப்பாகவும் இருக்கலாம்.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
நன்றி.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அதற்காக... செய்தியை சொன்ன எனக்கு ஆப்பு அடிக்கிறதா? 😂 எய்தவன் இருக்க... அம்பை நொந்து என்ன பலன். 🤣
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஜேர்மன்காரியின் வேட்பு மனுவை நிராகரித்த செய்தியை... நான் சொன்ன குற்றத்திற்காக, எனக்கு தண்டனை தந்து இருக்கின்றார் என நினைக்கின்றேன். 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
@Kandiah57 மேலே உள்ள எனது பதிவிற்கு ஏன் சிவப்பு -1 போட்டீர்கள் என்ற காரணத்தை அறிய விரும்புகின்றேன்.- இரசித்த.... புகைப்படங்கள்.
"போட்டோ சொப்" செய்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 🤣 பிள்ளையை இடிக்கப் போகுது. அந்த ரயிலை பிடித்து... தண்டவாளத்தில் விடுங்கப்பா. 😂 அப்பாடா.... ரயிலை, வேறை பக்கத்தாலை அனுப்பியாச்சு. 😂 🤣- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
எல்லாரும் வக்கீல் தொழில் செய்யாமல் விட்டு.... சட்ட திட்டங்களை மறந்து போனார்கள் போலுள்ளது. ஜனாதிபதி வக்கீல் என்ற பட்டம் எடுத்த, சுமந்திரனின் தமிழரசு கட்சியும் கிளிநொச்சியில், "புட்டுக் கொண்டு" போட்டுது. 😂- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
உண்மையை சொல்லுறன் கோவிக்காதேங்கோ கந்தையா அண்ணை. தங்கத்துக்கு... மேயருக்கு உரிய முகவெட்டு, அறவே இல்லை. ஏணி வைத்தாலும் எட்டாது.- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
பாதாள உலக கோஷ்டிகள்... தாம் செய்யும் செயலை கண்டு கொள்ளாமல் இருக்க, 200,300 போத்தல் என்று ரொக்கமாக கொடுத்திருப்பார்கள். இவ்வளவு வீட்டில் இருப்பில் இருந்தது என்றால், குடித்து முடித்தது.... இன்னும் எத்தனை ஆயிரம் போத்தல்களோ. வெட்கக்கேடு. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொலிஸ் மாஅதிபர் செய்யும் வேலையா இது.- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
மன்னிக்கவும். தவறுதலாக பதியப்பட்ட செய்தி ஒன்றை நீக்கியுள்ளேன்.- இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.
விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் குறித்து சிறப்பு விசாரணை! இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க தளத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இலக்கம் 05 போர் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 ரக விமானம் இன்று (21) வாரியபொல பதெனிய பிரதேசத்தில் பயிற்சி அமர்வின் போது விபத்துக்குள்ளானது. எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் விமானத்தை விட்டுவிட்டு பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக குருநாகல் பாதெனிய மினுவாங்கேட் வித்தியாலய வளாகத்தில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பிரதம பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானி மற்றும் பயிற்சி பைலட் அதிகாரி ஆகியோர் பயணித்துள்ளதுடன், அந்த அதிகாரிகள் குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 07.27 மணியளவில் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் சரியாக 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1426068- கருத்து படங்கள்
- டேய் மச்சான் புட்டின்...😎
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து. வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் UPDATS: இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி (ஜெட்) விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்லிருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் குருநாகல் -வாரியபொல மினுவங்கேட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1426054- எலோன் மஸ்க்கின் எக்ஸ்.... இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு!
எலோன் மஸ்க்கின் எக்ஸ்... இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு! எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் தணிக்கை திறன்களை சட்டவிரோதமாக விரிவுபடுத்துவதாகக் குற்றம் எக்ஸ் சாட்டியுள்ளது. மார்ச் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு இணையான அமைப்பை புது டெல்லி உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது. பில்லியனர் தனது ஏனைய உயர்மட்ட முயற்சிகளான ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லாவை இந்தியாவில் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த சட்டப் போராட்டம் ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தடுக்கும் வலைத்தளத்தைப் பயன்படுத்த இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்ற அரசுத் துறைகளை ஊக்குவிப்பதாக எக்ஸின் வழக்கு கூறுகிறது. முறைப்பாட்டின் படி, இந்திய சட்டத்தின் கீழ் பாரம்பரியமாக தேவைப்படும் கடுமையான பாதுகாப்புகள் இல்லாமல் எண்ணற்ற அரசு அதிகாரிகள் உள்ளடக்கத்தை அகற்ற உத்தரவுகளை பிறப்பிக்க இந்த வலைத்தளம் உதவுகிறது. எவ்வாறெனினும் மஸ்க்கின் பிற முயற்சிகளுக்குத் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்களை அங்கீகரிக்க அரசாங்கத்தின் விருப்பத்தை இந்த சர்ச்சை பாதிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். கர்நாடக மேல் நீதிமன்றம் இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்கை சுருக்கமாக விசாரித்தது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மார்ச் 27 அன்று நீதிமன்றம் தொடர்ந்து வாதங்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426048- அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்!
அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்! அமெரிக்க கல்வித் துறையை கலைக்கக் கோரும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (20) கையெழுத்திட்டார். இது பழமைவாதிகளின் நீண்டகால இலக்காக இருந்த ஒரு நிறுவனத்தை பிரிப்பதற்கான ட்ரம்பின் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. கல்வித் துறையை வீணானது மற்றும் தாராளவாத சித்தாந்தத்தால் மாசுபட்டது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், 1979 ஆம் ஆண்டில் இந்தத் துறையை உருவாக்கிய காங்கிரஸின் நடவடிக்கை இல்லாமல் அதை அகற்றுவது பெரும்பாலும் சாத்தியமற்றது. குடியரசுக் கட்சியினர் அதை அடைய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறினர். அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் இந்த யோசனையை எதிர்க்க விரைவாக முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். ட்ரம்பின் இந்த உத்தரவு பாடசாலை கொள்கையை கிட்டத்தட்ட முழுவதுமாக மாநில மற்றும் உள்ளூர் வாரியங்களின் கைகளில் விட்டுவிடும். “கல்வித் துறையை மூடுவதற்கும், கல்வி மீதான அதிகாரத்தை மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கல்விச் செயலாளர் எடுப்பார்,” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த பணி எவ்வாறு மேற்கொள்ளப்படும் அல்லது எங்கு குறிவைக்கப்படும் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வழங்கவில்லை. எவ்வாறெனினும், வெள்ளை மாளிகை நிறுவனம் சில முக்கியமான செயல்பாடுகளைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் உத்தரவு கூறியது. கடந்த வாரம் துறை தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டாட்சி அரசாங்கத்தின் அளவைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட பல முயற்சிகளைப் போலவே, புதிய நிர்வாக உத்தரவும் சட்ட சவால்களை எதிர்கொள்கிறது. அத்துடன், இது தாராளவாத கல்வி ஆதரவாளர்களை கவலையடையச் செய்கிறது. இரண்டு மாதங்களாக பதவியில் இருக்கும் ட்ரம்ப், அமெரிக்க அரசாங்கத்தை மறுவடிவமைத்து, கூட்டாட்சி அதிகாரத்துவத்தை மேம்படுத்துவதற்கான அண்மைய நடவடிக்கை இதுவாகும். அமெரிக்காவில் கல்வி நீண்ட காலமாக ஒரு அரசியல் மின்னல் கம்பியாக இருந்து வருகிறது, பழமைவாதிகள் தனியார் பாடசாலைகளுக்கு உதவும் பள்ளி தேர்வுக் கொள்கைகளை ஆதரிக்கின்றனர் மற்றும் இடதுசாரி வாக்காளர்கள் பெரும்பாலும் பொதுப் பாடசாலைகளுக்கான திட்டங்களையும் நிதியையும் ஆதரிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அமெரிக்க கல்வி குறித்த மோதல்கள் துரிதப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426039- மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!
மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்! அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக விமான நிலையம் “குறிப்பிடத்தக்க மின் தடையை” சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. “எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 இரவு 11:59 வரை மூடப்படும்” என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பதிலளித்து வரும் அதே வேளையில், மின்சாரம் எப்போது நம்பகத்தன்மையுடன் மீட்டெடுக்கப்படும் என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று ஹீத்ரோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஹீத்ரோ விமான நிலையம் இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இது ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளைக் கையாளுகிறது. கடந்த ஆண்டு அதன் முனையங்கள் வழியாக 83.9 மில்லியன் பயணிகள் கடந்து சென்றது சாதனையாகும். இது இவ்வாறிருக்க மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் சுற்றியுள்ள சொத்துக்களில் இருந்து சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க பத்து தீயணைப்பு இயந்திரங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை (LFB) தெரிவித்துள்ளது. தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பெரிய அளவிலான மின் தடை காரணமாக 16,300க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளதாக எரிசக்தி விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து சுமார் 200 அழைப்புகள் வந்ததாக LFB தெரிவித்துள்ளது. அவசர சேவைகள் 23:23 மணிக்கு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. https://athavannews.com/2025/1426043- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
ஸ்ரீலங்காவுக்கும், தமிழ் ஈழத்துக்கும் வெவ்வேறு சட்டம் வழமையானதுதானே. 😂 தங்கத்தின்... யாழ்ப்பாண மேயர் கனவும் எல்லோ இதாலை, நழுவி போய் விட்டது. 🤣 - உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.